சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

கொழுப்புக்கட்டி (Lipoma)  Khan11

கொழுப்புக்கட்டி (Lipoma)

5 posters

Go down

கொழுப்புக்கட்டி (Lipoma)  Empty கொழுப்புக்கட்டி (Lipoma)

Post by ahmad78 Sun 22 Feb 2015 - 9:05

கொழுப்புக்கட்டி (Lipoma)  Ht3301
 
மென்மையான நம் உடலில் ஆங்காங்கே சின்னச் சின்ன கட்டிகள் உருவாகி, அப்படியே நிரந்தரமாகத் தங்கிவிட்டால் எப்படியிருக்கும்? அதிலும்  கைகளிலோ, முகத்திலோ கட்டிகள் உண்டாகிவிட்டால் நோய் படுத்தும் பாட்டைவிட, வெளியில் முகம் காட்ட முடியாத நிலைமை இன்னும்  அதிகமாக சங்கடப்படுத்தும். இந்தக் கட்டிகள் ஏன் உருவாகின்றன? என்ன சிகிச்சை? நம் சந்தேகங்களை காஸ்மெட்டிக் சர்ஜனான கிருத்திகா முன்பு  வைத்தோம்.

‘‘உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கும் தேவைக்கும் அதிகமான சக்தி கொழுப்பாக மாறுகிறது. இதில் ரத்தத்தில் சேர்கிற கொழுப்பு  கொலஸ்ட்ராலாகவும் செல்களில் சேரும் கொழுப்பு சின்னச் சின்ன கட்டிகளாகவும் உருவாகின்றன. செல்களில் சேர்ந்துகொள்ளும் இந்த கொழுப்புதான்  நம் உடலில் கட்டிகளாக உருவாகி அப்படியே நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. இந்தக் கொழுப்புக்கட்டிகளுக்கு லைப்போமா (Lipoma) என்று  பெயர். நம் உடல் முழுவதும் இருக்கும் Fat cells என்ற கொழுப்பு செல்களில் படியும் கொழுப்புக்கட்டிகள் என்பதால் இவற்றை ‘செல்களின்  தொகுப்பு’என்றும் சொல்லலாம். உடலில் பிக்மென்ட்   செல்கள் மூலம் உருவாகும் மச்சம் போலத்தான் லைப்போமாவும்.

இதனால் பொதுவாக வலி இருக்காது என்பதால் வரும் முன்னரே கண்டுபிடிக்க முடியாது. இந்தக் கட்டிகள் மிருதுவாகவும் ஓர் இடத்திலிருந்து  இன்னொரு இடத்துக்கு சிறிது நகரும் தன்மையும் கொண்டதாக இருப்பதை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம். லைப்போமா கட்டிகள் 99  சதவிகிதம் ஆபத்தில்லாதவை என்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. வயிற்றுக்குள் உருவாகும் ஒரு சதவிகிதக் கட்டிகளே புற்றுநோயாக மாறும்  அபாயம் கொண்டவை. வயிற்றுக்குள் உருவாகும் லைப்போமா மிகவும் அரிதுதான். இதுபோல வயிற்றுக்குள் கட்டிகள் உருவானால் வாந்தி, வயிற்றில்  வலி போன்ற அறிகுறிகள் தெரியும்.

இந்த லைப்போமா கட்டிகள் ஏன் உருவாகின்றன, எதனால் உருவாகின்றன என்பதற்கு, இதுவரை எந்தக் காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பருமன்  மற்றும் பரம்பரை காரணங்களால் சிலருக்கு லைப்போமா ஏற்படலாம் என்றே கணிக்க முடிகிறது. லைப்போமா கட்டிகளை அறுவைசிகிச்சை செய்ய  வேண்டும் என்று அவசியம் இல்லை. தேவையற்ற தொல்லையாக நினைப்பவர்களும், அழகு பாதிக்கிறது என்று நினைப்பவர்களும் அறுவை சிகிச்சை  செய்து கொள்ளலாம். இந்த அறுவைசிகிச்சை கட்டியின் அளவு, எந்த இடத்தில் கட்டி இருக்கிறது என்பதைப் பொறுத்து முடிவு செய்யப்படும். தழும்பு  வெளியில் தெரியாமல் இருக்க, தலை மயிர்க்கற்றைகள், காதின் பின்புறம் போன்ற மறைவான இடங்களில் சிறிய துளையை ஏற்படுத்தி  எண்டோஸ்கோப்பி மூலம் அந்தக் கட்டியை அகற்றிவிடலாம். லேசர் மூலமும் இந்தக் கட்டிகளை எளிதாக  அகற்றிவிடலாம். அதனால்  லைப்போமாவை நினைத்து சங்கடப்பட வேண்டியதில்லை!’’

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3311


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொழுப்புக்கட்டி (Lipoma)  Empty Re: கொழுப்புக்கட்டி (Lipoma)

Post by பானுஷபானா Mon 23 Feb 2015 - 14:51

NALLA THAGAVAL NANRI
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கொழுப்புக்கட்டி (Lipoma)  Empty Re: கொழுப்புக்கட்டி (Lipoma)

Post by *சம்ஸ் Tue 24 Feb 2015 - 8:32

அவசியமான பயனுள்ள தகவல் பதிவிற்கு நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொழுப்புக்கட்டி (Lipoma)  Empty Re: கொழுப்புக்கட்டி (Lipoma)

Post by kalainilaa Tue 24 Feb 2015 - 14:33

சியர்ஸ்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொழுப்புக்கட்டி (Lipoma)  Empty Re: கொழுப்புக்கட்டி (Lipoma)

Post by சே.குமார் Tue 24 Feb 2015 - 19:20

லைப்போமா கட்டிகள் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கொழுப்புக்கட்டி (Lipoma)  Empty Re: கொழுப்புக்கட்டி (Lipoma)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum