சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

ஆட்டிஸம் வகை குறைபாடுகள் Khan11

ஆட்டிஸம் வகை குறைபாடுகள்

Go down

Sticky ஆட்டிஸம் வகை குறைபாடுகள்

Post by ahmad78 on Thu 23 Apr 2015 - 9:09

டாக்டர்  மனசே... மனசே... சித்ரா அரவிந்த்


ரவி 2 வயதான ஆரோக்கியமான குழந்தை. ஆனால், இதே வயதில் அவன் அக்கா செய்த எந்த விஷயத்தையும் ரவி செய்யவில்லை என  பெற்றோருக்கு ஆதங்கம். ரவி இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை... எனினும் பிறர் பேசும் வார்த்தைகளை அர்த்தமின்றி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். பிறரிடம் பேசுவதற்காக வார்த்தைகளை உபயோகிக்காமல், அதன் சத்தத்தைக் கேட்பதில் மட்டும் ஆர்வம் காட்டினான். யாரேனும்  பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்ப்பதில்லை. அவன் விளையாடுவதும் வினோதமாக இருந்தது. குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுவதை  பலமணி நேரம் லயித்து பார்த்துக் கொண்டே இருப்பான்.

வீட்டில் எந்த ஒரு பொருள் சிறியதாக இடம் மாற்றி வைக்கப்பட்டிருந்தாலும் அல்லது வழக்கத்துக்கு மாறாக எது செய்தாலும், அதைக் குறித்து  எரிச்சலும் கோபமும் அடைந்து ஆர்ப்பாட்டமும் செய்தான். இதனாலேயே, அவனின் விருப்பத்தை மீறி, அவன் பெற்றோர் எதை செய்வதற்கும்  பயப்பட்டார்கள். அர்த்தமில்லாத வாசகங்களைச் சொல்லி முன்னும் பின்னும் ஆடிக் கொண்டும் சுழன்று கொண்டும் இருந்தான். குழந்தைத்தனமாக  இருக்கின்றான் போகப் போக சரியாகிவிடுமென அவன் பெற்றோர் நினைத்தார்கள். ஆனால், 4 வயதாகியும் அவன் செயல்பாட்டில் முன்னேற்றம்  எதுவுமில்லாமல் மோசம் தான் அடைந்து இருந்தது.

இப்படி வித்தியாசமாக செயல்படும் ரவிக்கு என்ன பிரச்னை? ஆம், ரவிக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளில் முக்கியமான ஒன்றான ஆட்டிஸம் கோளாறு உள்ளது. இது குழந்தைகளை தாக்கும் நரம்பியல் வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று. இக்கோளாறு பெண்களைவிட  ஆண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. இவ்வகைக் கோளாறு, குழந்தையின் மொழி, பேச்சுத் திறன், சமூகத்திறன் மற்றும் செயல்பாட்டை வெகுவாக  பாதிக்கிறது. ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தில் நான்கு வகை குறைபாடுகள் உள்ளன.

1. ஆட்டிஸம் குறைபாடு (Autism).
2. அஸ்பெர்ஜர் குறைபாடு (Asperger’s Disorder).
3. குழந்தைப் பருவ சிதைக்கும் குறைபாடு (Childhood Disintegrative Disorder).
4. பிற குறிப்பிடப்படாத ஆட்டிஸ வகை குறைபாடுகள்.

இத்தகைய ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடுகள், குழந்தையின் பல்வேறு வளர்ச்சியை பாதிப்பதால் பெர்வேஸிவ் வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள்  (Pervasive Developmental Disorders)  எனவும் அழைக்கப்படுகிறது. இக்குறைபாட்டின் பாதிப்புகள், ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இருக்கும். சரியான நேரத்தில் கொடுக்கப்படும் உதவியால், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்,  நிறைவான  வாழ்வை வாழ உதவ முடியும்.

இந்த நான்கு வகைக் குறைபாடுகளில் ஆட்டிஸம் குறைபாடுதான் அதிகம் பரவலாக காணப்படுகிறது. இந்த நான்கு குறைபாடுகளின் அடிப்படை  அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால், அவற்றின் தாக்கம் மற்றும் தீவிரம் வெவ்வேறு விதமாக இருக்கும். ஆட்டிஸத்தால்  பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளிடையே கூட அறிகுறிகள் வெவ்வேறு விதமாக காணப்படும். மூன்று வயதுக்கு முன்னரே அறிகுறிகள் காணப்படும்.  ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆற்றல், அறிவுத்திறன் மற்றும் செயல்பாடுகள் பரவலாக வேறுபட்டிருக்கும்.  (எ.டு.) சில குழந்தைகள் பேசவே மாட்டார்கள். சில குழந்தைகள் குறைவாகப் பேசுவார்கள்.

மேலும், சில குழந்தைகளின் பேச்சுத்திறன் ஓரளவு வளர்ச்சி அடைந்திருக்கும். மேலும், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைபாடும் (Intellectual Disability) சேர்ந்தே இருக்கலாம். ஆனால், இரண்டும் வெவ்வேறு நரம்பியல் வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள். ஏனெனில், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளின் அறிவுத்திறன் (மினி) சராசரி மற்றும் சராசரிக்கு மேலேகூட இருக்கும். மேலும், இவர்களுக்கு கணித கணக்கீடுகள், வரைகலை, இசைத்திறன் மற்றும் நினைவாற்றல் போன்ற விஷயங்களில் அபார சக்தி இருக்கும் வாய்ப்பு அதிகம். (எ.டு.) ஒரே ஒருமுறைக் கேட்டதுமே கூட, பியானோவை வாசிக்க கற்றுக்கொள்ளும் திறமை, கடினமான கணக்கை மனதிலேயே போட்டு முடித்து விடும் ஆற்றல், நன்றாக வரையும் திறமை... போன்றவை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆட்டிஸம் வகை குறைபாடுகள்

Post by ahmad78 on Thu 23 Apr 2015 - 9:10

பெற்றோர் தங்கள் குழந்தைகளிடத்தில் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்..

எல்லோரையும் விட பெற்றோருக்குத்தான் தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகள் குறித்து மிக நன்றாகத் தெரிந்திருக்கும். தங்கள்  குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டாலோ, ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அதை உடனடியாக மருத்துவரின் கவனத்துக்கு  கொண்டு சென்று தெளிவு பெற வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் வளர்ச்சி மைல்கற்களை அடைவதில் சற்றே வித்தியாசங்கள் இருப்பது  சகஜம்தான். ஆனால், பொதுவாக, “தானாக சரியாகிவிடும்”, ‘‘பொறுத்திருந்து பார்க்கலாம்”, போன்ற வாசகங்களைக் கேட்டு தாமதிக்காமல்  சந்தேகத்தைத் தெளிவு செய்வது மிகவும் நல்லது. 

ஏனெனில், குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடிக்கப்படும் இவ்வித குறைபாடுகளுக்கு தாமதிக்காமல், சரியான நேரத்தில் ஆரம்பக்கட்ட சிகிச்சை  மேற்கொண்டால், அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம். ஆட்டிஸத்தை 2 வயதுக்கு முன் கண்டறிவது கடினம். ஆனால், 12-18 மாதங்களிலேயே  இதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். ஆட்டிஸம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை பொதுவாக தனிமையை விரும்பும் என்பதால், பெற்றோர் தங்கள்  குழந்தை மிகவும் சமர்த்து என எண்ணி, அறிகுறிகளைப் புறக்கணிக்க கூடும். ஆகவே, பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரம்பகால  எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி பார்ப்போம்.

1.    தாய் பாலூட்டும் போது, குழந்தை தாயின் கண்களைப் பார்க்காது.
2.    முகம் பார்த்து சிரிக்காது.
3.     பெயரைச் சொல்லி அழைக்கும் போது திரும்பிப் பார்க்காது.
4.     கண்ணில் படும் பொருட்களை ஆர்வமாக பின்தொடர்ந்து செல்லாது.
5.     டாட்டா காட்டி கையசைக்காது.
6.     பிறர் கட்டியணைத்தாலும், எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது.
7.     பிறர் செய்யும் முகபாவனைகள் மற்றும் செயல்பாடுகளை திரும்ப செய்து பார்க்காது.
8.     பிறரின் கவனத்தை ஈர்க்கும்படி எதுவும் செய்யாது (தூக்கச் சொல்லாது, ஒலி எழுப்பி தன்னைப் பார்க்க வைக்காது)
9.     மற்றவர்களுடன் விளையாட எத்தனிக்காது.
10.     பிறரிடம் சைகையில் பேச எந்த முயற்சியும் செய்யாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆட்டிஸம் வகை குறைபாடுகள்

Post by ahmad78 on Thu 23 Apr 2015 - 9:10

ஆரம்பக்கட்ட முக்கிய அறிகுறிகள் 

1.    ஆறு மாதம்: மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சிரிக்காமல் இருப்பது.
2.    ஒன்பது மாதம்: ஒலியை ஏற்படுத்தி பிறருடன் சிரித்து விளையாடாமல் இருப்பது/முகபாவனைகள் செய்யாமல் இருப்பது.
3.    12 மாதம்: 1) பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காதது.
    2) மழலைப் பேச்சு பேசாமல் இருத்தல்.
4.    16 மாதம்: கொஞ்சம் கூட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது.
5.    24 மாதம்: அர்த்தமுள்ள இரண்டு வார்த்தை சொற்றொடர்களை தானே உருவாக்கி பயன்படுத்த தெரியாமல் இருத்தல்.

மேலே பார்த்த வளர்ச்சி மைல்கற்களில் தாமதம் ஏற்பட்டால், உடனே குழந்தையை மனநல வல்லுநரிடம் ஆய்வுக்கு அழைத்து செல்வது மிகவும்  அவசியம். ஒருசில அறிகுறிகளை வைத்து குழந்தைக்கு ஆட்டிஸம் உண்டு என கணித்து விட முடியாது. பல அறிகுறிகள் ஒருசேர இருந்து  குழந்தையின் பேசும் திறன், சமூகத்திறன், கல்வித்திறன், விளையாட்டு, தினசரி செயல்பாடுகள் போன்றவற்றைப் பாதிக்கும் போதுதான் அது  ஆட்டிஸமாக இருக்கக்கூடும். தேர்ச்சி பெற்ற வல்லுநர் பரிசோதித்து பார்த்தப் பின்னர் குழந்தைக்கு பல்வேறு விதமான ஆய்வுகள் செய்யப்படும். அதன்  பிறகே, குழந்தைக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள முடியும். 

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3474


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆட்டிஸம் வகை குறைபாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum