Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்
3 posters
Page 1 of 1
முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்
கூந்தல் வறண்டிருந்தால் உடைந்து உதிரும். கூந்தல் வறட்சிக்குப் பல காரணங்கள் உள்ளன. வறட்சியில்லாத மென்மையான கூந்தல்தான் பார்வைக்கும் அழகு. பராமரிக்கவும் எளிது. கூந்தல் வறட்சிக்கு கெமிக்கல் கலந்த சிகிச்சைகளை முயற்சி செய்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே எளிமையான வழிகளைப் பின்பற்றலாம். அப்படிச் சில வழிகள் இதோ...
1. செம்பருத்திப்பூ, இலை, பூங்கங்காய், வேப்பிலை, வெந்தயம், கற்றாழை ஆகியவற்றை கைப்பிடி அளவு எடுத்து, இடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். ஆறிய பிறகு வடிகட்டி தலைக்கு ஷாம்புவுக்கு பதில் உபயோகிக்கலாம். இந்த இயற்கை ஷாம்பு, கூந்தலின் வறட்சியை நீக்கி, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.
2. கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியையும்(நன்கு அலசி சுத்தப்படுத்தியது), செம்பருத்திப் பூக்களையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து அரைத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து தலையில் பேக் மாதிரி தடவி, 20 நிமிடங்கள் ஊறியதும், கூந்தலை அலசவும்.
3. வாழைப்பழத்தை அரைத்து தலையில் தடவி, வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் ஒத்தடம் கொடுக்கவும். 20 நிமிடம் கழித்து கூந்தலை அலசவும். இது கூந்தல் வறட்சிக்கு மிகச் சிறந்த இயற்கை ஸ்பா. எலுமிச்சைப் பழச்சாறு அல்லது கருப்பு வினிகர் கலந்த தண்ணீரில் தலையை அலசவும்.
4. முட்டையின் வெள்ளைக்கரு, பால் ஏடு இரண்டையும் ஒன்றாக கலந்து நன்கு அடித்துக் கொள்ளவும். கூந்தலை சின்னச் சின்ன பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, தடவவும். 15 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை அலசவும்.
5. ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, கூந்தலில் மசாஜ் செய்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் ஒத்தடம் கொடுத்து அலசினால் கூந்தல் வறட்சி நீங்கி, மென்மையாகும்.
6. பப்பாளியை நன்றாக கூழாக்கி, பேக் மாதிரி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு நிறைய தண்ணீர் விட்டு அலசினால், கூந்தல் பளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
7. முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் அதை அரைத்து தயிருடன் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு இயற்கை ஷாம்பு உபயோகித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் அலசவும்.
8. செம்பருத்தி, வேப்பிலை, புதினா ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். ஆறிய பிறகு இதைக் கசக்கினால் கொழ கொழவென்று வரும். அதை நன்றாக கலந்து தலையில் மண்டைப் பகுதியிலிருந்து நுனி வரை நன்கு தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு அலசவும். இதனால் தலைமுடி மிருதுவாவதுடன் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வும் நிற்கும்.
9. ஆமணக்கு எண்ணெயில், கற்றாழையின் நடுவில் இருக்கும் ஜெல்லை எடுத்து ஊற வைக்கவும். அதை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பது முடி உதிர்வு மற்றும் வறட்சிக்கு மிகச் சிறந்த மருந்தாக வேலை செய்யும்.
10. மிளகு, வெற்றிலை, கறிவேப்பிலை இந்த மூன்றையும் அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி வெது வெதுப்பான தண்ணீரல் அலசவும். பேன், பொடுகு நீங்குவதுடன் தலைமுடி பட்டு போல மாறும்.
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3198
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்
இதையெல்லாம் உங்க முடியில் செய்து பார்த்தீர்களோ சின்னக்கவுண்டரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்
செய்து பார்த்திட்டுதான் இங்கு பதிவு போட்டார்Nisha wrote:இதையெல்லாம் உங்க முடியில் செய்து பார்த்தீர்களோ சின்னக்கவுண்டரே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்
உங்க தலையில் வைத்து ஆய்வு செய்தாரோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்
அட ஆமா அது எப்படி உங்களுக்கு தெரியும்Nisha wrote:உங்க தலையில் வைத்து ஆய்வு செய்தாரோ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்
உங்க போட்டோவை அன்றும் இன்றும் என போட்டு பக்கம் பக்கமா மேற்கோள் காட்டின போது தான் தெரியும் சார்!
இந்த ஆய்வின் முடிவு எப்படின்னும் புரிந்தோம் சார்! ஹாஹா!
இந்த ஆய்வின் முடிவு எப்படின்னும் புரிந்தோம் சார்! ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்
ஒ...........அப்படியா? நானும் நல்லவேளை பயந்திட்டேன்.Nisha wrote:உங்க போட்டோவை அன்றும் இன்றும் என போட்டு பக்கம் பக்கமா மேற்கோள் காட்டின போது தான் தெரியும் சார்!
இந்த ஆய்வின் முடிவு எப்படின்னும் புரிந்தோம் சார்! ஹாஹா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பொடுகுப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சைகள்
» வயிற்று வலிக்கான சில வீட்டு சிகிச்சைகள்!!!
» காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!
» முடி உதிர்வதைத் தடுக்க வீட்டு வைத்தியம்
» முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
» வயிற்று வலிக்கான சில வீட்டு சிகிச்சைகள்!!!
» காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!
» முடி உதிர்வதைத் தடுக்க வீட்டு வைத்தியம்
» முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum