சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36

» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30

» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29

» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28

» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26

» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25

» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24

» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?  Khan11

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

5 posters

Go down

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?  Empty கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

Post by ahmad78 Thu 25 Sep 2014 - 14:45

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?  33


கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!

பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.

நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’

யார் நுகர்வோர்?


தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.
 
http://anjaaan.blogspot.com/2013/12/blog-post_317.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?  Empty Re: கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

Post by சுறா Thu 25 Sep 2014 - 18:46

ஒரு பொருள் சர்வீஸ் செய்யப்பட்டும் அது வேலை செய்யவில்லையென்றால் அடுத்து என்ன? வேறு புது பொருள் "வாரண்ட்டியில்" கிடைக்காதா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?  Empty Re: கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

Post by Nisha Fri 26 Sep 2014 - 1:38

மூன்று வருடங்கள் முன்பு ஒரு  நண்பரின் விசேஷத்துக்கு ஆயிரம் வடை செய்து தர கேட்டிருந்தார்கள்.  நம்புங்கப்பா நிஷா அப்பல்லாம்  ஓசியில் தான் எல்லோருக்கும்   சுட்டு அவித்து கொடுத்தேன்!எனக்கு ரசிகர் மன்றம் இருக்கு என்றால் நம்பவா போறிங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்  
ஆயிரம் வரை செய்ய கிட்டத்தட்ட  20 கிலோவுக்கும் மேலே உழுந்து மையாக அரைக்கணும். என்னிடம் இருந்த ஒரு கிரைண்டரில்  தொடர்ந்து பயன் படுத்தினால் சூடேறி பழுதாகிரும் என பயந்து முதல் நாள் போய் ஒரு மிக்சி வாங்கி வந்தேன்.. உழுந்தை போட்டு  அரைத்து முடிக்கவும். புது கிரைண்டர் சூடேறி தன் வேலை நிறுத்தம் செய்யவும் சரியாக இருந்தது. 

மறு நாளே கடையில் கொண்டு போய் வேலை செய்யல்லை என்னன்னு பார்க்க சொன்னால் அவர்களுக்கும் வேலை செய்யல்லை. பழுதாகி விட்டது. கொடுத்த காசை  திரும்ப வாங்கிட்டு வடையையும் சுட்டு சாப்பிட்டு விட்டு நடையை கட்டினேன்! 

இது தான் கியாராண்டிக்கும் வாரண்டிக்கும் இடைப்பட்ட என் ஐடியா.  ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?  Empty Re: கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

Post by பானுஷபானா Fri 26 Sep 2014 - 9:47

கடைக்காரரை ஏமாத்திட்டிங்க :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?  Empty Re: கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

Post by Nisha Fri 26 Sep 2014 - 12:08

கடைக்காரரை ஏமாத்தவெல்லாம் இல்லைப்பா! இப்படி ஒரு காரண்டி வழி இருக்கு என எனக்கே அப்போது வரை தெரியாது பானு!

நம்புங்கள் மேடம்!  ஆனால் இனி அப்படி செய்யலாமா என யோசிச்சிட்டிருக்கேன்! ஹாஹா..^(^(


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?  Empty Re: கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

Post by பானுஷபானா Fri 26 Sep 2014 - 14:50

Nisha wrote:கடைக்காரரை ஏமாத்தவெல்லாம் இல்லைப்பா! இப்படி ஒரு காரண்டி வழி இருக்கு என எனக்கே அப்போது வரை தெரியாது பானு!

நம்புங்கள் மேடம்!  ஆனால் இனி அப்படி செய்யலாமா என யோசிச்சிட்டிருக்கேன்! ஹாஹா..^(^(

:* :*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?  Empty Re: கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

Post by சுறா Fri 26 Sep 2014 - 14:52

கூடாதுன்னா கூடாது. ஏமாற்றக்கூடாது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?  Empty Re: கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

Post by Nisha Fri 26 Sep 2014 - 15:01

சுறா wrote:கூடாதுன்னா கூடாது. ஏமாற்றக்கூடாது

அப்படியா? சரிங்க வாத்தியாரையா! ^_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?  Empty Re: கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 5:29

நன்றி நல்ல பதிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?  Empty Re: கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum