Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!
5 posters
Page 1 of 1
தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!
புத்தி கெட்ட மனிதனே - உன்
காமம் தலைக்கேறி
கண் கெட்ட பூஜை உன்னால்
பச்சிளம் பாலகனையும்
பாலுணர்வால் நாசம் செய்கிறாய்
குற்றமறிந்திடாக் குழந்தையினை
உயர் செல்வமாய்ப் பார்த்திடாது
உன் குறுகிய போதைக்காய்
சீரழித்துச் சிதைத்து - நீ
சாதித்திருப்பதுதான் என்ன...??
நாசமானவனே உன்
காமப் பசி தீர்க்க
பல சீரிய வழியிருக்கையில்
சீயென நடந்து கொள்கிறாய்
கலாச்சாரச் சீர்கேடும்
சமுகத்தின் கவனயீனமும் - உனை
காமத்திற்கு தூண்டியிருந்தால்
உன் ஆறாம் அறிவு மங்கிவிட்டதா???
வாழத்தகுதியற்ற மானிடன் நீ..
உனை தூக்கிலிடுவதைத் தவிர
எத்தண்டனையும் ஈடாகாது
படைத்தவன் கூட மன்னித்திடமாட்டான்
சமுகத்தலைமைகளே...
சமுகம் காக்கப்பட வேண்டுமென்றால்
இவ்வாறானவர்களை மன்னிக்காது
சந்தியில் நிறுத்தி தூக்கிலிடுங்கள் - மீண்டும்
முனைபவன் விழித்துக்கொள்வான்
Last edited by நேசமுடன் ஹாசிம் on Sat 19 Sep 2015 - 12:42; edited 1 time in total
Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!
நல்ல கவிதை படிக்கும் போதே கோவம் வருகிறது...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!
வரிகள் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது நண்பா இவர்களை தூக்கிலிடுவதே சிறந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!
உண்மையில் கோபத்தில் எழுதிய வரிகள்தான் அக்கா தாறு மாறாக எழுதியிருந்து எரிச்சல் ஏற்பட்டாலும் மன்னித்துக்கொள்ளுங்கள்*சம்ஸ் wrote:வரிகள் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது நண்பா இவர்களை தூக்கிலிடுவதே சிறந்தது.
Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!
முதலில் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது அது எதனால் எப்ப்டி, எனும் பப்ளிசிட்டி செய்யாமல் அவ்விடத்திலேயே தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே தீர்வு எட்ட முடியும். செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டெனும் பயம் தான் இம்மாதிரி செயல்களை தடை செய்யும். அதை விட்டு ஆராய்ந்து எழுதிட எழுதிட தான் இன்னும் பலர் அட இப்படியெல்லாம் முடியுமா என புதிய முயற்சிகளுக்கும் வித்தாகின்றதோ என நினைக்கின்றேன்.
வழக்கு வாய்தா என போய் நாளடைவில் செய்தது தப்பே இல்லை என உலாவிட்டிருக்கும் மிருகங்கள் வாழும் பூமியில் இது வெல்லாம் தொடர் கதை தானோ?
இம்மாதிரி கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நடந்தால் யார் எவர் எதனால் எனவெல்லாம் ஆராய்ந்திட்டிருக்க கூடாது , சம்பந்தப்பட்டவர்களை உடனே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உடனே சிறைக்கும் அனுப்பி விட வேண்டும் ஜெயிலில் இட்டு அவர்கள் சுதந்திரத்தினை முடக்கி விட வேண்டும். வெளியில் விடவே கூடாது. ஆனால் நிஜத்தில் அப்படியா நடக்கின்றது.
நம்மையும் நம் குழந்தைகளையும் நாம் பாதுகாத்து கொள்வோம்.
கவிதை வரிகள் கனமாய் இருந்தாலும் இதையெல்லாம் எழுதி எழுதியே பப்ளிசிட்டி செய்கின்றோம் என மறக்கவும் கூடாது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!
பப்ளி சிட்டிக்காக எழுதவில்லை மனதில் எழுந்த ஆதங்கத்தினை கவிதையாய் வடித்து தீர்த்துக்கொண்டேன் என் மனதின் பாரம் குறைந்ததாக உணர்கிறேன் இது மற்றவர்களின் உள்ளத்தை தொடும் எனவும் எதிர்பார்க்கிறேன் எடுத்துவைக்கப்பட்ட தீர்வுக்கு ஆதரவினை தெரிவிக்கிறேன் இச்செயல் சமுகத்தில் இடம்பெறக்கூடாது என ஆதங்கப்படுகிறேன் எழுதுகின்ற அத்தனை பேரும் பப்ளிசிட்டிக்காகத்தான் எழுதுகிறார்கள் என்றால் உலகில் நாம் எதையும் சாதித்திடவும் முடியாதுNisha wrote:முதலில் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது அது எதனால் எப்ப்டி, எனும் பப்ளிசிட்டி செய்யாமல் அவ்விடத்திலேயே தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே தீர்வு எட்ட முடியும். செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டெனும் பயம் தான் இம்மாதிரி செயல்களை தடை செய்யும். அதை விட்டு ஆராய்ந்து எழுதிட எழுதிட தான் இன்னும் பலர் அட இப்படியெல்லாம் முடியுமா என புதிய முயற்சிகளுக்கும் வித்தாகின்றதோ என நினைக்கின்றேன்.
வழக்கு வாய்தா என போய் நாளடைவில் செய்தது தப்பே இல்லை என உலாவிட்டிருக்கும் மிருகங்கள் வாழும் பூமியில் இது வெல்லாம் தொடர் கதை தானோ?
இம்மாதிரி கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நடந்தால் யார் எவர் எதனால் எனவெல்லாம் ஆராய்ந்திட்டிருக்க கூடாது , சம்பந்தப்பட்டவர்களை உடனே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உடனே சிறைக்கும் அனுப்பி விட வேண்டும் ஜெயிலில் இட்டு அவர்கள் சுதந்திரத்தினை முடக்கி விட வேண்டும். வெளியில் விடவே கூடாது. ஆனால் நிஜத்தில் அப்படியா நடக்கின்றது.
நம்மையும் நம் குழந்தைகளையும் நாம் பாதுகாத்து கொள்வோம்.
கவிதை வரிகள் கனமாய் இருந்தாலும் இதையெல்லாம் எழுதி எழுதியே பப்ளிசிட்டி செய்கின்றோம் என மறக்கவும் கூடாது.
பப்ளிசிட்டியால் என்ன நமக்கு லாபம்
Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!
வாழத்தகுதியற்ற மானிடன் நீ..
உனை தூக்கிலிடுவதைத் தவிர
எத்தண்டனையும் ஈடாகாது
படைத்தவன் கூட மன்னித்திடமாட்டான்
என்னைக் கேட்டால் தூக்கிலிடுவதைக் காட்டிலும் பெரிய தண்டனை தெர வேண்டும்
தன் குழந்தைக்கு இப்படி ஒரு கெதி நடந்தால் நமது உள்ளம் எப்படி கொதிப்படையுமோ அப்படி இருக்க எனக்கு
இழுத்து வைத்து வெட்டி எறிய வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!
ஹாசிம் நான் நீங்கள் பப்ளிசிட்டி செய்தீர்கள் என சொல்லவில்லையப்பா.
இங்கே சுவிஸில் இம்மாதிரி நடந்தால் அடுத்த வீட்டுக்கு கூட தெரியாத வாறு சம்பந்தபட்டவர்களை அப்படியே கூண்டோடு ஜெயிலில் கொண்டு போய் போட்டு விடுவார்கள். பல வருடங்கள் சுதந்திரம் முடக்கப்பட்டு அவர்கள் எதிர்காலமே பாழாகிப்போகும் படி செய்வார்கள். படிக்கும் பசங்களாயிருந்தால் சுவிஸில் எங்கேயும் படிக்க முடியாதபடி செய்வார்கள். மரண தண்டனை இல்லாவிட்டாலும் அதை விட அதிக தண்டனையை வழங்கி விடுவார்கள். ஆனால் எந்த பத்திரிகையில் இச்செய்திகள் வராது. அத்தனை கட்டுப்பாடு இங்கே. நல்லவைகளை மட்டுமே வெளிப்படுத்தப்படும். தீயவைகள் தண்டிக்கப்படும் அதே வேளை பப்ளிசிட்டியாக்கப்படாது.
நம்ம ஊரில் எப்படி கொள்ளையடித்தான், எப்படி கற்பழித்தான் என படம் படமா வீடியோ போட்டு புதிது புதிதாய் குற்றச்செயல்களை ஊக்குவிக்கின்றார்கள். அதை தவிர்க்கணும். அவனுக்கு அப்படி தண்டனை கொடு இப்படி கொடு என எழுதி எழுதி இன்னும் இன்னும் வேதனைகளை அதிகரிக்கின்றோம்.
நம் வீட்டில் இப்படி நடந்தால் நாம் இப்படில்லாம் எழுதிட்டிருப்போமோ ? யோசியுங்கள் நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பது புரியும்.
வரதட்சனை கொடுமையை எழுதுவதற்கும் இதற்கும் வேறு பாடு உண்டு ஹாசிம்.
புரிந்திடுவீர்கள் என நம்புகின்றேன்.
இவ்வரிகளில் உங்களுக்கு பப்ளிசிட்டி என சொல்லப்படவில்லை. மீண்டும் மீண்டும் நாம் இவைகளை எழுதும் போது இப்படியெல்லாமா நடக்கும் என்பதை இன்னும் அதிகமானோருக்கு கொண்டு செல்கின்றோம். அதை தவிர்க்க சொன்னேன். தவிர... உங்களை தனிப்பட சொல்லவில்லை.கவிதை வரிகள் கனமாய் இருந்தாலும் இதையெல்லாம் எழுதி எழுதியே பப்ளிசிட்டி செய்கின்றோம் என மறக்கவும் கூடாது.
இங்கே சுவிஸில் இம்மாதிரி நடந்தால் அடுத்த வீட்டுக்கு கூட தெரியாத வாறு சம்பந்தபட்டவர்களை அப்படியே கூண்டோடு ஜெயிலில் கொண்டு போய் போட்டு விடுவார்கள். பல வருடங்கள் சுதந்திரம் முடக்கப்பட்டு அவர்கள் எதிர்காலமே பாழாகிப்போகும் படி செய்வார்கள். படிக்கும் பசங்களாயிருந்தால் சுவிஸில் எங்கேயும் படிக்க முடியாதபடி செய்வார்கள். மரண தண்டனை இல்லாவிட்டாலும் அதை விட அதிக தண்டனையை வழங்கி விடுவார்கள். ஆனால் எந்த பத்திரிகையில் இச்செய்திகள் வராது. அத்தனை கட்டுப்பாடு இங்கே. நல்லவைகளை மட்டுமே வெளிப்படுத்தப்படும். தீயவைகள் தண்டிக்கப்படும் அதே வேளை பப்ளிசிட்டியாக்கப்படாது.
நம்ம ஊரில் எப்படி கொள்ளையடித்தான், எப்படி கற்பழித்தான் என படம் படமா வீடியோ போட்டு புதிது புதிதாய் குற்றச்செயல்களை ஊக்குவிக்கின்றார்கள். அதை தவிர்க்கணும். அவனுக்கு அப்படி தண்டனை கொடு இப்படி கொடு என எழுதி எழுதி இன்னும் இன்னும் வேதனைகளை அதிகரிக்கின்றோம்.
நம் வீட்டில் இப்படி நடந்தால் நாம் இப்படில்லாம் எழுதிட்டிருப்போமோ ? யோசியுங்கள் நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பது புரியும்.
வரதட்சனை கொடுமையை எழுதுவதற்கும் இதற்கும் வேறு பாடு உண்டு ஹாசிம்.
புரிந்திடுவீர்கள் என நம்புகின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!
சட்டம் ஒன்று சரிவர இல்லாமையதான் இதற்கு காரணம் சரியான சட்டம் இருந்தால் சரியாக தண்டிக்கப்பட்டால் இவ்வாறு பேச வேண்டிய தேவை ஏற்பமாது சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மற்றவர்கள் அவரவர்கள் அவரவரவரது விடயங்களைப் பார்த்துக்கொள்வார்கள் குற்றம் செய்தவன் சுதந்திரமாகவும் பாதிக்கப்பட்டவன் குற்றப்படுத்தப்பட்டும் சமுகத்தில் நிலவுவதை எழுதாமல் விவாதிக்காலம் போர்க்கொடி தூக்காலம் சாதித்திட முடியாது
நம் வீட்டில் நடந்தால் இவ்வாறு எழுதுவது என்பது வேறு அவனை தொலைத்து விட்டுத்தான் அடுத்தது எங்கோ நடந்தது என்றாலும் அதே உணர்வுடன்தான் இருக்கிறோம் இப்படிப்பட்டவர்கள் கையில் கிடைத்தால் விட்டுவைப்பதில்லை எங்களுரில் இப்படிப்பட்டவர்களை எரித்தே விடுவார்கள் என்பது நானறிந்தது சட்டம் தண்டிக்கும் என்று கை கட்டி பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் அன்று யாழ்பாணத்தில் நடந்த குற்றம் இன்னும் வாயிதா போட்டு இழுத்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களை தண்டித்து சமுகத்துக்கு நிருபித்திருந்தால் இன்ற இழப்பு நடந்திருக்காது இவ்வாறு சென்றால் நாளையும் இதே செய்தியை படிக்கலாம்
சுவிஷோடு இலங்கையை இந்தியாவை ஒப்பிட முடியாது

பல நாட்களாக நானும் சொல்லி வருகிறேன் தண்டனைகளை அதிகரிக்க வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும் அதுவும் இப்படியான குற்றம் கற்பழிப்பு மானபங்கம் சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற குற்றங்களுக்கு அதி பயங்கர தண்டனை தர வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
» இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
» அஜ்மல் கசாப் தீவிரவாதி; அவனை தூக்கில் போடுங்கள் பாகிஸ்தான் மந்திரி ரெஹ்மான் மாலிக் சொல்கிறார்
» இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
» அஜ்மல் கசாப் தீவிரவாதி; அவனை தூக்கில் போடுங்கள் பாகிஸ்தான் மந்திரி ரெஹ்மான் மாலிக் சொல்கிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum