Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!
4 posters
Page 1 of 1
ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!
என்னது... ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோயா? என்று அதிர்ச்சியாகக் கேட்டாலும் சரி... ஆர்வத்தோடு கேட்டாலும் சரி... ‘புற்றுநோய் வருமா?’ என்றால் ‘...ம்’ என்பதே மருத்துவத்தின் பதில். ஆனால், இதில் அச்சப்படாமல் ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம் இந்த மார்பகப் புற்றுநோய் இருநூறு பேரில் ஒருவருக்கே வரும் என்பது! அதனால் டென்ஷன் இல்லாமல் ஜஸ்ட் தெரிந்துகொள்வோம்... ஒரு சின்ன எச்சரிக்கையுடன்...
‘‘பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய்க்கும் ஆண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய்க்கும் அதிகம் வித்தியாசமில்லை. அதே போன்ற அறிகுறிகள், மேமோகிராம் பரிசோதனை, கதிரியக்கம், கீமோதெரபி போன்ற சிகிச்சை முறைகள், அதே மருந்துகள்... ஆனால், ஒரு சின்ன வித்தியாசம்... பொதுவாகப் பெண்களுக்கு 45 வயதுக்கு மேல் மார்பகப் புற்றுநோய் வரும்; ஆண்களுக்கு 55 வயதுக்கு மேல் வரும்’’ என்கிறார் புற்றுநோய் மருத்துவர் ராமநாதன்.
யாருக்கெல்லாம் இந்தப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்? கவனிக்க வேண்டியதன் அவசியம், வராமல் தடுக்கும் வழிகள் என எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார் டாக்டர். ‘‘ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்தில் ஓர் ஆணுக்கு மரபியல் காரணங்களால் வரும். உடல் பருமன் உள்ள ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு உண்டு. இன்று ஸ்டீராய்டு ஊசிகள், மாத்திரைகள் என்று தவறான வழிகளில் உடல் கட்டமைப்பைப் பெற இளைஞர்கள் முயற்சிக்கிறார்கள். இதனால், ஈஸ்ட்ரோஜன் என்ற பெண் ஹார்மோன் சுரப்பு அதிகமாகி இவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கும். தவிர, கதிரியக்க சிகிச்சைகள், பிறவியிலேயே ஏற்பட்டிருக்கும் கோளாறுகளாலும் வரலாம்.
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்குத்தான் வரும் என்றே பலரும் நினைக்கிறோம். அதனால், ஆண்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. மார்பில் கட்டியே இருந்தாலும் அதை அலட்சியப் படுத்தி விடுவார்கள். அலட்சியத்தின் விளைவாக மார்பகப் புற்றுநோய் இறுதிக்கட்டத்துக்கு வந்த பிறகே பல ஆண்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள். கட்டி இருந்தாலும் வெளியே சொல்வதற்கு சங்கடப்பட்டு சொல்லாமல் இருப்பவர்களும் உண்டு. ஆனால், புற்றுநோயை எவ்வளவு விரைவில் கண்டு பிடிக்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. ஏனெனில், பெண்களின் மார்பகப் புற்றுநோயை விட வேகமாக உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவக் கூடியது ஆண்களின் மார்பகப் புற்றுநோய்.
அதனால், மார்பில் கட்டி தென்பட்டாலோ, வலி இருந்தாலோ, சிவந்து காணப்பட்டாலோ அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். கண்டு பிடித்த பிறகு, சிகிச்சை எடுத்துக் கொள்வதில் பெண்கள் காட்டுகிற அக்கறை, ஆண்களிடம் இல்லை என்பதும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் குறைவுதான். ஆனால், இப்போது நம் நாட்டிலும் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதுபோல், ஆண்கள் மார்பகப் புற்றுநோயும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, வட இந்தியாவில் ஆண் மார்பகப் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். உடற்பயிற்சிகள் செய்வது, உடல் எடையை சரியாகப் பராமரிப்பது, தேவையற்ற ஹார்மோன் ஊசிகள், புரோட்டீன் பவுடர்கள் பயன்படுத்தாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் இந்த அபாயம் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்!’’ - எச்சரிக்கிறார்.
டாக்டர் ராமநாதன்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2973
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!
ஏம்பா இது ரொம்ப அநியாயம். எங்களுக்கு என்ன இருக்குன்னு புத்துநோய் வருது. இதெல்லாம் ரொம்ப மோசம். )*
சில ஸ்பெசலிஸ்டு டாக்டர்கள் இதுபோன்ற கட்டுரை எழுதி அவங்க பெரிய ஆஸ்பித்திரிக்கு வரவச்சி எல்லாசெக்கப்பும் எடுக்க வச்சிருவாங்க. கடைசியில உங்க ஜோக்குல சொன்ன மாதிரி பல்வலி சரியாயிடுச்சின்னு சொன்னாகூட ரிப்போர்ட்டை பார்த்துட்டு தான் பதில் சொல்வாங்க. கடைசியில நீங்க நார்மல்ன்னு ஹிஹி
தகவல் தந்து உஷார் படுத்தியமைக்கு நன்றி
சில ஸ்பெசலிஸ்டு டாக்டர்கள் இதுபோன்ற கட்டுரை எழுதி அவங்க பெரிய ஆஸ்பித்திரிக்கு வரவச்சி எல்லாசெக்கப்பும் எடுக்க வச்சிருவாங்க. கடைசியில உங்க ஜோக்குல சொன்ன மாதிரி பல்வலி சரியாயிடுச்சின்னு சொன்னாகூட ரிப்போர்ட்டை பார்த்துட்டு தான் பதில் சொல்வாங்க. கடைசியில நீங்க நார்மல்ன்னு ஹிஹி
தகவல் தந்து உஷார் படுத்தியமைக்கு நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!
நல்ல்ல தகவல் நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!
பானுஷபானா wrote:நல்ல்ல தகவல் நன்றி
எங்களுக்கு நோய் வர்றது உங்களுக்கு நல்ல தகவலா(_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆண்களுக்கும் வருது மார்பகப் புற்றுநோய்!
ஹாஹா! நல்ல கேள்வி முஹைதீன்!
விழிப்பூட்டும் பகிர்வுக்கு நன்றி சார்!
விழிப்பூட்டும் பகிர்வுக்கு நன்றி சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மார்பகப் புற்றுநோய் பெண்களைப் போலவே ஆண்களுக்கும்
» ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்
» மார்பகப் புற்றுநோய் (Breast)
» மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -
» மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 2
» ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்
» மார்பகப் புற்றுநோய் (Breast)
» மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -
» மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum