சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? Khan11

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை?

3 posters

Go down

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? Empty மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை?

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 11:21

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? Mahinth_gotta


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர். 

எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் மஹிந்தவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ள ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்தவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அமைச்சுப் பதவியை வழங்கியமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணை நடத்தவே மஹிந்த அழைக்கப்பட்டுள்ளார்.
எனினும், என்ன முறைப்பாடு யார் முறைப்பாடு செய்தார் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் ஊடாக இந்த விடயம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாபாயவிற்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவிற்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவன்கார்ட் நிறுவனம் மற்றும் ரக்னலங்கா பாதுகாப்பு சேவை தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, எதிர்வரும் 23ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு ஆஜராகுமாறு கோத்தாபாய ராஜபக்சவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தாபாயவின் சொத்து தொடர்பான ஆவனங்கள் ஏற்கனவே குற்றபுலனாய்வு பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? Empty Re: மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை?

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 11:34

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? Mahinda-house
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ராஜகிரியவில் அமைந்துள்ள பீகொக் மாளிகையில் குடியேற மாட்டார் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய வீட்டின் எதிரில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் தடாகம் கடல் மணலால் நிரப்பப்பட்டது.
வீட்டின் கூரைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
வீட்டிற்கு ஆசி வேண்டி பல்வேறு பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளன.
இன்று இந்த வீட்டில் குடியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார்.
வாய்ப்பேச்சு அளவில் வீட்டில் குடியமர்த்தாமல் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட வீட்டின் உரிமையாளர் ஏ.எஸ்.பி லியனகே முன்வைத்த யோசனைக்கு இதுவரையில் மஹிந்த உரிய பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஏ.எஸ்.பி லியனேகவிடம் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வீடு கிடைக்காவிட்டால் முன்னாள் ஜனாதிபதி நாரஹேன்பிட்டி அபயராமயவை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீகொக் மாளிகையில் குடியேறுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியோ, எ.எஸ்.பி லியனகேயோ எவ்வித கருத்துக்களையும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
பீகொக் மாளிகை நுழைவாயிலுக்கு புதிய பூட்டு:அம்பலமான உண்மை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு,வழங்கவிருப்பதாக கூறப்பட்ட நாவலயில் அமைந்துள்ள பீகொக் மாளிகை பெரும்பாலும் அவர் கைகளுக்கு கிடைக்காது என தெரியவருகின்றது.
தற்பொழுதே பீகொக் மாளிகையின் நுழைவாயிலுக்கும் புதிய பூட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் லியனகேவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினால் அவர் மனம் உடைந்து போயுள்ள காரணத்தினால்,இந்த மாளிகையை மகிந்தவிற்கு வழங்க விரும்பவில்லை என லியனகேவின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
பீகொக் மாளிகை விற்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையா? அந்த மாளிகையை பணத்திற்கு கொள்வனவு செய்தது யார்? பணத்திற்கு பெற்றுக்கொண்டவருக்கு பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது போன்ற பல கேள்விகள் லியனகேவிடம் கேட்கப்பட்டுள்ளது..
மகிந்த ராஜபக்ச பணம் செலுத்தி குறித்த மாளிகையை கொள்வனவு செய்ததாக அண்மை காலமான ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? Empty Re: மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை?

Post by சுறா Mon 20 Apr 2015 - 12:39

சீக்கிரம் புடிச்சி இந்த பயலுகள உள்ளார போடுங்க... சாவடிங்க அவனுங்கள :)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? Empty Re: மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை?

Post by Nisha Mon 20 Apr 2015 - 13:37

என்னமோ நடக்குது. ஒன்றும் தான் புரியல்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? Empty Re: மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை?

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 11:18

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை என்பன தொடர்பான தனது தீர்ப்பை இன்று (21) வெளியிடுவதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்திருப்பது தொடர்பில் நேற்று சபையில் வாதப் பிரதிவாதம் இடம்பெற்றது. இது தொடர்பில் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ,
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மற்றும் உரிமைகள் தொடர்பில் செயற்படும் பொறுப்பு சபாநாயகருக்கே இருக்கிறது. இங்கு எழுப்பப்பட்ட விடயங்கள் குறித்து கட்சித் தலைவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி எம்பிக்கள் தொடர்பாக செயற்படுகையில் எவ்வாறு நடந்துகொள்வது என முடிவு எடுக்கப்படும். இது தொடர்பான தீர்ப்பை நாளை (21) அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? Empty Re: மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை?

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 11:19

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை

ஐ.ம.சு.மு எம்.பிக்கள் எதிர்ப்பு; சபையினுள் உண்ணாவிரதம்


மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? Parliament01முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று காலை முதல் சபா மண்டபத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதோடு ஆரம்பமான இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

இதில் 50ற்கும் அதிகமான ஐ.ம.சு.மு எம்பிக்கள் பங்கேற்றதுடன், சபா மண்டபத்தின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியிருந்தது.
19வது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றையதினம் நடைபெற விருந்தபோதும் கட்சித் தலைவர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டுக்கு அமைய இந்த விவாதம் இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் சபை நடவடிக்கைகள் ஓரிரு நிமிடங்களில் நிறைவடைந்தது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருப்பது தொடர்பாக தினேஷ் குணவர்த்தன எம்பி சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை எழுப்பினார்.
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமையானது திஸ்ஸ அத்தநாயக்க எம்பியின் சிறப்புரிமையை மீறியிருப்பதுடன், ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் கெளரவத்தைப் பாதித்திருப்பதுடன், அரசியலமைப்பின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கேள்வியெழுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடுமையான விவாதம் ஏற்பட்டதுடன், இது முற்பகல் 9.30 மணி முதல் 10.40 மணிவரை நீடித்திருந்தது. 10.40 மணியளவில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தை ஒத்திவைக்க முற்பட்ட சமயத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சபை நடுவிற்கு வந்து இந்த விடயத்துக்கான தீர்ப்பை சபாநாயகர் உடனடியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததுடன்,
முடிவை அறிவிக்கும்வரை தாம் சபையைவிட்டு வெளியேறப் போவதில்லையெனக் கூறி சபை நடுவில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த நிலையில், சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். இருந்தபோதும் சுமார் 28 எம்பிக்கள் சபை நடுவில் அமர்ந்துகொண்டதுடன் 50ற்கும் அதிகமான எம்பிக்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டனர். ஐ.ம.சு.மு எம்.பிக்கள் சபை நடுவில் அமர்ந்துகொண்டதும் ‘கள்வர்கள் கூட்டம் நடுவில் அமர்ந்துள்ளது’ என ஆளும் தரப்பிலிருந்து கூக்குரல் எழுப்பப்பட்டது.
இந்த ஆரவாரங்களுக்கும் மத்தியில் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப் பதால் செங்கோலை எடுத்துச் செல்ல முடியும் என சபாநாயகர் அறிவித்ததும் படைக்கலசேவிதர் செங்கோலை எடுத்துச் சென்றார். செங்கோல் எடுத்துச்செல்லப் பட்ட பின்னரும் சபைநடுவில் அமர்ந் திருந்த எம்.பிமார் தொடர்ந்தும் சபை நடுவில் அமர்ந்திருந்து தமது உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
நள்ளிரவானாலும் தாம் சபையிலிருந்து வெளியேறப்போவதில்லையென கலரியில் அமர்ந்திருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்து மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி கூறினார். வெளியேசென்றால் தமக்குப் பாதுகாப்பு இல்லையென்றும், சபையில் இருப்பதே பாதுகாப்பு என்பதால் தாம் தொடர்ந்தும் சபைநடுவில் இருக்கப் போவதாக ரோஹித்த அபேகுணவர்த்தன ஊடகவியலாளர்களைப் பார்த்துத் தெரிவித்தார்.
சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப் பியிருந்த தினேஷ் குணவர்த்தன எம்பி பேசுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக வும் இதனால் அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி னார். தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான நெருக்குவாரங்கள் அதிகரித்திருப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூட விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அது மாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்கியமை தொடர்பிலேயே அவருக்கு இலஞ்ச ஊழல் மோசடி விசாரணைக்குழு அழைப்பாணை விடுத்திருப்பதாகவும் இது அவருடைய கெளரவத்தைப் பாதித்திருப்பதுடன், ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் அரசியலமைப்பின் ஊடாக அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமையவே திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு அமைச்சுப் பொறுப்பை வழங்கியமையானது ஊழலாக அமையாது.
அவ்வாறாயின் 19 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்தபோது வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களும் இலஞ்சமாகவே கருதப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதியை இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தி நாட்டில் பாரதூரமான பிரச்சினையை உருவாக்க வேண்டாம்.
அமைச்சுப் பதவியை வழங்கியமைக்காக முன்னாள் ஜனாதிபதியை இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைத்து ஜனநாயகவிரோத செயலில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது. இது விடயத்தில் சபாநாயகர் உடனடியாகத் தலையிட்டு முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கெளரவத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விமல் வீரவன்ச
அன்று யுத்தத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள் யுத்தம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த இவ்வாறு நடவடிக்கை எடுக்கின்றனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் பட்டியலொன்றைக் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்படுகிறது.
இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு உச்சநீதிமன்ற நீதியரசராக பதவி வழங்கப்படும் என பிரதமரால் உறுதிவழங்கப்பட்டுள்ளது என ஆணைக்குழுவின் பணிப்பாளரே கூறியுள்ளார். அரசாங்கம் தமக்கு சவாலாக உள்ளவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் விசாரணைகளை நடத்தி வருகின்றது.
மஹிந்தானந்த அளுத்கமகே
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தினால் அதன்விளைவுகள் மோசமானதாக இருக்கும். நாட்டின் நிலை பாரதூரமாக மாறுவதைத் தடுப்பதற்கு சபாநாயகர் உடனடியாகத் தலையிட்டு தீர்வொன்றை வழங்கவேண்டும். ஜனநாயகத்தை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு அனுமதிக்க கூடாது.
அஜித் பி.பெரேரா
இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கு பிரதமருக்கோ வேறு எவருக்கோ உரிமை கிடையாது. வோட்டர்ஸ் எட்ஜ் வழக்கு விசாரணையின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் வழக்குத் தொடருமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவருக்கு இருக்கும் விதிவிலக்கு செல்லுபடியற்றதாகிறது. இது தொடர்பில் உச்சநீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியிருக்கிறது. மோசடி மற்றும் லஞ்சத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காகவே மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள். அத்தகையோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கையிலேயே எதிர்த்தரப்பு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி அதற்குத் தடைபோடுகிறது. சட்டத்தின் முன் சகலரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.
வாசுதேவ நாணயகார
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாட்சியம் பெற அழைக்கப்பட்டாரா சந்தேகத்தின் பெயரில் அழைக்கப்பட்டாரா என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்க முடியும். அவர் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருப்பது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும். இவர் அழைக்கப்பட்டதன் ஊடாக அவர் ஏதும் இலஞ்சம் பெற்றதாகவே கருதத் தோன்றும். எம்பிக்களின் சிறப்புரிமையைப் பாதுகாப்பதற்கு பிரதமரும் சபாநாயகரும் தலையீடு செய்யவேண்டும். இந்த விடயத்தை பாராளுமன்றம் சென்று தீர்த்துக்கொள்ளுமாறு கூறுகிறார். அரசியலமைப்பும் பாராளுமன்ற சிறப்புரிமையும் மீறப்படுகிறதா என்பது குறித்து கவனிக்க வேண்டிய பொறுப்பு பிரதமருக்கே இருக்கிறது.
தி.மு.ஜயரட்ன
இந்த அரசாங்கத்தில் நடக்கும் விடயங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 30 வருட யுத்தத்துக்கு முடிவுகண்ட தலைவருக்கு இவ்வாறு நெருக்குதல் கொடுப்பதை அனுமதிக்க முடியாது.
இந்த பாராளுமன்றத்தில் உள்ள 225 எம்பிக்களும் திருடர்கள் மோசடிக்காரர்கள் என்றே உலகம் கருதும். அரசாங்கம் முன்னெடுக்கும் கேவலமான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். யாராவது தவறு செய்திருந்தால் அதுகுறித்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பந்துல குணவர்த்தன
எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் மோசமான முறையில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் பழிவாங்கப்படுவதைப் போன்று பழிவாங்கப்படுகின்றனர். டயஸ்போராவுக்குத் தேவையான வகையில் பழிவாங்கல்கள் இடம்பெறுகின்றன. நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்டத்துக்கு விரோதமானது. ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு உரிய அதிகாரங்களுக்கு அமையவே திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்கினார். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். இது இலஞ்சமாக அமையாது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? Empty Re: மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை?

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 11:25

ஆணைக்குழுவுக்கு அழைத்தது தவறென்றால் உச்சமன்றில் தடையுத்தரவு பெறலாம்

ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிடப் போவதில்லை - பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அழைத்திருப்பது தவறு எனக் கருதினால் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று அதற்கு எதிராக தடையுத்தரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தான் ஒருபோதும் தலையிடப்போவதில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படவேண்டிய அவசியம் தமக்கு இல்லையெனச் சுட்டிக்காட்டிய பிரதமர், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்குவதாக உறுதியளித்த பாதுகாப்பு சகலதும் வழங்கப்பட்டே இருப்பதாகவும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் தினேஷ் குணவர்த்தன கொண்டுவந்த சிறப்புரிமைப் பிரச்சினை குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
இவ்வாறு அழைப்பாணை விடுத்தமையானது இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழு சட்டத்துக்கும் அப்பால் சென்ற விடயம் எனக் கருதினால் முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று இதற்கு எதிராக தடையுத்தரவைப் பெற்றுக்கொள்ள முடியும். எல்லா விடயங்களும் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும் கூறினார்.
இலஞ்சமோசடி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தான் தலையிடுவதில்லையெனச் சுட்டிக்காட்டிய அவர், சட்டரீதியாக செயற்படுவதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்துக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்றும் கூறினார். குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கான பெயரை நீதி அமைச்சரே வழங்கியிருந்தார்.
பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருப்பவர் எனக்கு நெருக்கமான நண்பர் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது என தான் உறுதிமொழி வழங்கியதாக விமல் வீரவன்ச குற்றச்சாட்டை மறுத்த பிரதமர், உச்சநீதிமன்ற நீதியரசராக சட்டமா அதிபரையோ சொலிசிட்டர் ஜெனரலையோ நியமிக்கலாம். உச்சநீதிமன்ற நீதியரசர் நியமனம் தொடர்பில் முறைமையொன்று பின்பற்றப் படுகிறது.
எனவே இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்றும் கூறினார், இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நியமிக்கப் பட்டவர்கள். இவ்வாறான நிலையில் எமது கட்டளைக்கு அமைய ஆணைக்குழு செயற்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
அண்மையில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள். ஜனாதிபதி அக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அக்கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. இது இலஞ் சமாக முடியாது. இந்தப் பிரச்சினையை கட்சித் தலைவருடன் பேசித் தீர்த்துக் கொள்ளாமல் பாராளுமன்றத்தில் வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்புவதில் எந்தவித பயனும் இல்லையென்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் யுத்த வெற்றியை தொடர்புபடுத்த வேண்டாம் என்று கோரிய பிரதமர், யுத்தத்திற்கு இராணுவ ரீதியான தலைமைத்துவத்தை சரத் பொன்சேகா வழங்கியதாலேயே யுத்தத்தை வெல்ல முடிந்தது. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது இராணுவ ரீதியில் தலைமைத்துவம் வழங்க தகுந்தவர்கள் இருக்காததாலேயே அன்று யுத்தத்தை வெல்லமுடியாது போனதாகவும் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? Empty Re: மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; அதிகாரிகளிடம் விசாரணை
» சுரங்க ஊழல் எடியூரப்பாவிடம் விசாரணை தொடங்கியது
» மஹிந்தரின் நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராகின்றார் சந்திரிகா!
» ஏர்செல் ஊழல் விவகாரம்- தயாநிதி மாறனிடம் விரைவில் சிபிஐ விசாரணை
» அன்பரசன், உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழி்ப்புத் துறை அதிகாரிகள் ரெய்ட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum