Latest topics
» கதம்பம்by rammalar Yesterday at 17:54
» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Yesterday at 17:44
» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Yesterday at 11:43
» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Yesterday at 11:37
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Yesterday at 11:33
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Yesterday at 11:32
» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Yesterday at 11:31
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 0:02
» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52
» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37
» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36
» ஆன்மீக சிந்தனை
by rammalar Sun 26 Mar 2023 - 11:57
» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34
» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32
» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20
» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19
» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18
» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17
» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16
» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13
» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12
» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08
» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29
» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20
» சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் 5 நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு
by rammalar Fri 24 Mar 2023 - 13:16
» ’கேடி-தி டெவில்’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை!
by rammalar Fri 24 Mar 2023 - 13:09
» ஜெயம் ரவியின் 32 வது படம்
by rammalar Fri 24 Mar 2023 - 13:06
» அனுஷ்காவுக்கா மானஸி பாடியி ’நோ நோ’ பாடல்
by rammalar Fri 24 Mar 2023 - 13:03
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 23 Mar 2023 - 20:00
» கொசுவைப்பற்றிய தகவல்கள்
by rammalar Thu 23 Mar 2023 - 19:43
» தினம் ஒரு மூலிகை - காவட்டம் புல்
by rammalar Wed 22 Mar 2023 - 17:17
» படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 22 Mar 2023 - 17:14
ஆஸ்துமாவை குணப்படுத்தும் சித்த மருந்து
3 posters
Page 1 of 1
ஆஸ்துமாவை குணப்படுத்தும் சித்த மருந்து

ஆஸ்மா என்பது என்னெவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இப்போதைய சுற்றுச்சூழல் பாதிப்பில் ஆஸ்துமா நோய் என்பது 10ல் 2 பேருக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இழுப்பு, தொய்வு, மூச்சிழுப்பு எனப் பலவாறாக இதனை அழைப்பர். இது மனிதனின் சுவாசத்தொகுதியான நுரையீரலை தாக்கும் ஒரு நோயாகும். இந்த நோய் வயது வரம்பு ஏதும் இல்லை. மனிதனை நீண்ட காலத்துக்கு தொல்லைப்படுத்தக்கூடிய நோயாகும்.
ஆரம்பத்திலேயே இந்த நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மனிதனின் மரணம் வரை தொடர்ந்து தொல்லை தரக்கூடியது. தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது. ஆரம்பத்தில் நோயை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளும் வேளையில் அடியோடு குணமானது போலிருக்கும். ஆனால் எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் தாக்கும். ஆரம்பத்தில் தொடர் தும்மல், அடிக்கடி இருமல், சளி, மூச்சிரைப்பு, நெஞ்சு இறுக்கமாக இருப்பதாக உணர்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
ஆஸ்துமாவுக்கான காரணிகள் என்பது, ஒவ்வாமையை ஏற்படுத்தும் பூ மகரந்தங்கள், புற்கள், பூஞ்சாணங்கள், தூசு படலம், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் சிகரட் புகை, ரசாயனப் புகைகள், வாசனைத் திரவியங்கள், விறகு எரித்தல், விறகு எரிக்கும்போது வெளியாகும் நச்சு வாயுக்கள், நுண்துகள்கள், கரப்பன் பூச்சியும், அதன் எச்சங்களும், சைனஸ் போன்ற தொற்று நோய்கள், நெஞ்செரிப்பு, வயிற்று எரிச்சல், சாப்பாடு புளித்து மேலெழுதல் போன்ற அறிகுறிகள் குடலில் உள்ள அமிலம் மேலெழுவதைக் குறிக்கலாம். இதுவும் ஆஸ்துமாவை தூண்டும்.
அதோடு கடும் குளிர் சீதோஷ்ண நிலை, கடுமையான உடற் பயிற்சி, கடுமையான மனஅழுத்தம் போன்றவையும் ஆஸ்துமாவை வரவழைக்கும். ஆஸ்துமா மற்றும் சைனஸ் பாதிப்புகளுக்கு அலோபதி மருத்துவத்தை விட நமது நாட்டின் பாரம்பரிய வைத்திய முறைகளும், ஓமியோபதி சிகிச்சை முறையும் நிரந்தர தீர்வை தருகிறது.
பாரம்பரிய வீட்டுமுறை சிகிச்சைகள்:
துளசிச்சாற்றை ஒரு தேக்கரண்டி காலையும், மாலையும் தினமும் சாப்பிடலாம். மஞ்சள், கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவுக்கு தினமும் ஒரு வேளை என ஒரு மாதத்துக்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரையை பிழிந்த நீரை ஒரு தேக்கரண்டி தினமும் 2 வேளை குடிக்கலாம். மிளகும், கல்கண்டும் சேர்த்து பொடியாக்கி தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட வேண்டும். வெற்றிலைச்சாறு, இஞ்சிச்சாறு, தேன் இவை சமமாக கலந்து தினமும் 2 வேளை சாப்பிட வேண்டும்.
ஆடாதொடா இலையை நீண்ட நாள் தொடர்ந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து, தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் போன்றவை தீரும். இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரில் இட்டு கொடுக்க இருமல், இளைப்பு, காய்ச்சல் தீரும். ஆடாதோடா இலையை உலர்த்தி சுருட்டாக, சுருட்டி புகைப்பிடிக்க ஆஸ்துமா தீரும்.
ஆஸ்துமாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை:
ஆஸ்துமாவுக்கு மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது அவசியம். நோயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து முழுமையாகச் சிகிச்சை அளிக்க சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.
1. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி இலைகளை நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆஸ்துமாவுக்கான மூலிகை டீ தயார். இதை தினமும் காலையிலும், இரவிலும் சாப்பிடுவது சிகிச்சையின் ஒரு பகுதி. மூச்சுக் குழலை விரிவடையச் செய்து மூக்கடைப்பை தவிர்க்கவும், சளியை எளிதாக வெளியேற்றவும் இந்த மூலிகை டீ உதவும்.
2. மிளகு கல்பம் என்பது மிளகுடன் கரிசலாங்கண்ணிச் சாறு, தூதுவளை சாறு, ஆடாதொடைச் சாறு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. காலை, இரவு ஆகிய இரு வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு இந்த மிளகு கல்பத்தை தேனுடன் கலந்து அரை தேக்கரண்டி சாப்பிட வேண்டும்.
3. பூரண சந்திரோதயச் செந்தூரம், வாசாதி லேகியம்: இவற்றை காலை, இரவு இரு வேளையும் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டும். பூரண சந்திரோதய செந்தூரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். வாசாதி லேகியத்தை நெல்லிக்காய் அளவு எடுத்துச் சாப்பிட வேண்டும்.
எவ்வளவு நாள் சித்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும்?
ஆஸ்துமா நோய்க்கு தொடர்ந்து 48 நாள் மேற்சொன்ன சித்த மருந்துகளை சாப்பிட்டு வந்தாலே நல்ல நிவாரணம் கிடைக்கும். எனினும் நோய் தீவிரமாக உள்ள நிலையில் நோய் எதிர்ப்பாற்றலை உடலுக்கு நிரந்தரமாக கொண்டு வர சித்த மருந்துகளை தொடர்ந்து ஓராண்டுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3034

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆஸ்துமாவை குணப்படுத்தும் சித்த மருந்து
தூசி நகரமான சென்னையில் வசிப்பவர்கள் விரைவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு அவதிகள் பல படுவார்கள் என்பது உறுதி. தூசி பறக்கும் சாலைகளை சுத்தப்படுத்த ஆட்கள் இருந்தும். சாதாரண ஈர்க்கு துடப்பத்தை வைத்து எருமைமாட்டுக்கு முதுகு சொறிவது போல பெருக்குவது கண்டு பலநாட்கள் வேதனை அடைந்திருக்கிறேன்.
பள்ளி மாணவர்கள் சிறு பிள்ளைகள் தெருவில் செல்வோர் காலையிலேயே தூசியை சுவாசிக்கும் துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.
பள்ளி மாணவர்கள் சிறு பிள்ளைகள் தெருவில் செல்வோர் காலையிலேயே தூசியை சுவாசிக்கும் துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆஸ்துமாவை குணப்படுத்தும் சித்த மருந்து
இ்ந்த நோயால் நானும் அவஸ்த்தைப்பட்டிருக்கிறேன் கடந்த இருவருடங்களுக்கு முன்னர் மிகவும் உக்கிரமாக இருந்தது கத்தார் நாட்டில் பரிட்சித்தபோது நிமோனியா என்றார்கள் நாடு சென்று பரிட்சித்த பொது ஆஸ்துமா என்றார்கள் ஆயுர்வேதிக் மருந்தினை உட்கொண்டு தற்போது அதன் பிரச்சினை இல்லை இருந்தாலும் எனது வேலைத்தளம் தூசியுடன் கூடிய தளமாதலால் இது எனக்குள் இருக்கிறது என்பது மாத்திரம் உண்மை ஆனாலும் சித்த மருத்துவமாக இருந்தாலும் வீட்டு வைத்தியமாக இருந்தாலும் எமது நாட்டில்தான் சாத்தியம் இங்கு முடியவே முடியாது இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்
அவசியமான பதிவுக்கு மிக்க நன்றி சகோ
அவசியமான பதிவுக்கு மிக்க நன்றி சகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|