Latest topics
» சிறுகதை – கொலுசு!by rammalar Today at 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44
» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு:இருவர் பலி
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு:இருவர் பலி
ஆஸி, சிட்னியில் 20 பொது மக்கள் துப்பாக்கிதாரியினால் பணயக் கைதிகளாக தடுத்து வைப்பு!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலுள்ள கடையொன்றில் 20 பொதுமக்களை துப்பாக்கிதாரியொருவர் பயணக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளார். இதனால், பதற்ற நிலை நீடிக்கின்றது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்டின் வீதியிலுள்ள லின்டன்ட் கஃபே கட்டடத்துக்கு மேலே உள்ள விடுதியில் இன்று திங்கள் காலை 9.30 மணி முதல் 20 பொது மக்களை இனம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார்.
அவுஸ்திரேலிய நேரப்படி செவ்வாய்க் கிழமை அதிகாலையில் போலிசார் குறித்த கட்டடத்துக்குள் அதிரடியாக நுழைந்து பிணைக் கைதிகளை விடுவித்ததாகவும் தற்போது இந்த அபாயம் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அவுஸ்திரேலியாவின் ABC ஊடகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் அவுஸ்திரேலியப் போலிசாரின் இந்த அதிரடி நடவடிக்கையில் இருவர் பலியானதாகவும் 3 பேர் படுகாயம் அடைந்து மோசமான நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கையின் போது குறித்த கஃபே கட்டடத்தில் இருந்து 7 பேர் ஸ்ட்ரெச்செர் மூலம் வெளியேற்றப் பட்டதுடன் இதில் 5 பேருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அமெரிக்க அரச தரப்பில் தெரிவிக்கப் பட்ட செய்தியின் அடிப்படையில் பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி மான் ஹரொன் மொனிஸ் என அடையாளப் படுத்தப் பட்டுள்ள போதும் அவுஸ்திரேலியப் போலிசின் அதிரடி நடவடிக்கையில் இவருக்கு என்ன ஆனது என்றோ அல்லது எத்தனை போலிசார் இந்த ஆப்பரேஷனில் காயம் அடைந்தனர் என்றோ ஊடகங்களுக்கு இதுவரை செய்திகள் வெளியிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த கட்டடப் பகுதியைச் சுற்றி ஸ்னைப்பர் போன்ற துப்பாக்கிகளுடன் நூற்றுக் கணக்கான போலிஸ் அதிகாரிகள் சிட்னியின் மத்திய வணிக மாவட்டத்தில் அமைந்திருந்த இந்த லின்ட் சாக்லெட் கஃபே சுற்றி வளைத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப் பட்ட மக்கள் கஃபேயின் யன்னல் கண்ணாடிகளில் கையை அழுத்தி வைத்திருந்தததுடன், ‘உலகில் கடவுள் மற்றும் அவரின் தூதரான மொஹம்மெட் தவிர வேறு கடவுள் கிடையாது!’ என்ற அரபு மொழியிலான வாசகம் அடங்கிய கறுப்புக் கொடியும் அவர்களது கையில் திணிக்கப் பட்டிருந்தது. இதேவேளை போலிசார் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கு முன் 5 பிணைக் கைதிகள் தாமாகவே தப்பித்து வெளியே வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிதாரியான மொனிஸ் இன் நோக்கம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை என்ற போதும் தனியாளாகவே இவனால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டிருந்தது என அமெரிக்க சட்ட மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்திருந்தன. மேலும் இரவான பின்னர் கஃபேயின் மின் விளக்குகள் அணைக்கப் பட்டு ஃபிளாஷ் பேங் கிரைனேட்டுக்கள் உள்ளே எறியப் பட்டு மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டிருந்தது. இந்த நடவடிக்கையின் போது உள்ளே எத்தனை அப்பாவி மக்கள் இருந்தனர் என்ற தகவலும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப் படவில்லை. பொது மக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவித்த இந்த திடீர் சம்பவத்தால் அவுஸ்திரேலிய மக்கள் தமது பாதுகாப்புக் குறித்து மனக் கலக்கம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
kalapam
Last edited by Nisha on Tue 16 Dec 2014 - 9:39; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு:இருவர் பலி
சிட்னி சம்பவத்தை அடுத்து அவுஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
திங்கட்கிழமை காலை முதல் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள லின்ட் சாக்லேட் கஃபேயில் மர்ம நபர் ஒருவர் 20 இற்கும் மேற்பட்ட பொது மக்களை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அங்கு அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டிகளுக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்குப் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் தற்போது தங்கியிருக்கும் பிரிஸ்பேனில் உள்ள விடுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய அதிகாரிகள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு ஆலோசனை அளித்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்திய வீரர்களின் பாதுகாப்பை பிசிசிஐ அதிகாரிகளும் உறுதிப் படுத்தியுள்ளனர். நியூடெல்லியில் வெளியுறவு விவகார அமைச்சின் பேச்சாளர் சையெட் அக்பருட்டினும், அவுஸ்திரேலிய அதிகாரிகள் இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டதை அரசுக்குத் தெரியப் படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை நகரமான பிரிஸ்பேனில் இந்திய கிரிக்கெட் அணி தனது 2 ஆவது டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலிய அணியுடன் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சிட்னியிலுள்ள லின்ட் சாக்லெட் கஃபேயில் மர்ம நபர் பிடித்து வைத்திருந்த அனைத்துக் கைதிகளும் 16 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் விடுவிக்கப் பட்டதாகவும் இதில் ஈரானைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த மர்ம நபரான மான் ஹரொன் மொனிஸ் என்பவர் உட்பட இருவர் கொல்லப் பட்டதாகவும் சமீபத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் மொனிஸ் துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருந்த இரு இந்தியப் பிணைக் கைதிகளும் பாதுகாப்பாக மீட்கப் பட்டுள்ளதாக உறுதிப் படுத்தப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியம் நாட்டிலும் 4 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆனால் இதுவரை எந்த கோரிக்கைகளும் வரவில்லை எனவும் இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
போலீசார் வரவழைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் குவிக்கப்பட்டு உள்ளனர். குடியிருப்பை சுற்றிவளைத்து உள்ள ஆசாமிகளுக்கு என்ன கோரிக்கை என்ற விவரம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து செய்தி தொடர்பாளர் அன்னிமி செர்லிபின்ஸ் கூறும் போது சிட்னி போன்றே இங்கேயும் குடியிருப்புகளுக்குள் உள்ளவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சிட்னி ஓட்டலில் 30 க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருக்கும் துப்பாக்கி ஏந்திய மர்ம நபருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். சம்பவம் நடந்த ஓட்டலில் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது. பிணையக் கைதிகளை மீட்க ஆஸ்திரேலியா போலீசார் திணறி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர ஓட்டல் ஒன்றில் புகுந்த ஆயுதம் தாங்கிய தீவிரவாதி ஒருவன் அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து உள்ளான். ஓட்டலை சுற்றிலும் பாதுகாப்பு படை குவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதியின் பிடியில் 30க்கும் மேற்பட்டோர்கள் பிணைக்கைதியாக உள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. தீவிரவாதிடம் சிக்கியுள்ளவர்களை மீட்க ஆஸ்திரேலியா போலீஸ் திண்றிவருகிறது. சம்பவம் நடந்த பகுதியை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பொதுமக்கள் சம்பவ பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பிணைக்கைதிகளை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே பிணைக்கைதிகளாக இருந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் தீவிரவாதியின் பிடியில் இருந்து தப்பி ஓடிவந்தனர். அவர்களை போலீசார் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் காயம் இன்றி பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டனர். இத்தகவலை போலீஸ் ஆணையர் உறுதி செய்துள்ளார். அவர்களிடம் போலீசார் தீவிரவாதி குறித்த தகவல்களை கேட்டறிந்து வருகின்றனர். இதற்கிடையே தீவிரவாதி வெடிகுண்டு வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்ததாக தவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதி, ஓட்டலில் இரண்டு குண்டுகளும், சிட்னி நகரின் பிறப்பகுதிகளில் இரண்டு குண்டுகள் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தீவிரவாதி என கூறப்படும் மர்ம நபருக்கு 40 வயதுக்கும் மேல் இருக்கலாம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஓட்டலுக்கு 4 பாதுகாப்பு படை வீரர்கள் சென்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓட்டலுக்கு உள் விளக்குகள் அனைத்து அனைக்கப்பட்டுள்ளது. பிணைக்கைதியாக உள்ள பெண் ஒருவர் விளைக்கை அணைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. தொடர்ந்து மர்ம நபருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாங்கள் இப்பிரச்சனையை அமைதியாகவே தீர்க்க விரும்புகிறோம் என்று பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இரவாகியும் அங்கு தொடர்ந்து பதட்டமான நிலையே நீடித்து வருவதால் பாதுகாப்பு படையினர் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். நாளைய தேவைக்கான ஏற்பாடு குறித்து தேவையான பணிகளை நாங்கள் செய்வோம். என்று பாதுகாப்பு படையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
thinathanthi

இன்று செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பெர்ராவில் பாராளுமன்றக் கட்டடத்துக்கு அண்மையிலுள்ள வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களக் கட்டடத்தில் (DFAT) அமைந்துள்ள கன்டீனில் சந்தேகத்துக்குரிய பொதி ஒன்று கண்டு பிடிக்கப் பட்டதையடுத்து ஏற்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தலால் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் வெளியேற்றப் பட்டனர்.
மதிய உணவு இடைவெளியின் போது கண்டு பிடிக்கப் பட்ட குறித்த பொதி பற்றிய விசாரணையைப் போலிசார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்பொதி இனம் காணப் பட்டதை அடுத்து உடனே குறித்த பகுதியை சுற்று வளைத்த போலிஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக DFAT கட்டடத்திற்கு அண்மையிலுள்ள முக்கிய வீதிகளை மூடி ஆட்களை வெளியேற்றியதுடன் வெடிகுண்டு அகற்றும் குழுவினரும் விரைவாக வரவழைக்கப் பட்டனர்.
வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்ட DFAT கட்டடத்துக்கு அண்மையில் சிறுவர் பராமரிப்பு இல்லம் ஒன்று அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. நேற்றைய தினம் தான் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள லின்ட் சாக்லெட் கஃபே கட்டடத்தில் குறைந்தது 20 பேர் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப் பட்டிருந்தனர்.
சுமார் 16 மணித்தியாலப் போராட்டத்தின் பின் அவுஸ்திரேலியப் போலிஸ் மான் ஹரொன் மொனிஸ் என்ற அந்த துப்பாக்கிதாரியைச் சுட்டுக் கொன்று பணயக் கைதிகளை மீட்டனர். இந்த ஆப்பரேஷனில் இரு பிணைக் கைதிகளும் கொல்லப் பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஈரானில் இருந்து வந்து அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்திருந்த மான் ஹரொன் மொனிஸின் சமூக வலைத் தளப் பதிவுகளில் சுன்னி மிதவாத போக்கு வெளிப்பட்டிருந்தது. இதனால் தற்போது சமூக வலைத் தளங்களில் ஹேஸ்டேக்குடன் கூடிய #illridewithyou என்ற தலைப்பின் கீழ் இஸ்லாமோபோபியா (Islamophobia) இற்கு எதிரான பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன.
மேலும் இனவாதப் போக்குடைய சிலர் இது போன்ற செயற்பாடுகளின் மூலம் அவுஸ்திரேலிய முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்குதல்களைத் தொடுக்கலாம் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மதிய உணவு இடைவெளியின் போது கண்டு பிடிக்கப் பட்ட குறித்த பொதி பற்றிய விசாரணையைப் போலிசார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்பொதி இனம் காணப் பட்டதை அடுத்து உடனே குறித்த பகுதியை சுற்று வளைத்த போலிஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக DFAT கட்டடத்திற்கு அண்மையிலுள்ள முக்கிய வீதிகளை மூடி ஆட்களை வெளியேற்றியதுடன் வெடிகுண்டு அகற்றும் குழுவினரும் விரைவாக வரவழைக்கப் பட்டனர்.
வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்ட DFAT கட்டடத்துக்கு அண்மையில் சிறுவர் பராமரிப்பு இல்லம் ஒன்று அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. நேற்றைய தினம் தான் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள லின்ட் சாக்லெட் கஃபே கட்டடத்தில் குறைந்தது 20 பேர் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப் பட்டிருந்தனர்.
சுமார் 16 மணித்தியாலப் போராட்டத்தின் பின் அவுஸ்திரேலியப் போலிஸ் மான் ஹரொன் மொனிஸ் என்ற அந்த துப்பாக்கிதாரியைச் சுட்டுக் கொன்று பணயக் கைதிகளை மீட்டனர். இந்த ஆப்பரேஷனில் இரு பிணைக் கைதிகளும் கொல்லப் பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஈரானில் இருந்து வந்து அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்திருந்த மான் ஹரொன் மொனிஸின் சமூக வலைத் தளப் பதிவுகளில் சுன்னி மிதவாத போக்கு வெளிப்பட்டிருந்தது. இதனால் தற்போது சமூக வலைத் தளங்களில் ஹேஸ்டேக்குடன் கூடிய #illridewithyou என்ற தலைப்பின் கீழ் இஸ்லாமோபோபியா (Islamophobia) இற்கு எதிரான பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன.
மேலும் இனவாதப் போக்குடைய சிலர் இது போன்ற செயற்பாடுகளின் மூலம் அவுஸ்திரேலிய முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்குதல்களைத் தொடுக்கலாம் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு:இருவர் பலி
எங்கும் இதே நிலை என்றால் எங்குதான் அமைதி நிலை
யாருமற்ற தீவு வேண்டும் அதில் நாம் மட்டும் தனிமையில் வேண்டும்
யாருமற்ற தீவு வேண்டும் அதில் நாம் மட்டும் தனிமையில் வேண்டும்
Re: சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு:இருவர் பலி
அப்படியா? என்னை கூட்டி போனிங்க எனில் நாம் இரண்டு பேரும் சண்டை போட்டு மண்டை உடைச்சிக்கலாமே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு:இருவர் பலி
நீங்க மண்டை உடைச்சாலும் காயத்துடன் உங்களை நல்லா பாத்துப்பன்Nisha wrote:அப்படியா? என்னை கூட்டி போனிங்க எனில் நாம் இரண்டு பேரும் சண்டை போட்டு மண்டை உடைச்சிக்கலாமே?

அப்படியா? அபபடின்னால் சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு:இருவர் பலி
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப்பார்தேன்!நேசமுடன் ஹாசிம் wrote:எங்கும் இதே நிலை என்றால் எங்குதான் அமைதி நிலை
யாருமற்ற தீவு வேண்டும் அதில் நாம் மட்டும் தனிமையில் வேண்டும்
அப்படியா பாஸ் எல்லாம் சரி வரும் அனைதிற்கும் காலம் பதில் சொல்லும்
Re: சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு:இருவர் பலி
எந்தக்காலம் பதில் சொல்லும் சம்ஸ் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» புரட்சிப் படை தீவிரம்: கடாபியின் சொந்த ஊர் சுற்றிவளைப்பு- 10 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு
» சுத்தம்... சுகாதாரம்... நாம் இருவர்.. நமக்கு இருவர்... ஆந்திராவில் ஒரு அதிசய கிராமம்! .
» ரயில் - லொறி விபத்து இருவர் பலி; இருவர் காயம் ஓமந்தையில் சம்பவம்
» ஹம்பாந்தோட்டையில் கோர விபத்து இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
» சிட்னி கிரிக்கெட்
» சுத்தம்... சுகாதாரம்... நாம் இருவர்.. நமக்கு இருவர்... ஆந்திராவில் ஒரு அதிசய கிராமம்! .
» ரயில் - லொறி விபத்து இருவர் பலி; இருவர் காயம் ஓமந்தையில் சம்பவம்
» ஹம்பாந்தோட்டையில் கோர விபத்து இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
» சிட்னி கிரிக்கெட்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|