Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இட்லி வகைகள்
2 posters
சேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்
Page 1 of 1
இட்லி வகைகள்
[size=30]ராகி -ரவா இட்லி[/size]
என்னென்ன தேவை?
ராகி மாவு - 1 கப்,
ரவை - 1 கப்,
பச்சை மிளகாய் - 5 (விழுதாக்கிக் கொள்ளவும்),
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
கெட்டித்தயிர் - 1 கப்,
கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிது,
சமையல் சோடா அல்லது ஃப்ரூட் சால்ட் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
ராகி மாவு, ரவையை வறுத்து தயிரில் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். இதைத் தயிரில் ஊறிய மாவோடு உப்பு சேர்த்துக் கலக்கவும். (மாவு பதத்துக்கு தகுந்த மாதிரி தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்). சமையல் சோடா கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.
http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=2509

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இட்லி வகைகள்
தயிர் இட்லி:
தேவையானவை:
இட்லி 6,
தயிர் 2 கப்,
கடுகு அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 2 (இரண்டாகக் கிள்ளியது),
பெருங்காயம் 1 சிட்டிகை,
கறிவேப்பிலை 1 ஆர்க்கு,
கேரட் 1,
மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) 4 டீஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப,
எண்ணெய் 3 டீஸ்பூன்.
செய்முறை:
தயிரை, தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கொள்ளவும். அதில் உப்பு, மல்லித்தழை சேர்க்கவும். இட்லியை சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அதை தயிரில் ஊறவைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து தயிர் இட்லியில் விட்டு கலக்கிவிடவும். கேரட்டைத் துருவி மேலே தூவி, மல்லித்தழையையும் தூவி அலங்கரிக்கவும். இட்லி மிஞ்சினால் இனி கவலைப்பட வேண்டாம். தயிர் இட்லி ஆக்கிவிடுங்கள்.

கருப்பட்டி இட்லி !!!
தேவை?
இட்லி அரிசி - 8 கப், உளுத்தம் பருப்பு - 1 கப், உப்பு - தேவையான அளவு, சுத்தமான கருப்பட்டி - 2 கப், சிறுபருப்பு - 1 கப், நெய் - சிறிதளவு, தேய்காய்த் துருவல் - 1 கப்.
எப்படிச் செய்வது?
இட்லி அரிசியை 8 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை 2 மணி நேரம் ஊறவைக்கவும். இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். சிறு பருப்பை சுத்தம் செய்து, சிவக்க வறுத்து வேக வைக்கவும் (பாதி வெந்தால் போதும்). இத்துடன் கரைத்து, பொடித்த கருப்பட்டியையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும், இட்லித் தட்டில் அரை கரண்டி இட்லி மாவு ஊற்றி, மத்தியில் கருப்பட்டிக் கலவையை பரப்பி, அதன் மேல் மேலும் அரைக் கரண்டி இட்லி மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இந்த இட்லி புதிய சுவையுடன் இருக்கும்
.குறிப்பு: இட்லி மாவு அதிகம் புளிக்கக் கூடாது.

தயிர்- சேமியா-இட்லி !!!
தேவை?
சேமியா - 2 கப், ரவை - 1/4 கப், தயிர் - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப, உடைத்த முந்திரி - 10 துண்டுகள், நெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.தாளிக்க... கடுகு, உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன், ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, இஞ்சி - 1 சிறிய துண்டு, கறிவேப்பிலை - 1 கொத்து.
அலங்கரிக்க... கொத்தமல்லித்தழை.
எப்படிச் செய்வது?
கடாயில் நெய்யை விட்டு சூடாக்கவும். அதில் முதலில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும். பிறகு ரவையைப் போட்டு வறுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டவும். மீதமிருக்கும் நெய்யில் முந்திரியை வறுத்து, அதே பாத்திரத்தில் கொட்டவும். பிறகு அதே கடாயில், பச்சை மிளகாய், இஞ்சி இரண்டையும் பொடியாக அரிந்து போட்டு மற்ற தாளிக்கும் பொருட்களை தாளித்து தயிர், உப்பு சேர்த்து சேமியா கலவை போட்டிருக்கும் பாத்திரத்தில் போட்டு அனைத்தையும் நன்கு கலக்கவும். இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து இட்லிகளாக வார

மூட்டு வலியை நீக்கும்
முடக்கத்தான் கீரை இட்லி
தேவையானவை: இட்லி அரிசி - 3 கப், முழு உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு கைப்பிடி, முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) - 2 கப், வாழை இலை - 1, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து--வைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். இடலைத் தட்டு அல்லது இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை இடலையாக (அகலமாக) கொஞ்சம் தடிமனாக ஊற்றவும். இடலைத் தட்டை மூடிவைத்து ஆவியில் வேகவிடவும். 10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்... சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் இட்லி தயார்.
muganool

ரவை இட்லி செய்வது எப்படி...???
தேவையான பொருட்கள் :
ரவை-ஒன்றரை கோப்பை
தயிர்-ஒரு கோப்பை
ஆப்பச்சோடா- கால் தேக்கரண்டி
உப்பு-அரைத் தேக்கரண்டி
தண்ணீர்-அரைக் கோப்பை
தாளிக்க:
எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி
கடுகு சீரகம்-ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு-ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்-இரண்டு
பெருங்காயம்-ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கொத்தமல்லி-கால் கோப்பை
செய்முறை :
வாணலியில் ரவையை கொட்டி சூடு வர இலேசாக வறுத்து ஆற வைக்கவும்,
பிறகு அதில் உப்பு,சோடா,தயிர் மற்றும் நீரைச் சேர்த்து கலக்கி ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்,
பிறகு எண்ணெயில் தாளிப்புப் பொருட்களை போட்டு தாளித்து ரவைக் கலவையில் கொட்டி கொத்தமல்லியையும் சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கவும்,
அதன் பிறகு இட்லி தட்டுகளில் எண்ணெயைத் தடவி அதில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

வெந்தய இட்லி
வெந்தய இட்லியானது மிகவும் அருமையான, அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவும் கூட. இது ஒரு கர்நாடக ரெசிபி. இதனை காலையில் உட்கொண்டால், அது உடலுக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுத்து, நாள் முழுவதும் நன்கு செயல்பட உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக தட்டியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் போட்டு, குறைந்தது 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு பௌலில் வெந்தயத்தைப் போட்டு தயிர் ஊற்றி, கரண்டி கொண்டு நன்கு கலந்து, இதையும் 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
ஆறு மணிநேரம் ஊற வைத்தப் பின்னர் மிக்ஸியில் துருவிய தேங்காய் மற்றும் ஊற வைத்துள்ள வெந்தயக் கலவையை போட்டு நன்கு மென்மையாக அரைத்து, அதனை தனியாக ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள அரிசியை நன்கு அரைத்து, அதனை அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையில் சேர்த்து, நன்கு கலந்து, பின் வெல்லத்தை சேர்த்து நன்கு கரண்டி கொண்டு கலந்து, மாவை நொதிக்க விட வேண்டும்.
கலவையானது நன்கு பொங்கி வந்த பின்னர், அதில் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான வெந்தய இட்லி ரெடி!!! இதனை [url=http://tamil.boldsky.com/recipes/veg/tomato-onion-chutney-recipe-004667.html]தக்காளி மற்றும் வெங்காய சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/veg/methi-idli-recipe-breakfast-005000.html[/url][url=#]Enlarge this image[/url][url=#]Reduce this image[/url] [url=#]Click to see fullsize[/url]

ADVERTISEMENT
மேலும் எப்போதும் அரிசி இட்லியை செய்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள், இந்த வெந்தய இட்லியை முயற்சி செய்யுங்கள். சரி, இப்போது அந்த வெந்தய இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக தட்டியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் போட்டு, குறைந்தது 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு பௌலில் வெந்தயத்தைப் போட்டு தயிர் ஊற்றி, கரண்டி கொண்டு நன்கு கலந்து, இதையும் 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
ஆறு மணிநேரம் ஊற வைத்தப் பின்னர் மிக்ஸியில் துருவிய தேங்காய் மற்றும் ஊற வைத்துள்ள வெந்தயக் கலவையை போட்டு நன்கு மென்மையாக அரைத்து, அதனை தனியாக ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள அரிசியை நன்கு அரைத்து, அதனை அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையில் சேர்த்து, நன்கு கலந்து, பின் வெல்லத்தை சேர்த்து நன்கு கரண்டி கொண்டு கலந்து, மாவை நொதிக்க விட வேண்டும்.
கலவையானது நன்கு பொங்கி வந்த பின்னர், அதில் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான வெந்தய இட்லி ரெடி!!! இதனை [url=http://tamil.boldsky.com/recipes/veg/tomato-onion-chutney-recipe-004667.html]தக்காளி மற்றும் வெங்காய சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/veg/methi-idli-recipe-breakfast-005000.html[/url][url=#]Enlarge this image[/url][url=#]Reduce this image[/url] [url=#]Click to see fullsize[/url]
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இட்லி வகைகள்
[url=/t18369-topic#120347]சில்லி இட்லி[/url]
[*]இட்லி - 10
[*]தக்காளி - 3
[*]கறிவேப்பிலை - 2 கொத்து
[*]கொத்தமல்லி - 2 கொத்து
[*]சில்லி சிக்கன் மசாலா - 1 மேசைக்கரண்டி
[*]உப்பு - ஒரு தேக்கரண்டி
[*]பெரிய வெங்காயம் - 2
[*]எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
இட்லியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டாக நறுக்கிக் கொள்ளவும்

இட்லியை சற்று ஆற வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு 20 விநாடிகள் வதக்கவும்
அதன் பிறகு அதில் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள தக்காளி போட்டு வதக்கவும். தக்காளியை நன்கு மசித்து விட்டு வேகவிடவும்
அத்துடன் உப்பு, சில்லிப் பவுடர் போட்டு நன்கு கிளறி விட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்
பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி மேலே தூவி கிளறவும்.
இப்போது துண்டங்களாக்கி வைத்துள்ள இட்லியை போட்டு கிளறி விடவும். மசாலா இட்லியில் சேரும்படி பிரட்டி விடவும்.
சுமார் ஒரு நிமிடம் வேகவிட்டு, மசாலா இட்லியில் இறங்கியுள்ளதா என்று ருசி பார்த்து, இறக்கி, அலங்கரித்துப் பரிமாறவும்.
இதனை செய்து காட்டியவர் திருமதி. லெஷ்மி கலைசெல்வன் அவர்கள். இட்லி வேக வைத்து எடுப்பதுதான் சற்று நேரம் எடுக்கும். மற்றவை சுமார் 15 நிமிடங்களுக்குள் முடிந்து விடும்.
http://www.arusuvai.com/
இப்போது துண்டங்களாக்கி வைத்துள்ள இட்லியை போட்டு கிளறி விடவும். மசாலா இட்லியில் சேரும்படி பிரட்டி விடவும்.
சுமார் ஒரு நிமிடம் வேகவிட்டு, மசாலா இட்லியில் இறங்கியுள்ளதா என்று ருசி பார்த்து, இறக்கி, அலங்கரித்துப் பரிமாறவும்.
இதனை செய்து காட்டியவர் திருமதி. லெஷ்மி கலைசெல்வன் அவர்கள். இட்லி வேக வைத்து எடுப்பதுதான் சற்று நேரம் எடுக்கும். மற்றவை சுமார் 15 நிமிடங்களுக்குள் முடிந்து விடும்.
http://www.arusuvai.com/
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இட்லி வகைகள்
கீரை இட்லி
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், இளம் முருங்கைக் கீரை - ஒரு கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுங்கள். கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இட்லி வகைகள்
தக்காளி இட்லி
தேவையானவை:
இட்லி மாவு - 2 கப்,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
மல்லித்தழை - சிறிதளவு.
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 3 பல்,
மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
இட்லி மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேருங்கள். அத்துடன் சிட்டிகை உப்பு சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி, அரைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறுங்கள். பின்பு தக்காளி, தேவையான உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி இட்லி, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்குங்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இட்லி வகைகள்
வெந்தயக்கீரை இட்லி
தேவையானவை: இட்லி மாவு - 2 கப்,
வெந்தயக்கீரை - 2 கட்டு,
பெரிய வெங்காயம் - 1,
எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - சிட்டிகை.
வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 5,
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். கீரையை பொடியாக நறுக்கி அலசிக்கொள்ளுங்கள்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்குங்கள்.
இட்லி மாவைக் கொண்டு, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை பொடித்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய், நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், சிட்டிகை உப்பு, மஞ்சள்தூள் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கிய தும் கீரையை சேர்த்து, மேலும் நன்கு வதக்குங்கள். பிறகு, பொடித்த பொடியைத் தூவி, இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறுங்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இட்லி வகைகள்
வெஜிடபிள் இட்லி
தேவையானவை:
இட்லி மாவு - 2 கப்,
பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப்,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
மல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - ஒரு சிட்டிகை.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்குங்கள். பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள். இந்தக் கலவையை அப்படியே சூடாக இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். சுவையான வெஜிடபிள் இட்லி தயார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இட்லி வகைகள்
சிவப்பரிசி இட்லி (Rose matta rice idli)
சிவப்பரிசியில் புழுங்கல் அரிசியாகப் பார்த்து வாங்க வேண்டும்.இதற்கும் புழுங்கல் அரிசி மாதிரியேதான் அளவு,மாவு அரைப்பது,கரைத்து வைப்பது எல்லாம்.ஆனால் அரிசி நன்றாக ஊறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.எனவே முதல் நாளிரவே ஊற வைத்துவிட வேண்டும்.
தேவையானப் பொருள்கள்:
சிவப்பரிசி_4 கப்
உளுந்து_1/4 கப்
வெந்தயம்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும்,வெந்தயத்தையும் தனித்தனியாக முதல் நாளிரவே,தூங்கச் செல்வதற்கு முன் ஊற வைத்து விட வேண்டும்.அடுத்த நாள் காலையில் உளுந்தை ஊற வைக்கவும்.குறைந்தது 4 மணி நேரமாவது ஊற வேண்டும். பிறகு தோலியைக் கழுவிவிட்டு ஃபிரிட்ஜில் சுமார் ஒரு 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும்.மாவு அரைப்பதற்கும் ஃபிரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் உளுந்து நிறைய மாவு காணும்.
மாவு அரைக்கும்போது முதலில் உளுந்தையும்,வெந்தயத்தையும் கிரைண்டரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.குறைந்தது 1/2 மணி நேரமாவது அரைக்க வேண்டும்.இடையிடையே தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு,மாவைக் கையில் எடுத்துப் பார்த்தால் நுரைத்துக் கொண்டு இருக்கும்,அப்போது ஒரு பாத்திரத்தில் வழித்து கைகளால் நன்றாகக் கொடப்பி வைக்கவும். அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.
அடுத்து அரிசியைப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.மாவு கெட்டியாக இல்லாமலும்,நீர்க்க இல்லாமலும் இருக்க வேண்டும்.புழுங்கல் அரிசிக்கு தேவைப்படும் தண்ணீரை விட இதற்கு கொஞ்சம் அதிகமாகத் தேவைப்படும்.நன்றாக அரைத்த பிறகு (இதற்கும் சுமார் 1/2 மணி நேரம் பிடிக்கும்.) வழித்து உளுந்து மாவுடன் சேர்த்து உப்பு போட்டு நன்றாகக் கொடப்பி கரைத்து வைக்கவும்.
அடுத்த நாள் பார்த்தால் மாவு நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும்.வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். சிறிது இளஞ் சிவப்பாக, பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவைத் தனியாக எடுத்து, சிறிது நீர் விட்டுக் கரைத்து தோசையாக வார்க்கலாம்.
நமக்கு விருப்பமான சாம்பார்,சட்னி,புளிக் குழம்பு,அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.
http://chitrasundar5.wordpress.com/

கேழ்வரகு சேமியா இட்லி / Ragi semiya idli
இது உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு டிஃபன்.ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு தானியம் சாப்பிட வேண்டும் என்பதால் லிஸ்டில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
[url=http://chitrasundar5.wordpress.com/2012/05/30/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/]கேழ்வரகு சேமியா உப்புமா செய்வதில் பாதி வேலைகூட இதற்குத் தேவையில்லை.எண்ணெயும் சேர்க்காததால் மிகுந்த ஆரோக்கியமானதும்கூட.
ஒரு பாக்கெட் சேமியாவில் மூன்று பேருக்குக்குறையாமல் சாப்பிடலாம்.
செய்முறையை ஒரே வரியில் சொல்வதானால் சேமியாவில் உப்பு போட்டு ஊறவைத்து,நீரை வடித்துவிட்டு,இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.இதைத்தான் கீழே ஒரு பதிவாகக்கொடுத்துள்ளேன், புதியவர்களுக்கு உதவும் என்பதால்.
தேவையானவை:
அணில் சேமியா பாக்கெட் (200 g )_1
உப்பு_தேவைக்கு
செய்முறை:
கேழ்வரகு சேமியாவைப் பிரித்துக் கொட்டி(பாத்திரத்தில்தான்)இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு,பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறும்வரை ஊறவிடவும்.ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.
சேமியாவில் தண்ணீர் வடிந்ததும் பாத்திரத்தை நிமிர்த்திவிடவும்.சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும். அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.
பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் இட்லித்தட்டை வைத்து, அதன்மீது இட்லித் துணியைப்போடவும்.
இட்லிப் பாத்திரம் காய்ந்ததும் சேமியாவை கையால் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி ஒவ்வொரு குழியிலும் வைத்து மூடி வேக விடவும்.
ஆவி வந்து,வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
இது மிகவும் மிருதுவாகவே இருக்கும்.
http://chitrasundar5.wordpress.com/[/url]

ஓட்ஸ் இட்லி
தேவையானப் பொருள்கள்:
ஓட்ஸ்_ஒரு கப்
இட்லி மாவு_ஒரு இட்லிக் கரண்டி
உப்பு_சிறிது
செய்முறை:
இதற்கு rolled oats தான் சிறந்தது.
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நல்ல மாவாக இடித்துக்கொள்ளவும்.
ஓட்ஸ் மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் இட்லி மாவை சேர்த்து,சிறிது உப்பும் போட்டு தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக்கொள்ளவும்.
இட்லி மாவு இல்லையெனில் ஒரு 2 டீஸ்பூன் தயிர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளலாம்.
ஒரு 10 நிமிடம் கழித்துப் பார்த்தால் ஓட்ஸ் இட்லி மாவு கெட்டியாக ஆகிவிடும்.தேவையெனில் கொஞ்சம் நீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.
மாவு புளிக்க வேண்டுமென்பதில்லை.ஒரு 1/2 மணி நேரத்திற்குள்ளேயே மாவு தயாராகிவிடும்.
இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி, பாத்திரம் சூடாகியதும் அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும்.வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும்.
சூடாக, விருப்பமான,காரமான சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
அல்லது புளிக்குழம்பு,காரக்குழம்பு,கருவாட்டுக்குழம்பு,மீன்குழம்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றையும் தொட்டு சாப்பிடலாம்.
ஓட்ஸ் தோசை வேண்டும் எனில் மாவில் மேலும் கொஞ்சம் நீர் விட்டுக் கரைத்து தோசையாக வார்க்கலாம்.
[url=http://chitrasundar5.wordpress.com/]http://chitrasundar5.wordpress.com/[/url]

மிளகாய்ப்பொடி இட்லி
தேவையானவை:
இட்லிகள்- 10
பெரிய வெங்காயம்- 1
கேசரித்தூள்- சிறிதளவு
வறுத்துத் திரிக்க:
கடலைப்பருப்பு- 1 கைப்பிடி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/2 கைப்பிடி
மிளகாய்வற்றல்- 4
காயம்- சிறிதளவு
உப்பு- சிறிதளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க
செய்முறை:
1. இட்லிகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்(காலையில் மீந்த இட்லிகளையும் பயன்படுத்தலாம்)
2. வறுக்கக் கொடுத்தப் பொருட்களைச் சிவக்க வறுத்து நற நறவென்று திரிக்கவும், அல்லது இட்லி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டியளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. இட்லிகளை விருப்பமான வடிவில் நறுக்கவும்.
4. வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும். நிறமூட்டியைச் சேர்க்கவும்.
5. இட்லிப்பொடியைச் சேர்த்துக் கிளறவும்.
6. நறுக்கின இட்லிகளைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுத்தால் மிளகாய்ப்பொடி இட்லி தயார்.
வேறொரு முறை:
இம்முறையில் வெங்காயமோ நிறமூட்டியோ சேர்க்காமல் மேற்கூறிய முறையில் செய்யலாம். இம்முறை இட்லிகளால் காலையில் மீந்த இட்லியும் நன்றாக வியாபாரமாகி விடும். நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த சிற்றுண்டி செய்யவும் எளிது.
By Seetha http://kayasandigai.wordpress.com

தேவையான பொருட்கள்
இட்லி – 6
சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி- 1 தேக்கரண்டி(துருவியது)
பச்சைமிளகாய்- 1
பூண்டு- 1 தேக்கரண்டி(துருவியது)
உப்பு -சுவைக்கு
எண்ணெய் – பொரிக்க
கேசரி கலர் – சிறிதளவு
செய்முறை:
1. இட்லிகளை விரல் நீளத்துண்டுகளாகவோ சதுரமாகவோ நறுக்கவும்.
2. அதனுடன் அனைத்துப் பொருட்களைம் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும்.
3. எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளைப் பொரித்தெடுக்கவும். இட்லிகளைப் பொரிக்காமல் வதக்கியும் செய்யலாம்.
4. கொத்தமல்லி தூவி அலங்கரிக்கச் சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.
5.இட்லியா? வேண்டாமென்று அலறும் குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்,
காலையில் மீந்த இட்லிகளை மாலையில் இம்முறையில் சுட சுடச் செய்ய, உனக்கு எனக்கு எனப் போட்டி போட்டுக் காலி செய்வர்.
————————————————————————————————–
By சீதாhttp://kayasandigai.wordpress.com/
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இட்லி வகைகள்
பொடி இட்லி
இட்லி மாவு - 2 கப்,
இட்லி மிளகாய் பொடி - 4 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கைப்பிடி,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்.
மாவில் குட்டிக் குட்டி இட்லிகள் தயாரிக்கவும். பெரிய இட்லியாக இருந்தால் சின்னத் துண்டுகளாக வெட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். அதில் இட்லி மிளகாய் பொடி சேர்த்துக் கிளறவும். இந்தக்
கலவையில் இட்லியைப் போட்டுப் பிரட்டி, மசாலா நன்கு பரவுமாறு செய்து, பரிமாறவும்.

[url=/t13671-topic#81571]வாழைப்பழ இட்லி[/url]
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
கனிந்த வாழைப்பழம் - 3-4 (மசித்தது)
உப்பு - 1 சிட்டிகை
வெல்லம் - 1/2 கப் (தேவைக்கேற்ப)
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, ரவை, துருவிய தேங்காய், உப்பு, வெல்லம் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நெய்யைத் தடவி, இநத் மாவை இட்லிகளாக ஊற்றி, பாத்திரத்தின் உள்ளே வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான வாழைப்பழ இட்லி ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/banana-idli-recipe-a-breakfast-treat-003608.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
இட்லி வகைகள்
குடைமிளகாய் ப்ரைடு இட்லி
இரவில் இட்லி செய்து சாப்பிட்டு, நிறைய இட்லிகள் எஞ்சியிருந்தால், அப்போது அதனை தூக்கிப் போடாமல், அதனை பலவாறு செய்து சாப்பிடுவோம். குறிப்பாக இட்லி உப்புமாவைத் தான் பெரும்பாலான வீடுகளில் செய்வோம். ஆனால் இப்போது அவ்வாறு எஞ்சியிருக்கும் இட்லியை உப்புமா செய்யாமல், அதனை சற்று வித்தியாசமாக, குடைமிளகாய் சேர்த்து ஒரு ப்ரைடு இட்லிகளாக செய்யலாம்.
இது காலையில் எளிதில் 10 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு காலை உணவு. ஆகவே வேலைக்கு செல்வோருக்கு இந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
இட்லி - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு இட்லி மற்றும் குடைமிளகாய் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும்.
பின் அதில் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் நன்கு கிளறி, இறக்கி விட வேண்டும்.
இப்போது சூப்பரான குடைமிளகாய் ப்ரைடு இட்லி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாற வேண்டும்.
http://tamil.boldsky.com/recipes/veg/capsicum-fried-idli-003028.html

மசாலா ரவா இட்லி
தேவையான பொருட்கள்:
ரவை - 3 கப்
பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் பச்சை பட்டாணி மற்றும் ரவையை சேர்த்து சிறிது நேரம் வறுக்க வேண்டும்.
பின் அதனை இறக்கி குளிர வைத்து, அதில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து நீரானது நன்கு கொதித்ததும், இட்லி தட்டில் மாவை ஊற்றி பாத்திரத்தினுள் வைத்து 6 நிமிடம் வேக வைத்து இறக்கினால், மசாலா ரவா இட்லி ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/masala-rava-idli-006748.html

விதவிதமாய் இட்லிக்கள் படம் பார்க்கவே சூப்பராக இருக்கின்றது! யாராவது சமைத்து தந்தால் சாப்பிட்டு பார்த்து சுவை சொல்வேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இட்லி வகைகள்
மினி பெப்பர் இட்லி
தேவையான பொருட்கள்:
மினி இட்லி - 12
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் இட்லி மாவைக் கொண்டு மினி இட்லிகளை சுட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, அம்மி அல்லது மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடம் நன்கு பிரட்டி, பின் மினி இட்லிகளை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மினி பெப்பர் இட்லி ரெடி!!!
குறிப்பு: வேண்டுமானால் மினி இட்லிக்கு பதிலாக சாதாரண இட்லியைக் கொண்டும் இதனை செய்யலாம். அதற்கு சாதாரண இட்லிகளை சுட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
http://tamil.boldsky.com/recipes/veg/mini-pepper-idli-recipe-006900.html

Similar topics
» பாசிப்பருப்பு இட்லி & கொள்ளு இட்லி
» நடைப்பயிற்சியின் வகைகள்
» இட்லி மஞ்சூரியன்.
» ரவை சேமியா இட்லி
» கேழ்வரகு இட்லி!
» நடைப்பயிற்சியின் வகைகள்
» இட்லி மஞ்சூரியன்.
» ரவை சேமியா இட்லி
» கேழ்வரகு இட்லி!
சேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum