Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுபஸ்ரீ மிஸ் அடிச்சாங்களா?
2 posters
Page 1 of 1
சுபஸ்ரீ மிஸ் அடிச்சாங்களா?
திரு. கார்த்திக் சரவணன் அவர்கள் ஆரம்பித்து வைக்க மூங்கில்காற்று முரளிதரன் ஐயா, தங்கை மைதிலி, நண்பர் கோவை ஆவி, எங்க வாத்தியார்பாலகணேஷ் அண்ணா, சகோதரி க்ரேஸ், கலக்கல் பதிவர் சகோதரர் மதுரைத் தமிழன் மற்றும் துளசி தளம் துளசி சார் / கீதா மேடம் என எல்லோரும் கலந்து கட்டி சிறுகதைகளை எழுதி கலக்கிவிட்டார். மேலே சொன்னவர்கள் தவிர இன்னும் சிலரும் எழுதியிருக்கக் கூடும். நான் படித்த பதிவர்களை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.
இவர்களைப் பார்த்ததும் நமக்கும் ஒரு நப்பாசை, அடிச்ச மிஸ்க்கு ஒவ்வொருத்தரும் ஒரு பேர் வச்சிக்கிட்டாங்க... அதனால நாமளும் மிஸ் பேரை மாற்றி திரிஷ்யம்... இல்லங்க... பாபநாசம் ரேஞ்சுக்கு கருவை எடுத்து கதையையும் கொஞ்சம் சுட்டு இங்க சிறுகதையாக கொடுத்திருக்கிறேன்... வாசியுங்கள்... பிடித்தது... பிடிக்கலை என்பதை சரியாகச் சொல்லி வையுங்கள்... இல்லேன்னா நானும் கம்பெடுக்கிற மாதிரி இருக்கும்... ஆமா சொல்லிப்புட்டேன்.
வாங்க கதைக்குள்ள போவோம்....
நான் அந்தப் பள்ளிக்குள் வேகமாக நுழைந்தேன்... எதிர்ப்பட்ட பியூனிடம் பிரின்ஸிபால் ரூம் எங்க இருக்கு? என்று கேட்டு அவன் காட்டிய திசையில் கோபத்தோடு நடக்க ஆரம்பித்தேன்.
அடியும் தெரியாம முடியும் தெரியாம நீங்க எப்படி என் பின்னால வரமுடியும்... அதுனால கொஞ்சம் முன்னோக்கி போயிட்டு பிரின்ஸ்சிபால் அறைக்குள் போகலாம்... நான்... அரவிந்தன்... என்னோட பிள்ளைங்க ரெண்டு பேரும் இங்கதான் படிக்கிறாங்க... ஊரில் பிரபலமான பள்ளி இது... படிப்புக்கு பணம் கொடுப்பதுடன் என்னோட வேலை முடிஞ்சது... மற்றபடி பள்ளிக்கு அனுப்புவது... அவர்களுக்கான அனைத்து வேலைகளையும் செய்வது என் மனைவி ராதிகாதான். எதையும் பற்றி கேட்டுக்கொள்ளாதவனாக இருந்தாலும் மகள் தன்னை மிஸ் அடித்தார்கள் என்று சொன்னதும் எனக்குள் சுள்ளென்று ஏறியது. நானே பள்ளியில் வந்து என்ன ஏதுன்னு கேக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். மகளுக்கு ரொம்ப சந்தோஷம்.
காலையில் சாப்பிடும் போது "அவ எப்படி பிள்ளையை அடிப்பா...? என்ன திமிரு அவளுக்கு...?" இட்லியை பிய்த்து சட்னியில் நனைத்துக் கொண்டே மனைவியிடம் கத்தினேன்.
"எதுக்கு கத்துறீங்க...? எதாவது தப்புப் பண்ணியிருப்பா?"
"என்னடி பொல்லாத தப்புப் பண்ணுறா... ரெண்டாவது படிக்கிற பிள்ளை என்ன பெரிசா செஞ்சிடப்போகுது..."
"ஆமா... உங்க பிள்ளைகளை மேய்ச்சுப் பார்த்தாத்தானே தெரியும்... ரெண்டை நம்மளாலே... இல்லயில்ல என்னால மேய்க்க முடியலை... அங்க முப்பது நாப்பதை ஒண்ணா வச்சி மேய்க்கணும்..."
"அதுக்காக அடிப்பாங்களா... பிள்ளை அடிச்சிட்டாங்கன்னு சொல்றா... நீ எவளோ ஒருத்திக்கு சப்போர்ட் பண்ணுறே...?"
"சப்போர்ட் பண்ணலை... அடிச்சா என்ன தப்புன்னுதான் கேக்குறேன்..."
"என்ன தப்பா... அடிச்சி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சின்னா..."
"அப்படியெல்லாம் அடிக்கமாட்டாங்க... சும்மா லேசா தட்டியிருப்பாங்க..."
"முன்னெல்லாம் சாதியச் சொல்லி திட்டினாங்கன்னுதான் கேசு கொடுக்க முடியும்... இப்ப அப்படியில்லை அடிச்சாங்கன்னு சொல்லியே உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்.."
"ஏங்க இப்ப கேசு அது இதுன்னு... வீட்டுல பிள்ளைங்களுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிடுறோம்... பத்தாததுக்கு அதுக கையில டேப், ஆண்ட்ராய்டு போனெல்லாம் கொடுத்து இருபத்தி நாலு மணி நேரமும் மத்த மனுசங்க கூட பேச விடாம வச்சிருக்கோம்... இதுல ஸ்கூல்லயும் அடிச்சித் திருத்தலைன்னா எப்படி... மண்ணாத்தானே போகுங்க..."
"நல்ல பொம்பளைடி நீ... அதுக்காக அவங்க அடிக்கட்டுமின்னு விடமுடியுமா? நான் போயி என்ன ஏதுன்னு கேட்டுத்தான் வருவேன்..." என்று சொல்லிவிட்டு எழுந்து கை கழுவிட்டு கிளம்பினேன்.
'தேவையில்லாத வேலைக்கெல்லாம் போங்க... தேவையானதைப் பாக்காதீங்க...' என்ற மனைவியின் குரலை காதில் வாங்கும் நிலையில் நான் அப்போது இல்லை... என் குறிக்கோள் எல்லாம் எப்படி மகளை அடிக்கலாம்... அவளை உண்டு இல்லைன்னு பண்ணுங்கிறது மட்டும்தான்... அந்த வேகத்தோடு இந்தா பிரின்ஸ்பால் அறைக்கு வந்துட்டேன்.
"வணக்கம் சார்..."
"வாங்க..."
"சார் என்னோட பொண்ணை அவங்க மிஸ் அடிச்சிருக்காங்க..."
"யாரு...? எந்த மிஸ்..?"
"செகண்ட் படிக்கிற சுபாவோட அப்பா நானு... அவங்க கிளாஸ் மிஸ் அடிச்சிட்டாங்களாம்..."
"யாரு சுபஸ்ரீ மிஸ்ஸா..?"
"சுபஸ்ரீயோ... ரூபஸ்ரீயோ... எப்படி சார் அடிக்கலாம்... அடிச்ச டீச்செரல்லாம் என்ன ஆனாங்கன்னு பேப்பர்ல படிச்சிருப்பீங்கதானே..." கொஞ்சம் கோபமாகப் பேசினேன்.
"எதுக்கு சார் டென்சனாகுறீங்க... உங்க பொண்ணு மேல எதாவது காயம் இருந்ததா?"
"அடிச்சிட்டாங்கன்னு சொன்னா காயம் இருக்கா... கத்திரிக்கா இருக்கான்னு... ஏன் சார் காயம் இருந்தாத்தான் வந்து கேக்கணுமா...?"
"இல்ல சார்... அவங்க அடிச்சிருக்க வாய்ப்பில்லை அதனாலதான் கேக்குறேன்... "
"என்ன சார் இம்புட்டு அடிச்சிச் சொல்றீங்க...? அப்ப நான் பொய் சொல்றேனா...?"
"நீங்க பொய் சொல்றீங்கன்னு சொல்லலை... பட்... சுபஸ்ரீ மிஸ் அடிச்சிருக்க மாட்டாங்கன்னு சொல்றேன்..."
"எதுக்கு சார்... வளவளன்னு பேசிக்கிட்டு... அவங்களையே கூப்பிட்டு விசாரிங்க சார்...."
"சரி வாங்க அவங்க அறைக்கு நாம போகலாம்..."
"ஏன் சார்... நீங்கதானே பிரின்ஸ்பால்... ஒரு பொம்பளைக்கு இம்புட்டு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க... பியூனை விட்டு கூட்டியான்னு சொன்னா வரப்போறாங்க.... நாம தேடிப் போகணும்ன்னு சொல்றீங்க..." கடுப்போடு கேட்டேன்.
"மிஸ்டர்... வார்த்தையை அளந்து பேசுங்க... அவங்க இங்க டீச்சர்... குழாயடியில பேசுற மாதிரி பொம்பளை கிம்பளைன்னு பேசாதீங்க... உங்க பொண்ண அடிச்சாங்கன்னு சொல்றீங்க... அவங்ககிட்ட போயி கேட்போம்... எதுக்காக இங்க வரவச்சி விசாரிக்கணும்... ஸ்டாப் ரூம்ல எல்லாரும் இருப்பாங்க... அங்க வச்சி விசாரிச்சா வேலை முடிஞ்சிச்சி... படிச்சவராத் தெரியிறீங்க... பண்பு இல்லையே சார்..."
'யோவ் வெளக்கெண்ணை வியாக்கியான மயிரு பேசுறே... கேசைக் கொடுத்து இழுத்து நடுத்தெருவுல விட்டுருவேன்...' வந்த வார்த்தையை வாய்க்குள்ளேயே முழுங்கி அவர் பின்னே நடந்தேன்.
"இவங்கதான் சுபஸ்ரீ மிஸ்... மிஸ் இவரோட பொண்ணு சுபா... செகண்ட் படிக்கிறாளாம்..."
"ஓ சுபாவோட அப்பா அரவிந்தன் சாரா...? மேடம்தான் இங்க வருவாங்க... வாங்க சார்... என்ன விஷயம்?"
"என்னோட பொண்ணை அடிச்சீங்களாமே...?"
"ம்... உங்க பொண்ணை மட்டுமில்ல... ஒரு நாலஞ்சி பிள்ளைங்களை அடிச்சேன்... அதுவும் சும்மா கையாலதான் தட்டுனேன்...."
"அடிச்சதுல வேற சும்மா கையாலதான் தட்டுனேன்னு சொன்னா என்ன அர்த்தம்... அப்ப கம்பு வேற வச்சி அடிப்பீங்களா?"
"ஏன் சார்... எதுக்கு இம்புட்டுக் கோபம்...? வாங்க கிளாஸ்ல போயி உக்ன பொண்ணுக்கிட்டே கேக்கலாம் எதுக்காக அடிச்சேன்னு..."
"ஆமா... இவரு அங்க இருந்து இங்க இழுத்தாரு... நீங்க இங்க இருந்து கிளாஸ்க்கு இழுங்க... நல்லாயிருக்குங்க..."
"சரி கோபப்படாதீங்க... நான் போயி அடி வாங்கின பசங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு வாறேன்..." என்றபடி தனது வீல்சேரை தள்ளினாள் மிஸ் சுபஸ்ரீ.
அதுவரை சேரில் அமர்ந்து பேசுகிறாளே... பிரின்ஸ்சிபால் நிக்கிறாருன்னு மரியாதை கூட இல்லாமன்னு நினைச்சிக்கிட்டு இருந்த நான் உடைந்து போனேன்.
"சாரி மிஸ்... உங்க நிலமை தெரியாம.... என்னை மன்னிச்சிடுங்க... பசங்களை எல்லாம் கூப்பிட வேண்டாம்... நீங்க அடிச்சிருக்க மாட்டீங்கன்னு சார் சொன்னாங்க... நாந்தான்..."
"எதுக்கு சார் சாரி... உங்க பொண்ணு அடிக்கப்பட்டிருக்கான்னு உங்களுக்கு கோபம்... அது நியாயந்தானே... அதுபோக ஊனங்கிறது பெரிய குறை இல்லையே... என்னோட நிலை பார்த்து பரிதாபப்பட... இன்னைக்கி எத்தனையோ பேர் தங்களோட ஊனத்தை நினைச்சி வேதனைப்பட்டுகிட்டு இருக்காம ஜெயிச்சிருக்காங்களே..."
"...." பேசாமல் நின்றேன்.
"இல்ல சார்... கிளாஸ்ல ஒரு பொண்ணுக்கு கை கொஞ்சம் ஊனம்... எல்லாம் பிள்ளைங்களும் நல்லாத்தான் பழகிக்கிட்டு இருந்தாங்க... பட்... என்னாச்சோ தெரியலை... உங்க பொண்ணும் இன்னும் சில பசங்களும் போடி நொண்டிக்கையின்னு சொல்லி அவளை அடிக்கவும் கிள்ளவுமா இருந்திருக்காங்க... பாவம் பிஞ்சு நெஞ்சு ரொம்ப பாதிக்கப்பட்டுருச்சு... அவங்க அம்மாகிட்ட அழுது... அவங்க எனக்கிட்ட வந்து அழுதாங்க... அதான் கூப்பிட்டு முதுகுல சும்மா ரெண்டு தட்டு தட்டி இனி அப்படியெல்லாம் பண்ணக்கூடாது அவ கடவுளோட குழந்தை... எல்லாரும் பிரண்டா இருக்கணும் சொல்லி கை கொடுக்க வச்சேன்... என்ன இதுவரைக்கும் பசங்களை அடிச்சதில்லை... லேசாத் தட்டினதும் இதுவரைக்கும் அடிக்காத மிஸ் அடிச்சிட்டாங்கன்னு அதுகளுக்கு வருத்தம்... அதான் உங்ககிட்ட உங்க பொண்ணு சொல்லியிருக்காங்க... உடம்புல ஊனம் இருந்தா இப்ப ஜெயிச்சிக் காட்டிலாம்ன்னு நம்பிக்கை இருக்கு... ஆனா பிஞ்சு மனசுல ஊனம் வந்தா நல்லது இல்லையில்ல... இன்னைக்கி இருக்க பழக்கம் நாளைக்கு விருட்சமா வளர்ந்து அவங்களை வேற மாதிரி பார்க்க வைக்குமே சார்... அதான் அடிச்சேன்... சாரி..." சொல்லி முடிக்கும் போது சுபஸ்ரீ மிஸ் கலங்கியிருந்தார்.
"சாரி மிஸ்... சின்னப்பிள்ளை பேச்சைக் கேட்டு போகாதீங்கன்னு மனைவி சொன்னாங்க... நாந்தான் சம்பந்தமில்லாம வந்து உங்க மனசைப் புண்படுத்திட்டேன்... உங்க பேருதான் எம்பொண்ணுக்கும்... அவ உங்கள மாதிரி நல்ல மனசோட வளரணும்... வளருவா... இந்தப் பசங்களால மனசொடிஞ்ச அந்தக் குழந்தையை நான் பாத்து அவளை தூக்கிக் கொஞ்சிட்டுப் போகணும்... பெர்மிஷன் கிடைக்குமா?" என்றேன் நனைந்த கண்களோடு,
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சுபஸ்ரீ மிஸ் அடிச்சாங்களா?
சாதாரண தகப்பனின் மனனிலையிலிருந்து மகளுக்கு அடித்தது என கேட்டதும் வரகூடிய இயல்பான கோபம் புத்தியை மழுங்கடித்தாலும் கடைசியில் உண்மை புரிந்து உணர்வதும் அருமை.
கதைக்காக எடுத்துக்கொண்ட கரு மிக மிக அருமை குமார். உடல் ஊனமுற்றவர்களுக்கு ஊனம் உடலில் மட்டும் தான் இருக்கும். மனம் ஊனமடைவதில்லை என்பதை மிகத்தெளிவாய் உணர்த்தி இருக்கின்றீர்கள்.
பாராட்டுகள்!
கதைக்காக எடுத்துக்கொண்ட கரு மிக மிக அருமை குமார். உடல் ஊனமுற்றவர்களுக்கு ஊனம் உடலில் மட்டும் தான் இருக்கும். மனம் ஊனமடைவதில்லை என்பதை மிகத்தெளிவாய் உணர்த்தி இருக்கின்றீர்கள்.
பாராட்டுகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» புத்துணர்வுக்கு ஆரஞ்சு மிஸ் பண்ணிடாதிங்க!!
» மிஸ்.இந்தியா -Miss India-இணையத்தில்
» இலங்கையிலிருந்து மிஸ் யுனிவசலில் கலந்து கொண்ட அழகி
» ‘மிஸ் இந்தியா’ அழகியாக நந்தினி குப்தா தேர்வு
» வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!
» மிஸ்.இந்தியா -Miss India-இணையத்தில்
» இலங்கையிலிருந்து மிஸ் யுனிவசலில் கலந்து கொண்ட அழகி
» ‘மிஸ் இந்தியா’ அழகியாக நந்தினி குப்தா தேர்வு
» வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum