Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பேசமுடியாதவர்களுக்குக் கூட வாசிப்பைக் கற்றுக் கொடுங்கள்!
Page 1 of 1

உலக புத்தக தினம்வீட்டை அலங்கரிக்க புத்தகங்க ளை விட அழகான பொரு ட்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்றார் ஹென்றி வார்ட் பீச்சர்.
நாம் படிக்கத் தெரிந்த காலம் முதல் புத்தகம் படிக்கிறோம் புத்தகம் என்பது ஒரு காலத்தின் வரலாறு. வரலாறு எழுத்துக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. புத்தகங்களை சேமிக்கும் இடத்தை நூலகம் என்கிறோம். உளவியல் வல்லுனர்கள் குழந்தைகளுக்குப் பேசத் தெரியாவிட்டாலும் கூட புத்தகம் படிக்கத் தெரிய வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதனால் அவர்களின் மூளை வளர்ச்சியும், அறிவுத்திறனும். முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். எப்படியாயினும் புத்தக படிப்பை ஊக்குவிக்க சில சமயம் ஒரு தூண்டுதல் தேவையாயிருக்கிறது. புத்தகத்தின் தேடலுக்கு, வாசிப்பு ருசிக்கு யாரோ ஒருவர் தூண்டுதலாக இருந்திருக்கின்றார். யுனெஸ்கோ என்ற உலக கல்வி நிறுவன அமைப்பும் கூட. மக்களிடையே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கவும்.
அதற்காக அதிக புத்தகங்களை வெளியிடவும் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 1995 முதல் ஏப்ரல் 23 உலக புத்தக தினம் என்று அறிவிக்கப்படுகிறது. அது முதல் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
முதலில் புத்தக தினம் தொடங்கப்பட்ட போது, லண்டனில் பாடசாலைப் பிள்ளைகள் அனைவருக்கும் ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை தந்தனர். அதனைக் கொண்டு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் குழந்தைப் புத்தகங்கள் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக உருவானதற்கு ஓர் அருமையான பின்னணி உண்டு. உலகம் முழுவதும் படிக்கத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் இந்நாளில் புத்தகத்தையும். அவற்றை உருவாக்கி யவர்களையும் மிகுந்த மரியாதை செய்கின்றனர். உலகில் பல இலக்கிய வாதிகள் இந்த தினத்தில் பிறந்தும் மறைந்தும் இருக்கின்றனர்.
முக்கியமாக உலகின் தலை சிறந்த சோக காவியமான லியர் அரசன், காதல் காவியம் ரோமியோ ஜுலியட், ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும், மச் அடோ அபவுட் நத்திங் (Much Ado About Nothing) நகைச்சுவை நாடகத் தையும் எழுதியவர் தலைசிறந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர். இவர் பிறந்தது மட்டுமல்ல உலகை விட்டு மறைந்ததும் ஏப்ரல் 23ல் தான்.
அது போலவே ஸ்பெயின் நாட்டில் (1923) ஏப்ரல் 23 ஆம் நாள் இறந்த பிகுல்டி செர்வேண்டிசின் நினைவாகவும் புத்தக தினம் கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது. 1616 ஏப்ரல் 23 ஆம் நாள் உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான ஷேக்ஸ்பியர். செர்வேண்டிஸ், இன்கா கார்கிலாசோ போன்றோர் இறந்தனர். மாரிஸ் டிரியூன், ஹால்டோர் லேக்சனஸ். விளாதிமிர் நபொகோவ். ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியா போன்ற எழுத்தா ளர்களும் இந்த உலகத்தைப் பார்த்த நாள் ஏப்ரல் 23 தான். இவர்களை மரியாதை செய்யும் வகையில் ஒரு குறியீடாக ஏப்ரல் 23 ஐ உலகப் புத்தக தினமாகக் கொண்டாட யுனெஸ்கோ அமைப்பு முடிவுசெய்தது.
உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் வாசிப்பின் நேசிப்பையும். ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டியும், அதன் மூலம் சமூக, கலாசார முன்னேற்றம் மற்றும் மனித நேய உணர்வை வென்றெடுத்து, மரியாதை செய்ய வேண்டியும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க புத்தக தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பேசமுடியாதவர்களுக்குக் கூட வாசிப்பைக் கற்றுக் கொடுங்கள்!
வாழ்க்கைப் போராட்டத்தில் வென்ற இலக்கியவாதிகள்
வில்லியம் ஷேக்ஸ்பியரும், ஜான் மில்டனும் ஆங்கில இலக்கியத்தின் இரு கண்களாகப் போற்றப்படுகின்றனர். ஆனால் இவர்களின் இளமைக் காலத்தைப் புரட்டிப் பார்த்தால் கதை வேறு மாதிரி இருக்கிறது. கல்விக் கூடத்தில் சரியாகப் போதனை பெற முடியாமல், சமூக நீதிகளும், சமூக காரணங்களும், இவர்கள் இருவரையும் ஓட ஓட விரட்டி இருக்கின்றன.
‘கல்வி அனைவருக்குமானது; புத்தகம் பொதுவானது’ என துண்டுப் பிரசுரம் கொடுத்ததிற்காக, மில்டன் சிறைச்சாலையை சந்திக்க நேரிட்டது. அவருக்கு இந்த வெளி உலகைக் காண முடியவில்லை. அக உலகின் கண்கள் மட்டுமே அவருக்கு திறந்திருந்தன. இந்த நிலையிலும், கல்வி மேல், மீளாக் காதல் கொண்டவர் மில்டன். எனவே சிறைக் கம்பிகளுக்கிடையேயும் மற்றவர் வாசிக்கக் கேட்டு மேதையானார். உலகப் புகழ்பெற்ற கவிதையான ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்ற அழியா நூலை உருவாக் கினார்.
இது போலவேதான், வில்லியம் ஷேக்ஸ்பியரும் அரச மொழி என்று போற்றப்பட்ட ‘லத்தீனை’ எதிர்த்து தனது தாய்மொழியான ஆங்கிலத்தை இலக் கியத்தில் நுழைப்பதற்காகவே பல காவியங்கள் புனைந்தவர். வாசிப்பின் லயிப்பில் மனம் ஈடுபட்டு, தூக்கத்தைத் துறந்தவர்....!
இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைத்தளமும், தொலைபேசி, கைபேசிகளும். மின்னஞ்சலும். முக்கியமாக தொலைக்காட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தை பிடுங்கிவிட்டன. புதைகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன எனலாம். ஆனால் புத்தகம்தான் நிரந்தரமாய் நிலைத்து நின்று சுவையும், இன்பமும், ரசனையும் தரவல்லது. படிப்பதன் ஆழ்ந்த அருமையான சுவை என்பது, வலைத் தளத்தில் நிச்சயமாகக் கிடைக்காது, புத்தகம் என்பது ஒருவரின் சொத்து...! படிக்கப் படிக்க இன்பமும் தேடுதலும் கிடைக்கும். புத்தகம் படிக்காமல் ஒருவர் அறிவாளியாகிவிட முடியாது.
எழுத்துக்களின் சரித்திரம் மற்றும் வயது தெரியுமா? எழுத்துக்களின் முதல் பதிவு குகைச் சுவர்களிலும் இஷாங்கோ எலும்புகளிலும் தான் உள்ளன. இவை, சுமார் 37,000 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்துவிட்டன. பின்னர் களிமண் கலவைகளிலும். பாப்பிரஸ் மரப்பட்டை களிலும். ஆட்டின் தோலிலும் எழுதப் பட்டன. அவை அனைத்துமே புத்தகங் கள்தான்....! வரலாற்றுப் பதிவுகள்தான்...! எழுத்தாளர் தினம்.... புத்தக தின வரலாறு...!
ஸ்பெயினிலுள்ள காட்டலோனியா என்ற ஊரில் 1436 ஆம் ஆண்டில், ஏப்ரல் 23, செயினிட் ஜார்ஜ் தினம் கொண்டாடப் படுகிறது. அது ரோஜாவின் தினம் என்றும் சொல்லப்படுகிறது. அன்று தன் இதயம் கவர்ந்தவர்களுக்கும். விருப்பமானவர்களுக்கும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்கும் புத்தகத்துடன் ரோஜாவைப் பகிர்ந்து கொண்டனர். அன்றுதான் உலக இலக்கிய தினமாக கருதப்பட்டு ஒவ்வொரு புத்தகம் விற்கும் போதும் அதனுடன் ஒரு ரோஜாப் பூவினை அன்பளிப்பாகத் தந்தனராம். அன்று எல்லோரும் புத்தகம் வாங்க வேண்டுமாம். இப்படித்தான் புத்தக தினத்துக்கான கரு, காட்டலோனியாவில் ஏப்ரல் 23ல் உருவானது.
குகைகளில் எழுதத் தொடங்கு முன்பே எலும்புகளில் பதிவு செய்துவிட்டனர். ஆம் ஆனால் முதல் முதலில் இதைச் செய்ததும் ஒரு பெண்ணே என தற்போது தெரிய வந்துள்ளது. அதுதான் உண்மை...! பபூன் குரங்கின் கை எலும்பில்தான் அந்த அற்புதம் நிழந்திருக்கிறது. பெண்கள். மாதத்தின் நாட்களை, குறியீடாக அந்த எலும்பில் தனது மாதவிடாயை, கருக்காலத்தைக் கணக்கில் கொள்ள, வானில் நிலவு வந்து போகும் காலக் கெடுவுடன் தொடர்புடையதாக குறித்து வைத்துள்ளனர்.
ஆபிரிக்காவின் “லேபோம்பா” என்ற இடத்தில் அந்த குறியீடு செய்துள்ள எலும்பு கிடைத்தது. எனவே அதன் பெயரிலே லேபோம்பா எலும்பு என்றே அழைக்கப்பட்டது. அதன் வயது என்ன தெரியுமா? சுமார் 37,000000 ஆண்டுகள்! இந்த எலும்பில் 29 கோடுகள்/ பட்டைகள் உள்ளன. அதுபோலவே, இஷாங்கோ என்ற இடத்தில் கிடைத்த எலும்பின் பெயர் ‘இஷாங்கோ எலும்பு” எலும்பின் நுனியில் அதனை எழுதப் பயன்படுத்திய படிகக் குச்சியும் உள்ளது.
இதுவும் ஆபிரிக்க எரிமலைப் படிவுகளில் கிடைத்துதான். இதன் வயது 20,000 - 25,000 ஆண்டுகள். இதில் 3 வரிசைகளில் எண்கள் பற்றி “டாலி” குறியீட்டில் பதிவு செய்துள்ளனர் அக்கால பெண்கள்! இதில் 6 மாத சந்திர கலண்டர் பொறிக் கப்பட்டுள்ளது.
எலும்பில் எழுதிய மனிதன், மலையின் குகைகளில் எழுதினான். பிறகு பாப்பிரஸ் மரபட்டைகள். ஆடு மற்றும் கன்று குட்டியின் தோல்கள், மரபட்டைகள். களிமண், மண் ஓடுகள் மற்றும் தாள்கள் என எழுத்தின் பதிவு கொஞ்சம் கொஞ் சமாக பரிணாமம் பெற்றது, இன்று மின்னஞ்சலில், வலை தளத்தில், எழுத்தாக மாறியுள்ளது.

நூலக... பிறப்பு...!
எகிப்தின் அலெக்சாண்டிரியாவில், கி. மு. 247ல் உலகின் மிக பெரிய நூலகம் இருந்ததாம். சுமார் 7,000,0000 க்கும் மேற்பட்ட ஆட்டுத் தோல் புத்தகங்கள் அங்கு இருந்தனவாம். 5,000000000000 மாணவர்கள் படித்தன ராம். இந்தி யாவில் கி. பி. 2 ஆம் நூற்றாண் டில் ஆந்தி ராவில் நாகர் ஜுன அரசன் உருவாக்கிய நூலகம் “நாகார் ஜுன வித்யா பீடம்”. இந்த நூல கத்தில் பல விலங்குகளின் வடி வில் 5 மாடிகளும். 1500 அறைகளும் இருந்தன.
கி. பி. 7 ஆம் நூற்றாண்டில் 68,700 பனை ஓலை நூல்களும், 36,0058 பாப்பிரஸ் சுருள் புத்கங்களும் இருந்தன. நாம் பயன்படுத்தும் காகிதத்தை சீனர்கள் கண்டு பிடித்தாலும், புத்தகப் புரட்சியைச் செய்தவர்கள் அரேபியர்கள்தான். முகம்மதியர்களிடமிருந்தே தாள் புத்தக பரிமாணம் துவங்கியது. 8 ஆம் நூற்றாண் டில் மொராக்கோவில் 100 புத்தகக் கடைகள் இருந்தனவாம்.
தமிழ்நாட்டு நூலக வரலாற்றில் பிராமன் இராமாமிர்தம் ரங்கநாதன் இவர்தான் “சென்னை மாநிலத்தின் நூலகத் தந்தை” என்று அழைக்கப்பட்டு மரியாதை செய்யப்படுபவர். 1928 ஜனவரியில் சென்னை நூலக சங்கம் ரங்கநாதனால் உருவாக்கப்பட்டது. 1931 ல் அக்டோபர் 21 ஆம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேல வாசலில் நடமாடும் நூலக வண்டிப் பயணம் தொடங்கப்பட்டது. அங்கு 72 கிராமங்களில் 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்பட்டது...! இதில் 3,782 புத்தகங்கள். 20,000 தடவைகளுக்கு மேல் மக்களுக்குக் கொடுத்து திரும்பப் பெறப்பட்டன.
1990 களில் இந்தியா முழுவதும் அறிவொளி இயக்கம் என்ற மாபெரும் கல்வி இயக்கம் வந்தது. அதன் தொடர் பாக, கிராமத்து மக்களைப் படிக்க வைக்க அறிவொளித் தொண்டர்கள் மாட்டு வண்டிகளிலும் சைக்கிளிலும் ஊர் ஊராக புத்தகம் எடுத்துச் சென்று விற் பனை செய்தனர். ஊர்க்கூட்டம் போட்டு புத்தகம் வாசிக்க கற்றுக் கொடுத்தனர். இப்போதும் கூட அறிவியல் இயக்க உறுப்பினர்கள் உலக புத்தக வாரத்தின் போது ஊர் ஊராக சைக்கிளில் தெரு முனைகளில் புத்தகம் எடுத்துச் சென்று புத்தக விற்பனை செய்கின்றனர்.
வாசிப்பின் நேசிப்பை உணர ஊர்களில் வாசிப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து புத்தக வாசிப்பும் செய்கின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து வாசிப்பு முகாம்களை, குறிப்பாக குழந்தைகள் கல்வி குறித்து நடத்திக் கொண்டிருக்கிறது.
மனித நாகரிக வளர்ச்சியின் பதிவு நூலகமே...!
“புத்தகங்கள் வெறும் உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல. அவை அலுமாரியில் இருந்து நம்மை வழி நடத்தும் உயிரோடு இருக்கும் மனிதங்கள்” என்றார் அமெரிக்க எழுத்தாளர் கில்பர் ஹையாத், மனிதன் வரலாற்றுக்குரியவன்...! நேற்று, இன்று, நாளை என்ற மூன்றும் மனிதனுக்குரியவை.
சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள். நம்பிக்கைகள். சந்தோஷங்கள், சவால்கள், மதிப்பீடுகள், நுணுக்கமான கருத்துக்கள் அனைத்தும் கல்விப் பொருளாக, புத்தகங்களாக மாற வேண்டும்...! காலத்தின் நிகழ்வுகள் உரிய, சரியான முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய உள்ளடக்கம் கொண்ட கல்விதான் மக்களை விடுலை செய்யும்.
ஹுமாயூன் உல்லாசபுரியாக இருந்த ஷேர் மண்டல் மாளிகையை அரிய நூல்களைக் கொண்ட நூலாகமாக மாற்றினார். இந்திய நாட்டின் விடுதலைக் காகப் போராடி தனது 23 வது வயதில் தூக்கிலிடப்பட்ட மாவீரன் பகத் சிங் தூக்குக் கயிறு கழுத்தில் அரங்கேறும் வரை படித்துக் கொண்டே இருந்தான்.
ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு தருபவனே மனித குலத்தின் உண்மையான விடிவெள்ளி - ஜோன் மில்டன்.
ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம் - சேர் ஐசக் நியூட்டன்.
துப்பாக்கிகளைவிட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள் - மார்ட்டின் லூதர் கிங்.
ஆட்சி அதிகாரத்தையே உலுக்கிவிடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு.
“மனிதன் இருப்பு மெளனத்தால் கட்டப்படவில்லை...! அவன் வார்த்தைகளால் செயல்களால் எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால் கட்டமைக் கப்படுகின்றான். - பாவ்லோ பிரையர்.
உலக நாயகனான சார்லி சாப்ளின், ஒவ்வொரு புதிய படம் நடிக்க ஒப்புக்கொள்ளும் போதும், அதன் முன் பணத்தில் முதல் 100 டொலருக்கு புத்தகம் வாங்குவாராம்.
“ஒரு புத்தகத்தைத் திறக்கும் போது, உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்” - தோழர் சிங்காரவேலர்.
“வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டு பிடிக்கப்பட்டது. புத்தகம் மட்டுமே” -மார்க் ட்வைன்
“ஒரு நல்ல வாசகனைக் கொண்டே ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காட்டப்படுகிறது” - ஜோர்ஜ் பெர்னாட்ஷா
“ஒருவர் மூளைக்கும் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள்தான் புத்தகம்” - ஜேம்ஸ்
ரஸ்ஸல் “ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள்; அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்” - அரேபியப் பழமொழி”
புத்தகங்களும், நூலகங்களும் இல்லாத நாடு சிறைச்சாலைக்கு ஒப்பாகும் - நெப்போலியன்
மொத்த இறந்த காலத்தின் ஆன்மாவும் வசிக்குமிடம் புத்தகம் - தோமஸ் கார்லைல்
வாசிப்பின் வாசங்களை குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோரே வரம் பெற்றோர்.
ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது - பைபிள்
அனைவரும் மூளையை உரசிப் பார் க்கும் புத்தகங்களை வாங்குங்கள்...!
குழந்தைகள். நண்பர்கள், நெருங்கியவர் கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இன்று புத்தகங்கள் பரிசளியுங்கள்....!
நாம் உலகப் புத்தக தினத்தன்று குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒன்றாகக் கூடி புத்தகம் படிக்க ஏற்பாடு செய்வோம்.
“புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்...!”
நன்றி தினகரன்

Similar topics
» புத்தகங்களுக்கு வேலை கொடுங்கள்!
» புதிய முயற்சி...கை கொடுங்கள்..
» வயிற்றில் ஒத்தடம் கொடுங்கள்!
» இருந்தால் கொடுங்கள்! -கவிதை
» அன்பை அள்ளிக் கொடுங்கள்!
» புதிய முயற்சி...கை கொடுங்கள்..
» வயிற்றில் ஒத்தடம் கொடுங்கள்!
» இருந்தால் கொடுங்கள்! -கவிதை
» அன்பை அள்ளிக் கொடுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum