சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆடி கிருத்திகை 08 08 2015 Khan11

ஆடி கிருத்திகை 08 08 2015

Go down

ஆடி கிருத்திகை 08 08 2015 Empty ஆடி கிருத்திகை 08 08 2015

Post by anuradha Sun 2 Aug 2015 - 13:20

ஆடி கிருத்திகை 08 08 2015


ஆடி கிருத்திகை 08 08 2015 Gopi0018

ஆடி கிருத்திகை சிவ சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரம்

ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள். அவரது ஜென்ம நட்சத்திரமும் ஆயிற்றே!!! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து தண்டபாணியை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர்.
ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது. ஏன்? முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும்.
அம்பிகையின் அம்சமே வேல் எனவும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு.
அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.
ஆடி கிருத்திகை 08 08 2015 857_lord_murugan_wallpaper_04

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!! வேல்வேல் முருகா வெற்றிவேல்
ஆடி கிருத்திகை 08 08 2015 858_lord_murugan_wallpaper_06
தணிகை மலைப் படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும் - அங்கே
தனை மறந்து மயில்கள் எல்லாம் நாட்டியம் ஆடும்!
கனிவுடனே முருகவேளும் சிரித்திடும் காட்சி - அதைக்
காண்பவர்க்கு எந்தநாளும் இல்லையே வீழ்ச்சி!
விளங்கிவரும் சேவற்கொடி விண்ணதில் ஆடும் - அது
வேல்முருகன் அடியவர்தம் வினையினைச் சாடும்

ஆடி கிருத்திகை 08 08 2015 1504_thiruchendur-murugan-wallpaper-01
குலுங்கி வரும் தென்றல் அங்கே இசை முழக்கும் - திருக்குமரன் பேரைச் சொல்லிச் சொல்லி நம்மை மயக்கும்!
 
 ஆடிக்கிருத்திகை அன்று முருகன் கோயில்கள் அனைத்திலும்  பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் .ஆடிக் கிருத்திகை திருநாளில்  10 லட்சம் காவடிகள் எடுத்து மிகப் பிரம்மாண்டமான திருவிழாவாகக்கொண்டாட்ப்படுகிறது ...
அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளை கொண்டாடுகிறார்கள்.
மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின்போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார்.
ஆடி கிருத்திகை 08 08 2015 855_lord_murugan_wallpaper_03

வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்திருக்கிறது .
ஒரு லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம்  உற்சவர் சன்னதியாக உள்ளது
முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது.
ஆபத்சகாய விநாயகரை கடைசியாகத்தான் வணங்குதல் வேண்டுமாம்.
 
திருத்தணியில் முருகனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது.
இந்த சந்தனத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள்.
இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.
முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, ஆடி கிருத்திகைமிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
 
இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிகளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர். மலர்க்காவடி வாடகைக்கு கிடைக்கிறது.
 வள்ளியின் திருமணத்தலம் .
.
முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து தங்கியதால் "தணிகை மலை' என்று பெயர் பெற்று "திருத்தணி' என்று மாறியது.
அசுரனோடு மோதியதன் காரணமாக மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறது.
முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக் கிழமையும், நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. 
கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னி பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப்பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப்படுகிறது.
 
இப்படி சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் `சரவணபவ' என்னும் ஆறெழுத்தே ஆகும். நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது முருகனே என்பது அருணகிரியார் கூற்று. கார்த்திகை விரதமே கார்த்திகை பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக்கூறுவார்கள்.
 
சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி போற்றி வளர்த்ததும், குமாரன் வளர்ந்ததும், அவனை சேர்த்து ஒன்றாக்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்' எனவும் அழைக்கப்படுவான் என்று சொன்னார்.
 
மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்கு குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார். இந்த கார்த்திகை விரதம் தான் கிருத்திகை விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே கிருத்திகை விரதம் இருப்பவர்களுக்கும் பொருந்தும். என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாகக் கருதுகின்றனர்.
 
உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. ஆடி மாத கார்த்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தட்சணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயணம் திருமணம், உபநயனம், கிரகப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.
 
ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்து கடவுளரையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.
 
அதனால் தான் தை மாதக் கார்த்திகையை விட ஆடிக்கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

ஞானத்தின் வடிவான முருகப் பெருமான், ஞானப் பழத்துக்காக அம்மா, அப்பாவான பார்வதி பரமேஸ்வரனிடம் சண்டை போட்டுக் கொண்டு திருப்பழநிக்குன்றத்தில் நின்றது புராணக் கதை. அதுமுதல் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். தடைகள், தோஷங்கள், கவலைகள் நீங்கி தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது. அந்த வகையில் ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.
‘ஆறுமுக உருவாய்த் தோன்றி
அருளொடு சரவணத்தின்
வெறிகமழ் கமலப்போதில்
வீற்றிருந்து அருளினானே’
என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுகிறது. வாரம், திதி, நட்சத்திரம் என்று இந்த மூன்றிலும் முருகனுக்கு விரதங்கள் உண்டு. வாரம் என்பது வாரத்தின் நாட்களை குறிக்கும். இதில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள். திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கார்த்திகை’ அல்லது ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற, அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சூரபத்மனை அழித்து தேவர்களையும், மக்களையும் காப்பதற்காக அவதாரம் எடுத்த ஆறுமுகனை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். அவர்களை போற்றும் வகையிலேயே கிருத்திகை விரத திருநாள் கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைபெறும்.
காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும், சிறப்பு பூஜைகள், பிராத்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர். கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி பாமாலைகளை பக்தி சிரத்தையுடன் பாடி விரதத்தை முடிக்கின்றனர்.
அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம் போற்றிப் புகழ்கிறது.
திருத்தணி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மான சீகமாக வழிபட்டாலும், ‘திருத்தணிகை’ என்ற பெயரை சொன்னாலும் நம் தவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.
முருகப் பெருமான் இத்தலத்தில் ஞானசக்தியாகிய வேலை தாங்கி நிற்கிறார். முருகனின் 16 வகையான திருக்கோலங்களில் இங்கு ‘ஞான சக்திதரர்’ என்னும் திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, கர்மபுத்திர தோஷம், குரு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும் தடங்கல்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானின் திருவருள்  பெறுவோம்.

முருகப்பெருமானின் திருக்கரத்தினில் திகழும் ஆயுதங்களுள் மிகச் சிறப்புடையது வேல்!..
'' வெல்லுவது வேல்!..'' என்னும் சொற்குறிப்பினை உடையது.
வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன்
வெற்றி பெறு  சுடராழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்கல்லி
வெல்லாது எனக் கருதியே..
சங்க்ராம நீ சயித்து அருள் எனத்தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்ப
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்
என முருகனின் வேலாயுதத்தினை, அருணகிரிநாதர் புகழ்ந்து பாடுகின்றார்.
வேல் - வெம்பகையை மட்டும் என்றில்லை!.. வெவ்வினையையும் வென்று தீர்ப்பது!.. அதனால் தான் -
 ''..வேலுண்டு வினையில்லை!..'' என்று இனிதாகச் சொல்லி வைத்தனர்.
வேலினை ஞானத்தின் அடையாளம் என வர்ணிப்பர்.
வேலனின் திருப்பெயர்கள் ஒன்றா!.. இரண்டா!.. - சொல்லச் சொல்ல இனிப்பவை. அல்லலுற்று - அவதுயுற்று அடைக்கலம் தேடி வரும் அன்பர் தம் மனக் குகையில் நித்ய வாசம் செய்து -  இருளினை ஓட்டி ஞானப்பிரகாசமாக விளங்குபவன். அதனால்  - குகன் எனப்பட்டவன்.
வேறு ஒன்றின் துணையில்லாமல் தானே ஒளிர்ந்து பிரகாசிப்பது எதுவோ அதுவே சுப்ரமண்யம்!.
''..சேனாதிபதிகளுக்குள் நான் ஸ்கந்தனாக இருக்கின்றேன்!..'' -  என்கின்றான் பரந்தாமன்!.
ஏரகப்பதியில் - எம்பெருமானுக்குக் குருவாக அமர்ந்து ப்ரணவப் பொருளினை உரைத்து,
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கெல்லாம் இனிது
எனும் குறள் தோன்றுதற்கு காரணனாக விளங்கிய பூரணன்!..
யோகக்கலையில் மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சகஸ்ராரத்தை நோகி மேலேறும் போது மணி பூரகச் சக்கரத்திற்கு அதிபதி மயில்வாகனன்!.. அதுமட்டுமின்றி ஆக்ஞா (நெற்றி) சக்கரத்தில் ஆறு பட்டைகளுடன் கூடிய ஒளிரும் மணியாக விளங்குகின்றான் என்கின்றனர் கற்றறிந்தோர்.
வேதம்  - ''சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்!'' - என்று முழங்குவதாக -  குருநாதராக விளங்கும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுவார்.
அருணகிரியார், அண்ணாமலையில் முருகப்பெருமானால் தடுத்தாட்க் கொள்ளப்பட்டு, சும்மா இரு சொல்லற என உபதேசம் பெற்று தியானத்தில் ஆழ்ந்து விடுகின்றார். அதன் பின்னர் முருகப்பெருமானால் - அட்சர  தீட்சை பெறுகின்றார். முத்தைத் தரு எனும் முதற் பாடல் பிறக்கின்றது.
மீண்டும் தியானம். ''..வயலூருக்கு வா!..'' என பெருமானால் அழைக்கப்பட்டு அங்கேதான் திருப்புகழ் பாட அறிவுறுத்தப்படுகின்றார். அப்படிப் பாடுங்கால் - அங்கே வீற்றிருக்கும் பொய்யாக் கணபதியின் தாள் வணங்கிப் பாடுகின்றார். அந்தப்  பாடல் தான் - ''..கைத்தல நிறைகனி..'' எனத் தொடங்கும் இனிமையான பாடல்.
அதிலே, ''..வள்ளிநாயகியின் மீது கொண்ட காதலால் துயருறும் சுப்பிர மணியனின் துயர் தீர, தினைக் காட்டுக்குள் யானையாகத் தோன்றி - குறவர் தம் குலக்கொடியாகிய வள்ளி நாயகியுடன், உனக்கு இளையோனாகிய முருகனை மணமுடித்து வைத்த பெருமானே!..''- எனப் போற்றுவது சிந்திக்கத் தக்கது.
அப்படி அருணகிரியாரால் உச்சரிக்கப்பட்ட திருப்பெயர் - மந்திரத்தின் மறு வடிவான சுப்ரமண்யம் என்பதாகும்!..
முருகன்  - தமிழருடன் இணைந்த ஒரு சொல் என்று சொல்லி விட்டு என்ன - வடமொழியை கொண்டு வந்து புகுத்துகின்றீர்களே!..
தேவாரத்தில் அப்பர் பெருமான் அழகாகச் சொல்கின்றார்.
ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே! (6/23/5)
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண்...
சிவனவன்காண் சிவபுரத்து எம்செல்வன் தானே! (6/87/1) 
அப்பனே அப்படி - சர்வ வியாபியாகத் திகழ்ந்து பரிபாலிக்கும் போது, மகன் மட்டும் என்ன  - தனித்தா இருப்பான்!... மொழிக்கெல்லாம் அப்பாற்பட்ட மூலப்பரம் பொருள் அல்லவா - முருகன்!..
அத்தகைய  அரும்பொருள் - ஆறுமுகத்தரசு - அருள் மழை பொழிய வேண்டும் என்று அன்பரெல்லாம் கூடிக் கொண்டாடும் நல்ல நாட்களுள் ஒன்றுதான் கிருத்திகை!..
அதிலும் ஆடிக்கிருத்திகை - அளவிடற்கரிய பெருமைகளை உடையது!..
ஐந்தாம் படைவீடாகிய திருத்தணிகையில் பெருந்திருவிழா நிகழ்கின்றது!.. லட்சக் கணக்கில் பக்தர்கள் கூடி மகிழ்கின்றனர். இந்த வேளையில் -
ஆடி கிருத்திகை 08 08 2015 Arunagiri_murugan

இருமலு ரோக முயலகன் வாத
எரிகுண நாசி விடமே நீ
ரிழிவுவிடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயிறீளை எரிகுலை சூலை
பெருவலி வேறுமுள நோய்கள்
பிறவிகள் தோறும் எனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே!..
வருமொரு கோடி அசுரபதாதி
மடிய அநேக இசைபாடி
வருமொரு கால வயிரவராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!...
- என, எல்லாம் வல்ல எம்பெருமானாகிய கந்தவேளின் மலர்த் தாமரைகளைச் சிந்தித்து - நோய் நொடியில்லாத நல்வாழ்வினைப் பெறுவோமாக!...
ஆடி கிருத்திகை 08 08 2015 Nx400xmurugaa_1934302g.jpg.pagespeed.ic.ipOV_G_FIz
 
சுப்ரம்மண்யோம்!.. சுப்ரம்மண்யோம்!.. சுப்ரம்மண்யோம்!..

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum