சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Khan11

சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

3 posters

Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by *சம்ஸ் Tue 30 Dec 2014 - 6:20

அச்சு, பணத்தாள், பீங்கான், தேனீர், உணவகம், வெடிமருந்து மற்றும் திசைகாட்டி என – சீனாவின் சாங் ஆளுங்குடியினரின் (Song DynastyA.D. 960-1280) காலத்து சீனர்கள் உலகுக்கு அளித்தவைகளின் எண்ணிக்கை நம் மதி மயக்கும். சீன வரலாற்றில் மிக துடிப்பான இக்காலகட்டத்தில் சீனாவின் பொருளாதார  செழிப்பும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் குறிப்பிடத்தக்கவை.  இந்த பேட்டியில் சீன துறைவல்லுநரான மெக்-கில் பல்கலையின் கிழக்கு ஆசிய துறையின் ராபின் டி. எஸ். யேட்ஸ்,  இந்த தனிச்சிறப்பான காலத்தையும் உலகவரலாற்றில் அதன் தாக்கத்தையும் விவரிக்கிறார்.
சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Song1-small-300x214
சாங் ஆளுங்குடி காலத்து ” எலகண்ட் பார்ட்டி” (An Elegant Party) என அழைக்கப்படும் ஓவியத்தில் கற்றுத் துறைபோகிய அதிகாரிகளுக்கு பேரரசர் அளிக்கும் விருந்து பற்றிய விவரிப்பு.
பல்லின பண்பாடு
நோவா:  உலகளாவிய பார்வையில் இருந்து சாங் ஆளுங்குடியினர் பற்றி முதலில் பேசுவோம். 1271 இல், இத்தாலிய வணிகரான மார்க்கோ போலோ, சீனாவுக்கு பயணம் சென்றார் என நம்பப்படுகிறது. அந்த மாறுபட்ட உலகம் பற்றிய அவரது பார்வை என்ன?
ராபின் யேட்ஸ்: மார்க்கோ போலோ மெய்யாலுமே சீனா சென்றாரா என்பது பற்றிய வாதம் இருக்கின்றது. ஆயினும், அவருடைய குறிப்புகள் உண்மை எனக்கொண்டு நோக்கினால், சீனாவின் பெரும் நகரங்களும் வளர்ந்த வணிகமும் அவரை முற்றிலும் வியப்பில் ஆழ்த்தியது என்பது மட்டும் மிக வெளிப்படை.. அவர் அறிந்த இத்தாலிய நக்ரங்களான வெனிஸ், ஜெனோவா போன்ற நகரங்களை விஞ்சிய எண்ணிக்கையில்  சீன கால்வாய்களில் கப்பல்கள் இருந்தன. பண்பட்டதும் நாகரிகமானதுமான சமூகமாக சீனர்கள் இருந்தன்ர்.  எடுத்துக்காட்டாக, சாங் ஆளுங்குடியினர் காலத்து பட்டு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் பெற்று இருந்தது. 1800 நகரும் பாகங்களை உடைய மிக்க வினைத்திறம் கொண்ட தறிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள். மேற்கு உலகின் எந்த நாட்டை விடவும் தொழில்நுணுக்கத்தில் முன்னேறியதும் நாகரிகமானதுமான ஒரு நாடாக சீனா இருந்து உள்ளது.
மார்க்கோ போலோ அறவே எழுத தவறியவற்றால் அவர், சீனாவுக்கு உண்மையிலேயே சென்றாரா என சில வியக்கலாம். சாங் ஆளுங்குடியினர் காலத்தில் புதுப்படைப்பான பணத்தாள்கள் மற்றும்  வங்கி வரைவுகள் பற்றியும்  அவர் குறிப்பிடவில்லை. அவர் சீனாவில் 20 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றால் இவற்றை கவனித்து இருப்பார் என நாம் நினைக்கலாம். ஏனென்றால் மேற்கு ஐரோப்பாவில் அவை இல்லை.
நோவா: அவர்கள் காலத்தில் பெரியவும் ஆரவாரமும் கூடிய சீனத்து நகரங்களுக்கு காரணமாக இருந்தவைதான் என்ன?
ராபின் யேட்ஸ்: அக்காலத்தே சீன பண்பாட்டில் நகரமயம் ஆதலுக்கும் விரைந்து வளரும் வணிகமயம் ஆதலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. வணிகர்கள் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிகளுக்கு பயணித்தார்கள் நாட்டை நிருவாகம் செய்ய கற்றுத்துறை போகிய அதிகாரிகள் குழுவை  பணியில் அமர்த்தினர். பயணம் செய்யும் அதிகாரிகளும் வணிகர்களும் அவரவருக்கு பழகிப்போன உணவுகளை உண்ண வேண்டினர்.  நகர்புறங்களில் சற்று கூடுதல் செல்வம் உள்ளவர்கள் பிற பகுதியின்  உணவு வகைகளை உண்ண விரும்பினர். அதனால் உணவங்களில் உண்பதும் தேனீர் அருந்துவதுமான ஒரு நகர்ப்புற புதிய பண்பாடு உருவானது.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty Re: சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by *சம்ஸ் Tue 30 Dec 2014 - 6:24

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Song2-small-300x199

SONG2-SMALL


 
தேனீர் அருந்தும் வழக்கமானது சீனாவில் ஹன் ஆளுங்குடியினர்  காலமனான 206 B.C.-A.D. 220 ஆண்டுகளில் இருந்தே உள்ளது. அக்காலத்தே அவை மருந்தாக பயன் ஆனது பதிவு செய்யப்படுள்ளது எனினும் சாங்க் ஆளுங்குடியினர் காலத்தில் அது புது எல்லையை தொட்டது.
உண்மையில், சாங்க் ஆளுன்குடியினர் காலத்தில் தான் தேநீரானது ஒரு சமய வழக்கம் எனும் நிலை பெற்றது. மிகவும், வழமை மீறிய, நேர்த்தியான அழகிய பீங்கான் தேனீர் கிண்ணங்களில் தேனீர் அருந்துவது அவர்களது பெருமைகளில் ஒன்றாக கருதப்பட்டது. பீங்கானுக்கு ஆங்கிலத்தில் ”சைனா’ என்ற பெயர் பொருத்தமானது. ஏனெனில், சீனர்கள் அவற்றை படைப்பதற்கு ஆன தொழில்நுணுக்கத்தை உருவாக்கினார்கள்.  சாங்க் ஆளுன்குடியினர் காலத்தில்தான் வெண்களிமண் தொழில் வணிகமுறைதொழில் ஆனது. பேரரசு அரண்மனைகளுக்கு பெரும் எண்னிக்கையில் பீங்கான் பாண்டங்களை உற்பத்தி செய்தார்கள். அதே நேரம், புதிதாக எழுந்த ஆட்சி அதிகாரிகளுக்கும், நகர்ப்புற மேன்மக்களுக்கும் மற்றும் உணவகங்களுக்கு எனவும் இவை உற்பத்தி செய்யப்பட்டன.   முடிவில் 17, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பாவுக்கு  வேண்டிய பணடங்களில் முக்கிய இரண்டான தேனீர், பீங்கான்களில்தான் கிழக்கும் மேற்கும இடையே பெரும் வணிகம் நடைபெற்றது.
சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Song3-small-300x200

SONG3-SMALL

 
சாங் ஆளுகுடியினரது பூப்போட்ட பீங்கன் பெட்டி. இது நான்ஜிங் அருங்காட்சியகத்தில் காப்பில் உள்ளது.
உணவகங்களால் பொதுமக்களும் மிக குறைந்த விலையில் வறுத்த சந்தகை போன்ற உணவுகளை உண்ணவும் இயன்றது. இவற்றைத்தான் மார்க்கோ போலோ மேற்கு உலகுக்கு அறிமுகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதில் நிறைய கருத்து வேற்றுமை இருப்பினும், ஒருகால், அதே காலகட்டத்தில் சேமியாவுக்கான (spaghetti) எண்ணம்  இதில் இருந்து  வந்து இருக்கலாம். இது ஒன்பதாம் நூற்றாண்டிலேயும் கேண்டன் (Canton ) போன்ற துறைமுகங்களில் தம்மை நிலைநாட்டிக்கொண்ட அரபு வணிகர்களாலும் வந்திருக்கலாம்.
துப்பாக்கி மருந்தின் வலிமை:
நோவா: தேனீரும் உணவகங்களும் சாங் மக்கள் உலகுக்கு அளித்த முக்கிய கொடை. நாகரிகங்களின் போக்குக்கு பெரும் விளைவு ஏற்படுத்திய அக்காலத்திய சீன புதுப்படைப்புகள் என்ன?
போர்கள் எவ்வாறு புரியப்படுகின்றன என்பதை முற்றிலும் மாற்றி,  நல்லவனை விடவும் வல்லவனே இறுதியில் நிலைபெறுவான் எனும் நிலைமைக்கு வெடிமருந்து  பெரும்பங்கு ஆற்றியது. பொதுவான மக்கள் கொண்ட கருத்தான, சீனர்கள் துப்பாக்கி மருந்தை கண்டுபிடிக்கவில்லை; வெறுமனே வாண வேடிக்கைகுதான் பயன்படுத்தினார்கள், என்ற தோற்றத்தை நான் மறுத்திட முடிகிறது. அவர்கள் போர் பயன்பாட்டையும் க்ண்டுபிடித்தார்கள் என்பதில் நான் திண்ணமாக இருக்கிறான்.  சுமார் 1127 இல், வட சாங்க் தெற்கு சாங்க் வயம் கைமாறும் காலகட்டத்தில் இருந்ததான, உலகின் முதல் பீரங்கி ஒன்றின் ஓவியத்தை கண்டறிந்தேன். இது மேற்கு ஐரோப்பாவில் பீரங்கியை வடிவமைப்பதற்கு 150 ஆண்டுகளுக்கும் முந்தியது ஆகும். சாங்க் மக்கள், வெடிமருந்தை தீப்பந்தம் வீசுவத்ற்காகவும் மற்றும் தனியார் சுரங்கங்களுக்கு எதிரானது போன்ற பல வெடிமருந்து ஆயுதங்களையும் பயன்படுத்தினார்கள்.
மேற்கு ஐரோப்ப்பிய மன்னர்கள் அவர்களது சமுதாய அமைப்பை அடிப்படைமாற்றம் செய்திட பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதை சொல்லத்தேவையோ? போரிடும் கிழார்களின் கோட்டைகளை பிரங்கிகள் கொண்டு அழித்து, மையமான தேசீய அரசை உருவாக்க அம்மன்னர்களால் இயன்றது. சாங்க் ஆளுங்குடியினரின் காலத்தின் இறுதிக்குள், பல கட்ட ஏவுகணைகளை சீனர்கள் படைத்துள்ளார்கள். அவை இல்லை எனில். ஒருகால், நம்மால் நிலவுக்கு மனிதனை அனுப்பிவைக்க முடியாமல் போயிருக்கலாம். சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய வரலாற்றாளர், ஜோசப் நீதாம் (Joseph Needham), ஒரு உருளைக்குள் பொதிந்த வெடி எனும் கருத்துகொண்டுதான் இன்றைய உள்-எரிந்திடும் பொறிகளும் நீராவி பொறிகளும் உருவாக்கிட முடிந்தது. சீனர்களின் இந்த புதுப்படைப்பு இல்லையாயின் நம்மால் இன்று பயன்படுத்தும் போக்குவரத்து முறை இயலாமல் போயிருக்கலாம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty Re: சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by சுறா Tue 30 Dec 2014 - 10:26

புதுமையின் நட்சத்திரங்கள் பழைமையின் சொந்தக்காரர்களான சீனர்கள். அவர்களிடம் நாம் படிக்கவேன்டிய பாடங்கள் எவ்வளவோ உண்டு.

அருமை சம்ஸ்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty Re: சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by Nisha Tue 30 Dec 2014 - 12:41

சீனர்கள் எறும்பு போல் சுறுசுறுப்பானவர்கள். சிறிய உருவமாயிருந்தாலும் திறமை மிக்கவர்கள். அவர்களில் திறமை அபாரம் தான். உலகஜனத்தொகையை வளர்த்ததிலும், புதிய கண்டுபிடிப்புக்களால் நிறைத்ததிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே!

பகிர்ந்தமைக்கு நன்றி சம்ஸ்!

காலையில் எழுந்து பதிவு போடவும் நேரம் கிடைக்குதா இடிஅமீன் சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty Re: சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by சுறா Tue 30 Dec 2014 - 20:07

Nisha wrote:சீனர்கள் எறும்பு போல் சுறுசுறுப்பானவர்கள்.  சிறிய உருவமாயிருந்தாலும் திறமை மிக்கவர்கள்.  அவர்களில் திறமை  அபாரம் தான். உலகஜனத்தொகையை வளர்த்ததிலும், புதிய கண்டுபிடிப்புக்களால் நிறைத்ததிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே!

பகிர்ந்தமைக்கு நன்றி சம்ஸ்!

காலையில் எழுந்து பதிவு போடவும் நேரம் கிடைக்குதா இடிஅமீன் சார்?

எங்க தம்பியை இடிஅமீன்னு திட்டுறீங்களா?  மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty Re: சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by *சம்ஸ் Tue 30 Dec 2014 - 23:18

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Song4-small-300x263
SONG4-SMALL

சீனர்கள் வெடிமருந்தை, வெறும் பொழுதுபோக்குக்கும் மேலாகவும் பயன்படுத்தினர்.  வானவேடிக்கையுடன், அதை ஆயுதங்களை இயக்கவும் சாங்க் ஆளும் குடியினர் பயன்படுத்தியுள்ளார்கள்.
நோவா: சீனர்களின் வெடிமருந்து கண்டுபிடிப்பு கிழக்கில் இருந்து மேற்குலகுக்கு எப்படி பரவியது?
சாங்க் ஆளுன்குடியினர் வலிவற்றவராக இருந்தார்கள் என்று துறைவல்லுநர்கள் சொன்னாலும், அவர்கள் மங்கோலியர்களை பல பதின்-ஆண்டுகளாக தடுத்து நிறுத்திட வெடிமருந்தின் பயன் காரணமாக இருந்தது. இறுதியாக, மங்கோலியர்கள் சீன கைவினைஞர்களை கைப்பற்றி, வெடிமருந்தின் பின்னை தொழில்நுட்பத்தை சீனர்களின் மீதே செலுத்தினார்கள். வெடிமருந்தின் சிறப்பான தொழில்நுட்ப அறிவுகொண்ட அவர்களை, தங்கள் படைகளில் பொறியாளர்களாக பணி அமர்த்தினார்கள். அந்த தொழில்நுட்பத்தை மங்கோலியர்கள், மேற்குஉலகுக்கு மிகவிரைவாக கொண்டு சென்றனர், ஏனெனெனில் அது அவர்களின் படையெடுப்புக்கு மிக உதவியாக இருந்தது. இந்த தொழில்நுட்ப கைமாற்றத்தினால்  ஒருசுவையான நிகழ்ச்சி என்ன என்றால் இது இரண்டு தரப்புக்கும் கைமாற்றியது. மேற்கு உலகுக்கு வெடிமருந்தும் பீரங்கியும் அறிமுகம் ஆனதும், மேற்கத்தியர்கள் மிக விரைவாக அதில் வல்லுநர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் வெண்கலத்தால் பீரங்கிகளை வார்த்து அவை சீன பீரங்கிகளை விடவும் மேம்பாடு உடையதாக படைத்தார்கள்.  பின் அந்த பீரங்கிகள் கிறுத்துவ நிறுவனங்களால் 16 மற்றும் 17 ஆம் நூற்ராண்டுகளில் சீனாவுக்கே கொண்டுவரப்பட்டன. மன்ச்சூ இனத்தாருடன் போராடிக்கொண்டு இருந்த மிங் ஆளுங்குடியினர் கிறுத்துவ போதகர்களை  அமர்த்தி தம்மிடம் இருந்த பீரங்கிகளை விடவும் மேம்பாடு கொண்ட பீரங்கிகளை வார்த்தனர்.
அச்சில் வார்த்த வார்த்தைகளின் தாக்கம்
நோவா: நீங்கள், வெடிமருந்தால் உலகம் முழுமைக்கும் ஒரு வன்மையான தாக்கம் ஏற்படுத்திய வண்ணம் பற்றி சொன்னீர்கள்.  சாங் ஆளுங்குடியினர் காலத்தில்  இதே போல் உலகு முழுமைக்கும் தாக்கம் ஏற்படுத்திய  படைத்துறை சாராத படைப்புகள் இருந்தனவா?
அச்சும், நகரும் அச்சு எழுத்துருக்களும்  அவற்றில் முக்கியமான இரண்டு.  உண்மையில் புத்தர்களால் எட்டாம் நூற்றாண்டில், சமயம் தொடர்பான கருத்துகளையும் படங்களையும் பரப்ப அச்சடிப்பு, கண்டுபிடிக்கப்பட்டது.  ஆனால் சாங் ஆளுங்குடியினரின் அரசுத்துறை கன்ஃபூசியஸ் உரைகளை பதிப்பிக்க அச்சுத்துறைக்கு ஆதரவு நல்கியது. அரசுத்துறைக்கு  தேர்வுகளுக்காக மாணாக்கர்கள் கற்க இவை தேவைப்பட்டன. இந்த தேர்வில் வென்றால் அரசு அதிகாரிகளாக தகுதி பெறலாம். எனவே, இக்கால கட்டத்தில் கன்ஃபூசியசின் உரைகள் பல படிகள் அச்சடிக்கப்பட்டன. அதுவுமன்றி, உழவு மற்றும் மருத்துவம் போன்ற தொழில்நுணுக்க கையேடுகளை பரவலாக்க அரசு
அச்சுத்துறையை அறிமுகம் செய்தது
11ஆம் நூற்றாண்டில், ச்சென் குவா (Shen Gua) எனும் புகழ்பெற்ற எழுத்தாளர், பை செங் (Bi Sheng.) என்ற பெயர் கொண்ட ஒருவர் நகரும் அச்சுகளைக்கொண்டு அச்சிடும் கண்டுபிடிப்பு செய்தது பற்றி பதிவு செய்துள்ளார்.  இந்த படைப்பே இறுதியில் மேற்கு உலகம் தம் கையில் எடுத்துக்கொள்ள, குட்டன்பர்க் என்பவரால் பைபிளை அச்சடிக்க பயன்படுத்தப்பட்டது. இந்த அச்சு தொழில் நுணுக்கத்தால் கல்வியறிவு மற்றும் இலக்கிய வளர்ச்சியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை சொல்லவும் வேண்டுமோ?
சாங் ஆளுங்குடியினர் காலம் பலவேறு துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்த்திய காலம்.
நோவா: இந்த அச்சுத்தொழில் முன்னேற்றம் ஐரோப்பாவை மாற்றியது போல் சீனாவையும் மாற்றியதா?
சீன மொழியின் தன்மையால்  அச்சுத்தொழிலின் தாக்கம் சீனத்துக்கும் மேற்குக்கும் வேறாக இருந்தது.   சீன மொழி பட எழுத்துருக்களை பயன்படுத்துகிறது. நாம் அறிந்த அகரமுதலி போல் அல்ல. அதன் விளைவாக சீனமொழியில் ஆயிரககணக்காக எழுத்துருக்கள் உள்ளன. இருப்பினும் பெரும்பான்மையான உரைகளுக்கு 48, 000 சீன் எழுத்துருக்கள் தேவை இல்லை. 3000 முதல் சுமார் 10,000 வரை பயன்படுத்தினால் போதும். நகரும் எழுத்துருக்களை கொண்டு அச்சிடும் முறை ஐரோப்பிய மொழிகளில் உள்ளது போல் ஒரு சிறு எண்ணிக்கையில் உள்ள உருக்களைக்கொண்டு அச்சிட்டால் செயல்முறையில் இயலும். சீன மொழியில் பெரும் எண்ணிகையான எழுத்துருக்களை அச்சுக்கோப்பில் ஒவ்வொன்றாக செதுக்கவேண்டும். அதனால் சீனர்கள் இந்த முறையை கண்டுபிடித்தாலும் பலகைகளில் செதுக்கி அச்சிடும் முறைபோல், இது அவர்கள் மொழிக்கு அதிக பயன் அளிக்கவில்லை. அதனால் ஒரு சில நூல்கள் இம்முறையில் அச்சடிக்கப்பட்டாலும், மேற்கு உலகைப்போல் பலகையில் செதுக்கி அச்சடிக்கும் முறையை கைவிடவில்லை.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty Re: சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by *சம்ஸ் Tue 30 Dec 2014 - 23:29

சுறா wrote:புதுமையின் நட்சத்திரங்கள் பழைமையின் சொந்தக்காரர்களான சீனர்கள். அவர்களிடம் நாம் படிக்கவேன்டிய பாடங்கள் எவ்வளவோ உண்டு.

அருமை சம்ஸ்

நன்றி அண்ணா  முடிந்தவரை படித்துக் கொள்வோம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty Re: சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by *சம்ஸ் Tue 30 Dec 2014 - 23:31

Nisha wrote:சீனர்கள் எறும்பு போல் சுறுசுறுப்பானவர்கள்.  சிறிய உருவமாயிருந்தாலும் திறமை மிக்கவர்கள்.  அவர்களில் திறமை  அபாரம் தான். உலகஜனத்தொகையை வளர்த்ததிலும், புதிய கண்டுபிடிப்புக்களால் நிறைத்ததிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே!

பகிர்ந்தமைக்கு நன்றி சம்ஸ்!

காலையில் எழுந்து பதிவு போடவும் நேரம் கிடைக்குதா இடிஅமீன் சார்?

ஆமா நிஷா உங்களைப் போன்று அவர்களும் நல்ல சுறுசுறுப்பானவர்கள். சியர்ஸ்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty Re: சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by Nisha Wed 31 Dec 2014 - 2:32

சுறா wrote:
Nisha wrote:சீனர்கள் எறும்பு போல் சுறுசுறுப்பானவர்கள்.  சிறிய உருவமாயிருந்தாலும் திறமை மிக்கவர்கள்.  அவர்களில் திறமை  அபாரம் தான். உலகஜனத்தொகையை வளர்த்ததிலும், புதிய கண்டுபிடிப்புக்களால் நிறைத்ததிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே!

பகிர்ந்தமைக்கு நன்றி சம்ஸ்!

காலையில் எழுந்து பதிவு போடவும் நேரம் கிடைக்குதா இடிஅமீன் சார்?

எங்க தம்பியை இடிஅமீன்னு திட்டுறீங்களா?  மண்டையில் அடிவிழும்

உங்க தம்பிக்கு நான் வைச்சிருக்கும் பட்டப்பெயர்கள் கேட்டால்  இன்னும் என்ன சொல்வீர்கள் சார்?

இடி அமீன், இடி அமீன் என ஆயிரம் முறை சொல்வேன். என்னன்னு கேட்க முடியாதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty Re: சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by Nisha Wed 31 Dec 2014 - 2:33

*சம்ஸ் wrote:
Nisha wrote:சீனர்கள் எறும்பு போல் சுறுசுறுப்பானவர்கள்.  சிறிய உருவமாயிருந்தாலும் திறமை மிக்கவர்கள்.  அவர்களில் திறமை  அபாரம் தான். உலகஜனத்தொகையை வளர்த்ததிலும், புதிய கண்டுபிடிப்புக்களால் நிறைத்ததிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே!

பகிர்ந்தமைக்கு நன்றி சம்ஸ்!

காலையில் எழுந்து பதிவு போடவும் நேரம் கிடைக்குதா இடிஅமீன் சார்?

ஆமா நிஷா உங்களைப் போன்று அவர்களும் நல்ல சுறுசுறுப்பானவர்கள். சியர்ஸ்

இது தான் இந்த வருடத்தின் சிறந்த ஜோக்! நான் உலகத்திலேயே பயங்கர சோம்பேறி சார். தூங்கு மூஞ்சி நிஷா  நான்.  இனி கொண்டாட்டம் தான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty Re: சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 5:29

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:சீனர்கள் எறும்பு போல் சுறுசுறுப்பானவர்கள்.  சிறிய உருவமாயிருந்தாலும் திறமை மிக்கவர்கள்.  அவர்களில் திறமை  அபாரம் தான். உலகஜனத்தொகையை வளர்த்ததிலும், புதிய கண்டுபிடிப்புக்களால் நிறைத்ததிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே!

பகிர்ந்தமைக்கு நன்றி சம்ஸ்!

காலையில் எழுந்து பதிவு போடவும் நேரம் கிடைக்குதா இடிஅமீன் சார்?

ஆமா நிஷா உங்களைப் போன்று அவர்களும் நல்ல சுறுசுறுப்பானவர்கள். சியர்ஸ்

இது தான் இந்த வருடத்தின் சிறந்த ஜோக்! நான் உலகத்திலேயே பயங்கர சோம்பேறி சார். தூங்கு மூஞ்சி நிஷா  நான்.  இனி கொண்டாட்டம் தான்

தனக்குள் இருக்கும் திறமைகள் நமக்கு தெரியாது மற்றவர்களுக்கு தெரியும்.உங்களின் சுறுசுறுப்பும் வேகம் அறிந்ததால் சொல்கிறேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty Re: சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by சுறா Wed 31 Dec 2014 - 6:42

ஒருவழியா இந்த வருடம் மிகச்சிறந்த இந்த நகைச்சுவையுடன் முடிந்தது. இரண்டு சுறுசுறுப்பானவர்களும் தங்களுக்குள் மாற்றி மாற்றி நீங்க தான் சுறுசுறு என சொல்லிக்கொள்கிறார்கள். வாழ்க அவர்கள் நட்பு. பை பை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சீனாவின் புதுப்படைப்புகள் காலம். Empty Re: சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum