சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் Khan11

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

Go down

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் Empty வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

Post by anuradha Sun 2 Aug 2015 - 14:50

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் Kerala_plaintainleaf_mealsவாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் Food-served-on-a-banana-leafa-tradition-of-the-kerala-state-in-india---51920355வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் The-food-offered-during-maheshwara-puja



பலதரப்பட்ட உணவுகளாக இருந்தாலும், நமது கலாசாரப்படி வாழை இலையில் சாப்பிடுவதுதான் ருசியானது. அதிலும் தலைவாழை இலை போட்டு விருந்து என்றாலே மகிழ்ச்சி தோன்றும். அனைவரது மனதிலும் நமது பாரம் பரியத்தின் மிச்சம் கொஞ்சம் கிடக்கிறது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனதில் ஆசை எழும்புகிறது. இவை மரபணுவில் ஊறியவை. நாகரிகத்தின் பெயரால் நாம் சிதைத்த உணவு பழக்கங்களில் வாழை இலைக்கே முதலிடம்.

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் DSC_0169

வாழைக்கு முதலிடம் சல்பர்டை ஆக்சைடு, பாலிவினைல் குளோரைடு, டையாக்சின், எத்திலின், பாலிஸ்டிரின் போன்ற புற்று நோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக் தட்டுகள், ஹார்ட் பேக்குகள், பாலிதீன் சீட்டுகள் தான் நமது தட்டுகளாகிவிட்டன. புது வீட்டில் பால் காய்ச்சி வாழை மரத்தை கட்டுவது முதல், திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்வுகள் அனைத்திற்கும் வாழை மரத்துக்கே முதலிடம். சாமிக்கு வாழையிலையில் படையல் போட்டு விட்டு, பிளாஸ்டிக் தட்டில் நாம் சாப்பிடுவதே மங்கள நிகழ்வுகளாகி விட்ட சூழ்நிலையில் நமது வயிற்றுக்குள் செல்லும் ஆபத்தை நாம் உணர வேண்டாமா?
சூடான உணவுகளை வைப்பதால் பிளாஸ்டிக் தட்டுகள், தாள்களில் கிளம்பும் ஸ்டிரின், பைஸ்பீனால் போன்ற நச்சு வாய்வுகளானது இதய குழாய் அடைப்பு, சிறுநீரகம், ரத்த புற்று நோய்,
மலட்டுத்தன்மை, ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் 5091979d39ee05be6dbde6a320c7fa4a_h

வாழை இலை சத்துக்கள் நாம் சாப்பிடும் வாழை இலையில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா? உடல் எடை கூட விடாமல் தடுக்கும் நார்ச்சத்து, உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், கண்களை பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ.சி, மற்றும் கே, குடற்புண்களை ஆற்றும் ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும் சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கும். செல்முதிர் பாதுகாப்பு கலன்கள், நிறமிகள் ஆகியன வாழை இலையில் உள்ளன. இவையெல்லாம் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்து காணப்படுகிறது.நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி அந்த இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதனால் ஒவ்வொரு முறை வாழை இலையில் சாப்பிடும் பொழுதும் நமக்கும் ஆயுள் கூடுகிறது.
வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் Tamilnadu_plantainleaf_meal

வாழை இலை சாலட் வாழை இலையை சாப்பிடும் தட்டாக மட்டுமல்ல, சாலட் அல்லது டீ செய்து சாப்பிடவும் பயன்படுத்தலாம். வாழை இலைகளை கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். இதன் எடைக்கு எடை தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழை இலை துண்டுகளை மிக்சியில் அடித்து, துணியில் பிழிந்து சாறு எடுத்து, தேன் சேர்த்து, 10 நிமிடங்கள் இளஞ் சூட்டில் அடுப்பில் வைத்து வடிகட்டி, சூடாறிய பின்பு 10 - 15 மி.லி., தினமும் 2- 3 வேளை சாப்பிட தோல் சுத்தமாகும். ஈறு வாய் புண்கள், வாய் துர்நாற்றம் ஆகியன நீங்கும்.தயிர்சாதம், லெமன் சாதம் சாப்பிட்டால் சளி பிடிக்குமே என்ற பயமா? இனி வேண்டாம். தயிர்சாதம் அல்லத லெமன் சாதத்தை அப்படியே சூடாக இலையில் போட்டு சாப்பிடுங்கள். இலையின் குளோரோபில் சூடான சாதத்தில் உருகி, உங்களின் தொண்டையில் தோன்றும் ஒவ்வாமையை தடுத்து விடும்.
வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் Andhra_plaintainleaf_meals

வயிற்று புண்ணை குணமாக்கும் வாழை இலையின் குளோரோபில் செல்கள் நீண்ட காலம் அழியாமல் இருக்கக் கூடியவை மட்டுமல்ல, வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள் மற்றும் செரிமான செல்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு துணை புரிகின்றன. அல்சர் நோயினால் ஏற்பட்ட வயிற்று புண்களை வாழை இலை விரைவில் ஆற்றக்கூடியவை. இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் தோன்றிய புண்களின் அழுகி சதைகளை கரைத்து விட்டு, புதிய செல்களை தோற்றுவித்து புண்களை ஆற்றும் தன்மை வாழை இலைக்கு உண்டு. ஆகையால் தான் நெருப்பில் சுட்ட புண்களை ஆற்ற வாழை இலையைக் சுற்றுவது நமது வழக்கம்.
வாழை இலையில் உணவு உட்கொள்வதால் இனப்பெருக்கம் செல்களும் பல்கி பெருகுகின்றன. தினமும் 1 வேளை சூடாக உணவை இலையில் வைத்து சாப்பிடுவதால் ஆண் உயிரணுக்கள் அதிகப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.உணவின் விஷத்தன்மை கெட்டுப்போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால் இலையின் மேற்புறத்தில் புதிய நிறத்தில் ஒரு வித நீர் உற்பத்தியாகி, இலையில் ஒட்டாமல் வடிந்து விடும். இதனை வைத்து உணவின் விஷத் தன்மையை அறிந்து கொள்ளலாம். ஆகையால்தான் 'எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம்' என முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் Onam-sadya

பாத்திரங்களை கழுவ உதவும் காஸ்டிக் சோடா, சுண்ணாம்பு ஆகியவை பாத்திரங்கிளில் ஒட்டி நமது உணவுடன் உள்ளே சென்று வயிற்றுப்புண்களை உண்டாக்குகிறது. ஆனால் வாழை இலையில் சாப்பிடுவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவதில்லை.எப்படி பரிமாறுவது வாழையிலையில் சாப்பிட்டால் சுக போக உணர்ச்சியும், தோலுக்கு பளபளப்பும் உண்டாகும். செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாட்பட்ட சளி, ருசியின்மை ஆகியன நீங்கும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. உணவு உண்ண அமரவேண்டிய இடத்தை துடைத்து, லேசாக நீர் தெளித்து, அந்த தரையின் மேல் நுனி இலை உண்பவரின் இடப்பக்கமும், அடி வலப்பக்கமும் இருக்கும் படி நீரால் கழுவி சுத்தம் செய்த இலையை விரிக்க வேண்டும். இலையை விரித்த பிறகு அதன் மேல் கொஞ்சம் நீரை வலது கையால் தெளித்து, துடைத்து ஒரு சொட்டு நெய்யை இலையில் விட்டு, அதன் மேல் உணவு பதார்த்தங்களை பரிமாற வேண்டும்.

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் Tamilnadu_plantainleaf_meal

உறவினர்களுக்கு விருந்து அளிக்கும் போது மேற்கு பார்த்தும், சாதுக்கள், ஞானிகளுக்கு வடக்கு பார்த்தும், அவர்கள் அமர்ந்து உண்ணும் படி இலை விரிக்க வேண்டும்.முதலில் நுனி இலையிலிருந்து உப்பு, சட்டினி, ஊறுகாய், பச்சடி, காய்கறி, வடகம், வடை, சித்திரான்னம், அப்பளம், ஆகியவற்றை பரிமாறி, அதன் அருகில் மூன்று வாழை இலை தொன்னைகளில் தனித்தனியே கூட்டு ரசம் மற்றும் குழம்பு வைத்து பனியாரம், பாயாசம் வைத்து இறுதியாக சோறும் அதன் அருகில் மற்றொரு தொன்னையில் நெய்யும் வைத்து உபசரிக்க வேண்டும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.வாழை இலையில் உணவு உண்பதால் நீர் சேமிக்கப்படும். வீரியமான வேதி பொருட்களால் உருவாக்கப்பட்ட உலோக, பிளாஸ்டிக் பாத்திரங்களின் நச்சுத்தன்மை நம்மை தாக்காது. அது மட்டுமல்ல நமது இலை நமது வீட்டு ஆடு, மாடுகளுக்கு ஆரோக்கியமான உணவளிக்கும் சாதனம் மட்டுமல்ல, நமது மண்ணின் மரபு. நமது பாரம்பரியத்தின் அடையாளம். நமது சந்ததியினருக்கும் இதனை அடையாளம் காட்ட தினம் ஒரு வேளையாவது வாழை இலையில் உணவு உட்கொள்வோம்.
வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் Kerala_plaintainleaf_meals

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum