சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

ஆடி அமாவாசை 14-08-2015 Khan11

ஆடி அமாவாசை 14-08-2015

Go down

ஆடி அமாவாசை 14-08-2015 Empty ஆடி அமாவாசை 14-08-2015

Post by anuradha Sun 2 Aug 2015 - 13:23

ஆடி அமாவாசை 14-08-2015

ஆடி அமாவாசை 14-08-2015 Adi-newmoon

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்தபிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று.
விரதம் சரி... அது என்ன கதை? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்தயாத்திரை மேற்கொண்டான். அதன்பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, "உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்' என்று கூறியது. அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளிகோவில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, "உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்பெறுவான்' என்ற குரல் கேட்டது.
இளமைப்பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம்முடிக்க பெண் தேடியபோது யாரும் அதற்கு முன்வரவில்லை. அரசன் நிறைய பொன் தருவதாக அறிவித்தான். அப்போது,  பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம்பெண்ணை, அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.
இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
அப்பாவியான அந்தப்பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடியும்வரை அவனருகிலேயே கண்ணுறங்காமல் காத்திருந்தாள். விடிந்தபின் தன் கணவன் இறந்துவிட்டானென்ற உண்மை தெரியவந்தது. அழுதாள்... அரற்றினாள்... தவித்தாள்... தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். ஈசனின் அனுமதியோடு இறந்துகிடந்த இளவரசனை உயிர்பெற்றெழச் செய்தாள்.
இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண், "இருண்டுபோன என் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே, இந்த நாளில் தங்களை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, "ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் உனது கதையைப் படித்துவிட்டு, மறுநாள் விரதமிருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து என்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். அவர்கள் இல்லத்தில் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலவும்' என சொல்லி மறைந்தாள்.
ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது.
அக்னி தேவனே நீராடிய தினம் என்பது நம்பிக்கை. ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டபோது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்தநொடியே அக்னிதேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல் அவனை சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்துக்கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது.
எனவே அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது. "அக்னி நீராடிய கடலில் நீராடுவோரின் பாவங்கள் தீரும்' என ஆசியளித்தாள் சீதாதேவி.
இன்றும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன்னுள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவிபோல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசையன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களைச் செய்வதும் விசேஷமானது.
இராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெரு மானை வழிபட்ட திருத் தலம் ராமேஸ்வரம். சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே. மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோவிலுக்குள் உள்ளன. "ராமேஸ்வரம் சென்றும் குளிக்காததுபோல' என்றொரு சொல்வழக்கு உண்டு. வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்காவிட்டாலும், இங்கு புனித நீராடுவது அவசியமென்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இங்கு ஆடி மாதத்தில் அம்பிகை  பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தலமாகவும் இது விளங்குகிறது.
தட்சிணாயன காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். முன்னோர் வழிபாட்டை ஆடி அமாவாசையன்று காலையே துவங்கிவிட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தக்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்துவரவேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பிச் சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்கவேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்தபிறகு, காகத்திற்கு உணவிடவேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிடவேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்தால் முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்.

அமாவாசையின் முக்கியத்துவம் பற்றிய ஒரு சம்பவத்தைக் காண்போமா... குருக்ஷேத்ர யுத்தத்திற்குமுன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக சகாதேவனிடம் ஜோதிடம் கேட்கச் சென்றான் துரியோதனன். "போரில் வெற்றிபெறவேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்கவேண்டும்?' எனக் கேட்டான்.

துரியோதனன் தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், "பூரண அமாவாசையன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி' என்றான். துரியோதனனும், அதேநாளில் களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென அமாவாசைக்கு முதல் நாளே ஒரு குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்தார். இதைப் பார்த்து ஆச்சரியம் கொண்ட சூரியனும் சந்திரனும் பூலோகத்திற்கு வந்தனர். "நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேரும் நாள்தானே அமாவாசை! ஆனால் நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களே... இது முறையானதா?' என்றனர்.

அதற்கு கிருஷ்ணன், "இப்போது நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே இன்றுதான் அமாவாசை...' என சமயோசிதமாக பதில் சொல்லிவிட்டார். சகாதேவன் சொன்னபடி களபலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய்விட்டது. இதனால் நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது.
ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல; தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள செதலபதி எனப்படும் திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.

எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்துகொள்ளலாம்.

ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கிலோமீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும், அங்கிருந்து சற்று தூரத்தில் சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்களுக்கும் சென்றுவரலாம்.
அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோவிலைப்பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார். கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய "மாதர்பிறைக் கண்ணியானை' என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும்விதத்தில், இங்கு கோவில் பிராகாரத்தில் "ஐயாறப்பா' என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. அதில் முல்லைப்பூ நிறத்திலான பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத்தும்போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால் சந்திரன் படிப்படியாகத் தேய்ந்து ஒரு கலையோடு காட்சிதரும் நிலையில் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பௌர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக்கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளியிழந்த சந்திரன் "அமை' என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.

அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன்முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒருசமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, "இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்' என்று ரிஷிகள் கூறினார்கள். ஆனால் கவுசிக முனிவர், "என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்' என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும்விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார். பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார். கவுசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன் ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்தருளினார்.

முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கவுசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.


ஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம். இத்தலம் தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருக்கண்டியூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஆடி அமாவாசை 14-08-2015 Empty Re: ஆடி அமாவாசை 14-08-2015

Post by anuradha Sun 2 Aug 2015 - 13:30

தர்பணம் செய்யும் முறை.

பொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்
1. பிதா - தகப்பனார்
2. பிதாமஹர் - பாட்டனார்
3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்
4. மாதா - தாயார்
5. பிதாமஹி - பாட்டி
6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்
7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்
8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்
9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்
10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)
11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்
12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி

மேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக பித்ருவர்க்கத்தில் பிதாமஹர் (பாட்டனார் பிழைத்திருந்தால் வரிசையாக பித்ரு பிது: பிதாமஹ பிது: ப்ரபிதாமஹா (பாட்டனாருக்குப் பாட்டனார்) களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அம்மாதிரியே தாயார் பிழைத்திருந்தால் பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது பிரபிதாமஹி என்ற வரிசையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். தாயார் இல்லாமல் பிதாமஹியிருந்தால் மாதா, ப்ரபிதாமஹீ பிது: ப்ரபிதாமஹி என்ற வரிசையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவ்விதமாகவே தர்ப்பணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் யார் யாருக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் பெயர் கோத்ரம் இவைகளை விபரமாக ஞாபகப்படுத்திக் கொண்டு தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

ஸ்ரீ வைஷ்ணவ யஜுர்வேதிகளின் அமாவாஸ்யை தர்ப்பணம்
ஆரம்பம்

காலையில் ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், மாத்யான்னிகம், திருவாராதனம் இவைகளை முடித்த பிறகு கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு இரண்டு தடவை ஆசமனம் செய்து 3 தர்ப்பங்களை செய்த பவித்ரத்தை மோதிர விரலில் தரித்து, அத்துடன் தர்ப்பங்களை இடுக்கிக் கொண்டு, சில தர்ப்பங்களை ஆஸனமாகம் போட்டுக் கொண்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து ப்ராணாயாமம் செய்யவும்.
ஸங்கல்பம்

(வடகலையார் மாத்திரம் கீழ்க்கண்ட மூன்று ஸ்லோகங்களைச் சொல்லவும்)
1. ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ
வேதாந்தாசர்ய வர்யோ மே ஸந்திதத்தாம் ஸதா ஹ்ருதி
2. குருப்யஸ் தத் குருப்யஸ்ச நமோவாக மதீமஹே
வ்ருணீமஹே சதத்ராத் யௌ தம்பதீ ஜகதாம் பதீ
3. ஸ்வசேஷ பூதேந மயா ஸ்வீயை ஸர்வபரிச்ச தை:
விதாதும் ப்ரீத மாத்மாநம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம்
பொது

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபஸாந்தயே
யஸ்யத் விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா : பரஸ்ஸதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே
வடகலையார் பூணூலைப் பிராசீனாவீதமாகப் போட்டுக் கொண்டு ஹரி : ஓம் தத் ஸத்
ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த - அஸ்ய ஸ்ரீ பகவத: மஹாபுருஷஸ்ய - விஷ்ணோராஜ்யா - ப்ரவாதமாநவஸ்ய - ஆத்ய ப்ரஹ்மண : த்விதீய பரார்த்தே - ஸ்ரீஸ்வேதவராஹ கல்பே - வைவஸ்த மந்வந்தரே - அஷ்டாவிம்ஸ்திதமே கலியுகே - ப்ரதமே பாதே - ஜம் பூத் வீபே - பாரதவர்ஷே பரதகண்டே சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்ச்வே - அஸ்மிந் வர்தமாநே வ்யாவாரிகே - ப்ரப வாதி ஷஷ்டி ஸம்வத்ஸ்ராணாம் மத்யே ... நாமே ஸம்வத்ஸரே தக்ஷிணாயநே (அல்லது, உத்ராயணே) ... ருதௌ ... மாஸே க்ருஷ்ணப÷க்ஷ - அமாவாஸ்யாம் புண்யதிதௌ ... வாஸர யுக்தாயாம் .... நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீ விஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விஸேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாம் புண்ய திதௌ - ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீ மந் நாராயண ப்ரீத்யர்த்தம் (தென்கலையார் : பகவத் கைங்கர்யரூபம் ... கோத்ரணாம் .... ஸர்மணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் .... அஸ்மத் பித்ரு பிதாமஹ: ப்ரபிதா மஹாநாம் மாத்ரு, பிதாமஹீ ப்ரபிதாமஹிநாம் ... கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம் .... அஸ்மத் மாதாஹ : மாது: பிதாமஹ: மாது: பிதாமஹீ - மாது ப்ரபிதாமஹீநாம் வர்கத்வய பித்ருணாம் அக்ஷய்யத்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்யகாலே (தர்சச்ராத்தம் திலதர்பண) ரூபேண கரிஷ்யே என்று ஸங்கல்பித்து இடுக்குப்புல்லை வடபுறம் எரிந்துவிட்டு பூணூலை உபவீதமாகப் போட்டுக்கொண்டு கீழ்க்கண்டபடி ஸாத்விகத்யாகம் செய்ய வேண்டும்.

பகவாநேவ ஸ்வேஸஷபூதம் இதம் வர்க்த்வய பித்ருத் உத்திஸ்ய தர்ஸஸ்ராத்தாக்யம் கர்மஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமே காரயதி
பிறகு ப்ராசீனாவீதம் செய்து கொண்டு தர்ப்பங்களை தெற்கு நுனியாக கீழ்ப்பக்கத்திலும் அதற்கு மேற்கில் 4 தர்ப்பங்களைத் தெற்கு நுனியாகவும் போட்டு அவைகளின் மீது கிழக்குப் பக்கத்தில் 5 அல்லது 3 தர்ப்பங்களால் ஒரு புக்னத்தை தெற்கு நுனியாகவும் மற்றொரு புக்னத்தை மேற்கு பக்கத்தில் தெற்கு நுனியாகவும் போட்டு, பிறகு பவித்ரவிரல் கட்டை விரல்களால் சிறிது எள்ளை எடுத்துக் கொண்டு,

அபஹதா அஸுரா ரக்ஷõகும்ஸி பிஸாசா:
யே க்ஷயந்தி ப்ருதி வீமநு - அந்யத்ரேதோ கச்சந்து
யத்ரைஷாம் க தம்மந : உதீரதாம்
அவர உத்பராஸ - உத்மத்யமா : பிதர:
ஸோம்யாஸ : அஸீம் ய ஈயு: அவ்ருகா
ருதஜ்ஞா:- தேநோ வந்து பிதரோ ஹவேஷு
அபவித்ர: பவித்ரோ வாஸர்வாவஸ்தாம் கதோபி வா
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப் யந்ர: ஸுசி:
ஓம் பூர்ப்பூவஸ்ஸுவ புண்டரீகாக்ஷõய நம: என்று சொல்லி தீர்த்தத்தை தர்ப்பணம் செய்கிற இடத்தை ப்ரோக்ஷிக்கவும்.


 
ஆசமனம் செய்து மூன்று தர்ப்பங்களால் செய்த பவித்திரத்தை மோதிரவிரலில் தரித்து ஆஸனமாக சில தர்ப்பங்களைச் சேர்த்து இடுக்கிக் கொண்டு ஸங்கல்பம் செய்ய வேண்டியது.
ஸுக்லாம் பரதரம் - ஸாந்தயே ஓம்பூ: - பூர்புவஸ்ஸுவரோம் மமோபாத்த - ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாந் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யாப்யந்தர: ஸுசி : மானஸம் வாசகம் பாபம் கர்மணா ஸமுபர்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி நஸம்சய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்: ஸ்ரீகோவிந்த கோவிந்த கோவிந்த அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஞ்ஞயா ப்ரவர்த்த மானஸ்ய ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத - மன்வந்தரே அஷ்டா விம்சதி தமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே - பாரத வர்ஷே
பரத கண்டே மேரோ: தக்ஷிணேபார்ஸ்வே - சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே - ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே ..... நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயநே (அல்லது) உத்தராயணே .... ருதௌ .... மாஸே க்ருஷ்ணப÷க்ஷ அமாவாஸ்யாம் புண்யதிதௌ..... வாஸர யுக்தாயாம் ... நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணுகரண ஏவம் குண விஸேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ப்ராசீனா வீதி (பூணூலை இடமாக மாற்றிக் கொள்ள) .... கோத்ராணாம் வஸுருத்ராதித்யஸ்வ ரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹானாம் மாத்ரு பிதா மஹி ப்ரபிதா மஹீனாம் .... கோத்ராணாம் ஸபத்னீக மாதாமஹ மாது : பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா: புண்யகாலே தர்சச்சராத்தம் (திலதர்ப்பண) ரூபேணாத்ய கரிஷ்யே.
உபவீதி .... (பூணூலை வலமாக மாற்றிக் கொண்டு ஜலத்தினால் கையைச் சுத்திசெய்து கொள்ள) பிறகு 7 தர்ப்பத்துக்கு குறையாத 9,11,13,15,17,19,21 முதலிய ஒற்றைப்படை தர்ப்பங்களினால் கூர்ச்சம் (அதாவது மேற்படி தர்ப்பங்களை முறுக்கி நுனியும் அடியும் ஒரே பக்கமாக அடுக்கும்படி செய்வது) செய்து தர்ப்பணம் செய்யுமிடத்தில் தர்ப்பபைகளை பரப்பி அதன்மேல் கூர்ச்சத்தை தெற்கு நுனியாக வைக்கவும்.

(கொஞ்சம் எள்ளை எடுத்துக்கொண்டு ப்ராசீனாவீதி - இடம் செய்து கொள்க) ஆயாதபிதர : ஸோம்யாகம்பீரை : பதிபி: பூர்வ்யை: ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச அஸ்மின் கூர்சசே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி (என்று எள்ளை கூர்ச்சத்தில் போடவும்). ஸக்ருதாச் சின்னம் பர்ஹீருர்ணா ம்ருதுஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம், அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸச அனுகைஸ்ஸஹவர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம் (தர்பங்களை ஆஸனமாக போடவும்) ஸகலராதனை: ஸ்வர்ச்சிதம் (என்று எள்ளைக் கூர்ச்சத்தின் மேல் போடவும்) (பிறகு தர்ப்பணம் செய்ய உபயோகிக்கும் ஜலத்தில் எள்ளைப் போட்டுக்கொண்டு கீழ் கூறப்பட்டிருக்கும் மந்திரங்களால் ஒவ்வொன்றும் 3 தடவை தர்ப்பணம் செய்யவும்.)

தர்ப்பணம்

பித்ருவர்க்கம் (புருஷர்கள்)

பிதாவுக்கு

1.  உதீரதாம் அவர உத்பராஸ:- உந்மத்யமா : பிதர : ஸோம்யாஸ :- அஸும்ய ஈயு:- அவ்ருகாரிதஜ்ஞா : தே நோவந்து : பிதரோ ஹவேஷு
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. அங்கிரஸோ ந :  பிதரோ நவக்வா:- அதர்வாணோப்ருகவ : ஸோம்யாஸ : தேஷாம் வயம் ஸுமதௌ யஞ்ஞியானாம் - அபிபத்ரே ஸெளமநஸே ஸ்யாம
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. ஆயந்து ந:  பிதர :- மநோஜவஸ அக்நிஷ்வாத்தா - பதிபிர்தேவயாநை: அஸ்மிந் யஜ்ஞே ஸ்வதயா - மதந்து அதிப்ருவந்துதே அவந்த்வ ஸ்மாந்
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் பித்ரூந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
பிதாமஹருக்கு
1. ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம்
பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே பித்ரூந்
..... கோத்ராந் ... ஸர்மண:- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. பித்ருப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதா நம: பிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய - ஸ்வதா நம: ப்ரபிதாம்ஹேப்ய : ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷந்பிதர:
.... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. யே சேஹ பிதர: யேச நேஹ - யாகும் ஸ்சவித்மயாந் உ ச நப்ரவித்ம - அக்நே தாந் வேத்த - யதிதே ஜாதவேத: தயாப்ரத்தகும் ஸ்வதயா மதந்தி
.... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் பிதா மஹாந் ஸ்வதா
நமஸ் தர்ப்பயாமி
ப்ரபிதாமஹருக்கு
1. மதுவாதா ருதாயதே - மது க்ஷரந்தி ஸிந்தவ : மாத்வீர்ந ஸந்த்வோஷதீ
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. மது நக்தமுதோஷஸி - மதுமத்பார்திவகும் ரஜ - மதுத்யௌ அஸ்து ந : பிதா:
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. மதுமாந்நோ வநஸ்பதி - மதுமாகும் அஸ்து ஸூர்ய : மாதவீர் காவோ பவந்து ந:
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
பித்ருவர்க்கம் (ஸ்த்ரீகள்)
மாதா (தாயார்)
.... கோத்ரா .... நாம்நீ :- வஸுரூபா: அஸ்மத் மாத்ரூ : ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
பிதாமஹி (தகப்பனார் வழிப்பாட்டி)
.... கோத்ரா ..... நாம்நீ :- ருத்ரரூபா: அஸ்மத் பிதாமஹி: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
ப்ரபிதாமஹி (தகப்பனாருக்குப் பாட்டி)
.... கோத்ரா ..... நாம்நீ :- ஆதித்யரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
மாதாமஹ வர்க்கம் (புருஷர்கள்)
குறிப்பு : மாதாமஹர் (தாயாரின் தகப்பனார்) ஜீவித்திருந்தால் இந்த வர்க்கத்துக்குத் தர்ப்பணம் செய்யவேண்டியதில்லை.
மாதாமஹருக்கு (தாய்வழி பாட்டனார்)
1.  உதீரதாம் அவர உத்பாரஸ:- உந்மத்யமா : பிதர : ஸோம்யாஸ :- அஸும்ய ஈயு:- அவ்ருகா ரிதஜ்ஞா : தே நோவந்து மாது: பிதரோ ஹவேஷு
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. அங்கிரஸோ ந : மாது: பிதர நவக்வா - அதர்வாணோப்ருகவ : ஸோம்யாஸ : தேஷாம் வயம் ஸுமதௌ யஞ்ஞியாநாம் - அபிபத்ரே ஸெளமநஸே ஸ்யாம
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. ஆயந்து ந: பிதர :- மநோஜவஸ அக்நிஷ்வாத்தா - பதிபிர்தேவயாநை: அஸ்மிந் யஜ்ஞே ஸ்வதயா - மதந்து அதிப்ருவந்து தே அவந்த் ஸ்மாந்
.... கோத்ராந் ... ஸர்மண :- வஸுருபாந் அஸ்மத் மாதாமஹாந்  ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மாது : பிதாமஹருக்கு
1. ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம்
பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதே மே மாது: பித்ரூந்
..... கோத்ராந் ... ஸர்மண:- ருத்ரரூபாந் அஸ்மத் மாது: பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. பித்ருப்ய : ஸ்வதாவிப்ய : ஸ்வதா நம: பிதாமஹேப்ய : ஸ்வதாவிப்ய - ஸ்வதா நம: ப்ரபிதாம்ஹேப்ய : ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
.... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் மாது பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. யே சேஹ மாது: பிதர: யேச நேஹ - யாகும் ஸ்ச வித்மயாகும் உ ச நப்ரவித்ம - அக்நே தாந் வேத்த - யதிதே ஜாதவேத: தயாப்ரத்தகும் ஸ்வதயா மதந்து
.... கோத்ராந் .... ஸர்மண :- ருத்ரரூபாந் அஸ்மத் மாது :பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மாது : ப்ரபிதாமஹருக்கு
1. மதுவாதா ருதாயதே - மது க்ஷரந்தி ஸிந்தவ : மாத்வீர்ந ஸந்த்வோஷதீ
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்ய ரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2. மது நக்தமுதோஷஸி - மதுமத்பார்திவகும் ரஜ - மதுத்யௌ அஸ்து ந : பிதா:
...... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3. மதுமாந்நோ வநஸ்பதி - மதுமாகும் அஸ்து ஸூர்ய : மாதவீர் காவோ பவந்து ந:
..... கோத்ராந் .... ஸர்மண ஆதித்யரூபாந் அஸ்மத் மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மாதாமஹ வர்க்கம் (ஸ்த்ரீகள்)
மாதாமஹி
.... கோத்ரா : .... நாம்நீ :- வஸுபத்நீ ரூபா: மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
மாது : பிதாமஹி
.... கோத்ரா: .... நாம்நீ :- ருத்ரபத்நீ ரூபா : மாது : பிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
மாது : ப்ரபிதாமஹி
... கோத்ரா: .... நாம்நீ :- ஆதித்யபத்நீ ரூபா: மாது : ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
.... கோத்ராந் ஜ்ஞாதாஞ்ஞாத :மாத்ரு பித்ருபத்நீ : ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)

ஊர்ஜம் வஹந்தீ :- அம்ருதம் க்ருதம் பய கீலாலம் பரீஸ்ருதம் ஸ்வதா ஸ்ததர்பயதே மே மாது: பித்ரூந் : என்று எள்ளும் ஜலமும் விடவும். த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று உபசாரம் சொல்லவும்.

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum