சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Khan11

சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

4 posters

Go down

 சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

Post by Nisha Thu 24 Sep 2015 - 17:33

குறிஞ்சிப்பாட்டில் பூக்கள் எனும் சங்க காலப்பாடல்களைத்தொடர்ந்து  சங்ககால தாவரங்கள் எனும் தொகுப்பை இத்திரியில் தொகுக்கலாம் என நினைக்கின்றேன்.

அகநானுற்றுப்பாடல்களில் மரங்கள்
அகநானுற்றுப்பாடல்களில் மலர்கள் 
அகநானுற்றுப்பாடல்களில் பழங்கள்
குறுந்தொகையில் இயற்கை



  1. அகில்
  2. அதவமெனும் அத்தி 




தேடல்களுக்கு உதவிடப்போகும் விக்கிமீடியா  மற்றும் இணைய தளங்களுக்கு நன்றி


Last edited by Nisha on Thu 1 Oct 2015 - 23:42; edited 3 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

Post by Nisha Thu 24 Sep 2015 - 17:48

சங்க இலக்கியங்களில் 240க்கும் மேற்பட்ட தாவரங்கள் குறிப்பிடபட்டிருக்கின்றன. குறிஞ்சிப்பாட்டில் ஒரு பாட்டிலேயே 261 வரிகளில் 112 வகையான தாவரங்களின் பெயர் பட்டியலிடபட்டிருந்தாலும்  35 தாவரங்களை அடைமொழியுடன் இருபொருள் சொற்பெயருடன் பயன் படுத்தி இருக்கின்றார்.  

102 பூக்களின் பெயர்களை 33 வரிகளில் பாடி இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Last edited by Nisha on Thu 28 Jan 2016 - 21:11; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

Post by சே.குமார் Thu 24 Sep 2015 - 18:11

ஆஹா...
அப்படியா?
எல்லாவற்றையும் தொகுங்கள் அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

 சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

Post by Nisha Thu 24 Sep 2015 - 18:55

புல்.மரம்,செடி,கொடிகள் என்பவை தாவரங்கள் எனப்படுகின்றன. 

உயிர்த்தன்மை இருப்பவைகளெல்லாம் நகரும் தன்மைக்குரியவை என்பதற்கு ஏற்ப தாவரங்களும் தம் உணவுக்காக நகரும் தன்மை கொண்டவையே!
மண்  நோக்கியும், நீர் நோக்கியும், நிலம் நோக்கியும் , ஒளி நோக்கியும் தாவரங்களின் இயக்கம் அமைவதோடு  நிறம் கொண்டு காலையிலும் மாலையிலும் மலரும் பூக்களாகவும் , திசை நோக்கி மலரும் மலர்களாகவும் இருக்கின்றன. 


வெண்மை நிறப்பூக்கள் காலையிலும், மஞ்சள் நிறப்பூக்கள் மாலையிலும்  சூரிய காந்தி போனறவை  திசை நோக்கியும்  மலர்கின்றன.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

Post by Nisha Thu 24 Sep 2015 - 18:56

சே.குமார் wrote:ஆஹா...
அப்படியா?
எல்லாவற்றையும் தொகுங்கள் அக்கா...

 நான் ஏற்கனவே குறிஞ்சிப்பாட்டில் பூக்கள் எனும்  பதிவை முழுமையாக்கி இருக்கின்றேன் குமார். கவனித்ததில்லையோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

Post by Nisha Thu 24 Sep 2015 - 19:17

 ஒவ்வொன்றாய்  தொகுத்திட சங்க இலக்கியங்களில் பரந்திருக்கும்  தாவரங்களில்  சில இங்கே பட்டியலிட்டிருக்கின்றேன்.  தேடலின் தொடர்ச்சியாய் பட்டியலில் தாவரங்கள் பெயர்கள்  பின்னர் சேர்க்கப்படும்.  குறிஞ்சிப்பாட்டில் மலர்கள்  எனும் பாடலில் கபிலர் பாடியவைகளும் இதில் அடங்கும். . 



  1. • அகில் – Eaglewood Tree
  2. • அதவம், அத்தி – Fig Tree
  3. • அரச மரம் – Pipal Tree
  4. • ஆசினி – Breadfruit Tree
  5. • ஆத்தி – Bauhinia racemosa
  6. • ஆலமரம் – Banyan Tree
  7. • இகணை
  8. • இரவம், இருள்மரம்
  9. • இருப்பை, இலுப்பை, வஞ்சி – Indian Butter Tree
  10. • இற்றி – White Fig
  11. • இலந்தை, இரத்தி, Jujube
  12. • இலவம், பூளை – Silk Cotton Tree
  13. • இல்லம் – Clearing Nut Tree
  14. • ஈத்து, ஈந்து – Date Palm
  15. • உகா, உகாய், உவா – Toothbrush Tree
  16. • உடை – Umbrella-thorn babul
  17. • உந்தூழ் – Large Bamboo
  18. • உன்ன மரம்
  19. • எறுழ் மரம் – Alstonia scholaris
  20. • ஓமை- Dillenia indica
  21. • கடம்பு, மரவம் – Kadamba Oak
  22. • கமுகு – Betelnut Tree
  23. • களா மரம் – Corinda Tree
  24. • கள்ளி – Cactus
  25. • கவிர், முருக்கு – Coral Tree, Palaus Tree
  26. • காஞ்சி – Portia Tree
  27. • காயா – Ironwood Tree
  28. • குன்றி முத்து – Crab’s Eye Tree
  29. • குமிழ் மரம்
  30. • குரவம், குரவு – Bottle Flower Tree
  31. • குருந்தம், குருந்து – A citrus Tree
  32. • குளவி – பன்னீர் பூ மரம்
  33. • கூதளி, கூதாளம்
  34. • கூவிரம்
  35. • கூவிளம் – வில்வம் – Bael Tree
  36. • கொன்றை, கடுக்கை – Laburnum
  37. • கோங்கம் – Cochlospermum gossypium
  38. • சந்தனம், ஆரம் – Sandalwood Tree
  39. • சிலை மரம்
  40. • செங்கருங்காலி, மோரோடம் – Red Catechu
  41. • செயலை, பிண்டி – Asoka Tree
  42. • செருந்தி
  43. • ஞாழல்
  44. • ஞெமை
  45. • தடா மரம்
  46. • தாழை – Fragrant Screw Pine
  47. • தில்லை – Blinding Tree
  48. • துடரி – மலை இலந்தை
  49. • தென்னை – Coconut Tree
  50. • தேக்கு – Teak Tree
  51. • நரந்தம் – Bitter Orange
  52. • நாவல்
  53. • நுணவம், நுணா மரம்
  54. • நெல்லி – Gooseberry Tree
  55. • நொச்சி – Chaste Tree
  56. • பசும்பிடி – Mysore Gamboge
  57. • பனை – Palmyra Palm
  58. • பலா – Jackfruit Tree
  59. • பாங்கர் – Tooth-brush tree
  60. • பாதிரி – Yellow Flower Trumpet Tree
  61. • பாலை – Ivorywood Tree
  62. • பிடவம், பிடவு
  63. • புங்கம், புன்கு – Indian Beech
  64. • புன்னை, நாகம் – Laurel Tree
  65. • புளிய மரம் – Tamarind Tree
  66. • போங்கம், சிவப்பு குன்றி – Red Wood Tree
  67. • மகிழம், இலஞ்சி – Pointed-leaved Ape Flower Tree
  68. • மருதம் – Arjuna Tree
  69. • மாமரம் – Mango Tree
  70. • முருக்க மரம்
  71. • முருங்கை மரம்
  72. • மூங்கில், உந்தூழ், கழை – Bamboo
  73. • யா மரம்
  74. • வகுளம் – Bakul Tree
  75. • வன்னி – Indian Mesquite
  76. • வழை, சுரபுன்னை
  77. • வாகை, உழிஞ்சில் – Sirissa Tree
  78. • வாழை – Banana Tree
  79. • விடத்தேரை – Ashy babool
  80. • விளா – Wood Apple Tree
  81. • வெள்ளோத்திரம்
  82. • வேங்கை – Kino Tree
  83. • வேம்பு – Neem Tree
  84. • வேலம், வெள்வேலம் – Panicled Babool


Last edited by Nisha on Thu 24 Sep 2015 - 22:07; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

Post by சே.குமார் Thu 24 Sep 2015 - 21:31

சேனை வந்த ஆரம்பத்தில் படித்த ஞாபகம் அக்கா....

ம்ம்ம்....அருமையான தொகுப்பு இது அகில் முதல் வேலம் வரை நிறைய அறியாத பெயர்கள்..
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

 சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

Post by Nisha Fri 25 Sep 2015 - 1:28

Nisha wrote: ஒவ்வொன்றாய்  தொகுத்திட சங்க இலக்கியங்களில் பரந்திருக்கும்  தாவரங்களில்  சில இங்கே பட்டியலிட்டிருக்கின்றேன்.  தேடலின் தொடர்ச்சியாய் பட்டியலில் தாவரங்கள் பெயர்கள்  பின்னர் சேர்க்கப்படும்.  குறிஞ்சிப்பாட்டில் மலர்கள்  எனும் பாடலில் கபிலர் பாடியவைகளும் இதில் அடங்கும்.

  1. அகில் – Eaglewood Tree
  2. அதவம், அத்தி – Fig Tree
  3. அரச மரம் – Pipal Tree
  4. ஆசினி – Breadfruit Tree
  5. ஆத்தி – Bauhinia racemosa
  6. ஆலமரம் – Banyan Tree
  7. இகணை
  8. இரவம், இருள்மரம்
  9. இருப்பை, இலுப்பை, வஞ்சி – Indian Butter Tree
  10. இருவாட்சி மரம்:
  11. இற்றி – White Fig
  12. இலந்தை, இரத்தி, Jujube
  13. இலவம், பூளை – Silk Cotton Tree
  14. இல்லம் – Clearing Nut Tree
  15. ஈத்து, ஈந்து – Date Palm
  16. உகா, உகாய், உவா – Toothbrush Tree
  17. உடை – Umbrella-thorn babul
  18. உந்தூழ் – Large Bamboo
  19. உன்ன மரம்
  20. எறுழ் மரம் – Alstonia scholaris
  21. ஓமை- Dillenia indica
  22. கடம்பு, மரவம் – Kadamba Oak
  23. கமுகு – Betelnut Tree
  24. களா மரம் – Corinda Tree
  25. கள்ளி – Cactus
  26. கவிர், முருக்கு – Coral Tree, Palaus Tree
  27. காஞ்சி – Portia Tree
  28. காயா – Ironwood Tree
  29. குன்றி முத்து – Crab’s Eye Tree
  30. குமிழ் மரம்
  31. குரவம், குரவு – Bottle Flower Tree
  32. குருந்தம், குருந்து – A citrus Tree
  33. குளவி – பன்னீர் பூ மரம்
  34. கூதளி, கூதாளம்
  35. கூவிரம்
  36. கூவிளம் – வில்வம் – Bael Tree
  37. கொன்றை, கடுக்கை – Laburnum

    • சிறுகொன்றை மரம்:
    • நரிக்கொன்றை மரம்:
    • மைக்கொன்றை மரம


  • கோங்கம் – Cochlospermum gossypium
  • சந்தனம், ஆரம் – Sandalwood Tree
  • சிலை மரம்
  • செங்கருங்காலி, மோரோடம் – Red Catechu
  • செயலை, பிண்டி – Asoka Tree
  • செருந்தி
  • ஞாழல்
  • ஞெமை
  • தடா மரம்
  • தாழை – Fragrant Screw Pine
  • தில்லை – Blinding Tree
  • துடரி – மலை இலந்தை
  • தென்னை – Coconut Tree
  • தேக்கு – Teak Tree
  • தேவதாரு- சரள தேவதாரு மரம்:
  • நரந்தம் – Bitter Orange
  • நாவல்
  • நுணவம், நுணா மரம்
  • நெல்லி – Gooseberry Tree
  • நொச்சி – Chaste Tree
  • பசும்பிடி – Mysore Gamboge
  • பனை – Palmyra Palm
  • பலா – Jackfruit Tree
  • பாங்கர் – Tooth-brush tree
  • பாதிரி – Yellow Flower Trumpet Tree
  • பாலை

    1. வெட்பாலை
    2. தீம் பாலை
    3. மலைப்பாலை
    4. குடசப்பாலை
    5. குளப்பாலை


  • பிடவம், பிடவு
  • புங்கம், புன்கு – Indian Beech
  • புன்னை, நாகம் – Laurel Tree
  • புளிய மரம் – Tamarind Tree
  • புரச மரம்
  • போங்கம், சிவப்பு குன்றி – Red Wood Tree
  • மகிழம், இலஞ்சி – Pointed-leaved Ape Flower Tree
  • மருதம் – Arjuna Tree
  • மாமரம் – Mango Tree
  • முருக்க மரம்
  • முருங்கை மரம்
  • மூங்கில், உந்தூழ், கழை – Bamboo
  • யா மரம்
  • வகுளம் – Bakul Tree
  • வன்னி – Indian Mesquite
  • வழை, சுரபுன்னை
  • வாகை, உழிஞ்சில் – Sirissa Tree
  • வாழை – Banana Tree
  • விடத்தேரை – Ashy babool
  • விளா – Wood Apple Tree
  • வெள்ளோத்திரம்
  • வேங்கை – Kino Tree
  • வேப்ப மரம்:Neem Tree
              மலை வேப்ப மரம்:
              சருக்கரை வேப்ப மரம்:
  • வேலம், வெள்வேலம் – Panicled Babool 




     

  •  


    நாம் நேசிப்பவரால் மட்டுமே
    நம்மை அழவும்,சிரிக்கவும் 
    வைக்க முடியும் 
    அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
    பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
    Nisha
    Nisha
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 18836
    மதிப்பீடுகள் : 2424

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by Nisha Sun 27 Sep 2015 - 2:05

    அகில்
    Botanical name - Aquilaria agallocha
     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Akil

      சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Bo747
    Tamil        - Agil
    English        - Aloewood
    Sanskrit        -Agaru
    Telugu        - Krishnagaru
    Malayalam    - Kayagahru
    Hindi        - Agar


    சங்ககாலத்தில் காழ்வை  என அழைக்கப்பட்ட அகில்   சந்தனக் கட்டைக்கு அடுத்து மருத்துவ உலகிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்ற ஒன்றாகும்.  அகில் (Aquilaria malaccensis) என்பது முதன்மையாக அதன் கட்டைகளுக்காகப் பெறுமதி மிக்கதாகக் கருதப்படும் அகில் சந்தனமர வகையைச் சேர்ந்த மர வகைகளில் ஒன்று. காடுகளில் பல இடங்களில் சந்தன மரத்தை ஒட்டியே அகில் மரங்களும் வளர்ந்திருப்பதைக் காணலாம்.பூக்களின் மென்மைதன்மைக்கு மாறாக காழ்வை என்னும் பூவோ வன்மையான வளைந்துகொடுக்காததுமாய் வைரம் போல் இருக்கும்.  இது அகருமரம், அகருக்கட்டை,அகிற்கட்டை  என்றும் குறிக்கப்படுகின்றது. 

    இது வங்காளதேசம், பூட்டான், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், லாவோசு, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. இது வளரும் இடங்களின் இழப்புக் காரணமாக இது அழியும் வாய்ப்பு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

    சிறகுக் கூட்டிலைகளையும், சமமற்ற சிற்றிலைகளையும் உடையது; தமிழக மலைக்காடுகளில் தானே வளர்கின்றது. இதன் கட்டை மணமுடையது; சந்தனம் போல் மணப்பொருளாய் பயன்பாட்டில் உள்ளது. இதன் தூளை தணலில் இட்டால் எழும்புகையானது மிகவும் நறுமணம் கொண்டதாக இருக்கும்.

    அகில் மரத்தின் கட்டை மட்டும்தான் மருத்துவச் சிறப்பு பெற்றுத் திகழ்கிறது.  உடலில் வெப்ப உணர்வைத் தோற்றுவிப்பது இதன் இயல்பாகும். கல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் ஆற்றலும் இதனிடம் அமைந்திருக்கிறது. உடலில் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதைக் குறைக்கும் சக்தி பெற்றது அகில்.
     
    தளர்ந்த விருத்தருக்காந் தக்க மணத்தால்
    உளைந்த சுரமனைத்து மோடும்- வளர்ந்திகழு
    மானே யகிற்புகைக்கு வாந்தியரோ சுகம்போத்
    தானே தளர்ச்சியறுஞ் சாற்று

    -அகத்தியர் குணவாகடம்

    பொருள் -  அகில் கட்டை வயோதிகர்களுடைய தளர்ந்த தேகத்தையும் இறுகச் செய்யும்.  இதன் வாசனையால் சிற்சில சுரம் நீங்கும்.  புகையால் வாந்தியும், பசியின்மையும், அழற்சியும் நீங்கும்.  அகில் கட்டை இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது
    அகில் குறித்த சங்க கால பாடல்கள் சில...

    பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூவனங்கள்
    வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகைக்கார்
    நதிகள் எங்கும் மலர்ப் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன
    வீதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர்ப்பூ. 12.கழற்.142


    நாம் நேசிப்பவரால் மட்டுமே
    நம்மை அழவும்,சிரிக்கவும் 
    வைக்க முடியும் 
    அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
    பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
    Nisha
    Nisha
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 18836
    மதிப்பீடுகள் : 2424

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by *சம்ஸ் Sun 27 Sep 2015 - 8:30

    சிறப்பான தொடர் மேடம் அறியாத பல தாவரங்களின் பெயர்கள் அறிய முடிந்தது தொகுப்பிற்கு நன்றிகள்.


    உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
    *சம்ஸ்
    *சம்ஸ்
    வி.ஐ.பி

    பதிவுகள்:- : 69213
    மதிப்பீடுகள் : 2977

    http://chenaitamilulaa.net

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by Nisha Mon 28 Sep 2015 - 1:02

    கருத்திடலுக்கு நன்றி சம்ஸ்!


    நாம் நேசிப்பவரால் மட்டுமே
    நம்மை அழவும்,சிரிக்கவும் 
    வைக்க முடியும் 
    அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
    பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
    Nisha
    Nisha
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 18836
    மதிப்பீடுகள் : 2424

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by சே.குமார் Mon 28 Sep 2015 - 21:17

    விவரம் அறிந்தேன் அக்கா...
    பகிர்வுக்கு நன்றி.
    சே.குமார்
    சே.குமார்
    புதுமுகம்

    பதிவுகள்:- : 1465
    மதிப்பீடுகள் : 618

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by நண்பன் Wed 30 Sep 2015 - 17:02

    சிறப்பான ஒரு தொடக்கம் அக்கா நீங்கள் பதியும் போது அப்பப்ப படிக்க முடிந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் இன்றுதான் முதல் கட்டமாக உங்கள் பதிவைப் படித்தேன்

    நான் மட்டும் இல்லை எத்தனையோ பேர் அறிந்திடாத தாவரங்கள் அதன் பெயர்கள் அதன் குணங்கள் அப்பப்பா அனைத்தையும் ஒரே இடத்தில் படிக்கச் செய்ய விருக்கிறீர்கள் மகிழ்ச்சியாக உள்ளது

    முதல் கட்டமாக அகில் எனும் மரம் பற்றியும் மரத்தின் மருத்துவக்குணம் பற்றியும் அறிய முடிந்தது.
    இது வரை அறிந்திடாத மரமும் தகவலும்

    அகில் பற்றி அறிந்து விட்டேன்
    அடுத்து அதவம் அத்தி பற்றி கொஞ்சமாக தெரியும் இருந்தாலும் முழுமையாக விளக்கம் அறிய ஆவலாய் உள்ளேன் எழுதுங்கள் அக்கா பெறுமதியான தகவல்கள் தொகுத்து வழங்கும் உங்களுக்கு என்றும் உடல் ஆரோக்கியம் நல்க இறைவனை வேண்டுகிறேன்
    மாறா அன்புடன் நண்பன்


    நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
    நண்பன்
    நண்பன்
    தலைமை நடத்துனர்

    பதிவுகள்:- : 93923
    மதிப்பீடுகள் : 5491

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by Nisha Wed 30 Sep 2015 - 17:25

    ரெம்ப ரெம்ப ரெம்ப  நன்றிங்க! 
    அப்பப்ப படித்து இப்படி பின்னூட்டம் போட்டிங்க எனில் நாங்களும் ஆர்வமாக  ஆராய்ந்தறிந்து பதிவோமாம்.


    நாம் நேசிப்பவரால் மட்டுமே
    நம்மை அழவும்,சிரிக்கவும் 
    வைக்க முடியும் 
    அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
    பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
    Nisha
    Nisha
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 18836
    மதிப்பீடுகள் : 2424

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by நண்பன் Wed 30 Sep 2015 - 18:10

    Nisha wrote:ரெம்ப ரெம்ப ரெம்ப  நன்றிங்க! 
    அப்பப்ப படித்து இப்படி பின்னூட்டம் போட்டிங்க எனில் நாங்களும் ஆர்வமாக  ஆராய்ந்தறிந்து பதிவோமாம்.
    கண்டிப்பாக படிக்கனும் எழுதுனும் நீங்கள் தொடருங்கள் அக்கா சியர்ஸ்


    நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
    நண்பன்
    நண்பன்
    தலைமை நடத்துனர்

    பதிவுகள்:- : 93923
    மதிப்பீடுகள் : 5491

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by Nisha Thu 1 Oct 2015 - 21:04

    அகநானூற்று பாடல்களில்   மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், தானியங்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள்  குறித்த   வர்ணனைகள் பெரும்பாலான பாடல்களில் காணப்படுகின்றன.

    அகநானூற்று பாடல்களில் கூறப்பட்டுள்ள மரங்கள்



    1. ·         ஆலமரம் (ஆலம்)
    2. ·         இருப்பை
    3. ·         இலவம்
    4. ·         இற்றி (இத்தி)
    5. ·         ஈந்து
    6. ·         உகாய்
    7. ·         ஓமை
    8. ·         காஞ்சி
    9. ·         காயா
    10. ·         குரவம்
    11. ·         குருந்தம்
    12. ·         கொன்றை
    13. ·         கோங்கு
    14. ·         சந்தனம் (சாந்தம்)
    15. ·         சவுக்கு(இகணை)
    16. ·         ஞாழல்
    17. ·         ஞெமை
    18. ·         தாழை (கைதை)
    19. ·         தேக்கு
    20. ·         தேற்றா (இல்லம்)
    21. ·         நாரத்தை (நரந்தம்)
    22. ·         நாவல்
    23. ·         நுணா
    24. ·         நெல்லி
    25. ·         நொச்சி
    26. ·         பலா
    27. ·         பனை(பெண்ணை,போந்தை)
    28. ·         புன்னை(வழை)
    29. ·         மரா(கடம்ப மரம்)
    30. ·         மருதமரம்
    31. ·         மாமரம்
    32. ·         முருக்கு
    33. ·         முருங்கை
    34. ·         மூங்கில்(கழை,வேய்,அரில்,புல்)
    35. ·         யா
    36. ·         வஞ்சி
    37. ·         வாகை (உழிஞ்சில்)
    38. ·         வாழை
    39. ·         வேங்கை
    40. ·         வேலமரம்


    நாம் நேசிப்பவரால் மட்டுமே
    நம்மை அழவும்,சிரிக்கவும் 
    வைக்க முடியும் 
    அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
    பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
    Nisha
    Nisha
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 18836
    மதிப்பீடுகள் : 2424

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by Nisha Thu 1 Oct 2015 - 22:25

    அகநானூற்றுபாடல்களில்கூறப்பட்டுள்ள மலர்கள்

    1. ·         அடுப்பம்
    2. ·         அதிரல்
    3. ·         அலரி
    4. ·         அல்லி
    5. ·         அவரை
    6. ·         ஆம்பல்
    7. ·         இருப்பை
    8. ·         இலவம்
    9. ·         ஈங்கை
    10. ·         எருக்கம்
    11. ·         கரந்தை
    12. ·         கரும்புப்
    13. ·         கருவிளை
    14. ·         களரியாவிரை
    15. ·         காஞ்சி
    16. ·         காந்தள்
    17. ·         காயாம்பூ
    18. ·         குரவம்
    19. ·         குருந்தம்
    20. ·         குவளை
    21. ·         கூதளம்
    22. ·         கொன்றை
    23. ·         கோங்கம்பூ
    24. ·         செங்கழுநீர்
    25. ·         செருந்தி
    26. ·         ஞாழல்
    27. ·         தாமரை
    28. ·         தாழம்பூ
    29. ·         தேற்றா மலர்
    30. ·         நீர்முள்ளி
    31. ·         நீலம்
    32. ·         நுணாப்ப
    33. ·         நெய்தல்
    34. ·         நொச்சி
    35. ·         பகன்றை
    36. ·         பனம்பூ
    37. ·         பாதிரி
    38. ·         பிச்சி
    39. ·         பிடவம்
    40. ·         பீர்க்கம்பூ
    41. ·         புன்னை
    42. ·         மரா மலர்
    43. ·         மல்லிகை
    44. ·         மாம்பூ
    45. ·         முருக்கம்பூ(கவிர்)
    46. ·         முருங்கை
    47. ·         முல்லை
    48. ·         வாகை
    49. ·         வாழை
    50. ·         வெட்சி
    51. ·         வேங்கை


    நாம் நேசிப்பவரால் மட்டுமே
    நம்மை அழவும்,சிரிக்கவும் 
    வைக்க முடியும் 
    அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
    பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
    Nisha
    Nisha
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 18836
    மதிப்பீடுகள் : 2424

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by Nisha Thu 1 Oct 2015 - 22:28

    அகநானூற்று பாடல்களில் கூறப்பட்டுள்ள பழங்கள்

    1. ·         களாக்கனி
    2. ·         நாவல்கனி
    3. ·         பலா
    4. ·         பாகல்கனி
    5. ·         மாங்கனி
    6. ·         வாழை
    7. ·         விளங்கனி


    நாம் நேசிப்பவரால் மட்டுமே
    நம்மை அழவும்,சிரிக்கவும் 
    வைக்க முடியும் 
    அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
    பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
    Nisha
    Nisha
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 18836
    மதிப்பீடுகள் : 2424

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by Nisha Thu 1 Oct 2015 - 23:29

    அதவம்
    Cluster Fig Tree
    Genus;FICUS GLOMERATA 
    Family;MORACEAE


     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Fig_tree

    வம் என குறிப்பிடப்படும் தாவரம், சங்கஇலக்கியங்களில் குறுந்தொகை
     மற்றும் நற்றிணையில் மட்டுமே காணப்படுகின்றது.  அத்தி என்றபெயர் சங்க இலக்கியங்களில் இடம் பெறவில்லை, ஆனால் பிற்கால இலக்கியங்களான பக்தி இலக்கியம், சித்தர் இலக்கியம், ஐஞ்சிறுங் காப்பியத்தில் நீலகேசி, உதயன குமாரக் காவியம் விவேக சிந்தாமணி போன்றவற்றில் அத்தி என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இவைகளில் கூறப்படும் அத்திதான் சங்க இலக்கியங்களில் அதவம் என கூறப்பட்டுள்ளது. 

    சங்க இலக்கிய கூற்றான, வெண்கோட்டு அதவம் என்பதும், சிவந்த குரங்கு குட்டியின் முகத்தை ஒத்த அதவத்தின் தீம் கனி என்பதும், அத்திக்கு பொருந்தி வருகின்றது ஆகவே, அத்தியும், அதவமும் ஒன்றுதான் எனக்கொள்ளலாம். 

    அத்தி மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG),வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. 

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Goolar

    அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும். அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

    அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6-8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும்.

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Images?q=tbn:ANd9GcQWdZ0MR8xiDnMkL5FnrwVuBDtuvGz7tlG_RwjbnbfhC5DZ3ydCZQ

    அத்திப்பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Goolar-1

    [*]மருத்துவ குணங்கள்.

    • மரத்தின் இலை, பால், பழம் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது. உலற வைத்துப் பொடித்த இலைகள் பித்தம், பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லது. காயங்களில் வடியும் இரத்தப்போக்கை உடனே நிறுத்தும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற உபாதைகளுக்கு அத்தி இலைகள் சிறந்தது. இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளிக்க உடன் பலன் கிடைக்கும். மரப்பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும்

    • அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, கடும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறத
    • தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
    • மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
    • நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
    • போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
    • தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது
    • http://www.flowersofindia.net/catalog/slides/Goolar.html


    Last edited by Nisha on Fri 2 Oct 2015 - 2:11; edited 4 times in total


    நாம் நேசிப்பவரால் மட்டுமே
    நம்மை அழவும்,சிரிக்கவும் 
    வைக்க முடியும் 
    அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
    பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
    Nisha
    Nisha
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 18836
    மதிப்பீடுகள் : 2424

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by Nisha Thu 1 Oct 2015 - 23:40

    குறுந்தொகையில் இயற்கை. 

    அத்தி(அதவம்), ஆல்(ஆலம்), இற்றி, உகாய், ஓமை, கண்டல், காஞ்சி, குரவம், கொன்றை, ஞாழல், ஞெமை, தாழை(கைதை), நெல்லி, நொச்சி, பலா(பலவு), பனை (பெண்ணை, போந்தை,) புளி, புன்கு, புன்னை, மரா, மருது, மா(கொக்கு), மூங்கில்(வேரல்), கழை, அமை, வேய்), யா, வாகை(உழிஞ்சில்), வாழை, வேங்கை, வேம்பு முதலிய மரங்களைப் பற்றியும் எருக்கு, கரும்பு, கள்ளி, காந்தள், கூதாளம்(கூதளி), சேம்பு, நெருஞ்சி, பருத்தி(பரீஇ), முண்டகம் ஆகிய செடிகளைப் பற்றியும்  அடும்பு, அவரை, அறுகு, ஆம்பல், தாமரை, பகன்றை, பிரப்பங்கொடி, பீர்க்கு, மாணை, மிளகு(கறி), முல்லை ஆகிய கொடிகளைப் பற்றியும் அடுப்பம், ஆம்பல், இருப்பை, ஈங்கை, எருக்கு, கரும்பு, கருவிளை, காஞ்சி, காந்தள்(கோடல், தோன்றி), காயாம், குரவம், குவளை, குறிஞ்சி, கூதாளம், கொன்றை, கோங்கு, ஞாழல், தாமரை, தாழம் நரந்தம், நெய்தல், நெருஞ்சி, பகன்றை, பாதிரி, பிச்சி(பித்திகம்), பிடவம், பீரம், புன்கு, புன்னை, மல்லிகை(குளவி), மாம்பூ,  முருக்கம்பூ, முல்லை, முண்டகம், வாகை, வெட்சி, வேங்கை, வேப்பம் ஆகிய மலர்களைப் பற்றியும் உழுந்து, எள், தினை(ஏனல்), நெல்(ஐவனம்), பயறு ஆகிய கூலங்கள்(தானியங்கள்) பற்றியும் அத்தி(அதவம்), பலா(பலவு), பிரப்பங்கனி, மா, வேப்பம்பழம் ஆகிய பழங்கள் பற்றியும் அணில், ஆடு(மறி), ஆமை, எருமை, எலி, எறும்பு, ஓந்தி, காளை(ஏறு, ஒருத்தல்), குதிரை(மா), குரங்கு(கடுவன், மந்தி, முசு, மயிர்க்கலை, ஊகம்), செந்நாய், தவளை, தேரை, நண்டு, நாய்(ஞமலி), நீர்நாய், பசு(ஆ, ஆன், கறவை, செருத்தல்), பல்லி, பாம்பு(அரா, அரவு), புலி(வெருகு), மான்(இரலை, உழை, வருடைமான், கலை, நவ்வி, மரை), முதலை, யானை(களிறு, பிடி, வேழம், நெடுங்கைவன்மான்)  முதலிய பலவகை விலங்குகள் பற்றியும் அன்றில், அன்னம், காக்கை, கிளி(கிள்ளி), குயில், குருகு(நாரை), குருவி, கூகை, கொக்கு, கோழி(கானங்கோழி, சேவல்), தும்பி(வண்டு, சுரும்பு), பருந்து, புறா(புறவு), (காடை), மயில்(தோகை, மஞ்ஞை), வாவல்(வௌவால்) முதலிய பறவைகள் பற்றியும் அயிரை, ஆரல், இறால்(இறவு), கெண்டை, சுறா(கோட்டுமீன்), வாளை ஆகிய மீன்கள் பற்றியும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.


    நாம் நேசிப்பவரால் மட்டுமே
    நம்மை அழவும்,சிரிக்கவும் 
    வைக்க முடியும் 
    அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
    பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
    Nisha
    Nisha
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 18836
    மதிப்பீடுகள் : 2424

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by நண்பன் Sat 3 Oct 2015 - 8:34

    அகநானூற்று பாடல்களில் கூறப்பட்டுள்ள மரங்கள்
    அகநானூற்றுபாடல்களில்கூறப்பட்டுள்ள மலர்கள்
    இவைகளின் வகைகள் அதிகமாக உள்ளதால் பொறுமையாக படிக்கிறேன் நீங்கள் அதைத் தொடருங்கள்

    ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் என்னவெண்றால்

    அகநானூற்று பாடல்களில் கூறப்பட்டுள்ள பழங்கள்

    ·         களாக்கனி  என்றால் என்ன வகை
    ·         நாவல்கனி நாவல் கனி தெரியும்
    ·         பலா பலா தெரியும்
    ·         பாகல்கனி பாகல் கனி என்றால் என்ன எந்த வகை
    ·         மாங்கனி  மாங்கனி அறியும்
    ·         வாழை  வாழையும் அறியும்
    ·         விளங்கனி விளாங்கனியும் அறியும்

    நான் அறியாத பழங்கள் பற்றிய விளக்கம் அறிய காத்திருக்க வேண்டுமா  மரங்கள் மலர்கள் என்று ஒவ்வொண்றாக வரிசையாகத்தான் தருவீர்களா அல்லது  முந்திப் பிந்தித் தருவீர்கள் ?

    எதுவாக இருப்பினும் பயனுள்ள பயணம் தொடர வாழ்த்துக்கள்


    நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
    நண்பன்
    நண்பன்
    தலைமை நடத்துனர்

    பதிவுகள்:- : 93923
    மதிப்பீடுகள் : 5491

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by நண்பன் Sat 3 Oct 2015 - 8:44

    அத்தி அதன் வகைகள் அதன் குணங்கள் அதன் வளர்ச்சி அத்திப்பழம் சாப்பிடுவதால் வரும் நண்மைகள் பற்றி அழகாக தெளிவாக  புரியும் படி எங்களுக்கு தொகுத்து வழங்கியமங்கையர் திலகம் நிஷா அக்கா உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்
    இன்று நான் படித்தவைகள் அனைத்தும் என் மனதில் நிற்க வேண்டும் அத்தியும் பயன்களை நான் நாடு சென்று அனுபவிக்க வேண்டும் நிறைய சாப்பிட வேண்டும் என்ற எண்ணம்

    உலர் அத்தி இங்கும் கடைகளில் கிடைக்கிறது! ஆனால்  நல்ல விலை.
    தொடருங்கள் அக்கா ஆவலோடு படிக்கிறேன்
    நன்றியுடன் நண்பன்..


    நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
    நண்பன்
    நண்பன்
    தலைமை நடத்துனர்

    பதிவுகள்:- : 93923
    மதிப்பீடுகள் : 5491

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by Nisha Sun 4 Oct 2015 - 0:10

    நண்பன் wrote:அகநானூற்று பாடல்களில் கூறப்பட்டுள்ள மரங்கள்
    அகநானூற்றுபாடல்களில்கூறப்பட்டுள்ள மலர்கள்
    இவைகளின் வகைகள் அதிகமாக உள்ளதால் பொறுமையாக படிக்கிறேன் நீங்கள் அதைத் தொடருங்கள்

    ஆனால் எனக்கு ஒரு சந்தோகம் என்னவெண்றால்

    அகநானூற்று பாடல்களில் கூறப்பட்டுள்ள பழங்கள்

    ·         களாக்கனி  என்றால் என்ன வகை
    ·         நாவல்கனி நாவல் கனி தெரியும்
    ·         பலா பலா தெரியும்
    ·         பாகல்கனி பாகல் கனி என்றால் என்ன எந்த வகை
    ·         மாங்கனி  மாங்கனி அறியும்
    ·         வாழை  வாழையும் அறியும்
    ·         விளங்கனி விளாங்கனியும் அறியும்

    நான் அறியாத பழங்கள் பற்றிய விளக்கம் அறிய காத்திருக்க வேண்டுமா  மரங்கள் மலர்கள் என்று ஒவ்வொண்றாக வரிசையாகத்தான் தருவீர்களா அல்லது  முந்திப் பிந்தித் தருவீர்கள் ?

    எதுவாக இருப்பினும் பயனுள்ள பயணம் தொடர வாழ்த்துக்கள்

      களாக்கனி  Capparis carandas


     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். 800px-Carissa_carandas_tree

     காய்கள் பச்சையும் லேசான சிவப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்து கொத்தாகவும் இனிப்பும் புளிப்பும் கலந்து இருக்கும். பழங்கள் கருமை நிறமாகவும் இனிப்பாகவும் இருக்கும். காய்களை ஊறுகாய் போட்டு உண்ணலாம்.
     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். 1280px-Carissa_carandas_fruits


    நாம் நேசிப்பவரால் மட்டுமே
    நம்மை அழவும்,சிரிக்கவும் 
    வைக்க முடியும் 
    அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
    பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
    Nisha
    Nisha
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 18836
    மதிப்பீடுகள் : 2424

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by Nisha Sun 4 Oct 2015 - 0:19

    நண்பன் wrote:அகநானூற்று பாடல்களில் கூறப்பட்டுள்ள மரங்கள்
    அகநானூற்றுபாடல்களில்கூறப்பட்டுள்ள மலர்கள்
    இவைகளின் வகைகள் அதிகமாக உள்ளதால் பொறுமையாக படிக்கிறேன் நீங்கள் அதைத் தொடருங்கள்

    ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் என்னவெண்றால்

    அகநானூற்று பாடல்களில் கூறப்பட்டுள்ள பழங்கள்

    ·         களாக்கனி  என்றால் என்ன வகை
    ·         நாவல்கனி நாவல் கனி தெரியும்
    ·         பலா பலா தெரியும்
    ·         பாகல்கனி பாகல் கனி என்றால் என்ன எந்த வகை
    ·         மாங்கனி  மாங்கனி அறியும்
    ·         வாழை  வாழையும் அறியும்
    ·         விளங்கனி விளாங்கனியும் அறியும்

    நான் அறியாத பழங்கள் பற்றிய விளக்கம் அறிய காத்திருக்க வேண்டுமா  மரங்கள் மலர்கள் என்று ஒவ்வொண்றாக வரிசையாகத்தான் தருவீர்களா அல்லது  முந்திப் பிந்தித் தருவீர்கள் ?

    எதுவாக இருப்பினும் பயனுள்ள பயணம் தொடர வாழ்த்துக்கள்


    பாகல் பழம்

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். 250px-Momordica_charantia_007 சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Paakal3


    நாம் நேசிப்பவரால் மட்டுமே
    நம்மை அழவும்,சிரிக்கவும் 
    வைக்க முடியும் 
    அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
    பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
    Nisha
    Nisha
    நிர்வாகக்குழுவினர்

    பதிவுகள்:- : 18836
    மதிப்பீடுகள் : 2424

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by நண்பன் Sun 4 Oct 2015 - 8:36

    மிக்க நன்றி அக்கா களாக்கனி பற்றி நான் இன்றுதான் அறிகிறேன் பார்க்கிறேன் ஆலம் கனி போல் உள்ளது

    பாகல் பழம் என்பது இதுதானா இது நாம் சமைத்து சாப்பிடும் பல மருத்துவக்குணங்கள் கொண்ட பாவற்காய் பழுத்திருக்கிறது இதுதான் அதுவா அதுதான் இதுவா இந்தப் பழம் சாப்பிட முடியுமா ?
    தகவல் தேடித்தந்த உங்களுக்கு நன்றிகள் பல
    தொடருங்கள் அக்கா
    நன்றியுடன் நண்பன்


    நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
    நண்பன்
    நண்பன்
    தலைமை நடத்துனர்

    பதிவுகள்:- : 93923
    மதிப்பீடுகள் : 5491

    Back to top Go down

     சங்க இலக்கியத்தில்  தாவரங்கள். Empty Re: சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum