Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள்
2 posters
Page 1 of 1
பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள்
விந்தியாவுக்கு வயது 45. பார்க்க அழகாகவும், இளமையாகவும் தெரிந்தார். நேர்த்தியாக அலங்காரமும் செய்திருந்தார். அவர் முகத்தில் மட்டும் சோகம் நிறைந்திருந்தது. தனது மகளையும் அழைத்து வந்திருந்தார். அவள் மன இறுக்கத்துடன் காணப்பட்டாள். இருவரும் முகம் கொடுத்து பேசிக்கொள்ளவில்லை. தாய்–மகள் இடையே சுமுக உறவு இல்லை என்பது அவர்கள் சொல்லாமலே தெரிந்தது.
இருவரும் எதுவும் பேசாமல் மவுனம் காத்ததால் விந்தியாவின் மகளை வெளியே அனுப்பி வைத்து விட்டு அவரிடம் பேசினேன்.
தன் மகளே தனக்கு எதிரியாகி தன் வாழ்க்கையை நரகமாக்கி விட்டதாக கூறி விந்தியா வருத்தப்பட்டார்.
‘என்ன பிரச்சினை?’ என்று கேட்டேன்.
‘என் மகளுக்கு 22 வயதாகிறது. கல்லூரியில் படிக்கிறாள். சிறு வயதிலிருந்தே என் மீது அவளுக்கு பொறாமை உண்டு. அவள் என்னை விட நிறம் சற்று குறைவு. அதனால் எப்பொழுதும் என் மீது கோபமாக இருப்பாள்’ என்றார்.
மகள் மீது உப்பு சப்பில்லாத காரணங்களை கூறுகிறார் என்பதும், பிரச்சினைக்கு காரணம் அதுவல்ல என்பதும் அவர் பேச்சில் புரிந்தது. ‘உங்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன?’ என்று கேட்டேன்.
‘நான் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். ஒரு மாதத்துக்கு முன்பு புதிதாக அதிகாரி ஒருவர் பணிக்கு சேர்ந்தார். அவர் மிகவும் திறமைசாலி. எப்படியோ எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு விட்டது. அவருடன் பழகியதும் பல வருடங்கள் கழித்து என் மனதில் ஒரு சந்தோஷம் துளிர்விட்டதை போல் உணர்ந்தேன். அதை முழுவதும் மனதில் உள்வாங்கிக் கொள்வதற்குள் என் மகள் எல்லாவற்றையும் கெடுத்து விட்டாள். என் சந்தோஷம் கெட்டது பெரிதில்லை. இப்பொழுது மிகப் பெரிய பிரச்சினையை வேறு உருவாக்கி விட்டாள்’ என்றாள்.
விந்தியாவுக்கும், அந்த அதிகாரிக்கும் இடையே அலுவலகத்தில் ஏற்பட்ட பழக்கம் வீடு வரை பின்தொடர்ந்திருக்கிறது. இருவரும் அடிக்கடி போனில் பேசியும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தங்களுக்குள் நெருக்கத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.
‘அந்த அதிகாரி எனக்கு அனுப்பி இருந்த மெசேஜை என் மகள் பார்த்து விட்டாள். அதை என் கணவருக்கு தெரியப்படுத்தி எங்களுக்குள் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விட்டாள். அத்துடன் அந்த அதிகாரிக்கு போன் செய்து அவரை மிக கடுமையாக திட்டி விட்டாள். அதோடு அவருடைய மனைவிக்கும் இந்த விஷயத்தை தெரியப்படுத்தி விட்டாள். இப்பொழுது அவர் வீட்டிலும் பிரச்சினையாகி விட்டது’’ என்றார்.
‘தான் நடந்து கொண்ட விதம் தவறு என்பதை விட தன் மகளால்தான் இவ்வளவு பெரிய பூதாகரம் வெடித்து விட்டது’ என்பது போல் விந்தியா பேச்சு அமைந்தது.
‘எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த அதிகாரிக்கும், எனக்கும் இருந்த நெருக்கம் நிரந்தரமற்றது என்பது இருவருக்குமே நன்றாகவே தெரியும். நிச்சயம் எங்கள் இருவருடைய குடும்பங்களையும் எந்த விதத்திலும் பாதிக்காது என்று நினைத்திருந்தோம். ஆனால் இப்பொழுது என் மகளால் எல்லாமே பிரச்சினையாகி விட்டது’ என்று கலங்கினாள்.
அவருடைய மகளை அழைத்துப் பேசினேன்.
‘ஏன் இப்படி செய்தாய்?’ என்று கேட்டேன்.
‘என் தாயை ஏனோ எனக்கு பிடிக்காமல் போய்விட்டது. எப்படியாவது அவரை மாட்டி விட வேண்டும் என்று காத்திருந்தேன். இப்பொழுது தான் சந்தர்ப்பம் கிடைத்தது’ என்று சர்வ சாதாரணமாக சொன்னாள்.
‘ஒரு தவறு நடந்திருப்பது உண்மைதான். ஆனால் அதை இப்படி பெரிதுபடுத்தி இத்தனை பேர் வாழ்க்கையை பாதிக்க செய்து விட்டாயே? முதலில் நீ உன் தாயை கண்டித்திருக்கலாம். அப்பாவிடம் சொல்லி விடுவேன் என்று பயமுறுத்தியும் இருக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டு இப்படி பல பேர் வாழ்க்கையில் மாற்ற முடியாத பிரச்சினைகளை உருவாக்குவது எவ்வளவு பெரிய தவறு என்பது உனக்கு தெரியவில்லையா?. ஒருவர் மீது நீ கொண்ட கோபத்தால் எத்தனை பேரின் நிம்மதி தொலைந்து போய் இருக்கிறது’ என்பதை அவளுக்கு விளக்கினேன்.
தொடர்ந்து அவளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டது.
அதன்பிறகு தாயின் மீது அவளுக்கு இருந்த கோபம் படிப்படியாக குறைந்தது. தன் தவறை உணர்ந்தாள். தன் செயலுக்காக வருந்தினாள்.
விந்தியாவும் தானும் தவறு செய்து இருக்கிறேன் என்று கண்கலங்கினார்.
இப்போது தாயும் மகளும் அன்புடனும், நட்புடனும் இருக்கிறார்கள்.
வளர்ந்த பிள்ளைகள் முன்பு, தங்கள்நடவடிக்கைகள் குறை சொல்ல முடியாத வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது பெற்றோருடைய கடமையாகும்.
–விஜயலட்சுமி பந்தையன்.
தினத்தந்தி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள்
இதை குறித்த உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்!
இம்மாதிரி ஒரிரு சம்பவங்களால் தான் ஆண் பெண் நட்பு என்றாலே அதில் களங்கமும் கள்ளமும் உண்டெனும் புரிதல் அதிகமாகின்றதோ?ஆணோ பெண்ணோ தனித்தனி பிரைவசி அவசியம். அந்த பிரைவசியை பயன் படுத்துகின்றோம் எனும் பெயரில் தம்பெயரையே கெடுத்து கொள்ளும் பெண்களை என்ன சொல்வது?
22 வயதில் மகளை வைத்த்திருக்கும் தாய்க்கு இதெல்லாம் தேவை தானா?

இவையனைத்தும் மனமுதிர்ச்சியின் வெளிப்பாடே காரணம் ஆகும். இருவருமே தவறிழைத்தவர்கள் தான். இருவருக்குமே கவுன்சிலிங் தேவை தான்.
வாழ்க்கையில் இதுபோன்ற சிக்கல்கள் நிறைந்த விசயங்கள் நிறைய உண்டு. மனமுதிர்ச்சியற்ற யாராவது ஒருவரால் அந்த குடும்பமே அவதிப்படுவதை நான் என் சொந்த அனுபவத்திலேயே பார்த்திருக்கிறேன்.
அருமையான பகிர்வு நிஷா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» பெற்ற தாயை கவனிச்சிக்கிறதும் சுயநலம்தான்..!!
» 41 வருடங்களின் பின்னர் தாயை கண்டுபிடித்த மகள் _
» பெற்ற தாயை அடித்துக் கொலை செய்த மகன்
» பெற்ற தாயை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக சுயேச்சை வேட்பாளர் கைது
» பெற்ற தாயை நடு வீதியில் அனாதரவாக இறக்கிவிட்டு செல்லும் பிள்ளை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum