Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தோசை வகைகள் சில
5 posters
சேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தோசை வகைகள் சில
தக்காளி தோசை - 2
தேவையானவை:
பச்சரிசி - ஒன்றே கால் கப்,
உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,
தக்காளி - 4,
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 10,
பெருங்காயம் - பாதி சுண்டைக்காய் அளவு,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்).
தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு,
பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும். பின்னர் உப்பு சேர்த்து,
அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.
கலர்ஃபுல்லாக கண்ணைப் பறிக்கும் இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்.
http://anjaaan.blogspot.com/2013/12/2_0.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தோசை வகைகள் சில
மரவள்ளிக் கிழங்கு தோசை
தேவையானவை:
புழுங்கலரிசி - 1 கப்,
மரவள்ளிக் கிழங்கு - சிறியதாக 1,
காய்ந்த மிளகாய் - 6,
சீரகம் - 1 ஸ்பூன்,
பெருங்காயம் - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, 3 முறை பால் போக நன்கு கழுவிக் கொள்ளவும். புழுங்கலரிசியை கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை அரைத்து, அதோடு கிழங்கையும் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் ஊறிய அரிசியையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். (ஆட்டுரல் இல்லாதவர்கள் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைக்கலாம்)
ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு,
எண்ணெய்விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். எல்லோரும் சாப்பிட ஏற்ற ஆரோக்கிய தோசை இது.
http://anjaaan.blogspot.com/2013/12/1_2.html

கேழ்வரகு தோசை
தேவையானவை:
கேழ்வரகு மாவு - 1 கப்,
ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
சின்ன வெங்காயம் - 15,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்).
வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும்.
மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும்
. இதற்கு காரச் சட்னி ஏற்ற ஜோடி.
http://anjaaan.blogspot.com/2013/12/blog-post_3366.html

பப்பாளி தோசை !!!
தேவை?
தோசை மாவு - 2 கப்,
பப்பாளி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி - 1 துண்டு,
வெங்காயம் - 1,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பப்பாளியின் விதைகள், தோல் நீக்கி சதைப் பகுதியை மட்டும் எடுத்து பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து அரைத்து மாவுடன் கலந்து, உப்பு சேர்த்து, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி போட்டு தோசையாக வார்க்கவும். பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

பரங்கிக்காய் அடை
தேவையானவை:
புழுங்கலரிசி - 1 கப்,
உளுத்தம்பருப்பு - அரை கப்,
துவரம்பருப்பு - முக்கால் கப்,
பாசிப்பருப்பு - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 10,
சோம்பு - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
சின்ன வெங்காயம் - 6,
உப்பு - தேவைக்கேற்ப,
மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு,
பிஞ்சு பரங்கிக்காய் - 1 துண்டு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பரங்கிக்காயை தோல் சீவி, துருவிக்கொள்ளவும். அரிசியைத் தனியாகவும், பருப்புகளைத் தனித்தனியாகவும் ஊற வைக்கவும்.
மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும். 2 மணி நேரம் கழித்து சோம்பு, மிளகாய், உப்பு, வெங்காயம் மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்தெடுக்கவும்.
மிக்ஸியில் முதலில் உளுத்தம்பருப்பை போட்டு, சற்று பெருபெருவெனவும், பின்னர் அரிசியையும் அதே மாதிரி அரைத்தெடுக்கவும்.
பாசிப்பருப்பை ஒரு சில விநாடிகள் மட்டும் அரைக்கவும்.
துவரம்பருப்பையும் ஒன்றிரண்டாக அரைத்தெடுத்து, அனைத்தையும் அரைத்த மிளகாய் விழுதுடன் ஒன்றாக கலந்து அதில் மல்லித்தழையைக் கலக்கவும்.
பின்னர் தோசைக்கல்லை சூடு செய்து, இந்த மாவை மெல்லிய அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, அடையின் மேல் துருவிய பரங்கிக்காயைத் தூவி கரண்டியால் அழுத்திவிட்டு, பின் அடையை திருப்பிவிட்டு எண்ணெய் ஊற்றி, நன்கு மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும்.
(ஈரப்பதம் இருக்கும்போதே பரங்கிக்காய் துருவலைத் தூவ வேண்டும்).
http://anjaaan.blogspot.com/2013/12/blog-post_862.html

தூதுவளை தோசை
தேவையானவை:
புழுங்கலரிசி - 1 கப்,
தூதுவளை இலை - 15,
மிளகு - 10,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் + நெய் - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியிலோ, ஆட்டுக்கல்லிலோ பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தூதுவளை இலை, உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும்.
பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி நெய் + எண்ணெயைக் கலந்து அதை சுற்றிவர ஊற்றி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
மார்பில் சளிக்கட்டியிருந்தால் அதை குணப்படுத்தும் தன்மை உள்ளது இந்த தோசை. ஆனால், சூடாக சாப்பிட்டால்தான் சுவை.
http://betterofferjobs.blogspot.com/2013/12/blog-post_6591.html#.Up8g2cQW18E

இதில் ஏதாவது ஒரு தோசை நீங்கள் செய்து சாப்பிட்டதுண்டா முனைதீன்!
இல்லாவிட்டால் செய்து பிராக்டிஸ் செய்துக்கணும். அப்பத்தான் சுவிஸ் வந்து எங்களுக்கு விதம் விதமாக் சமைத்து தர முடியும். :)
பகிர்வுக்கு நன்றிங்கோ!
இல்லாவிட்டால் செய்து பிராக்டிஸ் செய்துக்கணும். அப்பத்தான் சுவிஸ் வந்து எங்களுக்கு விதம் விதமாக் சமைத்து தர முடியும். :)
பகிர்வுக்கு நன்றிங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தோசை வகைகள் சில
நா செத்துபோய் வர்றானே ஃபிரண்ட் அவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடனுமேன்னு இல்லாம பேசுற பேச்ச பாரு (_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தோசை வகைகள் சில
இவ்வளவு தோசை வகைகளையும் வகைப்படுத்தியது அருமை. வாயில் நீர் ஊற வைத்த ரெசிப்பிகள். இத்துடன் சேர்த்து நம்ம ஐயிட்டத்தையும் வச்சி சாப்பிட்டா அருமையாய் இருக்கும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தோசை வகைகள் சில
சுறா wrote:இவ்வளவு தோசை வகைகளையும் வகைப்படுத்தியது அருமை. வாயில் நீர் ஊற வைத்த ரெசிப்பிகள். இத்துடன் சேர்த்து நம்ம ஐயிட்டத்தையும் வச்சி சாப்பிட்டா அருமையாய் இருக்கும்
சுறா ஜீ நீங்கள் படங்கள் பதியும் போது கூகுல்ல இருந்து நேரடியாக படங்களை காப்பி எடுக்காமல் செலக்ட் செய்து எடுங்கள் லிங்க் பெரிதாகாமல் இருக்கும் மேற்கொள் இட இலகுவாக இருக்கும் இப்போது நீங்கள் இடும் படங்கள் மேற்கொள் இட ரொம்ப தூரம் போக வேண்டி வருகிறது )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தோசை வகைகள் சில
^_ ^_ ஹா ஹா நல்ல ஜோக் ^_ahmad78 wrote:நா செத்துபோய் வர்றானே ஃபிரண்ட் அவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடனுமேன்னு இல்லாம பேசுற பேச்ச பாரு (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தோசை வகைகள் சில
நண்பன் wrote:சுறா wrote:இவ்வளவு தோசை வகைகளையும் வகைப்படுத்தியது அருமை. வாயில் நீர் ஊற வைத்த ரெசிப்பிகள். இத்துடன் சேர்த்து நம்ம ஐயிட்டத்தையும் வச்சி சாப்பிட்டா அருமையாய் இருக்கும்
சுறா ஜீ நீங்கள் படங்கள் பதியும் போது கூகுல்ல இருந்து நேரடியாக படங்களை காப்பி எடுக்காமல் செலக்ட் செய்து எடுங்கள் லிங்க் பெரிதாகாமல் இருக்கும் மேற்கொள் இட இலகுவாக இருக்கும் இப்போது நீங்கள் இடும் படங்கள் மேற்கொள் இட ரொம்ப தூரம் போக வேண்டி வருகிறது )*
ஓ அப்படியா? சரி இனி செய்கிறேன்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தோசை வகைகள் சில
நல்ல பிள்ளைக்கு இதுதான் அழகு ^*சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:இவ்வளவு தோசை வகைகளையும் வகைப்படுத்தியது அருமை. வாயில் நீர் ஊற வைத்த ரெசிப்பிகள். இத்துடன் சேர்த்து நம்ம ஐயிட்டத்தையும் வச்சி சாப்பிட்டா அருமையாய் இருக்கும்
சுறா ஜீ நீங்கள் படங்கள் பதியும் போது கூகுல்ல இருந்து நேரடியாக படங்களை காப்பி எடுக்காமல் செலக்ட் செய்து எடுங்கள் லிங்க் பெரிதாகாமல் இருக்கும் மேற்கொள் இட இலகுவாக இருக்கும் இப்போது நீங்கள் இடும் படங்கள் மேற்கொள் இட ரொம்ப தூரம் போக வேண்டி வருகிறது )*
ஓ அப்படியா? சரி இனி செய்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தோசை வகைகள் சில
ahmad78 wrote:நா செத்துபோய் வர்றானே ஃபிரண்ட் அவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடனுமேன்னு இல்லாம பேசுற பேச்ச பாரு (_
இது நல்ல கதையாச்சே! நான் என் பெயரை மாத்தி வைக்க விரும்பல்லை. அதனால் ஒரு நாளாச்சும் ஐயா எங்க வீட்டு கிச்சனில் தோசை சுட்டே ஆகணும்.
பிரெண்டு டிரெண்டுங்கற பாசமெல்லாம் என் பெயருக்கு முன்னாடி பார்க்க முடியாது. :} :}
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தோசை வகைகள் சில
இப்படி ஒரு கொடுமைக்காரியா°
உங்களுக்கு சமைச்சு தரும்போது உங்க சாப்பாdடை மட்டும தனியா எடுத்து உப்பு உறைப்பு கூடுதலா போட்டு தர்றேன்.
உங்களுக்கு சமைச்சு தரும்போது உங்க சாப்பாdடை மட்டும தனியா எடுத்து உப்பு உறைப்பு கூடுதலா போட்டு தர்றேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தோசை வகைகள் சில
[url=/t27167-topic#175778]சுவையான அவல் தோசை[/url]
தேவையான பொருட்கள்:
கெட்டி அவல் - ஒரு கப்
புளித்த மோர் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும்.
விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும்.
நன்றி: பசுமை இந்தியா!

"மசாலா தோசை செய்யும் முறை
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 1 /2 கப்
பச்சை அரிசி – 1 /2 கப்
உளுத்தம்பருப்பு – 1 /4 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 100 மில்லி
மசாலாவிற்கு
உருளைக்கிழங்கு – 100 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
தக்காளி(சிறியது) – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
மல்லித்தழை – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
கடுகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 50 கிராம்
செய்முறை
அரிசியை ஊறவைத்து நன்கு கழுவி அரைக்கவும்.
உளுந்து, வெந்தயத்தை ஊறவைத்து கழுவி நன்கு அரைக்கவும்.
அரிசி மாவு, உளுந்து மாவு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்கி புளிக்க வைக்கவும்.
மசாலா தயாரிக்கும் முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி , பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும்.பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதில் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்னர் தக்காளி, பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கட்டியாகும் வரை வதக்கவும்.
தோசைக்கல்லில் தோசை ஊற்றி, மூடி போட்டு வேக விட்டு, வெந்ததும் அதில் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும். தோசையை திருப்பி போடாமல் மசாலா வைத்து இரண்டாக மடக்கி எடுக்கவும்.
சுவையான மசாலா தோசை தயார்.
தயாரிப்பு : கதிஜா

சோள தோசை
* * * * * * * * * * * *
சோளச்சோறு, சோளதோசை, சோளக்கஞ்சி எல்லாம் அன்றைய காலகட்டங்களில் கிராம மக்களின் எளிமையான உணவாக இருந்தது... சோளத்தோசை மிகவும் சத்து மற்றும் ருசி நிறைந்த மிக எளிய பாரம்பரிய உணவு வகை.
அரை ஆழாக்கு மக்கா சோளம் .. அரை ஆழாக்கு அரிசி, ஒரு கைப்பிடி உளுந்து , அரை டீஸ்பூன் வெந்தயம்.. ஆகியவற்றை நன்கு கழுவி களைந்து மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்...பிறகு இதனை அரைத்து (அளவு குறைவாக இருப்பதால் மிக்சியிலேயே அரைத்துக்கொள்ளலாம்) மூன்று அல்லது நான்கு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.. உதாரணமாக மதியம் அரைத்து வைத்தால் மாலை/இரவு தோசைக்கு தேவையான பதம் கிடைக்கும்... மாவு நன்கு பொங்கி வந்திருக்கும். பிறகு, எப்போதும் போல தோசைக்கல்லில் வார்த்து எடுக்கலாம்...
இது சாதாரண அரிசி-உளுந்து மாவு தோசையை விட கூடுதல் சுவையாகவும், அதீத சத்துக்கள் மிகுந்ததாகவும் இருக்கும்...
சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. ஃபோலிக் அமிலம், செரோட்டன், அஸ்கார்பிக் அமிலம் ஆகியவற்றுடன் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளது.
சோள உணவுகள் உடலுக்கு உறுதியை கொடுப்பதோடு இதயத்தை பாதுக்காக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். கொஞ்சம் சூடு அதிகம் என்பதால் மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்து வருவதில்லை. அக்குபஞ்சர் அறிவோம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தோசை வகைகள் சில
தேவையானப்பொருட்கள்:
தோசை மாவு - 1 கிண்ணம்
புரோக்கோலி - 1
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டுப்பற்கள் (சிறிய அளவு) - 3 அல்லது 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 5 அல்லது 6
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
மசாலா தயாரிக்க:
புரோக்கோலியின் பூவை தனியாக எடுத்து நடுத்தர அளவு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 4 அல்லது 5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, சிறிது உப்பைச் சேர்த்து புரோக்கோலி துண்டுகளைப் போட்டு ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு, உடனே எடுத்து தனியாக வைக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது இடித்துக் கொள்ளவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விட்டு எடுத்து, சற்று ஆறியதும், தோலை உரித்து விட்டு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு காய்ந்ததும் சீரகம், சோம்பு ஆகியவற்றைப் போடவும். சீரகம் பொரிந்ததும் இஞ்சி, பூண்டு சேர்த்து சற்று வதக்கி, அதன் பின் வெங்காயத்தையும் சேர்த்து சிவக்க வதக்கவும். பின்னர் அதில் தக்காளி விழுதைச் சேர்த்து, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி விடவும். சில வினாடிகள் வரை கிளறி விட்டு அதில் முந்திரி விழுதைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில் புரக்கோலியைப் போட்டு, சிறிது தண்ணீரைத் தெளித்து, மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும். புரக்கோலி வெந்து மசாலா கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
[color][font]
தோசை தயாரிக்க:
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, எண்ணை தடவி, கல் சூடானதும் ஒரு பெரிய கரண்டி தோசை மாவை ஊற்றி மெல்லியதாக பரப்பி விடவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையைச் சுற்றி ஊற்றி வேக விடவும். ஒரு புறம் சிவக்க வெந்ததும், தோசையின் நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் மசாலாவை வைத்து, தோசையின் இரண்டு முனையயும் மடித்து விட்டு, திருப்பிப் போட்டு சில வினாடிகள் வேக விட்டு எடுக்கவும்.
சட்னி/சாம்பாருடன் பறிமாறவும்.
கவனிக்க: இந்த புரக்கோலி மசாலாவை சப்பாத்தி, பூரி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
muganool
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தோசை வகைகள் சில
கர்நாடக மாநிலத்திலுள்ள தவனகிரியில் பிரசித்தமானது இந்த வெண்ணை தோசை.
தேவையானப்பொருட்கள்:
புழுங்கலரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
அரிசி பொரி - 100 கிராம்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணை - 100 கிராம் அல்லது தேவைக்கேற்றவாறு
சமையல் சோடா - 2 சிட்டிகை
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
அரிசியையும், உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக 8 மணி நேரம் ஊற வைக்கவும். வெந்தயத்தை, உளுத்தம் பருப்புடன் சேர்த்து ஊற விடவும். ஊறிய அரிசியை நன்றாகக் கழுவி விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதிலேயே உளுத்தம் பருப்பு, வெந்தயம், பொரி, மைதா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்தெடுத்து, உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும்.
மறு நாள் காலையில் மாவுடன் சமையல் சோடாவைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சிறிது வெண்ணை தடவி, கல் சூடானதும் மாவை கல்லில் ஊற்றி மெல்லிய தோசையாகப் பரப்பி விடவும். சிறிது வெண்ணையை எடுத்து தோசையின் மேல் ஆங்காங்கே போடவும். ஒரு புறம் சிவந்து வெந்ததும், திருப்பிப் போட்டு மறு புறமும் சிவந்ததும் எடுத்து வைக்கவும்.
கர்நாடகத்தில், இந்த தோசையுடன் மசித்த உருளைக்கிழங்கும் (நம்மூர் உருளைக்கிழங்கு மசாலா போல் இல்லாமல், மசித்த உருளைக்கிழங்கை வெறுமனே தாளித்து கொடுப்பார்கள்) , தேஙகாய் சட்னியும் பரிமாறுவார்கள் நாம் நம் விருப்பம் போல் சட்னி, சாம்பார் ஆகியவற்றுடனும் பரிமாறலாம்
முகநூல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தோசை வகைகள் சில
[url=/t23162-topic#154965]மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை[/url]
தேவையான பொருட்கள் :
மஞ்சள் கரிசலாங்கண்ணி - 1 கட்டு
அரிசி மாவு - 1 கப்
சாமை மாவு - 1 கப்
சீரகம் - அரை ஸ்பூன்
தோசை மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, சாமை மாவு,தோசை மாவு போட்டு அதில் சீரகம், கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
• தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மாவை தோசையாக ஊற்றி எடுக்கவும்.
• இந்த தோசை மிகவும் சத்தானது.
• வாரம் ஒரு முறை குழந்தைகளுக்குச் செய்துதரலாம். மஞ்சக்காமாலை வராமல் தடுக்கும். பல் வலியைக் குறைக்கும்.

[url=/t23163-topic#154966]மிளகு - கோதுமை தோசை[/url]
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
• வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• மிளகை ஒன்றும் பாதியாக உடைத்துக்கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், பொடி செய்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
• தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
• இப்போது சூப்பரான மிளகு - கோதுமை தோசை ரெடி!!!

கார தோசை
தோசைன்னாலே நமக்கெல்லாம் ஒரே குஷிதான்.. அதிலும் கார தோசைன்னா கேட்கவே வேணாம்.. சரி, இப்போ காரதோசை செய்றது எப்புடினு பார்க்கலாமா....
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
தேங்காய் - 1/2 முடி
மிளகாய் - 4
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10
உப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
* எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும்.
* தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
* தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
* மாவு மீந்து விட்டால், அடுத்த முறை தோசை ஊற்றும்போது மீந்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை வார்க்கவும்.
முகநூல்
[url=#]Enlarge this image[/url][url=#]Reduce this image[/url] [url=#]Click to see fullsize[/url]

[url=/t18781-topic#124417]கொள்ளு சென்னா தோசை[/url]
தேவையான பொருட்கள்.....
கொள்ளு - கால் கப்
பார்லி - கால் கப்
வெள்ளை சென்னா - கால் கப்
புழுங்கல் அரிசி - கால் கப்
வால் நட் - கால் கப்
ராகி மாவு - ஒரு மேசை கரண்டி
இஞ்சி - ஒரு அங்குல துண்டு
பூண்டு - 3 பல்
ப.மிளகாய் - 2
கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 6
உப்பு - தேவைக்கு
ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
செய்முறை.....
• கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலை, சின்ன வெங்காயம், ப.மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கொள்ளு, வெள்ளை சென்னா , அரிசியை இரவே ஊற போடவும்.
• பார்லி அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊறவைக்கவும்.
• வால் நட்டை ஒரு மணி நேரம் முன் கொதிக்கும் வெண்ணீரில் ஊறவைத்து தோலெடுகக்வும்.
• அரைக்கும் போது பூண்டு, இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
• அரிசியை போட்டு நன்கு அரைத்து மீதி உள்ள கொள்ளு, வெள்ளை சென்னா, பார்லி, வால் நட்டை, பொருட்களையும் முக்கால் பதத்திற்கு அரைகக்வும்.
• அரைத்த கலவையில் வெங்காயம், கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கவும்.
• இந்த கலவையை தோசைகளாக கொஞ்சம் ஆலிவ் ஆயில் தெளித்து சுட்டெடுக்கவும்.

கறிவேப்பிலை தோசை
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி - ஒன்றரை கப்
புழுங்கலரிசி - அரை கப்
அவல் - அரை கப்
உளுந்து - அரை கப்
துவரம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒன்றரை கப்
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 10
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பச்சை அரிசி, புழுங்கலரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணிநேரம் ஊறவைக்கவும். அரைப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன் அவலை ஊறவைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஐந்து மணிநேரத்திற்கு பின் அரிசி, பருப்பு கலவையை நைசாக அரைக்கவும். அவலுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து நைசாக அரைத்து அரிசி மாவுக்கலவையுடன் சேர்த்து உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.
பிறகு மாவை ஐந்து முதல் ஆறு மணிநேரம் வரை புளிக்கவிடவும்.
மாவு புளித்த பின்பு தோசைக்கல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.
சத்தான, சுவையான கறிவேப்பிலை தோசை தயார். பூண்டு சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன். சாப்பாட்டில் கறிவேப்பிலையை ஒதுக்குபவர்களை கறிவேப்பிலை சாப்பிட வைப்பதற்கேற்ற நல்ல வழி.
தயாரிப்பு : உமா

Similar topics
» முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை
» தோசை அம்மா தோசை..
» தோசை அம்மா தோசை
» தோசை
» நடைப்பயிற்சியின் வகைகள்
» தோசை அம்மா தோசை..
» தோசை அம்மா தோசை
» தோசை
» நடைப்பயிற்சியின் வகைகள்
சேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum