Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
3 posters
Page 1 of 1
புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம் புதன். இதனால் இங்கு எப்போதும் கடும் வெப்பம் நிலவுகிறது. அதாவது இதன் மேற்பரப்பில் 430 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை உள்ளது.
இது பூமியில் நிலவும் 58 நாள் வெப்பத்துக்கு ஈடாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்த நிலையில் உள்ளது.
இதை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. ரேடியோ டெலஸ்கோப் எடுத்து அனுப்பிய போட்டோகளில் இது தெரியவந்துள்ளது.
இது ரேடார் கருவி அனுப்பியுள்ள சிக்னல் மூலமும் தெரியவந்துள்ளது. புதன் கிரகத்தின் வடக்கு முனையில் உள்ள எரிமலையில் ‘நாசா’ பல ஆய்வுகளை நடத்தியது.
அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்து கிடப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
மாலை மலர்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
புதன் கிரகம் சூட்டுக்கு ஜூஸ் போட்டு குடிக்கலாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
பாஸ் மாலை மலர் செய்தியா? இது காமெடி பகுதிக்கு மாத்திடலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
சுறா wrote:பாஸ் மாலை மலர் செய்தியா? இது காமெடி பகுதிக்கு மாத்திடலாம்
அப்படியா!? சரி மாத்திடலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
புதன் கிரகத்தில் ஐஸ் கட்டிகள்
புதன் கிரகத்தில் பனிக்கட்டிகள் வடிவில் தண்ணீர் உள்ளதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்ற மெசஞ்சர் விண்கலம் இதைக் கண்டுபிடித்துள்ளது. இது அடுப்புக்கு அருகே ஐஸ் கட்டிகள் உருகாமலேயே இருப்பதற்கு ஒப்பாகும்.
சூரிய மண்டலத்தில் புதன் கிரகம் ((Mercury) தான் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. புதனில் வெயில் பொசுக்கி எடுக்க இது ஒன்றே போதும். தவிர, அந்த கிரகத்தில் பகல் என்பது சுமார் மூன்று மாதம். இரவு என்பது சுமார் மூன்று மாதம்.
புதன் கிரகம் |
ஆனால் புதன் கிரகத்தின் வட துருவப் பகுதியில் தண்ணீரானது பனிக்கட்டி வடிவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ உறைந்த பனிக்கட்டி வடிவில் இருப்பதாக ராடார் மூலம் கணட்றியப்பட்டிருந்தது என்றாலும் பனிக்கட்டி வடிவில் இருப்பது தண்ணீர் தானா என்பது நிச்சயமாகத் தெரிய வரவில்லை.ஏனெனில் வேறு வகை வாயுக்களும் உறை பனி வடிவில் இருக்க முடியும்.
பூமியில் வட தென் துருவங்களில் உறைந்த பனிக்கட்டிப் பாளங்கள் உள்ளன. குளிர் காலத்தில் ரஷ்யா, சுவீடன்,போன்ற குளிர்ப் பிரதேசங்களில் கடும் குளிர் வீசும் போது விழுபனி (Snowfall) உறைபனியாக மாறுவதுண்டு. அதாவது பூமியில் உறைபனிக் கட்டிகள் பூமியில் தோன்றுபவை.
புதன் கிரகத்தின் வட துருவத்துக்கு மேலாக இருந்தபடி மெசஞ்சர் எடுத்த படம். சிவப்பு நிறத்தில் உள்ளவை பனிக்கட்டி இருக்கும் இடங்கள் |
வால் நட்சத்திரங்களைப் பனிக்கட்டி உருண்டைகள் என்றும் கூறலாம்.அந்த பனிக்கட்டிகள் நீர் உறைந்ததால் ஏற்பட்டவை. பல சமய்ங்களிலும் வால் நட்சத்திரங்கள் கிரகங்களில் வந்து விழுவது உண்டு. பூமியில் உள்ள நீரில் கணிசமான பகுதி பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வந்து விழுந்த வால் நட்சத்திரங்கள் மூலம் கிடைத்ததாக ஒரு கருத்து உண்டு.
மெசஞ்சர் விண்கலம். இதில். Sunshade என்ற பகுதியைக் கவனிக்கவும். சூரியனின் வெப்பம் விண்கலத்தைத் தாக்காமல் தடுக்கவே இந்த கூரை போன்ற பகுதி. இதை உருவாக்கப் பல ஆண்டுகள் ஆகின |
புதன் கிரக பனிக்கட்டி உருண்டைகள் வெண்மையாகக் காணப்படுவதற்குப் பதில் அவற்றின் மீது பல செண்டிமீட்டர் கனத்துக்கு கரும் பொடி காணப்படுகிறது. இக்கரிய பொடி அஸ்டிராய்ட் மற்றும் வால் நட்சத்திரங்களிலிருந்து வந்தவையே.
புதன் கிரகத்துக்கு மேலாக மெசஞர் விண்கலம். இது ஒரு வரை படம் |
ஆனால் புதன் கிரகம் கிட்டத்தட்ட அடென்ஷனில் அதாவது சாய்மானம் இன்றி தனது அச்சில் செங்குத்தாக அமைந்தபடி சுழல்கிறது. ஆகவே வட தென் துருவப் பகுதிகளில் என்றும் வெயிலே படாத சில பகுதிகள் உள்ளன. அங்கு தான் இந்த பனிக்கட்டிகள் காணப்படுகின்றன.
அமெரிக்க நாஸா 2004 ஆம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சா விண்கலம் 2008 ஆம் ஆண்டு வாக்கில் புதன் கிரகத்தை அடைந்து அப்போதிலிருந்து அக்கிரகத்தை ஆராயந்து வருகிறது. அதில் பல வகையான கருவிகள் உள்ளன. அவை தான் புதன் கிரகத்தின் வட பகுதியில் தண்ணீரால் ஆன பனிக்கட்டிகளைக் கண்டுபிடித்துள்ளன.
புதன் கிரகத்தை மெசஞ்சர் நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதைக் காட்டும் வரை படம். கருப்பாகக் காட்டப்பட்டுள்ளது புதன் கிரகம் |
புதன் கிரகம் வடிவில் சிறியது.அது சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுவதால் ஒரு சமயம் சூரியனிலிருந்து 46 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேறு ஒரு சமயம் 70 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புதனுடன் ஒப்பிட்டால் பூமியானது சூரியனிலிருந்து சுமார் 150 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
அப்ப மாலை மலரில் வந்த செய்தியில் என்ன தப்பாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
Nisha wrote:அப்ப மாலை மலரில் வந்த செய்தியில் என்ன தப்பாம்?
அது வெறும் செய்தி தானே. இதோ நான் தகவலுடன் தந்திருக்கிறேன். தவறேதும் இல்ல தான். ஆனால் அவர்கள் பிரசுரிக்கும் செய்தியானது மற்றவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும்படி இருக்கவேன்டாமா?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
இந்த செய்தியை படிக்கும் மாணவர்களுக்கு இயற்கையாகவே எழும் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
427 டிகிரி வெப்பமான ஒரு கிரகத்தில் பனிக்கட்டியா? இதுதான் எழும் கேள்வி
427 டிகிரி வெப்பமான ஒரு கிரகத்தில் பனிக்கட்டியா? இதுதான் எழும் கேள்வி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
சுறா wrote:இந்த செய்தியை படிக்கும் மாணவர்களுக்கு இயற்கையாகவே எழும் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
427 டிகிரி வெப்பமான ஒரு கிரகத்தில் பனிக்கட்டியா? இதுதான் எழும் கேள்வி
அதான் ஜூஸ்போட்டு குடிக்கலாம்னு சொன்னேன்ல *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
சுறா wrote:Nisha wrote:அப்ப மாலை மலரில் வந்த செய்தியில் என்ன தப்பாம்?
அது வெறும் செய்தி தானே. இதோ நான் தகவலுடன் தந்திருக்கிறேன். தவறேதும் இல்ல தான். ஆனால் அவர்கள் பிரசுரிக்கும் செய்தியானது மற்றவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும்படி இருக்கவேன்டாமா?
சரிதான்! நானும் மேலதிக விபரம் தேடிட்டிருந்தேன்! கிடைக்கவில்லை. உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. சூப்பர்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
சுறா wrote:இந்த செய்தியை படிக்கும் மாணவர்களுக்கு இயற்கையாகவே எழும் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
427 டிகிரி வெப்பமான ஒரு கிரகத்தில் பனிக்கட்டியா? இதுதான் எழும் கேள்வி
இதே கேள்வி எமக்குள்ளும் எழுந்தது சார் சுறாவே! அத்தனை வெப்பத்தில் எப்படி பனிக்கட்டி உருகாமல் இருக்கும் என!
லங்காசிறி போன்ற தளங்களில் செய்தியை இடும் போது அதன் மூலப்பதிவின் ஆங்கில லிங்க் இணைத்திருப்பார்கள். அந்த லிங்க் போனால் இன்னும் நிரம்ப விடயம் கிடைக்கும. மாலை மலர் செய்தியில் அது மாதிரி லிங்க் இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
Nisha wrote:சுறா wrote:இந்த செய்தியை படிக்கும் மாணவர்களுக்கு இயற்கையாகவே எழும் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
427 டிகிரி வெப்பமான ஒரு கிரகத்தில் பனிக்கட்டியா? இதுதான் எழும் கேள்வி
இதே கேள்வி எமக்குள்ளும் எழுந்தது சார் சுறாவே! அத்தனை வெப்பத்தில் எப்படி பனிக்கட்டி உருகாமல் இருக்கும் என!
லங்காசிறி போன்ற தளங்களில் செய்தியை இடும் போது அதன் மூலப்பதிவின் ஆங்கில லிங்க் இணைத்திருப்பார்கள். அந்த லிங்க் போனால் இன்னும் நிரம்ப விடயம் கிடைக்கும. மாலை மலர் செய்தியில் அது மாதிரி லிங்க் இல்லை.
நீங்கள் சொல்லும் பத்திரிக்கை இருக்கே அந்த பத்திரிக்கை. யாரையாவது கற்பழிச்சிட்டாங்கன்னா வரிஞ்சி கட்டிக்கிட்டு அவங்க என்ன கலர் டிரஸ்போட்டிருந்தாங்க எப்படி நடந்தது என்று கலர்கலரா ஆராய்ஞ்சி போடுவாங்க செய்தியை
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
ஆனால் ஆராய்ந்து எழுத வேண்டியதை கோட்டை விட்டிருவாங்க என சொல்ல வருகின்றீர்கள்!
சரி சரி! அவங்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான்! பிழைச்சி போகட்டும் விடுங்க!
சரி சரி! அவங்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான்! பிழைச்சி போகட்டும் விடுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு
Nisha wrote:ஆனால் ஆராய்ந்து எழுத வேண்டியதை கோட்டை விட்டிருவாங்க என சொல்ல வருகின்றீர்கள்!
சரி சரி! அவங்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான்! பிழைச்சி போகட்டும் விடுங்க!
பிச்சக்கார பயலுக :}
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள்
» முதன் முறையாக புதன் கிரகத்திற்கு நாசா விண்கலம்
» வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழும் அறிகுறி கண்டுபிடிப்பு...
» பூமிக்கு வெளியே மனித உயிர்கள் – நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு
» வான வீதியில் உலவும் 5 கிரகங்களில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum