சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

தில்லானா மோகனாம்பாள்  Khan11

தில்லானா மோகனாம்பாள்

Go down

தில்லானா மோகனாம்பாள்  Empty தில்லானா மோகனாம்பாள்

Post by anuradha Sun 2 Aug 2015 - 12:43

தில்லானா மோகனாம்பாள் படம்
தில்லானா மோகனாம்பாள்  Doc_Mar_30_2014_6_5_41_AM1
தில்லானா மோகனாம்பாள்  Doc_Mar_30_2014_6_5_41_AM2

தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, தங்கவேலு, டி. எஸ். பாலையா, சுந்தரிபாய், நாகேஷ், மா. நா. நம்பியார், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். புகழ்பெற்ற தமிழ் வார இதழான ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையை ஏ. பி. நாகராசன் திரைப்படமாக இயக்கினார்.
தில்லானா மோகனாம்பாள்  Thillanambnr6
தில்லானா மோகனாம்பாள்  Thillanambnr7
தில்லானா மோகனாம்பாள்  Thillanambnr8
தில்லானா மோகனாம்பாள்  Thillanambnr3
தில்லானா மோகனாம்பாள்  Thillanambnr2
தில்லானா மோகனாம்பாள்  Thillanambnr4
தில்லானா மோகனாம்பாள்  Pd-sambantham-ts-balaiah-a-karunanidhi-sivaji-avm-rajan-thillana-mohanambal-1969
தில்லானா மோகனாம்பாள்  Pd-sambantham-ts-balaiah-a-karunanidhi-sivaji-avm-rajan-thillana-mohanambal-1969
தில்லானா மோகனாம்பாள்  Ambika-nambiyar-nagesh-thillana-mohanambal-1969
தில்லானா மோகனாம்பாள்  Ambika-nambiyar-nagesh-thillana-mohanambal-1969-2
தில்லானா மோகனாம்பாள்  A5
தில்லானா மோகனாம்பாள்  Gundu-karuppaiah-sagasranamam-thillana-mohanambal-1969-1
தில்லானா மோகனாம்பாள்  Manorama-sivaji-padmini-thillana-mohanambal-1969
தில்லானா மோகனாம்பாள்  Ck-sarawathy-padmini-thillana-mohanambal-1968
தில்லானா மோகனாம்பாள்  Nagesh-ts-balaiah-sivaji-a-karunanidhi-avm-rajan-thillana-mohanambal-1969
தில்லானா மோகனாம்பாள்  T-s-balaiah-karunanidhi-sivaji-thillana-mohanambal-1969
தில்லானா மோகனாம்பாள்  Thillanambnr5

நாதஸ்வரம் வாசிப்பதில் மிகவும் புகழ்பெற்றவரான சண்முக சுந்தரம் (சிவாஜி கணேசன்) எதையும் நேர்பட பேசக்கூடியவர். பரதநாட்டியம் ஆடுவதில் மிகவும் திறமைசாலியான மோகனாம்பாள் (பத்மினி) இருவரும் தங்களது முதல் சந்திப்பிலேயே ஒருவரின் மேல் ஒருவர் காதல் காதலில் விழுகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இருவரும் சண்டையிட்டுப் பிரிகிறார்கள். அவர்கள் மீண்டும் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே இத்திரைப்படத்தின் மீதக் கதையாகும்.
நடிகர்கள்

நடிகர்  கதாபாத்திரம்
சிவாஜி கணேசன் 'சிக்கல்' சண்முகசுந்தரம்
பத்மினி மோகனாம்பாள்
டி. எஸ். பாலையா 'கலியுக நந்தி' முத்துருக்கு
கே. ஏ. தங்கவேலு நட்டுவனார், முத்துக்குமார சுவாமி
மனோரமா கருப்பாயி / 'ஜில் ஜில்' ரமாமணி
நாகேஷ் 'சவடால்' வைத்தி
மா. நா. நம்பியார் 'மதன்பூர்' மகாராஜா
கே. பாலாஜி மைனர் சிங்கபுரம், செல்லத்துரை
சித்தூர் வி. நாகையா சண்முகசுந்தரத்தின் நாதஸ்வர ஆசிரியர்
ஏ. வி. எம். ராஜன் தங்கரத்தினம், சண்முக சுந்தரம் குழுவில் நாதஸ்வரம் வாசிப்பவர்
கே. சாரங்கபாணி 'கோடை இடி' சக்திவேல், சண்முக சுந்தரம் குழுவில் தவில் வாசிப்பவர்
ஏ. கருணாநிதி சண்முக சுந்தரம் குழுவில் மிருதங்கம் வாசிப்பவர்
டி. ஆர். இராமச்சந்திரன் மோகனா குழுவில், சொத்து விட மிருதங்கம் வாசிப்பவர்
சி. கே. சரஸ்வதி வடிவாம்பாள், மோகனாவின் அம்மா
எம். சரோஜா 'வெத்தலப்' பெட்டி
சண்முகசுந்தரி மோகனா குழுவில் வீணை வாசிப்பவர்
எஸ். வி. சகஸ்ரநாமம் திருவாரூர் கோயில் பூசாரி
பி டி சம்பந்தம் சண்முக சுந்தரம் குழுவில் தாளம் வாசிப்பவர்

பாடல்கள்
கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார்

தில்லானா மோகனாம்பாள்
 
இயக்குனர்  ஏ. பி. நாகராஜன்
தயாரிப்பாளர்   ஏ. பி. நாகராஜன்
ஸ்ரீ விஜயலக்ஸ்மி பிக்சர்ஸ்
நடிப்பு  சிவாஜி கணேசன்   பத்மினி
இசையமைப்பு   கே. வி. மகாதேவன்
வெளியீடு    ஜூலை 27, 1968
நீளம்  4825 மீட்டர்
நாடு    இந்தியா
மொழி    தமிழ்
ஏ.பி.நாகராஜன்
பட உலகில் நடிகராக நுழைந்து, கதை- வசன கர்த்தாவாகப் புகழ் பெற்று டைரக்டராக உயர்ந்தவர் ஏ.பி.நாகராஜன். ஏ.பி.நாகராஜன் 1928-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி பிறந்தார். சொந்த ஊர் சேலம் மாவட்டம் சங்ககிரி பக்கத்திலுள்ள அக்கம்மாபேட்டை. தந்தை பெயர் பரமசிவம். தாயார் லட்சுமி அம்மாள்.
ஜமீன்தார்
நாகராஜனின் தந்தை ஜமீன்தார். எனவே நாகராஜன் பிறந்த போது நல்ல வசதி படைத்திருந்தார்.  ஆனால் சிறு வயதிலேயே தந்தையையும், தாயையும் இழந்தார். பணக்கார குடும்பம் வறுமையில் வாடியது. இதன் விளைவாக பள்ளிக்கூட படிப்பை தொடர முடியாமல் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார், நாகராஜன்.
பெயர் மாறியது
ஏ.பி.நாகராஜனுக்கு பெற்றோர் வைத்த பெயர் “குப்புசாமி” என்பதாகும். இவர் பணியாற்றிய டி.கே.எஸ். நாடக குரூப்பில் மொத்தம் 3 பேர் “குப்புசாமி” என்ற பெயர் கொண்டவர்களாக இருந்தனர்.   இதனால் டி.கே.சண்முகம் அதற்கு ஒரு முடிவு கட்டினார். இவருக்கு பெற்றோர் வைத்த `குப்புசாமி’ என்ற பெயரை மாற்றி “நாகராஜன்” என்று பெயர் சூட்டினார். பிற்காலத்தில் அது புகழ் பெற்ற பெயராக மாறியது.
பெண் வேடம்
சிவாஜிகணேசன் நாடகங்களில் பெண் வேடத்தில் நடித்து வந்த அதே காலக்கட்டத்தில், ஏ.பி.நாகராஜனும் பெண் வேடத்தில் நடித்து வந்தார். “சங்கீதக் கோவலன்” நாடகத்தில், மாதவியாகவும், கண்ணகியாகவும் இரட்டை வேடத்தில் நடித்தார். அப்போது அவருக்கு வயது 9. நாடக நோட்டீசில் “9 வயது குயிலினும் இனிய குரல் வாய்ந்த சங்கீத மாஸ்டர் ஏ.பி.நாகராஜன், மாதவியாகவும், பின் கண்ணகியாகவும் நடிக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 நாகராஜனுக்கு நல்ல குரல் வளம் இருந்தது. நீண்ட வசனங்களை பேசும் ஆற்றல் பெற்றிருந்தார். தமிழ் இலக்கியங்களை தானாகவே படித்து அதில் சிறப்பு பெற்றவராக விளங்கினார். சிறுவனாக இருந்த நாகராஜன், இளைஞரானபின், அவரே வசனம் எழுதி இயக்கி நடிக்கவும் செய்தார். இப்படி “நால்வர்”, “மாங்கல்யம்”, “ராமாயணம்”, “மச்சரேகை” போன்ற நாடகங்கள் அரங்கேறின. கொஞ்ச காலம் `சக்தி’ நாடக சபையில் பணியாற்றினார். நாகராஜனுடன் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்களும் ஒன்றாக நடித்தனர்.
நால்வர்
பின்னர் சேலம் மாடர்ன் தியேட்டர்சில் உதவி ஒளிப்பதிவாளராக ஏ.பி.நாகராஜன் சேர்ந்தார். 1953-ல் சங்கீதா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம், ஏ.பி.நாகராஜன் எழுதிய “நால்வர்” என்ற கதையை படமாக்கியது. ஒரே குடும்பத்தில் 4 பிள்ளைகள். மூத்தவன் போலீஸ் அதிகாரி. இன்னொருவன் அரசியல்வாதி. மற்றவர்கள் மாறுபட்ட குணம் கொண்டவர்கள். இதில், கடமையே உருவான போலீஸ் அதிகாரியாக நாகராஜன் நடித்தார். ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை குமாரி தங்கம்.
குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட “நால்வர்”, வெற்றிப்படமாக அமைந்தது. கதை- வசனத்தையும் நாகராஜன் சிறப்பாக எழுதியிருந்தார். இந்தப்படம் வெளிவந்தபின் “நால்வர்” நாகராஜன் என்று அழைக்கப்பட்டார்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தில்லானா மோகனாம்பாள்  Empty Re: தில்லானா மோகனாம்பாள்

Post by anuradha Sun 2 Aug 2015 - 12:44

எம்.ஏ.வேணு
மாடர்ன் தியேட்டர்சில் ஏ.பி.நாகராஜன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு எம்.ஏ.வேணு தயாரிப்பு நிர்வாகியாக இருந்தார். சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவரான வேணுவும் அதிகம் படிக்காதவர். மாடர்ன் தியேட்டர்சில் சாதாரண வேலையில் நுழைந்த அவர், தனது திறமையால் நிர்வாகி அந்தஸ்துக்கு உயர்ந்தார். பின்பு எம்.ஏ.வேணு மாடர்ன் தியேட்டர்சை விட்டு விலகி, “எம்.ஏ.வி. பிக்சர்ஸ்” என்ற படக்கம்பெனியை ஆரம்பித்தார். ஏ.பி.நாகராஜனை கதாநாயகனாகப் போட்டு, “மாங்கல்யம்” என்ற படத்தை எடுத்தார். 1954-ல் வெளிவந்த இந்தப் படத்தின் கதை – வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். கே.சோமு டைரக்ட் செய்தார்.ஏ.பி.நாகராஜனுடன் பி.எஸ். சரோஜா, எஸ்.ஏ.நடராஜன், எம். என்.நம்பியார் ஆகியோர் நடித்தார்கள். ராஜசுலோசனா இப்படத்தில்தான் அறிமுகமானார். மாங்கல்யமும் வெற்றிப்படமாக அமைந்தது.
 
பின்னர், ஏ.பி.நாகராஜன், கண்ணாம்பா, சூரியகலா ஆகியோரை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்து, “பெண்ணரசி” என்ற படத்தை வேணு தயாரித்தார். மனோகரா பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் வெற்றி பெறவில்லை. 1955 கடைசியில் வெளிவந்த “நல்லதங்காள்” படத்தில் ஏ.பி.நாகராஜன் நடித்தார். அவருடன் மனோகர், ஜி.வரலட்சுமி, மாதுரிதேவி ஆகியோர் நடித்தனர்.
பின்னர், நடிப்பதை நிறுத்திவிட்டு, கதை- வசனம் எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்தினார், நாகராஜன். எம்.ஏ.வேணுவுக்காக அவர் வசனம் எழுதிய படங்களில் முக்கியமானது “சம்பூர்ண ராமாயணம்”. இதில் சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், பத்மினி ஆகியோர் நடித்தனர்.
சொந்தப்படம்
நடிகர் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து, “ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனி”யை தொடங்கினார், நாகராஜன். “ரத்தக்கண்ணீர்” படத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த எம்.ஆர்.ராதாவை அழைத்து வந்து “நல்ல இடத்து சம்பந்தம்” என்ற படத்தை 28 நாட்களில் தயாரித்து வெளியிட்டார். படம் வெற்றிகரமாக ஓடியது. வி.கே.ராமசாமியுடன் இணைந்து ஏ.பி.நாகராஜன் தயாரித்த படங்களில் முக்கியமானது “மக்களைப் பெற்ற மகராசி.” இதில் சிவாஜியும், பானுமதியும் நடித்தனர். வசனத்தில் மண்ணின் மணம் கமழ்ந்த முதல் தமிழ்ப்படம் “மக்களைப் பெற்ற மகராசி”தான். கொங்குத் தமிழில் ஏ.பி.நாகராஜன் எழுதிய வசனத்தை, அற்புதமாகப் பேசி நடித்தார், சிவாஜிகணேசன்.

சிவாஜியின் நடிப்பில் புதிய பரிணாமம் கொண்ட படம் இது. இப்படத்தை டைரக்ட் செய்தவர், கே.சோமு.

நவராத்திரி
1964-ல் “ஸ்ரீவிஜயலட்சுமி பிக்சர்ஸ்” என்ற சொந்தப்படக் கம்பெனியை நாகராஜன் தொடங்கினார். இந்த படக்கம்பெனியின் முதல் படம் “நவராத்திரி.” இதில் சிவாஜிகணேசன் 9 வேடங்களில் நடித்தார். அவருக்கு ஜோடி சாவித்திரி. கதை- வசனம் மட்டும் எழுதி வந்த நாகராஜன், இந்தப் படத்தில் முதன் முதலாக டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றார். சிவாஜிகணேசனின் 100-வது படமான “நவராத்திரி” சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
திருவிளையாடல்

அடுத்து ஏ.பி.நாகராஜன் தயாரித்து, திரைக்கதை – வசனம் எழுதி டைரக்ட் செய்த “திருவிளையாடல்” வரலாறு படைத்த படமாகும். ஏ.பி.நாகராஜனின் முதல் வண்ணப்படம் இது. சிவாஜி கணேசன், சாவித்திரி, முத்துராமன், தேவிகா, நாகேஷ், டி.எஸ். பாலையா முதலியோர் நடித்தனர். நக்கீரராக ஏ.பி.நாகராஜன் நடித்தார். சிவனாக சிவாஜியும், தருமியாக நாகேசும் தோன்றிய நகைச்சுவை காட்சி, மிகச்சிறப்பாக அமைந்து, காலத்தை வென்று இன்றும் வாழ்கிறது.

“திருவிளையாடல்” தமிழ்நாட்டில் பல நகரங்களில் 25 வாரங்கள் வெற்றிகரமாக ஓடிய வெள்ளி விழாப்படமாகும். திருவிளையாடலைத் தொடர்ந்து, “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “திருமால் பெருமை” முதலிய புராணப் படங்களை எடுத்தார். தில்லானா மோகனாம்பாள் 1968-ம் ஆண்டில் ஏ.பி.நாகராஜன் தயாரித்து இயக்கிய “தில்லானா மோகனாம்பாள்” ஒரு திரைக்காவியம்.

நாதசுரவித்துவான் சிக்கல் சண்முகவடிவேலுவாக சிவாஜி கணேசனும், நடன நங்கை மோகனாம்பாளாக பத்மினியும் வாழ்ந்து காட்டினர். தில்லானா மோகனாம்பாள் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. இப்படம், ஆங்கில விளக்க உரையுடன் மேல் நாட்டில் திரையிடப்பட்டது. அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று இந்தப் படத்தின் பிரதியை வாங்கிச்சென்று நாதஸ்வரம், பரதம் ஆகிய கலைகளைப்பற்றி தங்களது மாணவர்களுக்கு விளக்கப்படுத்தி வருகிறது.
டைரக்டர் ஏ.பி.நாகராஜன் தயாரித்த ‘வா ராஜா வா’ படத்தின் மூலம், இசை அமைப்பாளரானார், குன்னக்குடி வைத்தியநாதன். ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பாடல் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இசைத்தட்டு பாடல்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த அவருக்கு சினிமா படங்களுக்கும் இசை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

ஒரு நாள், டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் படத்தயாரிப்பு மானேஜர் டி.என்.ராஜகோபாலும், அசோசியேட் டைரக்டர் எஸ்.ஆர்.தசரதனும் குன்னக்குடி வைத்தியநாதனின் வீட்டுக்கு வந்தனர். ‘அண்ணன் (ஏ.பி.என்) தொடங்குகிற புதிய படத்திற்கு நீங்கள்தான் மிïசிக் டைரக்டர். அண்ணன் உங்களை உடனடியாக அழைத்துக்கொண்டு வரச்சொன்னார். கார், காத்துக்கொண்டு இருக்கிறது. உடனடியாக புறப்படுங்கள்’ என்று கூறினார்கள்.
குன்னக்குடி வைத்தியநாதன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுடன் காரில் புறப்பட்டார். ஏ.பி.நாகராஜனின் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். அப்போது சிரித்துக்கொண்டே வந்த ஏ.பி.என். ‘வா ராஜா வா!’ என்றார். குன்னக்குடி திகைத்து நிற்க, ‘இந்தப் பெயரில் ஒரு படம் எடுக்கிறேன். அந்த படத்திற்கு நீங்கள்தான் இசை அமைப்பாளர்!’ என்றார், ஏ.பி.என். புதுமுகங்களை வைத்தே அந்தப் படத்தை எடுத்தார், ஏ.பி.நாகராஜன்.
 
குன்னக்குடியின் இசை அமைப்பில், ‘இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான்; மனிதன் வடித்த சிலைகளில் எல்லாம் இறைவன் வாழுகிறான்’ என்ற பாடலும், ‘கல் எல்லாம் சிலை செஞ்சான் பல்லவராஜா, அந்த கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா’ போன்ற பாடல்கள் ஹிட் ஆயின. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், பெரிய வெற்றி பெற்றது.
இணையதள ஆர்வலர்களுக்கு சொர்க்கபுரியாக திகழ்வது யூ ட்யூப்தான். ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கிறது இதற்குள். இதிலிருந்து ஒரு அற்புதமான வீடியோவை தேர்வு செய்து இதை பார்க்கும் போது நம்மையறியாமல் ஒரு பரவசம் ஏற்பட்டது உண்மை.
1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார்.  தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த விஷுவல் எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத்தைதான் ஏற்படுத்தியது.

இன்று உருப்படியாக படம் எடுக்கிறார்களோ இல்லையோ? ‘மேக்கிங் ஆஃப் ஸோ அண் ஸோ’ என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100 நாட்கள் ஓடவிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட்டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகிறார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான ஏ.பி.நாகராஜன்.
இந்த டாகுமென்ட்டரியை எடுத்தவர் மிகவும் குசும்பான ஆள் போலிருக்கிறது. சிவாஜி பத்மினி உள்ளிட்ட நமது கலைஞர்களின் மேக்கப் சென்சை பற்றியெல்லாம் செமத்தியாக கிண்டலடித்திருக்கிறார்.

நாதத்தின், பரத நடனத்தின் பெருமையை கலாச்சார ரீதியில் உலகறியச் செய்த படம் நடிகர் திலகம் சிவாஜி, பத்மினி நடித்த, ஏ. பி. நாகராஜன் திரைக்கதை வசனத்தில் உருவாகி (தொடர் நாவலாக கொத்தமங்கலம் சுப்பு எழுதிய), 'தில்லானா மோகனாம்பாள்' படத்தினை அயல் நாட்டிலிருந்து வந்த குழுவினருக்கு திரையிட்டுக் காண்பித்தவர் அன்றைக்கு புரட்சி நடிகர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரும்- சிவாஜியும் கடுமையான போட்டியில் இருந்த அந்த காலத்திலேயே இப்படி நிகழ்ந்திருக்கிறது.
 
ஜனாதிபதியின் சிறந்த தமிழ் படமென, தமிழக அரசின் சிறந்த படமென, பல்வேறு விருதுகளைப் பெற்ற படமிது. சிவாஜியும், ஏவி.எம்.ராஜனும் நாதஸ்வர கலைஞர்களாக நடித்திருந்தனர். இவர்களுக்கு மதுரை சேதுராமன்- பொன்னுசாமி சகோதரர்கள் நாதஸ்வரம் வாசித்தனர்.
கே.வி.மகாதேவன் இசையில், கே.எஸ் பிரசாத் ஒளிப்பதிவில் உருவான இந்த இசை சித்திரத்தில் சிவாஜி 'சிக்கல்' சண்முகசுந்தரமாக, பத்மினி தில்லானா மோகனாம்பாளாக நடித்திருந்தனர். மற்றும் டி.எஸ். பாலையா, கே. ஏ. தங்கவேலு, கே.பாலாஜி, நாகேஷ், நம்பியார், சாரங்கபாணி, ஏ. கருணாநிதி, சி.கே.சரஸ்வதி, அம்பிகா (பத்மினியின் உறவினர்), எம். சரோஜா (தங்கவேலுவின் மனைவி), உதயசந்திரிகா என்று பெரிய நட்சத்திர கூட்டமே இதில் உண்டு. மனோரமா இதில் கவுரவ வேடத்தில் அற்புதமாக நடித்திருந்தார். படத்தில் டூயட் என்று எதுவுமில்லை.
அந்த காலத்தில் இந்த படத்தை பற்றி என்ன நினைத்தார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் விகடன் விமர்சனம் இங்கே
மோகனாம்பாளை நான் நாலைந்து முறை பார்த்திருக்கிறேன். முதல் முறை பார்த்தபோது சிவாஜியின் நடிப்புக்கு கண்மூடித்தனமான ரசிகனாக இருந்த காலம். அவர் தும்மினாலும் என்ன நடிப்பு என்றுதான் சொல்லுவேன். அப்போது சிவாஜி நன்றாக நடித்திருந்தார், ஆனால் அவரை மனோரமாவும் நாகேஷும் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள் என்று தோன்றியது. பாலையா நடிப்பு பிடித்திருந்தது. பாட்டுக்கள் பிடித்திருந்தன. மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாட்டில் பத்மினியின் மூக்குத்தி டாலடிக்கும் காட்சி அற்புதமாகத் தோன்றியது.
யாரையும் கண்மூடித்தனமாக ரசிக்கும் காலகட்டம் போனதும் இந்த படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க நேர்ந்தது. ஏற்கனவே இருந்த நல்ல அபிப்ராயம் எல்லாம் நொறுங்கிவிட்டன. மெலோட்ராமாவை பிழிந்து எடுப்பார்கள். அதுவும் அந்த நலம்தானா பாட்டு வரும்போது ஏண்டா எல்லாரும் இப்படி கொலை வெறி பிடிச்சு அலயறீங்க என்று கத்த வேண்டும் போலிருந்தது. சிவாஜியே மோசம்; ஆனால் பத்மினி! இதுக்குத்தான் அமெரிக்காவிலிருந்து வந்து ரசிகர்களை இப்படி ஒரேயடியாக ஒழிக்க வேண்டுமா? நாகேஷ் இவர்களுக்கு மாறாக அலட்டிக்கொள்ளாமல் நடித்திருப்பதால்தான் முன்னாலும் அவர் நடிப்பு பிடித்திருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். மனோரமாவுக்கு ஓவர் த டாப் ரோல்தான். ஆனாலும் அவர் நன்றாகத்தான் நடித்திருந்தார். கொடுமை என்னவென்றால் இந்த படத்தை என் அம்மாவோடு பார்த்தேன். என் அம்மாவுக்கு இது ஒரு டாப் டென் திரைப்படம். நிமிஷத்துக்கு நிமிஷம் சிவாஜி என்னமா நடிக்கிறார், பத்மினி எப்படி கலக்கறா, என்றெல்லாம் கமென்ட் விட்டுக் கொண்டே இருந்தார். எனக்கோ சிவாஜியின் சொதப்பலையும் மிஞ்சிய பத்மினி என்றுதான் ஒன் லைன் விமர்சனம் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு ஒரு ஐம்பது வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு இந்த படம் பிடிக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். என் மனைவி பார்த்தாலே ஓடி விடுவாள்.
அதற்கு ஒரு preparation வேண்டும். தி. மோகனாம்பாளை விகடனில் வாராவாரம் படித்தவர்கள் ரியாக்ஷன் வேறு மாதிரிதான் இருக்கும். நான் அந்த நாவலை வாங்கிப் படித்தேன். படு சுமாரான நாவல். இல்லை இது எப்போது படமாக வரப்போகிறது என்று எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து பார்த்தவர்களின் ரியாக்ஷன் வேறு மாதிரிதான் இருக்கும். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் இந்த படம் பிடிப்பது கஷ்டம்.
கடைசியாக இரண்டு மூன்று வருஷம் முன்னால் மீண்டும் இந்த படத்தை டிவியில் பார்த்தேன். பத்மினி இமாலய சொதப்பல் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நாகேஷ் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. பாலையா, மனோரமா குறிப்பிடும்படி நடித்திருந்தார்கள் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சிவாஜியின் நடிப்பை பற்றிய எண்ணம் மீண்டும் ஒரு முறை மாறியது. சிக்கல் ஷண்முக சுந்தரம் ஒரு அப்பாவி, வெட்டி பந்தா நிறைய உள்ளவன். அவன் எப்படி நடந்து கொள்வான்? அவன் வாழ்க்கையில் அண்டர்ப்ளே என்பது ஏது? எல்லாவற்றுக்கும் உணர்ச்சிவசப்படத்தான் படுவான். சிவாஜி கொந்தளிப்பதில் என்ன ஆச்சரியம்? அதுதான் அந்த காரக்டர்! (ஆனால் நலம்தானா மெலோட்ராமாவை கசக்கி பிழிவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை)
1968-இல் வந்த படம். சிவாஜி, பத்மினி, நாகேஷ், மனோரமா, பாலையா நடித்தது. தங்கவேலு, டி.ஆர். ராமச்சந்திரன், நம்பியார், சி.கே. சரஸ்வதி, சுகுமாரி, நாகையா, ஏ.வி.எம். ராஜன், சாரங்கபாணி, பாலாஜி, செந்தாமரை மாதிரி நிறைய பேர் வந்து போவார்கள். கே.வி. மகாதேவன் இசை. எம்.பி.என். பொன்னுசாமி/சேதுராமன் சகோதரர்கள் நாதஸ்வரம். கொத்தமங்கலம் சுப்புவின் மூலக்கதை. ஏ.பி. நாகராஜன் இயக்கம்.
ஏ.பி.என். நாகேஷ், பத்மினி ஆகியோருக்காக காத்திருந்து எடுத்த படமாம்.
கதை தெரிந்ததுதான். கோபக்கார, ஆனால் வித்தைக்கார நாதஸ்வர வித்வான் சிக்கல் ஷண்முக சுந்தரம். அழகர் மலையில் புது ஆட்டக்காரி மோகனாவோடு முதல் சந்திப்பிலேயே சண்டை, சவால். ஆனால் மோகனாவின் ஆட்டத்தை சிக்கலார் மறைந்திருந்து பார்க்கும் மர்மத்தை மோகனா புரிந்து கொள்கிறாள். தாசி குலத்தில் பிறந்த மோகனாவை ஏழை ஷண்முக சுந்தரத்திடம் ஒப்படைக்க அவள் அம்மாவுக்கு மனதில்லை. அவளுக்கு சவடால் வைத்தி துணை. மோகனாவை தவறாக புரிந்து கொண்டு ஜில் ஜில் ரமாமணியுடன் மலேயாவுக்கு போக திட்டமிடும் சிக்கலாரை மோகனா சவாலை நினைவூட்டி நிறுத்தி விடுகிறாள். சவால் போட்டியின்போது ஷண்முக சுந்தரத்துக்கு கத்திக்குத்து, நாதஸ்வரத்தை தூக்க முடியவில்லை. குணமாகி வந்த பிறகும் காதலர்கள் ஒன்று சேர மோகனாவின் அம்மா தடையாக இருக்கிறாள். சவடால் வைத்தியின் சதியால் மீண்டும் ஷண்முக சுந்தரம் மோகனாவை தவறாக புரிந்துகொள்ள, மோகனா தற்கொலைக்கு முயற்சி செய்ய, அம்மா மனம் மாறி காதலர்கள் ஒன்று சேர்ந்து சுபம்!
நடிப்பை பற்றி பேசியாயிற்று. இசை! அற்புதம்!
பாண்டியன் நானிருக்க அற்புதமான டப்பாங்குத்து. குத்துன்னா இது! அதுவும் அஜக்தா, மஜக்தா, சதக் சதக் சதக்தா என்று வார்த்தை பிரயோகம் அபாரம்! ராகிங் காலத்தில் இந்த பாட்டை பாடினால் சில சீனியர்கள் விட்டுவிடுவார்கள்!
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன நல்ல பாட்டு. அழகாக படமாக்கப்பட்டிருக்கும். அதுவும் பாலையா மேலே விழும் கையை ஒதுக்குவதும், பிறகு அது சிவாஜி கை என்று தெரிந்து பயந்து ஓடுவதும் அருமை!
நலம்தானா பாட்டாக கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் பத்மினி ஏன் இப்படி கொலை வெறி பிடிச்சு அலைஞ்சாங்க என்றுதான் கேள்வி எழுகிறது.
சிவாஜி இங்கிலிஷ் நோட்ஸ் வாசிப்பது நன்றாக வந்திருக்கும்.
மொத்தத்தில் மெலோட்ராமாவை ஓரளவாவது சகித்துக் கொள்வீர்கள் என்றால் நாகேஷ், சிவாஜியின் நடிப்பு, அருமையான இசை, நல்ல பாட்டுக்கள் ஆகியவற்றுக்காக பாருங்கள்
படத்தில் நம்பியார் இருந்தாலும் வில்லன் அவரில்லை. நாகேஷ் வில்லத்தனமாக நடித்திருந்தார். பிரதான வில்லனாக நடித்தவர் ஈ.ஆர். சகாதேவன்.கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் போல் 'தில்லானா மோகனாம்பாள்' நவீன டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும் உலகெங்கும் வெளிவர வேண்டும்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum