Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
5 posters
Page 1 of 1
மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
மீன் வாங்கப்போறீங்களா??
மீனுடன் மாடலாடுபவர் என் மருமகள் சக்தி
சுவையான அசைவ உணவு வகைகளில் மீன் வகைச்சமையலுக்கு முக்கியமான இடம் உண்டு.
வாய்க்கு ருசியாகவும் , காரசாரமாகவும் இருக்கும் மீன் வகைச்ச்மையல் எல்லாப்பருவத்தினரும் விரும்பிச்சாப்பிடக்கூடியதாகும். எந்த மீன் வகையும் உடலுக்கு எந்த விதமான தீங்கினையும் உண்டாக்குவதில்லை. சில மீன் வகைகள் மருந்தாகவும் பயன் படுவதுண்டு.ஏதாவது மருந்து சாப்பிடும் போது சில வகை மீன்களை பத்திய பதார்த்தமாக உண்ணவும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுவதுண்டு.
மீன் எனக்கூறும் போது கடல் மீன், ஆற்று மீன் குளத்து மீன் ,ஏரி மீன், கிணற்று மீன், எனப்பலவகை மீன்களையும் சேர்த்துத்தான் உண்கிறோம். மேற்சொன்ன ஒவ்வொரு வகை மீனும் ஓவ்வொரு வகையான சுவையினைக்கொண்டது. ஆனாலும் கடல் மீனைத்தான் மக்கள் பெரும்பாலும் விரும்பி உண்கின்றனர்.
கடல் மீன் அதிக அளவு கிடைப்பது மட்டுமன்றி மற்ற மீன்களை விடதனிச்சிறப்பான சுவையுடன் அமைந்திருப்பதும் ஒரு காரணமாகும்.
மீன் எனச்சொல்லும் போது மனிதர் உண்ணக்கூடிய நீர் வாழ் பிராணிகளையும் சேர்த்தே கணக்கிட வேண்டும்.
என் மருமகள் கையில் இருக்கும் நண்டு, இறாலயும் கூறலாம்.
எந்த வகை மீனாக இருந்தாலும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. உதாரணமாக வஞ்சிரம், சுதும்பு, சங்கரா, வவ்வால், சுறா, வாளை, கெளுத்தி,விரால் போன்றவற்றை கூறலாம்.
சில வகை மீன்கள் ஒவ்வொரு பிராந்திய மக்களாலும் வெவ்வேறு பெயரால் அழைக்கப்படுகிறது. அதனால் மீன்களின் பெயர்கள் மாறுபடலாம்.
மீன்கள் வாங்கும் போது புதிதாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். மீன்களைப்பிடித்து வெகு நேரம் ஆகியிருக்கும் நொந்தும், கொழகொழத்துக்கெட்டிருக்கும். அவற்றைச்சமைத்தால் சாப்பிடவே முடியாது.அத்துடன் உடல் நல பாதிப்பும் ஏற்படும்.
இக்காலத்தில் மீன்களைப்பிடித்து குளிர்சாதன அறைகளில் வைத்து இரண்டொரு நாட்கள் கழித்தும் விற்பனைக்கு அனுப்புவதுண்டு. உலகம் முழுவதும் இம்மாதிரி வழக்கம் உண்டு. இவற்றை புறக்கணிக்க முடியாது என்றாலும் புது மீனை விட இவ்வகை மீன்கள் சற்று சுவை குறைவாகத்தான் இருக்கும்.
சமையலுக்கு பெரிய மீனாகத்தான் வாங்க வேண்டும் என்பதல்ல. நெத்தலி போன்ற பொடி வகை மீன்களும் நல்ல சுவையாகவே இருக்கும். பொடி மீன்களாக இருந்தால் துண்டு துண்டாக நறுக்காமல் கழுத்துப்பகுதியைமட்டும் கிள்ளிப்போட்டு குடல் போன்றவற்றை அகற்றி திரும்பத்திரும்ப ஐந்தாறு தடவி நீரில் அலசி எடுக்க வேண்டும். பெரிய மீன்களை விரும்பியபடி துண்டுகள் போடலாம்.
எந்த மீனாக இருந்தாலும் செதில் இல்லாத வாறு சுரண்டித்தேய்த்து மஞ்சள் உப்புட்டு நன்றாக பிரட்டி தண்ணீரால் பல முறை அலசி எடுக்க வேண்டும். அப்போது மீனிலிருந்து வரும் மீன வெடுக்கு வாடை போய் விடும்.
பெரிய மீனாக இருந்தால் தலையைத்தூண்டித்து எறிந்து விடாமல் வெட்டி தனியாகவோ சேர்த்தோ சமைக்கலாம்.-
மீன் வலையோடு தொடர்வேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
மீன் உணவு உண்ணும் தாய்மார்களை மகிழ்விப்பதற்காகவே வந்திருக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. அதாவது, தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.
இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.
தாய்மார்களின் உணவுப் பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.
மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.
அசைவப் பிரியைகள் இனிமேல் உற்சாகமாய் சாப்பிடலாம் மீன் !
வலையோடு...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
மீன் அசைவம் என சிலர் ஒதுக்க, அசைவப் பிரியர்களிலும் பலர் மீன் ‘கடல் உணவு’ என கைகழுவ, மீன் உணவு என்பது வெறும் சுவை தொடர்பானது அல்ல, உங்கள் அறிவை விருத்தி செய்யும் வல்லமையும் அதற்கு உண்டு என கூற வந்திருக்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று.
அதாவது வாரம் ஒருமுறைக்கு மேலாக மீன் உணவு உண்பது பதின் வயது பருவத்தினருடைய மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதாம். கவனிக்கவும், ஒருமுறைக்கு மேல் உண்பதே பலனளிக்கிறது.
பதின் வயது பகுதியின் இரண்டாவது பகுதி, மூளையில் பெருமளவு மாற்றங்கள் நிகழும் பகுதி. ஆங்கிலத்தில் இதை பிளாஸ்டிசிடி என அழைக்கிறார்கள்.
அதாவது இந்தக் காலகட்டத்தில் தான் பதின் வயதினருடைய திறமை எப்படி இருக்கும், அவர்களுடைய உணர்வு ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் மூளை முடிவு செய்கிறது.
இந்தக் காலகட்டத்தில், அதாவது 15 வயதுக்கு மேல் மீன் உணவை வாரம் ஒரு முறையை விட அதிகமாய் உண்பது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு பெருமளவில் உதவுகிறதாம்.
ஸ்வீடனின் நிகழ்த்தப்பட்ட விரிவான இந்த ஆய்வு சுமார் 5000 பேரை வைத்து நிகழ்த்தப்பட்டது. இதில் மீன் உணவு உண்டவர்களின் திறன் வெகுவாக உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
பதின் வயதினருடைய அறிவு, புதிதாய் எதையேனும் கற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் இவையெல்லாம் மீன் உணவினால் மெருகேறுகிறதாம்.
அதிலும் குறிப்பாக ஒமேகா – 3 நிரம்பியுள்ள மீன்களை உண்பது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
டுனா வகை மீன் மற்றும் கொழுப்புச் சத்துடைய மீன்களை சாப்பிடுவதால் ஞாபக மறதியைத் தடுக்கப் படும் என்று தெரிய வந் துள்ளது. தவிர இந்த வகை மீன்களை உட்கொள்வதால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளும் குறைவாக இருப்பதாக பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேகவைத்த மீன்களை குழம்பில் போட்டு உண்பதால், அதாவது மீன்களை எண்ணெயில் பொரிக்காமல் உண்ணும் போது, அந்த வகை மீன்களில் இருந்து ஒமேகா-3 எனும் ஒருவகை எண்ணெய் உடலில் சேர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனிதர்களின் நினைவு இழப்பு நோய் தடுக்கப்படுவதாகவும், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்தில் இருந்து காப்பதாகவும், பக்கவாத நோயை ஏற்படுத்தக்கூடிய டிமென்டியா என்ற வேதிப்பொருள் உடலில் உருவாவதை இந்த கொழுப்புச் சத்து கொண்ட மீன் உணவு கரைக்கும் தன்மை கொண்டது என்றும், இதய நோய் ஏற்படாமலும் தடுக்கப்படுவதாக டுனா ரக மீனைத் தவிர சல்மான், மெக்ரல், ஹெர்ரிங், சர்டின்ஸ் வகை மீன்களிலும், பாதாம்பருப்பிலும் ஒமேகா-3 எண்ணெய் இருப்பதாகத் தெரிகிறது.
வேகவைத்த மீன்களை குழம்பில் போட்டு உண்பதால், அதாவது மீன்களை எண்ணெயில் பொரிக்காமல் உண்ணும் போது, அந்த வகை மீன்களில் இருந்து ஒமேகா-3 எனும் ஒருவகை எண்ணெய் உடலில் சேர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனிதர்களின் நினைவு இழப்பு நோய் தடுக்கப்படுவதாகவும், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்தில் இருந்து காப்பதாகவும், பக்கவாத நோயை ஏற்படுத்தக்கூடிய டிமென்டியா என்ற வேதிப்பொருள் உடலில் உருவாவதை இந்த கொழுப்புச் சத்து கொண்ட மீன் உணவு கரைக்கும் தன்மை கொண்டது என்றும், இதய நோய் ஏற்படாமலும் தடுக்கப்படுவதாக டுனா ரக மீனைத் தவிர சல்மான், மெக்ரல், ஹெர்ரிங், சர்டின்ஸ் வகை மீன்களிலும், பாதாம்பருப்பிலும் ஒமேகா-3 எண்ணெய் இருப்பதாகத் தெரிகிறது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
கர்ப்பிணிப் பெண்கள் மீன் சாப்பிட்டால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அது மட்டுமின்றி தாய்ப்பால் மூலம், மீனின் சத்துகள் குழந்தைக்கு சென்று குழந்தையின் வளர்ச்சிக்கும், சிறப்பான செயல்பாட்டிற்கும் உதவியாக இருக்கும். மீன் சாப்பிடுவது உடல் நலத்திற்கு பலன் அளிக்கின்றது என்பதை விட பிறக்கும் குழந்தைக்கு அதன்மூலம் பயன் உள்ளதா? என்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. அதில், கர்ப்பிணிப் பெண்கள் மீன் சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைக்கு பலன்கள் கிடைக்கும் என்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இதனால் குழந்தை பிறந்த 18 மாதங்களில், அதன் மூளை வளர்ச்சியும், உடல் வலிமையும் அதிகரிக்கும். அதே சமயம் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டியதும் அவசியம். எனவே கர்ப்பிணிப் பெண்கள் மீன் சாப்பிடுவது சிறந்தது. குழந்தை பிறந்தவுடன் குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் அளிப்பதும் சாதகமான பலன்களைத் தரும்.
அத்துடன் மீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தை பிறந்த 18 மாதங்களில், அதன் மூளை வளர்ச்சியும், உடல் வலிமையும் அதிகரிக்கும். அதே சமயம் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டியதும் அவசியம். எனவே கர்ப்பிணிப் பெண்கள் மீன் சாப்பிடுவது சிறந்தது. குழந்தை பிறந்தவுடன் குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் அளிப்பதும் சாதகமான பலன்களைத் தரும்.
அத்துடன் மீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
மீன் பிரியாணி
தேவையானவை
பாசுமதி அரிசி - 1 KG
மீன் - 1 KG
தக்காளி - 1/2 KG
பெ..வெங்கயம் - 1/4 KG
ப-மிளகாய் - 5
தயிர் - 1/2 CUP
நெய் - 1/4 CUP
எண்ணெய் - 1 CUP
முந்திரி,திராட்சை - 20 gm
ஏலக்காய் - 5
எலுமிச்சம்பழம் – 2
கடுகு , சின்னச்சீரகம், பெரிய சீரகம் -1டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு,பட்டை,விழுது - 5 ஸ்பூன்
சோம்பு,கசகசா - 3 ஸ்பூன்
ஜாதிக்காய், - 10 gm
உப்பு - கறிவேப்பிலை,புதினா,மல்லிதழை –
செய்முறை
1. முதலில் மீனை வெட்டி சுத்தம் செய்து துண்டு போட்டு மஞ்சள் உப்பிட்டு பிசைந்து நன்றாக கழுவி எடுக்கவும், பின் மீண்டும் அதில் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் பாதியளவே வேகும் படி பொரித்து எடுத்து முள் நீக்கி உதிர்த்து வைக்கவும்.
2.இஞ்சி, பூண்டு, பட்டை சேர்த்து மிக்சியில் நன்றாக தூளாக அடித்து எடுக்கவும்.சோம்பு, கசகசாவையும் தனியாக அரைத்து எடுக்கவும் .ஜாதிக்காய், வறுத்து தூள் செய்து கொள்ளவும்.
3.நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து தனியே வைக்கவும்
4..பாசுமதி அரிசியை கழுவி 10 நிமிடம் நேரம் கழித்து உப்பு.பட்டை,கிராம்பு,ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேக வைக்கவும் .
5. வாய்அகன்ற பாத்திரத்தில்(வாணலி ) எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சி, சீரகம் , பெ. சீரகம் போட்டு நன்றாக வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு கறிவேப்பிலை, புதினா, மல்லிதழை போட்டு வதக்கி சோம்பு, கசகசா விழுது சேர்த்து பின் இஞ்சி,பூண்டு,பட்டை விழுது சேர்த்து வதக்கவும் நன்றாக வதங்கி பூண்டு வாசனை வரும் போது கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி அத்துடன் தயிர், ஜாதிக்காய் வாசனைப்பொடி, போட்டு பச்சைமிளகாயையும் அப்படியே காம்புடன் முழுதாக கழுவிப்போட்டு நன்கு வதக்கவும். இறுதியாகமுந்திரி,திராட்சையை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும்.
6. பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்பு ஏற்கனவே தயாராக இருக்கும் மசாலாவை பரப்பி அதன் மேல் மீனை பரவலாக தூவி விடவும். பின்னர் சாத்தை மீன் கலவையின் மேலாக சிறிது சிறிதாக பரப்பி , சாதத்தின் மேல் சிறிது நெய் விடவும்.
இப்படியே மசாலாக்கலவை , மீன், சாதம் என ஒன்றன் பின் ஒன்ராக பரப்பி குக்கரை மூடி 10 நிமிடம் சிம்மில் வைக்கவும், ஒரு விசில் வரும் முன்னே அடுப்பை அனைத்து விடவும்.சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறலாம்.
சூப்பரான மீன் பிரியாணி தயார் .

நெத்திலி மீன் குழம்பு
தேவையான பொருள்கள்:
நெத்திலி மீன் -500 கிராம்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - சிறிதளவு
வெங்காயம் - மூன்று
பூண்டு - 5
கறிவேப்பிலை . சிறிதளவு
தக்காளி - 1
மிளகாய் தூள் - இரண்டு tsp
பச்சை மிளகாய் - 4
செய்முறை:
1.மீனை சுத்தம் செய்து கழுவி கொள்ள வேண்டும்.மஞ்சள் உப்பு சேர்த்து மீன்கள் உடையாதபடி நீரில் கழுவி எடுக்கவும்.
2.புளியை நன்கு கரைத்து வடித்து கொள்ளவும்.
3.பூண்டை விழுதாக அரைத்து எடுக்கவும் .
4.வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்
5.அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாத்திரம் சூடாகியதும் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு தாளிக்கவும்
6. அதனுடன் வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
7. வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் தக்காளி போட்டு வதக்க வேண்டும்.
8.தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு புளி கரைத்து ஊற்றவும்.
9. பின்னர் அரைத்த பூண்டு விழுது சேர்த்து உப்பிட்டு மூடி குழம்பு நன்றாகக்கொதித்ததும் 5 நிமிடம் முன்பு மீனை போட்டு இறக்கவும்.
10. இறுதியாக மீண்டும் சிறிது வெந்தயமும் கறிவேப்பிலையும் தூவி மூடி விட்டால் வாசனையான நெத்தலி மீன் குழம்பு தயார்.
டிப்ஸ் .....குழம்பில் மீனை போட்ட பிறகு கரண்டியை வைத்து கிளறக் கூடாது.

மீன் எனக்கு ரொம்ப பிடிக்கும். தினமும் வைத்தாலும் திகட்டாமல் சாப்பிடுவேன்.
பதிவிற்கு நன்றி நிஷா
பதிவிற்கு நன்றி நிஷா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
நேத்து இரவு மடவா மீன் குழம்பு வைத்தேன்.28.10.2014 (:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
முந்துன நெத்திலிமீனை வடையா பொறித்து குழம்பு வைத்து சாப்பிட்டோம்.
சூப்பரா இருந்ததுப்பா
சூப்பரா இருந்ததுப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
முதல் பதிவில் மீனுடன் மாடலுக்கு நிற்பவள் பரஞ்சோதி அண்ணா மகளாக்கும்.
இந்த பதிவு நானே எழுதியதாக்கும். காப்பி பேஸ்ட் லாம் இல்லை!
இந்த பதிவு நானே எழுதியதாக்கும். காப்பி பேஸ்ட் லாம் இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
ahmad78 wrote:முந்துன நெத்திலிமீனை வடையா பொறித்து குழம்பு வைத்து சாப்பிட்டோம்.
சூப்பரா இருந்ததுப்பா
முந்துன நெத்தலி மீன் எனில் என்ன! அதை எப்படி வடையா பொரிப்பது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
நல்ல பதிவு..
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
அட நெத்தலி மீன் பொரியல்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
மீன் வகைகளும் அதன் குணங்களும்
அத்தோடு வந்த மீன் பிரியாணி மற்றும் குறிப்புகள்
அனைத்தும் அருமையான அவசியமான தகவலாக இருந்தது
அத்தோடு சின்ன வயது நிஷா அக்காவின் போட்டோவைப் பார்த்தது போன்று ஒரு அழகிய காட்சி
சொக்கியம்மா போல் உள்ளார்
அத்தோடு வந்த மீன் பிரியாணி மற்றும் குறிப்புகள்
அனைத்தும் அருமையான அவசியமான தகவலாக இருந்தது
அத்தோடு சின்ன வயது நிஷா அக்காவின் போட்டோவைப் பார்த்தது போன்று ஒரு அழகிய காட்சி
சொக்கியம்மா போல் உள்ளார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
உங்கள் சொந்தப் பதிவு என்பற்காக ஒரு 1000ம் லைக் போட வேண்டும் பாராட்டுக்கள் அக்கா!
இன்னும் தொடருங்கள்
பயனுள்ளவைகள்
நன்றியுடன் நண்பன் .
இன்னும் தொடருங்கள்
பயனுள்ளவைகள்
நன்றியுடன் நண்பன் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
பெரிய மீனாக இருந்தால் தலையைத்தூண்டித்து எறிந்து விடாமல் வெட்டி தனியாகவோ சேர்த்தோ சமைக்கலாம்.- wrote:
எனக்கு மீனின் தலை குழம்பு வைத்தால் ரொம்ப பிடிக்கும்(:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
நண்பன் wrote:மீன் வகைகளும் அதன் குணங்களும்
அத்தோடு வந்த மீன் பிரியாணி மற்றும் குறிப்புகள்
அனைத்தும் அருமையான அவசியமான தகவலாக இருந்தது
அத்தோடு சின்ன வயது நிஷா அக்காவின் போட்டோவைப் பார்த்தது போன்று ஒரு அழகிய காட்சி
சொக்கியம்மா போல் உள்ளார்
சுரேஷ் அண்ணா மகள் சக்தி அப்படியே எங்கள் ஜாடை தான்! எப்சிக்கும் அவளுக்கும் அக்கா தங்கை என்பது போல் நிரம்ப ஒற்றுமை உண்டு. இருவருக்குமே முதுகில் வெற்றிலை படர்ந்தது போல் மச்சம் உண்டு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
அட நிஜமாவா சொல்றிங்க எப்படி இப்படி ஒரு ஒற்றூமை வரும் ஆச்சரியமா இருக்கு நிஷா.
இது எப்போ எடுத்த படம்.
இது எப்போ எடுத்த படம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
மனிதரால் புரிந்துக்க முடியாத பல ஒற்றுமைகள் எனக்கும் அண்ணாவுக்கும் உண்டு!
அதே போல் சக்திக்கும் எப்சிக்கும் உண்டு. குணாதியங்கள் உட்பட உடலிலிருக்கும் மச்சங்கள் கூட ஒன்று பட்டது ஆச்சரியம் அல்லவா!
அதே போல் சக்திக்கும் எப்சிக்கும் உண்டு. குணாதியங்கள் உட்பட உடலிலிருக்கும் மச்சங்கள் கூட ஒன்று பட்டது ஆச்சரியம் அல்லவா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
Nisha wrote:மனிதரால் புரிந்துக்க முடியாத பல ஒற்றுமைகள் எனக்கும் அண்ணாவுக்கும் உண்டு!
அதே போல் சக்திக்கும் எப்சிக்கும் உண்டு. குணாதியங்கள் உட்பட உடலிலிருக்கும் மச்சங்கள் கூட ஒன்று பட்டது ஆச்சரியம் அல்லவா!
ஆச்சரியம் தான் நிஷா .அதனால தான் நீங்க அவர் மேல இவ்ளோ பாசமா இருக்கிங்களோ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» சங்கரா மீன் குழம்பு
» கேரளத்து மீன் குழம்பு.
» மணக்கும் மீன் குழம்பு
» மீன் உருண்டை குழம்பு
» சங்கரா மீன் குழம்பு
» கேரளத்து மீன் குழம்பு.
» மணக்கும் மீன் குழம்பு
» மீன் உருண்டை குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum