சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

ஹேக்கிங் என்றால் என்ன? Khan11

ஹேக்கிங் என்றால் என்ன?

Go down

Sticky ஹேக்கிங் என்றால் என்ன?

Post by ahmad78 on Wed 18 Feb 2015 - 11:17

ஹேக்கிங் என்றால் என்ன? 10996539_679049358883803_3365737120993270283_n


இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.
ஹேக்கிங் என்றால் என்ன?
****************************************** https://http://www.tsu.co/mytheen78
 
உங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.
எதற்கு இதை செய்கிறார்கள்?
*********************************************
ஒரு சிலர் இதை பொழுதுபோக்காக செய்கிறார்கள், இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களின் கணக்கை முடக்க செய்கிறார்கள். ஒரு சிலர் பணத்துக்காக செய்கிறார்கள் அதாவது நீங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் நீங்கள் கூறும் கணக்கை ஹேக் செய்து கொடுத்து விடுவார்கள். இன்னும் ஒரு சிலர் மற்றவர்களின் வங்கிக்கணக்கை ஆட்டையை போட்டு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள்.
இதை எவ்வாறு தடுப்பது?
***************************************
நான் கூறப்போவது உங்களை எச்சரிக்கை படுத்தவே நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாந்தாலும் நமது கணக்கு முடக்கப்பட்டு விடும். எனவே நான் கூறியவற்றை கூடுமானவரை பின்பற்றப்பாருங்கள்.
1. நீங்கள் கூகிள் மின்னஞ்சல் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணக்கில் சென்று உங்கள் மின்னஞ்சல் கணக்கை httpsமுறையில் மாற்றிக்கொள்ளுங்கள் காரணம் இது அதிக பாதுகாப்பான ஒன்றாகும். httpபயன்படுத்தினீர்கள் என்றால் உங்கள் கணக்கை எளிதில் முடக்க முடியும். குறிப்பாக நீங்கள் Public Wireless பயன்படுத்தினால். எனவே நீங்கள் முதல் வேலையாக இதை மாற்றி விடுங்கள். மின்னஞ்சல் கணக்கு என்றில்லை வங்கிக்கணக்கு உட்பட எந்த கணக்கில் நுழைந்தாலும் அது https ஆக உள்ளதா என்று உறுதி செய்த பிறகே உள்ளே செல்ல வேண்டும். https உங்கள் தகவல்களை என்க்ரிப்ட் செய்து அனுப்பும்.
2. நீங்கள் எப்போது மின்னஞ்சலை பயன்படுத்த நினைத்தாலும் நீங்களே முகவரியை முழுதும் தட்டச்சு செய்யுங்கள் எடுத்துக்காட்டாக https://gmail.com வேறு ஏதாவது சுட்டி (Link) மூலம் தயவு செய்து போகாதீர்கள். எடுத்துக்காட்டாகhttp://www.emaanthavan.com/google.com என்று இருக்கும் icon smile ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?திறந்தாலும் கூகிள் மின்னஞ்சல் கணக்கு முகப்பு பக்கம் போலவே இருக்கும். நீங்கள் கூகிள் கணக்கு என்று நினைத்து உங்கள் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து செல்வீர்கள் ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது. நீங்களும் சரி! எதோ பிரச்சனை என்று மறுபடியும் நேரடியாக http://www.gmail.com என்று அடித்து சென்று விடுவீர்கள் ஆனால் உங்களுக்குத் தெரியாது நீங்கள் இன்னொருவருக்கு உங்கள் கடவுச்சொல்லை தாரை வார்த்து விட்டீர்கள் என்று.
3. உங்கள் கணினியில் Windows இயங்குதளம் (Operating System) பயன்படுத்துகிறீர்கள் என்றால் Windows update மற்றும் Anti Virus update கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை தானியங்கியாக அமைத்து விட்டீர்கள் என்றால் அதுவே நீங்கள் இணையத்தை இணைத்தவுடன் Update செய்து விடும். நீங்கள் அவ்வப்போது அது சரியாக செயல்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது. இது நீங்கள் பயன்படுத்துகின்ற உலவிக்கும் பொருந்தும்.
4. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சலில் உள்ள சுட்டிகளை தயவு செய்து க்ளிக் செய்ய வேண்டாம் இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கு சந்தேகம் அளிக்கும் எந்த சுட்டியையும் க்ளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்கள் தகவல்களை எளிதாக சுருட்ட முடியும்.
5. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் பற்றி கேட்டு எதுவும் மின்னஞ்சல் வந்தால் நீங்கள் தைரியமாக அதை டெலிட் செய்து விடலாம். எந்த வங்கியும் உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள் (பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்) கேட்டு மின்னஞ்சல் செய்யாது. 100% நம்பலாம். உங்கள் மின்னஞ்சல் பயனர் கணக்கு பற்றிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சலும் இதே வகையை சேர்ந்ததாகும்.
6. இலவசமாக கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியாத எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாதீர்கள் அதில் Spyware என்ற உங்கள் தகவல்களை திருடும் மென்பொருளையும் இணைத்து விடுவார்கள். இது தெரியாமல் இலவசம் என்று சந்தோசமாக நிறுவினால் உங்கள் கிரெடிட் கார்ட் எண் உட்பட அனைத்தையும் சுட்டு வேட்டு வைத்து விடுவார்கள். நம்ம தான் இலவசம் என்றால் பினாயிலும் குடிப்போமே! உஷாராக இருங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தேவையற்ற மென் பொருளை நிறுவுவதை தவிர்க்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது உங்கள் கணினியின் வேகமும் சிறப்பாக இருக்கும்.
7. Keylogger என்ற ஒரு மென்பொருள் உள்ளது இது மிக மிக அபாயகரமான மென் பொருளாகும். இதன் மூலம் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒரு எழுத்து விடாமல் அத்தனையையும் நீங்கள் அறியாமல் படிக்க முடியும். எளிமையாக கூறுவதென்றால் சுத்தமாக உங்களை மொட்டை அடிக்கும் மென்பொருளாகும். இது பற்றி சுருக்கமாக கூற முடியாது என்பதால் இது பற்றியும் இதில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது பற்றியும் தனியாக இடுகை விரைவில் எழுதுகிறேன்.
8. எல்லாவற்றையும் விட மிக ஆபத்தான இடம் என்றால் அது பிரவுசிங் சென்டர் தான். காசு கொடுத்து ஆப்பு வாங்கும் இடம், சொந்த செலவில் சூனியம் வைப்பது ஆகும். இங்கே மேற்க்கூறிய என்னவேண்டும் என்றாலும் நடக்கலாம் அல்லது அனைத்துமே நடக்கலாம். எனவே உங்களின் முக்கியமான கணக்குகளை இதைப்போல பிரவுசிங் சென்டர்களில் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிருங்கள். தவிர்க்க முடியவில்லை என்றால் தயவு செய்து Private Browsing முறையை IE, க்ரோம் (ctrl+shift+N) மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் ல் பயன்படுத்தவும். இது உங்கள் தகவல்களை எங்கும் சேமிக்காது. ஆனால் Keylogger மென்பொருள் முறையில் உங்கள் தகவல்களை திருட முடியும். பாதுகாப்பே இல்லாமல் இருப்பதற்கு இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை என்று கூறலாம் அவ்வளவே.
9. உங்கள் சொந்தக் கணினியாகவே இருந்தாலும் உங்கள் கடவுச்சொல்லை சேமித்து வைக்காதீர்கள். எப்போது உள்ளே நுழைந்தாலும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை கொடுத்தே செல்லுங்கள் அதுவே பாதுகாப்பானது. உங்கள் உலவியில் உள்ள History,Cookies ஐ சீரான கால இடைவெளியில் நீக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
10. நீங்கள் என்னதான் அனைத்திலும் பக்காவாக இருந்தாலும் உங்கள் கடவுச்சொல் கஷ்டமானதாக இல்லை என்றால் விரல் சொடுக்கும் நேரத்தில் கண்டு பிடித்து விடுவார்கள். நீங்கள் எவ்வளவு சிறப்பான அல்லது எவ்வளவு கேவலமான கடவுச்சொல்லை வைத்து இருக்கிறீர்கள் என்று பின் வரும் தளங்களில் சென்று அறிந்து கொள்ளுங்கள். மொக்கை கடவுச்சொல்லாக இருந்தால் கையோடு மாற்றி விடுங்கள். தகவல் உதவி நன்றிhttp://www.vijayforvictory.com
a) http://howsecureismypassword.net
b) https://www.microsoft.com/prot…/fraud/passwords/checker.aspx
c) http://www.passwordmeter.com
11. அனைத்து கணக்குகளுக்கும் (Gmail, Yahoo, Hotmail, WordPress) ஒரே கடவுச்சொல்லை வைக்கக்கூடாது அப்படி நீங்கள் வைத்தால் ஒரு கணக்கை ஹேக் செய்தால் உங்கள் அனைத்து கணக்குகளும் உங்கள் கையை விட்டுப்போய் விடும். கூகிள் கணக்கை எடுத்துக்கொண்டால் அதில் மின்னஞ்சல், ப்ளாகர், கூகிள் அனலைசிடிக்ஸ், பிகாசா, காலண்டர், ஃபீட் பர்னர், ரீடர், ஆர்குட், கூகிள் சாட், கூகிள் வாய்ஸ், YouTube, Docs என்று அனைத்தும் காலி ஆகி விடும். ஒரு கடவுச்சொல் ஆனால் நீங்கள் இழப்பது எத்தனை பாருங்கள். இவை இல்லாமல் Yahoo!, Hotmail, WordPress என்று பல கணக்குகள் உள்ளன.
12. உங்களுடைய கணக்கின் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காதீர்கள் அப்படி அவசியம் கொடுக்க வேண்டி வந்தால் வேலை முடிந்தவுடன் உடனே கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள் அது எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி! இந்த விசயத்தில் யாராக இருந்தாலும் நம்ப வேண்டாம் காரணம் நாளை வேறு ஒருவர் ஹேக் செய்தால் கூட உங்கள் நண்பரை சந்தேகப்பட வேண்டி வரும். இது அனாவசிய பிரச்சனைகளை தரலாம் நட்பை முறிக்கலாம்.
மேற்கூறியவை உங்களுக்கு ஓரளவு இணைய பாதுகாப்பை அளிக்கும் இருப்பினும் இதையும் மீறி ஜாக்கிரதையாக இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது. நம் கணக்கை யாரும் இது வரை முடக்கவில்லை அதனால் நம் கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஹேக் செய்பவர்கள் உங்கள் கணக்கை குறி வைக்கவில்லை என்பதே உண்மை. ஹேக் செய்பவர்கள் நினைத்தால் உங்களின் சிறு தவறு கூட அவர்களுக்குப்போதும் உங்கள் “கணக்கை” முடித்து விடுவார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஹேக்கிங் என்றால் என்ன?

Post by காயத்ரி வைத்தியநாதன் on Fri 17 Apr 2015 - 8:29

நல்ல பயனுள்ள பகிர்வு முகம்மது..நன்றி.. கீ லாகர் பற்றி பதிந்திருந்தால் அதன் இணைப்பை வழங்கவும்..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum