சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

குழந்தைகளின் இயக்கத்திறன் குறைபாடுகள் Khan11

குழந்தைகளின் இயக்கத்திறன் குறைபாடுகள்

Go down

Sticky குழந்தைகளின் இயக்கத்திறன் குறைபாடுகள்

Post by ahmad78 on Mon 30 Mar 2015 - 13:04

குழந்தைகளின் இயக்கத்திறன் குறைபாடுகள் Ht3396

மனசே... மனசே... டாக்டர் சித்ரா அரவிந்த்

இயக்கத்திறனில் (Motor skills) குறைபாடுகள் என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளில் ஒன்று. இவ்வகைக் கோளாறு, குழந்தையின் அசைவு சார்ந்த செயல்பாடுகள் மற்றும் இயக்க ஆற்றலில் பாதிப்பு ஏற்படுத்தும். பொதுவாக இயக்கத்திறன் குறைபாடுகள் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடும். இவ்வகைக் குறைபாடுகளில், வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாடு என்பது, பொதுவாக ஒருவரின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். 

மீதமுள்ள எல்லா வகைக் கோளாறுகளும், குழந்தை வளர்ந்து 18 முதல் 20 வயது ஆகும்போது பெரும்பாலும் மறைந்து போகும். ஆனால், குழந்தைப் பருவத்திலேயே இந்தக் கோளாறு ஏற்படுவதால், குழந்தையின் பல்வேறு வளர்ச்சிகளையும் இது பாதிக்கும். அதனால் இயக்கத்திறன் குறைபாடுகளின் அறிகுறிகள், காரணிகள், தாக்கம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம். குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ள இது உதவும். இனி 6 வகை இயக்கத்திறன் குறைபாடுகள் பற்றி விரிவாக அறிவோம்.

வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாடு (Developmental Coordination Disorder)

இக்குறைபாடு குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது எனினும், 6-12 வயதுகளில்தான் பொதுவாக கண்டறியப்படுகிறது. சகவயதினருடன் ஒப்பிடுகையில், குழந்தையின் இயக்கத்திறன் ஒருங்கிணைப்பு (Coordination) வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் பலவீனமாக இருக்கும். இதனால், அக்குழந்தையின் கல்வி ஆற்றல் மற்றும் 

அன்றாட வாழ்க்கை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும். பொதுவான மருத்துவ கோளாறுகளான பெருமூளை வாதம் (Cerebral palsy), பக்கவாதம் (Hemiplegia) அல்லது தசை வலுவிழப்பு (Muscular Dystrophy) போன்றவை ஏற்படுத்தும் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பினும், இவை வெவ்வேறு வித கோளாறுகளாகும். இவ்வகை குறைபாடு, அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability), மனஇறுக்க வகை சீர்கேடுகள் (Autism spectrum disorders), கவனப்பற்றாக்குறை (Attention deficit) குறைபாடு, கற்றல் குறைபாடு (எல்.டி.) போன்ற பிற நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகளுடன் சேர்ந்தும் காணப்படலாம்.

வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறை பாடுள்ள குழந்தையின் அறிகுறிகள்?

உடல் அசைவுகளில் நேர்த்தியற்ற தன்மை (Clumsy),  நிலையற்ற நடை, படிக்கட்டில் நடப்பதில் சிக்கல், அடிக்கடி கீழே விழுவது...
கல்வி சம்பந்தப்பட்ட வேலைகளை நேரத்துக்கு முடிப்பதில் சிரமம்...
இயக்கத்திறன் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்வதற்குக் கூடுதல் முயற்சி மற்றும் கவனம் தேவைப்படுதல்...
தினசரி செயல்பாடுகளான உடை    அணிதல், சாப்பிடுதல், அலங்காரம் செய்து கொள்வதில் சிரமம்...
விளையாட்டு மைதானத்தில் சிரமப் படுதல், விளையாட்டை தவிர்ப்பது/ குறைந்த ஈடுபாடு காட்டுவது...
புது இயக்கத்திறன்களை கற்றுக்கொள்வதில் சிரமம். எத்தனை முறை ஒரு இயக்கத்திறன் சம்பந்தப்பட்ட செயலை செய்தாலும் (பந்தைப் பிடிப்பது), மறுமுறை செய்யும் போது புதிது போலவே இருப்பது...
அமர்ந்திருக்கும் போதோ, பந்தை பிடிப்பது / தூக்கிப் போடும் போதோ, வித்தியாசமாக நேர்த்தியற்ற நிலையில் காணப்படுதல் (Clumsy/awkWard posture)...
9 முதல் 12 மாதங்களில் பால் குடிப்பதிலும் உணவை விழுங்குவதிலும் சிக்கல்...
மொத்த இயக்கத்திறன் (குதிப்பது, ஒரு காலில் நிற்பது...) மற்றும் நேர்த்தியான இயக்கத்திறன்களில் (எழுதுவது, ஷூ லேஸ் கட்டுவது...) சிரமம், இயக்கத்திறன் வளர்மைல்கற்களை அடைவதில் தாமதம்...

காரணிகள்?

வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாடு ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்றும் கண்டறியப்படவில்லை. பரம்பரை, மரபு, நாள்பட்ட நோய்/காயம், குறைப்பிரசவம், கர்ப்பத்தின் போது சத்துப் பற்றாக்குறை போன்றவை பொதுவான காரணிகளாகக் கூறப்படுகின்றன.

ஏன் இப்படி?

இக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மாறுபட்டு இருப்பதால் புது இயக்கத்திறன்களை கற்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு செயலை செய்வதற்கு வேண்டிய மூளை செயல்பாட்டு உத்திகளான உணர்தல், கிரகித்தல், திட்டமிடுதல், அளவிடுதல், இயக்குதல் போன்றவற்றை ஒருங்கிணைப்பதில் கோர்வை இல்லாததால் அவர்களின் இயக்கத்திறனில் நேர்த்தியின்மை ஏற்படுகிறது.

விளைவுகள்?

வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாடு உள்ள குழந்தை தன் வயதொத்த குழந்தை செய்யும் தினசரி வேலைகளைக் கூட செய்ய முடியாமல் திணறக்கூடும். கல்வியில் செயல்திறன் பாதித்து, தன்னம்பிக்கை இழக்கவும் நேரிடும். குழந்தைகள் மிகவும் விரும்பும் விளையாட்டில் கூட பங்கேற்க முடியாமல் போவதால், ஏமாற்றமும் வருத்தமும் ஏற்படும். உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் பருமனாகவும் காணப்படுவார்கள். நேர்த்தியற்ற செயல்பாடுகளால் மற்றவரின் கேலிக்கும் ஆளாவார்கள். இதனால், இவர்களின் சமூகத்திறன், கல்வித்திறன் பாதிக்கப்பட்டு, உணர்ச்சி மற்றும் நடத்தை பிரச்னைகளுக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படுகிறது.

சிகிச்சை?

வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாட்டை முழுவதுமாக குணப்படுத்த இயலாது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், தகுந்த சிகிச்சை அளித்து நிலையை மேம்படுத்தலாம். பொதுவாக, பிசியோதெரபி மற்றும் தொழில் முறை சிகிச்சையே (Occupational therapy) அளிக்கப்படுகிறது. இயக்கத்திறன்களைக் கற்பதற்கு இடைவிடாத பயிற்சியும், தோல்வியை பொறுத்துக் கொள்ளும் மனப்பான்மையும் மிகவும் அவசியம். தினசரி வாழ்வில், பெற்றோரும் ஆசிரியரும் பாதிக்கப்பட்ட குழந்தை புதுத் திறன்களை கற்கும் போது ஊக்கம் கொடுப்பது மிக அவசியம். ஒவ்வொரு குழந்தைக்கும் இயக்கத்திறன் பிரச்னை ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால், குழந்தையின் பிரச்னைக்கேற்ப, அதைச் சமாளிக்கும் விதத்தில் பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த வழிகாட்டல் மூலம் நிறைவான வாழ்வுக்கு வேண்டிய புதிய உத்திகளை குழந்தைகள் கற்றுப் பலன் பெறலாம்.    


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் இயக்கத்திறன் குறைபாடுகள்

Post by ahmad78 on Mon 30 Mar 2015 - 13:04

ஒரே மாதிரியான அசைவுக் குறைபாடு (Stereotypic Movement Disorder)

இந்த வகை மோட்டார் திறன் கோளாறு உள்ளவர்கள் தங்களையே காயப்படுத்தும் தொடர்ச்சியான, காரணமில்லாத அசைவுகள் / செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இவ்வகை குறைபாடு, பாதிக்கப்பட்டவர்களின் பள்ளி, வேலை மற்றும் விளையாட்டு சம்பந்தப்பட்ட தினசரி செயல்பாடுகளிலும் இடைஞ்சல் ஏற்படுத்தும். இந்தக் குறைபாடும் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடும். இது ஒருவருக்கு இருக்கக்கூடிய வேறு கடுமையான மருத்துவ பிரச்னையை பறைசாற்றும் அறிகுறியாகவும் அமையக்கூடும். அறிவுத்திறன் குறைபாடு (IntellectualDisability) பாதிக்கப்பட்டவர்களிடத்தில்இக்குறைபாடும் அதிகம் காணப்படுகிறது. 

அறிகுறிகள்?

தலையை முட்டிக் கொள்வது...
முன்னும் பின்னும் நடப்பது...
கைகளை அவசியமின்றி அசைப்பது / ஆட்டுவது...
நகத்தைக் கடிப்பது (ரத்தம் வரும் வரை)...
தன்னைத் தானே கடிப்பது...
தன்னைத் தானே அடித்துக் கொள்வது...
கண்ணைச் சுரண்டுவது...

இவ்வித அறிகுறிகளில், ஒன்றோ,  அதற்கும் அதிகமாகவோ காணப்படலாம். இந்த அசைவுகள் மெதுவாகவும் இருக்கலாம்... வேகமாகவும் இருக்கலாம். அறிகுறிகள் தீவிரமாகவும் இருக்கலாம்... மிதமாகவும் காணப்படலாம். இவ்வித அசைவுகள் அவர்களுக்கு சில நேரங்களில் இன்பமளிக்கலாம். பொதுவாக, டென்ஷன், விரக்தி அல்லது சலிப்பு உண்டாகும்போது அறிகுறிகள் அதிகரிக்கும். கைக்குழந்தைகளிடம் சாதாரணமாக காணப்படும் இவ்வித அறிகுறிகள், பள்ளிப்பருவத்திலும் தொடர்ந்தால், அது ஒரே மாதிரியான அசைவு குறைபாடாக இருக்கலாம்.

இதுபோன்ற அறிகுறிகள் உடல்நல/மனநலக் கோளாறு (ஆட்டிசம், பதற்றக் கோளாறுகள்), போதை மருந்து, விபத்தினால் ஏற்பட்ட தலைக்காயம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமும் காணப்படும். குழப்பமின்றி கண்டறிய, மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்வது நல்லது. 

சிகிச்சை?

இவ்விதக் கோளாறுக்கான குறிப்பிட்ட காரணம் சரிவர கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரே மாதிரியான அசைவு குறைபாடுக்கான சிகிச்சையானது, அதன் காரணிகள், தீவிரம், பாதிக்கப்பட்டவரின் வயது மற்றும் அறிகுறிகளை பொறுத்தே முடிவு செய்யப்படும். இக்கோளாறு பாதிக்கப்பட்டவரின் தினசரி செயல்பாட்டை தாக்கும்போது (வேதனை, தனிமைப்படுத்தப்படுதல், உடல் காயம்) அதற்கு சிகிச்சை அவசியமாகிறது.

சுய காயத்தை தடுக்க, சில பாதுகாப்பான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை தரப்படும். முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும், சைக்கோதெரபி இந்தக் கோளாறின் தீவிரத்தை குறைக்கும். இளமைப் பருவத்தில் அதிகமாக காணப்படும் இவ்வித கோளாறு, சில நேரங்களில் தானாகவே மறைந்தும் விடும். இதை சரியாக கண்டறிவதன் மூலம், சவால்களை சரிவர சமாளித்து, நிறைவான வாழ்க்கையை வாழலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் இயக்கத்திறன் குறைபாடுகள்

Post by ahmad78 on Mon 30 Mar 2015 - 13:05

டூரெட்ஸ் குறைபாடு (Tourette’s Disorder)

இந்த வகை நடுக்க குறைபாடும் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடும். இதனால் பாதிக்கப்பட்டவர், காரணமற்ற வேகமான திடீர் அசைவுகள் அல்லது விரும்பத்தகாத ஒலிகளை தன்னிச்சையின்றி / தவிர்க்க முடியாமல் ஏற்படுத்துவார். பொதுவாக, இவ்வித தன்னிச்சையற்ற நடுக்கங்கள் (Tics) ஒரு நேரத்தில், ஒரு நொடிக்கு மேல் நீடிக்காது. பல்வேறு தவிர்க்க முடியாத அசைவுகள் (Motor tics) மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட குரல் சார்ந்த நடுக்கங்கள் (Vocal tics) ஒருவரிடத்தில் காணப்படலாம்.

இந்தக் கோளாறின் அறிகுறிகள், 2 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்களிடம் பொதுவாகக் காணப்படும். இது பெண்களைக் காட்டிலும், ஆண்களிடமே மிக அதிகமாக காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் சமூக வாழ்க்கை மற்றும் தினசரி செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஒரு வருடத்துக்கு மேல், தொடர்ச்சியாகவோ/அவ்வப்போதோ ஒருவருக்கு இவ்வித அறிகுறிகள் காணப்பட்டால் டூரெட்ஸ் குறைபாடாக இருக்கலாம். இவ்வித அறிகுறிகள், மருந்தின் காரணமாகவோ, வேறு நோயின் வெளிப்பாட்டாலோ ஏற்பட்டிருந்தால் அது டூரெட்ஸ் குறைபாடு அல்ல.

சில நேரங்களில், டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்களுக்கு கவன பற்றாக்குறை/மிகை இயக்க கோளாறு (ADHD) அல்லது மனதை அலைக்கழிக்கும் சீர்கேடு (Obsessive Compulsive Disorder) போன்ற மனநல கோளாறும் சேர்ந்தே காணப்படும். 

அறிகுறிகள்?


எளிதான நடுக்கங்கள், திடீரென்று, குறுகிய காலம் தொடர்ச்சியாக ஏற்படும் சிறு தசை அசைவுகள் மற்றும் சிறிய நோக்கமில்லாத இயக்கங்கள்.
(புருவம் உயர்த்துவது, கண்களைச்சிமிட்டுவது, மூக்கை இழுப்பது, பல்லைத் தட்டுவது, முகத்தை சுழிப்பது...)

சிக்கலான நடுக்கங்கள் - ஒருங்கிணைந்த சிக்கலான தசை அசைவுகள்.
(தோளை மேலும் கீழும் குலுக்குவது, கையைத் தட்டுவது, நாக்கை நீட்டுவது, தலையை அசைப்பது...)

குரல் சார்ந்த நடுக்கங்கள் - குறுகிய, சீரற்ற ஒலிகள் அல்லது வார்த்தைகள்.
(தொடர்ச்சியாக தொண்டையை கனைப்பது, உருமுவது, முனகுவது, மோப்பம் பிடிப்பது, குரைப்பது, அருவெறுக்கத்தக்க, ஆபாச (உடல் மற்றும் பாலியல் 
சம்பந்தப்பட்ட) வார்த்தை/வாக்கியங்களை தீடீரென உளருவது போன்ற தன்னிச்சையற்ற நடுக்கங்கள்...) 

ஆபாச வார்த்தையை உளறும் வித்தியாச மான அறிகுறியின் பெயர் கோப்புரலலியா (Coprolalia). இவ்வித அறிகுறிகள், மிதமாகவோ தீவிரமாகவோ ஒருவருக்கு இருக்கக் கூடும். தீவிரமாக இருப்பின், அது பாதிக்கப்பட்டவரின் தகவல் பரிமாற்றம் (Communication) மற்றும் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கும். 

காரணம் மற்றும் சிகிச்சை?

பல்வேறு நரம்பியல் வளர்ச்சி கோளாறு போல, டூரெட்ஸ் கோளாறின் சரியான காரணமும் சரிவர கண்டறியப்படவில்லை.   மரபியல் காரணிகள், மூளையின் ரசாயனம் (Dopamine), பிரசவ சிக்கல்கள், எடை குறைவான குழந்தை போன்றவை இதன் காரணிகளாக கூறப்படுகின்றன. இந்தக் குறைபாட்டைப் பூரணமாக குணப்படுத்த முடியாது. அதனால், கட்டுப்பாட்டில் வைத்து அன்றாட வாழ்க்கையை பாதிக்காத வகையில் சிகிச்சை
அளிக்கப்படுகிறது. மருந்துகள் மற்றும் உளவியல் ஆலோசனை, சைக்கோதெரபி மூலம் டூரெட்ஸ் கோளாறை சமாளித்து வாழ முடியும். 18 வயதுக்கு மேல் இவ்வகை கோளாறின் தீவிரம் மற்றும் அடிக்கடி வருவது தானாகவே குறைந்துவிடும். இது ஒருவரை பாதித்த நாள் முதல் 10 வயது வரை, தாக்கம் மிகவும் மோசமாக ஆகி, பாதிக்கப்பட்டவரின் பள்ளி மற்றும் தினசரி வாழ்வை பெரிதும் செயலிழக்க செய்யும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம், குழந்தையின் கல்வி, சமூகத்திறன் போன்றவற்றை பாதுகாக்க  முடியும்.

இடைவிடாத குரல் அல்லது மோட்டார் நடுக்கக் குறைபாடு (Persistent Vocal or Chronic Motor Tic Disorder)


இவ்வகை நடுக்கக் குறைபாட்டில், தொடர்ச்சியான தன்னிச்சையற்ற அசைவுகள் அல்லது குரல் சார்ந்த நடுக்கங்கள் ஒருவரிடம் காணப்படும். தீவிரமான டூரெட்ஸ் குறைபாடு போல இரண்டுமே சேர்ந்து காணப்படாது. இதன் அறிகுறிகள், அதிக அளவில் தொடர்ந்து இடைவிடாமல் பாதிக்கப்பட்டவரிடம் காணப்படும். 

இது போன்ற நடுக்கங்கள் உள்ளுக்குள்ளிருந்து, ஆழமாக ஏற்படுவதால் ஒருவரால் தவிர்க்க முடியாமல் வெளிப்படுத்தப்படுகிறது அலுப்பு, டென்ஷன், வெறுப்பு, அதிக உற்சாகம் போன்ற தருணங்களில் இவ்வித நடுக்கங்கள் அதிகமாகி விடுவதால், மன உளைச்சலை (Stress) சமாளிக்க தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக 8 வயதுக்கு முன் இந்தக் குறைபாடு காணப்பட்டால், இளம்பருவத்தில் தானாகவே மறைந்துவிடும். 9-18 வயதுக்குப் பின் இந்தக் குறைபாடு பாதித்தால், வாழ்நாள் முழுவதும் இதன் அறிகுறிகள் நிலைத்து விடக்கூடும். டூரெட்ஸ் குறைபாடு போலவே இதற்கும் ஒரேமாதிரியான சிகிச்சையே அளிக்கப்படுகிறது. 

தற்காலிக நடுக்கக் குறைபாடு (Provisional Tic Disorder)


இந்த வகை குறைபாடு, 18 வயதுக்கு முன் ஒருவருக்கு வரக்கூடும். இதில், ஒன்று/ஒன்றுக்கும் மேற்பட்ட தன்னிச்சையற்ற அசைவு அல்லது குரல் சார்ந்த நடுக்கங்கள், ஒரே நாளில் பலமுறை காணப்படும். இது தற்காலிகமான ஒன்றே... சில மாதங்களில் தானாகவே மறைந்து விடும். இதன் அறிகுறிகளும் டூரெட்ஸ் குறைபாட்டின் அறிகுறிகள் போலவேதான் இருக்கும். அறிகுறிகளை குடும்ப நபர்கள் அதையே சுட்டிக்காட்டினால், அதனாலேயே இது அதிகப்படும் வாய்ப்புள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர் களை எப்படி கையாள்வது என்பது குறித்து குடும்பத்தில் உள்ளவர்கள் ஆலோசனை பெறுவது அவசியம். டூரெட்ஸ் குறைபாடு போலவே இதற்கும் ஒரேமாதிரியான சிகிச்சையே அளிக்கப்படுகிறது. 

பிற குறிப்பிடத்தக்க / பெயர் குறிப் பிடப்படாத நடுக்கக் குறைபாடுகள்(Other Specified/Unspecified Tic Disorder)

இதுவரை பார்த்த நடுக்கக் குறைபாடுகளின்(Tics) தன்மைகளைப் போல அல்லாமல், நடுக்கக் குறைபாடுகள் சிலருக்கு ஒரு மாதகாலம் மட்டுமே இருக்கலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களையும் அது பாதிக்கலாம். அப்படி ஏற்படும் இவ்வகை நடுக்கக் குறைபாடுகள், ‘பிற குறிப்பிடத்தக்க / பெயர் குறிப்பிடப்படாத நடுக்கக் குறைபாடுகள்’ எனக் கூறப்படுகிறது.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3406


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: குழந்தைகளின் இயக்கத்திறன் குறைபாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum