Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
கூவமாகிப்போன வைகை! – சுத்தப்படுத்தும் அமெரிக்க மங்கை
2 posters
Page 1 of 1
கூவமாகிப்போன வைகை! – சுத்தப்படுத்தும் அமெரிக்க மங்கை
-
பிரதமர் நரேந்திரமோடி “தூய்மை இந்தியா’
திட்டத்தின்படி தூய்மைத் தூதர்களாக நடிகர் கமல்,
சச்சின் உள்ளிட்ட பிரபலங்களை அறிவித்தது
மட்டுமல்லாமல் கங்கையின் புனிதத்தை மீட்டெடுக்க
முயற்சி மேற்கொண்டிருப்பது போன்ற, வைகைக்கும்
தூய்மைப்படுத்தும் திட்டம் கிடைத்திருக்கிறது.
அதுவும் அமெரிக்காவிலிருந்து…
-
அமெரிக்காவைச் சேர்ந்த “எர்த் செலபிரேஷன்ஸ்’ என்ற
தன்னார்வ அமைப்பு, மதுரையிலுள்ள “தானம்’ அறக்
கட்டளையோடு கைகோர்த்து வைகையைக் காக்க
களம் புகுந்திருக்கிறது.
-
அதுபற்றி “எர்த் செலபிரேஷன்ஸ்’ நிறுவனரும்
இயக்குநருமான ஃபெலிசியா யங் நம்மிடம் பேசியபோது,
“நதியோரங்களில் திருவிழாக்கள்’ என்ற தலைப்பிலான
எனது ஆய்வின் பொருட்டு கடந்த 1989ல் மதுரையில்
நடைபெற்ற சித்திரைத் திருவிழாவைக் காண
வந்திருந்தேன்.
-
வைகையைக் கொண்டாடி மகிழும் மதுரை மக்களின்
உணர்வு என்னை மிகவும் வியப்படைய வைத்தது.
அத்திருவிழா குறித்த முழு தகவல்களையும் சேகரித்து
குறும்படம் ஒன்றை உருவாக்கினேன்.
-
அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் வைகையைப்
போன்றே சீர்கெட்ட “ஹட்சன்’ நதியைச் சீரமைக்க,
மதுரை சித்திரைத் திருவிழாவைப் போன்றே நியூயார்க்
மக்களையும் உணர்வு கொள்ளச் செய்யும் வகையில்
“ஆற்றுத் திருவிழா’வினை நடத்தினேன். இதற்குப்
பல்வேறு வகையிலும் வரவேற்பு கிடைத்தது.
-
ஆறுகள் எவ்வாறெல்லாம் சீரழிகின்றனவோ அதனையே
தங்களின் கருப்பொருளாகக் கொண்டு குறிப்பிட்ட நாளில்
நாடகங்கள், கலை விழாக்கள், மாறுவேடப் போட்டிகள்
நடத்தி, மக்களை நதியைக் காக்கும் உணர்வுள்ளவர்களாக
மாற்ற முனைந்தேன்.
அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கிடைத்தது என்றார்.
-
இம்முயற்சியில் கைகோர்த்துள்ள “தானம்’ வயலக
கண்மாய் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாகி
குருநாதன், “வைகை ஆற்றின் மீது அக்கறை கொண்டுள்ள
அனைத்துத் தரப்பினரும் இணைந்துதான் ஆற்றை
மீட்டெடுக்கும் செயல்பாட்டுக்கு வடிவம் கொடுக்க முடியும்.
-
குறிப்பாக மதுரை மாநகராட்சி பொதுப்பணித்துறை,
சுற்றுச்சூழல் துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி
அமைப்புகள், மருத்துவமனைகள், திருக்கோவில்
நிர்வாகிகள் இவர்களுக்கெல்லாம் மேலாகப் பொதுமக்கள்
என ஒருங்கிணைந்து கூட்டு முயற்சியின் மூலமாகவே
வைகை தோன்றும் மேகமலையிலிருந்து, கடலில் கலக்கும்
ஆற்றங்கரை கிராமம்வரை வைகையாற்றைச் சீரமைக்க
முடியும்.
-
இதற்கு முதற்கட்டமாக நகர்ப்புறத்தில் ஓடும் வைகை
ஆற்றின் இரு மருங்கும் “நதிக்கரை ஊர் வலங்கள்’ நடத்தி
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் முதற்கட்ட
பணிகளை வருகின்ற ஜனவரி (2015) மாதம் முதல்
தொடங்குவோம். அடுத்தடுத்த பணிகளுக்கான செயல்
திட்டம் தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.
அத்தனையும் தொடர்ந்து அமல்செய்வோம்’ என்றார்.
-
மதுரையின் மீது அக்கறை கொண்டு, வைகையை
மீட்டெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ள ஃபெலிசியாயங்,
மதுரையைப் பூர்வீக இடமாகக் கொண்டு வாழ்ந்த தம்
மூதாதையர் வழி வந்தவர்.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை
ஆண்டபோது, மதுரையின் ஆட்சியராகத் திகழ்ந்தவர்
ரோஸ் பீட்டர் என்ற வெள்ளையர். மதுரை மக்கள்
இவரை பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர்.
இவரது ஆட்சி நிர்வாகத்தின் கீழ் சட்டம் ஒழுங்குப்
பிரிவில் அமலாக்க அதிகாரியாகத் திகழ்ந்தவர்
டேனியல் ஃபிளெமிங். அவரின் வழி வந்தவரே ஃபெலிசியா
என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளையர்களுக்கான
இங்கிலாந்து மற்றும் அமெரிக்கர்களின் இடுகாடு
இன்றைக்கும் மதுரை இரயில்வே ஸ்டேஷன் அருகே
உள்ளது. அங்கே உள்ள கல்லறையில் பெயருடன்
புதைக்கப்பட்டுள்ள தனது குடும்ப மூதாதயரை,
இந்தப் பயணத்தின்போதுதான் தான் கண்டறிந்ததாக
ஃபெலிசியா குறிப்பிட்டார்.
-
———————————————————————————
- ப. திருமலை
நன்றி –கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Re: கூவமாகிப்போன வைகை! – சுத்தப்படுத்தும் அமெரிக்க மங்கை
மிகவும் பிரமிக்க வைக்கும் தகவல்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» 30 அமெரிக்க வீரர்கள் பலி: ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் சுட்டுக்கொலை- அமெரிக்க படை பதிலடி
» வைகை புயல் வடிவேலு ஜோக்ஸ்!!
» மங்கை
» அழகிய மங்கை
» 30 அமெரிக்க வீரர்கள் பலி: ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் சுட்டுக்கொலை- அமெரிக்க படை பதிலடி
» வைகை புயல் வடிவேலு ஜோக்ஸ்!!
» மங்கை
» அழகிய மங்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|