Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
64 Bit Processor என்றால் என்ன?
Page 1 of 1
64 Bit Processor என்றால் என்ன?
கணினியின் மூளையாகச் செயற்படுவது Central Processing Unit எனும் ப்ரோஸெஸரே. இந்த ப்ரோஸெஸ்ஸர் கணினிக்கு உள்ளீடு செய்யும் டேட்டாவைப் ஏதேனும் ஒரு செயற்பாட்டுக்குட்படுத்தி தகவலாக மாற்றுகிறது. இந்த செயற்பாட்டில் நினைவகமும் ப்ரோஸெஸ்ஸருக்குத் துனை நிற்கிறது.
ப்ரோஸெஸ்ஸர் (Processor) பற்றி பேசும் போது 32 பிட், 64 பிட் போன்ற வார்ததைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். இவை எதனைக் குறித்து நிற்கின்றன?
பிட் (bit) என்பது binary digit. என்பதன் சுருக்கம். அடிப்படையில் இந்த பிட் ஆனது கணினி எவ்வாறு டேட்டாவை தேக்கி வைக்கிறது என்பதைக் குறிக்கிறது. ஒரு பிட் என்பது 0 அ;ல்லது 1 எனும் பெருமானங்களை எடுக்கலாம். 0 மற்றும் 1 களால் ஆன எழுமாறான ஒரு சேர்மானத்தை (100100100111) பைனரி கோட் எனப்படுகிறது .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 64 Bit Processor என்றால் என்ன?
இந்த பிட்ஸ் கொண்டே ப்ரோஸெஸ்ஸரும் கணித்தல் செயற்பாடுகளை செய்கிறது. 32 பிட்டுகளைப் பயன் படுத்தும் ப்ரோஸெஸ்ஸர் 0 லிருந்து 4,294,967,295 வரையிலான வெவ்வேறு பிட் சேர்மானங்களை உருவாக்கலாம். அவ்வாறே 64 பிட் பயன் படுத்தும் போது 0 லிருந்து 18,446,744,073,709,551,615 வரையிலான வெவ்வேறு சேர்மானங்களை உருவாக்க முடியும், ஆகவே 64 பிட் கணினி மூலம் அதிக எண்னிக்கையிலான டேட்டாவைக் கையாள முடியும். என்பது வெளிப்படை.
.அத்தோடு கணினியில் நீங்கள் என்றுமே கண்டு கொள்ளாத கவலைப் படாத பல ‘விடயங்கள்’ உள்ளன., அவற்றுள் டேட்டா பஸ் எனப்படும் ஒரு விடயமும் உள்ளது, இந்த டேட்டா பஸ்ஸானது எந்த நகரங்களுக்கிடையிலும் ஓடுவதில்லை. எனினும் இது டேட்டாவை கணினியின் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அடிப்படையில் இந்த டேட்டா பஸ்ஸானது, நினைவகத்தை கணினியின் மூளையாகச் செயற்படும் ப்ரோஸெஸ்ஸர் உட்பட வெவ்வேறு பாகங்களுடன் இணைக்கிறது, பழைய தொழில் நுட்பமான ஒரு 32 பிட் கணினியில் டேட்டா பஸ்ஸின் அளவானது 32 பிட் அளவு கொண்டதாயிருக்கும். ஆனால் இந்த புதிய தொழில் நுட்பமான 64 பிட் கணினியில் இதன் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது,. இதனால் ஒரே நேரத்தில் அதிக டேட்டாவை ப்ரோஸெஸ் செய்யும் போது கணினி அதிக வேகம் கொண்டதாயிருக்கும். எனினும் இது குறிப்பிட்ட சில அப்லிகேகேசன்களுக்கே பொருந்தும்,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 64 Bit Processor என்றால் என்ன?
பெரிய அளவிலான கணித்தற் செயற் பாடுகள் நடை பெறக் கூடிய தரவுத் தளங்களை அணுகக் கூடிய, மற்றும் சிக்கலான பிரச்சினைகளைக்குத் தீர்வு காணக்கூடிய. பெரிய வணிக நிறுவனங்கள், வங்கிகள், பல்கலைக் கழகங்களில் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் மிகுந்த பயனளிக்கும்.
மேற் சொன்ன தேவைகள் இல்லாத ஒபிஸ் எப்லிகேசன் மற்றும் இணைய பயன் பாட்டோடு திருப்தியுறும் சாதாரண கணினிப் பயனர்களுக்கு இந்த 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் பெரியளவிலான பயனைத் தரப் போவதில்லை எனினும் கிரபிக் மற்றும் மல்டி மீடியா பயன் பாட்டில் பயன் தரலாம். .32 பிட் ப்ரோஸெஸ்ஸரின் கட்டமைப்பை விட பல வகையில் மேம்பட்டதாக 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் உருவாக்கப்படுகின்றன. 32 பிட் ப்ரோஸெஸ்ஸரை விட 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக செயற் திறன வாய்ந்ததால். வேகமாக டேட்டாவைப் ப்ரோஸெஸ் செய்து விடும். எனினும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆதரிக்கக் கூடிய மென்பொருள்களை கனினியில் நிறுவிக் கொள்ள வேண்டும்.. இயங்கு தளங்களும் எப்லிகேசன் மென்பொருள்களும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக்கேற்றவாறு உருவாக்கப்படாத விடத்து சிறிதளவான பயனே கிடைக்கிறது. உதாரணமாக 64 பிட் விண்டோஸ் விஸ்டா இயங்குதளம் 32 பிட் மென்பொருள்களை ஆதரிப்பதில்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 64 Bit Processor என்றால் என்ன?
ஒரு 64 பிட் இயங்குதளமனது (Operating System) என்பது 64 பிட் ப்ரோஸெச்சருக்கென உருவாக்கப்பட்டிருக்கும் இயங்கு தளமாகும். விண்டோஸ் எக்ஸ்பீ விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பதிப்புகள 32 பிட் , 64 பிட் இயங்கு தளங்களுக்கென வேறு வேறாக உருவாக்கப்படுள்ளன.
64 பிட் மென் பொருள்களை 32 பிட் ப்ரோஸெஸ்ஸர் கொண்ட கணினிகளில் இயக்க முடியாது,. எனினும் 32 பிட் மென்பொருள்களை 64 பிட் கொண்ட ப்ரோஸெஸ்ஸர் கொண்ட கணினிகளில் இயக்கலாம்.. AMD நிறுவனத்தின் 64 பிட் ப்ர்ரொஸெஸ்ஸர்கள் 32 மற்றும் 64 பிட் இயங்கு தளங்களை ஆதரிகின்றன.
அத்தோடு ப்ரிண்டர் . ஸ்கேனர், டிஜிட்டல் கேமரா என கணினியில் பொருத்தும் அனைத்து வன்பொருள் சாதனங்களுக்கும் 64 பிட் கொண்ட ட்ரைவர் மென்பொருள்களையே நிறுவ வேண்டியிருக்கும். இது 64 பிட் ப்ரோஸெஸ்ஸ பயன் படுத்துவதிலுள்ள பாதக நிலையாகும். எனினும் இந்த நிலைமை தற்காலிகமானதே. எதிர்காலத்தில் ட்ரைவர் மென்பொருள்களும் 64 பிட்டிலேயே கிடைக்கக் கூடியதாயிருக்கும்.
அதே வேளை 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக நினைவகத்தையும் ஆதரிக்கக் கூடியது என்பதால் நினைவகத்தின் அளவையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் கணினியின் செயற் திறன் மேலும் அதிகரிக்கும். 64 பிட்டின் உச்ச பயனைப் பெற 4 ஜீபி அளவிலான நினைவகமும் அவசியமாகும்.
உங்கள் கணினி 32 பிட் ப்ரோஸெஸ்ஸரா அல்லது 64 பிட் ப்ரோஸெஸ்ஸரா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
விண்டொஸ் எக்ஸ்பீயில் Start à All Programs à Accessories àSystem tools. ஊடாக System Information தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் சிறிய விண்டோவில் Processor எனுமிடத்தில் x86 என இருப்பின் அது 32 பிட் ப்ரோஸெஸ்ஸர் என உறுதி செய்து கொள்ளலாம்.. ia64 or AMD64 என இருப்பின் அது 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆகும். அதேபோல் OS Name எனுமிடத்தில் Microsoft Windows XP Professional x64 Edition என இருப்பின் அது 64 பிட் ப்ரொஸெஸ்ஸரை ஆதரிக்கும் இயங்குதளம் என தெரிந்து கொள்ளுங்கள்
மென்பொருள் தயாரிப்பு நிறுவனக்கள் இன்னும் 32 பிட்டிலிருந்து 64 பிட்டுக்கு முழுமையாக் மாறி விடாததால் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற இன்னும் சிறிது காலம் செல்லலாம். எனினும் எதிர் காலத்தில் 32 பிட் மற்றும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக்கிடையேயான போட்டியில் சந்தேகத்திற்கிடமின்றி 64 பிட் ப்ரோஸெஸ்ஸரே வெற்றி பெறப் போவது உறுதி..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» FTP என்றால் என்ன?
» இரட்டைக்கிளவி என்றால் என்ன?
» ஆஸ்துமா என்றால் என்ன?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» FTP என்றால் என்ன?
» இரட்டைக்கிளவி என்றால் என்ன?
» ஆஸ்துமா என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum