Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...by rammalar Tue 14 Jan 2025 - 14:08
» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44
» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45
» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44
» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48
» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08
» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06
» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48
» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41
» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39
» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38
» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36
» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35
» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01
» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21
» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10
» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34
» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15
» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00
» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42
» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10
» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17
» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47
» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57
» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29
» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
அரிசியில் அலட்சியம் வேண்டாம்!
Page 1 of 1
அரிசியில் அலட்சியம் வேண்டாம்!
அரிசி... உலகில் 60 சதவிகிதத்துக்கும் மேலானோரின் பசி தீர்க்கும் ஜீவ நாடி. தமிழ் மக்களின் பிரதான உணவுப்பொருள் என்பதோடு, சடங்கு சம்பிரதாயங்களையும் தொட்டு கலாசாரத்தோடு ஒன்றிப்போயிருக்கும் உணவுப் பொருள்!
மேய்ச்சல் சமூகத்திலிருந்து உற்பத்திச் சமூகமாக மாறி விவசாயம் புரிந்த போது பயிரிடப்பட்டது நெல்தான். இப்படியாக தன்னகத்தே அளப்பரிய கலாசாரம் மற்றும் பண்பாட்டு அடையாளத்தைக் கொண்டிருக்கும் அரிசி, நாகரிகவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த நூற்றாண்டு மனிதர்களின் உச்சபட்ச நுகர்வுக் கலாசாரத்தால் சிதைவுற்றுப் போயிருக்கிறது. ஆக்கப்பூர்வமான மாற்றத்தின் பெயரே புரட்சி. ஆனால், பசுமைப் புரட்சி விளைவித்ததோ நெற்பயிருக்கும் அது சார்ந்த பல்லுயிர்ச் சூழலுக்குமான சீர்குலைவு.
ஆயிரக்கணக்கான நெல் ரகங்களை அழித்ததும், எல்லோரையும் நோயாளிகளாக்கியதும்தான் பசுமைப் புரட்சி நிகழ்த்திய சாதனை என்பது இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது. ‘‘இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடி டன் ரசாயன உரங்களும், 1 லட்சம் டன் பூச்சிக்கொல்லிகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன. உரங்களின் பயன்பாட்டில் முதலாவது இடத்தில் பஞ்சாப்பும், அடுத்த இடத்தில் தமிழ்நாடும் இருக்கின்றன. தமிழ் நாட்டில் குறிப்பாக கொங்கு மண்டலப் பகுதிகளில் 5 மடங்கு அதிக உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Chlorpyrifos மற்றும் Cypermethrin ஆகிய இரு பூச்சிக்கொல்லிகளே இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுபவை. Chlorpyrifos பூச்சிக்கொல்லி யானது எறும்பு, கரப்பான்பூச்சிகளை கொல்வ தற்காகப் பயன்படுத்தப்பட்டது. இதிலுள்ள அதிக நச்சுத்தன்மை காரணமாக, 2001ல், அமெரிக்கா இதை தடை செய்தது. கர்ப்பிணிகளுக்கு கர்ப்பம் கலைதல், குறைப்பிரசவம், நோய்த் தொற்று ஆகியவற்றையும், பொதுவானதாக மனச்சோர்வு, மனச்சிக்கல், தூக்கக் குறைபாடுகள், பாலியல் குறைபாடுகள், மூச்சிரைப்பு, நுரையீரல் புற்றுநோய், நரம்பு மண்டல நோய்கள், குமட்டல், வாந்தி, பேதி, பக்கவாதம், தசைச் செயலிழப்பு ஆகியவற்றையும் இப்பூச்சிக் கொல்லி ஏற்படுத்துகிறது.
இது நீர்நிலைகளில் கலக்கும்போது மீன், தேனீக்கள், ஆடு, மாடு ஆகிய உயிரினங்களிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. Cypermethrin பூச்சிக்கொல்லி நரம்பு மண்டலத்தையே நச்சுப்படுத்தக்கூடும். எறும்பு, கரப்பான் பூச்சி சாக்பீஸ்களிலும் இப்பூச்சிக்கொல்லி உள்ளது. தலைவலி, வாந்தி, மூச்சுத்திணறல், வலிப்பு நோய், ரத்த நரம்புகளை அழித்தல் ஆகிய விளைவு களை இது ஏற்படுத்தும். ரசாயன உரங்களான யூரியா, பொட்டாஷ் போன்றவை சிறுநீரகக் கோளாறு, வயிற்று உபாதைகள், பருமன், ஹார்மோன் இயக்கக் கோளாறுகளை ஏற்படுத்தும். புற்றுநோய்கள் அதிகரித்ததற்கான முக்கிய காரணம் ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகளும்தான்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அரிசியில் அலட்சியம் வேண்டாம்!
உரப் பயன்பாட்டில் முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாப் மாநிலம்தான் புற்றுநோய் எண்ணிக்கையிலும் முதலிடம் வகிக்கிறது. அங்கு குடும்பத்துக்கு ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காரணம் நச்சு உரம் கொண்டு விளைவிக்கப்பட்ட பாஸ்மதி அரிசி பயன்பாடு. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் புற்றுநோய் பாதிப்பு அபரிமிதமாக உயர்ந்துள்ளது’’ என்கிறார் சித்த வர்ம மருத்துவரும் சமூக ஆர்வலருமான பு.மா.சரவணன்செயற்கை ரசாயனங்களைப் பயன்படுத்தி அரிசி விளைவிப்பது ஒரு புறமென்றால்,
அரிசியே செயற்கையாக தயாரிக்கப்படுகிறது என்பது அடுத்த அதிர்ச்சி!
உலகச் சந்தையில் எந்த ஒரு பொருள் அறிமுகமானாலும், அதே போன்று போலியைத் தயாரித்து வெளியிடுவதில் முதன்மையான நாடு சீனா. சில காலம் முன் தமிழக சந்தையில் சீன மொபைல்களின் ஆதிக்கம் இருந்ததை அறிவோம். அடுத்த அதிரடியாக பிளாஸ்டிக் அரிசியைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது அந்நாடு. 2011ல், ஒரு கொரிய பத்திரிகை, சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் அரிசி சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், சாதாரண அரிசியைக் காட்டிலும் குறைந்த முதலீட்டில் கிடைப்பதால் வணிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
உருளைக்கிழங்கு, பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சில வகை பசைகளைப் பயன்படுத்தியே இந்த அரிசி தயாரிக்கப்படுகிறது. இந்த அரிசி சமைக்கப்பட்ட பிறகும் கூட கல்லைப் போன்று கெட்டித் தன்மையுடனேயே இருக்கும். மூன்று கிண்ணம் பிளாஸ்டிக் அரிசியை உட்கொள்வது இரண்டு பாலிதீன் பைகளை சாப்பிடுவதற்குச் சமமானது. இந்த அரிசி கூடிய விரைவில் இந்தியாவுக்குள் நுழைய இருக்கிறது. கண்ணில் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும் அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்லும் நமக்கு அரிசி குறித்தான சரியான புரிதல் இல்லை. முதலில் நமது பண்டைய உணவு முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். நெல் பற்றிய ஆய்வாளரும் ‘நமது நெல்லைக் காப்போம்’ பிரசாரம் மூலம் பாரம்பரிய அரிசி ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் இருப்பவருமான ‘நெல்’ ஜெயராமனிடம் நமது பாரம்பரிய அரிசிகள் பற்றிக் கேட்டோம்.
“ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட பிணைப்பைக் கொண்டதுதான் இயற்கை என்பதற்கு கண் முன் நிற்கும் சாட்சியம் விளைநிலங்கள்தான். விளைநிலங்களில் இருக்கும் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்ன பறவைகள் வரும். பறவைகளின் எச்சம் மண்ணுக்கு உரமாகும். ‘அடி காட்ல, நடு மாட்ல, நுனி வீட்ல’ என்கிற பழமொழியை நம்மாழ்வார் பெரும்பாலான கூட்டங்களில் சொல்வார். ஐந்தடி வரை வளர்ந்திருக்கும் நெற்கதிரை அறுவடை செய்து, அடியில் வைக்கோலை விட்டு விடுவார்கள். அது மண்ணுக்கு உணவாக இருந்தது. அறுவடை செய்த கதிரை அடித்து நெல்லை எடுத்துக்கொண்டு வைக்கோலை மாட்டுக்குக் கொடுத்தார்கள். நெல்லை குத்தி அரிசியைப் பிரித்தெடுத்து உமியை மாட்டுக்குக் கொடுத்தார்கள். மாடு அதனை உண்டு விட்டு போடும் சாணம் மண்ணுக்கு உரமானது. இப்படியாக விளைநிலங்களில் ஒரு உயிர்ச்சூழல் நிலவியது.

அரிசி என்பது உணவுப்பொருள் மட்டுமல்ல... பிறப்பு முதல் இறப்பு வரையிலும் தமிழர் வாழ்வின் மங்கல, அமங்கல நிகழ்வுகளில் அரிசியும் அங்கம் வகிக்கிறது. மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருங்குருவை, காட்டுயானம், குழியடிச்சான், குள்ளங்கார் என 10 ஆயிரத்துக்கும் அதிக நெல் ரகங்களை நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றார்கள். நமது பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் அதிக ஊட்டச்சத்து கொண்டதாகவும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் விளங்கின. இவற்றுள் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது மாப்பிள்ளை சம்பா. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உரிய நெல். இளைஞர்களை முறுக்கேற்றும் சக்தி கொண்டிருப்பதால் இந்தப் பெயர். மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து வடித்து, அதன் நீராகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் உட்கொண்டு வந்தால், எப்படிப்பட்ட நோயும் குணமாகும் என்பார்கள்.
இப்படியாக ஒவ்வொரு ரகத்துக்கும் தனித்துவமான மருத்துவ குணம் இருப்பது போல, இவை இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய வலுவுள்ளவை என்பதும் குறிப்பிட வேண்டியது. பசுமைப் புரட்சிக்குப் பின்னரான தலைகீழ் மாற்றங்களின் விளைவு பத்தாயிரத்துக்கும் அதிக பாரம்பரிய நெல் ரகங்களை பத்துக்குள் அடக்கி விட்டது. பெருகி வரும் நகர்மய சூழல் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயப் பரப்பை சுருக்கிக் கொண்டே வருகிறது. நமது பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விளைவிப்பதன் மூலம் நோயற்ற வாழ்வுக்கு அடிக்கோடிடலாம்’’ என்கிறார் ஜெயராமன். இயற்கை என்பது தன்னைத்தானே விளைவித்துக் கொள்ளும் என்பதுவே இயற்கை விவசாயத்தின் அடிப்படை. உணவு உற்பத்திப் பெருக்கத்துக்காக நடத்தப்பட்ட பசுமைப்புரட்சியில் கொண்டு வரப்பட்ட ரசாயன உரங்கள் நம் மண்ணின் உயிர்த் தன்மையை கொன்று தின்றன.
உண்ணும் உணவை விஷமாக்கி பற்பல நோய்களுக்கு மக்களைத் தள்ளின. இதன் பின்னரே இயற்கை விவசாயத்தின் மீதான அதிர்வலைகள் மக்களிடையே ஏற்பட்டு இயற்கைக்கு திரும்புவோம் என்கிற முழக்கம் தீவிரமாக எதிரொலிக்கிறது. பசுமைப்புரட்சி ஏற்படுத்திய வடுக்களைப் பற்றி விவரிக்கிறார் ‘பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்’பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து.“உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு நெல் மற்றும் கோதுமை உற்பத்தியைப் பெருக்குவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் பசுமைப் புரட்சி. இந்தப் புரட்சியே அவசரத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு முடிவு தான். ஏனென்றால் 1943ம் ஆண்டு ஏற்பட்ட வங்காளப் பஞ்சம் ஏற்படுத்திய அச்சுறுத்தலே இந்த அவசர முடிவுக்குக் காரணமாக இருந்தது. வங்காளப் பஞ்சம் ஏற்பட்ட அதே ஆண்டில் இந்தியாவில் இருந்து அரிசி உள்பட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான சான்றுகள் இருக்கின்றன.
உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றாலும் இயற்கை விவசாயத்தின் மூலம் அது சாத்தியமே. அதிக விளைச்சலைக் கொடுக்கும் குறிப்பிட்ட 10 ரகங்களுக்குள் மட்டுமே விவசாயம் சுருக்கப்பட்டு விட்டதால் மருத்துவ குணம் வாய்ந்த, இயற்கைச் சீற்றங்களைத் தாங்கக்கூடிய ரகங்கள் எல்லாம் மறுக்கப்பட்டு விட்டன. நெல் உற்பத்தி வணிகமயத்துக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் சிறுதானியங்களான ராகி, கம்பு, சாமை, தினை ஆகியவற்றின் உற்பத்தி வெகுவாகக் குறைந்து விட்டது. பல விதமான பயிர்களை நடவு செய்து வந்த மக்களை கவர்ச்சித் திட்டங்கள் மூலமாக நெல்லைப் பயிரிட வைத்த நிகழ்வுகளும் நடந்தன. நமது மண் ரசாயன உரங்களால் உயிர்த்தன்மை இழந்து நிற்கிறது. அதற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும். இயற்கைக்குத் திரும்பி உயிரி பண்ணையம் மற்றும் பயிர் பண்ணையத்தை முன்னிறுத்தி இயற்கையான வழியில் உணவை உற்பத்தி செய்தலே உண்மையான பசுமைப் புரட்சி. சிக்கிமில் நூறு சதவிகிதம் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது.
கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், குஜராத் மாநிலங்களில் இயற்கை விவசாயம் பெரும்பான்மையாக நடைபெறுகிறது. பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களில் அதற்கான திட்டங்கள் நடைபெறுகின்றன. ஆந்திராவில் அதி தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லிகளை தவிர்த்த விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இடுபொருள் செலவு குறைந்து நல்ல விளைச்சலும் கிடைப்பதால் நகர்ப்புறங்களை நோக்கி நகர்ந்த மக்கள் இப்போது கிராமங்களுக்கே திரும்பி ஆர்வத்துடன் விவசாயம் புரிகின்றனர். ஆந்திராவில் இன்று 30 லட்சம் ஏக்கரில் பூச்சிக்கொல்லியற்ற விவசாயம்மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்கிறார் அனந்து.அரிசியின் மருத்துவ மகத்துவம் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்...

‘’Rice Bible என்ற நூலில் ‘இந்தியாதான் அரிசியின் தாயகம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் அரிசி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.ஆர்.ஆர்.ஐ-யின் தலைவர் ரிச்சாரியா, இந்திய அளவில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வகையான அரிசி ரகங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அரிசி உற்பத்திக்கு இவ்வளவு சிறப்புகள் பெற்றிருப்பது ஒருபுறமிருந்தாலும், நம் வெப்ப மண்டல நாட்டுக்கு ஏற்ற உணவு அரிசிதான். ‘அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் பருத்து விடும்... சர்க்கரை நோய் கூட வரலாம்’ என்கிற தவறான எண்ணத்தை மனதில் கொண்டு அரிசியை தவிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
அரிசி மீதான இது போன்ற பார்வையை முதலில் விட்டொழிக்க வேண்டும். அரிசியைத் தவிர்ப்பது நம் உடல்நலனுக்கு ஏற்றதல்ல. அரிசி சாப்பிடுவதால் பருமன் ஏற்படும் என்பது தவறான கருத்து. பருமனுக்கு மூலக்காரணம் உடல் உழைப்பு இல்லாததுதானே ஒழிய அரிசி அல்ல. ‘நல்ல நீரிழிவை போக்குங்கான் மெல்ல பசியளிக்கும் மணிச்சம்பா’ என்று சித்த மருத்துவத்தில் ஒரு மேற்கோள் உள்ளது. நீரிழிவைப் போக்கக்கூடிய தன்மை சில ரக அரிசிகளுக்கு இருக்கிறது. நமது முன்னோர் அரிசியை உணவாக உட்கொண்டுதான் திடகாத்திரமாகவும் அதிக ஆயுளோடும் வாழ்ந்தார்கள். எந்த நோய்களும் தாக்காத அளவிலான எதிர்ப்பு சக்தியை அரிசியிலிருந்தும் தொடு உணவான காய்கறிகளிலிருந்தும் பெற்றார்கள். இன்றைக்கு நம்மிடம் நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லை, அதிக ஆயுளும் இல்லை என்பதற்கு காரணம் நாம் உட்கொள்ளும் எதுவுமே இயற்கையில்லை என்பதுதான்.
ரசாயன உரங்களால் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களில் ஒரு போதும் உயிர்த் தன்மை இருக்காது. காய்ச்சல், தலைவலி போல புற்றுநோய் மலிந்து கிடக்கிறது. முன்பெல்லாம் ‘பணக்கார வியாதி’ என்றழைக்கப்பட்ட ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயப் பிரச்னைகள் இன்று அடித்தட்டு மக்களுக்கும் இருப்பதற்கு இதுவே காரணம். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மூலம் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இயற்கை அங்காடிகளில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசி, காய்கறிகள் கிடைக்கின்றன அவற்றை உட்கொள்ளலாம்.
அரிசியிலும் கைக்குத்தல் அரிசியே சிறந்தது. இயந்திரத்தின் மூலம் உமி நீக்கப்படும்போது உமியோடு சேர்த்து அரிசியின் மேற்புறத்தில் இருக்கும் விட்டமின் பி சத்தும் நீக்கப்பட்டு சத்தற்ற அரிசியே கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசி Antioxidant ஆகவும் செயல்படுகிறது. அரிசியை அரைத்து மாவாக்கி இட்லி தோசையாக உட்கொள்வதை விட, புழுங்கல் அரிசியைச் சமைத்து உட்கொள்வதே நல்லது. ஏனெனில் புழுங்கல் அரிசியில் சர்க்கரை அளவு மிகவும் குறைவு’’ என்கிறார் கு.சிவராமன்.‘மருந்தை உணவாக்காதே... உணவை மருந்தாக்கு’ என்பதுதான் நமது முன்னோர் உணவுப்பழக்கம். நமது உணவில்மருந்தல்ல... விஷமே இருக்கிறது... மாற வேண்டும் எல்லாமும் இயற்கையாக.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3244

Similar topics
» மூச்சுப்பிடிப்பா? அஜீரணக் கோளாறு என அலட்சியம் வேண்டாம்!
» காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம் -தெரிந்துகொள்வோம்
» அலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்!
» குட்டீஸ் தொண்டையில புண் இருக்கா? அலட்சியம் வேண்டாம்!
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum