சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

தமிழ் அகராதி - " ஊ "  Khan11

தமிழ் அகராதி - " ஊ "

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:37

ஊ - தசை; வினையெச்ச விகுதி; (எ.கா - செய்யூ); கைக்கிளை என்ற இசையைக் குறிக்கும் எழுத்து
ஊக்கம் - மனக் கிளர்ச்சி; முயற்சி; மனவலிமை; உயர்ச்சி; உண்மை
ஊக்கு - முயலுதல் செய்; உற்சாக மூட்டு; கற்பி; சிறிது அசைத்தல் செய்; நெகிழச் செய் [ஊக்குதல்]
ஊகம் - பெண் குரங்கு; கருங்குரங்கு (துடைப்பப்புல்); படை அணிவகுப்பு; யூகித்தறிதல்; ஆலோசனை; யுக்தி; திகைப்பு; ஊமத்தை, கருத்து : எண்ணம் : ஞானம் :
ஊகித்தறிகை : எண்ணுகை : யுக்தி : அறிவு : யூகம் : உட்பொருளை ஆராய்ந்துணர்தல் : நினைவு : புலி : அவாய் நிலையால் வரற்பாலனவற்றை வருவித்தல்.
ஊகி - யூகித்தறி; ஆலோசனை செய் [ஊகித்தல்]

ஊங்கண் - உவ்விடத்து; முன்காலத்தில்; முன்பு
ஊங்கணோர் - முன்னோர்
ஊங்கு - உவ்விடம்; முன்காலத்தில்; மேம்பட்டது; முன்பு : நடு : மிகுதி : உயர்ச்சி : மேல் : ஊங்கண் : ஆடு.
ஊசல் - ஊஞ்சல்; ஊஞ்சல் பாட்டு; முன்னும் பின்னுமான அசைவு; மனந்தடுமாறல்; பதனழிந்த பொருள்
ஊசி - தையலூசி; எழுத்தாணி; கருவிகளில் ஊசி போன்ற பாகம்; கூர்மை; மென்மை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:37

ஊஞ்சல் - ஆடும் பலகை; ஊஞ்சல் பாட்டு
ஊட்டம் - உணவு; செழிப்பு
ஊட்டு - உண்ணச் செய்; புகட்டு; சாய்மேற்று; அனுபவிக்கச் செய் [ஊட்டுதல்]
ஊடல் - புலவி; காதலரிடையே பூசல்
ஊடாடு - நடுவே திரிதல் செய்; கலந்து பழகு; பல தடவை பயிலு [ஊடாடுதல், ஊடாட்டம்]

ஊடு - நடு; இடைப்பட்டது; இடுப்பு; நெசவின் தார் நூல்; புலத்தல் செய்; பிணங்கு [ஊடுதல்]
ஊடுருவு - இடையே நுழைந்து செல் [ஊடுருவுதல்]
ஊண் - உணவு; உண்ணுதல்; அனுபவம்
ஊணன் - மிகையாக உண்பவன்
ஊத்தை - அழுக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:37

ஊதல் - வீக்கம்; வாத நோய்; நிரம்புதல்; குளிர் காற்று; ஊதல் கருவி
ஊதா - சிவப்புக் கலந்த நீலம்
ஊதாரி - வீண் செலவுக்காரன்
ஊதியம் - இலாபம்; பயன்; கல்வி
ஊது - (காற்றை) குழல் போன்ற அமைப்பினால் செலுத்து; துளை செய்; ஒலி செய்; வீங்கு [ஊதுதல்]

ஊதுவத்தி - நறுமணச் சரக்கு தடவிய குச்சி
ஊதை - குளிர் காற்று; வாத நோய்
ஊமத்தம், ஊமத்தை - ஒரு வகைச் செடி
ஊமன் - ஊமையன் (பெண்பால் - ஊமைச்சி) ; கோட்டான்; கூகை
ஊமை - பேச்சுத் திறன் இல்லாதவர்; பேச்சுத் திறன் இல்லாமை; ஒரு வகைப் போர் முரசு; கீரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:37

ஊமையன் - மூங்கையன் (பெண்பால் - ஊமைச்சி)
ஊர் - நகர்ந்து செல்; பரவு; வடிதல் செய்; நெருங்கு; கழலு; தினவெடு; ஏறிச் செலுத்து [ஊர்தல்]; நகரம்; கிராமம்; சூரியன் அல்லது சந்திரனைச் சுற்றித் தோன்றும் பரிவேடம்; ஊர்தல்
ஊர்ச்சிதம் - நிலையான தன்மை; உறுதி
ஊர்த்துவம் - மேல்; மேல் நோக்கியது
ஊர்தி - வாகனம்; மேலேறியது

ஊர்வலம் - ஊரை வலமாக வருதல்
ஊர்வன - ஊரும் பிராணிகள்
ஊரல் - ஊர்ந்து செல்லும் ஒன்று; தேமல்; படர் தாமரை; ஒரு நீர்ப்பறவை; கிளிஞ்சில்; பசுமை
ஊரவர் - ஊர் மக்கள்
ஊரன் - மருதநிலத் தலைவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:38

ஊராண்மை - ஊர்த்தலைமை; தலைமை; தாராள மனப்பான்மை; பகைமேற்செல்லல்
ஊரு - தொடை
ஊருணி - ஊருக்கு நீர் தரும் சிறிய நீர் நிலை
ஊழ் - முதிர்ச்சியடை; பதனழி; மலர்தல் செய் [ஊழ்தல், ஊழ்த்தல்]
ஊழ்வினை - பழவினை

ஊழல் - அழுகிக்கெட்டது; சேறு போல் ஆபாசமானது; முறை கெட்டது
ஊழி - நெடுங்காலம்; யுகம்; உலகம் முடியும் காலம்; வாழ்நாள்; விதி; உலகம்; முறைமை
ஊழியம் - தொண்டு [ஊழியன்]
ஊளை - நரி அல்லது நாயின் ஒலி; தீய நாற்றம்
ஊற்றம் - ஆதாரம்; பற்றுக்கோடு; உறுதி; வலிமை; ஆர்வம்; பழக்கம் தொடுதல் உணர்ச்சி; இடையூறு; கேடு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:38

ஊற்று - (திரவத்தை) வெளியே கொட்டு; வித்திலிருந்து எண்ணெய் வடி [ஊற்றுதல்]; நீரூற்று; சுரத்தல்; கசிதல்; ஊன்றுகோல்; பற்றுக்கோடு
ஊறல் - ஊறுதல்; நீரூற்று; சாறு; கலப்பு; வருவாய்; களிம்பு
ஊறு - (திரவம்) கசி; சுரத்தல் செய்; பதமாக நனை; பருத்தல் செய்; வளர்ச்சியுறு [ஊறுதல்]; தொடுத்தல் உணர்ச்சி; நெருங்குதல்; இடையூறு; துன்பம்; நாசம்; கொல்லல்; உடம்பு; காயம்; வடு; வல்லூறு
ஊறுபாடு - இடையூறு; துன்பம்; காயமுண்டாக்குதல்
ஊன் - இறைச்சி; தசை; உடல்

ஊன்று - நிலை பெறு; நடுதல் செய்; ஆதாரமாகக் கொள்; தாங்கு; தீர்மானம் செய்; தள்ளுதல் செய்; அழுத்து; நோவு படுத்து [ஊன்றுதல்]
ஊனம் - குற்றம்; குறைபாடு; பழி; தீமை; அழிவு 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:38

ஊகடன் - முருங்கை : காட்டு முருங்கை.
ஊகனம் - அனுமித்தல் : தீர்த்தல் : நியாயஞ் சொல்லுதல்.
ஊகனி - துடைப்பம்.
ஊகாஞ்சிதம் - தற்குறிப்பேற்ற அணி.
ஊகாமுள் - ஊகம்புல்லின் முள்.


ஊகாரம் - ஊ என்னும் எழுத்து.
ஊகித்தல் - திட்டமாக எண்ணுதல் : அறஞ்சொல்லுதல் : மட்டுக் கட்டுதல் : தருக்கித்து ஆராய்தல்.
ஊகு, ஊகூ - ஒரு வித்தியாதரன் : கந்தருவருள் ஒருவன் : ஊகம்புல்.
ஊகை - ஊகம்.
ஊக்கப்பாடு - ஊக்கங்கொள்கை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:38

ஊக்கலர் - முயற்சியுடையவர்.
ஊக்கல் - எழுப்பல் : ஏறுதல் : தளர்த்தல் : அசைத்தல் : மிகுதி : யாக்கல் : முயலுகை : 
ஊக்குதல் : முயலுதல் : ஆட்டுதல் : நெகிழ்த்தல் : தப்புதல் : கற்பித்தல் : நினைத்தல் : உற்சாக மூட்டுதல்.
ஊக்கார் - மேற்கொள்ளார்.
ஊங்குதல் - ஊக்கல்.
ஊங்கணூர் - சேர நாட்டிற் கடற்கரைக் கண்ணிருந்த ஓர் ஊர் : இதன் பக்கமாகக் கடலில் வஞ்சக உருக் கொண்டு 
முளைத்து நின்ற ஒரு கடப்ப மரத்தைச் சேரனொருவன் வெட்டினான்.


ஊங்குதல் - ஆடுதல்.
ஊசரம் - உவர்மண் : பூவழலை : உவர்த்தரை.
ஊசலாடல் - அடிக்கடி போக்குவரத்தாயிருத்தல் : ஊஞ்சலாடுதல்.
ஊசல்வரி - ஊஞ்சற்பாட்டு.
ஊசல்சீர் - ஊசல்வரி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:39

ஊசற்பயற்றுக்காரி - வறுமைமிக்க கிழவி.
ஊசற்பருவம் - பெண்பாற்பிள்ளைத் தமிழினுள் ஓர் உறுப்பு.
ஊசா - மூக்குத்திச் செடி.
ஊசாடுதல் - ஊடாடுதல் : ஊசலாடுதல் : உலாவித்திரிதல்.
ஊசாட்டம் - உலாத்து : களவு : விரைவு : ஊசலாட்டம் : வரத்துப் போக்கு.


ஊசாலி - மீன் பிடிகூடை.
ஊசிக்கண் - சிறு கண்.
ஊசிக்கப்பல் - புகையிலைவகை.
ஊசிக்காது - நுனித்தறியும் செவிப்பயன் : ஊசித்துளை.
ஊசிக்காந்தம் - இரும்பிழுக்குங் காந்தக்கல் : சலாகை : சும்பகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:39

ஊசிக்காய் - ஒருவகைத் தேங்காய்.
ஊசிக்கார் - ஒருவகை நெல்.
ஊசித்தூற்றல் - சிறுமழை.
ஊசிப்புழு - ஒருவகைப் புழு.
ஊசிமிளகாய் - கொச்சிமிளகாய்.


ஊசிமுறி - இடைக்காடர் இயற்றிய ஒரு நூல்.
ஊசிவெண்டோடு - கூரிய வெள்ளியதோடு.
ஊசிவேர் - சிறுவேர்.
ஊசுதல் - சீவுதல் : அழுகுதல் : சுவை கெடுதல் : கைத்தல் : நாறுதல் : பதனழிதல்.
ஊச்சில் - தசைநோய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:39

ஊச்சுதல் - உறிஞ்சுதல்.
ஊஞ்சற்பாட்டு - ஊஞ்சலாடும் போது பாடும் பாட்டு.
ஊடகம் - ஒருவகைக் கடல்மீன் : மனம்.
ஊடரம் - உவர்நிலம்.
ஊடலுவகை - புலவியின்பின் கூடலால் உண்டாகும் மகிழ்ச்சி.


ஊடறுத்தல் - நடுவறுத்தல் : வழக்குத் தீர்த்தல் : ஊடுருவுதல்.
ஊடாடல், ஊடாடுதல் - கல்வி பயிலுதல் : நடமாடுதல் : பழகுதல் : நடுவே திரிதல் : 
பலகாற் பயிலுதல் : கலந்து பழகுதல் : கலத்தல் : சஞ்சரித்தல் : பெருமுயற்சி செய்தல்.
ஊடாடிப்பார்த்தல் - ஆராய்ந்து பார்த்தல். 
ஊடாட்டம் - பழக்கம் : பலகாற் பயிலுகை.
ஊடான் - கடல்மீன் வகையில் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:39

ஊடுசாகுபடி - இருவகைத் தானியங்களைக் கலந்து பயிரிடுகை.
ஊடுசெல்லல், ஊடு செல்லுதல் - நடுவிற்போதல் : இடையே போதல்.
ஊடுதட்டு - இருவர் வேலையினிடையே, இடையிற் புகுந்து பெற்ற ஊதியம்.
ஊடுதல் - பலத்தல் : பிணங்குதல்.
ஊடுதாக்கல், ஊடுதாக்குதல் - ஆற்றலை ஆராய்ந்து பார்த்தல் : பின்னிடாமல் எதிர் நிற்றல்.


ஊடுபற்றுதல் - உள்ளே பற்றியெரிதல்.
ஊடுபோக்கல், ஊடுபோக்குதல் - உருவச் செய்தல் : நடுவறுத்தல் : வழக்குத் தீர்த்தல்.
ஊடுருவல், ஊடுருவுதல் - தட்டுருவல் : நுழைதல் : பீறுதல் : துளைத்தல் : புதைத்தல் : இடையுருவிச் செல்லுதல்.
ஊடுவெளி - இடைவெளி.
ஊடூடே - அடிக்கடி : இங்கும் அங்கும் : இடையிடையே : அப்போதைக்கப்போது : ஊடேயூடே.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:40

ஊடை - நூற்றார் : மனைவி : உண்டை : ஊடு : புடைவையின் குறுக்குநூல்.
ஊடையம் - நீரரண்.
ஊட்டல் - உண்பிக்கை : ஊட்டுதல் : விலங்கின் கன்றுண்ணல்.
ஊட்டி - குரல்வளை : உணவு : பறவையுணவு : மிடறு : மழை.
ஊட்டித்தல் - தாளியடித்தல்.


ஊட்டிரம் - தேட்தொடுக்கி.
ஊட்டுணை - தலையாட்டம்.
ஊட்டுதல் - புகட்டுதல் : உண்ணச் செய்தல் : விருந்திடல் : நுகரச் செய்தல் :
கன்று அல்லது குட்டி பால் குடித்தல் : அகிற்புகை பஞ்சு மை முதலியன ஊட்டுதல் :
நினைப்பூட்டுதல் : இன்ப துன்பங்களை யருத்தல்.
ஊட்டுப்புரை - கேரள நாட்டில் பார்ப்பனர்க்கு உணவளிக்கும் இடம்.
ஊட்டுவான் - சமையற்காரன்.


15
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:41

ஊணம் - ஒரு நாடு.
ஊணர் - ஊணநாட்டார் : பேருண்டிக்காரர்.
ஊணல் - ஊணுதல்.
ஊணா - சடைச்சிமரம்.
ஊணி - உணவு கொள்பவள்.


ஊணுதல் - ஊன்றுதல் : நடுதல்.
ஊண்சாலை - அன்னசாலை.
ஊண்தழல் - வயிற்றுத் தீ.
ஊதநாதன் - இனத்தைக் காக்கும் யானை.
ஊதம் - யானைக் கூட்டம் : போருக்கு வருமாறு கேட்டல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:42

ஊதல்போடுதல் - புகை போட்டுப் பழுக்கச் செய்தல் : பெருச்சாளி போன்றவை 
பொந்தினின்றும் வெளியேற்றப் புகை மூட்டுதல்
ஊதற்காற்று - பனிக்காலத்துக் குளிர் காற்று.
ஊதாங்குழல் - நெருப்பூதுங்குழல்.
ஊதிகை - முல்லைக் கொடி.
ஊதிடு கொம்பு - கொம்பினாற் செய்த இசைக்குழல்.


ஊதிப்பார்த்தல் - மந்திரித்தல்.
ஊதிப்போடுதல் - எளிதில் வெல்லுதல்.
ஊதிலி - ஊதுகுழல்.
ஊதினபொன் - புடமிட்ட பொன்.
ஊதுகட்டி - சொக்கவெள்ளி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:42

ஊதுகணை - கணைநோய்வகை : குழந்தைகள் நோய்வகை.
ஊதுகரப்பான் - கரப்பான் நோய் வகையில் ஒன்று.
ஊதுகாமாலை - ஒருநோய்.
ஊதுகுழல் - ஒருவாச்சியம் : நெருப்பூதும் குழல் : ஊதும் இசைக்குழல்.
ஊதுகொம்பு - ஊதிடு கொம்பு : ஆம்பல் : இரலை : கொம்பு : கோடு : வயிர்.


ஊதுதல் - குழலூதல் : தீயெரிய ஊதல் : துளைத்தல் : புடமிடுதல் : நுகர்தல் :
ஒலித்தல் : வீங்குதல் : அரித்தல் : காற்று நொய்தாய் வீசுதல் : நோவு தீர ஊதுதல்.
ஊதுமா - ஓர் இனிப்புக் கூழ்.
ஊதுமாந்தம் - குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய். 
ஊதும் - நுகரும்.
ஊதுலைக்குருகு - துருத்தி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:42

ஊதுவழலை - ஒருவகைப் பாம்பு.
ஊத்தங்காய் - புதைத்துப் பழுக்க வைத்த காய்.
ஊத்தப்பம் - தோசை வகை.
ஊத்து - ஊதுகை : காகளத்தொனி : உடம்பு ஊதுதல்.
ஊத்தைக்குடியன் - ஒரு பேய்.


ஊந்து - கச்சோலம்.
ஊமச்சி - ஊமைப்பெண் : நத்தை : மட்டி.
ஊமணச்சட்டி - சூளையில் நன்றாய் வேகாத சட்டி.
ஊமணச்சி - அழகற்றவள்.
ஊமணாமூஞ்சி - பொலிவற்ற முகமுள்ளவர் : பேசுந் திறமில்லாதவர் : ஊமணையன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:42

ஊமணை - பேசுந்திறனற்றவர் : அழகற்றது.
ஊமற்கரி - பனங்கொட்டைக் கரி.
ஊமாண்டிகாட்டுதல் - பிள்ளைகளை அச்சுறுத்துதல்.
ஊமிள் - சிறுபூனை.
ஊமைக்கட்டி - முகங்கொள்ளாத சிலந்திக்கட்டி.


ஊமைக்காயம் - முரட்டடியால் வெளியில் காயம் தெரியாது உண்டான உள் வீக்கம்.
ஊமைக்காய் - பருப்பற்ற காய்.
ஊமைக்கிளாத்தி - ஒருவகை மீன்.
ஊமைக்கோட்டான் வெயில் - மேகமூட்டத்தில் உறைக்கும் வெயில்.
ஊமைத்தசும்பு - வாயில்லாத குடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:43

ஊமைமணி - நாக்கில்லாத மணி.
ஊமையெழுத்து - ஒலியற்றவெழுத்து : மெய்யெழுத்து : பிரணவம்.
ஊம் - மவுனம் : ஊமை.
ஊய்தல் - பதனழிதல் : ஊசுதல்.
ஊரகம் - ஒரு திருப்பதி.


ஊரணி - ஊருணி.
ஊரண்டினார் - கள்ளி.
ஊரவியன் - வைசியன்.
ஊரற்புண் - ஆறாப்புண் : காய்ந்து வரும் புண்.
ஊரா - ஊர்ப்பசு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:43

ஊராக்குதிரை - குதிரைமலை.
ஊராட்சி - ஊர் ஆளுகை : ஒரு பழைய வரி.
ஊராண்மை - ஊரையாளுந் தன்மை : மிக்க செயல் : ஒப்புரவு : உபகாரியாந்தன்மை : ஊரின்கண் மேம்பாடுடைமை : பகைமேற் செல்லுகை.
ஊராநற்றேர் - வான்கலம் : வானூர்தி.
ஊரார் - ஊரவர் : பிறர்.


ஊராளி - ஊரதிகாரி : ஒரு சாதியாள் : ஒரு மலைச் சாதியான் : உழவுத் தொழில் புரிவோன் : வரிக்கூத்துவகை.
ஊரி - இளமை : சங்கு : முகில் : ஒருவிதப் பூண்டு : புல்லுருவி.
ஊரிலிகம்பலை - ஊர்க்கலகம்.
ஊரின் - சென்றால்.
ஊரின்னிசை - வெண்பாக்களால் சிறப்பிக்கும் ஒரு பிரபந்தம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:43

ஊருகால் - சங்கு : நத்தை.
ஊருசன் - வைசியன்.
ஊருடைமுதலி - முருங்கை.
ஊருடையான் - ஊர்க்கணக்கன்.
ஊருதல் - ஏறுதல் : செலுத்துதல்.


ஊரெறிதல் - ஊரைக் கொள்ளையிடுதல்.
ஊரெறிபறை - பாலை நிலத்துப் பறை.
ஊரோச்சம் - ஊரெல்லாம் பேசத்தக்கதாயிருத்தல்.
ஊர்காவல் - தலையாரி.
ஊர்கொண்டன்று - நிரம்புறுதலுற்றது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:43

ஊர்கொலை - பகைமேற் செல்வோர் : நிரைகொள்ளுமுன் நிரை காவலரைக் கொல்லும் புறத்துறை.
ஊர்கோடல் - ஊர் கொள்ளல் : பரிவேடித்தல் : சுற்றிப்பரவுதல் : பரிவேடிப்பு.
ஊர்கோள் - பரிவேடம்.
ஊர்க்கலாபம் - மக்களுக்குள் உண்டாகும் கலகம்.
ஊர்க்கற்செம்மை - புடமிட்ட நிலை. 


ஊர்க்காறுவாறு - ஊர்விசாரணை.
ஊர்க்குருவி - அடைக்கலக்குருவி : கடலகம் : கலிங்கம் : கல்வி : குனிங்கரி : சகடம் : புலிங்கம்.
ஊர்ச்சம் - ஊக்கம் : சுவாசம் : சௌகரியம் : கார்த்திகைமாதம்.
ஊர்ணநாபி - சிலந்திப்பூச்சி.
ஊர்ணம் - ஆடு முதலியவற்றின் மயிர் : நூலிழை : புருவ நடுவிலுள்ள சுழி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:43

ஊர்தல் - ஊருதல் : தவழ்தல் : செல்லுதல் : பரவுதல் : ஏறிச் செல்லுதல் : தினவுறுதல் : 
தடவுதல் : சஞ்சரித்தல் : மேற்கொள்ளுதல் : நெருங்குதல் : மறைத்தல் : அடர்தல் : வடிதல் : மிகுதல்.
ஊர்த்தலைமை - நாட்டாண்மை.
ஊர்த்தல் - ஊற்றுதல்.
ஊர்த்துவதி - மேனோக்கிச் செல்லுகை.
ஊர்த்துவசீலம் - தீ.


ஊர்த்துவதாண்டவம் - மேலே ஒரு காலைத் தூக்கியாடும் நடனம்.
ஊர்த்துவலிங்கன் - சிவன்.
ஊர்த்துவாங்கம் - அரைக்கு மேற்பட்டவுறுப்பு.
ஊர்நத்தம் - ஊரில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டுள்ள இடம் : குடியிருப்பு.
ஊர்நேரிசை - ஒரு நூல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:44

ஊர்பு இழிதல் - ஏறியிறங்கல்.
ஊர்ப்பட்டது - மிகுந்தது.
ஊர்ப்பாக்கு - திருமண அழைப்புக்காக வைக்கும் தாம்பூலம்.
ஊர்ப்பாடு - பிறருடைய வேலை.
ஊர்ப்புரட்டு - பெரும்பொய்.


ஊர்ப்புலம் - ஆமணக்கு.
ஊர்மன்றம் - ஊரிலேயுள்ள பொது இடம்.
ஊர்மி - ஒளி : உயிரைத் துன்புறுத்தல் : நீரோட்டம் : அலை : வருத்தம் : வேட்டி மடிப்பு : 
வயிறு முதலிய இடங்களிலுள்ள மூன்று மடிப்பு : விரகம் : ஆற்றாமை : விரைவு.
ஊர்மிகை - அலை : மோதிரம் : திரை ஓதம்.
ஊர்மிளை - இலக்குமணன் மனைவி : கணவனால் விரும்பப்பட்ட கற்புள்ள மனைவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:44

ஊர்முகம் - படைகள் பொரும் இடம்.
ஊர்வசி - தேவகணிகையரில் ஒருத்தி.
ஊர்வரப்பன் - வெள்ளரி.
ஊர்வன் - ஏழுபிறப்பில் ஒன்று அஃது ஊர்ந்து செல்வது.
ஊர்வாரி - ஊர்ச்சலதாரை.


ஊர்வாரியம் - சிற்றூர்ச்சபை.
ஊர்விருத்தம் - ஒருவகை நூல்.
ஊர்வெண்பா - பாட்டுடைத்தலைவன் ஊரினைச் சார வெண்பாவாற் பத்துச் செய்யுள் பாடுவது.
ஊலுகம் - ஆந்தை : கோட்டான் : வல்லூகம்.
ஊழகம், ஊழம் - வைகறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஊ "  Empty Re: தமிழ் அகராதி - " ஊ "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum