சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines) Khan11

மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines)

Go down

மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines) Empty மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines)

Post by ahmad78 Sun 5 Jul 2015 - 12:04

ப்ரிஸ்க்ரிப்ஷன் டாக்டர் மு.அருணாச்சலம்
மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines) Ht3679
வாழ்க்கையின் வெற்றியை ‘நான், எனது’ என்ற வார்த்தைகளுக்குள் அடைத்துக் கொண்டாடும் மனது, ‘தோல்வி’ என்று வரும் போது ‘எனக்கு மட்டும் ஏன்?’, ‘என்னைச் சுற்றி மட்டும் ஏன்?’ என சுயபச்சாதாபம் கொள்கிறது. அப்படி நினைப்பவர்கள் படிப்படியாக மன அழுத்த நோய்க்குள் வந்து விடுவார்கள். அதே நேரத்தில் தோல்விக்கு மற்றவர்களை, மற்றவற்றை காரணம் காட்டுபவர்கள், மீண்டும் மீண்டும் தோற்பார்களே தவிர, மன அழுத்த நோய்க்குள் வரமாட்டார்கள். தற்கொலை அல்லது தற்கொலை முயற்சிக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அதன் முழுப்பரிமாணமும் முதற் காரணமும் மன அழுத்தமே!

மனஅழுத்தம் என்பது மிக மோசமான சோகமோ, தினசரி வரும் சாதாரண மோசமான மனநிலையோ அல்ல. அது நம்மை இயல்பாக இருக்கவிடாமல், அன்றாட பணிகளை முடக்கிப் போடும் மோசமான மனநிலை. நூற்றுக்கு பத்துபேருக்கு இது பரவலாகக் காணப்படும் மனநிலை. மன அழுத்தம் என்பது பல்வேறு பாரம்பரிய, சுற்றுப்புற, மன ஓட்டங்கள் போன்ற காரணங்களால் ஆனது. தனிப்பட்ட ஒரு காரணத்தை கூற இயலாது. அதனால்தான் குணப்படுத்துவதும் கடினமாகிறது.

சாதாரண மனிதர்களைப் போல பிரபலமானவர்களுக்கும் மன அழுத்த நோய் இருப்பது எல்லோரும் அறிந்ததே. மனஅழுத்தம் என்பது வெளியே சொல்ல முடியாத அளவுக்கான கவலை, வருத்தம், இழப்பு, கோபம் மற்றும் வெறுப்புடன் கூடிய வெறி போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு மனநிலையே. தன் வெளிப்புற சூழ்நிலையுடன் ஒத்துப் போக முடியாதவர்கள் தன்னை சுற்றியுள்ளவர்களை விட்டு தனிமையாகி தனக்குள்ளே அழுந்தும் மனநிலையே மனஅழுத்தம். பொதுவாக எல்லோரிடமும் பேசிப் பழகுபவர்களுக்கு இது வராது. கோடு போட்டு வட்டத்துக்குள் வாழ்பவர்களுக்கு இது அதிகமாகக் காணப்படும்.

மன அழுத்த நோய் உள்ளவர்கள் திடீரென தன்னம்பிக்கை இழக்கிறார்கள். யாருமே தன்னை புரிந்து ஏற்றுக் கொள்ளவில்லை என உணர்வார்கள். இதனால் தான் தனிமைப் படுத்தப்பட்டதாகவே எண்ணி யாருடனும் பேசாமல், பழகாமல், தானுண்டு தன் வேலையுண்டு என தனிமைக்குள் சிறைப்படுவார்கள். தன்னையறியாத சோகம் அவர்களை சூழ்ந்து கொள்ளும். எதிலும் ஆர்வமில்லாதவர்களாக மாறி விடுவார்கள். வழக்கமாக அவர்களுக்கு சந்தோஷம் தரும் விஷயங்களைக் கூட செய்யும் ஆர்வத்தை இழந்து ஒருவித சோர்வுடனே காணப்படுவார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines) Empty Re: மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines)

Post by ahmad78 Sun 5 Jul 2015 - 12:04

மன அழுத்தத்துக்கான அறிகுறிகள்...

1. திடீரென அதிக தூக்கம் அல்லது  தூக்கமின்மை
2. எளிதில் எரிச்சல் அடையும் தன்மை
3. காரணமில்லாமல் எல்லோருடனும் கோபம்
4. முழு கவனத்துடன் செயல்பட முடியாமல் போவது
5. படபடப்பு
6. அதிகப்படியான போதை பழக்கம்
7. குடும்ப வாழ்க்கையில் நாட்டமின்மை
8. குழப்பமாக எதைப் பற்றியும் முடிவு எடுக்க முடியாமை
9. தற்கொலை எண்ணம். 

இவற்றுடன் சில வேளைகளில் நெஞ்செரிச்சல், மூச்சடைப்பு, நெஞ்சு வலி, தலைவலி, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளாக (Psychosomatic), சுயபச்சாதாபம் (Self pity), சுய விமர்சனம் (Self blame) போன்ற மன-உடல் உபாதைகளுடன் அவசர சிகிச்சையை நாட வேண்டி வரலாம். இது போன்ற அறிகுறிகள் நிச்சயமாக பிள்ளைகளிடம் பெற்றவர்களோ, பெற்றவர்களிடம் பிள்ளைகளோ, உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ காணப்பட்டால் அலட்சியம் வேண்டாம். உடனடியாக அவர்களிடம் காரணத்தை கேட்டு அறிந்து உறவுக்குள் மூக்கை நுழைக்காமல்,  அவர்களை புரிந்து கொள்பவர்களாகவே நடந்து, அவர்களது மனபாரத்தை கேட்டறிந்து  நம்பிக்கையைப் பெறலாம். 

முதலில் குடும்பநல மருத்துவரிடமும், தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடமும் செல்வது அவசியம். இந்தியாவில் மட்டும்தான் மனநல மருத்துவரிடம் செல்பவர்கள் உடையை கிழித்துக் கொள்ளும் கிறுக்கர்கள் மட்டுமே என்ற எண்ணம் உள்ளது. வெளிநாடுகளில் குடும்பத்துக்கு ஒரு மனநல மருத்துவர் இருப்பதும் மனநல மருத்துவரிடம் அரசாளுபவர்கள் கூட சென்று வருவதும் சாதாரண விஷயமே. மன அழுத்தம் என்பது ஒரு மனநிலை தடுமாற்றம் என்பதால் மருந்துகளும் மனநல மருத்துவரின் ஆலோசனையும் சேர்ந்துதான் குணப்படுத்த முடியும்.

மன அழுத்த மருந்துகள் 

Moclobemide, Clorgyline குறைந்த நேரம் வேலை செய்யும். Monoamine oxidase inhibitors (MAOIs), Tricyclic antidepressants (TCAs) amitriptyline, imipramine, clomipramine...  இந்த மருந்துகளில் சில மற்ற நோய்களுக்கான மருந்துகளுடன் ஒத்துப் போகாதவை. ஆகவே மற்ற நோய்களுக்கான மருந்துகளை மருத்துவரிடம் எடுத்துரைப்பது அவசியம். குறிப்பிட்ட அளவு, நேரம், மருந்துகளை எடுத்து அதனால் ஏற்படும் விளைவுகளை மருத்துவர்களிடம் பேசி, கூட்டிக் குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம். 

இம்மருந்துகளை போதை மருந்துகளுடன் உட்கொள்ளக்கூடாது. வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நடுத்தர வயதினர் எடுத்துக் கொடுப்பது நல்லது. இம்மருந்துகள் வேலை செய்ய 2-3 வாரங்கள் ஆகும். படபடப்பு, இதயத்துடிப்பு அதிகமாகலாம். ஆனால், மோசமான மன அழுத்த நோய்க்கு இவை நல்ல மருந்துகள். Selective serotonin reuptake inhibitors (SSRIs), Fluoxetine, Sertraline, Escitalopram. சாதாரண ஆரம்ப கட்ட மன அழுத்த நோய்களுக்கு இம்மருந்துகள் தரப்படுகின்றன. இவற்றால் குமட்டல், வாந்தி, தூக்கமின்மையும் வரலாம். கூட்டுக் குடும்பம், உற்றார், உறவினர், நண்பர், மனம் திறந்த உறவு, நட்பு, உடற்பயிற்சி, நல்ல உணவுப்பழக்கம், பாட்டு, நடனம், வாசித்தல், கேட்டல்  போன்றவை மன அழுத்தத்தைப் போக்கும் மருந்துகளை விடவும் சிறந்த ஊக்குவிப்பு விஷயங்கள்!


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3689


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum