சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Khan11

தமிழ் அகராதி - " ஒ "

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:39

First topic message reminder :

ஒ - போன்றிரு; தகுதியாயிரு; சமமாகு; ஒழுக்கத்துடனிரு; ஒற்றுமைப்படு [ஒத்தல்]
ஒக்க - சமமாக; ஒரு சேர
ஒக்கப்பாடு - பிறன் கூறுவதை ஆதரித்துக் கூறு [ஒக்கப்படுதல்]
ஒக்கல் - சுற்றத்தார்; இரு துண்டுகளைத் தைத்தல்
ஒகரம் - 'ஒ' என்ற எழுத்து; மயில்

ஒசி - முறிந்து போ; பளுவினால் வளைவாகு; நாணமடை; சோர்வுறு; வருந்து [ஒசிதல், ஒசித்தல்]
ஒட்ட - அடியோடு; இறுக; போல
ஒட்டகம், ஒட்டகை - ஒரு விலங்கு
ஒட்டடை - நூலாம் படை; சிலந்திக் கூடு; ஒருவகை நெல்
ஒட்டம் - பந்தயப் பொருள்; மண்வெட்டும் பொழுது விடும் அளவுத் திட்டு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:48

ஒதுக்குப்பச்சை - புழுங்கலில் வேகாத நெல்.
ஒதுக்குப்புறம் - ஒதுங்கும் மறைவிடம் : தனித்த இடம் : ஒதுப்புறம்.
ஒதுக்குப்பொதுக்குப்பண்ணுதல் - பொருளை மோசஞ் செய்தல் : பொருளை மறைத்து வைத்தல்.
ஒதுங்குதல் - விலகுதல் : கரையிற்சார்தல் : சரணம்புகுதல் : பின்னடைதல் : நடத்தல் : தோல்வியடைதல்.
ஒத்தணம் - ஒற்றடம் : வெப்பம் பட ஒற்றுகை.


ஒத்தமலங்கொட்டுதல் - இடக்குச் செய்தல்.
ஒத்தல் - போலுதல் : சமமாதல் : தகுதியாதல் : உடன்பாடாதல் : ஒன்றாதல் : பொருந்தல் : ஒற்றுமைப்படுதல்.
ஒத்தவழி - ஏற்றவழி : தக்கநெறி : நேர்வழி : உடன்பட்டவிடத்து.
ஒத்தறுத்தல் - தாளவரையறை செய்தல் : தட்டல் : வட்டணை : வட்டித்தல்.
ஒத்தன்று - ஒத்தது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:48

ஒத்தாங்கு - ஒப்ப.
ஒத்தாசை - உதவி.
ஒத்தாழிசை - கவிப்பாவின்வகை.
ஒத்திசை - ஒத்திருக்கை : ஒப்பு : சரி பார்க்கை : உதவி.
ஒத்துக்கொடுத்தல் - பொறுப்பேற்றல் : கணக்குகட்கு வகை சொல்லுதல்.


ஒத்துக்கொள்ளுதல் - உடன்படுதல் : ஏற்றுக் கொள்ளுதல்.
ஒத்துதல் - விலகுதல் : ஒற்றுதல் : தாக்குதல் : தாளம்போடுதல்.
ஒத்துப்பாடுதல் - உடன்படுதல் : ஏற்றுக் கொள்ளுதல்.
ஒத்துழையாமை - இணங்கி நடவாமை.
ஒப்பக - உவமையுருபு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:48

ஒப்பக்கதிர் - கம்மக் கருவிகளுள் ஒன்று.
ஒப்பங்கூறு - பாகப்பத்திரம்.
ஒப்பங்கொடுத்தல் - அழுத்துதல் : கட்டளை கொடுத்தல்.
ஒப்பணி - ஓர் அலங்காரம்.
ஒப்பமிடுதல் - சமமாக்குதல் : அழகு செய்தல் : கையெழுத்துப் போடுதல் : மணி முதலியன துலக்குதல்.


ஒப்பரவு - ஒப்பம் : ஒழுங்கு : சமாதானம் : ஒப்புரவு : ஒற்றுமை : முறைமை.
ஒப்பல் - உடன்படல்.
ஒப்பளவை - உவமானப் பிரமாணம் உவமையினால் உவமேயத்தை அறிவது.
ஒப்பாய் - ஒப்பாவாய் : ஒப்பாக உடன்படாய் : உடன்பாடு.
ஒப்பாரித்தல் - ஒத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:50

ஒப்பான் - ஒத்த இயல்புடையவன்.
ஒப்பிதம் - இசைவு : ஒவ்வுதல் : சமம் : சம்மதம் : சம்மதித்தல் : சமாதானம் : இணக்கம்.
ஒப்பித்தல் - அலங்கரித்தல் : விழுக்காடிடுதல் : ஒத்துக் கொள்ளச் செய்தல் : உவமித்தல் : ஏற்கச் செய்தல்.
ஒப்பில்போலி - ஒப்புமைப் பொருளைத் தராத போல் என்னும் உவமை உருபு.
ஒப்பின்முடித்தல் - ஒன்றனது இலக்கணத்தை அதுபோன்ற வேறொன்றற்கும் முடிவு செய்தலாகிய உத்தி.


ஒப்பின்மை - நிகரின்மை.
ஒப்புக்கழுதல் - போலியாக அழுதல்.
ஒப்புக்கு - மனத்தோடு பொருந்தாமல் : போலியாக.
ஒப்புக்கொப்பாரம் - விருந்தினரை உபசரிக்கை.
ஒப்புமைக் கூட்டம் - புகழ்தலிலும் இகழ்தலிலும் ஒன்றை அதனினும் மிக்க வேறொன்றோடு உவமிக்கும் ஓர் அணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:50

ஒப்புமொழி - உடன்படிக்கை.
ஒப்புவித்தல் - அத்தாட்சி பண்ணல் : ஒப்புக் கொடுத்தல் : ஏற்கும்படி சேர்த்தல் : மெய்ப்பித்தல் : திருட்டாந்தங் காட்டுதல் : கடன் சாட்டுதல் : பாடம் ஒப்புவித்தல்.
ஒப்புரவறிதல் - உலக நடையினை அறிந்து செய்தல்.
ஒப்புழி - உடன்பட்டபோது : ஒத்தவிடம்.
ஒப்புறுத்தல் - உவமித்தல்.


ஒம்மல் - ஓமல் : ஊர்ப்பேச்சு.
ஒமை - மாமரம்.
ஒயில்மரம் - ஆக்கினைக்கென நிறுத்திய மரம் : தொழுமரம்.
ஒய் - யானையைப் பாகர் வையும் ஆரிய மொழி : ஒழி : தப்பு : கொடு : போக்கு : நீங்கு : செலுத்து.
ஒய்தல் - செலுத்துதல் : தவிர்தல் : போக்குதல் : இழுத்தல் : கொடுத்தல் : தப்புதல் : விட்டொதுங்குதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:50

ஒய்யர் - செலுத்துவோர் : தளர்ந்தோர்.
ஒய்யல் - செலுத்துதல் : நீங்கல் : கொடுத்தல் : கவர்தல் : ஒதுங்க வேண்டாம்.
ஒய்யாரக்காரன் - ஆடம்பரம் உள்ளவன்.
ஒய்யென - விரைவாக : கடுக : மெல்ல.
ஒரணை - இரட்டை : இரண்டு : ஓரிணை.


ஒராஅ - நீங்காத : நீங்காமல் : நீங்கி : நீங்கமாட்டார். 
ஒராஅர் - நீங்காதவர்.
ஒராங்கு - ஓராங்கு : ஒருசேர : இடைவிடாமல் : ஒன்றுபோல் : ஒருங்கு.
ஒரானொரு - ஏதோவொன்று.
ஒரித்தல் - ஒற்றுமையாய் இருத்தல் : விருப்பமாய் இருத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:50

ஒரீஇ - நீங்கி : விலகி.
ஒருகட்பகுவாய்ப்பறை - பதலை.
ஒருகலை - ஒருகூறு.
ஒருகாலிலி - குபேரன் : சனி.
ஒருகிடை - கிடந்த இடை.


ஒருகுடி - தாயத்தார்.
ஒருகுழையவன் - பலராமன்.
ஒருகுறி - ஒருமுறை.
ஒருகூட்டு - ஒரு சேர்மானம்.
ஒருகை பார்த்தல் - வெல்ல முயலுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:50

ஒருகோலுடையார் - ஏகதண்டித் துறவிகள்.
ஒருக்க - எப்பொழுதும்.
ஒருக்கடுத்தல் - ஒப்பாக நினைத்தல்.
ஒருக்கணித்தல், ஒருக்களித்தல் - ஒரு பக்கமாகச் செய்தல்.
ஒருக்கம் - மனவொடுக்கம் : ஒரு தன்மை.


ஒருக்கால் - ஒருமுறை : ஒருதரம் : ஒருகால் : கோபிக்காதே : அடங்காதே.
ஒருகையாயிருத்தல் - எதிர்க்கட்சிக்குப் பகைமையாய் மற்றொரு பக்கத்திலேயே இருத்தல்.
ஒருக்குதல் - ஒன்று சேர்த்தல் : அடக்குதல் : அழித்தல் : ஒருக்கல்.
ஒருங்கல் - அடங்கல் : ஒருவழிப்படல் : ஒதுங்கல் : ஒன்றாகச் சேர்தல் : கேடு.
ஒருங்கிய - ஒதுங்கும் படியான.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:51

ஒருங்கியல் அணி - புணர் நிலையணி.
ஒருங்குடன் தோற்றம் - ஓர் அணி.
ஒருங்குதல் - ஒருங்கல் : அடங்குதல் : அழிதல் : ஒருவழிப்படல் : ஒன்று கூடுதல் : ஒதுங்குதல்.
ஒருங்குபடல் - ஒரு சேரத் தோன்றுதல்.
ஒருசந்தி - ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் உணவு கொள்ளும் வழக்கம்.


ஒரு சாயல் - ஓர் ஒப்பு.
ஒருசாராசிரியர் - ஆசிரியருள் ஒரு கொள்கையினர்.
ஒருசாரார் - ஒரு பக்கத்தவர்.
ஒருசார் - ஒரு பக்கம்.
ஒருசாலை மாணாக்கர் - ஒரு பள்ளியிற் பயின்ற மாணாக்கர். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:53

ஒருசிறிது - மிகச் சிறிது.
ஒரு சிறை - ஒரு பக்கம் : ஒரு பகுதி : வேறிடம்.
ஒருசீரானவன் - ஒரே தன்மையாக இருப்பவன்.
ஒரு சொல் - உறுதிச் சொல் : பல சொல்லாயிருந்தும் ஒரு சொன்னீர்மைப் பட்டது.
ஒருசொன்னீர்மை - சொற்கள் இணைந்து ஒரு பொருளே தருந் தன்மை.


ஒருசொல்வாசகன் - சொன்ன சொல் தவறாதவன்.
ஒருச்சரிவு - ஒருக்கணிப்பு : ஒரு சார்வு : சாய்வு.
ஒருதரம் - ஒருமுறை : ஒரு விதம்.
ஒருதலைக்காமம் - ஆண் பெண் இருவர்களில் ஒருவர் மட்டுங் கொள்ளும் காதல்.
ஒருதலையுள்ளுதல் - அவத்தை பத்தனுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:53

ஒருதலை வழக்கு - பட்சபாதமான தீர்ப்பு.
ஒருதனி - ஒப்பில்லாத தனி.
ஒருதன்மை - மாறாத் தன்மை.
ஒருதாரை - இடையீடில்லாத நீரொழுக்கு.
ஒருதிறம் பற்றுதல் - ஒரு பக்கமாக இருத்தல்.


ஒருத்தலைப்பாரம், ஒருதலைப்பாரம் - ஒரு பக்கத்தில் மிகுந்த பாரம்.
ஒருத்தல் - விலங்கேற்றின்பொது : எருமைக்கடா : களிறு : பன்றி : கரடி : புலி : புல்வாய் : மரை : மான் : யானை இவற்றின் ஆண்.
ஒருத்தன் - ஒப்பற்றவன்.
ஒருத்து - மன ஒருமைப்பாடு.
ஒருபடம் - இடுதிரை : எழினி : படுதா : மறைவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:53

ஒருபடி - ஒருவகை : ஒருவாறு.
ஒருபடித்தாய் - அவ்விதமாய் : ஒரே விதமாய் : இருக்க வேண்டிய நிலைக்குச் சிறிது மாறுதலாய்.
ஒருபது - பத்து.
ஒருபால் - ஒருமைப்பால்.
ஒருபாவொருபஃது - நூல் வகையுள் ஒன்று.


ஒருபான் - பத்து.
ஒருபிடி - உறுதி : ஒரே பற்று : கைப்பிடியளவு : பிடிவாதம்.
ஒருபிறப்பு - ஒருமை.
ஒருபுடை - ஏகதேசம் : ஒரு பக்கம்.
ஒருபுடையுவமை - முழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில் மட்டும் ஒத்திருக்கும் உவமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:53

ஒருபுடையொப்புமை - ஏகதேசவுவமம்.
ஒருபூ - ஒருபோகம்.
ஒருபொருட்கிளவி - ஒரு பொருளைக் கருதும் பல சொற்கள்.
ஒருபொருட்டீபகம் - ஒரு பொருள் தானே கவிமுற்றுந் தீவகமாய் நின்று முடிவது.
ஒருபொருட் பன்மொழி - ஒரு பொருளைத் தரும் பல சொற்கள் : மீமிசைச் சொல்.


ஒருபொருள் - கடவுள் : உண்மை.
ஒருபோகு - ஒத்தாழிசைக் கவிவகையுள் ஒன்று : ஒரு படித்தான நிலம்.
ஒருபோக்கன் - வேறுபட்ட நடையுள்ளவன்.
ஒருபோக்காய்ப்போதல் - திரும்பி வராது பொதல்.
ஒருபோது - ஒருபொழுது : ஒரு சமயம் : ஒரு முறை உண்டு விரதமிருக்குங் காலம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:54

ஒருப்பட - ஒருமிக்க : மனம் ஒக்க : ஒரு நினைவாக : கருத்து ஒன்றுபட.
ஒருப்படல் - ஒரு தன்மையாயிருத்தல் : ஒரு நினைவாதல் : ஒன்றித்தல் : உடன்படுதல் : துணிதல் : முயலுதல் : ஒன்று கூடுதல்.
ஒருப்படுதல் - ஒருப்படல் : பிறர் கருத்துக்கு உடன்படுதல்.
ஒருப்படுத்துதல் - வழிவிடுதல் : முடிவு செய்தல் : உடன்படச் செய்தல் : ஒன்று கூட்டுதல்.
ஒருப்பாடு - முயற்சி : சம்மதம் : மனத்திண்மை : ஒன்றிநிற்கை.


ஒருப்பிடி - உறுதிப்பிடி : வலுப்பிடி.
ஒருமடை செய்தல் - ஒருமுகமாக்குதல்.
ஒருமட்டு - ஒருவாறு.
ஒருமரம் - அழிஞ்சில் மரம் : செம்மரம் : பெருமரம்.
ஒருமனப்பாடு - மனவடக்கம் : மனவிணக்கம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:54

ஒருமாவரை - ஒருமாவும், அரைமாவும்.
ஒருமி - ஒருமைப்பாடு என்னும் ஏவல்.
ஒருமிக்க - ஒருசேர.
ஒருமித்தல் - ஒன்றுசேர்தல் : ஒன்றுபடல் : உடன்படல்.
ஒருமிப்பு - ஒன்றிப்பு : ஒற்றுமைப்படுகை : மனத்தை ஒன்றிற் செலுத்துகை.


ஒருமு - ஒரசையானாகிய மொழி.
ஒருமுகமாய்ப் பேசுதல் - எல்லாரும் ஒரேபடியாகப் பேசுதல்.
ஒருமுகம் - நேர்வழி : ஒற்றுமை : ஒரு கூட்டம் : ஒருபுறம் : ஒருகட்சி.
ஒருமகவெழினி - ஒருவகைத்திரை.
ஒருமுற்றிரட்டை - ஓரடிமுற்றெதுகையாய் வருவது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:54

ஒருமை பன்மை மயக்கம் - மொழிக்குள் ஒருமை பன்மைகள் மயங்கி வழங்குகை.
ஒருமைப்பாடு - ஒன்றிப்பு : ஒற்றுமைப்படுகை.
ஒருமைமகளிர் - பிற ஆடவர்பால் செல்லாத மனமுடைய மாதர்.
ஒருமொழி - ஆணை : பல சொற்களாய்ப் பிரிக்க முடியாத மொழி.
ஒருவயிற்றோர் - உடன் பிறந்தார்.


ஒருவல் - ஒருவுதல் : விலகுதல் : ஒத்தல் : நிகரல்.
ஒருவழித்தணத்தல் - அலர் அடங்குதற் பொருட்டுத் தலைமகன் சிலநாள் வேறிடத்திற்குச் சென்று உறையும் அகத்துறை.
ஒருவழிப்படுதல் - ஒற்றுமைப்படுதல்.
ஒருவாய்க்கோதை - ஒரு கட்பறை.
ஒருவியாழவட்டம் - பன்னிரண்டு ஆண்டு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:55

ஒருஉத்தொடை - அளவடியுள் நடுவிருசீர்கள் ஒழிய, முதற்சீர்க்கண்ணும் மோனை முதலாயினவரத் தொடுப்பது.
ஒரூஉமுரண் - முதலாம் சீரினும் நான்காம் சீரினும் முரண்படுவது.
ஒருஉவண்ணம் - யாற்றொழுக்காகப் பொருள் கொண்டு செல்லுஞ் சந்தம்.
ஒரோவொருவர் - தனித்தனி ஒவ்வொருவர்.
ஒலரி - சிறுமீன்.


ஒலிசை - மணமகளின் சுற்றத்தார் திருமணத்தின் நான்காம் நாள் மணமகனுக்குக் கொடுக்கும் வரிசை.
ஒலிதல் - தழைத்தல்.
ஒலித்தல் - தழைத்தல் : ஆடை அழுக்கு அகற்றல் : விளக்குதல் : ஒலி செய்தல் : ஒலி செய்தலைக் குறித்து வரும் பிற பொருள் மொழிகள்.
ஒலித்த - தழைத்த.
ஒலிப்பு - பேரொலி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:55

ஒலிமுகவாயில் - கோட்டையின் முன்புற வாயில் : நகரம் அல்லது முன்புற வாயில்.
ஒலியற்கண்ணி - தளிர்மாலை.
ஒலியன் - ஆடை.
ஒலியின் காரியம் - எழுத்து.
ஒலியெழுத்து - மொழிமுதற் காரணமாகிய அணுத்திரள்.


ஒலிவு - ஒருவகை மரம் : ஒரு வாச்சியம்.
ஒலுகு - திண்டு.
ஒலுங்கு - பெருங்கொசு.
ஒலோவு - குறைவாகு.
ஒல் - ஒலிக் குறிப்பு : முடிவிடம் : ஒல்லென்னேவல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:55

ஒல்க - சாய.
ஒல்கல் - ஒல்குதல்.
ஒல்காமை - தளராமை : நாணாமை : கூசாமை : தளராமல் : தளராமே.
ஒல்குதல் - தளர்தல் : குழைதல் : நுடங்குதல் : சுருங்குதல் : ஒதுங்குதல் : வளைதல் : குறைதல் : வறுமைப்படுதல் : 
மேலே படுதல் : மனம் அடங்குதல் : கெடுதல் : நாணுதல் : எதிர்கொள்ளுதல்.
ஒல்லல் - இயலுகை : இசைதல் : இயலல் : பொருந்தல் : பொருத்துதல் : ஊடல் தீர்க்கை.


ஒல்லாங்கு - பொருந்தும்வழி.
ஒல்லாதவர் - பகைவர்.
ஒல்லாமை - இகழ்ச்சி : இல்லாமை : அவாவின்மை.
ஒல்லார் - பகைவர் : நேரார்.
ஒல்லித்தேங்காய் - உள்ளீடில்லாத தேங்காய். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:55

ஒல்லுதல் - இயலுதல் : ஆற்றுதல் : உடன்படுதல் : தகுதல் : பொருந்துதல் : பொறுத்தல் : 
ஒலித்தல் : விரைதல் : அடைதல் : இணங்குதல்.
ஒல்லுநர் - நண்பர் : நாலுரை யுணர்வோர் : ஆற்றலுடையவர்.
ஒல்லென - விரைய : வெளியாக.
ஒல்லெனல் - அனுகரணவோசை : ஒலிக்குறிப்பு.
ஒல்லே - விரைவாக.


ஒல்வது - இயல்வது.
ஒல்வழி - பொருந்திய இடத்து பொருந்திய காலத்து.
ஒவ்வாப்பக்கம் - தருக்கத்தில் பொருந்தாத பக்கம்.
ஒவ்வுறல், ஒவ்வுறுதல் - பொருத்தமுறல் : ஒப்பாதல்.
ஒவ்வோர்க்குழி - நிலத்திலே சிறுவலர் எழுதும் அரிக்குழி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:56

ஒவ்வோன் - ஒப்பில்லாதவன்.
ஒழிகடை - பெரும்பான்மை : முடிந்த நிலை.
ஒழிகை - ஓய்தல் : விடுகை.
ஒழிதல் - எஞ்சுதல் : தங்குதல் : அழிதல் : சாதல் : நீங்கல் : வெறுமையாதல் : ஓய்தல்.
ஒழித்தல் - அழித்தல் : கொல்லல் : ஒதுக்குதல் : குறைத்தல் : தவிர்த்தல் : தீர்த்தல் : துறத்தல் : முடித்தல்.


ஒழித்துக்காட்டணி - ஒரு பொருளை ஓர் இடத்தில் இல்லையென மறுத்து மற்றோர் இடத்தில்
உண்டென்று ஏற்படுத்திக் காட்டும் அணி.
ஒழித்தார் - ஏனையோர் : தவிர்ந்தோர் : மற்றவர்.
ஒழிபணி - பலவற்றைச் சுருக்கிக் காட்டுவது.
ஒழிபியல் - நூலின்கண் முன்இயல்களிற் சொல்லாதொழிந்தவற்றைக் கூறும் இயல் : பொதுவியல்.
ஒழிபொருள் - எச்சில்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:56

ஒழிப்புயர்வு நவிற்சியணி - ஓர் அலங்காரம்.
ஒழியல் - ஒழிவு : ஒழிக : ஒழியற்க : ஒழியாதே.
ஒழியவைத்தல் - ஒழித்து வைத்தல் : ஒழிவுபார்த்தல் : முடித்தல் : ஒழித்தல்.
ஒழியாமை - நீங்காமை.
ஒழியா விளக்கம் - ஒழியா விளக்கு : விடி விளக்கு.


ஒழியிசை - ஒழிந்த சொற்களைத் தருதல்.
ஒழிவித்தல் - அழித்தல் : ஒழிய வைத்தல் : கொல்வித்தல் : நீங்குவித்தல் : முடித்தல்.
ஒழுக - மெதுவாக : இலேசாக : சொரிய : வடிய : சாவதானமாக : சிறிது சிறிதாக : ஓட.
ஒழுகிசை - வெறுத்திசை யில்லாமல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய குணம்.
ஒழுகிசைச் செப்பல் - இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை இரண்டும் விரவிவந்த வெண்பாவின் ஓசை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:56

ஒழுகுதல் - ஓடுதல் : ஒழுங்குபடுதல் : நடத்தல் : நீளுதல் : பெருகியோடுதல் : போதல் : வளர்தல்.
ஒழுகுமாடம் - உடம்பு.
ஒழுக்கமின்மை - கையறல்.
ஒழுக்கம் - சீலம் : நன்னடக்கை : வழி : செல்லுகை : உயர்ச்சி : தன்மை : முறை : 
மேன்மை : உலகம் ஓம்பிய நெறி : நற்கடமைகளில் நின்றும் தவறாது நடத்தல்.
ஒழுக்கவி - கோவிலில் நாள்தோறும் படைக்கும் சமைத்தவுணவு.


ஒழுக்குநீர்ப் பாட்டம் - ஆற்றுக்காற் பாசனவரி.
ஒழுங்கரம் - ஒருவகை அரம்.
ஒழுங்கல் - ஒழுங்குதவறுதல் : நிரல்படல்.
ஒளிக்கடல் - பற்கள்.
ஒளிக்களம் - மறைவிடம் : ஒளித்துறைவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:57

ஒளிசெய்தல் - விளங்குதல்.
ஒளிதல் - மறைதல் : தவிர்தல்.
ஒளித்தல் - மறைதல் : மனத்தில் அடக்குதல்.
ஒளிநாடு - செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரு நாடுகளுள் ஒன்று.
ஒளிப்பு - மறைவு : பதுங்கி மறைகை : அடங்குகை.


ஒளிமரம் - சோதிவிருட்சம்.
ஒளிமறைவு - ஒளித்துத் திரிகை.
ஒளியர் - ஒளிநாட்டிற் சிறந்து விளங்கியவர் : வேளாளர்.
ஒளியவன் - கதிரவன்.
ஒளியார் - ஒள்ளியார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:57

ஒளியிருத்தல் - மறைவிடத்திலிருத்தல் : பதுங்கியிருத்தல்.
ஒளியிழை - அணிகலம் : பெண்.
ஒளியுருவிய கல் - வைடூரியம்.
ஒளியோன் - கதிரவன்.
ஒளிர்தல் - ஒளிசெய்தல்.


ஒளிர்பு - பிரபை : பிரகாசம் : காந்தி : மின்னல்.
ஒளிர்மருப்பு - யானைக் கொம்பு.
ஒளிர்முகம் - ஒளி.
ஒளிவட்டம் - கண்ணாடி : பிரபை : திங்கள்.
ஒளிவட்டி - பச்சைக் கருப்பூரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum