சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

சினிமா: ஆவி முதல் தாமரை வரை Khan11

சினிமா: ஆவி முதல் தாமரை வரை

Go down

சினிமா: ஆவி முதல் தாமரை வரை Empty சினிமா: ஆவி முதல் தாமரை வரை

Post by சே.குமார் Thu 26 Feb 2015 - 15:40

காதல் போயின் காதல்



ண்பர் கோவை ஆவி அவர்களின் முதல் குறும்படம் காதல் போயின் காதல், 10 நிமிட படத்திற்கான கதைத் தேர்வு சிறப்பு. கடந்த காலம் மற்றும் நிகழ்கால காட்சி எடிட்டிங்கில் கலக்கியிருக்கிறார்கள். வலை நட்புக்களால் ஷைனிங் ஸ்டார் என பட்டம் பெற்ற நாயகன் சீனுவுக்கு இரண்டு விதமான கெட்டப்புக்கள்... தனுஷ் பாணி அமுல் பேபியாய் காதலன்... வாழ்வே மாயம் கமல் போல் தாடியுடன் இன்றைய நாயகனாய்... இரண்டிலும் நன்றாகச் செய்திருக்கிறார். பாவம் நாயகி சாக்லெட் சாப்பிடும் போது இவருக்கும் கொடுத்திருக்கலாம். அமுல்பேபி அல்லவா... அதனால் பரிதாபமாய் அமர்ந்திருக்கிறார். 

நாயகி மதுவந்தி நல்ல தேர்வு. முகத்தில் உணர்ச்சிகளை அழகாகக் காட்டுகிறார். ஷைனிங்கை ஓவர்டேக் பண்ணி முதலிடத்தில் அமர்ந்து விடுகிறார் என்பதை சொல்லாமல் விடமுடியாது. நம்ம குடந்தை சரவணன் அண்ணன் காரில் வந்து கோபமாய் பேசுகிறார்... மனசருக்குள் இம்புட்டுக் கோபம் இருக்கா என்று நினைக்கத் தோன்றியது. அப்புறம் துளசிதரன் சார்... பார்க்கில் டீக்கடை வைத்திருப்பவராக... நன்றாகச் செய்திருக்கிறார்... மற்றும் அரசன் உள்ளிட்ட நண்பர்கள் ஆரம்பக் காட்சியில் வருகிறார்கள். படம் முழுவதும் வரும் ஸ்கூல்பையனின் மகன் கடைசியில் ஒரு வரி வசனம்  பேசினாலும் நச். 

ஆரம்பக் காட்சியில் நண்பர்களின் பேச்சு செயற்கையாக இருந்தது. மற்றபடி குறையொன்றும் சொல்ல முடியாத அளவுக்கு கதை நகர்த்தல் அருமை. சரவண அண்ணனின் முதல் குறும்படத்தில் இணைந்த இந்தக் குழு அதில் கொஞ்சம் சறுக்கியிருந்தது. இதில் தங்கள் தவறுகளைச் சரி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இயக்குநராய் ஜெயித்திருக்கும் ஆவிக்கு இன்னும் நிறைய வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள். சொல்ல மறந்துட்டேன்... படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் பாடலை ஆவியும் கீதா மேடமும் பாடியிருக்கிறார்கள்... அருமையான பாடல்...படத்திற்கான இணைப்பு கீழே... கண்டிப்பாக பாருங்கள்... ரசிப்பீர்கள். 




சண்டமாருதம்


வில்லன், கதாநாயகன் என இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். சரத்தின் கதைக்கு க்ரைம் நாவல் நாயகர் ராஜேஷ்குமார் திரைக்கதை, வசனம் எழுதியதால் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஓவியா, மீரா நந்தன் என இரண்டு நாயகிகள். நாயகனின் நண்பனாக, போலீஸ் ஆபிசராக வந்து வில்லனிடம் குத்துப்பட்டு சாகும் சமுத்திரக்கனி வீணடிக்கப் பட்டுள்ளார். இசை நாயகன் எஸ்.ஜே.சூர்யாவை பைத்தியம் ஆக்குவதற்காக நடக்கும் நாடகங்கள் போல இவரை ஏமாற்ற வில்லனின் நாடகங்கள். அரதப் பழசானவை. வில்லனின் நண்பனாக ராதாரவி  மற்றும் டெல்லிகணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி என நடிகர் கூட்டம். 

அட்டகாசம் செய்யும் வில்லனின் தீவிரவாத செயலை போலீஸ் அதிகாரியான நாயகன் எப்படி முறியடிக்கிறார் என்ற அரதப்பழசான கதையினை ராஜேஷ் குமாரின் அறிவியல் யுக்திகளோடும் பகவத் கீதையினை நுழைத்து ஒரு விறுவிறுப்பான படமாகக் கொடுக்க நினைத்து பழைய படம் பார்ப்பது போன்ற உணர்வை மாற்றமுடியாமல் தோற்றிருக்கிறார்கள். போலீஸாக வரும் ஓவியாவுக்கு சரத்குமாருடன் படுகவர்ச்சியாக ஒரு பாட்டு மட்டுமே... 

சினிமா: ஆவி முதல் தாமரை வரை Sandamarutham-Stills-15


படம் வெளிவருமுன்னர் சரத்குமாருடன் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறீர்களே என்று ஒரு பேட்டியின் போது கேட்கப்பட்டது. அதற்கு வில்லன் சரத்குமாரைப் பிடிக்கும் போலீஸ் ஆபீசராக நடிப்பதால் அவருடன் கவர்ச்சியாக ஒரு டான்ஸ், கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் படத்தில் திருமணம் நிச்சயம் ஆன போலீஸ் ஆபீசர் சரத்குமாருடன் இவர் ஆடுவதாக காமெடியன் இமான் அண்ணாச்சி கனவு காண்கிறார். இங்கே எங்கே வில்லனைப் பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அரதப்பழசான கதையாக இருந்தாலும் கொஞ்சம் நகைச்சுவை, எனது ஆதர்ஷ எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திரைக்கதை என படம் ஒருமுறை பார்க்கலாம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

அனேகன்


ந்தப் படத்தை அனேகமாக எல்லோரும் பார்த்திருப்பீங்க... முன் ஜென்மக் கதைகளுடன் நிகழ்கால கதையை இணைத்து அருமையான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தனுஷூக்கு நாலு விதமான கதாபாத்திரம்... அதில் 'டங்கா மாரி ஊதாரி...' காளியின் கதாபாத்திரமே முதலிடத்தில்.... மனுசன் புகுந்து விளையாண்டிருக்கிறார். நாயகியைச் சுற்றி கதை பயணிப்பது போல் படங்கள் எல்லாம் இப்போது தமிழ் சினிமாவில் வருவதில்லை. பெரும்பாலும் நாயகிகள் ஊறுகாயாக மட்டுமே வருவார்கள். ஆனால் இதில் கதை நாயகி அமைராவைச் சுற்றியே நகர்கிறது. ஆரம்பத்தில் இவருக்குப் பதிலாக வேறு நடிகையைப் போட்டிருக்கலாமோ என்று தோன்றினாலும் போகப்போக சரியான தேர்வுதான் என்று சொல்ல வைத்துவிடுகிறார். இவருக்கும் காளியின் காதலியாக வரும் ஐயராத்துப் பொண்ணு கதாபாத்திரம்தான் முதலிடம் பிடிக்கிறது. 

சினிமா: ஆவி முதல் தாமரை வரை 16_2180808g


வில்லனாக கார்த்திக், அடாவடி வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரம் இல்லை என்றாலும் நன்றாக செய்திருக்கிறார். கடைசிக் காட்சியில் தனுஷ் இவரை இமிடேட் பண்ணி வசனம்  பேசும்போது மனுசன் உண்மையிலேயே சிரிச்சிக்கிட்டு ரசிச்சிட்டாரு போல... வில்லத்தனத்துக்கு ஒரு குரூரம் வேண்டாம்... சிரிக்கிற கார்த்திக்கைப் பார்த்ததும் நமக்கு 90களின் கதாநாயகன் கார்த்திக் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறார். நானும் நகைச்சுவை நடிகன்தான் எனச் சொல்லிக் கொள்ளும் ஜெகன், வெறுப்பேற்றுகிறார். பாடல்கள் அனைத்தும் அருமை. வித்தியாசமான கதைக்களத்தில் எல்லாக் கதைகளையும் இணைத்து  இரண்டாம் உலகத்தில் செல்வ ராகவன் சொல்லத் தவறியதை எல்லாரும் புரியும்படியாகச் சொல்லி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் கே.வி. ஆனந்த். அனேகன் அருமையான படம். தனுஷூக்கு அமர்க்களமான வெற்றி.

இசை

சினிமா: ஆவி முதல் தாமரை வரை Isai-Movie-Stills-1



ரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையேயான யுத்தமே படம். ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தாலும் கதை கொஞ்சம் வித்தியாசமாகப் பயணிப்பதால் இசை ரசிக்க வைக்கிறது. பாடல்கள் நன்றாக இருக்கிறது. குஷி, வாலி கொடுத்த எஸ்.ஜே. சூர்யா இயக்குநராக தொடரும் பட்சத்தில் நல்ல படங்களைக் கொடுக்கலாம். இனியும் நாயகன் முயற்சி வேண்டாம் என்றே சொல்லத் தோன்றுகிறது. தகடு தகடு, அல்வா அமாவாசை கதாபாத்திரங்களில் வில்லத்தனம் செய்த சத்தியராஜ்க்கு இதில் அந்தளவுக்கு வில்லத்தனம் இல்லை என்றாலும் தனக்கான இடத்தை அழகாக நிரப்பியிருக்கிறார். அதுவும் கஞ்சா கருப்பிடம் இவர் செய்யும் காமெடி கலந்த வில்லத்தனம் அருமை. நாயகி நல்ல தேர்வு. படமும் போரடிக்காமல் போகிறது.

ஷமிதாப்



மிதாப் - தனுஷ் நடிப்பில் வந்த படம் 'ஷமிதாப்'. சிறுவயது முதலே சினிமாவில் நடித்து பெரியாளாக வரவேண்டும் என்ற வெறியோடு இருக்கும் வாய் முடியாத இளைஞன், அதில் வெற்றி பெற்றானா? எப்படி வெற்றி பெற்றான்? என்பதுதான் படத்தின் கதைக்களம். படம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தா படத்துக்கு விமர்சனம் எப்ப எழுதுறான் பாருங்கிற விமர்சனம் வரும். இதில் வாய் பேச முடியாத தனுஷூக்கு குரல் கொடுப்பவராக அமிதாப். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒரு ஈடுபாட்டோடு நடிக்கும் நடிகன் தனுஷ், இதில் அமிதாப்பின் குரலுக்கு அழகான முகபாவனையோடு அவர் வாய் அசைக்கும் போது ஆரம்பத்தில் தனுஷின் குரல் இல்லாமல் வித்தியாசமாகத் தெரிய, பின்னர் அந்தக் குரலும் தனுஷின் நடிப்பும் இணைந்துவிட கலக்கல்தான்... 

சினிமா: ஆவி முதல் தாமரை வரை 07-1423297192-shamitabh-s1-600


அமிதாப் - பரட்டைத் தலையுடனும் அழுக்கு உடையுடனும் சுடுகாட்டில் படுத்திருக்கும் மனிதர், குரல் கொடுக்க வந்து தன்னோட குரலால் அவனுக்கு பணமும் புகழும் கூடுதே.. என்னோட குரல் இல்லை என்றால்... என மனசுக்குள் புழுங்கி, தண்ணி, விஸ்கி பற்றி பேசி... பிரிந்து... மீண்டும் சேருகிறார். மனுசன் நடிப்பில் கலக்கியிருக்கிறார். அதுவும் இறுதிக் காட்சியில் சூப்பர்... அமிதாப்போட்டு போட்டி போட்டு நடித்திருக்கிறார் தனுஷ்... அமிதாப்பை மிஞ்சிவிட்டார் தனுஷ்... என்றெல்லாம் படம் வெளியானபோது விமர்சனங்கள் வந்தன. என்னைப் பொறுத்தவரை அனுபவஸ்தன் அமிதாப் தனது அருமையான நடிப்பால் தனுஷை பின்னுக்குத் தள்ளிவிட்டுட்டார். என்ன நடிப்பு... மனுசனுக்கு அந்த கரகரப்பான குரல்தான் பிளஸ்பாயிண்ட். 

அமிதாப், தனுஷ் என்ற நடிப்புச் சிகரங்களுக்கு இடையே கேபிள் சங்கர் அண்ணா எழுதியது போல நம்ம நடிப்புக்காரன் மகள் தனக்கான வாய்ப்பில் தோணியின் ஹெலிகாப்டர் ஷாட் விட்டிருக்கிறார். இறுதிக் காட்சியில் அமிதாப்பின் தண்ணி, விஸ்கி வசனத்தைப் பேசி அவரைத் திட்டுமிடத்தில் நன்றாகச் செய்திருக்கிறார்.பின்னணி இசையில் என்றும் ராசா நம்ம இளையராஜா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.  தமிழரான பால்கியின் இயக்கத்தில் வித்தியாசமான கதையம்சத்துடன் வெளிவந்த ஷமிதாப் அருமையான படம்.

கவிஞர் தாமரை

சினிமா: ஆவி முதல் தாமரை வரை Thamarai1


ன்னை அறிந்தால் படத்தில் எல்லாப் பாடல்களும் அருமையாக இருந்தாலும் என்னை கவர்ந்த இரண்டு பாடல்கள் 'மழை வரப் போகுதே....' மற்றும் 'உனக்கென்ன வேண்டும் சொல்லு...'. வரிகளுக்கு இடையே புரியாத வார்த்தைகளோ அர்த்தமற்ற வார்த்தைகளோ இன்றி அழகான கவிதை வரிகளைக் கொடுப்பதில் கவிஞர் தாமரைக்கு நிகர் தாமரைதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். கவிஞர் தாமரையை வாழ்த்துவோம்.



-சினிமா செய்திகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum