Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
FTP என்றால் என்ன?
Page 1 of 1
FTP என்றால் என்ன?
ஒரு வர்ட் பைலை அல்லது ஒரு படத்தை இணையத்தினூடு அனுப்ப வேண்டிய தேவை ஏற்படும் போது அதனை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பி விடலாம் என்பது நீங்கள் அறிந்ததே. அதி வேக இணைய இணைப்பு பயன் பாட்டில் உள்ள இக்காலத்தில் பைல் ஒன்றை அனுப்ப பெற உதவும் இம்முறையானது ஒரு சாதாரண கணினிப் பயனரைப் பொருத்த மட்டில் போதுமானதே.
மாறாக பைல் அளவு அதிகமாகும்போது அல்லது அதிக எண்ணிக்கையிலான பைல்களை அனுப்பும்போது மின்னஞ்லில் அனுப்புவது சிறந்த தெரிவாக அமைய மாட்டாது. ஏனெனில் மின்னஞ்சல் சேவை தரும் நிறுவனங்கள் ஒரு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பக் கூடிய பைலின் அளவில் ஒரு எல்லையை நிர்னயித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்கு உதவுகிறது FTP.
File Transfer Protocol என்பதன் சுருக்கமே FTP. இணையத்தில் ஒரு சேர்வர் கணினிக்கும் எமது கணினிக்குமிடையில் பைல்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடிய வசதியை FTP தருகிறது. . FTP தளம் (sites) என்பது மென்பொருள்கள், படங்கள், இசை, வீடியோ என பலவகையான பைல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு சேர்வர் கணினியாகும். World Wide Web எனும் உலகலாவிய வெப் தளம் போல்,. (E-mail) மின்னஞ்சல் போல் இனையம் மூலம் பெறப்படும் மற்றுமொரு சேவையே எப்டிபி.
இணையம் வழியே பைல்களைப் பரிமாறிக் கொள்வதில் தற்காலத்தை விட கடந்த காலங்களில் FTP பயன்பாடு ஒரு பொதுவான விடயமாக விருந்தது. இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பறிமாறிக் கொள்ள மின்னஞ்சலை விட FTP யே அதிகம் பயன்படுத்தப்பட்டது. முன்னரைப் போன்று பலராலும் பரவலாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும் FTP என்பது இன்னும் கூடப் பயன்பாட்டிலுள்ளது. பெரிய பைல்களை இணையத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளும் வண்ணம் செய்வதற்கு FTP பயன் படுத்தப்படுகிறது. பைல்களை பறிமாறிக் கொள்வதில் தற்போது பயன்படுத்தப்படும் ஏனைய வழிமுறைகளுடன் ஒப்பிடும்போது FTP அதிக வேகம் கொண்டதாகவும் உள்ளது.. FTP இணையம் வழியே பைல்களை அனுப்ப பெற உதவும் ஒரு சிறந்த வழிமுறை எனலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: FTP என்றால் என்ன?
பொதுவாக FTP யானது இணைய தள வடிவமைப்பாளர்களால் அதிகம் பயன் படுத்தப்படுகிறது. இணைய தளங்களை அவை சேமிக்கபடும் சேர்வர் கணினிகளுக்கு அல்லது ஹோஸ்ட் (host) கணினிகளுக்கு அப்லோட் (upload) செய்வதற்காக அவர்களால் இது பயன்படுத்தப்படுகிறது. அத்தோடு அனேகமான இணைய தள சேர்வர்கள் FTP மூலம் மாத்திரமே இணைய தளங்களை அப்லோட் செய்வதற்கு அனுமதிக்கிறது.
ஒரு FTP சேர்வரை இரண்டு முறைகளில் அணுகலாம். முதல் வழி முறையில் உங்களுக்கு வழங்கப்படும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொண்டு உங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு ஒரு FTP சேர்வரை அணுகுவதாகும். இரண்டாவது வழிமுறையாக பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் விவரங்கள் ஏதும் இன்றி ஒரு எப்டிபீ சேர்வரை அணுகுவதாகும். இவ்வாறான FTP சேர்வரை (Anonymous FTP) பெயரில்லா எப்டிபீ எனப்படும் இந்த எனோனிமஸ் எப்டிபியை விரும்பிய எவரும் அடைய முடியும்.
ஒரு எப்டிபி சேர்வரை அணுகுவதற்கு இணைய தளங்களைப் பார்வையிட உதவும் இணைய உலாவி அல்லது அதற்கென விசேடமாக உருவாக்கப்பட்ட மென்பொருள் கருவி பயன்படுத்தப்படும். . இவ்வாறான மென்பொருள் கருவிகளை (FTP Client) எப்டிபி க்ளையண்ட் எனப்படும். பிரவுஸரை விட FTP க்ளையன்ட் பயன் படுத்துவதே சிறந்த வழிமுறையாகும். FileZilla. Cute FTP, Smart FTP என ஏராளமான FTP க்ளையண்டுகள் பாவனையிலுள்ளன. இவை அனைத்தும் வேறு பட்ட இடை முகப்புகளைக் கொண்டிருப்பினும் ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு பைல்களைப் பரிமாறும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றன.
இணைய உலாவி மூலம் FTP சேர்வரை அணுகும்போது முகவரிப் பட்டையில் ftp:// என்பது சேர்த்துக் கொள்ளப்படும். உதாரணமாக, ftp://ftp.schoolnet.lk/ என வழங்கினால் அந்த FTP சேர்வரை அடையாளமில்லாத முறையில் (anonymous) அணுகும். எனினும் அந்த FTP சேர்வர் பயனர் பெயர் மற்றும் கடவு சொல் வினவுமாயின் ftp.somedomain.com" target="_blank" rel="nofollow">ftp://username:password@ftp.somedomain.com எனும் ஒழுங்கில் வழங்க வேண்டும். எனினும் இவ்வாறு வழங்கும் போது கடவு சொல் பிரவுஸரினால் கணினியில் சேமிக்கப்படும் அத்னால் பாஸ்வர்டை வழங்காது பயனர் பெயரை மட்டும் பின்வருமாறு வழங்கலாம். ftp.somedomain.com" target="_blank" rel="nofollow">ftp://username@ftp.somedomain.com இவ்வாறு வழங்கும் போது பாஸ்வர்டை பிரவுஸர் பின்னர் வினவும். எனினும் ப்ரவுஸரில் பாஸ்வர்ட் தங்காது. .
வெப் பிரவுஸர் அல்லது எப்டிபீ க்ளையண்ட் பயன் படுத்தி எப்டிபி சேர்வர் ஒன்றை அணுகும்போது சேர்வரிலுள்ள பைல் போல்டர்களை பட்டியலிடக் காணலாம். அதிலிருந்து உங்களுக்குத் தேவையான பைல்களை Drag & drop முறையில் உங்கள் கணினிக்கு டவுன்லோட் செய்யவோ அல்லது உங்கள் கணினியிலிருந்து சேர்வருக்கு அப்லோட் செய்யவோ முடியும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» விஞ்ஞானம் என்றால் என்ன
» அபார்ஷன் என்றால் என்ன?
» 64 Bit Processor என்றால் என்ன?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» விஞ்ஞானம் என்றால் என்ன
» அபார்ஷன் என்றால் என்ன?
» 64 Bit Processor என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum