Latest topics
» கதம்பம்by rammalar Yesterday at 17:54
» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Yesterday at 17:44
» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Yesterday at 11:43
» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Yesterday at 11:37
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Yesterday at 11:33
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Yesterday at 11:32
» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Yesterday at 11:31
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 0:02
» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52
» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37
» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36
» ஆன்மீக சிந்தனை
by rammalar Sun 26 Mar 2023 - 11:57
» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34
» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32
» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20
» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19
» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18
» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17
» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16
» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13
» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12
» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08
» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29
» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20
» சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் 5 நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு
by rammalar Fri 24 Mar 2023 - 13:16
» ’கேடி-தி டெவில்’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை!
by rammalar Fri 24 Mar 2023 - 13:09
» ஜெயம் ரவியின் 32 வது படம்
by rammalar Fri 24 Mar 2023 - 13:06
» அனுஷ்காவுக்கா மானஸி பாடியி ’நோ நோ’ பாடல்
by rammalar Fri 24 Mar 2023 - 13:03
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 23 Mar 2023 - 20:00
» கொசுவைப்பற்றிய தகவல்கள்
by rammalar Thu 23 Mar 2023 - 19:43
» தினம் ஒரு மூலிகை - காவட்டம் புல்
by rammalar Wed 22 Mar 2023 - 17:17
» படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 22 Mar 2023 - 17:14
முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு
2 posters
Page 1 of 1
முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு

மூலிகை என்பது காடுகளிலும் மலைகளிலும் மட்டுமே கிடைக்க கூடியது என நினைக்கின்றனர். சாதாரணமாக நமது வீட்டு தோட்டத்திலும் வேலி ஓரங்களிலும் வளர்ந்து கிடக்கும் எண்ணற்ற தாவரங்கள் மூலிகையாக இருந்து நமது உடலை நோயில்லாமல் காத்து வருவது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. நுணவு எங்கும் நாம் பார்க்கூடிய ஒரு மூலிகை வகை தாவரம். செடியாகவும் மரமாகவும் பல்வேறு நிலப்பகுதியில் வளரக்கூடியது. எதிரடுக்கில் அமைந்த இலைகள். நாற்கோணத்தில் அமைந்துள்ள சிறு கிளைகளில் வெள்ளை நிற பூக்கள் கருப்பு நிற பழத்தையும் கொண்டது. சில இடங்களில் வெண்மை நிற பழங்கள் கொண்ட மரங்களும் உண்டு. மரத்தின் உட்புறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் மஞ்சணத்தி எனப்பெயர் பெற்றது.
இதன் துளிர் இலை, பகுப்பு, காய், பட்டை, வேர் ஆகியவை மருத்துவ பயன் கொண்டவையாகும்.
நமது உள்ளுறுப்புகளில் மிகவும் முக்கியமான கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டால் அதை தீர்க்க தனிப்பட்ட சிறப்பு மருத்துவம் உண்டு. காவி அணிந்து விரதம் இருந்தால் சரியாகி விடும் என்பார்கள். அந்த காவியுடைக்கு தயாரிக்க மஞ்சணத்தியின் பட்டையை சுடு நீரில் போட்டு அதில் வெள்ளை பருத்தி ஆடையை துவைத்து எடுத்தால் காவியுடை தயாராகி விடும். இந்த ஆடையை அணிந்திருக்கும் போது அவர்களது மூச்சு குழல் வழியாக மருத்துவ காற்று சென்று இந்த நோய்களை குணப்படுத்தும். இதன் பழத்தை எந்த வயதுடையவர்களும் உண்ணலாம். வாயுத்தொல்லையால் அவதிபடுவார்கள் தொடர்ந்து இந்த பழத்தை உண்டால் மாற்றம் ஏற்படும்.
கைக்குழந்தைகளுக்கு தலை குளித்தவுடன் நொச்சி, வெற்றிலை, ஆடாதொடை ஆகியவற்றுடன் இதன் கொழுந்தை மசிய அரைத்து வெந்நீரில் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு சுக பேதி உண்டாகி மலக்கட்டு, வாயு இல்லாமல் குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவார்கள். சளி தொல்லையும் இருக்காது. இது சிறிது உஷ்ணத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே அளவோடு பயன்படுத்த வேண்டும். இடுப்பு வலியை போக்க நுணவு இலையை மைய அரைத்து பற்றுபோட்டால் குணமாகும். இதை அடிக்கடி சிரங்கு பிடிக்கும் சிறுவர்களுக்கு சிரங்கில் தடவிவர சிரங்கு ஆறும்.
நுணவு இலைச்சாறு ஒரு பங்கும், உத்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகியவற்றின் சாறு சமமாக எடுத்து கலந்து அதில் ஒரு பங்கும் கலந்து ஆறு மாத குழந்தைக்கு 50 சொட்டும், 1 முதல் 2 வரை வயதுடைய குழந்தைகளுக்கு 15 மிலி அளவும், 3 வயதுக்கு மேல் 30 மில்லியும் மூன்று வேளை கொடுத்து வந்தால் அனைத்து மாந்தமும் தீரும். நுணவு இலை, நல்லெண்ணெய் ஒரே எடை எடுத்து அதை நன்கு காய்ச்சி அந்த கற்கத்தை உள்ளுக்குள் கொடுத்து, எண்ணெய்யை வெளியிலும் பூசி வர வெண்புள்ளி நீங்கும்.
நுணவுக்காய், உப்பு சம அளவு எடுத்து ஒரு குடுவைக்குள் வைத்து சீலை மண் செய்து 1 வரட்டியில் புடம் போட்டு கிடைக்கும் சாம்பலில் பல் துலக்கி வர சொத்தை பல், பல்லரணை நீங்கும். நுணவு தயிர் இலைகள், பழுப்பு இலை சம அளவு எடுத்து அதில் 35 கிராம் காட்டு சீரகத்தை கலந்து உரித்த தேங்காய் அளவு தயார் செய்து அந்த கலவையை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து சிறு தீயில் காய்ச்சி மெழுகு பதம் வந்தவுடன் எண்ணெய்யை பிழிந்து எடுத்து விட்டு மெழுகை சுண்டக்காய் அளவு உருட்டி வைத்து கொண்டு காலை மாலை பாலுடன் சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
வயிற்று கோளாறு, மாந்தம், மேகம், சளித்தொல்லையால் ஏற்படும் கபசுரம் ஆகியவற்றுக்கு இதன் இலை சாற்றை உள்ளுக்கு கொடுப்பார்கள். கழலை, அரையாப்பு கட்டிகளை கரைத்தல். அடிப்பட்ட வீக்கம், வாதத்தால் ஏற்படும் வீக்கங்களை போக்குவதற்கு பற்று போடுவார்கள். இத்தகையை சிறப்பு குணங்களை கொண்டதாக விளங்க கூடிய மூலிகையான நுணவு எதுதெரியுமா? வேலியெங்கும் காட்சியளிக்கும் நுணாதான். இதில் கருப்பு மற்றும் வெள்ளை என்று இரண்டு வகைகள் உண்டு. பதப்படுத்தப்பட்ட வெள்ளை நுணா சாற்றைதான் நோனி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பணத்தை கொடுத்து வாங்குகிறோம். கடவுள் கொடுத்தது கண் முன் இருக்க பணத்தை வீணாக்கி கண்டதை தேடி ஓடுகின்றோம். அதை விடுத்து முன்னோர்கள் நமக்கு காட்டிய வழியில் நுணாவை பயன்படுத்தி வாழ்வில் நலம் பெறுவோம்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3370

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு
பல ஆண்டுகளாக காணக்கிடைக்கும் ஒரு தாவரம் இது இன்றுதான் இதன் பயன்கள் பற்றி அறிய முடிந்தது நாங்கள் இந்த தாவரத்திற்கு மஞ்சணா மரம் என்றுதான் சொல்லுவோம்
இதன் அருமை பெருமை அறியத்தந்த தோழருக்கு நன்றிகள் பல
இதன் அருமை பெருமை அறியத்தந்த தோழருக்கு நன்றிகள் பல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|