சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57

» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 5:02

» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32

» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17

» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03

» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56

» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15

» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09

» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54

» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38

» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53

» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19

» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50

» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48

» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:26

» மருத்துவ டிப்ஸ்
by rammalar Mon 22 Jul 2024 - 12:21

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by rammalar Mon 22 Jul 2024 - 12:17

» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by rammalar Mon 22 Jul 2024 - 10:20

» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by rammalar Mon 22 Jul 2024 - 10:17

» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by rammalar Mon 22 Jul 2024 - 5:18

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 21 Jul 2024 - 20:07

» இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
by rammalar Sun 21 Jul 2024 - 10:40

» பக்தி - பழமொழிகள்
by rammalar Sat 20 Jul 2024 - 17:53

» உடலை உறுதியாக்கும் பழரசங்கள்
by rammalar Sat 20 Jul 2024 - 16:16

» நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிவி
by rammalar Fri 19 Jul 2024 - 20:08

» திரைச்சுவை -
by rammalar Fri 19 Jul 2024 - 5:12

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Khan11

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!

Go down

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Empty வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!

Post by rammalar Sat 30 Mar 2024 - 5:16

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Kalkionline%2F2024-03%2F72fafd84-c9a0-46ad-bb69-58c6cd379557%2Fhealthy_food
--
கோடைக்கால வெப்பத்திலிருந்து நம் உடல் நலனைக் காத்துக்கொள்ள, இந்த வெயில் சீசனில் மட்டும் பிரத்யேகமாகக் கிடைக்கும் கீழ்கண்ட 10 உணவுகளை உண்டு உடலைக் குளிர வைப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் பெறுவோம்.
வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Kalkionline%2F2024-03%2F9d690ee0-5141-4dc1-832a-8a52a5c99c21%2FNungu
Nungu
நுங்கு:
நுங்கில் உள்ள வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற  சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்து உடல் உஷ்ணத்தை தணிக்கக் கூடியது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. இதன் நீர் வேர்க்குருவிற்கு நல்ல நிவாரணம் தருகிறது.

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Kalkionline%2F2024-03%2F84cdba89-59a2-4c70-a858-cb0b0a323b0f%2FNeer_Mor
Neer MorImage Credit: ticklingpalates
நீர் மோர்:
மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோபுளோவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. இதை அருந்துவதால் நீரிழப்பினால் ஏற்படும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி, புத்துணர்ச்சி கிடைத்துவிடும். தாகத்தைத் தணித்து, வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பதுடன் காரமான உணவுகளால் ஏற்படும் வயிற்று எரிச்சலையும் இது தணிக்கிறது.

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Kalkionline%2F2024-03%2F6d7c11f8-a8de-4b91-8c92-6e0feca4174a%2Fgreen_tender_coconut
green tender coconutImage Credit: maatarafruitscompany
இளநீர்:
இதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்துள்ளதால் சரும பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் இது பெரிதும் உதவும்.

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Kalkionline%2F2024-03%2F91b480a9-2108-4e3c-b012-57ba419c4e5b%2FWatermelon
Watermelon
தர்பூசணி:
நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியமான வைட்டமின் சி அதிகம் உள்ள இதை உட்கொள்வதன் மூலம். நம் உடலால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். தவிர, நம் முடி மற்றும் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் இதில் அதிகம் நிறைந்துள்ளதால் சருமம் வெயிலால் உலர்ந்து போகாமல் இருக்கும்.

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Kalkionline%2F2024-03%2Fc2b0fcd4-f241-4557-8249-fcdd6aba7b7d%2Fmango
MangoImage Credit: Indiamart
மாம்பழம்:
மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் C சத்துடன் நார்ச்சத்தும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் செரிமானத்திற்கும் இது நல்லது. இதிலுள்ள பொட்டாசியம் வெயிலினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
 

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Kalkionline%2F2024-03%2F1a7dc970-80af-4f86-bd52-de2a66f04164%2FKhevaraku_Khammangul
Khevaraku Khammangul
கூழ்:
கேழ்வரகு மற்றும் கம்பு கொண்டு செய்யப்படும் கூழ், நம் உடலுக்குத் தரும் நன்மைகள் ஏராளம். இதில்  உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோபுளோவின் ஆகியவையும் உள்ளன. மோருடன் கலந்து இந்தக் கூழை அருந்தும்போது, உடலுக்கு குளிர்ச்சியையும், வலுவையும் தருகிறது.

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Kalkionline%2F2024-03%2F98c8f46b-1065-4d13-a0d9-e260dc6e9dba%2Fragi_kali
Ragi Kali Image Credit: wikimedia
ராகி களி:
பல்வேறு வகையான தாதுப்பொருட்கள் நிறைந்த தானியங்களில் ராகியும் ஒன்று. இதில் எலும்புகளை வலுவாக்க உதவும் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும், இதில் உள்ள பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. கோடைக்கேற்ற ஆரோக்கிய உணவு இது.

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Kalkionline%2F2024-03%2F79a9e4ec-9409-4295-b524-a4a5221becf7%2Fgreen_mango
Green MangoImage Credit: saravanaonline
மாங்காய்:
மாங்காய் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதில் வைட்டமின் C சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் உட்கொண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், உடலின் நீர்ச்சத்தினை தக்க வைத்துக்கொள்ளும். உடல் சூட்டினால் ஏற்படும் நீர்க்குத்தலை இது தடுக்கும்.

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Kalkionline%2F2024-03%2Ff8c93f6e-5571-4f64-9f09-d8c2b64d90f9%2FButtermilk_Chili
Mor Chili
மோர் மிளகாய்:
மிளகாயில் உள்ள  அதிக அளவு காப்சைசின் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், இதய பாதிப்புகளையும் தடுக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்னைப் போக்கி குடல் மேம்பட உதவுகிறது. இதில் கலோரிகள் எதுவும் இல்லை என்பதால் உடல் எடையும் குறையும். பல மருத்துவப் பயன்கள் நிறைந்த மிளகாயை மோரில் கலந்து வெயிலில் காய வைப்பதால் இது உடலுக்கு மேலும் நலன் தரும்.

வெயில் காலத்தில் இந்த 10ஐ மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க! Kalkionline%2F2024-03%2F185ef444-461f-4257-bf29-8bf1c01d2262%2Fpanagam
PanagamImage Credit: ticklingpalates
பானகம்:
நீர் மோருடன் வெயில் கால பானமாக தாகம் தீர்த்து, உடல் சூட்டைத் தவிர்த்து, நல்ல புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் தரவல்லது பானகம். உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த வெல்லம், சுக்கு, எலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் ருசியான இது வெயிலினால் ஏற்படும் சோர்வைப் போக்கி உடனடி சக்தியை தருவதோடு, வயிற்று வலி, நீர் கடுப்பு, கண் எரிச்சல் போன்ற பிரச்னைகளையும் குறைக்கும்

--
-சேலம் சுபா - கல்கி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24895
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum