சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Khan11

சின்னச் சின்ன கதைகள்

5 posters

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 13 Oct 2015 - 16:57

First topic message reminder :

கொடுத்துப் பெறுதல்
--------------------------------

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

நன்றி: ந. உதயகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Nov 2015 - 19:49

தன்மானம்
-----------------
கடைவீதி பரபரப்பாக இருந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தில் தடுமாறிப் போய் நின்றிருந்தார் பெருமாள்சாமி. முகூர்த்தநாள் வேறு. சுப்பிரமணியசுவாமி கோயிலில் நல்ல கூட்டம். கோயிலுக்கு வெளியே வேப்பமரத்தடியில் நின்றுகொண்டு யாரிடம் கேட்பது, எப்படி கேட்பது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

பெருமாள்சாமி பிச்சை எடுத்துப் பிழைப்பது என்று முடிவு செய்துவிட்டார்.

பிச்சை எடுப்பது ரொம்ப கஷ்டமான வேலை போல தோன்றியது. முதன்முதலாக பிச்சை எடுக்கும் ஒரு மனிதனின் நிலைமை எப்படியிருக்கும்? யாரிடம் முதலில் பிச்சை கேட்பது என்று யோசித்திருப்பானோ? இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகிவிட்டோமே என்று நினைத்திருப்பானோ? அப்படியெல்லாம் தோன்றாமல் கூட போயிருக்கலாம். பசி வேறு எதையும் நினைக்கவிடாது.

உண்மையிலேயே இன்றைக்கு பசியின் கொடுமையை நன்றாகவே உணர்ந்துவிட்டார். இதற்குமேல் தாங்க முடியாது. கையில் இருந்த காசெல்லாம் சுத்தமாகக் கரைந்துவிட்டது. நான்கு நாட்கள் எப்படியோ ஓடிவிட்டன.

எண்பது வயதில் இப்படி ஒரு சூழ்நிலை தனக்கு வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. லட்சுமிக்கு முன்னால் இவர் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் லட்சுமி முந்திக் கொண்டுவிட்டாள். இரண்டு வருடங்களுக்குள் என்னவெல்லாமோ நடந்துவிட்டது.

லட்சுமிக்கு தன்னுடைய கடைசிக் காலம் தெரிந்துவிட்டிருந்தது.

“”நான் போயிட்டா… உங்களை யாரு பார்த்துக்குவா… காட்டையும் தோப்பையும் என்னைக்கும் வித்துப் போடாதீங்க… அது இருக்கறவரைக்கும்தான் மதிப்பு…”

போச்சு லட்சுமி… போச்சு… எல்லாமே போச்சு…

பெருமாள்சாமி வயிற்றைப் பிடித்துக் கொண்டார். பசி தாங்க முடியவில்லை.

“பிச்சை எடுத்துப் பொழைக்கிற நெலமைக்கு வந்துட்டேன்… என் நெலமையைப் பார்த்தியா லட்சுமி… நீ இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நெலமை வந்திருக்குமா?’

பசி… பசி… பசி… பசி…  வயிற்றைச் சுண்டிவிட்ட மாதிரி இருந்தது. கண்கள் கலங்கிப் போய்விட்டன.

“”அய்யா… எனக்கு ஏதாச்சும் வேலை இருந்தா  கொடுங்க…”

“”இங்க வேலை இல்லீங்க பெரியவரே…”

“”ரொம்ப வயசனாவரா இருக்கறீங்க… என்ன வேலை கொடுக்கறது?”

“”ஆளைப் பார்த்தா சீக்கு வந்த ஆளு மாதிரி இருக்குது… போங்க… வியாபாரத்தைக் கெடுக்காதீங்க..”

“”போ பெரிசு… நாங்களே வேலையில்லாம கெடக்கறோம்.. உனக்கு எங்க போய் வேலை கொடுக்கறது? தடத்து மேலே நிக்காதே…”

மளிகைக் கடை, டீக்கடை, ஹோட்டல், அரிசிக்கடை, துணிக்கடை… எத்தனை கடைகள் இந்த இரண்டு  நாட்களில்… பொள்ளாச்சியை நிறைய தடவை சுற்றிவிட்டார். அவர் வயதையும் உடல் நிலையையும் பார்த்து யாரும் வேலை கொடுக்கத் தயாராக இல்லை.

பெருமாள்சாமிக்கு பாளையம்தான் சொந்த ஊர். ஐந்து ஏக்கர் காட்டுக்கு சொந்தக்காரராக இருந்தார். இரண்டு மகன்கள்.

பெருமாள்சாமி நல்ல உழைப்பாளி. கூலி வேலையில் வாழ்க்கையைத் துவக்கியவர். குத்தகைக்கு காடு பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஐந்து ஏக்கர் காட்டை வாங்கினார். மூன்று ஏக்கரை தென்னந்தோப்பாக வளர்த்தார். லட்சுமியும் சும்மா இருக்கவில்லை. மாடுகளும் ஆடுகளும் வாங்கி மேய்த்தாள். பால், தயிர் என விற்று கொஞ்சம் காசு சேர்த்து வந்தாள்.

பெருமாள்சாமி ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து காட்டுக்கு போய்விடுவார். ஏதாவது வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இரண்டு ஏக்கர் வயலில் நெல், கடலை, சோளம், கம்பு என்று பயிர்கள் வளர்த்தார்.

மகன்களை நல்ல முறையில் படிக்க வைத்தார். இரண்டு மகன்களுக்குமே விவசாயத்தில் ஈடுபாடு இல்லை. பெரியவனுக்கு சொந்தமாக லேத் ஒர்க் ஷாப் வைத்துக் கொடுத்தார். சின்னவனுக்கு சொந்தமாக எலட்ரிக்கல் கடை வைத்துக் கொடுத்தார். வசதியான இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார்.

பெருமாள்சாமியின் தோப்பு மெயின் ரோட்டு ஓரத்தில் இருந்தது. ரியல் எஸ்டேட்காரர்கள் கண்களை உறுத்தியது. மெயின் ரோட்டில் இருப்பதால் நல்ல விலைக்கு போகும் என்று பெருமாள்சாமிக்கு ஆசை காட்டினர்.

“”என் உசுருள்ள வரைக்கும் அந்தக் காட்டை விக்க மாட்டேன். அது எம் புள்ள மாதிரி…”

விலைபேச வந்தவர்களிடம் ஒரே பேச்சாக சொல்லி அனுப்பிவிட்டார்.

“”காடு இருக்கறவரைக்கும்தான் மதிப்பு… அந்தக் காடு போச்சுன்னா… மானம், மரியாதை எல்லாம் போயிடும்… அவசரப்பட்டு காட்டை வித்துப் போடாதீங்க…” லட்சுமி சாவதற்கு ஒருநாள் முன்பு இதைச் சொன்னாள். அடுத்த நாள் நெஞ்சுவலி என்று படுத்தவள்தான். போய்விட்டாள்.

அவள் இறந்த பின் பெருமாள்சாமி இரண்டு கைகள் இல்லாத மாதிரி உணர்ந்தார். அவர் காட்டோடுதான் பேசி வந்தார்.

“இது லட்சுமி வச்ச மாமரம்… இந்தக் கொய்யா மரம் மேட்டுப்பாளையத்து அத்தை நட்டு வச்சது. இந்த வேப்பமரம் நம்ம சின்னான் வளர்த்தது…’

காடும் அவரோடு பேசியது. மரங்கள், செடிகள் எல்லாமே அவரோடு பேசின. சருகுகள்கூட சலசலத்தபடி அவரோடு பேசின. காட்டையும் அவரையும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் பிணைத்திருந்தது..

 

பெரிய மகன் சந்திரனுக்கு கார், பங்களா என்று வாழ வேண்டும் என்று ஆசை. சந்திரனின் மகன் பிளஸ் – டூ முடித்திருந்தான். அவனை எஞ்சினியரிங் காலேஜ் சேர்க்க சந்திரன் முடிவு செய்திருந்தான். அதற்குப் பணம் வேண்டும். மெயின் ரோட்டில் காடு இருப்பதால் கோடிக் கணக்கான ரூபாய்க்கு ரியல் எஸ்டேட்காரர்கள் விலை பேசினார்கள்.

இரண்டாவது மகன் காட்டை விற்றால் கிடைக்கும் பங்குத் தொகையில் என்னென்ன வாங்கலாம் என்று பட்டியல் போட்டு வைத்திருந்தான்.

“”அப்பா… இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி காடு தோப்புன்னு கஷ்டப்பட்டுட்டு இருக்கப்போறீங்க… நல்ல வெலைக்கு வருது. வித்துப்போடலாம்…”

பெருமாள்சாமி துடித்துப் போனார்.

“”அய்யோ… காட்டை நான் விக்கமாட்டேன்… அது என்னோட உசுரு…”

இரண்டு மகன்களும் போராடிப் பார்த்தார்கள்.

அவர் காட்டை விற்பதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருந்தார். ஆனால் மகன்கள் கோடிகளைப் பார்க்கும் ஆசையில் இருந்தார்கள்.

பெருமாள்சாமி வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து எல்லாவற்றையுமே தலைகீழாக மாற்றிவிட்டது. அவர் மட்டும் குளியலறையில் வழுக்கி விழாமல் இருந்திருந்தால்…

நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார். மருத்துவமனையில் மட்டும் ஒரு மாதம் தங்க வேண்டி இருந்தது. இடுப்பில் நல்ல அடி. ஆபரேசன் செய்தார்கள். அவர் எழுந்து நன்றாக நடக்கவே நான்குமாதங்கள் ஆகிவிட்டன.

நான்கு மாதங்களுக்குப் பின்னால் காட்டைப் பார்க்கச் சென்றவர் அதிர்ந்து போனார். காட்டைக் காணவில்லை. தென்னை மரங்கள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டிருந்தன. வெறும் நிலமாக இருந்தது. தென்றல் நகர் என்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

பெருமாள்சாமியின் உயிரை யாரோ பிடுங்கிக் கொண்டு ஓடுகிற மாதிரி இருந்தது.

“”அய்யோ… என்னோட உசுரைப் பறிச்சுட்டாங்களே… லட்சுமி… லட்சுமி… உன் புள்ளக பண்ணியிருக்கற காரியத்தைப் பார்த்தியா அய்யோ… அய்யோ…”

அலறிக் கொண்டு மகன்களைத் தேடி ஓடினார்.

“”டேய்… பாவிகளா என் காட்டை என்னடா பண்ணினீங்க கொன்னுட்டீங்களேடா… என் உசுரை எடுத்திட்டீங்களேடா…”

“”அப்பா…பொறுமையா இருங்க… எங்களுக்கு வேற வழி தெரியலே… உங்களுக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் வேணும். எங்களுக்கு தொழில்ல நஷ்டம். அதுதான் காட்டை வித்துட்டோம்..” என்றான் பெரிய மகன்.

“”பொய் சொல்லாதீங்கடா…  நீங்க சதி பண்ணிட்டீங்க… என்னை ஏமாத்திட்டீங்க…”

“”இப்ப என்னப்பா நடந்து போச்சு… இடம் நல்ல வெலைக்குப் போயிருக்கு. கோடிக் கணக்கில பணம் கிடைச்சிருக்கு. நீங்க ராஜா மாதிரி உட்கார்ந்துட்டு சாப்பிடலாம்” என்றான் சின்ன மகன்.

“”நான் உட்கார்ந்துட்டு சாப்பிடறதா? என்னோட உழைப்பை அழிச்சுட்டு என்னை உட்கார்ந்து சாப்பிடச் சொல்றீங்களா? போச்சே… எல்லாம் போச்சே… சுடுகாடு ஆக்கீட்டிங்களேடா… எப்படிடா வித்தீங்க? என் கையெழுத்து இல்லாம எப்படிடா வித்தீங்க?”

“”நீங்கதான் கையெழுத்துப் போட்டீங்க… ஆஸ்பத்திரியில வச்சு கையெழுத்துப் போட்டீங்க… ஞாபகம் இருக்கா?”

“”அடப்பாவிகளா அது ஆபரேசன் பண்றதுக்குன்னு சொல்லித்தானே கையெழுத்து வாங்கினீங்க… ஏமாத்திட்டீங்களேடா… நானும் என்ன ஏதுன்னு தெரியாம கையெழுத்தைப் போட்டுத் தொலைச்சுட்டனே…”

“”அப்பா… எல்லாம் நல்லதுக்குத்தான்…  உங்களுக்கு எந்தக் குறையும் இல்லாம நாங்க பார்த்துக்கறோம். கவலைப்படாம இருங்க… பெரிய பங்களா கட்டப்போறோம். கார் வாங்கப் போறோம். உங்க பேரன் எஞ்சினியர் ஆகப்போறான்.  உங்க பேரக் குழந்தைக எல்லாம் பெரிய பெரிய ஸ்கூல்ல படிக்கப் போகுதுக… இதுக்கு மேல என்ன வேணும்?”

“”இதுக்கு மேல என்ன வேணுமா? போடா என்னோட உசுரே போச்சே…  என்னைக் கொன்னுட்டீங்களேடா… எப்படிடா இப்படி ஒரு துரோகம் செய்ய மனசு வந்துச்சு?”

“”அப்பா நீங்க ராஜா… உங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமா நாங்க பார்த்துக்கறோம்…”

பெருமாள்சாமி நிம்மதி இழந்து தவித்தார்.

மகன்கள் சொன்னதுபோல் அவரை ராஜா மாதிரி நடத்தவில்லை.

“”அப்பா ஒரு இடத்தில உட்காரமாட்டீங்களா?”

“”போட்டதைச் சாப்பிட்டு பேசாம படுத்துத் தூங்குங்க…”

“”வயசான காலத்தில  கோயில் குளம்னு போகாம ஏன் இப்படி உயிரை வாங்கறீங்க?”

“”அடப்பாவிகளா உழைச்சு சாப்பிடாத சாப்பாடு உடம்புல ஒட்டாது… என்னை மூலையில போயி அடையச் சொல்றீங்களே…?”

பெருமாள்சாமி மனசு கெட்டுப் போய் புத்தி பேதலித்தமாதிரி ஆகிவிட்டது. ரொம்பவும் தளர்ந்து போய்விட்டார். உள்ளூரில் எங்காவது வேலை கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டுப் பார்த்தார். அவர் வயதையும் உடல் இருக்கும் நிலையையும் பார்த்து யாரும் அவருக்கு வேலை தர முன்வரவில்லை.

ஒரு நாள் காய்ச்சல் வந்து ரொம்பவும் அவதிப்பட்டுப் போய்விட்டார். பெரியமகனிடம், “”காய்ச்சலடிக்குது… ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போடா..” என்றார்.

“”அப்பா… நீங்க சின்னவன் வீட்டுக்குப் போயிடுங்க… நாங்க ஒரு வாரம் டூர் போயிட்டு வர்றோம்…”

சின்ன மகன் வீட்டில் விட்டுவிட்டுப் போனார்கள்.

“”எனக்கு ஆயிரம் வேலை இருக்குது… உசுரை வாங்காதீங்க… நீங்களே ஆஸ்பத்திரிக்குப் போயிக்குங்க… உங்க பெரிய பையன் அலுங்காம கொண்டுவந்து உங்களை இங்க தள்ளிவிட்டுட்டுப் போயிட்டான்”

அவரே தனியாக தட்டுத்தடுமாறி மருத்துவமனைக்குப் போய் வந்துவிட்டார்.

மருமகளிடம், “”மாத்திரை சாப்பிடணும்… கொஞ்சம் சுடுதண்ணி வச்சுக் கொடும்மா…” என்று கேட்டார்.

“”இப்பத்தான் அடுப்பை ஆப் செஞ்சேன்… சாயங்காலம்தான் சுடுதண்ணி வச்சுக் கொடுக்க முடியும்…”

“”என்னம்மா இப்படிச் சொல்றே? ஒரு டம்ளர் சுடுதண்ணி வைக்க எத்தனை நேரம் ஆகும்?”

“”என்ன… ரொம்ப ஓவரா அதிகாரம் பண்றீங்க? சொன்னதைக் கேட்டுட்டு நடக்கற மாதிரி இருந்து நடங்க… உங்க சவுகரியத்துக்கு எல்லாம் நாங்க நடக்க முடியாது…”

பெருமாள்சாமி இடிந்து போய்விட்டார்.

“”ஊருல யாருக்கெல்லாமோ சாவு வருது… இதுக்கு ஒரு சாவு வரமாட்டேங்குது. இதை அடிக்கடி இங்க தள்ளிட்டுப் போயிடறாங்க…”

மருமகள் முணுமுணுத்ததைக் கேட்டதும் அப்படியே செத்துப் போய்விடலாம் என்று தோன்றியது.

மகன் வந்ததும் மருமகள் புகார் சொன்னார்.

“”விடுடி… கொஞ்ச நாள் பார்த்துட்டு ஏதாச்சும் முதியோர் இல்லத்துல சேர்த்துடலாம்…”

“”அதைச் செய்யுங்க முதல்ல…”

பெருமாள்சாமி நொறுங்கி போய்விட்டார்.

“இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா? இனிமே இங்க இருக்கக் கூடாது…’

அன்று இரவு வீட்டை விட்டுக் கிளம்பியவர்தான்.

கையில் ஓர் ஐந்நூறு ரூபாய் மட்டுமே இருந்தது.

அங்கே இங்கே சுற்றி எப்படியோ பொள்ளாச்சி வந்து சேர்ந்துவிட்டார். கையில் இருக்கிற காசெல்லாம் தீர்ந்துவிட்டது. எப்படியாவது வேலை கிடைத்துவிடும் என்கிற நப்பாசையில் கடை கடையாக ஏறி இறங்கினார். வேலை கிடைக்கவில்லை.

பசித்தது. தாங்கிக் கொள்ள முடியவில்லை.  பிச்சை எடுத்தாவது சாப்பிடு… என்றது வயிறு.

சுப்பிரமணியசுவாமி கோயிலில் இருந்து தன் பிச்சைத் தொழிலை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து வந்து நின்றார்.

எப்படிப் பிச்சை கேட்பது? என்று தெரியவில்லை. யாராவது ஏதாவது சொல்லிவிட்டால்… உழைத்துச் சாப்பிட்ட உடம்பு… பிச்சை கேட்கிறது.

பெற்ற பிள்ளைகள் செய்த துரோகம் மனசுக்குள் வந்தது.

“”ச்சே… பணத்துக்காக எப்படியெல்லாம் மாறிடறாங்க…”

பெருமாள்சாமி கூட்டத்தைப் பார்த்தார். ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். நாற்பது வயதுதான் இருக்கும். உடம்பு நன்றாகத்தான் இருந்தது. அவனே பிச்சை எடுக்கும்போது நாம் ஏன் எடுக்கக்கூடாது?

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைப் போட்டுக்கிட்டு இருக்கறாரே… அவர்கிட்ட இருந்து ஆரம்பிக்கலாமா? இல்லே பட்டுச்சேலை கட்டிட்டு நிக்கற இந்தப் பொம்பளைகிட்ட கேட்கலாமா? அந்த பெரியவருக்கும் ஏறக்குறைய எண்பது வயசிருக்கும்போல… ஆள் நல்லா திடமா இருக்காரு… அவர்கிட்ட கேட்டா கொடுப்பாரா? யாருகிட்ட கேட்கறதுன்னு தெரியலியே…

பெருமாள்சாமிக்கு வயிற்றை என்னவோ செய்தது. நிற்க முடியவில்லை. இருண்டு போய்விட்ட மாதிரி உணர்ந்தார். அப்படியே மயங்கிக் கீழே சரிந்து விழுந்தார்.

பெருமாள்சாமி கண் விழித்துப் பார்த்தபோது தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. யாரோ முகத்தில் தண்ணீரை அடித்திருக்கிறார்கள்.

“”பசி மயக்கம் போலிருக்கு…” யாரோ சொன்னார்கள்.

“”இந்தாங்க பெரியவரே… ஏதாச்சும் வாங்கிச் சாப்பிடுங்க…” ஒருத்தர் பத்து ரூபாய் நோட்டை நீட்டினார்.

பெருமாள்சாமிக்கு உயிரே போய்விட்ட மாதிரி இருந்தது.

“”அய்யா… நான் பிச்சை எடுக்கவரலீங்க… எனக்கு பிச்சை வேண்டாங்க… ஏதாச்சும் வேலை கொடுங்க…” வயிற்றில் அடித்தபடி பெருமாள்சாமி கதறி அழுதார்.

-  கனகராஜன்

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Nov 2015 - 19:52

மியாவ்
-------------

மியாவ் மியாவ் பூனைக் குட்டியோடு விளையாடிக்கொண்டிருந்தான் விக்னேஷ்.

“”டேய் விக்னேஷ் இப்பவே சொல்லிட்டேன், நாம புதுசா பார்க்குற வீட்டுக்கு, உன்னோடு பூனை குட்டி வரக்கூடாது. என்ன புரிஞ்சதா?”

கணேஷின் கேள்விக்கு மௌனத்தைப் பதிலாக்கினான் விக்னேஷ்.

“”கஸ்தூரி உன் புள்ளை கிட்ட இப்பவே சொல்லி வை”

“”ஆமாம் நான் சொன்னா அப்படியே அப்பாவும் புள்ளையும் கேட்டுடுவீங்க” முணுமுணுத்த கஸ்தூரி, “”என்னங்க வாடகைக்கு வீடு பார்க்க, புரோக்கரோட இன்னிக்குத்தானே போறீங்க?” என்றாள் சப்தமாக.

* * *

“”சார் அம்சமான வீடு சார்… இதை விட்ராதீங்க  பக்கத்துலயே கோயில், பையனோட ஸ்கூல், இதோ இங்க இருந்து ரெண்டு கிலோ மீட்டரில உங்க ஆபிஸ். பட்டுனு அட்வான்ஸைக் கொடுத்து அமுக்கி போடுங்க சார், யோசிக்காதீங்க”

புரோக்கர் வேதாச்சலம், பிள்ளை பிடிக்கும் ஆசாமி போல் பேசினான்.  வெற்றிலை, பாக்கைக் குதப்பிக் கொண்டிருந்தான். கணேசுக்கும் நல்ல வீடாகத்தான் பட்டது.

“”எதுக்கும் வீட்டுல ஒரு வார்த்தை”

“”அதெல்லாம் வேலைக்காகாது சார்… நம்மளே பார்த்தோமா, முடிச்சமான்னு போகணும்”.

கஸ்தூரி பற்றி பாவம், ஒன்றும் தெரியாதவன் இவன்.

“”எதைத்தான் என்கிட்ட சொல்லியிருக்கீங்க,  இதைச் சொல்றதுக்கு?”  சொல்லாமல் விட்டால் இப்படி பேசுவாள்.

போய் சொன்னாலோ, “”இப்ப எதுக்கு என்கிட்ட சொல்றீங்க? நீங்க பண்றதைத்தான் பண்ணப் போறீங்க” என்று அலுத்துக் கொள்வாள்.

“”சார் என்ன பேசாம இருக்கீங்க, முடிச்சிடலாமா?” புரோக்கர் வேதாச்சலத்திற்கு கமிஷன் வந்தால் போதும், கட்டண கழிப்பிடத்தை கூட யாரும் இல்லாத சமயத்தில் வாடகைக்கு பேசிவிடும் பலே ஆசாமி அவன்.

கணேஷ் “”பார்க்கலாம்” என்றான்.

“”நேத்து கூட ஒருத்தர் பார்த்துட்டு போயிருக்காரு சார்… விட்டா கிடைக்காது அவ்வளவுதான் நான் சொல்லுவேன்”.

“”சரி முடிச்சிடலாம்” என்றான் கணேஷ்.

இப்பொழுது இருக்கும் வீட்டில் தண்ணீர் பிரச்னை. கணேஷின் ஆபிஸ் மற்றும் விக்னேஷின் பள்ளிக்கூடம் இரண்டும் வெகு தொலைவில் உள்ளன. அது மட்டுமின்றி, வீட்டின் சொந்தக்காரர்கள் மாடியிலேயே இருக்கிறார்கள். அது போதாதா? தினமும் ஒரு நொட்டனை சொல்வார்கள்.

“”விடிய விடிய லைட் எரியுது சார்…  கூடாதுன்னு முன்னாடியே சொல்லியிருக்கோம்ல”

“”விக்னேஷுக்கு பரீட்சை, அதான்”

“”அஞ்சாவதுதான படிக்கிறான், ஐ.ஏ.எஸ்- ஸô படிக்கிறான்?”

“”என் புள்ள என்ன படிச்சா உனக்கென்ன?” வெளியில் கேட்க முடியுமா, மனசுக்குள்ளேயே திட்டுவான் கணேஷ்.

இப்படி ஏதோ ஒரு பிரச்சினை சின்ன விஷயம் தொட்டு பெரிய விஷயம் வரை. இரண்டு பேருக்கு மேல் விருந்தாளிகள் வந்தால், “”ஏன் சார் வீடு முழுக்க ஒரே கும்பலை சேர்த்து வச்சிருக்கீங்க” என்பார்கள்.

சினிமாவுக்கு புறப்பட்டால், “”படம் முடியுதோ இல்லையோ ஒன்பது மணிக்குள்ள வந்திடுங்க” என்பார் வீட்டுக்காரர். எல்லாம் கணேசுக்குள் கோபமாய் திரண்டு இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு பூனைக்குட்டியால் வந்த பிரச்சினையால், பூனைக்குட்டி மீதும் வீட்டுகாரர் மீதும் சம பங்கு கோபத்தில் இருந்தான் கணேஷ்.

* * *

சில நாட்களுக்கு முன்பு:

“”என்னங்க, கொஞ்சம் விக்னேஷை என்னன்னு கேளுங்க” ஆபிஸிலிருந்து வந்து வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாய் கணேஷிடம் கஸ்தூரி வத்தி வைத்தாள்.

கணேசுக்கு பிரச்னை புரிந்து விட்டது.

“”விக்னேஷ் இங்க வா” அதட்டலாய் கூப்பிட்டான்.

“மியாவ் மியாவ்’ என்று குதூகலமாய் குதித்தபடியே வந்தான் விக்னேஷ்.

“”என்னப்பா?”

“”அந்தப் பூனைக் குட்டியை எங்கயாவது கொண்டு போய் விட்டுட்டு வான்னு சொன்னேன்ல”

“”இல்லப்பா அது ரொம்ப நல்ல குட்டிப்பா நம்மளே வளர்க்கலாம்ப்பா”

“”சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா, உனக்கும் எனக்கும் பூனை வளர்க்கறதை பத்தி என்னடா தெரியும்?”

“”என் ப்ரெண்ட்ஸ் ரெண்டு மூணு பேர் வீட்ல வளக்குறாங்கப்பா”

“”ஓ அவங்கதான் உன்னை தூண்டிவிட்டதா, அவங்களை உதைச்சா சரியாப் போயிடும்” கோபமானான் கணேஷ்.

பேசாமல் இருந்தான் விக்னேஷ்.

“மியாவ் மியாவ்’ என்ற சப்தம் விக்னேஷ் அறையிலிருந்து வந்தது.

“”இந்தாடா நீ கேட்ட பால்” டங்கென்று ஓங்கி பால் டம்ளரை வைத்தாள் கஸ்தூரி.

கணேஷ் அவளையும் முறைத்தான்.

“”இந்தட்சணம் பூனை குட்டிக்கு பால் கொடுக்கணுங்கறான், நான் என்ன பண்றது” கஸ்தூரி.

இதையெல்லாம் பொருட்படுத்தாத விக்னேஷ், தனது மேஜையிலிருந்த இங்க் ஃபில்லரில் பாலை நிரப்பி, பூனைகுட்டிக்கு புகட்டிக் கொண்டிருந்தான். மிகவும் சிறிய குட்டி அது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, விக்னேஷ் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட போன போது, மைதான ஓரத்திலிருந்து கண்டெடுத்தான் இந்தக் குட்டியை. அங்கேயே விட்டுவிட்டு வர மனமில்லாமல் தூக்கி வந்தான்.

கணேஷ் எவ்வளவு சொல்லியும், விக்னேஷ் அதனுடனேயே இருப்பதும், அதைக் குளிப்பாட்டுவதும், விளையாடுவதுமாய் நேரங்கழித்தான். சதா அவன் அறையிலிருந்து “மியாவ் மியாவ்’ என்ற சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். எங்கு சென்றாலும் பூனைக்குட்டியையும் அழைத்துச் செல்வதும், அதனுடனேயே பேசிச் சிரிப்பதும், தூங்குவதும் என பூனை பைத்தியம் ஆகிவிட்டான் விக்னேஷ். பல நாள் பள்ளிக்கூடத்திற்கும் மட்டம் போட்டு விட்டு பூனையோடு கொஞ்சிக் குலாவுவான். பொறுமையிழந்தாள் கஸ்தூரி.

“”ஹலோ புளு க்ராஸ்” -  கணேஷ் போன் செய்து வரவழைத்தான்.

அவ்வளவுதான் அன்று முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் ரகளையே செய்து விட்டான் விக்னேஷ். விக்னேஷ் செய்த லூட்டியில் தெருவே கூடிவிட்டது.

வேறுவழியின்றி புளு க்ராஸிலிருந்து, பூனைக் குட்டியை எடுத்துச் செல்ல வந்த நபர்களை திருப்பி அனுப்ப வேண்டியதாயிற்று. இது எதையும் அறியாத பூனைக் குட்டியோ கூட்டத்தைப் பார்த்து “மியாவ்’ என்றது.

“”நோ, நோ… நோ… மிஸ்டர் கணேஷ்  முன்னாடியே சொல்லியிருக்கேன், நாய், பூனை, புலிக்குட்டி இதெல்லாம் இங்க வளர்க்கக் கூடாதுன்னு.  ஓங்கி ஒரு அறை விட்டு பூனையை அவன் கிட்டயிருந்து பிடுங்கறதை விட்டுட்டு, பையன் சொல்றானாம், இவரு கேக்குறாராம்” என்று கோபமும், கிண்டலும் நக்கலுமாக சிரித்தார் வீட்டுக்காரர்.

“”இப்ப என்ன பண்ணனுங்கிறீங்க?” கோபமானான் கணேஷ்.

“”பூனைக்குட்டி மண்ணாங்கட்டி இதெல்லாம் இங்க இருக்கக் கூடாது”

“”கவலைப்படாதீங்க நாங்களே இங்க இருக்க மாட்டோம்”

* * *

தற்பொழுது:

“”சார் அம்சமான வீடு சார் இதை விட்ராதீங்க” புரோக்கர் வேதாச்சலம் சொன்ன அந்த அம்சமான வீட்டில் குடியேறி, கணேஷ், கஸ்தூரி, விக்னேஷ் மூவரும் ஒரு வழியாக செட்டில் ஆனார்கள்.

வெளிநாட்டில் இருக்கும் தொல்லை தராத வீட்டுச் சொந்தக்காரர். úக்ஷமமாய் அங்கேயே இருக்கட்டும் என்று வாழ்த்தினான் கணேஷ்.

ஆனால் இந்த வீட்டில் ஒரு புதுப் பிரச்சினை காத்திருந்தது மூவருக்கும்.

மாட்டினால் தொலைந்தான் புரோக்கர் வேதாச்சலம்.

சொல்லி வைத்தாற் போல் அடுத்த ஓரிரு நாட்களில் வந்து வசமாய் கணேஷிடம் மாட்டிக் கொண்டான், புரோக்கர் வேதாச்சலம்.

“”ஏன்ய்யா நீ கேட்ட புரோக்கரேஜை கரெக்டா கொடுத்தேனா… இல்லையா?  அப்பறம் ஏன் இப்படி ஒரு வீட்டை தலையில கட்டிட்ட?” என்று கோபமானான் கணேஷ்.

“”அப்படி என்ன சார் அதுல பிரச்சினை?”

“”எங்களுக்கு முன்னாடி ஒரு எலி குடும்பமே அங்க வந்து குடியேறியிருக்குய்யா… எங்க பார்த்தாலும் எலியா ஓடுதுய்யா”

“”இது ஒரு பிரச்சினையா சார், ஒரு பூனையை வாங்கி வளர்த்தா போச்சு, பூனை வாசனை பட்டாலே எலி வராது” என்று  சிரித்தான் புரோக்கர் வேதாச்சலம்.

“”பூனை ஏற்கெனவே இருக்கு” என்றான் கணேஷ்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Nov 2015 - 19:54

மந்திரத்தின் பலன்
------------

முன்னோரு காலத்தில் வேதம் கற்றுத் தரும் குரு ஒருவர் இருந்தார். அவர் பல பிள்ளைகளுக்கு வேதம் கற்பித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு சிறுவன் தனக்கும் வேதம் கற்பிக்க வேண்டும் என அவர் அடி பணிந்து நின்றான். அவரும் அவனிடம் தயையுடன் ஒரு சின்ன வேத வாக்கியத்தைச் சொல்லி இதைச் சரியாகச் சொல் என்றார்.

ஆனால் அவன் அதைப் பல முறை முயன்றும் அடி மாறாமல் சொல்ல முடியவில்லை. எனவே அந்த குரு உனக்கு வேதம் வராது. வீண் ஆசை வேண்டாம். இங்கிருந்து போய்விடு என்று கூறிவிட்டார். அவனும் மிக்க கவலையுடன் சென்றுவிட்டான்.

மறுபடியும் பத்து நாட்கள் கழித்து அச்சிறுவன் அவரிடம் வந்து இவ்வாறு கூறினான், சுவாமி அடியேன் பல கோவில்களுக்கு சென்றேன். அங்கெல்லாம் சிறந்த வேதவிற்பன்னர்கள் நன்கு வேத பாராயணம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். காது குளிரக் கேட்டேன். அதுபோல் அடியேனுக்கும் வேதம் கற்றுக் கொண்டு அவ்வாறு பாராயணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது.

தங்களை காட்டிலும் சிறந்த குரு உண்டோ எனவே அடியேனிடம் அன்பு கொண்டு எப்படியாவது வேதத்தைக் கற்பித்தருள வேண்டும் என மிக்கப் பணிவன்புடன் கேட்டுக் கொண்டான். இதைக் கேட்ட அவர் முன்பு சொன்னதைக் காட்டிலும் மிகவும் கடினமான வேதபாகத்தைக் கண்ணை மூடிக் கொண்டு பத்து நிமிடம் உச்சரித்து கண்ணைத் திறந்து பார்த்தார். அந்த சிறுவன் எதிரில் காணவே இல்லை. ஓடிப் போய்விட்டான்.

+
பார்வதி அருண்குமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Nov 2015 - 19:56

வராக பயங்கரம்
-----------
(தத்துவங்களின் பின்னணியில் அமைந்த ஓர் திகில் கதை)

        நான் தனிமை விரும்பி. ஒரு தனியார் கம்பெனி மேனேஜர். கைநிறைய சம்பளம். போன மாசம்தான் இந்தப் பெரிய வீட்டை வாங்கிப் போட்டேன். வீடு என்று சொல்லக்கூடாது, கோட்டை. இந்தக் கிராமத்தில் இதைப் பள்ளிக்கோட்டை பங்களா என்கிறார்கள். கிராமத்தின் பெயரும் சித்தன்பள்ளி. அது என்ன பள்ளி? இங்கு யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.
                இந்த வீட்டுக்கும் ஊருக்கும் பள்ளி என்ற பெயருக்கும் ஏதோ விசேஷத் தொடர்பு – அர்த்தம் இருக்கிறது. காரைக்குடிப் பக்கத்து நாட்டுக்கோட்டைச் செட்டியார் வீடுகளைப் பிரதியெடுத்ததுபோல் வீடு கலையம்சமாக இருந்தது. ஆனால் ரொம்பப் பழைய நெடி. தேக்கு, பளிங்கு அனைத்திலும் பழமை பளிச்சிட்டது.
                சென்னைக்கு அருகே புழலுக்குப் பக்கத்தில் 5, 6 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் சித்தன்பள்ளி. பிசாசு பங்களா என்று கதை உலவி வருவதால் சல்லிசாகக் கிடைத்தது. எனக்கு அமானுஷ்யத்தில் ஆர்வம் உண்டு, நம்பிக்கை இல்லை. அதனால் வாங்கிவிட்டேன். இன்றுதான் குடியேறினேன். அதிகம் பேசிவிட்டேன். தூங்கப் போகிறேன்.
                என் காதருகே திடீரென மூச்சிரைப்பு சப்தம். தோள்பட்டையில் உஷ்ணக் காற்றை உணர்ந்து விழித்தேன். அந்த மூச்சிரைப்பு மனிதனுக்குரியதல்ல. ஏதோ மிருகத்தின் இரைப்பு. மெல்லியதாக கிர்ர் என்று உறுமியது போலவும் இருந்தது. போர்வையை விலக்கிவிட்டு எழுந்தபோது எதுவுமே நடவாததுபோல நிசப்தம். இந்த அமைதி பல ஆண்டுகளாகப் பழகிப்போனது. ஆனால் இன்று ஏதோ ஒன்று அன்னியப்பட்டது. புது இடமானதால் இருக்குமோ? இடம் ஒரு பொருட்டே அல்ல, தனிமை இருள் எனக்குப் பழகிப்போனதாயிற்றே!
                தூரத்தில் ஏதோ பிராண்டுகிற சப்தம். இங்கேதான் எங்கோ ஓர் அறைக்குள். நான் வீட்டின் நடுவில் பெரிய முற்றத்தில் படுத்துக்கொண்டிருக்கிறேன். எழுந்து போகிறேன். இங்கேதான்… இங்கேதான்… வலதுபுறத்தில் ஓர் அறையிலிருந்து. தனியாளான நான் புதிதாக வாங்கிக் குடியேறிய இந்த பங்களாவை இன்னமும் முழுமையாக ஆராய்ந்து பார்க்கவில்லை. வலப்புற அறையைத் திறந்ததும் சப்தம் கூடுதலாகக் கேட்டது. எங்கே? லைட்டைப் போட்டதில் நாலு பக்கங்களிலும் ஒன்றுமில்லை. ஆனால் சப்தம். இங்கே தரைக்குக் கீழே. குனிந்து கீழ்நோக்கி உற்றுப் பார்த்தபோது… ச் ச் … கரண்ட் போய்விட்டது.
                லைட்டரின் உதவியுடன் பார்த்தேன். நல்ல உசத்திக் கம்பளம். எலி ஏதாவது கம்பளத்தின் அடியிலிருந்து பிராண்டுகிறதோ? எலிக்கா இத்தனை சப்தம்? பெருச்சாளியாக இருக்குமோ? சற்று எச்சரிக்கையுடன் கம்பளத்தைச் சுருட்டிவிட்டு நோக்கினேன். ஒன்றுமில்லை. லைட் வந்துவிட்டது. நல்ல பளிங்குத் தரை, இரண்டடி அகலக் கற்கள் பதித்ததாக. ஒரு கல் மட்டும் சற்று எழும்பியிருந்ததுபோல் தெரிந்தது.
 

                நான் நினைத்தது சரிதான். அதை நெம்பிப் பார்த்தால் என்ன? கஷ்டப்பட்டு, நெம்பி, கல்லை விலக்கியபோது ஆச்சரியம். கீழே படிக்கட்டு தெரிந்தது. அப்படியானால் நிலவறை இருக்கிறது. இறங்கிச் சென்றபோது லைட்டின் வெளிச்சம் சிறிதளவே வந்தது. மீண்டும் லைட்டரை உபயோகித்துப் பார்த்தபோது அதிர்ந்தேன். எதிரே ஒரு பன்றி, என்னை முறைத்தபடி.
                இல்லை. அது ஒரு சிலை. நான் பயந்துவிட்டேனா? ஓர் அதிர்ச்சி. அவ்வளவுதான். லைட்டரை அருகே கொண்டு சென்று பார்த்ததில், யானையில் அமர்ந்தபடி, பன்றித் தலையுடன் கூடிய ஒரு தேவனின் சிலை தெரிந்தது. சுமார் நாலடி இருக்கும் சிலை. பீடத்தில் படிக்க முடியாத பாஷையில் ஏதோ எழுதியிருந்தது. எங்களூர் சாஸ்திரிகள் வைத்திருந்த புத்தகத்தில் இதுபோன்ற எழுத்துகளைப் பார்த்திருக்கிறேன். கிரந்தம் என்று சொன்னதாக ஞாபகம்.
                மீண்டும் சிலையைப் பார்க்க நிமிர்ந்தபோது அந்தப் பன்றியின் முகத்தில் கண்கள் உருண்டதுபோல் தெரிந்தது. அதன் வாய் திடீரென அசைந்தது. `ஓடிப்போ, இந்த வீட்டை விட்டு’ சப்தம் என் காதில் பயங்கரமாகக் கேட்டது.
                படுக்கை மீது எழுந்து உட்கார்ந்திருக்கிறேன். ஊர்மக்கள் சொன்ன கதைகள் மனத்தில் பதிந்ததன் விளைவா? விருட்டென்று எழுந்து, வலப்புற அறைக்குள் சென்றேன். கீழே கம்பளத்தைச் சுருட்டிப் பார்த்ததில், ஒரு பளிங்குக் கல் மேடாக. நெம்பியபோது நிலவறையும் அப்படியே. ஆச்சரியமாய் அதனுள் இறங்கிப் பார்த்ததில் மகா ஆச்சரியம். உண்மையிலேயே அங்கு பன்றித் தலையுடன் ஒரு தேவன் சிலை.
                 என் கனவில் எப்படித் தெரிந்தது? ஏதேனும் உள்ளுணர்வா? இல்லை அமானுஷ்ய விளையாட்டா? இப்போது என்னால் பிந்தைய கேள்வியைச் சுலபமாக உதறிவிட முடியவில்லை. சற்று அதிர்ச்சியுடன் படுக்கைக்குத் திரும்பினேன். நெடுநேரம் கழித்து தூக்கம் வந்தது.
                அதற்குப் பின் எனக்கு நிம்மதி இல்லை. மெல்ல மெல்ல என் தனிமை மோகம் தகர்க்கப்பட்டு வருகிறது. தூக்கத்தில் அடிக்கடி பன்றித்தலை தோன்றி, போய்விடு, போய்விடு என்று மிரட்டிக்கொண்டே இருந்தது. அன்று தெருவோரம் சாதுவாக மேய்ந்து கொண்டிருந்த ஒரு பன்றி திடீரென்று என்னை நோக்கி ஆவேசமாகக் கடிக்கப் பாய்ந்தது. நல்லவேளை, யாரோ சிலர் என்புறமிருந்து பன்றியை நோக்கி கல் எறிந்து விரட்டினார்கள்.
       மற்றொரு நாள் என் காரை எதிர்ப்புறமிருந்து வெகு வேகமாக ஒரு லாரி மோத வந்தது. எப்படியோ காரை வளைத்து தப்பித்து நிறுத்திப் பார்த்ததில், ஒரு நிமிடம் நின்று சென்ற அந்த லாரியின் பெயர்ப் பலகையில் வராகப்பெருமாள் என்று எழுதியிருந்தது.
                 இந்தப் பன்றித் தொல்லையின் உச்சகட்டம் நேற்றிரவு நிகழ்ந்தது. பொழுதுபோகாமல் ஸ்டார் மூவீஸ் பார்த்ததில், எடுத்த எடுப்பிலேயே `கெட் அவுட்’ என்ற சப்தம். பன்றித்தலை கொண்டு விகாரமாக இருந்த வேற்று கிரகவாசிகள், ஒரு விண்கலத்திலிருந்து மனிதர்களை வெளியே தள்ளிக் கொண்டிருந்தார்கள். பயத்துடன் டி.வி.யை நிறுத்திவிட்டேன். சிறிது நேரம் கழித்துப் போட்டுப் பார்த்ததில் டைட்டானிக் ஓடிக்கொண்டிருந்தது. ஒருவேளே அது ஏதேனும் வேறு பட டிரெய்லரோ? என்னால் நிச்சயமாக எதையும் சொல்ல முடியவில்லை.
                இதையே நினைத்துக் கொண்டிருந்தபோது, ஆபிஸ் ஏ.சி. அறையிலும் புழுக்கமாக இருந்தது. அறையை விட்டு வெளியே வந்தபோது, கிளார்க் சுரேஷ்வர் லஞ்ச் சாப்பிக்கொண்டே `தினமணி’  பத்திரிகையைக் காட்டியபடி தனது சகாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொன்னதில் பள்ளிச் சந்தம் என்ற வார்த்தை காதில் விழுந்தது. என் மனம், பள்ளிக் கோட்டை, பள்ளிச் சந்தம் என்று சம்பந்தப்படுத்திப் பார்த்தது. சாப்பிட்டு முடித்ததும் எனது அறைக்கு வருமாறு சுரேஷ்வரிடம் சொன்னேன். சொன்னபடியே வந்தான்.
                “அது என்ன செய்தி?”முழித்தான். “அதுதான் பேப்பரில் படித்தாயே பள்ளிச் சந்தம்..”
                “சமண, பௌத்தக் கோவில்களுக்கு அந்தக் காலத் தமிழ் மன்னர்கள் அளித்த நிலக்கொடை. இப்படி தானம் பெற்ற இடங்களில் பல சமணக் கோவில்கள் கட்டப்பட்டிருக்கு. இப்போ சென்னையைச் சுத்தி பல இடங்கள்ல பூமியைத் தோண்டும்போது ரிஷபதேவர்,  மகாவீரர்னு எங்களோட தீர்த்தங்கரர் சிலைகள் கிடைக்குது. சமீபத்துல கிடைச்ச சிலை பத்தி பேப்பர்ல போட்டிருக்கான்.”
                “நீ மார்வாடியா?”
                “இல்லை. தமிழ் சமணன். நயினார் சாதின்னு சொல்வாங்க. ஆரணி, வந்தவாசி, காஞ்சி பக்கம் இப்பவும் எங்க ஆட்கள் அதிகம் உண்டு.”
                “தமிழ் ஜைனனா?” வியந்தேன். “உனக்கு சித்தன்பள்ளி பத்தித் தெரியுமா?”
                “உங்க புது வீடு அங்கதானே இருக்கு? ஒருகாலத்துல அங்க எங்க பள்ளி அதாவது கோவில் இருந்ததா சொல்வாங்க. பின்னாடி தீயசக்திகளால அழிஞ்சுபோச்சு. இப்போ சமணர் யாரும் அங்க இல்ல. நீங்க வாங்கியிருக்கற வீடு, அந்தக் கோவிலோட இடிபாட்டுப் பொருட்களைக் கொண்டு அப்புறமா கட்டின மாளிகைன்னு சொல்வாங்க”
                “அந்தத் தீயசக்திகள் இன்றும் உலவுகிறதா?” எனக்கு வியர்த்தது. “என்ன ஒரு மாதிரியா ஆயிட்டீங்க?” சுரேஷ்வரிடம் சொல்லி¢த்தான் ஆக வேண்டும். சொல்லிவிட்டேன், என்னைக் காப்பாற்றக் கூடிய பதில் கிடைக்கும் என்ற ஆர்வத்துடன்.
                “புழல்ல எங்களோட சாஸ்திரியார் குணபத்ர சூரி இருக்கார். அவருக்கு நிறைய விஷயம் தெரியும். ஏதாவது உபாயம் சொல்வார். உங்களுக்கு ஆட்சேபம் இல்லேன்னா இன்னக்கி ராத்திரி உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன்.”  சம்மதித்தேன்.
                இரவு 9 மணி வரை சுரேஷ்வர் வரவில்லை. ஆனாலும் இன்று நிம்மதியான அமைதி நிலவுவதை அனுபவித்தேன். போன் கிணுகிணுத்தது. சுரேஷ்வர்தான்.
                “சார். சாஸ்திரி எங்கேயோ வெளியே போயிருக்கார். இன்னும் வரல. எப்படியும் காலைல வந்துருவாராம்.”
                “காலைலதான் வருவாரா?”எனது குரலின் அதிருப்தி அவனைத் தைத்திருக்க வேண்டும். “இல்லேனா ஒண்ணு செய்றீங்களா சார்? உங்க ஊர்லய சுடுகாட்டுப் பக்கத்துல மகாவடுகன்னு ஒரு தந்திரி இருக்கார். அவரைப் பார்ககறீங்களா?” ‘சரி’ என்று சொல்லி ஃபோனை வைத்தேன்.
                திடீரென எனக்கு கிலி அதிகரிக்கத் தொடங்கியது. பன்றியின் உறுமல் சப்தம் கேட்டது போன்ற பிரமை. இல்லை, நிஜமான சப்தம்தான், ஏதோ பேசுவதுபோல். ‘போகாதே’ என்று கத்தியதுபோல் இருந்தது. இதுவரை இங்கிருந்து ஓடிப்போகுமாறு மிரட்டிய பன்றி ஏன் போகாதே என்கிறது. மந்திரவாதி பயமா? விருட்டென வெளியே வந்து கதவைப் பூட்டி, காரை எடுத்துக் கிளம்பினேன். இப்போது ‘போகாதே’  என்ற சப்தம் கெஞ்சலாகக் கேட்டது.
              காரைக் கிளப்பிக்கொண்டு சுடுகாடு வந்துவிட்டேன். தந்திரியின் ஓலைக்குடிசை எனக்கு அபயம் அளிப்பதுபோல் எதிர்ப்பட்டது. பன்றியின் பயமுறுத்தலுக்கு முன்பு சுடுகாடு பிருந்தவனமாய் தெரிந்தது.
                குடிசையின் உள்ளே, எலும்புகளைத் தலையிலும் கழுத்திலும் பூமாலையாகச் சூடிக்கொண்டு, உடலெங்கும் கருப்புச் சாம்பலைப் பூசியபடி, ‘வாமதேவாய நமோ’, ‘கால பைரவாய நமோ’ என்று ஒரு ஆஜானுபாகு முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னர் மண்டையோடு. ‘வா மகனே’ திடீரென கண்விழித்து அவர் அழைத்தபோது திடுக்கிட்டேன். உடம்பு நடுங்கியது.
                “பயப்படாதே. அசுர சக்திகளை அழிப்பவனும் அசுரன்போல்தான் இருப்பான். உனது பன்றித் தொல்லையேப் போக்கி மகாசுகமளிக்கிறேன்” என்றார் தந்திரி. சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தேன்.
“என் பிரச்சினை எப்படித் தெரியும்?”
                “சித்தி மகனே சித்தி. ஆஷாட அமாவாஸ்யை அன்று என்னிடம் நீ வருவாய். அந்தப் பன்றியின் கணக்குத் தீர்க்கப்படும் என்பது விதி. புறப்படலாமா?”  என்னுடைய ஆமோதிப்புக்குக் காத்திராமலேயே கிளம்பினார். உள்ளே பார்த்து, “வா, சிந்தாமணி. வேளை வந்துவிட்டது” என்றார்.
 

                வனப்பான பெண் ஒருத்தி அரை மயக்க நிலையில் வெளிப்பட்டாள். “இவள் ஒரு யோகினி. பாகசனப் பிரியை”  என்று சிரித்தார். அவள், புகழ்ச்சியால் வெட்கப்பட்டதுபோல் தெரிந்தது.
                நாங்கள் வீட்டை அடைந்தபோது பன்றியின் ஆவேச சப்தம் வரவேற்றது. நிலவறையை நெருங்க, நெருங்க மேலும் அதிகரித்தது. தந்திரி வைத்திருந்த பையிலிருந்து பூஜைப் பொருட்கள் என்று எடுத்து வைத்தவை ஆச்சரியமளித்தன. சாராயக் குடுவை, மாமிசம், மீன். இப்போது பன்றியின் உறுமல் அதிகரித்தது.
                “துஷ்ட சக்திகள் இதற்குத்தான் கட்டுப்படும் மகனே. அந்தச் சாராயத்தை எடுத்துப் பன்னித் தலையில் ஊத்து. மாமிசத் துண்டையும் மீனையும் எடுத்து அப்பு”  என்றார்.
                நாற்றம் தாளாமல் முகத்தைச் சுளித்து, ஒரு கையால் மூக்கைப் பிடித்தபடி அவர் சொன்னதைச் செய்ய முயன்றேன். அப்போது பன்றி தன் சக்தியெல்லாம் திரட்டி அடிவயிற்றில் உறுமிய சப்தம் கேட்டது. “ஓடுடா” என்ற வார்த்தை என் காதில் விழுந்தது.
                “தயங்காதே. அது சொல்வதைக் கேட்டு பயப்படாதே. செயல்படு”  தந்திரி கட்டளையிட்டார். செய்தேன். படிப்படியாகப் பன்றியின் உறுமல் அழுகுரல்போல் தேய்ந்து நின்றது.
                “மகனே! முழுமையாக இது அடங்கிவிடவில்லை. நீ மேலே சென்று இரு. நான் இந்த யோகினியுடன் பகாசனத்தில் இருந்துவிட்டு அழைக்கிறேன். அப்போது உனக்கு சமாதிநிலையை சாதிக்கிறேன். பிறகு உனக்கு மகாநிம்மதி” என்றார்.
                அவர் சொன்னது ஒன்றும் புரியவில்லை. படிக்கட்டுகளில் ஏறி மேலே வந்தேன். அரைமணி கழித்து யோகினி மேலே வந்தாள். அவளது மயக்கநிலை மேலும் அதிகரித்திருந்தது. கால்கள் தள்ளாடின. தந்திரி அழைத்தார். “வா மகனே! அவள் போய்க் கொள்வாள்.”
                அப்போது என் காதில் “கடைசியாக எச்சரிக்கிறேன். ஓடிப்போ” என்ற மிரட்டல் கேட்டது. “பயப்படாதே! அது சும்மா பூச்சாண்டி காட்டுகிறது. அதன் சக்தியெல்லாம் போய்விட்டது. சிறிது நேரத்தில் முழுமையாக அழிந்துவிடும். வா”  என்றார். சென்றேன்.
 

                “உன் மேலாடையைக் கழற்றிவிட்டு கண்களை மூடி தியானத்தில் அமர்” என்றார்.
                தியானம் செய்து எனக்குப் பழக்கமில்லை. எனினும் அமர்ந்தேன். அவர் இடுப்பிலிருந்து ஒரு சிமிழ் எடுத்தார். அதில் ரத்தச் சிவப்பாக இருந்த குங்குமத்தை எடுத்து என் புருவ மத்தியில் பொட்டு வைத்தார். “இது உண்மையான செந்தூரம்” என்று அவர் சிரித்தபடி கூறியதுபோல் தெரிந்தது. எப்போது கண்மூடி தியானம் செய்ய ஆரம்பித்தேன்? ஆகா அற்புதம்!
                அடடா! என்ன அனுபவம்… ஐயையோ என்ன இது? திடீரென்று பன்றி என் கழுத்தைக் கவ்வுவதைப் போல் இருக்கிறதே… கொஞ்ச நேரம்தான் அந்த வலி. விடுபட்டு விட்டேன். தந்திரி சொன்ன மகா சுகத்தை, மகா நிம்மதியை அனுபவிக்கத் தொடங்கிவிட்டேன்.
பிற்சேர்க்கை: சுரேஷ்வரிடம் குணபத்ர சூரி சாஸ்திரியார் கோபமாகக் கேட்டார்: “என்ன? அந்த சுடுகாட்டுத் தந்திரியிடமா உன் மேனேஜரை அனுப்பினாய்? அவன் மகாவிரதன் ஆயிற்றே?”
                “மகாவிரதனா?”
                “காபாலிகர்கள் என்றும் பைரவ மார்க்கிகள் என்றும் கூறப்படும் வழக்கொழிந்த கொடும் வாமாசார மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மகாவிரதர்கள். இப்போது எங்கேனும் அரிதாகக் காணப்படும் அவர்கள், சங்கேத பரிபாஷைகளைத் தவறாக அர்த்தம் செய்துகொண்டு, பஞ்சமகாரம் என்ற பெயரில் மது அருந்தி, மாமிசம், மீன் சாப்பிட்டு, பெண்ணுடன் மைதுனம் அதாவது உடலுறவு மூலம் யோகசித்தி அடைய முயல்பவர்கள்.”
                “மேனேஜரோட பங்களால சிலையா இருக்கற பன்றிமுகத் தீயசக்தியிடமிருந்து காப்பாத்தறத்துக்காகத்தான் அந்த தந்திரியைப் பார்க்கும்படி சொன்னேன்”
                “அடடா! உன் மேனேஜரின் பங்களா நமது (சமணர்) கோவில் இடிபாடுகளைக் கொண்டு கட்டியது. அங்கு உள்ளதாகக் கூறப்படும் பன்றிமுகச் சிலை, மணிபத்ரவீரன் என்ற க்ஷேத்ர பாலன். அதாவது காவல் தெய்வம். அது தீமைகளிலிருந்து காப்பாற்றுமே தவிர, தீமை செய்யக்கூடியதல்ல. ஆனால் அந்தத் தந்திரி… காபாலிகர்களின் மகாவிரதம் மகா கொடுமையானதல்லவா? சிவபெருமான், பிரம்மாவின் தலையை அரிந்த புராணக் கதைக்கு அனாசாரமான அர்த்தம் கற்பித்து, அதனைப் பின்பற்றி, குறிப்பிட்ட மனிதனின் கழுத்தை வெட்டி, அந்த கபாலத்தில் உணவருந்தினால் பின்னர் முக்தி கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கை உடையவர்கள் ஆயிற்றே?”
                கிலியுடன் இருவரும் பள்ளிக்கோட்டை பங்களாவுக்கு வந்து பார்த்தபோது, தலையற்ற ஒரு முண்டம் இருந்தது. பன்றிமுகத் தேவனின் சிலை ரத்தக் குளியலில் நொறுங்கிக் கிடந்தது.

 சிறுகதை வடிவம் : – பத்மன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Nov 2015 - 19:58

சைனாவைத் திணறடித்த பாட்டி
----------------
உண்மைச் சம்பவம்

பெயர் இந்தியப் பெயர் போலத் தொனித்தாலும் உண்மையில் அவள் ஒரு பிரிட்டிஷ் பெண்மணி. 1930 – 40க்குள்ளான கால கட்டத்தில் அவர் சைனாவைச் சேர்ந்த “”சேக்கூ” என்ற நகரில் வசித்து வந்தாள். அங்கே அவளுடைய “”எம்ராயிடரி” துணிகள் வியாபாரம் நன்றாக நடந்து கொண்டிருந்தது. அவளுடைய அமைதியான வாழ்க்கையைக் குலைக்க வந்தது இரண்டாவது உலகப்போர்! ஜப்பானியர்கள் அவளைக் கைது செய்து 3 ஆண்டுகள் வரை சிறையில் அடைத்து வைத்தனர். பசியின் கொடுமையாலும், ஜப்பானியச் சிப்பாய்களின் வன்முறையாலும், பல கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்த அந்த நேரத்திலும், அவர் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்காரவில்லை. அவளுக்குப் பிடித்த நல்ல ருசியான உணவு அவளுக்குச் சிறையில் கிடைக்கவில்லை என்றாலும், “”ருசியான உணவுகளைச் சமைப்பது எப்படி?” என்று ஒரு புத்தகமே எழுதிவிட்டாள்!

போர் முடிந்த பின் சிறையிலிருந்து அவளுக்கு விடுதலை கிடைத்தது. ஆனால் அதற்கப்புறம் 1949 இல், சைனாவில் புரட்சி ஏற்பட்டு, ஒரு பெரிய கலவரமே நடந்தது. மாசே துங்கின் செஞ்சேனை (ரெட் ஆர்மி), நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது! அதன் விளைவாக அவள் இரவோடு இரவாகச் சைனாவிலிருந்து வெளியேற வேண்டி வந்தது. அவள் வசித்து வந்த வீடும் போய்விட்டது. எம்ராயிடரி தொழிற்சாலையும் போய்விட்டது. வாடகைக்கு விட்டிருந்த மற்ற 5 வீடுகளும் கைப்பற்றப்பட்டுவிட்டன. (அந்தக் காலத்தில் அவைகள் ஏறக்குறைய 15 லட்சம் ரூபாய் பெறும்! இன்றைய அதன் மதிப்பு சுமார் 4 1/2 முதல் 5 கோடி ரூபாய்.)

வீடு வாசல், சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்தபின், கையில் சல்லிக் காசு இல்லாத லீலா, எப்படியோ பிரிட்டனுக்குத் திரும்பி வந்து சேர்ந்தாள்! ஆனால் மனதில் ஒரு உறுதியான முடிவு செய்துதான் வந்தாள். “”எப்பாடுபட்டாவது தன் இழந்த சொத்துக்களுக்கு நஷ்டஈடு வாங்காமல் விடமாட்டேன்” என்ற முடிவு  அது.

ஆனால் அவள் முறையீட்டைக் கேட்பதற்கு யார் இருந்தார்கள்? இந்தப் போராட்டத்தை எப்படி எங்கேயிருந்து ஆரம்பிப்பது?
வழி என்னவென்று தெரியாத நிலையில் அவள் “பிரிட்டனின் வெளிநாட்டு அலுவலகத்திற்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் தன் போராட்டத்தை ஆரம்பித்தாள். இந்த அலுவலகம் போனில் தன் உடமைகளை இழந்து தவிப்பவர்களுக்கு உதவி செய்து வந்தது. லீலா அந்த அலுவலகத்திற்கு, தான் இழந்த உடமைகளின் ஒரு பெரிய பட்டியலை அனுப்பினாள்.

தன்னுடைய வீடுகள், ஃபாக்டரி, மட்டுமின்றி 300 பிளேட்டுகள், கண்ணாடி டம்ளர்கள், கிராமபோன் பெட்டி, எம்ராயிடரி செய்த பெட்ஷீட்டுகள், சிறு துண்டுகள், கைக்குட்டைகள், தொப்பி மாட்டும் ஸ்டாண்டு, விசிட்டிங் கார்டுகள் வைக்கும் “டிரே’ உள்பட தான் இழந்த எல்லாச் சிறிய சிறிய பொருள்களையும் அதில் குறித்திருந்தாள். அவளிடமிருந்த ஃபோர்டு ஸெடான் காரைக் கைப்பற்றி ஜப்பான் மிலிட்டரி ஆபீசர்கள் கொடுத்திருந்த இற்றுப் போன ரசீதின் நகலையும், போர் முடிந்த பின் அந்தக் காரை அவளுக்குத் திருப்பித் தந்துவிடுவதாக வாக்குறுதி அளித்து “கர்னல் ஷிகோ’ என்ற மிலிட்டரி ஆபீசர் எழுதியிருந்த கடிதத்தையும் கூட அவள் பட்டியலோடு சேர்த்து அனுப்பினாள். அமெரிக்கர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்த வீடுகளின் விவரங்களையும், அந்த வீடுகளின் அங்குலப் புகைப்படங்களையும் அனுப்பக் கூட அவள் மறக்கவில்லை.

ஆனால் உடனே பதில் எதுவும் வராததால் அவள் மனம் தளரவில்லை. புதுவேகத்துடன் கடிதத் தாக்குதலை ஆரம்பித்தாள்! இடைவிடாமல் கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதி, “”இந்த நஷ்ட ஈட்டுத் தொகையை நான் யாரிடமிருந்து கேட்டுப்பெற வேண்டும்? சீனர்களிடமிருந்தா? ஜப்பானிடமிருந்தா?” என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். (அவளுடைய சொத்துக்களை அந்த 2 நாடுகளும் கபளீகரம் செய்திருந்தன.)

லீலாவின் கடிதத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத வெளிநாட்டு அலுவலகம் கடைசியில் சுருக்கமான ஒரு பதிலை எழுதி அனுப்பியது. “”1951 இல், யுத்தம் முடிந்துபோன போதிலும் ஜப்பானுடன் இன்னும் “சமாதான உடன்படிக்கை’ கையெழுத்தாகவில்லை! ஆகவே தற்போது நாங்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்” என்று எழுதிய பிரிட்டிஷ் அரசு, அவருக்கு ஒரு “அட்வைஸ்’ஸும் செய்தது. “”முடிந்தால் நீங்கள் நேரிலோ அல்லது யாராவது ஏஜெண்ட் மூலமாகவே சைனாவுக்குப் போய் சீன அதிகாரிகளின் முன் உங்கள் சொத்துக்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.”

1949 இல் சீனாவில் புரட்சி நடந்தது. கம்யூனிஸ்ட் ஆட்சி வந்தபிறகு அங்கிருந்து தப்பித்து வெளியேறுவது எவ்வளவு கடினமாக இருந்தது, என்னென்ன ஆபத்துக்களையெல்லாம் எதிர்த்துச் சமாளிக்க வேண்டியிருந்தது என்பதை லீலா மறந்துவிடவில்லை. அதே நாட்டுக்கு மறுபடியும் திரும்பிச் செல்லுவதா? முதிர்ந்த 70 வது வயதில் அது சாத்தியமா? ஊஹும்!

விஷயமும் நஷ்டஈடு கோரிக்கையும் இதோடு முடிந்து விட்டது போலத் தோன்றியது அவளுக்கு! ஆனாலும் தனது பழைய ஆல்பத்தில் தன் வீடுகளின் புகைப்படங்களைப் பார்க்கும்போதெல்லாம் “எப்படியும் நஷ்டஈட்டைப் பெறாமல் விடக்கூடாது’ என்ற வேகம் அவள் மனதில் தோன்றி, அவளை மீண்டும் செயல்படத் தூண்டும்!

சில வருஷங்களுக்குப் பிறகு லண்டனில் சைனாவின் தூதரகம் ஒன்று திறக்கப்பட்டது. உடனே லீலா மறுபடியும் தன் வீட்டின் புகைப்படங்கள், ஆவணங்கள், இழந்த பொருள்களின் பட்டியல் முதலியவற்றை அவர்களுக்கு அனுப்பி நஷ்டஈடு கோரினாள்.

ஆனால் சீனர்கள் அவ்வளவு எளிதில் மசிந்து விடுவார்களா என்ன? லண்டனிலேயே இருந்த போதிலும், ஆங்கிலம் தெரிந்திருந்த போதிலும், “”எங்களுக்கு சீன பாஷைகள் தெரியும்! ஆங்கிலத்தில் எழுதின உங்கள் கோரிக்கை செல்லாது! ஆகவே நிராகரிக்கப்படுகிறது” என்று எழுதி விட்டார்கள்.

ஆனால் கிழவி விடுவதாக இல்லை! பற்பல வருஷங்கள் சைனாவில் வசித்திருந்ததினால் அவளுக்கு சீன மொழியும் நன்றாக பேசவும் எழுதப் படிக்கவும் தெரிந்தது! உடனே சீன பாஷையில் கோரிக்கையை எழுதி அனுப்பினாள்! அதற்குச் சீன தூதரகத்தினர் கொஞ்சம் கூடச் சங்கோஜமில்லாமல், சுத்தமான ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். “”உலக யுத்தத்தின் போது “செக்கூ’ நகரை ஜப்பானியர்கள் ஆக்ரமித்து இருந்தார்கள். அவர்கள்தான் உங்கள் சொத்துக்களைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்! அவர்கள் உங்கள் வீடு வாசல் உடமைகள் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டார்கள்!

அவர்களிடமிருந்து “செக்கூ’ நகரைக் கம்யூனிஸ்ட்டுகள் விடுவித்தபோது அங்கே எதுவுமே மீந்து இருக்கவில்லை! ஆகவே நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை! நஷ்டஈடு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.”

இது உண்மையல்ல என்று லீலாவுக்குத் தெரியும். ஏனெனில் “செக்கூ’ நகரம் ஜப்பானியர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவளுடைய உறவினன் ஒருவன் அந்த நகரத்துக்குத் திருட்டுத்தனமாகப் போய்ப் பார்த்திருந்தான். அவளுடைய வீடுகள் அப்படியே இருந்தன. ஆனால் பாத்ரூம்களிலிருந்து குழாய்கள் உட்பட எல்லாப் பொருள்களையும் கழற்றி எடுத்துச் சென்றிருந்தார்கள் ஜப்பான் படையினர். லீலா சீன தூதரகத்துடன் தன் போராட்டத்தை விடவில்லை! அவர்களும் கொடாக் கண்டர்களாக இருந்தார்கள்.

லீலாவுக்கு வயது எண்பதாகிவிட்டது! அவளுக்குப் பதில் வேறு யாராவது இருந்திருந்தார்களானால் தோல்வியை ஒப்புக் கொண்டு, இனி நம்மாலாவது ஒன்றுமில்லையென்று முற்றுப் புள்ளி வைத்திருப்பார்கள். ஆனால் லீலாவோ சளைக்காமல் சீனர்களையும் பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் கடிதக் கணைகளால் தாக்கிக் கொண்டே இருந்தாள். ஆண்டுகள் சென்று கொண்டிருந்தன. லீலா 90 வது வயதை அடைந்தபோது அவளுடைய இரட்டைச் சகோதரி காலமாகி விட்டாள்! அவளுடைய இரண்டு புதல்வர்கள் அவளுடைய 70 வது வயதிலேயே காலமாகி விட்டிருந்தார்கள். ஆனால் லீலாவின் வாழ்க்கைப் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது.

“”சீனர்களிடமிருந்து என் சொத்தையும் நஷ்டஈட்டையும் பெறாமல் நான் சாகமாட்டேன்” என்று அவள் “சபதம்’ எடுத்துக் கொண்டிருந்தாள். கடைசியில் 1980 ஆரம்பத்தில், சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. சைனாவுக்கு மேற்கத்திய நாடுகளிலிருந்து நிதிஉதவி தேவைப்பட்டது. ஆனால் நிதியுதவி பெறுவதற்கு முன் தாங்கள் காசு பண விஷயத்தில் ரொம்பவும் நேர்மையுள்ளவர்கள் என்று மேல்நாடுகளுக்குக் காண்பிக்க வேண்டுமே! நிரூபிக்க வேண்டுமே! ஆகவே அவர்கள் தங்கள் பழைய எதிரி நெம்பர் 1 பக்கம் பார்வையைத் திருப்பினார்கள். அதுதான் 99 வயது பாட்டி லீலா!
லீலாவின் கடிதத் தாக்குதல் ஓயாமல் நடந்து கொண்டுதானிருந்தது. இந்த வயதில் கைகள் சற்று நடுங்க ஆரம்பித்திருந்ததால் அவள் கையெழுத்தும் சற்றுக் கோணல் மாணலாகி விட்டிருந்தது! ஆனால் அவளுடைய பேரன் அவளருகில் துணையாகவும், உதவியாகவும் இருந்து கடிதங்கள் எழுதுவதில் ஒத்துழைத்தான்.

மேலும் அவன் பிரிட்டிஷ் அரசில் எரிபொருள் துறை மந்திரியாக வேறு இருந்தான். அவன் தன் பாட்டியின் சொத்தின் முழு விவரங்களுடனும், ருசுக்களுடனும் புதியதாக ஒரு பட்டியலைத் தயாரித்து, சீனாவிடமிருந்து இந்த மாதிரி நஷ்டஈடு கோரும் கேஸ்களைக் கையாண்டு கொண்டிருந்த அதிகாரிக்கு அனுப்பி வைத்தான். எனினும் பிரச்னை அவ்வளவு எளிதில் தீருவதாக இல்லை.

“”லீலாவுடைய “பாஸ்போர்ட்’ செல்லுபடியானதாக இல்லை. எனினும் அவளுடைய கோரிக்கையைச் சீனர்களிடம் சமர்ப்பிப்பதற்காக அவளுடைய பிறந்த தேதியின் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், திருமணத்துக்குப் பின் தன் பெயரை மாற்றிக் கொண்டதற்கான சான்றிதழ் முதலியவற்றை அனுப்பினால் எங்களால் முடிந்ததைச் செய்வோம்” என்று பதில் வந்தது.

லீலாவிடம் இந்த ஆவணங்களில் எதுவுமே இருக்கவில்லை. எப்படியிருக்க முடியும்? இரண்டு உலக மகாயுத்தங்கள் மூன்று வருஷச் சிறைவாசம், சீனப்புரட்சி முதலியவற்றின் கொடுமைகளுக்கு ஆளாக நேர்ந்த தருணத்தில் ஒரு பெண்ணால் அவைகளையெல்லாம் எப்படிக் காப்பாற்றிப் பத்திரமாக வைத்துக் கொள்ள முடியும்?
இருந்தாலும் பேரன் பின்வாங்கவில்லை. பாட்டியின் போராடும் திறனை அவனும் வாரிசாகப் பெற்றிருந்தான். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாழ்க்கையில் வந்த சூறாவளிகளிலும் புயல்களிலும் அந்த ஆவணங்கள் எங்கோ தொலைந்து போய்விட்டன என்றும் அவைகளை மீண்டும் திரும்பப் பெறுவது சாத்தியமில்லாததால் அவைகள் இல்லாமலேயே அவளுடைய கேசை மனிதாபிமான நோக்கோடு பார்த்து “ஸெட்டில்’ செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்.

கடைசியில், 100 வயதான லீலாவுக்கு 1982 ஆம் ஆண்டு மே மாதம் வந்த கடிதத்தில் அவளுடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது என்றும், நஷ்ட ஈட்டுத் தொகை சில நாட்களுக்குள் அவளுக்கு “செக்’ மூலம் அனுப்பப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“”இனிநான் நிம்மதியாக கண்ணை மூடுவேன்” என்று லீலா அதற்குப் பதில் எழுதி அனுப்பினாள்!
உண்மையிலேயே சில நாட்களுக்குப் பிறகு அவள் கண்ணை மூடிவிட்டாள். நஷ்டஈடு “செக்’ வருவதற்கு முன்னதாக அவள் கண்களை மூடிவிட்டது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. ஏனெனில் அவள் கேட்டிருந்த 4 கோடி தொகைக்குப் பதில், 1400 பவுண்டுக்குத்தான் (இன்றைய நிலவரப்படி வெறும் 11/4 லட்சம் ரூபாய்) செக் வந்தது. அதாவது 1935 இல் “செக்கூ’ நகரில் அவள் வீடுகளுக்கு இருந்த மதிப்பில் 1/5 பங்கு!

“”தி ஸ்பெக்டேட்டர்” (கூடஞு குணீஞுஞிtச்tணிணூ) என்ற நாளிதழில் லீலாவின் பேத்தியான “”பிரான்சிஸ் ஆஸ்போர்ன்” என்பவர் தன் பாட்டியைப் பற்றி எழுதிய மேற்படி உண்மைக் கதையின் முடிவில், இப்படி எழுதினாள்…

“”இந்த செக் வந்த போது என் பாட்டி உயிரோடு இருந்திருந்தால் அவள் கோபம் எல்லையைக் கடந்திருக்கும். அவள் இறந்திருக்கவே மாட்டாள்  பாக்கித் தொகையை வசூல் செய்யாத வரை!”

சித்ரலேகா குஜராத்தி வார இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் தமிழில்: விஜு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Nov 2015 - 20:01

உனக்கு ஒன்றும் தெரியாது
--------------
உனக்கு ஒன்றும் தெரியாதுசிறுகதை
மூலம்: மங்களா ராமச்சந்திரன்
தமிழாக்கம்: “”ஜி.ஜி”

திருமதி மங்களா ராமச்சந்திரன் மத்தியப் பிரதேசத்தில் வாழும் தமிழர். கணிதப் பட்டதாரி. இவரது படைப்புகள் சுமார் 30 ஆண்டுகளாக ஹிந்தி இதழ்களில் பிரசுரமாகின்றன. 30 ஆண்டுகள் போபால் வானொலியிலும் இந்தூர் வானொலி நிலையத்திலும் பணியாற்றினார். இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் பிரசுரமாகியுள்ளன. “”நவீன அகல்யை” என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு 1992 இல் ராஷ்ட்ர பாஷா பிரசார் சமிதியின் பரிசைப் பெற்றது. 1992 இல் போபால் வானொலி “”லக்ஷ்மிபாலா ஸம்மான்” விருதளித்து கௌரவித்தது. 2001 இல் உஜ்ஜையினி தலித் இலக்கிய அகாதமி “”ராஷ்ட்ரிய அம்பேத்கர் ஸாஹித்ய ஸம்மான்” விருதளித்து கௌரவித்தது.

என் உயிரற்ற உடல் கிடக்கிறது. பேரன் பேத்திகள், மகள்கள்  மாப்பிள்ளைகள், மகன்கள், மருமகள்கள் ஆகியோரால் வீடு நிறைந்திருக்கிறது. இவர்களில் யாரேனும் ஒருவர் வாய் திறந்து பேசிவிடுவார் போல் தெரிகிறது  “”ஐயோ பாட்டி! உனக்கு ஒன்றும் தெரியாதே…”

“”பாட்டி! ஏன் இப்படிப் படுத்துக் கிடக்கிறாய்?” என்றோ, “”ஏன் பாட்டி! உனக்கு நேரம்  காலமே தெரியாதா? இப்படிப் படுத்துக் கிடக்கிறாயே?” என்றோ கேட்டு விடுவார்களோ?

மூத்த மகள் வழக்கம் போலக் குற்றம் சாட்டும் குரலில், “”அம்மா! உனக்கு என்ன ஆயிற்று? உன் வயதுக்கேற்றபடி உனக்கு எதுவும் செய்யத் தெரியாதா? வாயை இப்படி அகலத் திறந்தபடி தூங்குகிறாயே? பிளந்த வாய்க்குள் குருவி கூடு கட்டிவிடப் போகிறது? பாம்பு தன் பொந்து என்று எண்ணிப் புகுந்து விடப் போகிறது! மொத்தத்தில் உனக்கு ஒன்றுமே தெரிவதில்லை” என்பார்களோ?

எனக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து இல்லை இல்லை… என் நினைவிற்கு வரும் நாளிலிருந்து  அறிவு என்னிடம் ஒருபோதும் இருந்ததில்லை  ஆமாம் “”உனக்கு ஒன்றும் தெரியாது” என்பது மட்டுமில்லை, “”எதுவும் எப்போதும் தெரியப்போவதுமில்லை” என்று நான் கேட்காத நாளே கழிந்ததாக நினைவில்லை.
தமது பிள்ளைகள் மந்தம், முட்டாள் எனக் கருதும் உரிமை பெற்றோர்க்கு உண்டு. குடும்பப் பராம்பரியத்துக்கு ஏற்பவே குழந்தைகளின் குணதோஷங்கள் அமைகின்றன என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். குழந்தை புத்திசாலித்தனமான ஒரு நல்லகாரியத்தைச் செய்யும் போது, தாய்  தந்தை தம்மையே அதற்குக் காரணமாக உரிமை கொண்டாடத் தயங்குவதில்லை.

குடும்பத்தில் கடைக்குட்டிக்கு எல்லோருடைய அன்பும் கிட்டும் என்ற கூற்றை ஏற்க நான் தயாரில்லை. ஏனென்றால், கடைக்குட்டியான நான் எல்லோருடைய ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும், வாழ நேர்ந்தது. அண்ணன்கள், அக்காக்கள் என்னை ஒரு வெற்று உதிரிப் பொருளாகவே கருதினார்கள். சீட்டாட்டத்திலோ அல்லது வேறு எந்த விளையாட்டிலோ “ஒரு கை’ குறைந்தால் மட்டுமே என்னைச் சேர்த்துக் கொள்வார்கள். இதற்காக நான் எப்போதும் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவளாக இருக்க வேண்டும். இதற்காகவே அவர்களுடைய அதிகாரத்திற்கு அடிபணியச் சித்தமாக இருக்க வேண்டும். ஆட்டத்தில் யாருக்குப் பார்ட்னராக ஆகிறேனோ அவர்களின் அடியைத் தாங்கிக் கொள்ள என் முதுகும், குட்டைத் தாங்கிக் கொள்ள என் தலையும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நான் அவர்களைப் பார்ட்னராகக் கருதினாலும் அவர்கள் என்னை எதற்கும் லாயக்கில்லாதவளாகவே கருதினர். என்னதான் யோசித்துச் சீட்டைப் போட்டாலும், கேரமில் எவ்வளவுதான் எச்சரிக்கையாகக் காயைப் போட்டாலும் நானேதான் தோல்விக்கு முழுப் பொறுப்பாளியாக வேண்டும். “”போடி முட்டாள்! உனக்கு ஒன்றுமே தெரியாது. கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தியிருந்தால், நாம் ஜெயித்திருக்கலாம்” என்ற பேச்சு. இதைக் கேட்டு மற்றவர்கள் “”ஏய், மூளை என்று ஒன்று இருந்தால்தானே? நம் ஐந்து பேரில் இவள் கடைசியா? மூளை நம் நான்கு பேரின் பங்கிற்கு வந்துவிட்டதால், பாவம் இவள் பங்கிற்கு ஏதேனும் மிச்சம் மீதி இருந்திருந்தால்தானே?” என்று கிண்டல் செய்வர்.

எனக்கு அழுகை வருமளவிற்குக் கோபம் வருவதில்லை. ஒருவேளை அவர்களைவிட நான் பலவீனமானவளோ? பலவீனமானவள்தான் தன் கோபத்தை வேறு எப்படி இறக்கி வைக்க முடியும்? அப்படியே கோபத்தில் என்னிடம் ஏதேனும் எதிர்வினை தென்பட்டால்… “”என்ன? முட்டாள் தனமாக நடந்து கொள்கிறாய்? நீ நடந்து கொள்வதைப் பார்த்தால் தங்கை என்று சொல்லிக் கொள்ளவே எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. உனக்கு மூளை இருக்க வேண்டிய இடம் வெற்றிடமாக இருக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது” என்ற கிண்டல் வேறு.

வேறு வழியின்றி என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள அவர்கள் விரும்பும் போது, நான் எவ்வித மறுப்புமின்றி சேர்ந்துகொள்ளத் தயாராகவே இருப்பேன். ஒரு பக்கம் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைப்பதே அரிது. எனவே எவ்வளவுதான் வசவுகள், கிண்டல், கேலிகளை சகித்துக் கொள்ள வேண்டி இருந்தாலும் நான் தயாராகவே இருப்பேன்.
அவர்களுக்கு என் தேவை இருந்துகொண்டே தான் இருக்கும். அவர்கள் நால்வர் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தால் “”தண்ணீர் கொண்டு வா,” “”டிஃபன் கொண்டுவா” என்றும், யாரேனும் கதவு தட்டும் சத்தம் கேட்டால், “”ஏய்! போய்க் கதவைத் திற” என்றோ அதிகாரம் தூள் பறக்கும்.

கதவைத் திறந்ததும், அவர்களில் யாரேனும் ஒருவருக்கு, ஏதேனும் ஒரு வேலை வந்து விளையாட்டில் பாதியில் எழுந்திருக்க நேர்ந்தால் அதற்கும் நானே குற்றவாளி! முதலில் கதவைத் திறக்கச் சொல்லி விரட்டியவர்களே, கதவைத் திறந்ததும் வேறு வகையாகத் திட்டுவார்கள். என்னைத் திட்டுவதிலும், அதட்டுவதிலும் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து கொள்வார்கள். அம்மா மட்டும் என் சார்பாக அவர்களைக் கடிந்து கொள்வாள். என் மீது இரக்கம் காட்டுவாள். ஆனால், தனியாக இருக்கும் போது, “”நீ கடைக்குட்டியல்லவா, அறிவிலும் அப்படியே இருக்கிறாய். இத்தனை வசவுகளையும், திட்டுகளையும் வாங்கிக் கொண்டும் அவர்களோடு சேர்ந்து விளையாட ஏன் உட்கார்கிறாய்? அவர்களின் கேலிகள் உனக்கு உறைக்கவே இல்லையா?” என்று கேட்பாள்.

“”இன்று அவர்கள் கிட்டேகூடப் போவதில்லை’ என்று முடிவெடுத்து மன உறுதியோடு ஏதோ ஒரு புத்தகத்தை  அதை 15  20 முறை படித்திருந்தும்கூட எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவேன். சிறிது நேரத்தில் அண்ணன்கள், அக்காக்கள் யாரேனும் ஒருவரிடமிருந்து குரல் வரும்.

“”பிரமீளா! கொஞ்சம் அதை எடுத்து வாயேன்!”

“பிரமீளா! கொஞ்சம் கடிகாரத்தைப் பார்த்து மணி என்னவென்று சொல்லேன்.”

ஓரிரு முறை அவர்கள் சொல்லும் வேலையைச் செய்துவிடுவேன். ஆனால் சில சமயம், ஏன் செய்ய வேண்டும் என்று தோன்றும். நான் இவ்வளவு தேவைப்படும் போது, என்னை ஏன் எப்போதும் முட்டாள் என்று சொல்ல வேண்டும்? என் மனதிலும் கோபம் கொப்பளிக்கும். அவர்கள் கூப்பிட்டால் காதில் விழாதது போல் இருக்க முயல்வேன். அல்லது முணுமுணுத்துக் கொண்டே எழுந்திருப்பேன். எனக்கும் ஒரு மனம் இருக்கிறது. தன்மானம் இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று தோன்றும். ஆனால் என் மன வேதனை அவர்களைத் தொட்டுக் கூடப் பார்ப்பதில்லை.

அம்மா என்னைத்தான் அதட்டுவாள். “”என்ன குட்டி? ரொம்பத்தான் உணர்ச்சி வசப்படுகிறாய். அப்படி என்னதான் பெரிதாகச் செய்துவிட்டாய்? உனக்கு ஏதோ பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டது போல் சலித்துக் கொள்கிறாய்” என்பாள்.
எப்போதாவது அவர்களுடைய சீண்டல்கள் எல்லை மீறி நான் கண்கலங்கினால், அம்மா சற்றே மென்மையாகி எனக்கு புத்திமதி கூறுவாள். “”இதோ பார் ப்ரேம்!” (அம்மா ஏனோ இந்தப் பெயரிலேயே என்னை அழைப்பாள். ஆனால் இந்தப் பெயர் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை என்பது அவளுக்கும் தெரியும்.) “”இவர்கள் எல்லோருமே உன் மேல் பிரியமாகத்தான் இருக்கிறார்கள். அதனால் தான் உன்னைச் சீண்டுகிறார்கள்.”
நான் சில சமயம் அம்மாவிடம் சொல்லிவிடுவேன். “”நீங்களும் எனக்குத்தான் புத்திமதி சொல்கிறீர்கள்… திட்டுகிறீர்கள். ஒருபோதும் அவர்களை எதுவும் சொல்வதில்லை.”

இதன் பிறகு என் விசும்பல்கள் அதிகமாகி விடும். என்னால் எதுவும் பேச முடிவதில்லை. அம்மா இறுக்கமாக என்னை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறுவாள். என் மனம் சற்றே நிம்மதி அடையும். அம்மாவின் பலம் முழுதும் என்னுள் பாய்ந்துவிட்டது போல் உணர்வேன். இனி யாரும் என்னைத் தொல்லை செய்ய முடியாது.
இந்த நேரத்தில் அந்த நால்வரில் யாரேனும் ஒருவர் அங்கே வந்து அமைதியடைந்த என் மனதைச் சீண்டினால்  “”ஏய் குட்டிப் பிசாசே. (அண்ணன்கள் சில சமயம் இப்படித்தான் என்னை அழைப்பார்கள்) அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்து கொள்கிறாயே. என்ன விஷயம். நாங்கள் என்ன ராட்சஸர்களா? உன்னை விழுங்கி விடுவாமோ?” என்பார்கள். பிறகு, “”ஐயோ! நாங்களும் கடைக்குட்டியாக இருந்திருக்கக் கூடாதா? ஒரு வேலை வெட்டி இல்லாமல் அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்து கொண்டிருப்போமே! அம்மா! நீங்கள்தான் இவளைக் கெடுக்கிறீர்கள். கடைக்குட்டி என்றால் என்ன ஒஸத்தியா?” என்பார்கள்.

இதற்குள் மற்றவர்களும் வந்துவிடுவார்கள். அவரவர் தத்தமது மகிழ்ச்சிக்குப் பேசத் தொடங்கி விடுவார்கள்.
“”இவள் எங்கள் நால்வரை விட எப்போதும் சின்னவளாகத்தான் இருப்பாள். என்றும் இதை மாற்றவே முடியாது. குறைந்த பட்சம் இவள் தன் வயதுக்கேற்ப இருக்க விடுங்கள்” என்பார்கள்.

அவர்கள் நான்கு பேர். நான் ஒருத்தி. அம்மா தனியாக இருக்கும் போது சொல்வாள். “”இவர்களோடு ஏன் மோதுகிறாய்?” எனக்கு அழுகை வரும். மற்றவர் கேலி செய்வர்.

காலம் கழிந்த பின்னர் தெளிவு பிறந்தது. எதிரில் உள்ளவரோடு போராடச் சிறந்த ஆயுதம் மௌனமே என்று தெளிந்தேன். இந்தத் தெளிவு பிறந்த நாளிலிருந்து மௌனாஸ்திரத்தைப் பிரயோகித்து அவர்களை வீழ்த்தக் காத்திருந்தேன். ஆனால் அக்குழு கலைந்து விட்டது.

பெரிய அண்ணன் மேற்படிப்பிற்காக வெளியூர் போக வேண்டியதாயிற்று. பெரியக்காவிற்குக் கல்யாணம் ஆகிவிட்டது. மிச்சமிருந்த இருவரின் வேலை மற்றும் சிந்தனை வட்டம் தனித் தனியாகிவிட்டது. அதாவது நான் மீண்டும் ஒருமுறை தோற்க வேண்டியதாயிற்று. என் புதிய அஸ்திரத்தைப் பிரயோகிக்க முடியாமல் போயிற்று. சின்னக்கா படிப்பில் மூழ்கிவிட்டாள். அவள் எப்போதாவது என்னோடு பேசுவது உண்டு. ஆனால், அவளுக்கும் பெரியக்காவுக்கு மிடையே இருந்த நெருக்கம், என்னிடம் இருந்ததில்லை. நானும் வீட்டு வேலைகளில் நன்கு உதவிகள் செய்யத் தொடங்கியிருந்தேன். ஆயினும், ஏனோ தெரியவில்லை. நான் ஈடுபாட்டோடு இவ்வளவு உழைத்ததையும் அம்மா அங்கீகரிக்கவே இல்லை. வீட்டிற்கு வந்து போகும் உறவினர், தோழிகளிடம் சொல்வாள்… “”மூத்தவள் போனது என் ஒரு கையே உடைந்தது போலாகிவிட்டது. இப்போதெல்லாம் அதற்கடுத்தவள் வேலையில் கை கொடுப்பதே இல்லை. சின்னவளைப் பற்றித்தான் தெரியுமே? செல்லமாக வளர்ந்தவள். வேலையில் இரண்டு அக்காக்களுக்குச் சமமாக முடியுமா?”

இதுபோன்ற பேச்சைக் கேட்டுக் கேட்டு மனதே விட்டுப் போய்விட்டது. எவ்வளவு விரைவாக உழைத்து உதவிகள் செய்தாலும் அம்மாவின் மனதில் அக்காக்களின் மதிப்பு அதிகமாகப் பதிந்திருந்ததால், அவர்களைவிட அதிகமாகவும் நன்றாகவும் செய்தால் கூட எனக்கு அவள் சரியான மதிப்புத் தருவதில்லை. எப்போதாவது என்னை மகிழ்விக்க, அல்லது என் வாடிய முகத்தைப் பார்த்து இரக்கம் காரணமாகச் சொல்வாள். “”குழந்தை! நிறையச் செய்துவிட்டாய், போதும் நிறுத்து. எல்லோரும் வெளியேறி விட்டார்கள். குடும்பத்தில் நீ மட்டுமே மிஞ்சியிருக்கிறாய்.” இப்படிச் சொன்னாலே போதும். என் உள்ளம் உற்சாகத்தில் துள்ளும்.

ஆனால், சில சமயங்களில் இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், பிற் சேர்க்கையாக “”பாவம், இது உன்னால் முடியக் கூடியதில்லை” என்பாள். என் கண நேர மகிழ்ச்சியும் பாழாகிவிடும்.

காலச் சுழற்சியில் குடும்ப நிர்வாகத்தில் நிபுணியாகி விட்டேன் நான். அதாவது நான் இப்படி நினைத்துக் கொண்டேன். குடும்ப உறுப்பினர் எவருக்கும் இது தெரியாவிட்டாலும், அப்பாவிடம் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது எனக்கு! ஒருவேளை அவராவது என்னைப் பாராட்டுவார் என்று. ஆனால், அவரது ஒரு விநோதப் பழக்கத்தின் காரணமாக அவரிடம் எதுவும் எதிர்பார்க்க முடியாது. ஏதோ தவறு செய்துவிட்டோம், வசவு விழப் போகிறது என்று நினைக்கும்போது வசவு விழுவதில்லை! ஆனால் நான் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சந்தர்ப்பத்தில் வசவு மாரி பொழிந்துவிடுவார். சில சமயங்களில் என்னைப் புகழ்வது போல ஆரம்பித்துக் கடைசியில் கிண்டல், கேலியோடு விஷயம் முடிந்துவிடும்.
என் உழைப்பிற்கும், ஈடுபாட்டிற்கும் உரிய பாராட்டு பெறும் முயற்சியில் படிப்பில் சிறிது பின் தங்கிவிட்டேன். அண்ணாக்கள், அக்காக்களிடம் தோற்றுக் கொண்டே இருந்த நான், அவர்களின் தொல்லை, சீண்டல்களிலிருந்து முற்றிலும் வெட்டி விடப்பட்டவள் போலாகிவிட்டேன். அவர்கள் நால்வரும் ஒரு முழுமையான சதுரக் கட்டத்தைப் பூர்த்தி செய்திருந்த பொழுது, நான் பிறந்து நான்கு மூலைகளையும் இழுத்துப் பிடித்து ஒரு ஐந்தாவது கோணத்திற்கான இடத்தை உண்டாக்கி விட்டேன். அவர்கள் எல்லோருமே என்னை விரும்புவதாலேயே தொந்திரவு செய்வதாகச் சொல்வார்கள். இந்த அன்பும், விருப்பமுமே மனிதனின் வாயைத் தைத்து விடுகின்றன.

திருமணம் ஆன பிறகே அன்பிற்குப் பிரதியானது அன்பு மட்டுமே அல்லாது ஒரு நன்றியுணர்வும் வேண்டும் என்ற அறிவுத் தெளிவு பிறந்தது. இந்த நன்றியுணர்வின் சுமைக்கடியில் அழுந்தி தன்னைத் தாழ்த்திக் கொண்டும், மற்றவர்க்கு மரியாதையின் வடிவமாகத் திகழவேண்டுமென்பதே எந்த ஒரு மருமகளின் எண்ணமுமாகும். ஆனால், நன்றியுணர்வைச் சொல்லி சுட்டிக் காட்டிக் காட்டி மட்டம் தட்டுவோர் முன்னிலையில், எவருமே தன்னை மந்த புத்தியாகவோ, முட்டாளாகவோ கருத வேண்டியதாகிவிடும்.

கணவர் ஓரளவு உதாரகுணம் உள்ளவராகத் தென்பட்டார். என் சின்னச் சின்னத் தவறுகளை புதிய இடம், புதிய சூழ்நிலை காரணமாக யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடிய தடுமாற்றங்களைத் தவறுகளாகக் கணித்தால்  எனக்கு உயிர்ப் பிச்சை வழங்கிவிட்டது போன்று மன்னித்து விடுவார். அவரைவிட நான் அறிவில் குறைந்தவள் என்று மகிழ்ந்து கொள்வார். அவருடைய மகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்ந்து போவேன். சிறு சிறு தவறுகள் செய்துமிருக்கிறேன்.
“”உனக்கு ஒன்றும் தெரியாது” என்று எல்லோருமே எனக்குப் பட்டம் சூட்டிவிட்ட பிறகு, கணவரிடமிருந்து மட்டும் ஏன் இந்த உரிமையைப் பறிக்க வேண்டும்?

காலப் போக்கில் என் இந்த மனோபாவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையே தந்தது. ஏனெனில் நான் கண்டறிந்தது  எந்தப் பெண்கள் தம்மைக் கணவனுக்குச் சமம் என நிலை நாட்ட முயன்றார்களோ அல்லது இவ்வாறு கணவனுக்கு உணர்த்த முயன்றார்களோ, அவர்களுடைய குடும்ப வாழ்க்கை துயரம் மிக்கதாக ஆவதை நான் கண் கூடாகக் கண்டுணர்ந்தேன். இதனால் ஒன்று, கணவனிடம் தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது அல்லது அவர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மனைவியின் உள்ளத்தைக் காயப்படுத்தும் முயற்சியில் கவனமாக இருந்துவிடுகிறார்கள் என்பதையும் நான் கண்டேன். பெண்களின் இதுபோன்ற நிலைப்பாடு, குடும்ப வாழ்வில் பிளவைத் தோற்றுவித்து விடுகின்றது.
“”உனக்கு ஒன்றும் தெரியாது” என்ற மஹாவாக்கியத்தைக் கேட்டுக் கேட்டு அதற்கு நான் பழக்கப்பட்டு விட்டேன். உள்ளத்தின் ஒரு மூலையில் இதுநாள் வரை ஒரு நம்பிக்கை இருந்தது.

இதுவரை என்னை மட்டம் தட்டியவர்கள் என்னை விட மூத்தவர்களாக இருந்தனர். அதனாலேயே என்னைப் பேச அவர்களுக்கு லைஸன்ஸ் கிடைத்திருந்தது. இனி எனக்குக் குழந்தைகள் பிறக்கும். அவர்கள் என்னைப் பேச முடியாது. நான் அவர்களுடைய தாயல்லவா?

ஆனால், என் இந்த நம்பிக்கையின் மீது இடி விழுந்தது. என் மகள் மழலை பேசத் தொடங்கினாள். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என்ற சொற்கள் மலர் மாரிபோல் பொழிந்து கொண்டிருந்தன. அவளுடைய சொற்களஞ்சியத்தின் காலிப் பக்கங்கள் நிறைந்து கொண்டிருந்தன. இப்போது சின்னச் சின்ன வாக்கியங்கள் பேசலானாள்.
ஒருநாள் திடீரென்று, “”மம்மி மக்கு” என்றாள். இதைக் கேட்டு எல்லோரோடும் சேர்ந்து நானும் சிரித்துவிட்டேன். குழந்தையின் மழலையை வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
இருப்பினும் உள் மனது கேள்வி எழுப்பியது. “என்னை மட்டும் ஏன் இப்படிச் சொன்னாள்? பால் மணம் மாறாத அப்பச்சிளங் குழந்தை மற்றவர்களின் பேச்சை அஞ்சல் செய்துவிட்டது. ஒருநாள் “உனக்கு ஒண்ணும் தெரியாது மம்மி” என்றாளே பார்க்கலாம்.

நான் அவளுக்குப் புரிய வைக்கவும் முடியாது. தடுக்கவோ, தண்டிக்கவோ முடியாது. வீட்டிலிருந்தவர்கள் அவளுடைய மழலையை வேடிக்கை, வினோதமாக அனுபவித்து அதையே மீண்டும் மீண்டும் பேச வைத்து ரசித்தார்கள்.
குழந்தை வளர்ந்து பெரியவளானாள். என்னைவிட புத்திசாலியானாள். அப்போது அவள் தன் தவறை உணரலானாள். ஆனால் பழக்கதோஷம் அவளை விட மறுத்தது.

என் நான்கு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். விடுமுறையில் அவர்கள் சீட்டாடும் போது எனக்கு என் குழந்தைப் பருவம் நினைவிற்கு வரும். நான்கு குழந்தைகளுக்குப் பிறகு எந்நிலையிலும் ஐந்தாவது குழந்தை பெற நான் விரும்பவில்லை.

இவ்விஷயத்தில் எனக்கும் என் கணவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுவிட்டது. நான் எங்கள் நால்வரில் ஒருத்தியாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைத்ததுண்டு. நான்குதான் முழுமையானது. ஐந்தாவது உதிரி. எனவே தான் ஐந்தாவதாக ஒன்றைப் பெற்று அதை உதிரியாக்க விரும்பவில்லை. அந்த உதிரி முதல் நால்வர்க்கும் சேவை செய்யவும், தேவைப்படும் போது காலி இடத்தை விட்டு நிரப்பவும் வேண்டியிருக்கும்.

அடுத்த மூன்று குழந்தைகளும் முதலாமவளைப் போல பட்பட்டென்று “”உனக்கு எதுவுமே தெரியாது” என்றோ, “”உனக்கு எதுவுமே வராது” என்றோ பேசுவதில்லை என்றாலும், சற்றே மென்மையாக, “”அம்மா! உனக்கும் எங்களுக்குமிடையே “ஜெனரேஷன் கேப்’ இருக்கிறது என்பது உனக்குத் தெரியவில்லையா?” என்பார்கள். இந்த “கேப்’ சிறிதாக இருந்து பெரிய அகழியாக மாறிப்போயிற்று. இவ்வளவுதானா? என் குழந்தைகளின் குழந்தைகள் தம் இருவழிப் பாட்டிகளையும் விடத் தம்மை அறிவாளிகளாகக் கருதலாயினர். அவர்களுடைய “ஃப்ரெண்ட்ஸ்” (நண்பர்களல்ல) வரும் போது, நான் அவர்கள் கண்ணில் பட்டுவிட்டால், அவர்களுடைய மகிழ்ச்சி மொத்தமாகப் பாழாகிவிட்டது போலத் தம் நண்பர்களிடம், “”அது வேறு யாருமில்லை, எங்கள் “க்ராண்ட் மா’ தான். நீ சொல்ல வந்ததைச் சொல்லு. அதற்கு ஒன்றும் தெரியாது” என்பார்கள்.
என் உடலை விட்டு விலகி அந்த அறை மற்றும் பிற அறைகளையும் சுற்றி வந்து குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் பாதிப்பையும் செயல்களையும் கவனித்தேன். இரண்டு மருமகள்களும் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்கள். இரண்டு மகள்களும் அண்ணிகளைத் தேற்றிக் கொண்டே, அதைவிட பலமாகத் தாமும் அழுது கொண்டிருந்தார்கள்.
“”அம்மா பெருங்குரலெடுத்தோ, கசப்பான வார்த்தைகள் பேசியோ கேட்டதே இல்லை” என்றாள் மூத்த மகள்.
இதைக் கேட்ட என் மகிழ்ச்சி சிறிது நேரம் நிலைப்பதற்கு முன், இளையவளின் சொற்கள் அதே உணர்வில் எனனைத் திளைக்கச் செய்தன.

“”அம்மாவுக்குக் கோபப்படவோ, அதட்டிப் பேசவோ தெரியவே தெரியாது.”

குழந்தைகளும் மிக வருத்தத்துடன் அழுது கொண்டிருந்தார்கள். இந்தக் குழந்தைகளோடு வாதிட்டு நான் ஒரே ஒரு முறைதான் வெற்றி பெற்றிருந்தேன்.

நான் என் கைகளால் ரோஜா, மல்லி செண்டு மல்லி போன்ற செடிகளை நட்டிருந்தேன். தினமும் அவற்றுக்கு நீரூற்றி கவனிக்கும் சாக்கில் அவற்றோடு மனம் விட்டுப் பேசுவது வழக்கம். இதைக் காணும் என் பேரன், பேத்திகள், சொல்வார்கள்….

“”பாட்டி! இதென்ன செடிகள் நட்டிருக்கிறாய்? தினமும் தண்ணீர் ஊற்றி இவற்றை கவனித்தாக வேண்டும். இப்போதெல்லாம், குரோடன்ஸ் காக்டஸ் போன்றவற்றை வளர்ப்பதுதான் ட்ரெண்ட்” இது ஒருவனின் பேச்சு.
இதற்கு மற்றவன், “”பாட்டி பழங்காலத்து மனுஷியல்லவா? இதனால் பாட்டிக்குப் பழங்காலச் செடிகள்தான் பிடிக்கும். புதியனவற்றை ஏற்கவோ, கற்றுக் கொள்ளவோ விரும்பவே மாட்டாள்” என்றான் மற்றவன்.

நானும் அன்று பேசாமல் இருக்கவில்லை. “”ரோஜா, மல்லி இதெல்லாம் என்று பழமை ஆயின? அல்லது ஆகும்? இவற்றின் வாசனையைத் தோற்கச் செய்யும் செடியோ, பூவோ எங்கேனும் உண்டா?” என்று கேட்டே விட்டேன்.
“”பாட்டி! பூக்கள் இல்லை என்றால் என்ன? எத்தனை வகை பர்ஃப்யூம்கள் இருக்கின்றன தெரியுமா? ஒருவர் போட்டுக் கொண்டாலே போதும், வீடு முழுவதும் மணக்கும்? மல்லிகை, முல்லை இதெல்லாம் என்ன பெயர்கள்? வீட்டு வேலைக்காரியின் பெயர் போல?” என்றான் ஒருவன்.
“”ரோஜாவை மட்டும் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் அவை முன்பு போல் வெறும் நான்கு நிறங்களில் மட்டும் இல்லை. நூற்றுக்கணக்கான வகை ரோஜாக்கள் உண்டு என்பது உனக்குத் தெரியுமா பாட்டி?” என்றாள் ஒரு பேத்தி.

“”குல்தாவூத் என்ற பூவின் பெயரையாவது கேள்விப்பட்டிருக்கிறாயா? அடிக்கடி மலர்க் கண்காட்சிகள் நடக்கின்றனவே தெரியுமா?” என்று கேட்டாள் ஒரு பேத்தி.

“”நம் நாட்டு செவ்வந்தியைத் தான் அவர்கள் “குல்தாவூத்’ என்று சொல்கிறார்கள். சொன்னால் அவர்கள் ஒத்துக் கொண்டால்தானே?

அவர்களின் அம்மாக்கள் என் கருத்தை ஆதரித்து விளக்கிய போதுதான் அவர்களுடைய உளறல் நின்றது. ஆனால் சில நாட்களிலேயே அவர்கள் நட்ட செடிகள் என்னைக் கிண்டல் செய்யலாயின.

தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவத் தொடங்கியது. தினமும் என் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற முடியாது போயிற்று. என் செடிகள் வாடத் தொடங்கின.

ஆனால் அவர்களின் குரோட்டன்ஸ், காக்டஸ்ஸுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போது குழந்தைகளும்  அவற்றின் செடிகளும் கூட என்னைக் கேலி செய்வது போல உணர்ந்தேன்.

ஆனால் இப்போது என் பேரக் குழந்தைகள் அழுதழுது முகம் வாடி இருக்கக் கண்ட போது, அவர்கள் பால் இருந்த என் மன அழுக்குகள் கரைந்து போயின.

பிறகும் ஒரு அசட்டுத் தனமான முயற்சியில் இறங்கினேன்.

ஆண்கள் கூட்டத்தின் நடுவே என் உடல் எரியூட்டப்படுவதைக் காணச் சென்றேன்.

மகன்கள், மாப்பிள்ளைகள் பேசிக் கொண்டதைக் கேட்டு, இதுதான் ஒருவரைப் புகழ்ந்து பேசும் முறையோ என்று தோன்றியது.

மாப்பிள்ளைகள் என் மகன்களிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்  “”அம்மாவுக்கு ஏதேனும் விசேஷமான ஆசைகளோ அல்லது ஏதேனும் செய்யச் சொல்லியிருந்தாலோ சொல்லுங்கள்.”

“”அம்மாவிடம் விருப்பு  வெறுப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை. அவளுக்கு நாங்கள் எப்படியோ, நீங்களும் அப்படியேதான். வாழைப் பழம் எப்படியோ, மாம்பழமும் அப்படியேதான். அம்மாவுக்கு விருப்பு  வெறுப்பு என்று எதுவுமே தெரியாது.”
இது மகன்களின் பதில்.

உடலை விட்டுப் பிரியும் ஆத்மா, பத்துப் பதிமூன்று நாட்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வரும் என்று சொல்கிறார்கள்.
ஒரு வேளை இதனால்தானோ என்னவோ, துக்கம் விசாரிக்க வருவோர் எல்லோருமே இறந்தவரின் நிறைகளையே பேசிப் புகழ்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். வாய் தவறிக் கூடக் குறைகளைப் பேசுவதில்லை போலும்.

ஒரு வேளை, “”ஒன்றும் தெரியாது” போன்றவை என்னைப் புகழ்ந்து பேசப் பட்டவையோ? இத்தனை நாட்களும் என் அறியாமை காரணமாக அவர்கள் கூறியவற்றைத் தவறாகப் புரிந்து கொண்டேனோ?

எது எப்படியோ, இப்போது நான் புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ……
எல்லாவற்றிற்கும் அப்பால் வெகு தொலைவு சென்றுவிட்டேன்!

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Nov 2015 - 20:03

பள்ளியில் நடந்த பாடம்…
--------------------
வகுப்பறை ஓரத்தில் ஓர் உயரமான பையன் நின்றிருந்தான். அவனது கவனம் படிப்பு பக்கம் இல்லை. இதைக் கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து கேள்விகள் கேட்டார்.

“”பானிபட்டு போர் எப்போது நடந்தது?”

“”தெரியாது சார்”

“”போரஸ் பத்தி சொல்லு”

“”எனக்குத் தெரியாது”

“”சரி, குப்தர்களில் முதல் மன்னன் யார்?”

“”தெரியாது”

“”எல்லாக் கேள்விக்கும் தெரியாது.. தெரியாதுங்கிறியே… போன வாரம்தானே பாடம் நடத்தினேன்.. அப்ப நீ எங்கே போயிருந்தே?”

“”டூர் போயிருந்தேன்”

“”வெட்கமா இல்லை உனக்கு? ஒரு கேள்விக்குக் கூட பதில் தெரியலை… டூர் போனேன்னு சொல்றியே?”

“”இந்தக் கேள்வியெல்லாம் என்கிட்ட ஏன் சார் கேக்குறீங்க? நான் இங்கிருக்கிற கரண்ட் மீட்டர் சரியா இருக்கான்னு செக் பண்ண வந்திருக்கேன்”

உம்முஹாலா, வாணியம்பாடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Nov 2015 - 20:06

நந்தகுமாரின் வீட்டுக்காரர்
-------------
நந்தகுமாரின் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் கிளம்புவதற்காக ராமமூர்த்தி காத்திருந்தார். அவர் மிக கோபமாக இருந்தார். இரண்டு நாளாய் அடக்கி வைத்திருந்த கோபம். ஒரு சின்ன வயதுக்காரன்  அவரது ஈகோவை கிளறிவிட்ட கோபம். இதுதவிர அலுவலக பிரச்சனை வேறு அவரை அழுத்திக் கொண்டிருந்தது. அவருக்கு மதுரைக்கு வேலை மாற்றலாகி இருந்தது. அங்கே போய் வீடு பார்க்க வேண்டும். குடும்பத்தோடு குடிபோக வேண்டும். அவருக்கு நிறைய வேலைகள் இருந்தன. அதற்குள் நந்தகுமார் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென உறுதியாய் நினைத்துக் கொண்டார்.

“”அவங்க வீட்டுல எல்லாரும் போயிட்டாங்களா?” என்று தன் மனைவியிடம் நான்காவது முறையாகக் கேட்டார். அவளுக்கும் கோபம் இருந்தது.  சலிக்காமல் அவளும்,  “”அதுக்குதானே நானும் காத்திட்டிருக்கேன்..” என்றாள் நான்காவது முறையாக.

பக்கத்து அறையில் அவரது பசங்கள் விக்ரமும் ரம்யாவும் இருந்தார்கள். கல்லூரி வரை வந்துவிட்ட பசங்கள். அவர்கள் அப்பா அம்மாவை பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றும் நடந்து விடக்கூடாது என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். காரணம் அவர்கள் இருவருக்கும் நந்தகுமாரை ரொம்பவும் பிடிக்கும்.

அவர்கள் இருவருக்கும் பிடித்த நந்தகுமாருக்கு இருபத்தாறு வயது ஆகிறது. அசோக் நகரில்  ஒரு மெடிக்கல் எக்யூப்மெண்ட் கம்பெனியில் சர்வீஸ் எஞ்ஜினியராக வேலையில் இருக்கிறான். அதுதவிர அவனுக்கு இருக்கிற இலக்கிய பரிச்சயம். அவன் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் அவனுக்கே படிக்க வேண்டியது நிறைய இருந்தது. ராமமூர்த்தியின் பையனுக்கு படிக்க இரண்டு புத்தகங்கள் தந்திருக்கிறான். நந்தகுமாருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள்தான் ஆகின்றன.  அவனது குறும்புகள். சின்ன சின்ன நகைச்சுவைகள். எல்லாம் புரிந்து கொள்ளும்விதமாய் அமைந்த மனைவி. அவர்கள் இந்த வீட்டிற்கு குடிவந்து வெற்றிகரமாய் நான்கு மாதங்கள் ஆகின்றன. கொஞ்சம் நேரம் பேசினாலும் எல்லாருக்கும் ஒட்டிக் கொள்ளும் நந்தகுமாரின் உற்சாகம். வயது பார்க்காமல் பழகும் அவனது குணம்.  அனைத்தும் காம்பௌண்டில் அனைவரையும்  ஈர்த்திருந்தது.

“”என்ன சொல்லி குடிவந்தான்.. என்ன பண்றான் பார்த்தயா.. நீதான பார்க்க நல்ல பையன்  மாதிரி இருக்கான் வாடகைக்கு விடலாம்னு சொன்னே.. என்ன ஆச்சு பார்த்தயா..?” என்று குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி பேசிக் கொண்டிருந்த ராமமூர்த்திக்கு வயது ஐம்பத்திரண்டு.  சென்னை தி.நகரில் அவருக்கென சொந்தமாய் வீடுகள் இருந்தன. கீழ்த்தளத்தில் மூன்று வீடுகளும், முதல் தளத்தில் மூன்று வீடுகளும் இருந்தன. ஒன்றில் அவர் குடும்பமும் ஐந்தில் குடித்தனக்காரர்களும் இருந்தார்கள். அதன்  வாடகையே முப்பதாயிரத்துக்கும் மேல் வருகிறது. அடுத்த தெருவில் இன்னொரு வீடும் கட்டிக் கொண்டிருக்கிறார். அதுதவிர, பொழுது போக அவர் ஒரு வங்கியில் கேசியராகவும் இருக்கிறார்.

ராமமூர்த்தியின் வீடு இருக்கும் இந்த இடம் ஒரு காலத்தில் மக்கள் உள்ளே வர பயப்படுகிற அடர்ந்த காடாய் இருந்ததாம். பக்கத்திலேயே சுடுகாடு வேறு. ராமமூர்த்தி பயப்படவில்லை. கிடைத்த இந்த பொறம்போக்கு இடத்தில் வீட்டைக் கட்டிக் கொண்டார். பேயெல்லாம் வருமே என்று அவரது மனைவி கொஞ்சம் பயந்த போது, “”நான் ரொம்ப வருசமா அதோடதான் வாழ்றேன்” என்றாராம்.

மேலும் அருகில் வேகமாய் வளர்ந்த வீடுகள். ராமமூர்த்தி தெளிவாய் பணத்தைத் தள்ளி இருந்த இடத்திற்கு பட்டா வாங்கிக் கொண்டார். ஓட்டு வீட்டை காங்ரீட் வீடாக மாற்றி மேலும் மாடிகளாய் வளர்த்திக் கொண்டார். பிறகு மிக வேகமான நகர வளர்ச்சியில் ராமமூர்த்தியின் காட்டில் பேய் மழை அடித்தது.  அது அவரை இந்த பத்து வருடத்திற்குள் அவரே எதிர்பார்க்காத பணக்காரனாக்கியிருந்தது. பேச்சின் தொனியும், பார்வைகளும் மாறிப் போயின. அவர் அந்த வீடுகளின் ராஜா மாதிரி உலா வந்தார். அவருக்கென தனியாய் சட்டதிட்டங்கள் வகுத்துக் கொண்டார்.  அந்த சட்டத்தில் ஒன்றை நந்தகுமார் மீறியதன் விளைவுதான் இன்று நடக்கப் போகிற பஞ்சாயத்து.

நந்தகுமார் விருந்தாளிகளை சென்ட்ரலில் ரயிலேற்றி விட்டு திரும்பி வந்தான். ராமமூர்த்தி அவனை வாசலிலேயே நிறுத்தினார். அவரது கோபம்  குறையாமல் அப்படியே இருந்தது. குரல் எடுத்தவுடன் உச்சத்தை தொட்டது. நந்தகுமார் மிக நிதானமாக இருந்தான். முன்பே எதிர்பார்த்தமாதிரி பதட்டமில்லாமல் அவரைப் பார்த்தான். அதுவே அவரை இன்னும் எரிச்சலூட்டியது.

“”நான் என்ன சொல்லி உனக்கு வாடகைக்கு வீடு விட்டேன். இப்ப என்ன பண்ணிட்டு இருக்கே..?” என்று ஆரம்பித்தார்.

“”என்ன சார் இது.. வந்தவங்கள வழியனுப்பிட்டு வர்றது தப்பா..?” என்றான் அவன்.

நந்தகுமார் ஆரம்பிச்சுட்டான் என்கிறமாதிரி பசங்கள் ஒரு ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தன. ராமமூர்த்தியின் கோபம் மேலும் ஒரு படி ஏறியது. அதை உணர்ந்த விதமாய் சுமதி பேச்சை தொடங்கினாள்.

“”ஏம்ப்பா இங்க குடி வரும்போது நாங்க சொன்ன கண்டிஷன்ஸ மறந்துட்டயா? விருந்தாளிகள் ரொம்ப பேரு வரக்கூடாதுன்னு சொன்னது ஞாபகமில்ல..” என்றாள்.

“”ஆமாங்க எல்லாம் ஞாபகமிருக்கு.. விருந்தாளிகளே வரக்கூடாதுன்னு நீங்க சொல்லல.. இவ்வளவு பேர்தான் வரணும்னு ஒரு லிமிட்டும் சொல்லல.. அப்படியே வந்துட்டாலும் பாதி பேர ரோட்டிலேயே நிறுத்தி வைக்க முடியுமா? சொல்லுங்க.. சரிங்க.. அவங்க வந்ததில என்ன தப்பு இருக்கு.. எங்க வீட்டுக்கு வர்ற விருந்தாளிக உங்க வீட்டில வந்து சாப்பிட்டாதாங்க தப்பு..”

ராமமூர்த்தியின் வாரிசுகள் இரண்டும் உள்ளே சிரிக்க ஆரம்பித்திருந்தார்கள். காம்பௌண்டில் இருந்த மீதி குடித்தனக்காரர்கள் எட்டி பார்த்தார்கள்.  சத்தம் கேட்டு நந்தகுமாரின் மனைவி ஆனந்தி வேகமாய் வந்தாள்.

“”எதுவும் பேசாதீங்க” என்று அவனை மெல்ல இழுத்தாள்.

“”நான் பேசல ஆனந்தி.. அவர்தான் என்னை பேசறதுக்கு நிறுத்தியிருக்காரு.. நீ போ நான் பேசிட்டு வர்றேன்..”

“”இந்த ஏரியாவில தண்ணி பிரச்சனை.. நிறைய பேரு வந்தா குடியிருக்கற எல்லாத்துக்கும் பிரச்சனை வரும்னு சொல்லல..” ராமமூர்த்தி மீண்டும் ஆரம்பித்தார்.

“”சொன்னீங்க நான் இல்லைன்னு சொல்லல.. அதுக்காக ஊரிலிருந்து வர்றவங்கள மூணு நாளுக்கு சேர்த்து அங்கயே குளிச்சிட்டு வாங்கன்னு சொல்ல முடியுமா.. என்ன பேசறீங்க சார்?..”

“”என்ன நக்கலா..?”

“”இல்ல சார் யதார்த்தம்..”

“”என்ன யதார்த்தம்.. ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேல வந்து காம்பௌண்ட் சுவரத் தாண்டறதுதான் உன்னோட யதார்த்தமா..”

“”பத்து மணிக்கே காம்பௌண்டுக்கு பூட்டு போடறது உங்க தப்பு சார்..”

“”அதுக்கு நீ பனிரெண்டு மணிக்கு வருவியா..?”

“”இதுக்காக என் பொண்டாட்டியே வருத்தப்படல.. கேள்வி கேட்கல.. நீங்க ஏன் சார் பீல் பண்றீங்க..”

ஆனந்தி குபீரெனச் சிரித்தாள். ராமமூர்த்தியின் மனைவிக்கும் சிரிப்பு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். அவருக்குதான் முகம் மேலும் சிவந்து போனது. அவரிடம் இவ்வளவு நக்கலாய் யாரும் பேசினதில்லை.

“”என்ன பேசறான் பாரு.. நந்தகுமார் பீ சீரியஸ்..”  அவருக்கு வார்த்தைகள் தடுமாறியது.

நந்தகுமாருக்கு இப்போது லேசாய் கோபம் வந்தது. அவர் சொன்னதைவிட சீரியஸôனான்.

“”சார்.. கொஞ்சம் மரியாதையா பேசுங்க.. நீங்க உங்க மனைவிக்கு மட்டுந்தான் வீட்டுக்காரர். இந்த காம்பௌண்டில இருக்கிற எல்லாத்துக்குமில்ல.. எங்க சுதந்திரத்தில தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? வாடகை தர்றது உங்களுக்கு அடிமையா இருக்கறதுக்கல்ல.. சுதந்திரமா இருக்கிறதுக்கு பேருதான் வீடு. அன்னைக்கு பனிரெண்டு மணிக்கு வந்தேன். இல்லைன்னு சொல்லல.. அன்னைக்கு என் பிரண்டுக்கு ராத்திரி பத்து மணிக்கு மேல ஆப்ரேசன். அதெல்லாம் முடிஞ்சு சாப்பிடாம அழுதுட்டே இருந்த அவங்கம்மாவுக்கு டிபன் வாங்கி சாப்பிட வச்சுட்டு ஆறுதலா கொஞ்ச நேரம் பேசிட்டு வர்றதுக்கு அவ்வளவு நேரம் ஆயிடுச்சு..  அன்னைக்கு அப்படி சொல்லி குடிவந்துட்டு இன்னைக்கு இப்படி பேசறானேன்னு நீங்க கேட்கறது நியாயம்தான்.. என்னை பொறுத்தவரைக்கும் என் மனசுக்குள்ள நான் எந்த மாநாடோ, தீர்மானமோ வைச்சுக்கறதில்ல.. நான் இந்த நிமிசத்தில வாழ்றவன் சார்.. இந்த நொடி என்ன சொல்லுதோ.. என்ன நடக்குதோ அதுதான் என் வாழ்க்கை..”

“”என்ன தத்துவமா..”

“”இல்ல சார் என்னோட நியாயம்.. அடுத்தவங்க நியாயத்த புரிஞ்சுகிட்டாதான் பிரச்சனையே வராதே..”

“”என் பிரச்சனையை மட்டும் நீ புரிஞ்சுகிட்டயா..”

“”என்ன சார் புரிஞ்சுக்கணும்.. உங்க வீட்டுக்கு விருந்தாளிகள் யாரும் வர்றதேயில்லையா? உங்க வீட்டில யாரும் ஒரு பக்கெட் தண்ணிக்கு மேல குளிக்கறதேயில்லயா? வெளியில போனா.. வாழ்க்கையில ஒருநாள்கூட உங்களுக்கு லேட்டானதே இல்லயா.. என்ன சார் புரிச்சுக்கணும். கரண்ட்டுக்கு கவர்மெண்ட் வச்சிருக்கறது ஒரு ரேட்.. நீங்க வசூல் பண்றது ஒரு ரேட்.. மெயின்டனன்ஸ் சார்ஜுன்னு வாங்கறீங்க. கிணத்துத் தண்ணியில புழு விழுந்தா நானே காசு போட்டுதான் பிளீச்சிங் பவுடர் வாங்கிப் போடறேன்.. என் வண்டிய நிறுத்த காம்பௌண்ட்டுக்குள்ள  இடமிருக்கான்னு பாருங்க சந்து விடாம வீடு கட்டியிருக்கீங்க.. வண்டி வெய்யில்ல மழையில காஞ்சுட்டு நிக்குது.. தினம் நான் காலையில எழுந்ததும் வண்டி இருக்குதா இல்ல.. யாராவது எடுத்துட்டு போயிட்டாங்களான்னு பதட்டதோடவே பார்த்துட்டிருக்கேன்.. என்ன சார் உங்க நியாயம்..?”

நந்தகுமார் பேசி முடித்தான். சுமதி வாயடைத்து நின்றிருந்தாள். ராமமூர்த்திக்கு வியர்த்துப் போய் பதட்டம் கூடியிருந்தது.

“”எனக்கு உன்னோட விளக்கமெல்லாம் தேவையில்ல..” என்றார் வேகமாய்.

நந்தகுமார் மறுபடியும் நிதானத்துக்கு வந்திருந்தான். மீண்டும் அமைதியாய் பேசத் தயாரானான்.

“”சார் உங்ககிட்ட பதிலில்லைன்னு சொல்லுங்க..” என்றான்

“”உங்கிட்ட பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லைன்னு சொல்றேன்.. இங்க நான் வச்சதுதான் சட்டம்..”

சட்டம்.. கேட்டதும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. பிறகு சொன்னான்.

“”போதும் சார்.. நிறுத்திடுங்க.. ரொம்ப ஆடாதீங்க.. இந்த பூமி சின்னதா ஆடுச்சுன்னா.. எல்லாத்தோட ஆட்டமும் அடங்கிபோயிடும்.. ”

“”நீ ரொம்ப ஓவரா பேசற.. நீ இங்க இருக்க வேண்டிய அவசியமில்ல.. வீட்டை காலி பண்ணிட்டு போகலாம்..” என்று அவர் கத்திச் சொன்ன போது அனைவரும் அமைதியானார்கள். விக்ரமும் ரம்யாவும் அதிர்ச்சியோடு பார்த்தார்கள். அவர்களுக்கு அழுகை வந்தது. நந்தகுமார் அதே அமைதியோடு ராமமூர்த்தியை பார்த்தான்.

“”உங்களால இதுக்கு மேல என்ன சார் சொல்ல முடியும்? இதை எதிர்பார்த்துதான் சார் நான் இவ்வளவும் பேசினேன். உங்களுக்கு இந்த வீடுதான் உலகம். எனக்கு இந்த உலகமே வீடுதான் சார்.. நான் காலி பண்ணிக்கறேன்..” என்றபோது ஆனந்தி அவனது கையை அழுத்திப் பிடித்தாள்.

“”மூணு மாசம் டைம் தர்றேன்.. அதுக்குள்ள வீட்டை காலி பண்ணிடுங்க..” என்று சொல்லிவிட்டு நடந்தவர், நந்தகுமார் ஏதோ சொல்வது கேட்டு மீண்டும் நின்றார்.

“”மூணு மாசம்.. கணக்கென்ன சார் கணக்கு.. வீடு கிடச்சா போயிட்டேயிருக்கேன்..  எனக்கு எந்த வருத்தமும் இல்ல சார். சில முடிவுகள அந்தந்த சூழ்நிலைதான் தீர்மானிக்குது. இந்த சூழ்நிலை இதச் சொல்லுது அத கேட்டுட்டு போயிட்டே இருப்பேன் சார்..

“”புரியல..”

“”என்னைக்காவது புரிஞ்சுக்குவீங்க..”

“”எனக்கு புரியவேண்டாம்.. நீ கிளம்பலாம்..” என்று நடக்க } நந்தகுமார் மீண்டும் நிறுத்தினான்.

“”சார்.. எனக்கு ஒரேவொரு ஆசை மட்டும் இருக்கு..”

“”ம்.. சொல்லு..”

“”அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா.. நான் ஒரு வீட்டோட ஓனராகணும்..  அந்த வீட்டுக்கு நீங்க வாடகைக்கு குடி வரணும் சார்.”

“”வந்தா..?”

“”நிச்சயமா உங்கள மாதிரி ஒரு மோசமான வீட்டுக்காரனா இருக்கமாட்டேன்..சார்..” என்றபடி நந்தகுமார் நடக்க அவன் போவதையே ராமமூர்த்தி அதே கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

ராமமூர்த்தி பிரச்சனைகளின் தாக்கம் அப்படியே பின்தொடர மதுரைக்கு வந்தார். பரபரப்பான மதுரை. வெறுப்பாகவே காலை வைத்தார்.  நிறைய மாற்றல்கள் அவருக்கு வந்திருக்கிறது. அதை எப்படியோ சமாளித்து சென்னையில் மற்றும் வந்து போகிற தொலைதூர ஊர்களிலேயே காலம் தள்ளிவிட்டார். இந்தமுறை அது நடக்கவில்லை. மதுரையில் அவரது மாமா வீட்டில் தங்கினார். அப்படியே வீடு பார்த்தார். சென்னையில் அத்தனை வீடுகள் வைத்துக் கொண்டு இங்கே  வீடு தேடுவது அவருக்கு எரிச்சலாய் இருந்தது. அவரது மாமா பையன் காட்டின ஒன்றிரண்டு வீடுகள் அவருக்கு திருப்தியாய் இல்லை. புரோக்கர் வைத்துக் கொண்டார். அவரது அலுவலகம் பக்கத்தில் அவன்  வீடுகள் காட்டினான். அதில் ஒன்று ராமமூர்த்திக்கு பிடித்திருக்க அவர் சந்தோசமானார்.  அந்த வீட்டின் ஓனரை சந்தித்தார். வாடகை விஷயங்கள் பேசி முடித்தார். பிறகு அந்த வீட்டுக்காரர் சொன்னார்.

“”உங்கள பார்த்தா நல்ல குடும்பமா தெரியுது.. ஆனா எங்க வீட்டுக்குன்னு சில கண்டிஷன்ஸ் இருக்கு.. அதுக்கு ஒத்து வந்தா அட்வான்ஸ் கொடுங்க.. ஓகே.. டெய்லி ஒரு மணி நேரந்தான் மோட்டார் போடுவோம். பத்து மணிக்கு மேல காம்பௌண்ட் கேட்டை பூட்டிருவோம்.. விருந்தாளி நிறைய வந்தா வீட்டை அன்னைக்கே காலி பண்ணிடனும்..” என்று அவர் சொல்லிக் கொண்டு போக ராமமூர்த்திக்கு தலை சுற்றியது. அவர் உடனே பதில் எதுவும் சொல்லவில்லை. அப்புறம் வந்து பேசறேன் என்றார். வெளியே வந்து யோசித்தபடி நடக்க ஆரம்பித்தார். மாலையின் இதமான காற்று அவர் முகத்தில் அடித்தது. கொஞ்சம் ஆசுவாசமான போது ராமமூர்த்திக்கு  போன் பண்ணி நந்தகுமாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தோன்றியது.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Nov 2015 - 20:07

வெண் மழை
--------------
கதைகதைகள்வெண்மழை

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை

“”டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்… நடந்து போங்க…”, ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார்.

சாலினி அதிர்ச்சி அடைந்தாள். “நடக்கவா… எவ்வளவு தொலைவிற்கு…?’

ஆறு கி.மீ. இறங்கினால், மார்ஹி என்றொரு ஊர் வரும். அங்கு வேன்கள் இருக்கும். அதில் உங்கள் லாட்ஜ்க்கு செல்லலாம்..

சாலினிக்கு விச்சுவின் மீது கோபம் கோபமாய் வந்தது. அவன்தான் மணாலி சுற்றுலாவை குளிர்காலத்தில் செல்ல பிடிவாதம் பிடித்தான். குளிர்காலத்தில்தான்

உச்சகட்ட குளிரை அனுபவிக்கலாமாம். மேலும் பனிப் பொழிவு வாய்ப்பும் உண்டு என்று ஆலாய்ப் பறந்தான். வச்சுவும், அப்பாவும் விச்சுவுக்கு சப்போர்ட் பண்ண சாலினி பாடல்லவா இப்போது திண்டாட்டமாகி விட்டது. அவளுக்கு நம்மூர் இருபது டிகிரி குளிரே ஒத்து வராது. காலை மணாலியில் இறங்கும் போதே அக்கூ வெதர் மைனஸ் இரண்டு என்றது. இப்போது, இந்த லே சாலை மலை மீது பதினைந்து கி.மீ. வந்துள்ளார்கள். இங்கு நிச்சயம் மைனஸ் பத்து இருக்கும்.

அவர்கள் சுற்றுலாவின் பிரதான அம்சமே குலாபாவின் பனிப்பரப்பு ஆட்டம், பனிச்சறுக்கு விளையாட்டு, ரோப் கார் பயணம், முடிந்தால் சார்பிங்…  இவ்விடத்திற்குரிய பிரத்யேக குளிர் தடுப்பு உடைகள், சறுக்கு காலணி, கைடு என்று மொத்த பேக்கேஜாகப் பேசியிருந்தார்கள். என்னதான் நான்கைந்து தடுப்பு உடை போட்டிருந்தாலும், குளிர் அதனையும் ஊடுருவி, முதுகுத் தண்டைப் பிடித்து, சாலினியின் மூளையை உறைய வைத்தது. முகத்தை மறைக்க தடுப்பு எதுவும் கிடையாதா… அது மட்டும் என்ன பாவம் செய்தது?

விச்சுவோ அவன் அம்மாவிற்கு நேரெதிர். குளிர் அவனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

சாலினிக்கு விச்சுவின் மீது ஆரம்பத்தில் கோபமிருந்தாலும், குலாபா அவள் எண்ணத்தை மாற்றி விட்டது.

ஆம்… குலாபா… ரோடங் கணவாய் பனிப் பரப்பு இங்கிருந்தே ஆரம்பித்து விட்டது. முதன்முதலில் பனியின் மீது காலடி வைத்ததும் அவளுக்குள் எழுந்த சிலிர்ப்பு… ஆஹா எங்கெங்கு காணினும் வெண்மையடா… என்று உரக்க கத்திக் கொண்டு வயசை மீறி குதியாட்டம் போட ஆசை விழைந்தது. பார்க்கப் பார்க்க திகட்டாத காட்சி… நீண்ட நேரம் அதன் அழகில் மயங்கி இருந்தாள். அவ்விடம் முழுவதும் தேனிலவு தம்பதிகளே அதிகம் இருந்தனர். இவர்களைப் போல குடும்பத்தோடு வந்தவர்கள் வெகு சிலரே. அதிலும் தமிழ் கேட்பதே அபூர்வம்.

குழந்தைகள் என்ன செய்கின்றனர்? விச்சு, வச்சுவை தேடினாள். இருவரும் சறுக்கு காலணி மாட்டிக் கொண்டு ஸ்கீ கற்றுக் கொள்ள தயாராயினர். கைடு கரண் சொல்லிக் கொடுத்தார்.

“”முட்டியை மடக்கி, உடலை நன்றாக முன்னால் கொண்டு வந்து, ஸ்டிக்கை மாற்றி மாற்றி சப்போர்ட்டாக வைத்துக் கொண்டே சறுக்குங்கள்”

குழந்தைகள் உற்சாகமாக சறுக்கினர். “ஹூடிபாபா… ஹூடிபாபா..’ என்று கரண் உற்சாகப்படுத்தியது வேடிக்கையாக இருந்தது. “”காலை அகட்டி வைக்காதே.. விழுந்து விடுவாய்”, சொல்லி முடிப்பதற்குள் விச்சு வழுக்கி விழுந்தான். அதற்காக சிறிதும் கவலைப்படாமல் மீண்டும் எழுந்தான். சறுக்கினான். ஆர்ப்பரித்தான். அம்மாவிற்கு காலணி மாட்டி விட வந்தான். “ஆளை விடு சாமி’ என்று சாலினி காத தூரம் ஓடிவிட்டாள்.

அப்போது, சிறுசிறு துளியாக, வெண்மழை விழ ஆரம்பித்தது.

story“”அம்மா… ஸ்நோ ஃபால்…”

அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்த பனிமழை வந்தேவிட்டது. அனைவரும் உற்சாகமாகி விட்டனர். பஞ்சு பஞ்சாகக் காற்றில் அது மிதந்து வரும் அழகே தனி. மழைத் தூறலில் நனைவதையே விரும்பும் சாலினி, பனித்தூறலை வேண்டாமென்றா சொல்வாள்? சில வினாடிகளில் உடை முழுவதும் வெண்மழை படர்ந்து, அவள் உடையை வெண்மையாக்கியது. ஓர் உதறு உதறியதும், அவையனைத்தும் தெறித்து மறைந்தும் விட்டன. மீண்டும் வெண் உடை, உதறுதல், மறைதல் சாலினிக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்து விட்டது

“”இப்ப தெரியுதாம்மா.. ஏன் நான் அடம் பிடித்தேன் என்று?” – விச்சு கேட்க, “”சரிடா.. உன் மீது எனக்கு கோபம் கிடையாது” என்றாள்.

அவன்மீது வந்த கோபமெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று சாலினிக்கு தோன்றியது. எதற்காகக் கோபப்பட வேண்டும்? இந்தியா, பலதரப்பட்ட மக்கள், பரப்புகள், வளங்கள் மிகுந்த நாடு என்று வேற்றுமையில் ஒற்றுமை என புத்தகத்தில் படித்திருந்தாலும், நேரில் அனுபவிக்கும் உணர்வே அலாதிதானே?

சிறிது சிறிதாகப் பனிப் பொழிவு அதிகரிக்க ஆரம்பித்தது.  ஆங்காங்கே விழுந்து கொண்டிருந்த வெண்மழை இப்போது தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருந்தது. ஆப்பிள் மரங்கள் அனைத்தும் வெண்ணிற குல்லா மாட்டிக் கொண்டன. சாலையில் நின்று கொண்டிருந்த டாக்ஸிகளின் கூரை மீது பனி, வீடு கட்ட ஆரம்பித்தது. குலாபாவின் சூழலும் மாற ஆரம்பித்தது. ஒவ்வொரு குழுவாக அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தனர். ஏன்? ஏன்? சாலினிக்கு புரியவில்லை. வெண்மழையை ரசித்து மகிழ வேண்டிய நேரத்தில், ஏன் இவ்வளவு அவசர அவசரமாகக் கிளம்புகிறார்கள்?

அவள் கணவர் கூறினார். பனிப் பொழிவு அதிகமாகி விட்டதாம். ஏற்கெனவே நாம் வந்த மலைப் பாதை மீது பனி படர ஆரம்பித்து விட்டது. விரைவில், அது மூன்றடி, நான்கடி உயரத்திற்கு மூடிவிடுமாம். அதன்மீது வாகனத்தை ஓட்டுவது கடினமாம். கைடு நம்மையும் சீக்கிரம் வரச் சொல்கிறார்.

குலாபாவை விட்டுப் பிரிய மனமில்லாமல், கடைசி நபராக அங்கிருந்து சென்றார்கள்.

இறங்கும்போதுதான் சாலினி கவனித்தாள். அவர்கள் ஏறி வந்த பாதை, இடது பக்க மலை, வலது பக்கச் சரிவு அனைத்துமே பனியால் மூடியிருந்தது. முன்னால் சென்ற வாகனங்கள் ஏற்படுத்திய தடத்திலேயே, பின் வாகனங்கள் சென்றன.

சில பழக்கமில்லாத வாகனங்கள், டிரைவர்களால், ஆங்காங்கே போக்குவரத்து தடைகள் ஏற்பட ஆரம்பித்தன. அவர்களின் சக்கரங்கள், நம்மூர் சேற்றில் சிக்கி சுழன்று கொண்டிருக்கும் சக்கரங்கள் போல, பனிப் புதைவிற்குள் சுழன்று கொண்டே நகர மறுத்தன. இரண்டு கி.மீ. கூட இறங்கியிருக்க மாட்டார்கள். டிராபிக் ஜாமில் அவர்களின் டாக்ஸியைச் சிறிது கூட நகர்த்த முடியவில்லை.

டாக்ஸியில் இருந்து இறங்கிய விச்சு, வச்சுவுக்கு பனி உருண்டை செய்ய சொல்லிக் கொடுத்தான். சாலினியின் டென்சன் அதிகரித்தது. இந்த நேரத்தில் விச்சுவால் எப்படி விளையாட முடிகிறது?

பனிப் பொழிவோ சிறிது கூட நிற்காமல், பாதையை மேலும் மேலும் மூடிக் கொண்டேயிருந்தது. வாகனத் தடங்களும் மூடப்பட்டு விட்டன. பெரிய டயர் உள்ள ஜீப் போன்ற வாகனங்களால் மட்டுமே இனி பாதை ஏற்படுத்த முடியும். இல்லையேல், பனி அகற்றும் வாகனம் வரவேண்டும். போக்குவரத்து இப்போதைக்கு சரியாகாது.

மணாலி போலீசாரின் கூற்றைக் கேட்டு வேறு வழியில்லாமல் மார்ஹிக்கு நடக்க ஆரம்பித்தனர்.

சாலினிக்கு தங்களின் நிலைமை “பளிச்’சென்று புரிந்தது. ஆறு கி.மீ. நடை.. இறக்கமான சரிவு பாதைதான் என்றாலும் பனியில் வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். மேலும், சுற்றுலா பயணிகள் அதிகம் என்பதால் மார்ஹியில் வேன்கள் கிடைப்பது என்ன நிச்சயம்? வெண்மழையின் அழகை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்த அவளுக்கு, அதன் மற்றொரு முகமான பிரச்சனைகள் எரிச்சலை உண்டு பண்ணியது. விச்சுவின் மீது வந்திருந்த கோபமும் அதிகரித்தது. இந்தக் கொடுமையான குளிரில் வரவைத்து கஷ்டப்படுத்தி விட்டானே…

கைடு துணைக்கு வருவது சற்று தெம்பாக இருந்தது. “”வேகமாக நடக்காதீர்கள்.. முன்னங்காலை நன்றாக அழுத்தி, பிறகு குதிகாலையும் அமுக்கி நிதானமாக ஒரே சீரான வேகத்தில் நடங்கள்” என்று எச்சரித்துக் கொண்டே வந்தார். வழக்கம்போல விச்சு அவர் பேச்சைக் கேட்காமல், அவன் ஷூவையே ஸ்கீயாக்கி, சறுக்கிக் கொண்டே வந்தான். கணவர் வச்சுவின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க, சாலினி தனியாக நடந்தாள்.

அப்போதுதான் ஆபத்பாந்தவன் போல வந்தன சில ஏடிவி வண்டிகள். இவை பனியின் மீது ஓட்டுவதற்கென்றே உரிய வண்டிகள். மணாலி லாட்ஜ்க்கே விட்டு விடுவதாய் கூவிக் கொண்டே வந்தனர். ஆர்வத்தோடு பலர் விசாரிக்க, வாடகையை கேட்டு, மலைத்து சிலர் நடையைக் கட்டினர். சாலினி கணவர் ஒரு நபரிடம் பேரம் பேசி அழைத்து வந்துவிட்டார்.

அது ஒரு மூன்று சக்கர ஏடிவி மோட்டார் சைக்கிள் போன்றே உருவத்தில், அதே நீளத்தில் இருந்தது. டயர்கள் அகலமாக, கனமாக இருந்தன. பின் சக்கரங்கள் ஆட்டோவின் பாதி அகலத்தில் இருக்க, அதன் மேலே அரை வட்டமாய், முக்கால் அடி அகலத்தில் மக்காடு இருந்தது. இதில் அவர்கள் நால்வர் எப்படி உட்கார்வது? கைடு வேறு இருக்கிறார்.

ஏடிவி டிரைவர் நானக், முதலில் பெட்ரோல் டாங்க்கை ஒட்டி அமர, அவர் பின்னால் விச்சுவும், வச்சுவும் அமர்ந்தனர். சீட் முடிந்தது. சாலினியும், கணவரும் மக்காடு மீது உட்கார்ந்து, பின்புற கம்பியை பிடித்துக் கொண்டனர். “நான் அம்பேல்’ என்று சாலினி பயந்து கொண்டே இருந்தாள். கரண் முன்சக்கர மக்காடு மீது உட்கார்ந்து கொண்டார்.

“”நம்மது அமெரிக்கா இறக்குமதி வண்டி… பத்து பேர் கூட இதில் உட்கார்ந்து போகலாம்…”, என்று நானக் தன் வண்டி புகழ் பாடிக் கொண்டே ஏடிவியை கிளப்பினார்.

விச்சு, ஏடிவி மீதிருந்த ஒரு வாசகத்தை சாலினிக்கு காண்பித்தான்.

“இது இரு நபர்கள் மட்டுமே செல்லக் கூடிய வண்டி. அதிகம் ஏற்றினால் ஆபத்து ஏற்படும்’ என்ற மணாலி போலீசாரின் எச்சரிக்கை ஸ்டிக்கர் அதில் ஒட்டியிருந்தது

“ஐயய்யோ… ரூமிற்கு போனதும் உனக்கு இருக்குதுடா விச்சு’

என்னவொரு பயணம்… எதிர்காற்று, பனிப் பொழிவு, அபரீத குளிர், இவற்றால் விரைத்து விட்டாள் சாலினி. கடலில் படகு மிதந்து செல்வது போல, இந்த பனியில் ஏடிவி மிதந்து சென்றது. வெண்மழை சாலினி முகத்தில் அடித்தது. முகத்தை மூடிய பனியை, அடிக்கடி துடைக்க வேண்டியதிருந்தது. உதடுகள் குளிரில் கனத்தன. இமைகளின் மீது விழுந்த பனிப் பஞ்சினால் அவளின் கண்களைத் திறக்க முடியவில்லை. இரண்டு கையுறைகள் கூட அவளுக்குப் போதவில்லை. ஆனால் நானக்கோ கையுறையே இல்லாமல் அநாயசமாக ஓட்டினார். பயணிகள் பயந்து விடக் கூடாது என்பதற்காக பாதை நடுவிலேயே பயணித்தார். ஆனாலும் சாலினி பயத்தில் கத்திக் கொண்டே வந்தாள். விச்சு உற்சாகத்தில் கத்தினான். கரண் ஹூடிபாபாவை விடவில்லை.

வழி முழுவதும், போர்க்கள பூமியாகக் காட்சியளித்தது. பனிப் புறாக்களும், வேறு சில பறவைகளும், மரக்கிளைகளுக்கிடையேயும், மலைகளின் இடுக்குகளுக்கிடையேயும் கட்டியிருந்த தத்தமது கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. மாடுகள், குதிரைகள், எல்லாம் பெரிது பெரிதாய், புஸý புஸýவென்று முடியோடு, மறைவிடம் தேடியலைந்தன. ஆங்காங்கே சிக்கியிருந்த கார்களை விடுவிக்க, சிலர் முயன்று கொண்டிருந்தனர். காருக்குள்ளே எப்போதும் வைத்திருக்கும் கருவிகளை உபயோகித்து, சக்கரங்களுக்குக் கீழே பள்ளம் தோண்டி, சக டிரைவர்கள் பின்னால் தள்ளி உதவ, காரை விடுவிக்கப் போராடினர்.

அதேசமயம், உள்ளூர்வாசிகளில் சிலரோ பனி உருண்டை செய்து, நண்பர்கள் மீதும், காதலிகள்  மீதும் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். குடை பிடித்து வருபவர்களைப் பார்த்தபோது, பனிக்கு கூட குடை பிடிப்பார்களோ என்றிருந்தது. நடந்து வரும் தேனிலவு ஜோடிகளோ, தங்கள் அலுப்பைப் பொருட்படுத்தாமல், பனியில் உற்சாக குளியல் மேற்கொண்டனர். முழு உருவமும், கூந்தலும் பனியால் மூடியிருப்பது, அவர்களை காதல் தேவதைகளாய் உருமாற்றின. மொத்தத்தில் இந்த பனிப் பொழிவு, இம்சையையும், உற்சாகத்தையும் ஒருங்கே கொண்டு வந்துள்ளது.

அரைமணி நேர ஏடிவி பயணத்திற்கு பிறகு, மார்ஹியை தாண்டி வந்த ராணுவ கேம்ப் கிராமத்தில் ஒரு வேன் அருகில் நிறுத்தினார் நானக்.

“”இங்கிருந்து வேன் ஏற்பாடு செய்கிறேன். அதில் லாட்ஜுக்கு போய் விடுங்கள்”

டிரைவர் அங்கு தகராறு பண்ணக் கூடாது.

“”என்னுடைய தம்பி சார்..” என்று கூறிவிட்டு தம்பியிடம் வாடகை பேரம் பேசிக் கொண்டிருந்தார் நானக்

அப்போது…. விச்சு கத்தினான்.

“”ஏய்ய்ய்….. அங்கே பாருங்கள்…”

அந்த பனிப் பாதையில் ஒரு சுற்றுலா டாக்ஸி, டிரைவர் கட்டுப்பாட்டை மீறி பாதையில் வழுக்கிக் கொண்டு, வலதுபுறமாய் பள்ளத்தை நோக்கி சறுக்கிக் கொண்டிருந்தது. அதன் டிரைவர் டாக்ஸியை தன் கட்டுக்குள் கொண்டு வர பிரம்மபிரயத்தனம் செய்தார். பிரேக் போட்டாலும், ஸ்டியரிங்கை திருப்பினாலும், அதன் சறுக்கல் மட்டும் நிற்கவில்லை.

காருக்குள்ளே இருந்த தேனிலவு ஜோடி.. கத்தினார்கள்…

“”வாங்க… காப்பாத்துவோம்”

விச்சு கத்திக் கொண்டே அந்த டாக்ஸியின் வலது பக்கம் சென்று தன் முழு சக்தியோடு டாக்ஸியை பாதைக்குள் தள்ள முயன்றான். விச்சு எட்டாவது படிக்கும் சின்னப் பையன். உன் எதிர்ப்பு எல்லாம் எனக்கு ஜுஜுபி என்பது போல அந்த டாக்ஸி அவனையும் சேர்த்து தள்ளிக் கொண்டு பாதை ஓரத்திற்கு வந்தது. விச்சுவின் கத்தலையும், ஓட்டத்தையும் கண்ட அப்பா, நானக், கரண் மூவரும் கண நேரத்தில் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டு, அவர்களும் டாக்ஸிக்கு முட்டுக் கொடுக்க, அதன் வேகம் மட்டுப்பட்டது.

என்றாலும், முழுவதுமாக நிற்கவில்லை. உடனே விச்சு, வலப்புற பானட் அருகே சென்று, சரியாக முன் சக்கரத்திற்கு மேலே கையை வைத்து தள்ளினான். இப்போது அதன் சறுக்கும் திசை இடம் மாறியது. டாக்ஸி, இடதுபுறமாய், மலைப் பக்கம் சென்று, பாதையில் இருந்து இறங்கி, பனிக்குள் சக்கரங்கள் புதைந்து, ஒருவழியாய் நின்றது.

பெரிய ஆபத்தில் இருந்து அந்த மூவரும் தப்பினர்.

காரிலிருந்து இறங்கிய பின்னரும், அவர்களின் கை,கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் புவனேஸ்வரை சேர்ந்த ஜோடி. “தன்யவாத், தன்யவாத்’ என்று உணர்ச்சியுடன் கூற, நானக் அவர்களிடம், “”தம்பிக்கு மட்டும் நன்றி கூறுங்கள். அவன் தான் உண்மையான ஹீரோ” என்று கூறினார். விச்சு, பாராட்டு மழையில் நனைந்தான்

வேனில் ஏறி ரூமிற்கு வந்தும், விச்சுவுக்கு கிடைத்த தன்யவாத்தும், பாராட்டுகளும் சாலினி காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. குளிர் காலத்தில் போய் சுற்றுலா வந்தோமே என்று குழப்பத்தில் இருந்த சாலினிக்கு, இந்த ஜோடி தப்பிக்க உதவும் கருவியாகத் தான் வந்தோமோ என்ற எண்ணம் வந்தது. விச்சுவை கட்டி முத்தமிட வேண்டும்.

விச்சு எங்கே?

அதோ பார், என்று அவள் கணவர் ஜன்னல் வழியே காண்பிக்க, அங்கு விச்சு ரோட்டில் புதிதாய் பிறந்திருந்த மூன்றடி பனிப் படுக்கையில் படுத்துக் கொண்டு கையை நீச்சலடிப்பது போல அசைத்துக் கொண்டு, தேவதை ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தான். தங்கை வச்சுவுக்கும் அவன் சேட்டையை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இம்முறை சாலினிக்கு விச்சுவின் மீது கோபம் வரவில்லை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Nov 2015 - 20:09

ஒரு ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான். ஆனால் அவன் முழு கஞ்சன். தப்பித்தவறியும் அவனிடமிருந்து ஒரு சல்லிபைசா வாங்க முடியாது. பண விஷயத்தில் அவன் அவ்வளவு கெட்டி. பகிர்வது என்ற குணமே கிடையாது. நண்பர்கள் விருந்து கேட்டாலும் கொடுக்க மாட்டான் அந்த மகா கஞ்சப் பிரபு.

ஒரு சமயம் தன் நண்பர்களுக்கு விருந்தளிப்பதற்காகப் பக்கத்து வீட்டுக்காரன் கஞ்சப் பிரபுவின் வீட்டை வாடகைக்குக் கேட்டான். வாடகை கிடைக்கும் போது முடியாது என்று மறுப்பானேன் என்று கஞ்சப் பிரவு தன்வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு விருந்து உபசார நிகழ்ச்சிக்காகக் கொடுத்தான்.

கஞ்சப் பிரவுவின் வீட்டில் ஏக அமர்க்களமாக விருந்து நடந்தது. அந்நத் தெரு வழியாகச் சென்றவர்கள் எல்லாரும் கஞ்சனின் வீட்டில் விருந்து நடப்பதைக் கண்டு வாயை பிளந்தப்படி நின்றனர். வீதியில் செல்பவர்கள் என்ன விஷயம்? என்று விசாரித்தார்கள்.

‘ஓ அதுவா? எங்கள் எஜமானர் தரும் விருந்து அல்ல இது. என் எஜமானர் இந்த ஜென்மத்தில் மற்றவர்களுக்கு விருந்து அளிக்க மாட்டார். விருந்து என்ற பேச்சிக்கு இடமே கிடையாது? என்று பதில் தந்தான் சேவகன்.

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான் கஞ்சன். உடனே சேவகனைப் பார்த்து, “அடே, உனக்கு என்ன திமிர்? இந்த ஜென்மத்தில் மற்றவர்களுக்கு நான் விருந்தளிக்க மாட்டேன் என்று என்னுடைய சார்பில் உறுதிமொழி கொடுக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?” என்று சீறி விழுந்தான்.


பார்வதி அருண்குமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 13:19

வாயும் வயிறுமாக 
===============
விமானத்தில் இருந்து இறங்கிவந்த அந்தப் பெண்ணின் நடையில் ஒரு தள்ளாட்டம் இருந்தது; வயிறு பெருத்துக் காணப்பட்டதால் அவளால் நடக்க இயலவில்லை. கண்களில் ஒரு கலவரம் தெரிந்தது. சிரமப்பட்டு நடந்தாள். நடக்கும்போதே அவளுக்கு மூச்சு வாங்கியது. "அம்மா ! அப்பா ! என்று முனகிக்கொண்டே நடந்தாள். அவளின் நிலைகண்டு அங்கிருந்த சிலர்,

" ஏம்மா! வாயும் வயிறுமா இருக்குற நீ இப்படித் தனியே வரலாமா? துணைக்கு யாரையாவது கூட்டிகிட்டு வரலாமில்ல? ஒன்னுகிடக்க ஒன்னு ஆச்சுன்ன என்னம்மா பண்ணுவே?" என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.

சட்டென்று அந்தப்பெண் மயங்கி விழுந்தாள். அவளுடைய உடமைகள் அங்கே சிதறிக் கிடந்தன. விமான நிலைய அதிகாரிகள் பதட்டமடைந்தனர். அவசரமாக அவளை அருகிலிருந்த பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரண்டுமணி நேரத்திற்குப்பின் அங்குவந்த அதிகாரிகள் டாக்டரைப் பார்த்து

" என்ன டாக்டர்! தாயும் சேயும் நலமா ?" என்று கேட்டனர்.

" பெண்ணும், பொன்னும் நலம் " என்று பதில் சொன்னார் டாக்டர்.

" ஒ பெண் குழந்தையா ! சுகப் பிரசவம்தானே?"

" பொன்னும் " என்று நான் சொன்னது பெண் குழந்தை அல்ல. தங்க நாணயங்களை! அந்தப் பெண் கர்ப்பவதி அல்ல. நிறைய தங்க நாணயங்களை விழுங்கியதால்தான் வயிறு பெருத்துக் காணப்பட்டாள்." என்று கூறி தங்க நாணயங்களைக் காட்டினார். 

கஸ்டம்ஸ் அதிகாரிகள் விரைந்துவந்து அவள்மீது வழக்குப் பதிவு செய்தனர்.

முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 13:21

மயிலிறகு 
========

"அம்மா ! இந்தக் கதையெல்லாம் என்னிடம் வேண்டாம் ! மயிலிறகு எங்காவது குட்டி போடுமா ? இந்தப் பாட்டி காலத்து கதையெல்லாம் உன்னோடு வைத்துக் கொள் ! என்னிடம் வேண்டாம் ! " - நான்காம் வகுப்புப் படிக்கும் நாகராஜன் தன் தாயிடம் எரிந்து விழுந்தான் .

"டேய் ! உண்மைடா! நீ வேண்டுமானால் செய்து பார் ! இன்றிரவு படுக்கப் போகும்போது உன் நோட்டுப் புத்தகத்தில் ஒரு மயிலிறகை வைத்துவிட்டுப் படு ! காலையில் எழுந்து பார்க்கும்போது , அது குட்டி போட்டிருக்கும் . உனக்கு அதிசயமாக இருக்கும் ! " என்றால் அம்மா அகிலாண்டம் .

" சரி ! " என்று சொல்லிய நாகராஜன் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்தான் . அம்மா கொடுத்த மயிலிறகின் ஒரு முடியை நோட்டுப் புத்தகத்தின் நடுவில் வைத்து மூடினான் .. தலை மாட்டிலே வைத்துவிட்டு , சிறிது நேரத்தில் தூங்கிப் போனான் .

மணி 12 இருக்கும் . நாகராஜன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் . அகிலாண்டம் மெல்ல அவன் அறைக்குள் நுழைந்தாள் . மகனுடைய நோட்டுப் புத்தகத்தில் இருந்த மயிலிறகை எடுத்து இரண்டாகக் கிள்ளினாள் . அந்த இரண்டு துண்டுகளையும் , அதே பக்கத்தில் வைத்து நோட்டுப் புத்தகத்தை மூடினாள் . சத்தம் போடாமல் , தன் அறைக்கு வந்து படுத்துக் கொண்டாள் .

பொழுது விடிந்தது . நாகராஜன் எழுந்து வந்தான் . 

" அம்மா ! காபி ! " என்றான் .

காபியைக் கலந்துகொண்டு வந்த அகிலாண்டம் ," என்னடா ! நாகு !  மயிலிறகு குட்டி போட்டதா ? " என்று கேட்டாள்.

" இன்னும் பார்க்கல ! "

" உன்னோட நோட்டுப் புத்தகத்தை எடுத்துட்டு வா பார்ப்போம் . "

நாகு நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து அம்மாவின் கையில் கொடுத்தான் . அகிலாண்டம் நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்த்தாள்.

" டேய் ! நாகு ! இங்க பாருடா ! மயிலிறகு குட்டி போட்டிருக்கு ! " என்று சொல்லி மகனிடம் காண்பித்தாள் .

" அப்படியா ! என்று சொன்ன நாகு , மிகுந்த ஆச்சரியத்துடன் அந்த இரண்டு துண்டுகளையும் பார்த்தான் . 

" அம்மா ! ஒரு நிமிஷம் ! " என்று  சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தவன் , ஒரு ஸ்கேலை எடுத்துக்கொண்டு வந்தான் . இரண்டு துண்டுகளையும் அளந்து பார்த்தான் . பிறகு கடகடவென்று பலமாகச் சிரித்தான் . 

" எண்டா சிரிக்கிறே ? "

" அம்மா ! நீ இப்படி ஏடாகூடமா ஏதாவது பண்ணுவேன்னு எனக்குத் தெரியும் . அதனாலதான் ராத்திரி நீ மயிலிறகின் முடியைக் கொடுக்கும்போது அளந்து வச்சேன் .சரியாக 6 அங்குலம் இருந்தது . இப்போது பாத்தா பெரிய துண்டு 5 அங்குலமும் , சிறிய துண்டு ஒரு அங்குலமும் இருக்கு . ஏம்மா ! குட்டிபோட்டா அம்மாவுக்கு உயரம் குறைஞ்சிடுமா ? நீ என்னைப் பெத்த பிறகு உனக்கு உயரம் குறைஞ்சிடுச்சா ? இல்லையே ! அப்படியேதானே இருக்கே ? இதுமட்டும் எப்படிம்மா ?" என்று கேட்டான் நாகு .

தன்னுடைய அம்மா தன்னை ஏமாற்றியது போல , நாகுவை ஏமாற்ற முடியவில்லையே என்று எண்ணி அகிலாண்டம் ஆனந்தம் அடைந்தாள் . தன் மகனை வாரி அணைத்து உச்சி மோந்தாள் .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 13:22

பெண் பார்க்க வந்தபோது. 
==========================
வெள்ளையடிக்கப்பட்டு புது மெருகோடு வீடு விளங்கியது. பெண் பார்ப்பதற்காக பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்தார்கள். வீட்டின் முன்புறத்தில் இருந்த ஹால், விருந்தினர்களால் நிரம்பி இருந்தது. வீட்டிலிருந்த பெண்கள் சிற்றுண்டி கொடுப்பதற்காக ஏற்பாடு செய்துகொண்டு இருந்தார்கள். வீடு கல்யாண களை கட்டியிருந்தது.

மாப்பிள்ளை நல்ல உயரம்; சிவப்பு நிறம்; கோட்டும் சூட்டும் அணிந்திருந்தார். அவருக்கு வலதுபுறம் அவருடைய அப்பாவும், இடதுபுறம் அவருடைய அம்மாவும் அமர்ந்து இருந்தார்கள். மற்ற உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்.மணப்பெண்ணின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.

அம்மா அவர்களிடம்," என் பெண்ணைப் பாத்துட்டு , எல்லாம் இருந்து டிபன் சாப்பிட்டுப் போகணும். " என்று கேட்டுக் கொண்டார்.

அருகில் தூண்மறைவில் நின்றுகொண்டு மாப்பிள்ளையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். காஞ்சிப் பட்டுடுத்திக் கஸ்தூரித் திலகமிட்டுத் தேவதைபோல் இருந்த என்னை , மாப்பிள்ளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.எனக்கு குப்பென்று வியர்த்தது. சட்டென்று என்னைத் தூண் மறைவில் முற்றிலுமாக மறைத்துக் கொண்டேன்.

உள்ளே வந்த அம்மா," கமலா! விமலா! சீக்கிரம் வாங்க! விருந்தாளிகளுக்குக் காபியும், டிபனும் கொண்டுபோய் கொடுங்க!" என்று கேட்டுக் கொண்டார். கமலா என்னைப் பார்த்து சிரித்தாள். கமலா என்னுடைய உயிர்த் தோழி. சிறுவயது முதற்கொண்டே நானும், அவளும் இணைபிரியாத தோழிகள். நானும், கமலாவும் வந்திருந்த விருந்தாளிகளுக்குக் காபியும், டிபனும் எடுத்துக்கொண்டு போனோம். கமலா , மாப்பிள்ளைக்கு டிபன் கொடுத்தாள். மாப்பிள்ளை என்னை ஓரக் கண்ணால் பார்ப்பதைக் கவனித்தேன்.உடனே மாப்பிள்ளையின் அப்பா,

" டேய்! பொண்ணை நல்லா பாத்துக்கடா!" என்று சொன்னார். மாப்பிள்ளை வெட்கத்தில் நெளிந்தார். மற்ற விருந்தாளிகளுக்கு டிபன் கொடுத்துவிட்டு அவசர அவசரமாகத் தூணின் மறைவிலே நின்றுகொண்டேன். உடம்பில் லேசான நடுக்கம் தோன்றியது. எல்லோரும் காபி குடித்து முடித்தபின், மாப்பிள்ளை, அவருடைய அப்பாவின் காதிலே ஏதோ சொன்னார். உடனே அவர் அம்மாவை நோக்கி,

" பையன் , பொண்ணு கூடத் தனியா ரெண்டு வார்த்தை பேசணும்னு சொல்றான் ." என்று சொன்னார்.

" அதுக்கென்ன ! தாராளமா பேசட்டும்." என்று அம்மாவும் அனுமதி கொடுத்தார். உடனே மாப்பிள்ளை என்னை நோக்கி வந்தார். எனக்குத் தலை சுற்றி மயக்கம் வருவதுபோல இருந்தது. கெட்டியாகத் தூணைப் பிடித்துக் கொண்டேன். உடனே அம்மா,

" மாப்பிள்ளை! எம் பொண்ணு கமலா இங்க இருக்கா! அவ விமலா; பக்கத்து வீட்டுப் பொண்ணு. தாயில்லாத பொண்ணு; அவளும் என்னை ' அம்மா " ன்னுதான் கூப்பிடுவா! நீங்க அவசரமா வந்ததாலே எம் பொண்ணோட போட்டோவை உங்களுக்கு அனுப்ப முடியல; அதுதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம்." என்று சொல்லி விளக்கினாள். மாப்பிள்ளை பேய் அறைந்ததுபோல நின்றார்.


நீதி: பெண் பார்க்க வரும்போது, மணப்பெண்ணின் அருகில் , அவளைவிட அழகான பெண்களை அனுமதிக்க வேண்டாம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 13:23

இடம் மாறிய கொடை 
======================
வேலைக்காரி முனியம்மா தலையைச் சொறிந்துகொண்டு அகிலாண்டத்தின் முன்னே வந்து நின்றாள்.

"என்ன முனீமா? தலையைச் சொறியரே!"

"ஒரு 200 ரூவா காசு இருந்தா குடும்மா! பையனுக்கு உடம்புக்கு முடியல! டாக்டர் கிட்ட கூட்டிப்போவணும்"

"காபிப்பொடி வாங்கக்கூடக் காசில்லாம காஞ்சிபோய்க் கிடக்கிறேன். எங்கிட்ட பத்து பைசாக் கூடக் கிடையாது.வேலையைப் பாரு!" என்று கடிந்துகொண்டாள் அகிலாண்டம்.

அகிலாண்டத்தின் வீட்டுவேலையை முடித்துவிட்டு வெளியேறினாள் முனியம்மா. அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பக்கத்து வீட்டுப் பங்கஜம் உள்ளே நுழைந்தாள்.

"வா பங்கஜம்!" என்று வரவேற்ற அகிலாண்டம் பங்கஜத்திற்கு சூடாகக் கும்பகோணம் டிகிரி காப்பிப் போட்டுக்கொடுத்தாள்.

"என்ன பங்கஜம்?" வந்த காரணத்தைக் கேட்டாள் அகிலாண்டம்.

"இந்த மாசம் ஜி.ஆர்.டி நகைக்கடைக்கு 500 ரூபா தவணைப்பணம் கட்டணும். உங்கிட்ட கேட்டுப் போகலாம்ணு வந்தேன். ஆனா பாவம் உன் வீட்டுக்காரருக்கு 5000 ந்தான் சம்பளம். அதான் உங்கிட்ட எப்படிக் கேக்குறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்"

"அதென்ன பங்கஜம் அப்படிச் சொல்லிட்டே! நீ ஆயிரம் கேட்டாலும் என்னால கொடுக்கமுடியும்" என்று சொல்லி 500 ரூபாய் கொண்டுவந்து பங்கஜத்திடம் கொடுத்தாள் அகிலாண்டம். பணத்தைப் பெற்றுக்கொண்ட பங்கஜம் நன்றி சொல்லிவிட்டு தன் வீட்டிற்குப் போய்விட்டாள்.

அன்று மாலை ஐந்து மணி இருக்கும்.

அகிலாண்டத்தின் வீட்டிற்கு வந்த முனியம்மா," பிச்சாத்து காசு 200 ரூவா கேட்டதுக்கு இல்லேன்னு சொல்லிட்டே! பக்கத்து வீட்டு பங்கஜம் மாமிகிட்ட 200 ரூவாதான் கேட்டேன்.மவராசி 500 ரூவா கொடுத்தா! அவ நல்லா இருக்கணும்; அவ புள்ளகுட்டிங்க எல்லாம் நல்லா இருக்கணும்" என்று வாழ்த்தியபடியே வெளியே சென்றாள்.

அதிர்ந்து போனாள் அகிலாண்டம்.(முனியம்மா பங்கஜம் வீட்டிற்கும் வேலைக்காரி)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 13:24

சூனியக்கிழவி 
=================
அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஓர் அழகான தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. அந்த மலர்த்தோட்டத்தை ஒரு சூனியக்கிழவி பராமரித்து வந்தாள். 

அந்த ஊரில் அன்பே உருவான கணவன்,மனைவி இருவர் வசித்து வந்தனர். ஒருநாள் கணவன் சூன்யக்கிழவியின் தோட்டத்தின் வழியே செல்ல நேரிட்டது. அந்த மலர்த் தோட்டத்தில் இருந்த வண்ணமலர்கள் அவன் கண்ணைப் பறித்தன. தன் மனைவிக்குக் கொடுப்பதற்காக அங்கிருந்த ஒரு பெரிய ரோஜா மலரைப் பறித்தான். திடீரென்று இடியும் மின்னலும் தோன்றின. அவன் முன்பாக சூனியக்கிழவி தோன்றினாள்.

சூனியக்கிழவியைப் பார்த்து அவன் நடுங்கினான். தன்னுடைய மந்திர சக்தியினால் அவனை மறைந்துபோகச் செய்தாள்.

கணவனுக்காக அவனுடைய மனைவி நீண்ட நேரம் காத்திருந்தாள். கணவன் வராது போகவே அவனைத் தேடிப் புறப்பட்டாள்.அவள் வீட்டைவிட்டு வெளியே காலடி எடுத்து வைத்தவுடனேயே பூமி அதிர்ந்தது. சூனியக்கிழவி அவளுக்கு முன்பாகத் தோன்றினாள்.சூனியக்கிழவி அவளிடம்,

"உன் கணவனைத் தேடி அலையாதே! அவன் உனக்குக் கிடைக்கமாட்டான்.இதைக் கேட்டவுடன் அவன் மனைவி அழத்தொடங்கினாள்.

"என் தோட்டத்தில் புகுந்து என் அனுமதியில்லாமல் ஒரு ரோஜா மலரைப் பறித்தான்.ஆகவே அவனை ஒரு ரோஜா மலராக மாற்றிவிட்டேன். என்னுடைய சாபத்தால் அவன் பகல் முழுவதும் ரோஜாவாக இருப்பான்;இரவில் மனித உருவத்தில் இருப்பான்." 

இதைக்கேட்ட அவனது மனைவி சூனியக்கிழவியிடம் தன் கணவனுக்குக் கருணை காட்டுமாறு வேண்டினாள்.கிழவி அவளிடம் ,"நாளைக்குக் காலையில் தோட்டத்தில் வந்து என்னைப் பார்" என்று சொல்லி மறைந்துவிட்டாள்.

மறுநாள் சூரிய உதயத்தில் அவள் கிழவியைப் பார்க்கத் தோட்டத்திற்குச் சென்றாள்.அங்கிருந்த ஒரு செடியில் மூன்று ரோஜா மலர்கள் இருந்தன. கிழவி, அந்தப் பெண்ணைப் பார்த்து," இந்த மூன்று ரோஜா மலர்களில் ஒன்று உன் கணவன்; அந்த மலரை நீ சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.உனக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே அளிக்கப்படும். உன் கணவன் இருக்கும் மலரை நீ தேர்ந்தெடுக்கத் தவறினால் நீ அவனை இழப்பாய்; அவனை என்றுமே பெறமுடியாது" என்று சொல்லி கிழவி மறைந்துவிட்டாள்.

அந்தப் பெண் தன் கணவன் இருக்கும் மலரை சரியாகத் தொட்டாள். உடனே அந்த அதிசயம் நடந்தது. அவளுக்கு முன்பாக அவள் கணவன் தோன்றினான்.

கேள்வி: எப்படி அவள் தன் கணவன் இருக்கும் மலரைக் கண்டுபிடித்தாள்?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 13:25

காலம் மாறியது 
=================
பயந்துகொண்டே கதவைத் தட்டினார் தர்மலிங்கம்.

கதவைத் திறந்தான் பூபதி. தர்மலிங்கத்தைக் கண்டவுடன் கடுங்கோபம் அடைந்தான் பூபதி."பணம் கேட்டு வீட்டுப்பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறேன்ல, ஒருதடவ சொன்னா புத்தியில ஏறாதா?" பொரிந்து தள்ளினான் பூபதி.

"இல்ல தம்பி, வீட்டுல கொஞ்சம் பணக்கஷ்டம், அதான்.." என்று இழுத்தார் தர்மலிங்கம்.

"யாருக்குத்தான் பணக்கஷ்டம் இல்ல. சிக்கனமா இருக்கணும்னு உனக்குத் தெரியாதா? பணம் கையில இருந்தா தாம் தூம்னு செலவு பண்ணவேண்டியது; பணம் இல்லாட்டி இங்க வந்து தலைய சொரியவேண்டியது;ஒன்னாந்தேதியான ஐயாவுக்கு மூக்குல வேர்த்திருமோ? பணக்கஷ்டம்னா யார்கிட்டயாவது போய்க் கடன் கேளு. நகைநட்டு இருந்தா அடகு வை. நேத்துகூட வந்தியாமே! எம் பொண்டாட்டி சொன்னா. வீட்ல தனியா இருக்குற பொம்பளகிட்ட உனக்கு என்ன பேச்சு? மரியாத கெட்டுரும்.உன்னையெல்லாம் வீட்டுக்குள்ளாற நுழையவிட்டதே தப்பு. போய்யா வெளிய" என்று சொல்லி பூபதி கதவை சாத்தினான்.

ஆறு மாதமாக வீட்டுவாடகை தராமல் இப்படி இழுத்தடிக்கிறானே என்று தர்மலிங்கம் தள்ளாடியபடியே நடந்து சென்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 13:28

அவன்கண் விடல் 
==================
" விசாலம்! விசாலம்!! " தன் மனைவியைக் கூப்பிட்டார் பீதாம்பரம்.
" என்னங்க?" 

" இன்னிக்கி கரண்ட் பில் கட்டணும்; கடைசி நாள். கோடிவீட்டுக் கோவிந்தசாமி நமக்குப் பணம் தரணும்; அத வாங்கியாரச் சொல்லு."

' தெரியுங்க; பணம் வாங்கிட்டு வர சின்னவன் மாசியை அனுப்பியிருக்கேன்."

" சின்னவனையா அனுப்பியிருக்கே? அவனுக்கு அவ்வளவா வெவரம் பத்தாதே; பெரியவன் காசியை அனுப்பியிருக்கலாமில்ல? "

பீதாம்பரம் சொல்லி வாயை மூடுவதற்குள் மாசி வீட்டிற்குள் நுழைந்தான்.

" என்னடா மாசி! கோவிந்தசாமி பணம் கொடுத்தாரா? "

" இல்லப்பா! அவரு வீட்டுல இல்ல; வெளியில போயிருக்காராம்; அவரோட சம்சாரம் சொன்னாங்க "

" எங்க போனாராம்? எப்ப வருவார்னு கேட்டியா?"

"இல்லப்பா!"

" என்னடா இது; ஒரு மனுஷன் வெளிய போயிருக்கார்னு சொன்னா, அவரு எங்க போயிருக்காரு, எப்ப வருவார்னு விசாரிக்கமாட்டியா? 

உங்க அண்ணன் காசிய கூப்பிடு " 

"என்னப்பா? " என்று கேட்டுக்கொண்டே காசி வந்தான்.

" இன்னிக்கி கரண்ட் பில் கட்ட கடைசி நாள்; கோடி வீட்டு கோவிந்தசாமி பணம் தரணும். போயி வாங்கிட்டு வா!"

" சரிப்பா! " என்று சொல்லிவிட்டு காசி வெளியில் சென்றான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் காசி திரும்பி வந்தான். அப்பாவிடம்,
" அப்பா! கோவிந்தசாமி பணம் கொடுத்துவிட்டார். பணத்தை வாங்கிக்கொண்டு அப்படியே கரண்ட் பில்லையும் கட்டிவிட்டேன். இந்தாங்கப்பா மீதி பணம் " என்று சொல்லி பணத்தையும், பில்லையும் அப்பாவிடம் கொடுத்தான் காசி.

" கோவிந்தசாமி வீட்டில் இல்லையென்று உன் தம்பி மாசி சொன்னானே? "

" ஆமாம் அப்பா! நான் போனபோது கூட அவர் வீட்டில் இல்லை. வெளியில் போயிருப்பதாக அவருடைய சம்சாரம் சொன்னாங்க. அந்த அம்மாகிட்ட அவரோட செல் நம்பர் வாங்கி அவருக்கு போன் செய்தேன். பேங்கில் இருப்பதாகச் சொன்னார். தான் வீட்டிற்கு வருவதற்கு இரவு எட்டு மணி ஆகும் என்றும், உடனடியாக பேங்கிற்கு வந்து பணத்தை வாங்கிக்கொண்டு போகும்படியும் சொன்னார். எனவே பேங்கிற்குச் சென்று அவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, அப்படியே கரண்ட் பில்லையும் கட்டிவிட்டு வருகிறேன்." என்றான் காசி.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 18:14

யானைக்கும் அடி சறுக்கும். 
====================
டேய் ! பாஸ்கரா! பரீட்சையில நீ பெயிலாயிட்டியாமே?

ஆமாம் பாட்டி! அடுத்த தடவை எழுதும்போது பாசாயிடுவேன்! 

நம்ம வீட்ல இதுவரைக்கும் யாரும் பெயிலானது கிடையாது; நீதான் முதல் தடவையா பெயிலாயிருக்கே!

பரீட்சையில கேள்வி எல்லாம் கொஞ்சம் கஷ்டமா கேட்டுட்டாங்க! அதான் பெயிலாயிட்டேன்; அடுத்த தடவை எழுதும்போது நிச்சயம் பாசாயிடுவேன் பாட்டி!

உடனே அங்கு வந்த அம்மா,பாட்டியிடம், " பரீட்சை சமயத்துல இவன் கிரிக்கெட் மேட்ச் பாத்துக்கிட்டு இருந்தா எப்படி பாசாக முடியும்? நாம சீரியல் பாக்க விடாம நம்ம வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டான். அதான் பெயிலாயிட்டான்; இவன் பெயிலாயிட்டான்னு வெளியில சொன்னா வெட்கக்கேடு!"

அப்போது அங்குவந்த பாஸ்கருடைய அக்கா," நம்ம வீட்டுக் குழந்தைங்க பரீட்சையில மார்க்கு கம்மியா வாங்குனா ," தண்டச்சோறு, மக்கு பிளாஸ்திரி,எருமைமாடு அப்பிடி,இப்பிடின்னு திட்டுவான் .இப்ப இவனே பெயிலாயிட்டானே ! முகத்த எங்ககொண்டு போயி வச்சுக்குவான்னு தெரியலையே! அம்மா ! இந்த லட்சணத்துல இவன் பரீட்சை எழுதும்போது பிட்டு வேற அடிச்சிருக்கான்; இவனோட பிரண்ட் மாதவன் சொன்னான்; நேத்து அவனைக் கடை வீதியில பாத்தேன்; அப்ப அவன் சொன்னான்."

இதைக்கேட்ட பாட்டி,தலையிலடித்துக் கொண்டே, " கருமம்! கருமம் ! பிட்டு வேற அடிச்சானா? அட ஈஸ்வரா! இதக் கேட்டு இன்னும் நான் உயிரோட இருக்கேனே? என்னைக் கொண்டு போயிடப்பா! " என்று புலம்பினாள்.

M. A. தேர்வில் பெயிலான பட்டதாரி ஆசிரியரான பாஸ்கர் , தன்னுடைய ஆத்திரத்தை எல்லாம் தன்னுடைய பைக்கின் மீது காட்டி பலமாக உதைத்தார். பள்ளிக்குப் புறப்பட்டார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 18:15

ஜானு 
=====
கதவு தட்டும் ஓசை கேட்டது.

கதவைத் திறந்தது ஜானு.பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி நின்று கொண்டிருந்தாள்.

" வாங்க மாமி! உள்ள வாங்க!"

" என்ன ஜானு! வீட்டுவேலை எல்லாம் முடிஞ்சுதா?"

" அதை ஏன் மாமி கேக்குறீங்க! இன்னும் ஒழிஞ்சபாடு இல்ல! காலங்காத்தாலே ஐஞ்சு மணிக்கே எழுந்துட்டேன். நான் குளிச்சிமுடிச்ச பிறகு, கிருஷ்ணா குளிக்கிறதுக்கு வெந்நீர் விளாவினேன். அப்புறமா குழந்தைகளக் குளிப்பாட்டி, ட்ரெஸ் பண்ணிவிட்டு,டிபன் சாப்பிடவச்சி ஸ்கூலுக்கு அனுப்புறதுக்குல்ல போதும் போதும்னு ஆயிடறது. அப்புறம் கிருஷ்ணாவுக்கு லஞ்ச் பாக்ஸுல சாப்பாடு எடுத்து வச்சு ஆபீஸுக்கு அனுப்பி வச்சேன். செத்த நேரம் அக்கடான்னு உக்கார முடியல மாமி! அடுத்தாப்ல அழுக்குத் துணியெல்லாம் துவைக்கணும்; பண்ட பாத்திரம் கழுவணும்;ஒரு சீரியல் கூட உக்காந்து பாக்கமுடியல மாமி!'

" இந்தாங்க மாமி! பஜ்ஜி சாப்பிடுங்கோ!" ஜானு கொண்டுவந்து வைத்த பஜ்ஜியை பங்கஜம் மாமி ருசி பார்த்தாள்.

" பஜ்ஜி டேஸ்ட் வித்தியாசமா இருக்கே! என்ன பஜ்ஜி இது? எப்படி பண்ணுனே?"

" இது பலாக்கா பஜ்ஜி மாமி! டி.வி. யில நேத்து கீதா மாமி சொல்லிக் கொடுத்தாங்க! அதன்படி செஞ்சு பாத்தேன். பிரமாதமா இருந்தது. அதான் உங்களுக்கு ரெண்டு வச்சேன்."

" ஏன் ஜானு! இவ்வளவு கஷ்டப்படுறியே! ஒரு வேலைக்காரிய வச்சுகிட்டா என்ன?"

" கிருஷ்ணா வாங்குற சம்பளத்துக்கு வேலக்காரிய வச்சுக்கிறதெல்லாம் கட்டுப்படி ஆகாது மாமி! நாலு வீட்ல வேலை செய்றவங்க; அரக்கபரக்க செய்வாங்க; வேலைல சுத்தம் இருக்காது; கிருஷ்ணாவுக்கும் அது பிடிக்காது."

" என்ன ஜானு! செயின் புதுசா இருக்கே? எப்ப எடுத்தே?"

" நேத்துதான் மாமி! ரொம்ப நாளா கிருஷ்ணா கிட்ட கேட்டுண்டு இருந்தேன்; நேத்து என்னோடபர்த்டே இல்லியோ அதான் நானும் கிருஷ்ணாவும் எடுத்துண்டு வந்தோம்."

" மாமி! மணி ஐஞ்சு ஆறது. நான் ஆபீஸுக்குப் போய் கிருஷ்ணாவை அழச்சுண்டு வரணும்.அப்படியே ஸ்கூலுக்குப் போய் பசங்களையும் அழச்சுண்டு வரணும்."

" சரி ஜானு! நான் ஆத்துக்குப் போறேன்" என்று சொல்லிவிட்டுப் பங்கஜம் மாமி போய் விட்டாள்.

" அவசர அவசரமாக சட்டையையும், பேண்டையும் அணிந்துகொண்டு, தன் மனைவி கிருஷ்ணவேணியையும், குழந்தைகளையும் அழைத்து வருவதற்காக ஜானகிராமன் டூவீலரில் கிளம்பினான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 18:17

காபி எஸ்டேட் ஓனர் கனகலிங்கம் 
=================================
காபி எஸ்டேட் ஓனர் கனகலிங்கத்தின் வீட்டின் முன்பாக பல கார்கள் நின்றிருந்தன. ஊட்டியில் அவருக்கு நிறைய காபித் தோட்டங்கள் இருந்தன.அவருடைய ஒரேமகள் சாந்தி. B.Sc..பட்டதாரி.மேற்கொண்டு படிப்பதற்கு சாந்தி விரும்பாததால் அவளுக்கு வரன் தேடும் முயற்சியில் கனகலிங்கம் ஈடுபட்டார்.

காரில் வந்த பெரிய மனிதர்கள் வரவேற்பறையில் சோபாவில் அமர்ந்திருந்தனர். கனகலிங்கம் பரபரப்புடன் காணப்பட்டார்.சமையலறையிலிருந்த மனைவியிடம் ஓடிவந்து," காபி ரெடியாயிடுச்சா?எல்லாரும் வந்துட்டாங்க!சீக்கிரம் காபியை சாந்திகிட்ட கொடுத்தனுப்பு" என்று சொல்லிவிட்டு வரவேற்பறைக்கு ஓடினார்.

மணப்பெண் போல அலங்காரம் செய்துகொண்டு சாந்தி, ஒரு தட்டில் காபி டம்ளர்களை வைத்து எடுத்துக்கொண்டு வந்தாள்.வந்திருந்த பெரிய மனிதர்கள் ஆளுக்கொரு காபி டம்ளரை எடுத்துக்கொண்டனர்.

" இவள்தான் என்மகள் சாந்தி " என்று கூறி எல்லோருக்கும் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தார் கனகலிங்கம்.சாந்தி எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள்.

காபியை ருசித்தபடியே எல்லோரும் சாந்தியைக் கவனித்தனர்.காபி குடித்து முடித்த பிறகு வந்திருந்த பெரிய மனிதர்கள் தங்களுக்குள் கூடிப் பேசினர். பிறகு கனகலிங்கத்தைப் பார்த்து," மிஸ்டர் கனகலிங்கம்! எங்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. ஒரு நல்ல நாள் பார்த்து மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம்" என்று கூறிவிட்டு அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

கனகலிங்கம் மனைவியிடம் ஓடிவந்தார். அவருடைய மனைவி அவரைப் பார்த்து,"என்னங்க! என்ன சொன்னாங்க? அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களா?"

" நம்ம காபி எஸ்டேட்டின் புதிய கண்டுபிடிப்பான காபிக்கொட்டை பீபரி 32 வோட டேஸ்டும்,பிளேவரும் ரொம்ப பிரமாதம்னு சொன்னாங்க! அந்த காபிக்கொட்டையில நீ போட்ட காபி A1..அப்படின்னு சொல்லிட்டாங்க! ஒரு நல்ல நாள் பார்த்து ஏஜென்ஸி அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்னு சொல்லிட்டாங்க!"என்று சொன்னார் கனகலிங்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 18:19

பெண் பார்க்க வந்தபோது. 
==========================
வெள்ளையடிக்கப்பட்டு புது மெருகோடு வீடு விளங்கியது. பெண் பார்ப்பதற்காக பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்தார்கள். வீட்டின் முன்புறத்தில் இருந்த ஹால், விருந்தினர்களால் நிரம்பி இருந்தது. வீட்டிலிருந்த பெண்கள் சிற்றுண்டி கொடுப்பதற்காக ஏற்பாடு செய்துகொண்டு இருந்தார்கள். வீடு கல்யாண களை கட்டியிருந்தது.

மாப்பிள்ளை நல்ல உயரம்; சிவப்பு நிறம்; கோட்டும் சூட்டும் அணிந்திருந்தார். அவருக்கு வலதுபுறம் அவருடைய அப்பாவும், இடதுபுறம் அவருடைய அம்மாவும் அமர்ந்து இருந்தார்கள். மற்ற உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்.மணப்பெண்ணின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.

அம்மா அவர்களிடம்," என் பெண்ணைப் பாத்துட்டு , எல்லாம் இருந்து டிபன் சாப்பிட்டுப் போகணும். " என்று கேட்டுக் கொண்டார்.

அருகில் தூண்மறைவில் நின்றுகொண்டு மாப்பிள்ளையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். காஞ்சிப் பட்டுடுத்திக் கஸ்தூரித் திலகமிட்டுத் தேவதைபோல் இருந்த என்னை , மாப்பிள்ளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.எனக்கு குப்பென்று வியர்த்தது. சட்டென்று என்னைத் தூண் மறைவில் முற்றிலுமாக மறைத்துக் கொண்டேன்.

உள்ளே வந்த அம்மா," கமலா! விமலா! சீக்கிரம் வாங்க! விருந்தாளிகளுக்குக் காபியும், டிபனும் கொண்டுபோய் கொடுங்க!" என்று கேட்டுக் கொண்டார். கமலா என்னைப் பார்த்து சிரித்தாள். கமலா என்னுடைய உயிர்த் தோழி. சிறுவயது முதற்கொண்டே நானும், அவளும் இணைபிரியாத தோழிகள். நானும், கமலாவும் வந்திருந்த விருந்தாளிகளுக்குக் காபியும், டிபனும் எடுத்துக்கொண்டு போனோம். கமலா , மாப்பிள்ளைக்கு டிபன் கொடுத்தாள். மாப்பிள்ளை என்னை ஓரக் கண்ணால் பார்ப்பதைக் கவனித்தேன்.உடனே மாப்பிள்ளையின் அப்பா,

" டேய்! பொண்ணை நல்லா பாத்துக்கடா!" என்று சொன்னார். மாப்பிள்ளை வெட்கத்தில் நெளிந்தார். மற்ற விருந்தாளிகளுக்கு டிபன் கொடுத்துவிட்டு அவசர அவசரமாகத் தூணின் மறைவிலே நின்றுகொண்டேன். உடம்பில் லேசான நடுக்கம் தோன்றியது. எல்லோரும் காபி குடித்து முடித்தபின், மாப்பிள்ளை, அவருடைய அப்பாவின் காதிலே ஏதோ சொன்னார். உடனே அவர் அம்மாவை நோக்கி,

" பையன் , பொண்ணு கூடத் தனியா ரெண்டு வார்த்தை பேசணும்னு சொல்றான் ." என்று சொன்னார்.

" அதுக்கென்ன ! தாராளமா பேசட்டும்." என்று அம்மாவும் அனுமதி கொடுத்தார். உடனே மாப்பிள்ளை என்னை நோக்கி வந்தார். எனக்குத் தலை சுற்றி மயக்கம் வருவதுபோல இருந்தது. கெட்டியாகத் தூணைப் பிடித்துக் கொண்டேன். உடனே அம்மா,

" மாப்பிள்ளை! எம் பொண்ணு கமலா இங்க இருக்கா! அவ விமலா; பக்கத்து வீட்டுப் பொண்ணு. தாயில்லாத பொண்ணு; அவளும் என்னை ' அம்மா " ன்னுதான் கூப்பிடுவா! நீங்க அவசரமா வந்ததாலே எம் பொண்ணோட போட்டோவை உங்களுக்கு அனுப்ப முடியல; அதுதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம்." என்று சொல்லி விளக்கினாள். மாப்பிள்ளை பேய் அறைந்ததுபோல நின்றார்.


நீதி: பெண் பார்க்க வரும்போது, மணப்பெண்ணின் அருகில் , அவளைவிட அழகான பெண்களை அனுமதிக்க வேண்டாம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 18:20

இடம் மாறிய கொடை 
======================
வேலைக்காரி முனியம்மா தலையைச் சொறிந்துகொண்டு அகிலாண்டத்தின் முன்னே வந்து நின்றாள்.

"என்ன முனீமா? தலையைச் சொறியரே!"

"ஒரு 200 ரூவா காசு இருந்தா குடும்மா! பையனுக்கு உடம்புக்கு முடியல! டாக்டர் கிட்ட கூட்டிப்போவணும்"

"காபிப்பொடி வாங்கக்கூடக் காசில்லாம காஞ்சிபோய்க் கிடக்கிறேன். எங்கிட்ட பத்து பைசாக் கூடக் கிடையாது.வேலையைப் பாரு!" என்று கடிந்துகொண்டாள் அகிலாண்டம்.

அகிலாண்டத்தின் வீட்டுவேலையை முடித்துவிட்டு வெளியேறினாள் முனியம்மா. அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பக்கத்து வீட்டுப் பங்கஜம் உள்ளே நுழைந்தாள்.

"வா பங்கஜம்!" என்று வரவேற்ற அகிலாண்டம் பங்கஜத்திற்கு சூடாகக் கும்பகோணம் டிகிரி காப்பிப் போட்டுக்கொடுத்தாள்.

"என்ன பங்கஜம்?" வந்த காரணத்தைக் கேட்டாள் அகிலாண்டம்.

"இந்த மாசம் ஜி.ஆர்.டி நகைக்கடைக்கு 500 ரூபா தவணைப்பணம் கட்டணும். உங்கிட்ட கேட்டுப் போகலாம்ணு வந்தேன். ஆனா பாவம் உன் வீட்டுக்காரருக்கு 5000 ந்தான் சம்பளம். அதான் உங்கிட்ட எப்படிக் கேக்குறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்"

"அதென்ன பங்கஜம் அப்படிச் சொல்லிட்டே! நீ ஆயிரம் கேட்டாலும் என்னால கொடுக்கமுடியும்" என்று சொல்லி 500 ரூபாய் கொண்டுவந்து பங்கஜத்திடம் கொடுத்தாள் அகிலாண்டம். பணத்தைப் பெற்றுக்கொண்ட பங்கஜம் நன்றி சொல்லிவிட்டு தன் வீட்டிற்குப் போய்விட்டாள்.

அன்று மாலை ஐந்து மணி இருக்கும்.

அகிலாண்டத்தின் வீட்டிற்கு வந்த முனியம்மா," பிச்சாத்து காசு 200 ரூவா கேட்டதுக்கு இல்லேன்னு சொல்லிட்டே! பக்கத்து வீட்டு பங்கஜம் மாமிகிட்ட 200 ரூவாதான் கேட்டேன்.மவராசி 500 ரூவா கொடுத்தா! அவ நல்லா இருக்கணும்; அவ புள்ளகுட்டிங்க எல்லாம் நல்லா இருக்கணும்" என்று வாழ்த்தியபடியே வெளியே சென்றாள்.

அதிர்ந்து போனாள் அகிலாண்டம்.(முனியம்மா பங்கஜம் வீட்டிற்கும் வேலைக்காரி)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 18:25

M.Jagadeesan 

சூனியக்கிழவி 
=================
அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஓர் அழகான தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. அந்த மலர்த்தோட்டத்தை ஒரு சூனியக்கிழவி பராமரித்து வந்தாள். 

அந்த ஊரில் அன்பே உருவான கணவன்,மனைவி இருவர் வசித்து வந்தனர். ஒருநாள் கணவன் சூன்யக்கிழவியின் தோட்டத்தின் வழியே செல்ல நேரிட்டது. அந்த மலர்த் தோட்டத்தில் இருந்த வண்ணமலர்கள் அவன் கண்ணைப் பறித்தன. தன் மனைவிக்குக் கொடுப்பதற்காக அங்கிருந்த ஒரு பெரிய ரோஜா மலரைப் பறித்தான். திடீரென்று இடியும் மின்னலும் தோன்றின. அவன் முன்பாக சூனியக்கிழவி தோன்றினாள்.

சூனியக்கிழவியைப் பார்த்து அவன் நடுங்கினான். தன்னுடைய மந்திர சக்தியினால் அவனை மறைந்துபோகச் செய்தாள்.

கணவனுக்காக அவனுடைய மனைவி நீண்ட நேரம் காத்திருந்தாள். கணவன் வராது போகவே அவனைத் தேடிப் புறப்பட்டாள்.அவள் வீட்டைவிட்டு வெளியே காலடி எடுத்து வைத்தவுடனேயே பூமி அதிர்ந்தது. சூனியக்கிழவி அவளுக்கு முன்பாகத் தோன்றினாள்.சூனியக்கிழவி அவளிடம்,

"உன் கணவனைத் தேடி அலையாதே! அவன் உனக்குக் கிடைக்கமாட்டான்.இதைக் கேட்டவுடன் அவன் மனைவி அழத்தொடங்கினாள்.

"என் தோட்டத்தில் புகுந்து என் அனுமதியில்லாமல் ஒரு ரோஜா மலரைப் பறித்தான்.ஆகவே அவனை ஒரு ரோஜா மலராக மாற்றிவிட்டேன். என்னுடைய சாபத்தால் அவன் பகல் முழுவதும் ரோஜாவாக இருப்பான்;இரவில் மனித உருவத்தில் இருப்பான்." 

இதைக்கேட்ட அவனது மனைவி சூனியக்கிழவியிடம் தன் கணவனுக்குக் கருணை காட்டுமாறு வேண்டினாள்.கிழவி அவளிடம் ,"நாளைக்குக் காலையில் தோட்டத்தில் வந்து என்னைப் பார்" என்று சொல்லி மறைந்துவிட்டாள்.

மறுநாள் சூரிய உதயத்தில் அவள் கிழவியைப் பார்க்கத் தோட்டத்திற்குச் சென்றாள்.அங்கிருந்த ஒரு செடியில் மூன்று ரோஜா மலர்கள் இருந்தன. கிழவி, அந்தப் பெண்ணைப் பார்த்து," இந்த மூன்று ரோஜா மலர்களில் ஒன்று உன் கணவன்; அந்த மலரை நீ சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.உனக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே அளிக்கப்படும். உன் கணவன் இருக்கும் மலரை நீ தேர்ந்தெடுக்கத் தவறினால் நீ அவனை இழப்பாய்; அவனை என்றுமே பெறமுடியாது" என்று சொல்லி கிழவி மறைந்துவிட்டாள்.

அந்தப் பெண் தன் கணவன் இருக்கும் மலரை சரியாகத் தொட்டாள். உடனே அந்த அதிசயம் நடந்தது. அவளுக்கு முன்பாக அவள் கணவன் தோன்றினான்.

கேள்வி: எப்படி அவள் தன் கணவன் இருக்கும் மலரைக் கண்டுபிடித்தாள்?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 18:28

#32
முதியோர் இல்லம்
--------------
M.Jagadeesan

பொன்னம்மாள் டேவிட் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது மணி ஏழு. மருமகள் மெர்சி இன்னமும் தூங்கிக்கொண்டு இருந்தாள். காலைக்கடன்களை முடித்துக்கொண்டு , குளித்துவிட்டு வந்தாள். மணி எட்டாயிற்று. இன்னமும் மெர்சியின் தூக்கம் கலைந்தபாடில்லை. நேராகத் தன் மகனிடம் சென்ற பொன்னம்மாள் டேவிட்,

" என்னடா ஜான்சன்! இது வீடா இல்லை சோம்பேறிகள் மடமா? உம் பொண்டாட்டி இன்னமும் தூங்கிட்டிருக்கா! ஒரு பொண்ணா லட்சணமா ஆறு மணிக்கு எழுந்து , வீடு வாசல் பெருக்கிக் கோலம் போடவேண்டாம்?எந்த வீட்லடா நடக்கும் இந்த அநியாயம்? நான் சுகர் பேஷண்டுன்னு தெரியுமில்ல?வேளாவேளைக்கு நான் சாப்பிட வேணாம்? காலம் போன காலத்துல , வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுவான்னு தானே இவளைக் கட்டிவச்சேன்! போற போக்கைப் பாத்தா , மூணுவேளையும் நான் சமைச்சுப் போட்டா இவ ஒக்காந்து சாப்பிடுவா போல இருக்கே! இதென்னடா கொடுமை?"

" அம்மா! எதுக்கம்மா சண்டை போடறீங்க? அவளுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை! அதான் தூங்கிட்டிருக்கா! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போங்கம்மா!"

" டேய்! நான் அவளை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போலாம்டா! ஆனா என் வயிறு என்னை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகலையே! பசி தாங்காத உடம்புடா இது." பொன்னம்மாள் டேவிட்டின் குரல் தளுதளுத்தது. கண்களில் கண்ணீர் கசிந்தது.அவள் தன் மகனை நோக்கி 

" ஜான்சன்! நான் முதியோர் இல்லம் போறேன். அங்கேதான் எனக்கு நிம்மதி கிடைக்கும் ."

" என்னம்மா இது! இப்படி பேசறீங்களே! நான் இருக்கும்போது நீங்கள் இப்படிப் பேசலாமா ?நான் வேணுமின்னா டிபன் செஞ்சு தரட்டுமா? எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா ! நானும் கூட வரட்டுமா ?

" வேணாம்; வழியில எங்காவது ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன் ."

' சரி; உங்க இஷ்டம்! நான் சொன்னா கேக்கவா போறிங்க?; முதியோர் இல்லம் சேர்ந்தவுடனே எனக்கு போன் பண்ணுங்க!"

" சரிடா!"

அவசர அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு முதியோர் இல்லம் வந்து சேர்ந்தாள் பொன்னம்மாள் டேவிட்.

பொன்னம்மாள் டேவிட்டைப் பார்த்தவுடனே , அவளுடைய P.A. விசாலம் ஓடிவந்து வரவேற்றாள்.

" வாங்க பிரசிடென்ட்! எல்லாரும் உங்களுக்காகத்தான் காத்திருக்காங்க! என்ன மேடம்! உங்க கார்ல வராம ஆட்டோவில வந்திருக்கீங்க?"

' என் கார சர்வீசுக்கு விட்டிருக்கேன்! அதான் ஆட்டோவில வந்தேன்! ஆண்டுவிழாவுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டீங்களா ?"

" எல்லாம் பக்காவா இருக்கு மேடம்!"

" மினிஸ்டர் எப்ப வரார்?"

" சரியா பத்து மணிக்கு வந்துருவார் மேடம்!"

" ஒ.கே! "

பொன்னம்மாள் டேவிட் தன் செல்போனை எடுத்துத் தன் மகனுக்குப் பொன் செய்தாள்.

" ஜான்சன்! நான் பத்திரமா முதியோர் இல்லம் வந்து சேந்துட்டேன்!"

" சரி அம்மா! சாயங்காலம் ஆபீஸ் முடிந்தவுடன் வீட்டிற்குப் போகும்போது நான் உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன்."
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 18:29

கல்லாதான் ஒட்பம்.

M.Jagadeesan 

ஒரு சமயம் ஒரு மன்னன் ஒரு போட்டி வைத்தான்.நிறத்திலும்,உருவத்திலும் ஒத்த இரண்டு மாடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.ஒரு மாடு உண்மையான மாடு.மற்றொன்று போலி. போலியான மாடும்,உண்மையான மாட்டைப் போலவே அங்க அசைவுகளைக் கொண்டிருந்தது..போலியான மாடு எது என்று கண்டுபிடிக்க வேண்டும்.இதுதான் போட்டி.மாட்டைத் தொடக்கூடாது என்பது விதி.

போட்டியில் கலந்து கொண்ட யாராலும் போலியான மாட்டைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

அப்போது ஒரு சிறுவன் மன்னனைப் பார்த்து,"மன்னா என்னால் போலியான மாட்டைக் கண்டுபிடிக்க இயலும்"-என்று சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். "பெரியவர்களாலேயே செய்யமுடியாத ஒன்றை சிறுவனாகிய உன்னால் எப்படிச் செய்ய முடியும்?'-என்று மன்னனும் கேட்டான்.

"மன்னா எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள், என்னால் முடியும்" என்று சிறுவன் மீண்டும் உறுதிபடச் சொன்னான்.
சிறுவனின் உறுதியைக் கண்ட மன்னனும்,"சரி, நீ போட்டியில் கலந்து கொள்ளலாம்" என்று சொன்னான்.அதற்குச் சிறுவன்,"நன்றி மன்னா, எனக்கு இரண்டு சிறிய கற்கள் வேண்டும்"-என்று கேட்டான்.அவ்வாறே இரண்டு கற்கள் சிறுவனிடம் கொடுக்கப்பட்டன.

ஒரு கல்லை எடுத்து ஒரு மாட்டின் மேல் எறிந்தான்.கல் பட்ட இடத்தில் எந்த அசைவும் இல்லை.மற்றொரு மாட்டின் மீது மற்றொரு கல்லை எறிந்தான்.கல் பட்ட இடத்தை மட்டும் அந்த மாடு அசைத்துக் காட்டியது.அந்த மாடே உண்மையான மாடு என்று அந்த சிறுவன் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிசயித்தனர்.ஏனென்றால் அதுதான் உண்மையான மாடு.
அரசன் சிறுவனிடம் ,"எப்படி உண்மையான மாட்டைக் கண்டறிந்தாய்?"-எனக்கேட்க,"மன்னா நான் ஒரு இடையன். ஆடு, மாடுகளை மேய்ப்பவன்.தொட்ட இடத்தை அசைத்துக் காட்டும் தன்மை மாடுகளுக்கு உண்டு.போலி மாடுகளால் அவ்வாறு செய்ய இயலாது" என்று கூறினான்.

அவனது மதி நுட்பத்தைக் கண்டு வியந்த மன்னன்,"அமைச்சர்களே இவனது மதி நுட்பம் வியக்கத் தக்கதாய் உள்ளது.இவனது மதி நுட்பத்தை நாம் பயன் படுத்திக் கொள்ளவேண்டும்.இவனுக்கு அமைச்சரவையில் தக்க பதவி ஒன்றைக் கொடுக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.உங்களுடைய கருத்தைத் தெரிவியுங்கள்"-என்று கேட்டார். அதற்கு அமைச்சர்கள்,"ஆடு மாடுகளை மேய்க்கும் ஒரு சிறுவனுக்கு இருக்க வேண்டிய அறிவுதான் அவனிடத்தில் உள்ளது.மாடாளும் அறிவு நாடாள உதவாது.எனவே தங்களுடைய கருத்தை நாங்கள் ஏற்க இயலாது"-என்று கூறிவிட்டனர்.

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

என்பது குறள்.

படிக்காதவனுடைய அறிவு எவ்வளவுதான் மேம்பட்டு இருந்தாலும், அறிவுடையவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது இக்குறளின் பொருள்.

எடிசன், ஜி.டி.நாயுடு போன்ற பெருமக்களை அறிவியல் அறிஞராக இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.நியூட்டன்,ஆர்க்கிமிடிஸ் போன்ற பெரு மக்களையே அறிவியல் அறிஞராக இந்த உலகம் ஏற்றுக்கொண்டது.ஏனென்றால் பல கண்டு பிடிப்புகளுக்கு வழிகோலும் அறிவியல் விதி ஒன்றை அவர்கள் வகுத்துக் கொடுத்தார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 7 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum