Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சின்னச் சின்ன கதைகள்
5 posters
Page 4 of 11
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
சின்னச் சின்ன கதைகள்
First topic message reminder :
கொடுத்துப் பெறுதல்
--------------------------------
ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.
அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.
இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.
நன்றி: ந. உதயகுமார்

Re: சின்னச் சின்ன கதைகள்
என்கவுன்ட்டர்…
----
இன்ஸ்பெக்டர் ராஜவேலு. “என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’. புழல் சிறைக்கு அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டிருந்தார்.
சிறைத்துறை டிஐஜி கனகராஜ் அவரை வரவேற்று அமர வைத்துப் பேசினார்:
“”ராஜவேலு! அந்த 9-ம் நெம்பர் செல்லில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ் பயங்கர ரவுடி. ஆளும் கட்சியின் வண்ணாரப் பேட்டை வட்டச் செயலர் துரை, அகஸ்தியா தியேட்டர் அருகே தன்னோட ஆட்களோடு வந்துக்கிட்டிருக்கும்போது, அவரை அரிவாளால் வெட்டிப்போட்டு, கூட வந்தவங்களையும் தாக்கு தாக்குன்னு தாக்கியதில் 3 பேர் காலி. அதுல 5 பேர் ஸ்டான்லி ஆஸ்பிட்டலில் அட்மிட். 2 பேர் நிலைமை சீரியஸ். இதுக்குக் காரணமான சுரேஷை “என்கவுன்ட்டரில்’ போட்டுத் தள்ளணும்னு ஆளும் கட்சியின் அதிகார உச்சத்துல இருப்பவர்களிடமிருந்து நெருக்குதல்கள்.
நீதான் “என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆச்சே! இந்த “அசைன்மென்ட்டை’ உனக்கு கொடுக்கறதுல பெருமைப்படறேன்.”
“”சார்.. இந்த “அசைன்மென்ட்டை’ எனக்குக் கொடுக்கறதுல நீங்க பெருமைப்பட்டுக்கலாம். ஆனா இதுல எனக்கு எந்தப் பெருமையும் இல்லை..”
“”என்ன சொல்றீங்க மிஸ்டர் ராஜவேலு?”
“”டூட்டிங்கற பேர்ல உயிர்களைக் கொல்றதுல என்ன சார் பெருமை கிடக்கு?”
“”ராஜவேலு.. மேலதிகாரிகளின் கட்டளையை நிறைவேத்தறது உங்க கடமைங்கறதை ஞாபகம் வச்சுக்கங்க..”
–டிஐஜியின் குரலில் சற்றே கடுமை தெறித்தது.
அதைக் கண்டு கொள்ளாத ராஜவேலு, சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தார். தொப்பியை சரி செய்தவாறே, “”டிஐஜி சார்! நம்ம போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருக்கற சிலராலயும் ஆளுங்கட்சியின் ஆசியோடும்தான் இப்படிப்பட்ட ரவுடிகள் உருவாகிறார்கள். பலி கொடுக்கப்போற ஆட்டை நல்லா கொழு கொழுன்னு வளர்க்கிறது சில பேரு. அதை பலி கொடுக்க மட்டும் என்னை போன்றவர்களை பயன்படுத்திக்கறீங்க.. இந்த “என்கவுன்ட்டரால’ சில பேருக்கு பணமும் பதவியும் கிடைக்கலாம். ஆனா எனக்கு மிஞ்சப் போவது பழியும் பாவமும் தானே?”
“”என்ன ராஜவேலு? போலீஸ் வேலையில் சேர்ந்துட்ட பிறகு பாவம், புண்ணியம் பார்த்தா வேலைக்கு ஆகுமா? மேலிட உத்தரவை நிறைவேத்தறது நமது கடமை. மைண்ட் இட்…”
–டிஐஜி குரலில் இப்போது கோபமும் சேர்ந்துகொண்டது.
“”சார், நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ். இப்போது கொல்லப்பட்ட வட்டச் செயலர் துரையும் ஒரு காலத்துல பேட்டை ரவுடியா இருந்தவர்தானே? அவர் தர்ற மாமூலை வாங்கிக்கிட்டு அவரை சைலண்ட்டா கொழுக்க வைச்சதும் நம்ம போலீஸ் டிபார்ட்மென்ட்தானே? அவரும் காலப்போக்குல அரசியல்வாதியா மாறி கட்சியில் செல்வாக்கை வளர்த்துக்கிட்டாரு.
இப்போது அவரை வெட்டிப்போட்டுட்ட சுரேஷ்.. நிச்சயம் துரையால் பாதிக்கப்பட்டவராத்தான் இருக்கணும். இல்லன்னா பட்டப் பகல்ல.. நடுரோட்டில இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா? முதலில் அந்த சுரேஷை நான் பாக்கணும். அதுக்குப் பிறகுதான் அவன “என்கவுன்ட்டர்ல’ போட்டுத் தள்றதா இல்லையான்னு நான் முடிவு செய்வேன்”.
“”ஓ! அப்படியா? ஆனா ஒண்ணு.. இந்த “என்கவுன்ட்டர’ நீங்க தான் பண்ணணும். சுப்பீரியர் ஆர்டர் இது. இதுக்கு ஒபே பண்ணலைன்னா உங்களுக்கு பிரச்சினை…”.
“”ஓ.கே. சார்.. தேவை ஏற்பட்டால் அதுக்கு முன்னே நானே ரிஸைன் பண்ணிடுவேன்”.
ராஜவேலுவின் உறுதியைப் பார்த்த டிஜஜி சற்றே கோபம் தணிந்தவராக, “”ஓ.கே. அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல சுரேஷை போய் பாத்துட்டு வாங்க,” என்றவர் அங்கே நின்றிருந்த வார்டனைப் பார்த்து “”வார்டன்.. இன்ஸ்பெக்டரை அந்த செல்லுக்கு அழைச்சிக்கிட்டு போய் காட்டு” என்றார்.
இப்போது சுரேஷ் அடைக்கப்பட்ட தனி செல்லின் முன்னே ராஜவேலு.
ஒரு வார தாடி மீசையுடன் சோர்வுடனும் சோர்வை மிஞ்சிய சோகத்துடனும் காணப்பட்டான் சுரேஷ். வயது 28 இருக்கும்.
அவனை தீர்க்கமாக பார்த்தார் ராஜவேலு. வார்டனிடம் “”என்ன இவன் ஒழுங்கா நடந்துக்கறானா? கொடுக்கறத சாப்பிடறானா? என்று கேட்டார்.
“”இல்ல சார்.. இங்க வந்த 2 நாளும் சாப்பிடாம முரண்டு பிடிக்கறான் சார்.”
“”சரி.. இவனுக்கு என்ன வேணும்னு கேட்டு வெளியே இருந்தாவது வாங்கிக் கொடு. அப்படியே ஒரு ரவுண்ட் போய்ட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பார்க்கறேன்,” என்று வார்டனுக்கு உத்தரவு போட்ட ராஜவேலு, சுரேஷைப் பார்த்து “”சுரேஷ்.. நீ முதல்ல சாப்பிடு. அப்புறமா வந்து உன்னை விசாரிக்கறேன்,” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் ராஜவேலு.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து ராஜவேலு அங்கே மீண்டும் ஆஜர் ஆனார். உள்ளே ராஜவேலு அருகில் எவர்சில்வர் தட்டில் “லெக் பீஸுடன் கூடிய சிக்கன் பிரியாணி எவர்சில்வர் தட்டில். வேகவைத்த முட்டையும் அதில் இருந்தது.
ஆனால் சுரேஷ் அதைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்பதைப் பார்த்தாலே தெரிந்தது.
“”வார்டன் ஒரு நாற்காலியை கொண்டு வா.”
நாற்காலியில் அமர்ந்த ராஜவேலு, சுரேஷைப் பார்த்து “”அடம்பிடிக்காம சாப்பிடுங்க” என்றார்.
“”சாப்பிடறதும் சாப்பிடாததும் என்னோட சொந்த விஷயம்,” என்றான் சுரேஷ்.
சுரேஷ் குரலில் தொனித்த தைரியத்தைக் கண்டு சற்றே துணுக்குற்றார் ராஜவேலு. “”இதப் பார்.. இங்க நீ உள்ளே வந்துட்ட.. இங்கே வந்ததுக்கப்புறம் உனக்குன்னு சொந்தமா எந்த விஷயமும் நடக்காது. நீ சாகணும்னு நெனச்சாலும் சாக விடமாட்டோம். நல்ல படியாக சொல்றேன். இன்னும் 10 நிமிஷம் டயம் கொடுக்கறேன். சாப்பிடு.. அப்புறம் மத்த விஷயம் பற்றி பேசுவோம்,” என்று சொல்லிவிட்டு ராஜவேலு கண்களை மூடிக்கொண்டு அந்த நாற்காலியில் சாய்ந்து கொண்டார்.
10 நிமிஷமும் கழிந்தது. சுரேஷின் கைகள் பிரியாணி தட்டுப்பக்கம் கூட செல்லவில்லை. ஆறிப்போய் விட்டதால் பிரியாணியின் மீது ஈக்கள் தாராளமாக, தைரியமாக உட்கார ஆரம்பித்தன.
அந்த ஈக்களைக் கூட அவன் விரட்டவில்லை. கட்டை எறும்புகளும் வாசம்பிடித்து அங்கே அணி வகுப்பு நடத்த ஆரம்பித்தன. ஓரிரு எறும்புகள் இப்போது அவன் பாதத்தின் மீது ஏற ஆரம்பித்தன. அதைக் கூட அவன் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு எறும்பின் உடம்பு நோகாத வண்ணம் மெல்ல விரல்களால் அதை எடுத்து பிரியாணியின் மீது மேய விட்டான்.
அது மாலை மயங்கும் நேரம். கொசுக்களின் ரீங்காரம் தொடங்கியது. ராஜவேலுவின் முகம், கை என கொசுக்கள் பதம் பார்க்க ஆரம்பித்தன. கையில் சிக்கிய கொசுக்களை “”உச்.. உச்” என அடித்து நசுக்கிக் கொண்டிருந்தார். கொசு கடித்ததால் ஏற்பட்ட எரிச்சலைவிட சுரேஷ் சாப்பிடாமல் சத்தியாகிரகம் பண்ணுவதுதான் அவருக்கு கடுப்பை உண்டாக்கியது. இருந்தாலும் சுரேஷின் செய்கைககள் அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.
சுரேஷ் மீது ஏகப்பட்ட கொசுக்கள் “லேண்ட்’ ஆகியிருந்தன. அவன் அரை டிரவுசர் போட்டிருந்ததால் தொடை, கால் என என கொசுக்கள் இஷ்டத்துக்கும் ஆக்கிரமித்திருந்தன. அவன் அந்த கொசுக்களைக்கூட விரட்டாமல் பொறுமை காத்தான். அவை கடித்து வயிறுமுட்ட ரத்தம் குடித்து கிளம்புவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
இப்போது நன்றாக இருள் பரவ ஆரம்பித்துவிட்டதால் ஒரு பெரிய எலி.. சின்ன பெருச்சாளி என்றும் அதை சொல்லலாம். அது மெல்ல “செல்’லுக்குள் நுழைந்தது. சுரேஷை தன் பெரிய கண்களால் அச்சத்துடன் பார்த்தது. அவன் அசையாது உட்கார்ந்திருக்கவே சற்று பயம் தெளிந்து பிரியத்துடன் பிரியாணியை நெருங்கியது. தட்டில் வாய் வைத்து இரண்டு கைகளில் (கால்களில்) எடுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தது.
சுரேஷ் அதை சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருந்தான். ராஜவேலும் இதை பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பெரிய கொசு ஒன்று அவர் அணிந்திருந்த முரட்டுத்தனமாக சாக்ஸை (காலுறை) ஊடுருவி காலைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சியது. அவருக்கு எரிச்சல் ஏற்பட்டு “அடச் சே’ என்றவாறே பூட்ஸ் காலை தரையில் உதைத்து எழுந்து நின்றார். திடீரென அப்போது ஏற்பட்ட சப்தத்தில் மிரண்டு போன எலி ஓடி ஒளிந்து மறைந்தது.
சுரேஷின் பார்வை ராஜவேலுவின் மீது வெறுப்புடன் திரும்பியது.
அவரும் சரியான கோபத்திலும் எரிச்சலிலும் இருந்தார். “”ஏய்யா, உனக்கு சாப்பிட வாங்கிக் கொடுத்தா சாப்பிடாம சும்மா உட்காந்திருக்கே.. என்னை ஒரு மயித்துக்கும் மதிக்காம இருக்கியே.. உன் மனசுலே என்னதான் நினைச்சுக்கிட்டிருக்கே?
–ராஜவேலு கோபத்தில் கத்தினார்.
அவர் கண்கள் சிவப்பேறியிருந்தன.
இப்போது சுரேஷ் தாழ்ந்த குரலில் அவரிடம் பேச ஆரம்பித்தான்.
“”சார், நீங்க என் ஒருத்தனுக்கு சோறு வாங்கிக் கொடுத்தீங்க. ஆனா நீங்களே பார்த்தீங்கள்ளே.. என்னோட சாப்பாட்டை ஈக்கள், எறும்புகள், எலின்னு எத்தனை ஜீவன்கள் சாப்பிட்டுச்சு.. அது மட்டுமல்ல கொசுக்களும என் ரத்தத்தை பசியாற குடிக்கட்டும்னு விட்டுட்டேன். நான் ஒருத்தன் சாப்பிடலைன்னா என்னா சார்? இங்க உங்க கண் முன்னாலே எத்தனை ஜீவராசிகள் பசியாறிக்கிட்டதுன்னு பாத்தீங்கள்ளே.. அதைப் பார்த்து திருப்திப்பட்டுக்குங்க சார்..”
சுரேஷின் பேச்சு ராஜவேலுக்கு மிக மிக வித்தியாசமாகப் பட்டது. நேரே டிஜிபி ரூமுக்கு வந்தார்.
“”சார், நான் இந்த “என்கவுன்ட்டர் அசைன்மென்டை’ ஏத்துக்க முடியாது. ஆனா நீங்க என் ராஜிநாமாவை ஏத்துக்குங்க,” என்றார் தீர்மானமாக.
-இயற்கைப் பிரியன்

கூர்ம அவதாரக் கல்
--------
“”திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக வைத்துக் கடையும் போது திருமால் ஆமை வடிவம் எடுத்து கீழே மத்திற்கு பிடிமானமாய் இருந்தார். திருமால் எடுத்த இரண்டாவது அவதாரம் இது. கூர்ம அவதாரம் என்று இதை சொல்வார்கள்…” நான்கு வயது குங்குமேஸ்வரனுக்கு தாடியை தடவியபடி கதை சொல்லிக் கொண்டிருந்தார் நாற்பது வயது பாலயோகி.
“”ஆமை புகுந்த வீடு உருப்படாதுன்னு சொல்லுவாங்க. விளையாட லேப் டாப் கேட்கிற அவனுக்கு இப்போ எதுக்கு ஆமை கதையெல்லாம். வந்தமா வாய்க்கு ருசியா இரண்டு நாள் சாப்பிட்டோமான்னு கிளம்பப் பாருங்க. எப்படியாவது இங்கேயே ஒட்டிக்க வழி தேடாதீங்க” வார்த்தைகளில் விஷத்தைக் கொட்டினாள் ஸ்ரீநிதி.
“”ஆபிஸில் இருந்து மனோ வந்ததும் ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பிடறேன். அவன்கிட்ட சொல்லிக்காம போறது நாகரிகம் இல்லை. இனிமே என்னோட தொந்தரவு உனக்கு இருக்காதும்மா”
“”கல்யாண நாளன்று “எங்க மாமா’ன்னு சாமியாரான உங்களை அறிமுகம் செஞ்சபோதே எனக்கு உங்க மேல காரணம் இல்லாம ஒரு வெறுப்பு ஏற்பட்டது. குலதெய்வம் பேருன்னு எங்களோட வாரிசுக்கு குங்குமேஸ்வரன்னு கர்நாடகமான பேரை வச்சீங்க. நீங்க வச்சப் பேருங்கறதாலே அதை மாத்தக் கூடாதுன்னு மனோ அடம் பிடிக்கிறாரு. குடும்பத்திலே உங்க தலையீடு நாளுக்கு நாள் அதிகமாயிட்டிருக்கு”
“”பியுசி-யிலே பாúஸ பண்ண முடியாத சோகத்திலே காவி கட்டி சன்னியாசி ஆயீட்டீங்க. ஆசையை அடக்கி, உணவைச் சுருக்கி இறை தொண்டே கதின்னு இருப்பவர்தான் உண்மையான சாமியாருன்னு எங்க அப்பா சொல்லுவாரு. நல்லது கெட்டதுன்னா தவறாம ஆஜாராகும் நீங்க எந்த வகை சாமியார்? வெள்ளை வேட்டி கட்டிக்கிட்டு வீட்டோட இருங்க. வீட்டு வேலைக்காவது உபயோகமாயிருக்கும்”
மனோ வரும்வரை கூட காத்திருக்காது ஸ்ரீநிதியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார் பாலயோகி. தாடி மாமா என்று பின்னால் சென்ற குங்குமேஸ்வரனை முதுகில் அறைந்து உள்ளே தள்ளி கதவை சாத்தினாள் ஸ்ரீநிதி.
அம்மன்பாளையத்தில் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்த ஆசிரம குடிசைக் குடில். சாணத்தால் மெழுகப்பட்ட மண் தரையில் தாடியும் நீண்ட தலைமுடியுமாக இளம் வயது தாகூர் தோற்றத்தில் அமர்ந்திருந்தார் பாலயோகி. உட்கார்ந்த நிலையிலும் அவரது ஆறடி உயரம் நன்கு தெரிந்தது.
எதிரே தொழிலதிபர் நாகலிங்கம் அமர்ந்திருந்தார்.
“”சாமி உங்களைப் பார்க்க சென்னையிலிருந்து மனோ என்பவர் வந்திருக்கிறார்” சிஷ்யர் ஒருவர் உள்ளே வந்து பவ்யமாக வாயைக் கையால் பொத்தி சொன்னார். ஒரு நிமிடம் யோசித்தார் பாலயோகி.
“”பார்வையாளர் குடிலில் அமரச் சொல்லுங்க. வேற யாராவது அங்க காத்திருக்காங்களா?”
“”ஆசிரமத்துக்கு அடிக்கடி வந்துட்டு போற குழுமூர் ராமநாத அய்யர் வந்திருக்கிறார்”
“”அப்படியா, அவருக்கு அடுத்து மனோவை அனுப்புங்க”
பார்வையாளர் குடிலில் மனோ காத்திருந்தான். பாலயோகி தனது குடிலில் உரையாடுவது அவனுக்கு நன்கு கேட்டது.
“”சாமியாரா ஆயிட்டா தேவலாம்னு தோணுது. எவ்வளவு கிடைச்சாலும் இன்னும் வேணும் என்கிற பேராசையிலிருந்து மீளமுடியலை சாமி. எம்.பி.யாகணும், மேலிடத்தைப் பிடிச்சு எப்படியாவது இந்த முறை அமைச்சராகிடணும்னு தேர்தல்லே நின்னேன். லட்சக்கணக்கில் பணத்தை தண்ணியா செலவழிச்சும் ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலே அநியாயமா தோத்துப் போயிட்டேன்” ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் தொழிலதிபர்.
“”ஜெயிச்சு இருந்தா நீங்க இங்க வந்தே இருக்கமாட்டீங்க. உங்க கிட்ட ஆயிரம் குறைகள் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு ஏழை மாணவனை தேர்வு செய்து அவன் மேற்படிப்பு செலவை ஏத்துக்கிறவர் என்பதால்தான் உங்களைச் சந்திக்கவே ஒப்புக் கொள்கிறேன். சம்சார மனதோட சன்னியாசியா வாழ்வது பெரும் துன்பமாகிவிடும். சன்னியாசி மனதோடு சம்சாரியா வாழ்ந்து பாருங்க. வாழ்க்கை ஆனந்தமாயிருக்கும்”- விடை கொடுத்தார்.
குள்ளமான மெலிந்த உருவம். காதில் சிகப்பு கடுக்கன். மூக்குப் பொடியை உறிஞ்சியவாறு குடிலுக்குள் பிரவேசித்தார் ராமநாத அய்யர்.
“”பொடி போடற பழக்கத்தை நீங்க விட்டாதான் அடுத்து முறை ஆசிரமத்திலே உங்களுக்கு அனுமதி”
“”குழுமூர் ஓடைப் பக்கம் கிணறு தோண்டும் போது இந்த கற்கள் கிடைத்தன”- ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வெளிர் சந்தனமும், பழுப்பும் கலந்த பளபளப்பான சிறு கற்களை பாலயோகியிடம் அளித்தார் அய்யர்.
ஒவ்வொரு கல்லின் மத்தியிலும் குட்டி வட்டம். அதைச் சுற்றிலும் ராமர் பாண மல்லிகைப் பூவின் சிறிய இதழ்களைப் போன்ற ஐந்து இதழ்கள். அந்த இதழ்கள் மங்கலான கருநிறத்தில் அடுத்தடுத்த புள்ளிகளால் அமைந்திருந்தது. சிறிது நேரம் அதை உருட்டிப் பார்த்து ஆய்வு செய்தார் பாலயோகி.
“”உங்க ஊரிலே திருமாலின் கூர்ம அவதாரம் நிகழ்ந்தது என்ற செவிவழிச் செய்தி உள்ளது. இந்த கல் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை வழிபடுகிறவருக்கு அளவிடமுடியாத செல்வம், சந்தோஷம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டத்தை தூண்டும். தீய சக்திகளிடமிருந்து காக்கும் பாதுகாப்பு கவசமாகவும் இருக்கும். வீட்டு பூஜை அறையிலே வச்சு தினமும் பூஜை பண்ணுங்க. பல தலைமுறை நல்லா இருப்பீங்க”
“”அடையாளமா ஆசிரமத்திலே இருக்கட்டும்”- இரண்டு கற்களை அங்கே வைத்து உத்தரவு வாங்கிக் கொண்டார் ராமநாத அய்யர்.
“”வா மனோ. ஸ்ரீநிதி, குங்குமேஸ்வரன் எல்லாம் எப்படி இருக்காங்க?”
“”திரும்ப எங்களைப் பார்க்க வரவேயில்லையே. ஸ்ரீநிதியை நீங்க மன்னிக்கவேயில்லையா?. “ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் ஆசிரமம்’ என்ற பத்திரிகைச் செய்தியைப் பார்த்துவிட்டுதான் நீங்க இருக்கிற இடத்தை 5 வருஷம் கழிச்சு ஒருவழியா கண்டுபிடிக்க முடிஞ்சது.”
“”ஆங்கிலமே அறவே ஏறாத என்னை முறையான பயிற்சி கொடுத்து பத்தாம் வகுப்பிலே 90 மார்க் எடுக்க வச்சீங்க. வளர் இளம் பருவத்தில் என் கவனம் படிப்பில் மட்டுமே இருக்குமாறு அறிவுறுத்தி பிஞ்சில் பழுக்காது காப்பாத்தீனிங்க. விரும்பின படிப்பை அப்பாவிடம் போராடி என்னை சேர்க்க வச்சீங்க. குருதட்சணை என்னன்னு கேட்டபோது “நான் செத்தா நீதான் கொள்ளி போடணும்’ என்று சத்தியம் வாங்கினீங்க.”
“நீதான் அதை நிஜமாவே செய்யப்போறே’- மனதில் நினைத்ததை பகிரங்கமாக்காது புன்முறுவல் செய்தார் பாலயோகி.
“”சந்தையிலே வாழைக்காய் தாருக்கு நெம்பர் போடற வேலை, ரத்தப் பரிசோதனைக் கூடத்திலே ஆபிஸ் பாய் வேலைன்னு எங்க அப்பா உங்களை அனுப்பினதை நினைச்சு கடைசிக் காலத்திலே ரொம்பவே வருத்தப்பட்டாரு”
“”நல்லா படிச்சு பெரிய வேலையிலே நான் சேரணும்னு என்னோட மாமாவான உங்க அப்பா ஆசைப்பட்டாரு. ஆனா என்னாலே முடியலை. அதனாலே அவருக்கு கோபம். யார் பேரிலும் எனக்கு கொஞ்சமும் வருத்தமில்லை. ஆசையை விடாத சாமியார்னு என்னை ஸ்ரீநிதி சொன்னதில் தப்பில்லே. நான் அப்படித்தான் அப்போது இருந்தேன். ஆசையை துறக்க இன்னமும் முயற்சிதான் பண்ணிக்கிட்டிருக்கேன்”
குழைய வேகவைத்த மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை அழகாக கத்தரிக்கப்பட்ட பாக்கு மட்டையில் வைத்து இருவர் பக்கத்திலும் வைத்தார் ஆசிரமப் பணியாள்.
“”மடிப்பாக்கத்திலே சொந்தவீடு கட்டிகிட்டு இருக்கேன். அடுத்த மாதம் கிரகப் பிரவேசம். நீங்க கட்டாயம் வரணும்- கிரகப் பிரவேச பத்திரிகையை தந்தான் மனோ. பாலயோகி அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து வழியனுப்பினார்.
சொந்த வீட்டில் மனோ குடும்பம் குடியேறி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. குளித்து விட்டு தலையை துண்டால் துவட்டியபடி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான் மனோ.
தொலைபேசி சப்தம் கேட்டுதே யாரு?
“”அம்மன்பாளையம் ஆசிரமத்திலே பாலயோகி காலை 6 மணிக்கு இறந்துவிட்டாராம்” அப்பாகிட்ட சொல்லிடாதே என்று ஸ்ரீநிதி எச்சரித்தும் தகவலை தெரிவித்துவிட்டான் குங்குமேஸ்வரன்.
ஒருநிமிடம் செய்வதறியாது திணறிய மனோ, வேட்டியை இடுப்பில் அரைகுறையாகச் சுற்றிக் கொண்டு அலுவலகத்துக்கு ஃபோன் செய்து இரண்டு நாள் விடுப்பு சொன்னான்.
“”ஐ.டி. கம்பெனியிலே நாம இரண்டு பேரும் கைநிறையச் சம்பாதிக்கிறோம்னு யார் கண்ணு பட்டுதோ. ஆள்குறைப்பிலே எனக்கு வேலை போயாச்சு. உங்க சம்பளத்திலேயும் 30 சதவீத வெட்டு விழுந்துவிட்டது. இருக்கிற வேலையை ஒழுங்கா காப்பாதிக்கப் பாருங்க”
“”சாமியார் மாமா, “எனக்கு நீதான் கொள்ளி போடணும்னு’ எப்பவோ சொன்னதை வேதவாக்காக நினைச்சுக்கிட்டு நீங்க இப்ப கிளம்பறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை. நீங்க போய் கொள்ளி போடாவிட்டால் அவர் உடம்பு வேகாதா?”
மனைவி சொல்வதைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தால் புறப்பட முடியாது என்பது மனோவுக்கு தெரியும். எனவே மாற்றுத் துணிகளை அவனே எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினான்.
“”நாளை உனக்கு 10-வது ரிசல்ட் வருதுன்னு அப்பாகிட்ட சொல்லுடா. அவருக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காது” காபியை கணவனிடம் நீட்டியவாறு மகனிடம் சொன்னாள் ஸ்ரீநிதி.
“”நீ எல்லா பாடத்திலேயும் நல்ல மார்க் வாங்குவே குங்கு. இன்னிக்கு ராத்திரி பூரா உங்க அம்மா தானும் தூங்கமாட்டாள். உன்னையும் தூங்கவிடமாட்டாள். நாளைக்கு நெட்டிலே உன்னோட ரிசல்ட்டை பார்க்கிற வரைக்கும் அவளுக்கு இருப்புக் கொள்ளாது. அவளுக்கு நீ இன்னிக்கே படிச்சு முடிச்சு நாளைக்கே ஃபாரின் போயி லட்சம் லட்சமா சம்பாதிக்கணும்”
“”குங்கு, குரங்குன்னு என்ன பேரோ. முதல் வேலையா பேரை மாத்தி கெஜட்டிலே வெளியிட ஏற்பாடு செய்யணும். நாளைக்கே அந்த வேலையைச் செய்யறேன்” சப்தம் வெளியே வராது முணுமுணுத்தாள் ஸ்ரீநிதி.
போகிற நேரத்தில் எதையாவது சொல்லி மனைவியிடம் அர்ச்சனை வாங்கிக் கொள்ள வேண்டாம் என்று மகனின் காதில் “நாளைக்கு இரவு சென்னை திரும்பிடுவேன்’ என்று சொல்லிக் கொண்டு கிளம்பினான் மனோ.
மாரடைப்பில் திடீரென காலமான மாமாவுக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்துவிட்டு அவரது பழைய நினைவுகளிலிருந்து மீளாதவனாக ஆசிரமத்திலிருந்து புறப்பட்டான் மனோ. திடீர் கோடை மழை பெய்ததில் வசிஷ்ட நதியில் வெள்ளம் பிரவாகமாகக் ஓடிக்கொண்டிருந்தது.
“யோகி இதை உங்களிடம் தரச் சொல்லியிருந்தார்’ கூர்ம அவதாரக் கல்லை மனோவிடம் தந்தார் ஆசிரமப் பொறுப்பாளர். பாலயோகியை முன்பு சந்திக்க வந்தபோது அந்த அபூர்வக் கல்லை பற்றி அவர் கூறியது மனோ நினைவில் வந்தது. ஆசிரமம் அருகே டவுன் பஸ் பிடித்து ஆத்தூர் வந்து சென்னை பஸ்ஸில் ஏறி அமர்ந்தான்.
“”நம்ப பையன் மாநிலத்திலே இரண்டாவது இடத்திலே பாஸ் பண்ணியிருக்கான். போன இடத்திலேருந்து நீங்க ஒரு ஃபோன் போட்டு அவன்கிட்ட பேசியிருக்கலாம். அவனை எழுப்பட்டுமா?” நள்ளிரவு வீட்டில் மனோ காலடி எடுத்து வைத்த அடுத்த நொடி ஸ்ரீநிதி கேட்டாள்.
“”இப்போ அவனை தொந்தரவு பண்ணாதே. காலையிலே பேசிக்கலாம். இதை பூஜை அறையிலே பத்திரமா வையி”
“”இது என்ன கோலப்பொடி கல்லாட்டம் இருக்கு. இதுதான் உங்க சாமியார் மாமா உங்களுக்கு தந்த ஐஸ்வர்யமா?”
“”இருக்கிறவரைக்கும் அந்த மனுஷனை சபிச்சது போதாதா. முக்தி அடைந்தவரை இன்னும் எதுக்கு வீணா வம்புக்கு இழுக்கறே”
“”சாமியார் மாமாவை திட்டினா மனோவுக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துவிடுமே”-பழிப்புக் காட்டினாள் ஸ்ரீநிதி.
அலுவலகத்தில் இருந்து வந்ததும் வராததுமாக மனோவின் கழுத்தை மாலையாகக் கட்டிக் கொண்டாள் ஸ்ரீநிதி.
“”என்ன ஆச்சு உனக்கு. குங்கு எங்கே?”
“”நம்ம இரண்டு பேருக்குமே ஆஸ்திரேலியாவிலே பெரிய ஐ.டி. நிறுவனத்திலே வேலை கிடைச்சிருக்கு. லட்ச ரூபாயுக்கும் மேலே சம்பளம். நல்ல ஊரு. அங்கேயே செட்டிலாகப் பார்க்கணும். உங்க கம்பெனியிலே நாளைக்கே நோட்டீஸ் கொடுத்துடுங்க”
“”அப்புறம் ஒரு விஷயம். உங்க சாமியார் மாமா தந்தாருன்னு ஒரு கல்லை தந்தீங்களா. அது நம்ம வீட்டுக்கு வந்த நேரம்தான் இந்த அதிர்ஷ்டமோ? நாளையிலே இருந்து அதுக்கு பூஜை செய்யலாம்னு இருக்கேன்”
“”கூர்ம அவதாரக் கல் அதிர்ஷடம் தரும் கல்லா இல்லையா என்ற ஆய்வில் ஈடுபட நான் விரும்பலை. ஒருவழியா உன்னோட வாயாலே மாமாவுக்கு ஒரு பாராட்டு கெடச்சது சந்தோஷமாயிருக்கு. அவரோட ஆசியிலேதான் நமக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வந்ததுன்னு நம்பறேன்.
“”தாடி மாமான்னு நான் கத்தினதும் அம்மா என்னை அடித்து கதவைச் சாத்தியதும் மனசிலே அப்படியே இருக்கு. அவரை என்னாலே மீண்டும் பார்க்கவே முடியாது போய்விட்டது. பாலயோகி இருந்த ஆசிரமத்துக்கு என்னை ஒரு முறை கூட்டிக்கிட்டு போரீங்களா”" மனோவிடம் கோரிக்கை விடுத்தான் குங்குமேஸ்வரன். அவன் கைகளில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் இருந்தது.
வாணிஸ்ரீ சிவகுமார் -

காந்தாரியின் பதிவிரதா தன்மை
-----
“மரணம் என்பது நிச்சயமான ஒன்று, அது வந்து விட்டுப் போகட்டும். எனக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது.. அது நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் என்பதும் தெரியும். உயிருக்கு பயந்தவன் நானில்லை..
ஆனால் அவமானப்பட்டு உயிரிழப்பதை நான் விரும்பவில்லை.. 99 தம்பிகள், பாசமிக்க ஒரு மைத்துனன், உயிருக்கு உயிரான நண்பர்கள், மேலான உறவுகள், ரத கஜ தூரக பதாதிகள், நாடு நகரம் என கௌரவமாக வாழ்ந்தவன்..
என் மரணம் இழிந்த நிலையை அடைந்து விடக்கூடாது. காலம் என்னை அவமானத்தின் சின்னமாய் பேசிவிடக் விடக்கூடாது. அதற்காகத்தான் பயப்படுகிறேன்.. இந்த பீமன் என் தொடையை கதையால் அடித்து நொறுக்கி ரத்தத்தை குடிப்பதாக சபதம் செய்திருக்கிறான்.
பாஞ்சாலியோ.. என் ரத்தத்தினால்தான் தன் கூந்தலை முடிப்பாளாம்.. என்ன ஒரு அவமானம்..
இவ்வளவு வீராதி வீரர்கள் இருந்தும்.. தம்பிகள் இருந்தும்.. வீரமிக்க பாட்டனார், ஆசாரியர் அனைவரும் இருந்தும்.. இத்தனைக்கும் மேலாக வில் வித்தையில் ராமனுக்கு நிகரான வீரன், என் நண்பன் கர்ணன் இருந்தும் இந்தப் போரில் தோற்று விட்டேனே.. என்ன காரணம்?
என் வம்சம் முழுதும் என்னுடன் முடிந்து விடுமோ? என் தாய் தந்தையர் இருவரும் இருக்கிறார்கள்.. அவர்களுக்குப் பின்?..
இறைவன் என்னை முற்றிலுமாய் கைவிட்டு விட்டான் என்றே நினைக்கிறேன்.. ஒரு அரசனாக எனக்கு சரி என்று பட்டதைத் தான் செய்து வந்தேன்.. ஆனால் எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள்..
இந்தக் கண்ணன் உட்பட.. அவர்களின் மேல் எந்தத் தவறும் இல்லையாம்.. ஒருக்கால் உண்மை அதுதானோ? என் மேல்தான் தவறோ?
பாண்டவர்களிடம் கொஞ்சம் இரக்கத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டுமோ? தவறு செய்து விட்டேனோ? என்ன நினைத்து என்ன செய்வது? எல்லோரையும் இழந்து விட்டேன்.. இனி போய் என் ஒரு உயிருக்காக யாருடைய காலிலும் மண்டியிட மாட்டேன்.
இதுதான் விதி என்றால் அது அப்படியே நடந்து விட்டுப் போகட்டும்.. போராடிச் சாகிறேன்.. தொடையை நொறுக்கினால் என்ன? சிரசையே சிதைத்தால்தான் என்ன? உறவுகளை பலி கொடுத்த பதினேழு நாட்கள் போர் நடந்து விட்டது.. இன்னும் ஓரிருநாட்களில் என் தலை தரையில் சாய்ந்து விட்டால் பாண்டவர்களின் கொடி உயரும்.. உயர்ந்து விட்டுப் போகட்டும்..”.
துரியோதணனுக்கு உறக்கம் வரவில்லை.. எப்படி வரும்? வந்தால்தான் அது அதிசயம்.. பல சிந்தனைகள் அவன் மனதில் அலைபாய பாசறையில் உலவிக் கொண்டிருந்தான்.
பாசறை வாயிலில் நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது.. யாரது இந்த இரவு நேரத்தில்? அதுவும் பெண் போலத் தெரிகிறது.. யாராக இருக்கும்..
‘யார் அது?’ துரியோதணன் குரலைச் சற்று உயர்த்தினான்.
பதில் பேசாமல் அந்த பெண்ணுருவம் உள்ளே நுழைந்தது..
‘அம்மா.. நீங்களா? இந்த நேரத்தில்.. நாய் நரிகளும் , கழுதைப் புலிகளும் நடமாடும் இந்த யுத்த பூமியில்.. நீங்கள் ஏனம்மா வந்தீர்கள்?’ துரியோதணின் குரல் நெகிழ்ந்தது . கண்களில் நீர் துளிர்த்தது.
‘மகனே துரியோதணா!’ காந்தாரி துரியோதணனை ஆசையுடன் அணைத்துக் கொண்டு அவனது தலையை வருடினாள்.
‘நீ இங்கே மனம் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருக்க.. என்னால் எப்படியப்பா நிம்மதியாக இருக்க முடியும்? உன்னை சந்தித்து பேசி விட வேண்டும் என்று இதயத்தில் ஓர் உந்துதல்.. அதனால் ஓடோடி வந்தேன்..’
‘அம்மா! இனிமேல் எங்கே என் குரலைக் கேட்க முடியும் என்று வருந்துகிறீர்களா? 99 பிள்ளைகளை பறிகொடுத்து விட்டீர்கள்? நான் ஒருவன் போனால் என்ன இருந்தால் என்ன? ‘
‘துரியோதணா! கௌரவக் குலச் செல்வமே! எங்களுக்கு கொள்ளிப்போட நீ ஒருவன் இருக்கிறாய் என்று நம்பிக்கையில்தான் இந்த உயிரை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறேனப்பா.. நீ இப்படியெல்லாம் பேசாதே.. எனக்கு தாங்கவில்லை..’
‘அம்மா! நாளை என் இறுதி நாள் என்றே என் உள்ளுணர்வு சொல்கிறதம்மா.. வீரனுக்கு நித்தம் மரணம் தானம்மா.. மரணத்தின் எதிர் நிற்க நான் பயப்படவில்லை.. வயதான காலத்தில் பெற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைக் கூடச் செய்யாமல் உங்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டுச் செல்கிறேனே என்பதுதான் என் மன வேதனைக்குக் காரணம்.. உறக்கம் தொலைந்ததற்கு காரணம். வேறொன்றும் இல்லையம்மா..’
‘மகனே சுவேதனா! நீ எங்களுக்கு வேண்டும்.. நான் சொல்வதை தயவு செய்து கேள்.. என் வேண்டுகோளை மறுக்காதே.. எனது கற்பு நெறியும் பதிவிரதா தர்மமும் உண்மையாக இருக்குமானால் எந்த அஸ்திரத்தினாலும் உன்னை வெல்ல முடியாது. மரணமும் உன்னை நெருங்காது.. நான் சொன்னபடி செய்வாயா மகனே? ‘
‘அம்மா.. நான் உயிர்வாழ்வது உங்களுக்கு முக்கியம் என்றால் அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.. ஆனால் அதற்காக யார் காலிலும் விழச்சொல்லாதீர்கள் உங்கள் மகன் வீரத்தோடும் மானத்தோடும் வாழ்ந்தான்.. மறைந்தான் என்பதைத் தவிர வேறொரு அவச் சொல்லை எனக்குத் தேடித் தந்துவிடாதீர்கள் அம்மா!’
‘மகனே! நீ யார் காலிலும் விழ வேண்டாம்.. இந்தப் போர்க்களத்தின் அருகிலுள்ள தடாகத்தில் குளித்துவிட்டு.. குழந்தையாய் எப்படி என் கையில் தவழ்ந்தாயோ.. அந்த நிலையில் உடலில் ஓராடையும் இன்றி நீ வா..
இத்தனைக் காலம் என் கணவரைப்போலவே நானும் வெளி உலகத்தை பார்க்கக்கூடாது என்று என் கண்களைக் கட்டி விரதமிருக்கின்றோனோ.. அந்த கட்டுகளை களைந்து, என் இருவிழிகளாலும் உன்னை பார்க்க வேண்டும்..
அப்படி என் கண்களின் வழியே நான் உன்னைப் பார்த்து , நீ மரணமின்றி இன்னும் நெடுநாள் வாழ வேண்டும் என்று ஆசிர்வாதிக்கிறேன்.. அதன் பின் உன்னை மரணம் நெருங்காது..’
‘அம்மா! என்ன இது?…’
‘மறுக்காதே மகனே! நான் உன் தாயடா.. என் பேச்சைக் கேள்..’
தாயின் பேச்சைத் தட்ட மனமின்றி துரியோதணன் பாசறையை விட்டு வெளியேறி தடாகத்தை நோக்கி நடந்தான்.
அதே சமயத்தில் இந்த உரையாடல் , பாண்டவர்களின் பாசறையில் இருந்த சர்வ வியாபியான கண்ணனின் மனதில் கேட்டது.
காந்தாரியின் பதிவிராதா தன்மையையும் அவளது கற்பின் ஆற்றலையும் கண்ணன் அறிவான்.. அவள் கூறியது மட்டும் நடந்து விட்டால் துரியோதணனை வெல்ல முடியாது என்று கவலைப்பட்டான்.. என் சக்திகளும் காந்தாரியின் கற்பின் சக்தி முன் பலிக்காது.. என்ன செய்யலாம்..யோசித்தான்.
திரௌபதை அவிழ்ந்த கூந்தலுடன் செய்த சபதமும் அவனது மனதில் தோன்றியது..
பாசறையை விட்டு கண்ணன் வெளியேறினான்.. தடாகத்தின். அருகில் உள்ள சோலையில் நின்று கொண்டான்.
துரியோதணன் தடாகத்தில் மூழ்கி குளித்தான்.. தன் உடைகளை அங்கேயே களைந்து ஓர் ஓரத்தில் போட்டு விட்டு , உடைகளற்ற உடலில் நீர்த் துளிகள் வழிந்தோட கரையேறி பாசறையை நோக்கி¢ நடந்தான்..
“துரியோதணா! என்ன இது கோலம்? நீயா இப்படி? எல்லா சாஸ்திரங்களும் அறிந்தவன் தானே நீ.. இந்த வானமும் கிரகங்களும் நட்சத்திரங்களும், இரவுத் தேவதைகளும் பார்க்க நிர்வாணமாய் வரலாமா? எங்கே உன் உடைகள்? இதோ என்னிடம் புதிய உடைகள் இருக்கிறது அணிந்து கொள்.. “ என்றபடியே கண்ணன் துரியோதணனின் முன்னே வந்து கொண்டிருந்தான்.
‘கண்ணா! வழி விட்டு விலகி நில்.. உன்னிடம் பேசுவதற்கு எனக்கு நேரமில்லை.. நான் என் தாயைச் சந்திக்க வேண்டும்..’
“என்ன இது அநியாயம்.. துரியோதணா.. நீ என்ன சின்னக் குழந்தையா? இல்லைச் சிறுவனா? உடையின்றி, பிறந்த மேனியுடன் தாயின் முன் செல்வதற்கு உனக்கே அசிங்கமாய் தெரியவில்லையா?
என்னதான் உன் தாய் கண்ணைக் கட்டிக் கொண்டிருந்தாலும்.. அவள் முன் ஒரு வயது வந்த ஆண்மகன் , அவன் மகனாகவே இருந்தாலும் இப்படி நிற்பது மிகப்பெரிய பாதகமானச் செயல் என்பது உனக்குத் தெரியாதா?
எங்கேயாவது இப்படி நடந்தது எனக் கேள்விப்பட்டிருக்கிறாயா? சாஸ்திரங்களை படித்தவன்தானே நீ? எதற்கு இந்த விபரீத புத்தி.?” யாராவது இதை அறிந்தால் அவர்கள் உன் தாயைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நாளை இந்த உலகம் உன்னைப் பற்றி என்ன பேசும்?
கண்ணனின் பேச்சால் துரியோதணன் குழம்பிப் போனான்.
‘கண்ணா.. என் தாயின் கட்டளைப் படியே நான் செல்கிறேன்.. எனது நன்மைக்காகவே இதைச் செய்யச் சொல்லி வற்புறுத்தினார்..’
‘எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே.. நாளை உன் செயல் எப்படிப் பேசப்படும் என்று எண்ணிப் பார்த்தாயா?’
‘கண்ணா! இப்போது நான் என்னதான் செய்யட்டும்?’
‘நீ உடைகள் அணியாமல் இந்த வாழை மரத்தின் மட்டைகளை உன் இடுப்பில் அணிந்து கொண்டு செல்.. அது கூட ஒரு விதத்தில் ஏற்புடையதுதான்.. சாஸ்திரக் குற்றமும் இல்லை.. உன் தாயின் கட்டளையையும் நீ நிறைவேற்றியது போல் ஆகும்..’
‘சரி கண்ணா.. எனக்கும் அதுதான் சரியெனப்படுகிறது’.. வாழை இலை ஒன்றை எடுத்து தன் இடுப்பில் கட்டிக் கொண்டான் துரியோதணன்.
வந்த வேலை முடிந்த திருப்தியில் அங்கிருந்து புறப்பட்டான் கண்ணன்.
வந்து விட்டேன் அம்மா! பாசறைக்கு வந்து தாயின் முன் நின்றான் துரியோதணன்.
காந்தாரி இறைவனை வேண்டினாள்.. ‘நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் என் மகனை நான் பார்த்த பின், என் பார்வை பட்ட அவன் உடலிலிருந்து உயிரை வலுக்கட்டாயமாக எவராலும் அழிக்க இயலாமல் போகவேண்டும்..
இதோ இத்தனைக் காலம் நான் கொண்டிருந்த விரதத்தையும் மீறி இப்போது என் கண்களின் கட்டுகளை அவிழ்க்கிறேன்’.. காந்தாரி தன் கட்டுக்களை அவிழ்த்தாள்.
எதிரில் நின்ற மகன் துரியோதணனை வாஞ்சையுடன் பார்த்தாள்.. ‘இவன் பிறந்ததிலிருந்து நான் இவனைப் பார்க்க வில்லை.. இதோ என் முன்னால் என் மூத்தச் செல்வன்.. எவ்வளவு கம்பீரத்துடன் அவன் முகம் காட்சியளிக்கிறது..
கண்களில் மட்டுமே மெல்லிய சோகம் படர்ந்திருக்கிறது.. திரண்ட புஜங்கள் அவனது வீரத்தைப் பறைசாற்றுகிறது.. அவன் என்னை கும்பிட்டு வணங்கிக்கொண்டிருக்கும் உறுதியான கைகள் எவராலும் தோற்கடிக்கவே முடியாத மாவீரன் என்றல்லவாச் சொல்கிறது..
எப்படி என் மகனை தோல்வி நெருங்க முடியும்.. என்னால் நம்ப முடியவில்லையே.. அய்யோ! என்ன இது, இவன் இடுப்புக் கீழ் வாழை இலையை கட்டிக¢கொண்டிருக்கிறானே.. இடுப்புக்கு கீழ் இவன் தாக்கப்பட்டால் இவன் உயிர் போய்விடுமே.. கடவுளே! நான் என்ன செய்வேன்’.. காந்தாரி வருத்தத்தினால் கண்ணீர் வடித்தாள். கண்களைக் கட்டிக் கொண்டு பாசறையை விட்டு வெளியேறினாள்..
விடிந்தது.. போர் தொடங்கி பதினெட்டாம் நாள் யுத்தம். பீமனுக்கும் துரியோதணனுக்கும் கடும் கதையுத்தம். துரியோதணனை துரத்தி துரத்தி அடித்தான் பீமன்.. துரியோதணன் களைத்துப் போனாலும் , சண்டையைத் தொடர்ந்தான்.. பீமனை அடிக்க, தன் வலுவனைத்தையும் ஒன்று திரட்டிக்கொண்டு ஆக்ரோஷத்தோடு கத்தியவாறு கதையை ஓங்கினான்.
கண்ணன் பீமனுக்கு சைகைக் காட்டினான்.
ஓங்கிய கதை கீழே விழுவதற்குள் பீமனின் கதை துரியோதணனின் இடுப்பிற்கு கீழ் வலுவாய் தாக்கியது. துரியோதணனின் தொடை எலும்பு நொறுங்கும் சத்தம் கேட்டது.
* *
எங்கு தர்மம் இருக்கிறதோ.. அங்கே தான் ஜெயம் உண்டாகும். இறைவனும் தர்மத்தின் பக்கமே இருப்பான். துரியோதணனிடம் சிறந்த பண்புகள் இருந்தாலும், அவன் பாதை தர்மத்திற்கு விரோதமாகவே இருந்தது.
வீரத்தின் மூலம் அல்லாமல் வஞ்சக சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களின் நாட்டினை பறித்துக் கொண்டு, பாண்டவர்களின் உடைகளை களைந்து சாதாரண உடை கொடுத்து அவமானப்படுத்தி, சகோதரர்களின் மனைவி என்றும் பாராமல், பெண் என்ற இரக்கமும் கொள்ளாமல் திரௌபதியை சபையோர் முன் நிறுத்தி , மானப்பங்கப் படுத்தி, பாண்டவர்களை அழிக்க தர்மத்திற்கு முரணாகச் செயல்பட்டான்.
பாண்டவர்களோ.. கொடுத்த வாக்குபடி காடுகளில் வாழ்ந்து.. நியாயமாக தங்களுக்கு சேர வேண்டிய நாட்டினை கேட்டார்கள். அவர்களுக்காக கண்ணனே தூது சென்றான். தன்னிடம் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் , படை பலம் இருக்கிறது என்ற ஆணவத்தினால் ஐந்தடி நிலம் கூட கொடுக்க மறுத்து விட்டான் துரியோதணன். பாசமும் இல்லை.. இரக்கமும் இல்லை.
தர்மம் ஜெயிக்க வேண்டும். கற்புக்கரசியான திரௌபதியின் சபதம் பலிக்க வேண்டும் என்பது தானே நியாயம். கண்ணன் நியாயத்தின் பக்கமே செயல்பட்டான்.
அதே சமயம் காந்தாரியின் பதிவிராதா தன்மையின் சக்தியையும், அவள் வாக்கும் பலிதம் ஆகும் என்பது தெரிந்து , அது நடக்காமலிருக்க முயற்சியை மேற்கொண்டான்.
தான் தாயின் கட்டளையை முழுமையாய் நிறைவேற்ற முடியாமல் போனான் துரியோதணன்.
சாஸ்திரம் கூறும் ஒழுக்க நெறியும் காப்பாற்றப்பட்டது. தர்மமும் ஜெயித்தது.
- கதை: ஸ்ரீகிருஷ்ணன்

வேதாளமும் வேதியனும்
-----
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பிரேதத்தைக் கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது.
வாரும் பிள்ளாய் வேதியனே! நான் கொடாக் கண்டனாக இருந்தாலும் நீ விடாக் கண்டனாக இருக்கிறாய்.! முடியாது என்று தெரிந்த பின்னும் பின்வாங்காமல் நீ விழலுக்கு நீர் இறைத்துக் கொண்டிருக்கிறாயோ என்றுத் தோன்றுகிறது. சரி, பார்க்கலாம் இதில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை.
வேதியா! இந்த மனித வாழ்க்கையே ஒரு புதிர்போல்தான். சில சமயம் சில கேள்விகளுக்கு விடைதெரியாது. எது சரி எது தவறு என்பதைச் சொல்லமுடியாமல் அறிவு மயங்கி நிற்கும் நேரமும் உண்டு.
சிலரின் செயல்கள், இப்படிப்பட்ட மனிதர்களும் இப்பூமியில் வாழ்கிறார்களா என்று நம்மை திகைப்பில் ஆழ்த்துவதும் உண்டு.
அப்படிப்பட்ட பெரியார் ஒருவரின் கதையை இன்று உனக்காக சொல்லப் போகிறேன்.
அவர் சிவபக்தர். சிவ பக்தர் என்பதை விட சிவனின் மேல் அளவற்ற பித்து உடையவர். சிவனடியார்களுக்கு செய்யும் தொண்டு அந்த ஈசனுக்கே செய்யும் தொண்டு என்று வாழ்ந்து வந்தார். இயற்பகை என்பது அவரது பெயர். ஊர் காவிரிப் பூம்பட்டினம்.
பரம்பரைத் தொழில் வாணிபம் என்பதால் சொத்து பத்து அதிகம். அவருக்கு ஒரு அழகு மனைவி. கணவன் கிழித்த கோட்டைத் தாண்டாதவள். பெயர் மணக்குல மடந்தை.
சிவனின் அடியவர்கள் அனைவருக்கும் அவரின் வீட்டில்தான் தினசரி உணவு. அதிகாலையில் பற்ற வைக்கப்படும் அடுப்பு இரவு 12மணிவரை எரிந்து கொண்டேயிருக்கும்.
இயற்பகை வீட்டிற்கு போனால் வயிறார உண்டு வரலாம் என்று நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு வருபவர் ஏராளம்.
சமையல்ஆட்களை வைத்து சமைத்து, பசியோடு வரும் அடியர்களுக்கெல்லாம் இன்முகத்துடன் பரிமாறுவாள் இயற்பகையின் மனைவி.
கணவர் இருந்தாலும் வியாபார விசயமாய் வெளியில் சென்றிருந்தாலும் சிவனடியார்களுக்கு உணவிடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்தது.
தன்னைத் தேடி வரும் சிவனடியார்களுக்கு உணவு மட்டும் அல்ல, அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் கொடுத்தனுப்புவார். இதனால் அவரது பெயர் ‘இல்லையென்று சொல்லாத இயற்பகை’ என்றே மக்களால் வழங்கப்படலானது.
அன்று இயற்பகை வீட்டில் சுமங்கலி பூஜை. தன் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று சுமங்கலிப் பூஜைக்கு ஏற்பாடு செய்கிறாள் மணக்குல மடந்தை. இப்பூமியில் நெடுநாள் வாழ, நீண்ட ஆயுள் வேண்டும் என்ற ஆசையெல்லாம் இயற்பகைக்கு இல்லை.
சுமங்கலி பூஜையில் கலந்து கொள்வதற்காகவேணும் நிறைய பேர் இல்லத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு உணவளித்து, தேவையான பொருட்களையும் கொடுத்தனுப்பலாம் என்பதால் மனைவியின் வேண்டுகோளுக்கு சம்மதம் தெரிவித்தார்.
ஊரே திரண்டது. சுமங்கலிகள் அனைவரும் ஒன்று கூடி மகாலக்ஷ்மியை வழிபட்டனர். வழக்கமாய் நடைபெறும் சிவவழிபாடும் நடைபெற்றது. அனைவரும் வயிறார அறுசுவையுடன் உணவுண்டு மகிழ்ந்தனர்.
வந்திருந்த சுமங்கலிகள் அனைவருக்கும் உயர்ரக பட்டுச் சேலைகள் ,இன்னும் அவர்களே எதிர்பார்க்கா வண்ணம், தட்டுகளில் அணிகலன்களும் தங்க குங்குமச் சிமிழ்வைத்துத் தரப்பட்டது.
சிவனடியார்களின் கூட்டமும் அன்று அதிகம் . அனைவரும் திருப்தியுடன் உண்டு வாழ்த்திச் சென்றனர்.
மாலை நேரம். இயற்பகை வீட்டைச் சுற்றி வந்தார். நெருங்கிய உறவினர் ஒரு சிலரைத் தவிர பிறர் திரும்பிவிட்டனர். பணியாட்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அடுப்பில் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது.
‘மடந்தை’ பணியாட்கள் அனைவரும் உண்டுவிட்டார்களா? வேறுயாரேனும் உணவு உண்ணாமல் இருக்கிறார்களா?
‘எல்லோரும் உணவருந்தி விட்டார்கள் ஸ்வாமி, உணவுண்ட திருப்தியுடன் சிவனடியார்களும் திரும்பி விட்டனர். தாங்கள் மட்டும் இன்னும் உணவருந்தவில்லை’.
‘நீ உணவு உண்டாயா மடந்தை?’
தங்களை விட்டு நான் என்று தனியா உணவருந்தியிருக்கிறேன் ஸ்வாமி
சரி வா, இருவரும் சேர்ந்து உண்ணலாம்.
இருவரும் உட்பக்கமாகத் திரும்பும் வேளையில் வாயிலில் ’சிவோஹோம்’ என்று குரல் கேட்டது.
இயற்பகை கண்கள் மலர வாயில் பக்கம் திரும்பினார்.
சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
இயற்பகையும், மடந்தையும் விரைந்து சென்று சிவனடியாரை வணங்கி ,வாருங்கள் ஸ்வாமி! உணவருந்தலாம். அழைத்தனர்.
உள்ளே அழைத்துச் சென்று சிவனடியாருக்கு கைகால் கழுவ நீர் கொடுத்தார்கள்.
அதன்பின் தம்பதி சகிதமாய் அடியாருக்கு பாத பூஜை செய்து , அவரது காலில் விழுந்து வணங்கி, அவரை உணவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று, அருகிருந்து பரிமாறினர்.
சிவனடியார் திருப்தியுடன் உண்டபிறகு கைகழுவ சொம்பினால் நீரெடுத்துக் கொடுத்தாள் மடந்தை.
நிமிர்ந்து பார்த்தார் அடியார். ய்ஏவ்… ஏப்பம் விட்டார்.
அடியார் கைத் துடைக்க புதுத் துணியை பணிவுடன் நீட்டினாள் .
ம்ம் .. இல்வாழ்க்கைக் கூட சுகமாக இருக்கும்தான் போலிருக்கு.. பணிவிடை செய்ய இப்படி ஒரு பெண்ணிருந்தால் சுகமோ சுகம். தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே முன் கதவை நோக்கி நடந்தார் அடியார்.
‘ஸ்வாமி! என்ன சொன்னீர்கள்? ஏதோ கேட்டது போல் தோன்றியது சரியாக விளங்கவில்லை’. பணிவுடன் கேட்டார் இயற்பகை.
‘ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள் உன்னைப் பற்றி. ஈசனின் மேல் அளவு கடந்த பக்தியாமே.?’
ஆம் ஸ்வாமி! இந்த அடியேனுக்கு எல்லாமே ஈசன்தான். இந்த உடல் ,உயிர் , என் உடைமைகள் அனைத்தும் அவருக்கே சொந்தம். அடியார்க்கு செய்யும் தொண்டு , அந்த மகேசனுக்கு செய்யும் தொண்டெனவே வாழ்ந்து வருகிறேன் ஸ்வாமி.
‘ஆம்.. அதையும் தான் கேள்விப்பட்டேன். அதோடு இன்னொன்றையும் கேள்விப்பட்டேன். இல்லையென்று சொல்லாமல் கொடுப்பவனாமே நீ?’
‘ஆம் ஸ்வாமி! அந்த பரமனின் அடியவர்கள் என்னிடம் இருப்பதை எதைக் கேட்டாலும் இல்லையென்னாது கொடுப்பது என்பாக்கியம் என்றே வாழ்ந்து வருகிறேன்.’
‘எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவாயா?’
‘என்னிடம் இருப்பதை எதைக் கேட்டாலும் உடனே கொடுத்து விடுவேன் ஸ்வாமி. என்னிடம் இல்லையென்றால் வெளியில் வாங்கி வந்தாவது கொடுப்பேன் ஸ்வாமி.’
‘அப்படியா? சந்தோஷம். உன்னிடம் இருப்பது ஒன்று எனக்குத் தேவைப்படுகிறது தருவாயா இயற்பகை?’
‘தந்தேன் ஸ்வாமி! இனி அப்பொருள் என்னுடையது இல்லை, உங்களுக்குச் சொந்தமானது. என்னவென்று சொல்லுங்கள் இப்பொழுதே எடுத்து வந்து தருகிறேன்.
‘வாக்குமாற மாட்டாயே இயற்பகை?’
‘ஸ்வாமி! என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? கொண்ட கொள்கையிலிருந்து வாக்கு மாற மாட்டான் இந்த இயற்பகை. இது நான் வணங்கும் எம்பெருமான் ஈசன் மேல் சத்தியம்.!’
‘அப்படியென்றால் உன் மனைவியை எனக்குத் தா இயற்பகை! உனக்கு பணிபுரிந்த அவள் இனி எனக்குப் பணி புரியட்டும்’.
‘தந்தேன் ஸ்வாமி! இப்பொழுதே அழைத்துச் செல்லுங்கள்.’
‘மடந்தை வா இங்கே. உன்னை இந்த சிவனடியார்க்கு தருவதாக வாக்களித்துவிட்டேன். என் சொல்லை மீறாத தர்ம பத்தினி நீ. என் வாக்கை காப்பாற்று. இந்த சிவனடியாருடன் செல்.’
கணவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள் மடந்தை. ‘ஸ்வாமி! உங்கள் கரம் பற்றிய நாளிலிருந்து உங்கள் வாக்கை இதுவரை நான் மீறியதில்லை. இப்போது மட்டும் மீறுவேனா? உங்கள் கட்டளைப்படியே சிவனடியாருடன் செல்கிறேன். விடைகொடுங்கள்.’
‘மகிழ்ச்சி மடந்தை. ஸ்வாமி! மடந்தை இனி உங்கள் சொத்து. அழைத்துக் கொண்டு புறப்படுங்கள். நானே ஊர் எல்லைவரை வந்து உங்களை வழியனுப்பி வைக்கிறேன்.’
இயற்பகை சிவனடியாரையும் , மடந்தையையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
விவரம் தெரிந்து உறவுகள் கொந்தளித்தனர்.
கட்டிய மனைவியை எவனாவது அடுத்தவனுக்கு விட்டுக் கொடுப்பானா? என்ன மனிதன் இவன்?
ஈசனின் மேல் பக்தி இருக்கவேண்டியதுதான், பைத்தியக்காரனாக அல்லவா இவன் இருக்கிறான்.
என்ன தினவிருந்தால் அந்தச் சாமியார் அன்னமிட்ட கையையே அசிங்கப்படுத்த நினைப்பான்? வாருங்கள், மனைவியை வைத்து காப்பாற்ற வகைதெரியாத அந்த மடையனுக்கும் , பெண்ணை வெறும் பொருளாக எண்ணும் அந்த சாமியாருக்கும் சரியான பாடம் புகட்டுவோம்.
ஒன்று திரண்டு எல்லோரும் விரைந்தனர். அதற்குள் மூவரும் ஊர் எல்லையை நெருங்கி விட்டிருந்தனர்.
‘நில் இயற்பகை! வைத்து வாழத்தானே என் பெண்ணை உனக்குக் கொடுத்தேன். இப்படி வந்தவன் போனவனுக்கு தாரை வார்க்கவா கொடுத்தேன். பெண்டாட்டியை நீ வேண்டுமானால் விட்டுக் கொடுக்கலாம். என்பெண்ணை ஒரு பரதேசி கூட்டிச் செல்ல ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன்.’
‘அவள் என் மனைவி . தாரை வார்த்துக் கொடுத்த போதே உங்களுக்கு அவள் மீது உள்ள உரிமைபோய்விட்டது. அவளின் வாழ்க்கை எப்படி என்பதைத் தீர்மானிப்பது என்னிஷ்டம். எல்லோரும் வழிவிட்டு விலகுங்கள். மீறி எவனாவது எங்களைத் தடுத்தால் அடுத்த நொடியில் அவன் தலை தரையில் உருளும். இயற்பகை வாளை உருவி உயர்த்தினார்.’
‘முட்டாள். தாரை வார்த்துக் கொடுத்து விட்டால் உரிமை போகலாம், உறவு எப்படியடா போகும்? பெற்றோர் பிள்ளை உறவு சுடுகாடு மட்டும் தொடரும் பந்தம். அது என்றும் நீங்காது. என் பெண் விதவையானாலும் சரி, இப்படி ஒரு ஈனமான காரியத்தை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்’. மடந்தையின் தகப்பனும் வாள் உருவினான்.
பல தலைகள் தரையில் உருண்டன. இயற்பகையின் வாழ்வீச்சுக்கு பயந்த மற்ற உறவினர்கள் பின் வாங்கினர். இயற்பகை மனைவியை சிவனடியாருடன் அனுப்பி வைத்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார்.
வேதியா! கதை இத்துடன் முடிகிறது. கேள்விக்கு வருகிறேன்.
தன்னையே நம்பி வந்த ஒரு பெண்ணை, ஆயுள் முழுதும் உன்னை வைத்துக் காப்பாற்றுவேன் என்று அக்கினியை வலம்வந்து கரம் பற்றிய மனைவியை , ஒரு ஆண்மகன், அடுத்தவனோடு அனுப்பலாமா?
என்னதான் இறைபக்தி என்றாலும், கொள்கையென்றாலும் இப்படி கண்மூடித்தனமாய் நடந்து கொள்வது அறிவீனம் இல்லையா?
குடும்பஸ்தன் ஒருவன் இப்படி தன் பெண்டாட்டி, பிள்ளைகளை தானம் செய்வதெல்லாம் முறையா? இயற்பகை செய்தது சரியா? தவறா? என் கேள்விக்கு பதில் சொல்! தெரிந்தும் தெரியாததும் போல் இருந்தாயானால் உனக்குத் தான் ஆபத்து. உன் தலை வெடித்துச் சிதறும்..
“வேதாளமே! நீ ஆரம்பத்தில் கூறியது போல் இந்த மனித வாழ்க்கையே புதிரானதுதான். வாழ்க்கையில் நடந்து விடும் சில விசயங்களை நம்மால் விளங்கிக் கொள்ளவே முடியாது.
வேதாளமே! இந்த வாழ்க்கை என்பது யானையைப் போல். அறிவு சிறு எறும்பைப் போல். சில கேள்விகளுக்கு அறிவால் விடை தேட முடியும். சில கேள்விகளுக்கு விடையை மனதால்தான் தேட முடியும்.
இது போன்ற தருணங்களில் எது சரி? எது தவறு? என்பதை தீர்மானிக்கும் வேலையை மனதிடம் விட்டுவிடுவதே சரியானது.
ஞானிகள் சொல்வார்கள்! இந்த உலக வாழ்க்கையே மாயை, உறவுகளும் மாயை என்று. கிருஷ்ணரிடம் ஒரு முறை இந்தக் கேள்வியை நாரதர் கேட்டார். கிருஷ்ணா!, மாயை, மாயை என்கிறார்களே அப்படியென்றால் என்ன?
கிருஷ்ணர் சிரித்தபடி, நாரதரே, தாகமாய் இருக்கிறது. எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா பார்க்கிறீர்களா? என்று கேட்கிறார்.
தண்ணீரைத் தேடிச் செல்கிறார் நாரதர். அங்கே ஒரு அழகியைப் பார்த்து காதல் கொள்கிறார். மணந்து கொள்கிறார். பிள்ளைகள் பிறக்கிறார்கள். காலங்கள் பல கடக்கிறது.
ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் வருகிறது. வாழ்ந்த வீடு அடித்துச் செல்லப்படுகிறது. நாரதர் தன் மனைவி பிள்ளைகளையெல்லாம் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்.
பிள்ளைகள்ஒவ்வொருவராக தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இறுதியில் மனைவியும் தண்ணீரில் அடித்துச்செல்லப்படுகிறாள். துக்கம் தாங்காமல் நாரதர் ஓ வென்று அலறி கதறுகிறார்.
கிருஷ்ணர் நாரதரை தட்டி எழுப்புகிறார். நாரதரே, தண்ணீர் கொண்டு வருகிறேன் என்று சென்றீர்கள்! ஒருநாழிகை ஆகிவிட்டதே ,ஆளைக்காணாமே என்று வந்தேன், ஏன் இங்கே படுத்துக்கிடக்கிறீர்கள்? என்று வினவுகிறார்.
நாரதர் எழுந்து என்னது ஒரு நாழிகைதான் ஆனதா? அங்கே ஒரு வாழ்க்கையே நடந்து முடிந்து விட்டதே. கிருஷ்ணா இதுதான் மாயையா? நான் ? என் சுகம், துக்கம் என் மனைவி பிள்ளைகள் பிரிவு, எல்லாமே மாயையா? விளங்கிக் கொண்டேன். என்கிறார் நாரதர்.
வேதாளமே! இந்த வாழ்க்கை மாயை என்றால் நிஜம் எது? நிரந்தரம்எது? பரம்பொருளின் பாதம் ஒன்றே! அதைப் பற்றிக் கொள்வதற்கான வழியைக் கண்டறியவே இந்த வாழ்க்கையைப் பயன்படுத்தின்கொள்ள வேண்டும்.
ஞானிகள் இதை உணர்ந்து கொண்டவர்கள். எனவே அவர்கள் பந்த பாசத்தை அறுத்துக் கொண்டு வெளியில் வந்து விடுகிறார்கள். இல்லற வாழ்வில் உள்ளோன் படிப்படியாய் தான் இந்த நிலைக்கு வரமுடியும். ஒருசிலருக்கு ஒரு பிறவியிலே இந்த நிலை கிடைக்கும். சிலருக்கு பல பிறவிகள் ஆகலாம்.
இயற்பகை போன்றோர்கள் முற்றும் உணர்ந்த ஞானிகளுக்கு சற்றுக் குறைந்தவர்கள். ஆனாலும் இல்லற வாசிகளை விட மேம்பட்டவர்கள். அவர்களின் வழி பக்தி நெறி.
இறைவன் மேல் அதீத பக்தி வைப்பதினால் இறைவனைத் தவிர வேறொன்றையும் பெரிதாக எண்ண மாட்டார்கள். தன்னையே இறைவனுக்குத் தரத்துணிவார்கள்! நந்தனாரைப் போல். தன் உடல் உறுப்பையும் தரத்துணிவார்கள்! கண்ணப்பனைப் போல். தன் குழந்தை குட்டிகளையும் தரத்துணிவார்கள்! சிறுத்தொண்டரைப் போல். இயற்பகை இறைவன் மேல் கொண்டிருப்பதும் அத்தகைய பக்தித்தான்.
சாதாரண மனநிலை உள்ளவர்களுக்கு இது பைத்தியக்காரத்தனமான செயலாகத் தான் தெரியும். இது பக்தியின் உச்ச கட்டம் என்பது ஆழ்ந்து யோசிக்கையில் நம் மனதுக்கு புரியும்.
இறைத் தொண்டே பெரிதென வாழ்ந்த இயற்பகையும், கணவன் சொல்லை மீறாமல் நடந்து இறைசேவை செய்து வந்த மணக்குல மடந்தையும் ஈசனின் திருவடியில் இணைவதுதான் நீ கூறிய கதையின் முடிவு.
முடிவு சுபமானதாவே இருக்கிறது. எனவே இயற்பகை செய்தது சரியே! என்று என் மனது பதில் சொல்கிறது.” வேதியன் கூறி முடிக்கிறான்.
வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன் மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால் வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் புளிய மரத்திற்குச் சென்று, கிளையொன்றைப் பற்றிக்கொண்டு தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.
கதை:- ஸ்ரீகிருஷ்ணன்

மாற்றம்தான் ஏமாற்றமல்ல!
----
வாணிஸ்ரீ சிவகுமார் -
“தனக்கு ஐந்து ஆண் பிள்ளைகள்’ என்ற நினைப்புத்தான் மாம்சா மரைக்காயரின் ஒரே சந்தோசம். மகா சந்தோசம். தனது ஆண் வாரிசுகளின் எண்ணிக்கை பற்றிய மகிழ்ச்சியானது, சில சமயம் மமதை கலந்த மயக்கமாகக் கூட இருந்திருக்கிறது, மரைக்காயருக்கு.
பொன் அம்பாரி பூட்டி, வைர முகபடாம் தரித்த யானைகளை ஓட்டிச் செல்கிற கம்பீரத்துடன் தான் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துக் கொண்டு போவார், மாம்சா.
காலண்டர்கள் பல கரைந்து போனதில் பையன்கள் எல்லாரும் இளைஞர்கள் ஆகிவிட்டார்கள்.
தனது மளிகைக் கடைக்கு சாமான் வாங்க வருகின்ற தனது பால்ய சிநேகிதர் எவரேனும், “”கால் கிலோ புளி கொடுங்க” என்று சொல்லிவிட்டு, “” பையனுங்களெல்லாம் என்ன பண்றாங்க?” என்ற வார்த்தையைக் கோர்த்துவிட்டால் போதும். மகிழ்ச்சி மண்டை கொண்டு விடும் மரைக்காயருக்கு.
“”மூத்த பையன் பாலி டெக்னிக் முடிச்சிட்டு அபுதாபில இருக்கான். ஆயில் கம்பெனி. அமெரிக்கன் கம்பெனி… ரெண்டாவது பையன் யூனானி டாக்டருக்குப் படிக்கிறான்.. இது ஆறாவது வருசம். ரெண்டு பையனுங்க எம்.டெக்.., கடைசிப் பையன் பி.இ. கடைசி வருசம்” என்று வாக்கியத்தை முடிக்கப் போகையில் ஏற்படும் மகிழ்ச்சி உந்துதலில், எடைக்கு மேல் இருபது கிராம் அளவுக்குக் கூடுதலாகப் போகும் புளிப் பத்தையைக் கூட பிய்த்தெடுக்க மறந்து போகும் மரைக்காயருக்கு. அப்படி ஓர் ஆனந்தம்.
ஐப்பசி மாத அடை மழையில் வெள்ளம். ஆறு குளமெல்லாம் நிரப்பிக் கொண்டு பாய்வது போல், தனக்கு ஆண்மக்கள் ஐவர் என்ற நினைப்பு வரும்போதெல்லாம் மனது தனது கொள்ளளவைத் தாண்டி மகிழ்ச்சிக் கூத்தாடும் அவருக்கு.
காரணம் அவருடைய அனுபவக் கஷ்டம்தான்-
மாம்சா மரைக்காயருடன் கூடப் பிறந்த ஐவரும் பெண்கள். மாம்சாதான் மூத்தவர். போதுமான வசதி என்ற நிலை மாறி ஓரளவு கஷ்டம் என்ற நிலைக்கு வந்துவிட்டது குடும்பம். ஐந்தாவதும் கடைசியுமான தங்கச்சியைக் கட்டிக் கொடுக்க வேண்டிய நிலையில் அத்தனை வாசலும் அடைபட்டுப் போய்விட்டன. கொடுக்கல் வாங்கல் சாத்தியமற்றுப் போனது.
“”கடையை வித்துடலாமாடா தம்பி” என்று பெற்றவர் கேட்டதும், கண நேரமும் தயங்காமல், “”ஆமா வாப்பா. வித்துட்டு வேலையை முடிங்க” என்று வார்த்தைகள் வெளிப்பட்டன, மாம்சாவிடமிருந்து அந்த சமயம்.
“”யா அல்லாஹ்! என் பையனுக்கு அத்தனையும் ஆணாய்ப் பொறக்கணும்” என்று மனமுருகிப் பிரார்த்தித்தார் ஆதம்ஷா,மாம்சாவின் வாப்பா, தன்னுடைய துன்பம் தன் பிள்ளைக்குத் தொடரக் கூடாதென்று.
அவருடைய பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாக மாம்சாவுக்கு அடுத்தடுத்து பிறந்த ஐந்தும் ஆண் மக்கள்.
“”என் தங்கச்சி அஞ்சு பேரையும் கரையேத்தறதுக்கு எங்க வாப்பா பட்ட கஷ்டத்துக்கு நிவாரணம்தான் நமக்குக் கிடைச்சிருக்கிற அஞ்சும் ஆணடி” என்று மனைவியிடம் தன் மனநிலையைப் பதிவு செய்து வைத்திருந்தார் மாம்சா.
ஆனால் இந்த மனமகிழ்ச்சிக்கு தற்போது பங்கம் வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது மரைக்காயருக்கு.
காரணம் -
“”நம்ம ஊர்ல ஒளிமுகம்மது ரொம்ப நல்ல புள்ள. அவனுக்குப் பொறந்திருக்கிற அஞ்சும் பொண்ணு. அதுல ஒண்ணை நீ உன்னோட முதல் பையனுக்குக் கட்டணும்” என்று மரணத் தருவாயில் “வசியத்’ செய்து விட்டு மரித்துப் போயிருந்தார் மாம்சாவின் வாப்பா.
உண்மைதான். அந்த நடுத்தரமான கடற்கரைப்பட்டினத்தில் ஒளிமுகம்மது போல் இன்னொருவர் இல்லை என்றே சொல்லலாம். அத்தனை நியாயமானவர். மாம்சாவின் பள்ளித் தோழர். பழைய பாட்டில், பிளாஸ்டிக், பேப்பர் கடை வைத்திருப்பவர். முதல் பெண்ணுக்கு மட்டும்தான் நிக்காஹ் முடிந்திருந்தது. அவரிடம் இன்னும் நான்கு பெண்கள் பாக்கி.,
வாப்பாவின் கட்டளைப்படியே தனது மூத்த பையனுக்கு ஒளி முகம்மதுவின் இரண்டாவது பெண்ணைத் திருமணம் செய்ய ஆயத்தமானார் மாம்சா. சென்ற முறை பையன் அபுதாபியிலிருந்து வந்தபோதே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அடுத்த பயணம் ஊருக்கு வந்ததும் நிக்காஹ் என்பதாக உடன்பாடு.
இந்த இடத்தில்தான் மாம்சா மரைக்காயரைத் தாக்க முற்பட்டது அதிர்ச்சி அலை…
ஆம்!
நிச்சயதார்த்தம் முடிந்து அபுதாபிக்கு விமானம் ஏறப் போகிற தருணத்தில், “”பொண்ணு வீட்டிலிருந்து பணம், நகை எதுவும் வாங்கக் கூடாது. சுருக்கமாச் சொல்றேன். அவுங்க வீட்லேர்ந்து ஒரு குண்டூசி கூட நமக்கு வேணாம். இன்ஷா அல்லாஹ் நான் திரும்பி வரும்போது பத்து பவுன் கொண்டாந்து மஹர் கொடுத்து அந்தப் பெண்ணை நிக்கா பண்ணிக்குவேன்” என்று பையன் சொன்னதும் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டது போலிருந்தது மரைக்காயருக்கு.
தனது தங்கைமார்களுக்கு சீர், செனத்தி என்று கொடுக்க எதையெல்லாம் வாங்கியதையும், விற்கக் கூடாதவற்றை எல்லாம் விற்றதையும் எண்ணிப் பார்த்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி அது.
“”அதைக் கொடு இதைக் கொடுன்னு நம்ம கேட்கப் போறதில்லே. ஆனா அவுங்களா தம் பெண்ணுக்கு கொடுக்கிறதை வாணாம்னு சொல்ல இவன் யாரு?”
வீட்டுக்குத் திரும்பியதும் தனது மனதிலிருந்த ஆதங்கத்தை மனைவியிடம் கொட்டினார் மாம்சா.
நபீசா, மாம்சா மரைக்காயருக்கு கிடைத்த மனைவி என்பதை விட “மதி மந்திரி’ என்பதே சரி. நகைச்சுவை உணர்வும் அதிகம். “நச்’சென்று கேட்கும் துணிச்சலும் மிகுதி நபீசாவுக்கு. “பட்’டென்று கேட்டாள்:
“”பையனைப் பெத்த உங்களுக்குப் பொண்ணு வீட்டிலேர்ந்து எதுவும் எதிர்பார்ப்பு இருக்கா?”
“”இல்லே… அதுக்கில்லே…”
“”பின்னே எதுக்கு?”
“”…..”
மனைவிக்குப் பதில் சொல்ல மரைக்காயரிடம் வார்த்தை இல்லை. ஆனால், மனசுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது ஓர் அரிப்பு. அதாவது, “மத்த நாலு பயவளும் இப்படித்தான் செய்வானுகளோ?’ என்று.
இந்த இம்சை போதாதென்று இன்றைய நிகழ்வு ஒன்று மாம்சாவின் மனதில் ரணத்தை ஏற்படுத்திவிட்டது.
வேறொன்றுமில்லை. மாம்சா மரைக்காயருக்கு கடைக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறது சம்பந்தியாகப் போகிற ஒளி முகம்மதுவின் பழைய பாட்டில் கடை. தெருவடிக்குப்போய் பழைய பொருட்களை திரட்டிக் கொண்டு விற்கிற சைக்கிள்காரர்கள் பொழுதடையத்தான் வருவார்கள். அதுவரை ஒளிமுகம்மது கடையில் சும்மாதான் உட்கார்ந்திருப்பார்.
மரைக்காயருக்கு அவசரமாக கூத்தாநல்லூர் போய் வர வேண்டிய வேலை. கடையைச் சாத்திவிட்டுப் போக விரும்பாத மாம்சா, சம்பந்தியிடம் போய், “”கடையில் பையன் இருக்கான். சித்தே கடையை வந்து பார்த்துக்குங்க… மதியத்துக்குள்ள வந்துடுவேன்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
“”அடடே… இன்னிக்கு சரக்கு ஏத்த லாரி வருதே” என்றார் ஒளிமுகம்மது, பளிச்சென்று.
சற்றும் எதிர்பாராத பதில். சம்பந்தியிடம் தனது முதல் கோரிக்கையே மறுதலிக்கப்பட்டதில் மரைக்காயருக்கு பலத்த ஏமாற்றம். பொழுது எப்போது போகும் என்றாகிவிட்டது.
இரவு பத்துமணிக்கெல்லாம் கடையைச் சாத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த மரைக்காயர் செய்த முதல் வேலை, சம்பந்தி ஒளி முகம்மது தன்னுடைய வேண்டுகோளை நிராகரித்தது பற்றி நீட்டி முழக்கி மனைவியிடம் புகார் செய்ததுதான்.
“”ஒரு குண்டூசியைக் கூட எதிர்பார்க்காம அவுங்க வீட்டு பொண்ணை ஏத்துக்கிற நமக்கு ஒரு ரெண்டு மணி நேரப் பொழுதுக்கு கடையைப் பார்த்துக்கக் கூட மனசு இல்லாத சம்பந்தி என்ன சம்பந்தி” என்று தன் ஆதங்கத்தைச் சொல்லி முடித்தார் மாம்சா.
கணவர் சொன்னதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நபீசாவுக்கு அவரது “உண்மையான மனக்குறை’ என்னவென்று புரிந்துவிட்டிருந்தது. மெளனம் காத்தாள்.
“”என்ன குட்டெ! நான் பாட்டுக்கு சொல்லிக்கிட்டிருக்கேன். நீ பேசாம இருக்கே” என்றார் மனைவியின் பதிலை எதிர்பார்த்த மாம்சா.
சரி என்று பட்டால் அதை சொல்லத் தயங்காத நபீசா பளீரென்று சொன்னாள்: “”உங்க பிரச்னை சம்பந்தி வந்து கடையைப் பார்த்துக்கலையே என்பதல்ல”
“”பின்னே?” – திகைப்புடன் கேட்டார்.
“”நீங்களே சொன்ன மாதிரி ஒரு குண்டூசி கூட வாங்காம பொண்ணு எடுக்கிறோமேங்கறதுதான்”
“”என்ன குட்டெ”
“”ஆமாங்க. நான் கவனிச்சிக்கிட்டுதான் வர்ரேன். உங்க மனசுக்குள்ள மறுவிக்கிட்டிருக்கிறது அதுதான். காலையில எந்திரிச்சு குளிச்சிட்டு தலையைத் தொவட்டியும் தொவட்டாமையுமா கடைக்கு ஓடறதும், ஊர் மொத்தமும் அடங்கினப்புறம் கடையைப் பூட்டிட்டு வர்ரதுமாக இருக்கியளே தவிர நாட்டு நடப்பு தெரியல உங்களுக்கு” என்று கணவரை நேருக்கு நேராய்ப் பார்த்தாள் நபீசா!
“”என்ன தெரியலேங்கிறே எனக்கு?” குற்றத்தை ஒப்புக் கொள்ள தயாராகிவிட்ட ஒரு குற்றவாளியின் குரலைப் போல் ஒலித்தன மாம்சாவின் வார்த்தைகள்.
“”பேப்பர் வாங்கறீங்களே… அதை என்னைக்காவது எடுத்து படிக்கிறீங்களா?”
“”நான் எங்கே படிக்கிறேன். நீ தான் படிக்கிறே”
“”இப்ப நானே படிக்கிறேன். கேட்டுக்குங்க” என்ற நபீசா தன் வீட்டுக்கு வரும் தினசரியின் வெள்ளிக் கிழமைக்கான இணைப்பை எடுத்து வாசிக்கலானாள்.
“எனது மகனுக்குத் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?’
“என் மகனுக்கு முப்பது வயதாகிறது. எப்போது திருமணம் நடக்கும்?’
“எனக்கு எப்போது திருமணம் நடக்கும். எப்படிப்பட்ட பெண் மனைவியாக அமைவார்?’
“எனது திருமணத்துக்காக ஐந்து வருடமாக முயற்சி செய்கிறேன். எப்போது எனக்கு மனைவி அமைவார்?’
“எனது சகோதரருக்கு ஆறு ஆண்டுகளாகத் திருமண முயற்சி செய்கிறோம். எப்போது அவருக்குத் திருமணம் நடக்கும்?’
வாசிப்பதை நிறுத்திக் கொண்ட நபீசா, கணவரின் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த தினசரி இணைப்பை சற்றே தணித்து,
“”இது மட்டும் இல்லீங்க. இந்தப் பேப்பர் முழுக்கவும் மகனுக்கு எப்போ பொண்ணு கிடைக்கும்ங்கறதுதான் முக்கிய கேள்வி. ஒரே கவலை”
“”என்ன குட்டெ தலை கீழாய்ச் சொல்றே”
“”தலை கீழாய்த்தாங்க ஆயிடுச்சு… பொண்ணுக்கு நல்ல பையனைத் தேடி அலைஞ்ச காலம் போயி பையனுக்கு நல்ல பொண்ணு கிடைக்குமான்னு தவிக்கவுட்டுட்டான். புள்ளையை பெத்தவங்க அடிச்ச லூட்டியையும் பொண்ணைப் பெத்தவங்க பட்ட கஷ்டத்தையும் பார்த்துட்டு அல்லா அப்படியே தலை கீழா மாத்திட்டான்ல…”
“”இப்போ பணம் காசு பெரிசு கெடயாது.. அதான் தெருவுக்குத் தெரு பணப் பெட்டியை வச்சு அட்டையைச் சொருகி அள்ளிக்கிட்டுப் போங்கன்னு வச்சுட்டானே… பொண்ணு கெடைக்குறதுதான் கஷ்டம்” நபீசா சொல்லிக் கொண்டே போக-
தானும் ஒருமுறை அந்த தினசரியின் இணைப்பை எடுத்து வாசித்துப் பார்த்த மாம்சா மரைக்காயர் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். இப்படியொரு மாற்றம் நிகழ்ந்திருப்பது மெய்யாலுமே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
“”ஒண்ணு சொல்லவா குட்டெ” என்றார் மனைவியைப் பார்க்காமல் மோட்டு வளையைப் பார்த்தபடி.
“”சொல்லுங்க” என்றாள் நபீசா.
“”எப்படிப் பார்த்தாலும் என்னை விட ஒளிமுகம்மது நல்ல ஆள்தான். நாம ஒண்ணும் யாருக்கும் கெடுதி நினைக்கிற ஆள் கிடையாது. இருந்தாலும் வெறுப்பு, கசப்பு பாராட்டுவோம். ஆனா ஒளி முகம்மதுக்கு எந்தக் குறையும் கிடையாது”
“”சொல்ல நெனச்சதைச் சொல்லுங்க” என்று ஊக்குவித்தாள் நபீசா.
“”அப்பேர்ப்பட்ட நல்ல மனுசனுக்கு அஞ்சு பொண்ணு பொறந்திருக்கு.. நமக்கு அஞ்சும் ஆணா கிடைச்சிருக்கேன்னு ரொம்ப நாளா குழப்பம். அது இப்பதான் தெளிவா ஆகி இருக்கு” என்ற மாம்சா மரைக்காயர் நெடுநேரம் சிந்தனை வயப்பட்டவராக வானத்தை வெறித்தபடி மெளனித்திருந்தார்.
அவருடைய மெளனம் உடைபடும் வரை தானும் பொறுமையாகக் காத்திருந்தாள் நபீசா.
“”மாற்றம்தான்.. நமக்கு ஒண்ணும் ஏமாற்றம் கிடையாது” என்றார் மாம்சா, மனைவியின் முகம் பார்த்து.

மிக நெகிழ்ச்சியான சிறுகதை : கைமாறு
----
அப்பா என்னோட டான்ஸ் ட்ரெஸ் எப்படிப்பா இருக்கு?”
வெளிர் சிகப்பில் சின்னச் சின்ன வெள்ளைப் பூக்களிட்ட ஃபிரில் வைத்த கவுனில் குழந்தை தேவதை போலிருந்தாள்.
“செல்லத்துக்கு எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகுதான்” சிரித்தான் சுந்தர் மகளைப் பார்த்து.
பதினொரு மணிக்கு சரியா வந்திடுங்கப்பா. நான்தான் முன் வரிசையில் நின்னு ஆடறேன். அப்புறமா கடைசில நாலு ப்ரைஸ் இருக்கு எனக்கு கையைக் குவித்து மடக்கியவள் ட்ராயிங்,பாட்டு,ரன்னிங் ரேஸ், சயின்ஸ் க்விஸ்.. ஒவ்வொரு பிஞ்சு விரலாக இதழ் போல் விரித்துக் கொண்டே வந்தாள்.
“பாம்… பாம்…’ ஒலி எழுப்பியது பள்ளி வேன்.
“வேன் வந்தாச்சு பாரு. நீ கிளம்பு பாப்பா. பத்து மணிக்கெல்லாம் தாத்தா, பாட்டி, அம்மா, நான் நாலு பேரும் அங்கிருப்போம்” என்றான் அவளைப் போலவே ஒவ்வொரு விரலாக விரித்துக் காட்டி.
கண்கள் அகல ரசித்துச் சிரித்தவளாய் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடிய மகளை சந்தோஷமாகப் பார்த்திருந்த வேளையில் அவனுடைய கைபேசி சிணுங்கியது.
“டாக்டர் முத்து பேசறேன்…”
“சொல்லுங்க டாக்டர்…”
“அவசரமா “ஓ’ நெகட்டிவ் வேண்டியிருக்குப்பா. சிசேரியன். ரெட்டப் புள்ளங்க வேற. சிக்கலான பிரசவம்னு பக்கத்து டவுனிலிருந்து இங்க வந்து அட்மிட் ஆயிருக்காங்க இப்பதான்..”
“எத்தனை மணிக்கு ஆபரேஷன்?”
“மதியம் 2 மணிக்கு மேலே. அப்பதான் நல்ல நட்சத்திரம் பிறக்கிறதாம்!” – சிரித்தார்.
“சரி அவங்க குடும்பத்திலே…” என இழுத்தவனை இடைவெட்டி “கேட்காம இருந்தா சும்மா விடுவீங்களா என்னைய, விசாரிச்சிட்டேன். சொந்தத்தில இப்போ கூட இருக்கிறவங்க யாருக்கும் அந்த க்ரூப் இல்லையாம்” என்றார் டாக்டர்.
“சரிங்க டாக்டர்… அப்படின்னா… நான் முயற்சி பண்ணிப் பாக்கறேன்…” என்றபடி ஃபோனை வைத்தான் சுந்தர்.
“கவிதா’ என அவசரமாய் மனைவியை அழைத்தான் சுந்தர். “நீ அம்மா அப்பாவைக் கூட்டிட்டு முதல்ல போயிடறயாம்மா டான்ஸ் நேரத்துக்கு முடியாவிட்டாலும் ப்ரைஸ் கொடுக்கிற நேரத்துல வந்திடப் பார்க்கிறேன். அவசர வேலைம்மா…”
அவனைப் பற்றி நன்கு அறிந்த அவனுடைய மனைவி கவிதா, “சரிங்க…. ஒண்ணும் பிரச் னை யில்ல.. பாப்பாவைச் சமாளிக்க எனக்குத் தெரியும்” என்றாள் சமாதானமாய்.
ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் கண்கள் மின்ன விடைபெற்ற மகள், தான் போக இயலாது போனால் ஏமாற்றத்தில் எப்படிச் சோர்ந்து போவாள் என்பதை நினைக்கையில் மின்னல் வெட்டாய் ஒரு சின்னவலி. மறுகணம் சுறுசுறுப்பானான்.
தொடர்ச்சியாய் எண்களைத் தட்டியதில் ஓ நெகட்டிவ் பட்டியலில் இருந்த இரத்ததான தன்னார்வலர்களில் மூன்று பேர் ஊரில் இருக்கவில்லை. ஒருவனுக்குக் காய்ச்சல். இன்னொருவன் இரவு தண்ணியடித்து விட்டதாகத் தலையைச் சொறிந்தான். மீதமிருந்தது அசோக் மட்டுமே. ஆனால் பாவம் அவன் தங்கைக்கு அன்று திருமணம். தந்தை இல்லை. அவர் ஸ்தானத்தில் முன்னிருந்து நடத்துவது அவனே. என்ன செய்ய வேறு வழியில்லை அவனைத்தான் கூப்பிட்டாக வேண்டும்.
அது ஒரு அபூர்வ க்ரூப். எப்போதாவதுதான் தேவைப்படும். முன்னரே ஸ்டாக் செய்து வைத்தால் வீணாகி விடக் கூடாதென தேவைப்படும் சமயத்தில் அந்த க்ரூப் நபர்களைத் தொடர்பு கொண்டு கொடுக்க வைப்பதே வழக்கம். முன் கூட்டி திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை எனில் கொடுப்பவர் சவுகரியத்தைப் பார்க்க இயலும். விபத்தோ அவசரத் தேவையோ வருகையில் இப்படிப் பாலமாகச் செயல்படுவது பழகிப் போன சவால்தான்.
அசோக்கின் எண்களைத் தயக்கத்துடன் அழுத்தினான்.
“என்னப்பா பொண்ணு பள்ளிக்கூடத்துல ஆண்டுவிழான்னு முகூர்த்தத்துக்கு வர மாட்டேன்னுட்ட… பரவாயில்ல. ஆனா கண்டிப்பா ரிசப்ஷனுக்குக் குடும்பத்தோட வந்திடணும், ஆமா…” என்றவன் இவன் பதில் பேசும்முன் “யப்பா.. யப்பா.. அங்கே இல்லை. இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரூமுல கொண்டு வைய்யப்பா..’ என யாரிடமோ படபடப்பாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான்.
தயங்கித் தயங்கி இவன் விஷயத்தைச் சொல்லவும், ஐந்து விநாடி அமைதிக்குப் பின், “முகூர்த்தம் பத்தரைக்கு முடியுது. பதினொரு மணிக்கு மண்டபத்து பின் வாசலுக்கு காரைக் கொண்டு வந்திடு..”
நன்றி சொல்லக் கூட வாய்ப்புக் கொடுக்காமல் தொடர்பைத் துண்டித்து விட்டிருந்தான். ஏன், அவனும் கூட அப்படியான நன்றியை எவரிடமும் எதிர்பார்த்ததில்லைதான். இது போன்ற ஒத்துழைப்புகள் எல்லாச் சமூக ஆர்வலர்களுக்குமே இயல்பான ஒன்றாகி விட்டிருந்தது.
கல்லூரி வயதில் இரத்ததானம் பற்றி அறியவந்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கொரு முறை இரத்தம் கொடுப்பதில் ஆரம்பித்த சேவை ஆர்வம், இப்போது தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர் ஆக்கியிருந்தது.
கழகத்துக்காக முகாம் நடத்துவது, கிடைப்பதில் குறிப்பிட்ட பங்கை அரசு மருத்துவமனைக்கு ஒப்படைப்பது, அவசரத் தேவைக்கு வழங்க முன்வருபவர் தொடர்பு விவரங்களை நுனிவிரலில் வைத்திருந்து எந்நேரத்திலும் ஏற்பாடுகளைக் கவனிப்பது இவை அவன் வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறி விட்டிருந்தது.
தான் அப்படி இருப்பதை பெரிய விஷயமாக எண்ணாதவன், சமயங்களில் நண்பர்கள் தங்கள் இயல்பு வாழ்வின் கெடுபிடிகள் கடமைகளிலிருந்து இப்படி விலகி, அனுசரித்து இவன் வார்த்தைக்காக ஓடி வருகையில் ஏற்படும் வியப்பும் நெகிழ்வும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இன்று அசோக்.
ஊருக்கு சற்றே வெளியில் அமைந்த மண்டபம். கால் மணிக்கு முன்னதாகவே பின்வாசல் பக்கமாய் வண்டியைக் கொண்டு நிறுத்தி விட்டான் சுந்தர்.
சொன்ன நேரத்துக்குச் சரியாக அசோக் வெளியே வரவும், காரில் ஏற்றிக் கொண்டு
விரைந்தான். போக்குவரத்து நெரிசலுக்குள் மாட்டி, போராடித் தப்பித்து, அந்த தனியார் மருத்துவமனையின் பெரிய வளாகத்துள் நுழையும் போது மணி பனிரெண்டை நெருங்கி விட்டிருந்தது. இரத்தம் கொடுக்க வேண்டிய இடம் இருக்கும் கட்டடத்தின் முன்னால் சுந்தர் வண்டியை நிறுத்த, நீ ஸ்கூலுக்குக் கிளம்புப்பா சுந்தர். நான் டாக்ஸியோ ஆட்டோவோ பிடிச்சு மண்டபத்துக்குப் போயிக்கறேன்” என்றான் அசோக்.
“நல்லா சொன்னே போ. உன்னை மறுபடி நேரத்துக்கு மண்டபத்துல சேர்த்தால்தான் எனக்கு நிம்மதி. காரை பார்க் பண்ணிட்டு அப்படியே டாக்டர் முத்துவை எட்டிப் பார்த்துட்டு வரேன். சந்திச்சு நாளாச்சு. எம்மகளை மொதமொத தொட்டுத் தூக்கின மகராசனாச்சே…”
“சொன்னா கேட்க மாட்டே நீ…” என்றபடி அவசரமாய் அசோக் நடையைக் கட்ட, வரிசையாக இருந்த கட்டடங்களைத் தாண்டி, வளாகத்தின் பின்பக்கம் அமைந்த வண்டிகளுக்கான நிறுத்தத்தில் மெல்லச் சென்று காரை பார்க் செய்தான் அசோக்.
டாக்டர் முத்துவின் அறை இருந்த கட்டடத்தை நோக்கி நடந்த வேளையில் முன்னால் நடந்த இருவரின் சம்பாஷணை திடுமென அவன் கவனத்தை ஈர்த்தது.
“இரத்தம் கேட்டு எவ்ளோ நேரமாச்சு? என்ன வங்கி வச்சு நடத்துறானுக… அவசரம்னு சொல்லியாச்சு. கொடுக்கிற பய ஆரோக்கியமானவனா இருக்க ஒட்டிக்கு ரெட்டியா துட்டு தாரோம்னும் சொல்லியாச்சு. மணி பன்னெண்டாகப் போகுது. டாக்டர்க்கு போனைப் போட்டுக் கேளுடா அனுப்புறானுகளா இல்லையான்னு?” என்றார் ஐம்பதுகளில் இருந்த அந்தப் பெரியவர்.
“சும்மா சும்மா கேட்காதீங்கன்னு கோபப்படறாங்கப்பா… வெயிட் செய்யலாம்…” மகன் போலும்.
எதுவும் பேசாமல் அவர்களை வேகமாகக் கடந்தான். டாக்டரின் அறையை அடையும் அந்த சொற்ப நேரத்துக்குள் அவன் மனதினுள் ஒரு பிரளயமே நடந்து முடிந்திருந்தது.
“வாங்க சுந்தர். இப்பதான் லேபிலிருந்து ஃபோன் செஞ்சாங்க. நேரத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டீங்க. ரொம்ப தாங்க்ஸ். அந்தக் குடும்பம் வேற பொசுபொசுன்னுட்டே இருந்தாங்க. அப்புறம், எப்படியிருக்கா செல்லப்பொண்ணு நல்லா படிக்கிறாளா?”
“ஓ… இன்னைக்கு “ஆனுவல் டே’. நாலஞ்சு ப்ரைஸ் வாங்குறா.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்” என்றவன், அவர் காட்டிய இருக்கையில் அமராமல், “டாக்டர் இந்த இரத்தத்தை உபயோகிக்க இருக்கிற குடும்பத்தோட நான் கொஞ்சம் பேசலாமா?” என்றான்.
வியப்பாகப் பார்த்தார் டாக்டர் முத்து.
எத்தனையோ முறை பல குடும்பத்தினர் நன்றி சொல்ல அவனைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்த வேளையில் எல்லாம், பிடிவாதமாய் மறுத்து தன்னை அடையாளம் கூட காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து பறந்து விடுபவனின் இந்தப் புது விண்ணப்பம் ஆச்சரியப் படுத்தியது. மணியடித்து நர்சை வரவழைத்தவர் “மிஸ்டர் தணிகாசலமும் பையனும் எங்கேன்னு பாருங்க?” என்றார்.
“அவங்க பேஷண்டுக்கு யாரு?” கேட்டான் சுந்தர்.
“மாமனாரும், கணவரும். முன்ன நின்னு கவனிக்கிறது அவங்கதான். பொண்ணுக்கு ஏதோ குக்கிராமம். அங்க வசதிப்படாதுன்னு மொதல்ல டவுயனுல காமிச்சிருக்காங்க. அப்புறம்தான் திடீர்னு காலைலதான் அங்கிருந்து இங்க அனுப்பிட்டாங்க. ரெட்டை வாரிசு வரப் போகுதுன்னு குடும்பமே ஒரே பரபரப்புல இருக்கு. வாங்க போய் பார்க்கலாம்” என எழுந்தார்.
காரிடாரில் நடக்கையில் எதிரே வந்து கொண்டிருந்தார்கள் இவன் பார்த்த அதே பெரியவரும் மகனும். டாக்டர் அவனை அறிமுகப்படுத்தவும், “ரொம்ப சந்தோசம் தம்பி. என்ன விசயம். இரத்தம் கொடுத்தவருக்கு அதிகமா பணம் தேவைப்படுதா கொடுத்திடலாம்” என்றார்.
“அதெல்லாம் தேவையில்லைங்க. ஆனா ஒரு ரெக்வெஸ்ட். உங்க குடும்பத்துல யாராவது ஒருத்தர்,அரசு ஆஸ்பத்திரிக்குப் போய் ரத்தம் கொடுத்திட்டு வந்து, இந்த இரத்தத்தை வாங்கிக்கறீங்களா?”
“என்ன தம்பி பேசறீங்க? நாங்க பணமெல்லாம் கட்டியாச்சு. எங்களுக்கு இதெல்லாம் பழக்கமுமில்ல. மேலே என்ன விலைன்னாலும் கேளுங்க” கடுகடுத்தார் தணிகாசலம்.
“பொறுங்க ஐயா. அந்தப் பணத்தையே கரைச்சு ஏத்த முடியாதுதானே? இரத்தம் விற்பனைக்குக் கிடைக்கிற கடை சரக்கு இல்லங்க. தேவைக்கு உதவியா பெறப்படுற.. உயிர் காக்குற.. திரவம். அதுக்குன்னு வசூலிக்கப் படற பணம் இரத்த வங்கி இயங்கறதுக்காக. பணம் கட்டி வாங்கினாலும் இது நீங்க இலவசமா எடுத்துக்கற மாதிரிதான். ஏன்னா நம்ம நாட்டில எல்லோருமே எதையுமே இலவசமா வாங்கி ருசி கண்டுட்டோம். இப்படி ரத்தத்துக்கு ரத்தம் கேட்கலாம்ங்கறதே எனக்குக் கூடதான் இத்தன நாள் தோணாமப் போச்சு… பாருங்களேன்!”
இப்போது பெரியவரின் மகன் சுதாரித்துக்கொண்டு அவர் காதில் ஏதோ கிசுகிசுக்க அவர் தணிந்து, “தம்பி நான் பேசினதை கேட்டுட்டீங்க போலிருக்கு. மன்னிக்கணும் ஏதோ ஒரு பதட்டத்துல வார்த்தைங்க விழுந்துட்டு…”
“இல்லைங்க. நீங்க உங்க மனசுல உள்ளததானே கொட்டுனீங்க. பரவாயில்ல. உங்களப் போல எண்ணமுள்ளவங்களும் இருப்பாங்கன்னு எனக்குப் புரிய வச்சதுக்கு முதல்ல நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..”
தணிகாசலத்தின் முகம் கோணியது.
“அட என்னங்க உங்கள சங்கடப் படுத்தணும்னு சொல்லல. ஒண்ணு தெரிஞ்சுக்கங்க. காசுக்காக இரத்தத்தை கொடுக்கிறவங்க ரொம்ப ரொம்பக் கொறைவு. பெரும்பாலும் ஒரு சேவையா நினைச்சுதான் கொடுக்கறாங்க பலரும். அதனாலதான் அதைத் தானம்னு கவுரவப் படுத்துறாங்க. நிறைய பேரு அதை ஒரு வழக்கமாகவே பண்ணிட்டிருக்கிறாங்க. உங்களை அப்படி வற்புறுத்தல. அது தனி மனுச விருப்பம். ஆனா இப்படிக் குடும்பத்துல ஒருத்தருக்குத் தேவை வரும் போதாவது கொடுக்கலாமே.ஒரு ஆளு கொடுக்கிற இரத்தம் சில நேரம் மூணு உயிரைக் கூடக் காப்பாத்தும் தெரியுமா அரசு ஆஸ்பத்திரி பக்கம் போய்ப் பார்த்தீங்கன்னா எத்தன பேருக்கு எவ்வளவு தேவையிருக்குன்னு உங்களால நிச்சயம் உணர முடியும்.”
பணிவான அவன் பேச்சுக்குப் பிறகும் இறுக்கமாகவே தணிகாசலம் நின்றிருக்க, அருகிலிருந்த பெஞ்சிலிருந்து ஒரு வயதான பெண்மணி மெல்ல எழுந்து சுந்தர் அருகே வந்தார்.
“தம்பி. எம் மகனை எலிக்காச்சல்ன்னு ஆசுபத்திரில போன வாரம் சேர்த்தோம். முழு இரத்தமும் மாத்தணும்னுட்டாங்க. பேரன் கூடப் படிக்கற பசங்க, அவங்க ஃப்ரெண்டுங்கன்னு 40, 45 பேரு மடமடன்னு வந்து அஞ்சே மணி நேரத்துல இரத்தம் கொடுத்தப்போ என் நாடி நரம்பெல்லாம் நடுங்கிப் போச்சு. எங்கே யாரு பெத்த புள்ளங்களோ இப்படி நம்ம வூட்டுப்புள்ளைக்குக் கொடுத்துட்டுப் போயிட்டே இருக்காங்களேன்னு. இன்னிக்கு எம்மவன் கண்ணு முழிச்சுக் கிடக்கான்னா அதுக்கு அவங்கெல்லாம்தான் காரணம். அதுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்னு ஏங்கிப் போய்க் கிடந்தேன். எனக்கு நல்ல வழியொண்ணு சொன்னேப்பா. என் வயசுக்காரங்க இரத்தம் கொடுக்கலாமாப்பா…”
“தாராளமா கொடுக்கலாம்மா. அறுபத்தஞ்சு எழுபது வயசு ஆளுங்க வரை கொடுக்கறாங்க. உங்கள நல்லா செக் பண்ணிட்டு உடம்பு ஒத்துழைக்குமான்னு பாத்துட்டுதான் எடுப்பாங்க” என்றான் சுந்தர் கனிவும் நெகிழ்வுமாக.
“அரசு ஆசுபத்திரில எங்கேன்னு போய் கேட்கணும்பா?”
அவன் பதில் சொல்லும் முன், “வாங்கம்மா… அங்கதான் இப்பக் கிளம்பிட்டிருக்கேன். என் கூடவே அழைச்சுட்டு போறேன்” என அவரின் கையைப் பற்றினான் தணிகாசலத்தின் மகன்.
திகைத்து நின்றிருந்த டாக்டரைப் பார்த்து வரட்டுமா என சுந்தர் தலையசைக்க, அவர் “தொடருங்கள்… இது போலவே’ என்பது போலாகத் தன் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்து நிறைவாகப் புன்னகைத்தார்.
-ராமலக்ஷ்மி

ரெண்டு பொண்ணுங்க ஒரு ஹோட்டல்ல டீ சாப்டுட்டு இருந்தப்போ ஒருத்தி ரொம்ப சோகமா இருக்கிறத நோட் பண்ணி இன்னொருத்தி ஏண்டி சோகமா இருக்க?ன்னா.
அது...என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய பணம் விட்டுட்டான்
அடடே
அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி
எனக்கு தெரியும் அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற
கண்டிப்பா
இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
ம்ச் ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான்

ஒரு இளைஞன் அவசரமா மெடிக்கல் ஷாப்புக்கு போனான், "இந்த மாதிரி...அதாவது..."
"அட ஒண்ணுமில்லப்பா தயங்காம சொல்லு"
"அது...நானும் ஒரு பொண்ணும் காதலிக்கிறோம்..."
"நல்ல விஷயம்.."
"இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா"
"ஓ கலக்கு"
"அதாவது... அவங்க வீட்ல எல்லாரும் பார்ட்டிக்கு போய்டுவாங்களாம்"
ஃபார்மசிஸ்ட் குறும்பா,"ஹேய் அப்டியா...? "
"இல்ல.. எனக்கு இது தான் முதல் தடவ"
"ஓ அது தான் உன் பிரச்னையா...?"அப்டின்னு ஆரம்பிச்சு சகலமும் சொல்லி தர வேண்டியத தந்து அட்வைஸ் பண்ணி அனுப்புறார்.
அந்தப் பொண்ணு வீட்டுக்கு போறான், எல்லோர்கிட்டயும் நல்லா பேசறான்.அவங்கம்மா,"சரிப்பா...நாங்க சர்ச்சுக்கு போறோம்,நீங்க பேசிட்டு இருங்க,சின்ன வயசுப்பசங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் பிடிக்கிறதில்ல"ன்னாங்க.
அவன் அவசரமா "இல்ல...நானும் வர்றேன்"அப்டின்னான்.
அந்தப் பொண்ணு பதட்டமா ஆனா அவன் காதுல கிசுகிசுப்பா,"யேய் என்ன சொல்ற நீ இவ்ளோ கடவுள் பக்தி உள்ளவன்னு என்கிட்ட சொல்லவேயில்லயே"
அவன் உடனே சொன்னான்,"உங்கப்பா ஃபார்மஸிஸ்ட்னு நீ மட்டும் சொன்னியா?"

ஒரு காலேஜ்ல பசங்க பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள போறாங்கன்னு நிறைய கம்ப்ளைன்ட்.அதுக்கு ஸ்ட்ரிக்ட்டா நடவடிக்கை எடுக்க முடிவு பண்ணி அதை சொல்ல பிரின்ஸிபால் ஒரு கிளாஸ்க்குள்ள போனாரு.மாணவர்கள் எல்லாரும் அமைதியாயிட்டாங்க,"நீங்க லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள அடிக்கடி போறதா கம்ப்ளைன்ட் வந்திருக்கு இனி யாராவது அப்படி நுழையறது கண்டுபிடிக்கப்பட்டா 500 ரூபா ஃபைன்" அப்டின்னுட்டு நிறுத்தினார்.பசங்களுக்குள்ள பரபரன்னு சத்தம், "இரண்டாவது தடவ போறது தெரிஞ்சா 1000 ரூபா அபராதம்" லேசா பசங்களுக்குள்ள முணுமுணுப்பு வந்தது
ரியாக்ஷன்ல திருப்தியான பிரின்ஸிபால் திரும்ப கடுமையான குரல்ல சொன்னார் "அதையும் மீறி திரும்ப மாட்டினா 2000 ரூபா கட்டணும்"
பின்னால இருந்து ஒரு பையன் கேட்டான்,
"ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
ரியாக்ஷன்ல திருப்தியான பிரின்ஸிபால் திரும்ப கடுமையான குரல்ல சொன்னார் "அதையும் மீறி திரும்ப மாட்டினா 2000 ரூபா கட்டணும்"
பின்னால இருந்து ஒரு பையன் கேட்டான்,
"ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
Re: சின்னச் சின்ன கதைகள்
நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.
சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'

உழைப்பும் நேர்மையும் உயர்வதற்கு வழிகள்
------
எழிலூர்... பெயருக்குத் தகுந்தாற்போல எழில் வாய்ந்த ஒரு கிராமம். அந்தக்கிராமத்தில்தான் "எழிலி' என்ற குட்டிப் பெண்ணும் அவளுடைய அம்மாவும் வாழ்ந்து வந்தனர். எழிலி அக்கிராமத்துப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள். அவள் அம்மாவுக்கு விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து வரும் வருமானத்தில்தான் இருவரும் அவர்கள் தேவையை நிறைவு செய்து கொண்டனர். பற்றாக்குறை வருமானம் என்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளாது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். தாயும், மகளும் ஒருவர் மீது ஒருவர் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர்.
எழிலியின் அம்மாவிடம் ஒரு வெள்ளி மோதிரம் இருந்தது. அது மிகவும் பழையதாக, கறுப்பாகி இருந்ததால் அதை ஒரு டப்பாவில் போட்டு பெட்டியில் வைத்திருந்தாள் எழிலியின் அம்மா. ஒரு விடுமுறை நாளன்று பெட்டியைச் சுத்தம் செய்கையில் அந்த மோதிரம் எழிலியின் கண்களில் படவே அதை எடுத்துத் தன் விரலில் போட்டுக் கொண்டாள். அவளுக்கு அந்த மோதிரம் சற்று பெரியதுதான். இருந்தாலும் கழற்ற மனமின்றி நூல் சுற்றிப் போட்டுக் கொண்டாள். விரலில் போட்ட மோதிரம் கறுப்பாகத் தெரிகிறது என்று விளையாட்டின்போது தோழிகள் கிண்டல் செய்யவே... வீட்டுக்கு வந்த எழிலி மோதிரத்தை சோப்பும், தண்ணீரும் போட்டு தேய்த்து கழுவும்போது அந்த மோதிரத்தில் இருந்து ஒரு தேவதை தோன்றியது...!
தேவதையைப் பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் சமாளித்துக்கொண்ட எழிலி... ""நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று பணிவுடனும், அன்புடனும் கேட்டாள். ""நான் இந்த மோதிரத்தின் தேவதை. இம் மோதிரம் மிகவும் சக்தி வாய்ந்தது. கேட்டதை எல்லாம் கொடுக்கும். உனக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேள் பெண்ணே! வீடு வேண்டுமா? நிலம், நகைகள், பணம் எது வேண்டும்?.... சீக்கிரமாகக் கேள். மோதிரத்தில் இருந்து வெளிவந்தால் யாருக்கேனும் எதையாவது கொடுத்தால்தான் எனக்கு தேவதையாக இருக்க முடியும். இல்லாவிட்டால் எனக்கு ராட்சஸ வடிவம் கிடைத்துவிடும் என்று எனக்கு ஒரு சாபம் இருக்கிறது'' என்றது தேவதை.
உடனே எழிலி அந்த தேவதையிடம், ""தேவதையே உன் சாபம் பலித்துவிடும் என்று நீ அஞ்சுகிறாய். ஆனால் யாரிடமும், எதையும் இலவசமாய் பெறக் கூடாது. உழைத்து வாழ்வதே சிறந்தது என என் தாய் சொல்லி இருக்கிறாள். உன்னிடம் இருந்து நான் எதைப் பெற்றாலும் என் தாயின் சினத்திற்கு நான் ஆளாவேன். எனவே எனக்கு எதுவும் வேண்டாம். நீ போகலாம் என்று சொல்லிவிட்டாள். ஆனால் தேவதை தன் சாபத்தைச் சொல்லி விடாமல் கெஞ்சவே.... எழிலி சற்று மனமிரங்கி... ""சரி தேவதையே, எங்களுக்குப் பொன்னோ, பொருளோ தேவையில்லை. "எப்போதும் உழைத்து வாழ வேண்டும்' என்ற உறுதியையும், "எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும்' என்ற நல்ல எண்ணத்தையும் எங்களுக்கு மறந்து போகாமல் இருக்கும்படியான வரம் தர முடியுமா? என்று கேட்டாள்.
தேவதையும் மகிழ்ந்து ""ஆஹா! அப்படியே தருகிறேன். அத்தோடு இத்தனை வறுமையிலும் எதற்கும் ஆசைப்படாத உனக்கும், உன் தாய்க்கும் நோயற்ற வாழ்வோடு நீண்ட ஆயுளையும் தருகிறேன்' என்று சொல்லி மோதிரத்திற்குள் மறைந்தது. அன்று மாலை எழிலியின் தாய் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தாள் எழிலி.
மகளைக் கட்டியணைத்து, முத்தமிட்டுப் பாராட்டிய அந்த ஏழைத் தாய் "இந்த மோதிரம் நம்மிடம் இருந்தால், ஏதேனும் ஒரு சமயத்தில் இதை உபயோகப்படுத்தி பலன் பெறலாம் என்ற எண்ணம் நமக்குத் தோன்றக்கூடும். ""உழைக்காமல் பெறும் எந்த உதவியும் நமக்குப் பலன் தராது. அடுத்து வரும் தலைமுறையினருக்கும் உழைப்பின் உயர்வு புரிய வேண்டும். எனவே இம் மோதிரத்தை நாம் வைத்துக்கொள்ள வேண்டாம்'' என்று கூறி அதைப் பாழடைந்த கிணறு ஒன்றில் வீசி விட்டாள் எழிலியின் அம்மா.
உழைப்பின் உயர்வும், உண்மையின் ஒளியும் சுடர்விட்டது அவர்கள் முகங்களில்!
எஸ்.கே.விஜி

இரண்டாம் கல்யாணம்
மாலை ஆறு மணிக்கு ஆபீசிலிருந்து வீட்டுக்கு வந்த குமாருக்கு ..மனைவி வந்து கதவைத் திறக்காத போதே ஏற்பட்ட சந்தேகம் ..டைனிங் டேபிள் மேல் இருந்த காபி ப்ளாஸ்க்கைப் பார்த்ததும் உறுதியாகி விட்டது.வீட்டில் ஏதோ பிரச்னை என்று தெளிவாகிவிட , உடை மாற்றி ,முகம் கழுவி
கப்பில் காபியை ஊற்றிக் கொண்டு பெட்ரூமிற்குள் நுழைந்தவன் படுக்கையில் குப்புறப் படுத்துக் கொண்டு அழுதவாறு இருந்த சுமதியை எழுப்பினான் .
"என்னாச்சு சுமதி? ஏன் அழற?" என்று கேட்டவன் அவள் பக்கத்தில் இருந்த குழந்த படத்தைக் கண்டதும் சுமதியின் அழுகைக்கான காரணத்தைப்
புரிந்து கொண்டான்.
சுமதிக்கும், குமாருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. கோயில், குளம், மருத்துவமனை என்று ஒரு இடம் விடாமல் சென்று வந்து விட்டார்கள். அவ்வப்போது சுமதிக்கு குழந்தையை நினைத்து மூட் அவுட்டாகி விடும்.
"குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும் சுமதி...அழுது உடம்பைக் கெடுத்துக்காதே " என்று தேற்றியவனிடம் சீறி விழுந்தாள் சுமதி.
"நான் அதுக்காக அழலை. எனக்கு குழந்தை இல்லைங்கிறதால உங்களுக்கு இரண்டாம் கல்யாணம் செஞ்சு வைக்கப் போறாங்களாம் உங்கம்மா . மதியம் யார்கிட்டவோ போனில் சொல்லிக்கிட்டு இருந்தாங்க "
என்று சொல்லி விட்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள் .
இதை கேட்டுக் கொண்டே கோயிலில் இருந்து திரும்பி வந்த சுமதியின் மாமியார் பார்வதி விழுந்து விழுந்து சிரிக்க இருவருக்கும் கோபமும், திகைப்பும் ஒரே நேரத்தில் தோன்றியது.
"அவ மனசு உடைஞ்சு அழுதிட்டிருக்கா....நீ பாட்டுக்கு சிரிக்கிறியேம்மா....
இது உனக்கே நல்லா இருக்கா ..." என்ற குமாரை இடைமறித்த பார்வதி....
"சிரிக்காம என்னடா பண்றது...? மதியம் ரெண்டு மணியில இருந்து அஞ்சு மணி வரைக்கும் பவர்கட். ரெண்டு மணிக்கு டி .வி -ல வர்ற சீரியலைப் பார்க்க முடியலன்னு பக்கத்து தெருவில இருக்கிற உங்கத்தை புலம்பினா.. நம்ம வீட்டுல இன்வெர்டர் இருக்கிறதால சீரியலைப் பாத்து கதை சொல்லச் சொன்னான்னு சொல்லிட்டிருந்தேன். அதை அரையும் குறையுமா கேட்டுட்டு
உன் பெண்டாட்டி தன்னைத்தான் சொல்றாங்கன்னு நினைச்சா நான் என்னடா பண்றது?" என்று சொல்லி விட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்த பார்வதியுடன்
இப்போது குமாரும், சுமதியும் சேர்ந்து கொண்டனர்.
07-04-2012ல் ..தினமலர்-பெண்கள் மலரில் பரிசு பெற்ற சிறுகதை.
Re: சின்னச் சின்ன கதைகள்
தண்ணீர்... தண்ணீர்!
எஸ்.கே.விஜி
----------------------
புலர்ந்தும், புலராத வைகறைப் பொழுதில் வழக்கம் போல எழுந்து, குளித்து, முதல் நாளே வேலைக்காரப் பெண் தொடுத்து வைத்த குண்டுமல்லிச் சரத்தை, மனைவி வேதாவின் படத்திற்கு மாலையாக இட்டு, இரு கரம் கூப்பி வணங்கினார் சிவராமன்.
பூஜையறையில் இருந்து அவர் ஹாலுக்கு வந்ததைப் பார்த்த சமையல்காரர் ஏழுமலை, டம்ளரில் நீராகரத்தோடு வர, ""நன்றி ஏழுமலை'' என்று புன்னகையோடு கூறிக் கொண்டே வெளி வாசலுக்கு வந்தவர் கண்ணில், செடி முழுக்கப் பூத்திருந்த குண்டு மல்லிப் பூக்கள் பட்டதும் அவருடைய நினைவு முழுவதும் பழைய நினைவுகள் ஆக்ரமிக்கத் தொடங்கின.
அரசு அலுவலகத்தில் கிளார்க்காகப் பணியாற்றத் தொடங்கிய போதே சிவராமனுக்கும், வேதாவுக்கும் திருமணமாகிவிட்டது. அதன் பின்னர் பல பதவி உயர்வுகள் பெற்று அரசு அதிகாரியாக சிவராமன் ஓய்வு பெறும் வரையிலும் அவர் மனைவி வேதா வாயைத் திறந்து தனக்காக எதுவும் கேட்டதில்லை. இரட்டைப் பிள்ளைகளாக ஹரீஷ் - ஹரிதா பிறந்து, வளர்ந்து, இன்ஜினீயரிங் முடிக்கும் போதுதான் சிவராமன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றார்.
இன்ஜினீயரிங் முடித்த கையோடு, நல்ல வரன் வரவே ஹரிதாவுக்குத் திருமணத்தை முடித்து விட்டார். கண் நிறைந்த கணவனோடு லண்டனில் சந்தோஷமாகக் குடும்பம் நடத்த, ஹரீஷ்க்கும் பெங்களூரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்துடன் வேலை கிடைத்தது.
அது வரையிலும் வாயைத் திறந்து எதுவும் கேட்காத வேதா, ஒரு நாள் காலை, சிவராமனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு, ""என்னங்க, நான் ஒரு விஷயம் சொல்றேன், முடியும்னா, செய்யுங்க, இல்லேன்னா கோபப்படாதீங்க'' என்றாள். அட, இதென்ன! புதுசா இருக்கே. என்று ஆச்சரியப்பட்ட சிவராமன், ""சொல்லும்மா... என்ன வேணும்? நகையா? புடவையா? '' என்று கேட்டார் பரிவாக.
""இல்லங்க... இத்தனை நாள்தான் உங்க வேலை, பிள்ளைங்க படிப்பு, கல்யாணம்னு இந்த நகரத்துச் சந்தடியில காலம் தள்ளிட்டோம். இனிமேலாவது அமைதியா, இயற்கைச் சூழலோட இருக்கிற இடத்தில் வாழ்க்கை நடத்தணும், நமக்காக நாம் வாழணும்... அதுக்கு...'' என்று நிறுத்திவிட்டு சிவராமன் முகத்தைப் பார்க்க, ""ம்... சொல்லு... என்ன பண்ணலாம்? என்று சிவராமன் தூண்டிவிட,
""நம்ம பக்கத்து வீட்ல இருக்கிறவங்களுக்கு ஏதோ அவசர பணத்தேவையாம். ஊருக்கு வெளியே இருக்கிற அவங்க தென்னந்தோப்புல, மெயின் ரோட்டுக்குப் பக்கமா இருக்கிற ஒரு ஏக்கரை மட்டும் பிரிச்சு விக்கிறாங்களாம். பெரிய கிணறும் இருக்குதாம்... நமக்காகன்னா கொஞ்சம் விலையும் குறைச்சுக்கிறேன்னு சொல்றாங்க'' என்று சொல்லிவிட்டு அடுப்படிக்குப் போய்விட்டாள்.
வேதா விஷயத்தை ஆரம்பித்த நேரம்... தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட நேரமாக இருந்திருக்கும் போல. இவர்கள் கேட்ட விலைக்கே பேரம் படிய, வேதாவின் நகைகளை விற்ற பணம், டவுனில் அவர்கள் குடியிருந்த வீட்டை விற்ற பணம் எல்லாம் சேர்த்து, தோப்பை வாங்கி, அதில் முன்பிருந்த வீட்டை இடித்து இவர்கள் தேவைக்கு வசதியாகக் கட்டி ஒரு நல்ல நாளில் பண்ணை வீட்டுக்கு குடி போனார்கள்.
அங்கு போனதும் வேதாவுக்கு தலை, கால் புரியவில்லை. வீட்டுக்கு முன்புறம் பூச்செடிகள் கண்ணைப் பறிக்க பின்புறம் காய்கறி, கீரைப் பாத்திகள் பச்சைப் பசேலென்று மனதை அள்ளியது. அதிலும் செடி கொள்ளாமல் பூக்கும் குண்டு மல்லிப் பூக்கள் கண்களைக் கட்டிப்போடும். அந்தப் பூச்செடி மேல்தான் வேதாவுக்குக் கொள்ளைப் பிரியம்.
நாட்கள், ஆண்டுகளாக உருண்டோட ஹரீஷ்க்கு அவனுடைய அத்தை மகள் ஜனனியை மணம் முடித்தனர். கனடாவில் ஹரீஷ்க்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க, மனைவியோடு பறந்துவிட்டான். அப்புறமென்ன... தான் விரும்பியபடி வாழ்க்கையை அனுபவித்து விட்டோம் என்ற திருப்தியோ... இல்லை, கடமைகள் முடிந்துவிட்டன, இனி எதற்காக இருக்க வேண்டும் என்று நினைத்தோ... ஒரு நாள் மாலை குண்டு மல்லிப் பூக்களைப் பறித்து வந்து தொடுத்துக் கொண்டிருக்கையில் மயங்கிச் சாய்ந்தவள் தான்... பின்னர் வேதா எழுந்து கொள்ளவே இல்லை.
தாயின் சாவுக்கு வந்த மகன், மகள் இருவரும் அரும்பாடுபட்டு அழைத்தும் அவர்களோடு செல்ல மறுத்துவிட்டார் சிவராமன். "" உங்கம்மா ஆசைப்பட்டு வாங்கிய இந்த இடம்தான் எனக்கு சொர்க்கம். உங்களால முடிஞ்சப்போ என்னை வந்து பாருங்க... வாரம் ஒரு முறை போன் பண்ணுங்க. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்'' என்று அவர்களை வாழ்த்தி வழியனுப்பிவிட்டு, சமையலுக்கு ஏழுமலையை ஏற்பாடு பண்ணிக் கொண்டார்.
நகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே போக, சிவராமனின் தோப்பைச் சுற்றி இருந்த விளைநிலங்களைப் போட்டி போட்டுக் கொண்டு ப்ரமோட்டர்கள் வாங்கி வீட்டு மனைகளாக்கிக் கொண்டிருந்தனர். நடுவே பச்சைப் பசேலென்று சிவராமனின் தோப்பு ஜொலிக்க... சுற்றிலும் கான்க்ரீட் மரங்களாகக் கட்டிடங்கள் முளைத்தன. சிவராமனின் நிலத்திற்கும் அதிக விலை கொடுப்பதாக ஆசை காட்டி, கெஞ்சி, மிரட்டிப் பணிய வைக்க பலர் முயற்சித்தும் சிவராமன் அசைந்து கொடுக்கவில்லை. இறுதியில் கனடாவில் இருக்கும் ஹரீஷின் மொபைல் எண்ணை எப்படியோ கண்டுபிடித்து அவனுக்கும் ஆசை வலை விரித்தார்கள் ப்ரோமோட்டர்களும், புரோக்கர்களும்.
""அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன்'' என்று அவர்களுக்குச் சுருக்கமாய்ப் பதிலளித்துவிட்டு, சிவராமனிடம் விரிவாகப் பேசினான் ஹரீஷ். "" தோப்பை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, அந்தத் தொகையில் கனடாவில் வீடு வாங்கிக் கொள்ளலாம். நீங்களூம் எங்களுடன் வந்து இருந்து கொள்ளுங்கள்'' என்று எத்தனையோ கூறியும்...
""நமக்காக நாம் வாழணும்னு ரொம்பவே ஆசைப்பட்டா உங்கம்மா... ஆனா அவளால ரொம்ப நாள் அந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியல... நான் என்னோட மிச்ச வாழ்க்கையை மத்தவங்களுக்காக வாழ விரும்பறேன். அதுல குறுக்கிட உனக்கு எந்த உரிமையும் இல்லை. எனக்குப் பிறகு இந்த தோப்பை நீ என்னவேணா பண்ணிக்கோ... இது விஷயமா இனிமேல் என்னைத் தொந்தரவு பண்ணாதே'' என்று முடிவாகச் சொல்லி விட்டார்.
அந்த வருடம் கோடை காலத்தில் வெயில் வெளுத்து வாங்க, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, மக்கள் குடி தண்ணீருக்கு ஆலாய்ப் பறக்க... சிவராமனின் தோப்பைச் சுற்றி இருந்த அபார்ட்மெண்ட்களில் வசித்தவர்கள் குடிக்கவும், மற்ற தேவைகளுக்கும் லாரி மூலம் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் வசதியானவர்கள், பணம் கொடுத்து எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் ஏழை ஜனங்கள் குடிக்கக் கூடத் தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படுவதைக் கண்ட சிவராமன், ஏழுமலையை அழைத்து, "" ஏழுமலை, நம்ம கிணத்து தண்ணி இளநீர் மாதிரி சுவையான தண்ணீர். தினமும் ஆளுக்கு இரண்டு குடம் தண்ணீர் இலவசமாகத் தரப்படும்னு போர்டு எழுதி வாசலில் மாட்டிவை'' என்று உத்தரவிட்டார். போர்டு எழுதி மாட்டியதும் குவிந்தது மக்கள் கூட்டம், தலைச்சுமையாகவும், சைக்கிளிலும் சாரி, சாரியாக மக்கள் குடங்களுடன் வந்து போக, ஒரே கோலாகலம்தான்.
அப்போதுதான், ""அப்பாவிடம் நேரடியா போய் ரெண்டுல ஒண்ணு கேட்டுட்டு வரேன்'' என்று ஜனனி எவ்வளவு தடுத்தும் கேளாமல் குபீரென புறப்பட்டு வந்த ஹரீஷ், தோப்பில் கூடி இருந்த ஜனங்களைப் பார்த்து திகைத்துப் போனான். அவனைக் கண்ட மக்கள் ""சின்ன ஐயா, உங்கப்பா எங்க தவிச்ச வாய்க்குத் தண்ணி தந்த மகராசன்... அந்த புண்ணியம் உங்களைத் தலைமுறை, தலைமுறையா நல்லா வாழவைக்கும், நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருப்பீங்க'' என்று வாழ்த்தியதைக் கேட்டு, அப்பாவுக்கு முன்னால் தலைகுனிந்து நின்றான் மகன். ""இருக்கும் வரை, பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும்'' என்ற அப்பாவின் வார்த்தைகள் நினைவுக்கு வர, ""என்னை மன்னிச்சிடுங்க அப்பா... கூடிய சீக்கிரம் நானும் இந்தியாவுக்கு வந்து உங்களுக்குத் துணையாய் இருப்பேன்'' என்றான்.
மகனை மார்போடு அணைத்துக் கொண்டார் சிவராமன்.

நடிப்பு !
-----------------
பிரபல நடிகர் ஜே .கே .நடித்த" தாயுமானவன் "படம் பட்டி, தொட்டி என
எல்லா சென்டர்களிலும் ஹவுஸ்-புல் ஆக ஓடி பாக்ஸ்-ஆபீஸ் ஹிட் ஆனதில்
தயாரிப்பாளர் முதல்படம் சம்மந்தப்பட்ட கடை நிலை ஊழியர் வரை அனைவும்
மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். படத்தில் ஜே.கே ஒரு செருப்பு தைக்கும்
தொழிலாளியாக நடித்திருட்ந்தார். மனைவியை இழந்து தன மகன் விஷ்வாவை மிகவும்
சிரமப் பட்டு வளர்த்து படிக்க வைத்து மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு
இடையிலும் ,தன மகனை ஒரு கலெக்டராக உருவாக்கி இருப்பார். தந்தைக்கும்
மகனுக்கும் இடையில் உள்ள பாசத்தையும் நேசத்தையும் அதியற்புதமாக சொல்லியது
அவர்கள் நடிப்பு. அதிலும் சின்ன வயது விஷ்வாவாக வரும் வாசுவின் நடிப்பு
படம் பார்த்தவர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விட்டது .
வாசு உண்மையிலயே ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்தான். படத்தில்
வரும் காட்சிகள் உண்மையில் அவன் வாழ்வில் நடக்கும் அன்றாடக்
காட்சிகள்தான் ..என்றாலும் ஜே.கே நாடே போற்றும் ஒரு முன்னணி நடிகர்,
அவருடன் நடிக்கிறோம் என்ற பயத்தில் வாசுவுக்கு வசனம் பேச வராமல் நாக்
குழறியது , ஏகப் பட்ட டேக்குகள் வாங்கியதை கவனித்த ஜே.கே , வாசுவைத் தன
அருகில் அழைத்து அவனிடம்" என்னையும் உன் அப்பா மாதிரியே நினைச்சுக்கோ
தம்பி..என்கிட்டே உனக்கு என்ன பயம்...?உனக்கு என்ன வேணும்னாலும் என்னை
கேளு..நான் உனக்கு வங்கித் தர்ரேன் "என அன்பாகப் பேசியதில் வாசுவுக்குப்
பயம் தெளிந்து ஜே.கே வைத் தன அப்பாவாகவே பாவிக்கத் தொடக்கி விட்டான்,
பிறகென்ன...! அவர்கள் இரண்டு பேரும் சம்மந்தப் பட்ட காட்சிகள் எல்லாம்
ஒரே டேக்கில் ஒ.கே. ஆனதோடு தியேட்டரிலும் ஏகப் பட்ட அப்ளாஸ்களை பெற்றது.
படத்தின் 100ஆவது நாள் விழாவின் போது ஜே.கே வும்,
வாசுவும் இணைந்து கொடுத்த போஸ் கள்தான் முன்னணி பத்திரிகைகளின் அட்டைப்
படங்களாயின. மேடையில் வாசுவைத் தன அருகே உட்கார வைத்துக் கொண்டு ஜே.கே
அன்பொழுகப் பேசிய காட்சிகள் அனைத்து தொலைக் காட்சிகளிலும் திரும்பத்
திரும்ப ஒளிபரப்பு செய்ய பட்டன.
இதைப் பார்த்த அனைவர் மனதிலும் ஜே.கே எத்தனை அன்பானவர்,
ஒரு ஏழைப் பையனிடம் தன சொந்த மகனைப் போலப் பழக எவ்வளவு பெரிய மனம்
வேண்டும்..என்ற எண்ணம் தோன்றியதோடு அவர் மீதிருந்த இமேஜும் மக்களிடையே
அதிகரித்தது.
ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்று உண்டு !.நூறாவது நாள்
விழா முடித்த சில நாட்கள் கழித்து வாசுவின் அப்பா தெருவைக் கடக்கையில் வேகமாக வந்த லாரியில் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, உடனடியாக தலையில் ஆபரேஷன் செய்யவேண்டிய கட்டாயம் இருப்பதால் , அதற்குரிய பணம் முழுவதுமாகக் கட்டினால் மட்டுமே மேற்கொண்டு வைத்தியம் செய்யப் படும் என்று மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக சொல்லிவிட , வாசுவுக்கு கையும் ஓட வில்லை, காலும்ஓடவில்லை.
திரைப்படத்தில் நடித்ததற்கு வந்த பணத்தில் பழைய கடன்களைக்
கட்டியது போக மீதி பணத்தை ஒரு டுபாக்கூர் ப்ரோக்கரிடம் வீடு வாங்கக்
கொடுத்து வாசுவின் தந்தை ஏமாந்து போய் விட்டதால் வேறு பணமும் கையில்
இல்லை. உடனடியாகத் தனக்கு உதவிக்கு யார் வருவார் என்று யோசிக்க அவன்
மனதில் ஜே.கேயின் நினைவுதான் தோன்றியது, அவசர அவசரமாக ஜே.கேயின்
மாளிகைக்கு ஓடியவனை கூர்க்கா முதல் சமையல் காரன் வரை அனைவரும் அன்பாக
உபசரித்து , அவன் நிலையறிந்து கண்ணீர் விட்டனர். அப்போதுதான் வெளியில்
செல்லக் கிளம்பத் தயாராக வெளியில் வந்த ஜே. கே வாசுவை கண்டு கொள்ளாமல்
வெளியில் போக , வாசு அவரிடம் சென்று தேம்பித் தேம்பி அழுது கொண்டே இருந்தான் .
விஷயத்தை சொல்ல முடியாமல் வாசு கண்ணீர் விட்டதை பார்த்து நடிகரின் உதவியாளர்அவருக்குவிஷயத்தை எடுத்துச் சொன்னார். முழுதுமாக காது கொடுத்து கூட கேட்காமல்" இவன் அப்பனுக்கு ஆப்பரேஷன்னா நான் எதுக்கு பணம் கொடுக்கணும்?எங்கயாச்சும் போய் பிச்சை எடுத்து கட்டச் சொல்லு".என்றார். அப்போது"நீங்கதானே ஷூட்டிங் சமயத்துல உனக்கு என்ன உதவி வேண்ணாலும் என்கிட்டேசொல்லு நான் செய்யறேன்னு சொன்னீங்களே "என்று அழுகைக்கு நடுவே வாசு கேட்க..".ஏண்டா சேரிபயலே...ஏதோ நடிக்க பயப் படறியே ....உனக்கு தைரியம்வரட்டுமேன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே உதவிகேட்டு வந்துருவியா. ஏது இன்னும் கொஞ்சம் போனால் உங்க பையனா நடிச்சதுக்கு உங்க சொத்துல பங்கு குடுங்கன்னு கேப்பே போல இருக்கே " என்று எகத்தாளமாகச் சொல்லியபடி சொகுசான வெளிநாட்டுக் காரிலேறிப் புறப்பட்ட அந்த நடிகரை "அத்தனையும் வெறும் நடிப்புதானா" என்று கண்ணீர் வழியப் பார்த்த படி நின்றான் வாசு.

அர்த்தங்கள்
மீனா அபார்ட்மென்ட்ஸ். மூன்றாவது ப்ளோரின் 21ம் நம்பர் வீடு.சமையல் முடித்து ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சியினை காணகண்ணாடி ஜன்னலின் திரைச்சீலையை மூட வந்தவளுக்கு திக்கென்றிருந்தது.
உடனே கணவனிடம் சென்று,
"இதோ பாருங்க, உங்க அப்பாவும் அம்மாவும் கீழே வந்துகிட்டிருக்காங்க,சும்மா விட்டோம்னா இங்கயே ஒரேயடியா தங்கிடுவாங்க.அதனால அவங்க வந்ததும் நாங்க திருப்பதி போறோம்,வர ஒரு வாரம் ஆகும்னு
சொல்லி அந்த கிழங்கள விரட்டிடுங்க ..சரியா?"
"சரி சரி"
அழைப்பு மணி அழைத்தது.
கதவை திறந்ததும் மலர்ந்த முகத்தோடு அந்தவயோதிக உள்ளங்கள் வந்தது. உடனேஅவன் தன்மனைவி சொன்ன வார்த்தை பிசகாமல் படபடப்போடு அனைத்தையும் சொல்லி முடித்தான்.அவர்களும் பாவமாய்
"சரிப்பா...பரவாயில்லப்பா,இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தோம்...இவ பேரன பாக்கனும்னா.நாங்க பார்த்துட்டு போயிடறோம்" என்றார்கள்.
குழந்தையை பார்த்ததும் சந்தோசம் கொள்ளவில்லை அவர்களுக்கு.
குழந்தையோ அழுது கதறியது.
குழந்தையோ அழுது கதறியது.
கொஞ்சிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.
கதவை தாளிட்டு வந்து "அப்பாடா...போக வச்சாச்சு"என்று கணவனும், மனைவியும் சந்தோஷப்பட்டார்கள்.
அவ்வளவு நேரம் அழுத அந்த எட்டு மாதக் குழந்தை அவர்கள்இருவரையும் பார்த்து 'கக்கக்கவென'சிரித்தது.சத்தமாய் அழது அரற்றிய குழந்தை திடீரென சிரிப்பதை பார்த்துஆச்சர்யப்பட்டனர்.
"பாசமாய் வந்த அய்யா அப்பத்தாவை விரட்டி விட்டீர்களே.எத்தனை வருடம் உங்களுக்காக அவர்களை சிதைத்து
கொண்டு உங்களை இந்த உச்சியில் வைத்திருக்கிறார்கள்.அடுத்தவரோட
உணர்வுகளை உணர்ந்து, மதிச்சு நடக்கிறவன் தான் மனுஷ ஜென்மம்.உங்களுக்கு போய் நான் பொறந்ததுல வெட்கப்பட்டு,வேதனைப்பட்டு தான் என் அய்யா அப்பத்தாவோட நான்இருக்க முடியலயேன்னு அழுதேன். இப்படியும் அப்பா அம்மா இருக்காங்களேன்னு உங்கள பார்த்து சிரிக்கிறேன்"என்று அந்த குழந்தையின் சிரிப்பில் அர்த்தங்கள் இருப்பதாய் அவர்களுக்கு
உரைத்தது.

கிளிப்பேச்சு
------------------
நெருக்கடியான நகரப் போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை.வாகனங்கள்
அனைத்தும் பரபரப்பை,சத்தங்களோடு விரைந்து கொண்டிருந்தன. அதில் புதிதாய் வாங்கிய மாருதி-800 ல் இன்னும் ஒரு மாதத்தில்
நடக்கவிருக்கும் கல்யாணம் பற்றிய நினைவுகளோடு வண்டியை
ஓட்டிக்கொண்டிருந்தாள் ஹனு. வருங்காலக் கணவன்,வாங்க நினைக்கும் நகைகள், சேலைகள் என வண்ண வண்ண கனவுகளின் ஒத்திகையோடு அவள் சென்றுகொண்டிருந்த போது திடீரென
ஒரு வளைவில் வேகமாய் வந்த லாரி அவள் கார் மீது மோத அவள் தூக்கி எறியப்பட்டாள். சாலையோரம் இருந்த இரும்புக்கம்பியில் அவள் கழுத்து அடிபட்டு விழுந்தாள். கூட்டம் கூடியது.
பிறகு...
சோலை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு. டாக்டர்கள், நர்சுகள் என துரிதமாய் செயல்பட
அவளுடைய முகவரியறிந்து வீட்டுக்கு தகவல் சொல்லப்பட இரு வீட்டாரும் வந்து அழுகையும், பயமுமாய் தவித்து கொண்டிருந்தனர்.
சாயங்காலம் டாக்டர் அழைத்தார்.
"பெரிசா பயப்பட ஒண்ணுமில்ல.ஆனா இரும்பு கம்பில மோதி பலமா அடிபட்டதால இனி பேசுரதுங்கிறது
கொஞ்சம் கஷ்டம். ஆனா பேச்சே வராதுங்கிறது இல்ல. பேசி பேசி பழகனும்" என்றார். நிச்சயம் செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பத்திரிக்கைகள் எல்லாம் கொடுத்தாகி விட்டது.
இரண்டு வாரங்களுக்கு பின் ஹனு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று ஊஞ்சல் நாற்காலியில் ஆடியபடியே பழைய நினைவுகள், கல்யாணம், விபத்து என்று சோகமாய் இருந்தாள்.
அப்போது "ஹனு...ஹனு..." என்று கூண்டுக்கிளி அழைத்தது.
அவள் அதை பார்த்தாள். தான் இருக்கும் நிலையை போல, சொல்ல முடியாத சோகங்களோடு தானே அந்தக் கிளியும் இருக்கும் என்று நினைத்தாள். அதை அடைத்து வைக்க கூடாது. சுதந்திரமாய் அது பறந்து திரியட்டும் என எழுந்து சென்று கூண்டை திறந்து விட்டாள். கிளி வெளியே போக மறுத்தது.
ஹனுவை பார்த்து "அம்மா...அம்மா..." என்றது... பிறகு" அப்பா...அப்பா.." என்று சொன்னது.
அவை,அந்த வார்த்தைகள் ஆசையோடு அந்த கிளியை வாங்கி வந்து ஹனு சொல்லி கொடுத்த வார்த்தைகள்.
கிளி மீண்டும் "அம்மா...அம்மா.." என்றது.
ஹனு கண்களில் நீர் திரள "அ....அம்....மா..." என்று பேச பழகினாள்.

ஆத்தா
---------------
அலமேலுபுரம். பசுமையான கிராமம். நாற்பது வீடுகள்,ஒரு ஆஞ்சநேயர் கோவில், ஒரு சிறிய நூற்ப்பாலை என்று அடக்கமான கிராமம். அந்த நூற்பாலையை நம்பித்தான் அந்த கிராமமே இருந்தது.
ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே உள்ள மகிழ மரத்தடியில் வடை,பஜ்ஜி சுட்டு வாழ்ந்து கொண்டிருந்தாள் அனாதையான மீனாட்சி பாட்டி. அங்கு வரும் நூற்ப்பாலை தொழிலாளர்களுக்கு அன்போடு பரிமாறுவாள்.
அப்படி அங்கு சாப்பிட வருபவர்களுள் சண்முகமும் ஒருவர். நிறைய பேர் பிறகு காசு தருகிறேன்னு சொல்லி போய்விடுவர். ஆனால் சண்முகம் தானும் அனாதை என்பதால் ஆத்தா, ஆத்தா என்று
பாசத்தோடு பேசுவார்.
"ஆத்தா...வேற எதாவது வேணுமா? என்னோட வந்து தங்குன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறே" என்பார்.
"வேண்டாம் ராசா...இப்படி அன்பா நாலு வார்த்தை பேசினா அதுவே இந்த அனாதைக்கு போதும்ப்பா" என்று கண் கலங்குவாள் பாட்டி. சண்முகம் பாட்டிக்கு நிறைய உதவ நெகிழ்ச்சியோடு படர்ந்தது பாசம்.
ஒரு நாள் வழக்கம் போல சண்முகம் மகிழமரத்தடி நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். ஒரே கூச்சலாய் இருந்தது. கூட்டத்தை விலக்கி சென்றவர் அதிர்ச்சியில் நின்றார். ஆத்தா, ஆத்தா என்று அவர் அழைக்கும் அந்த பாச ஜீவன் இறந்து கிடந்தது. கூட்டம் சிறிது நேரம் சலசலப்பை செய்து கரைந்தது. சண்முகம் தவிர வேறு யாரும் அங்கில்லை. கடைசியில் சண்முகமே தன் ஆத்தாவை தூக்கிக்கொண்டு சென்று இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வந்து மகிழ மரத்தடியில் அமர்ந்தார்.
கண்களை மூடியபடி மரத்தில் சாய்ந்திருந்தார்.
ஆத்தாவின் நினைவுகள் நெஞ்சுக்குள் ஓடின. "களைப்பா இருக்கியே...எதாச்சும் சாப்பிடுறியாப்பா" - ஆத்தா கேட்பது
போல இருந்தது.
அவர் கண்களில் கண்ணீர்.

நிறம்
அண்ணா பூங்காவிற்குள் நுழைந்ததுமே புவனாவின் கண்களில் அவர் பட்டு விட்டதால் அவளுக்கு கோபம் தலைக்கேறியது...
நேராய் அவரிடம் சென்று... "நீங்கல்லாம் என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க மனசுல?.நீங்க பொண்ணு பார்க்க வர்றீங்கன்னு நாங்க அலங்காரம் பண்ணிட்டு
இருப்போம். நீங்க வந்து பார்த்துட்டு,நல்லா சாப்பிட்டுட்டு ,பொண்ணே பிடிக்கலன்னு
சொல்லிட்டு போயிடுவிங்க. உங்களுக்கெல்லாம் மனசுலமன்மதன்னு நினைப்பா?" என்று மூச்சிரைக்க முடித்தாள் புவனா.

அவர் நிதானமாய் தொடங்கினார் ."இப்ப நான் பேசலாமா ?மேடம் நேற்று உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்கத்தான் வர்றேன்னு எனக்குதெரியாது வீட்டுல கிளம்பசொன்னங்கன்னு வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. நான் கல்யாணம் பண்ணிகிட்டா கறுப்பான ஒரு பொண்ண தான் கல்யாணம்
பண்ணிக்கனும்னு இருக்கேன். ஏன்னா கறுப்பான பெண்கள் எப்படில்லாம் நிராகரிக்க படறாங்கன்னு எனக்கு தெரியும் . நீங்க அழகா இருக்கீங்க, உங்களுக்கு என்ன விட நல்லா மாப்பிள்ளை,நீங்க சொன்ன மாதிரி மன்மதன் கிடைப்பான். அதனால தான் பிடிக்கலன்னு சொன்னேன். இத உங்க கிட்ட சொல்ல நினைச்சேன் . உங்க அப்பா பேச ஒத்துக்கல,அதான் வேண்டான்னு சொல்லிட்டேன் " என்று நிறுத்தி நிதானமாய் முடித்தார்.
தன் அவசரத்தனத்தை உணர்ந்து தலை குனிந்தாள் புவனா
" சாரி சார் ,என்ன மன்னிச்சிடுங்க .உங்க மனசு தெரியாம கோபப்பட்டுட்டேன்.இப்பஉங்கள நினைச்சு ரொம்ப சந்தோஷப்படறேன். உங்க கல்யாணத்துக்கு என்னை கட்டாயம்

நீங்க கூப்பிடனும்" என்று கண்களை துடைத்து வெளியேறினாள்.
Re: சின்னச் சின்ன கதைகள்
ஒரு சின்ன ஊர் . அங்கே ஒரு பள்ளிக்கூடம் . அதிகமாக யாரும் அங்கே படிக்க வருவதில்லை .
பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லை .
எதோ பள்ளிக்கூடம் என ஒன்று இருப்பதால் ,தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள் அவ்வளவுதான் .
வகுப்புக்கு வந்த ஒரு மாணவன் மிகவும் மந்தமாக உக்கார்ந்திருந்தான் .
ஆசிரியர் அவனை கவனித்தார் .
" என்னப்பா ... இப்படி உக்கார்ந்திருக்கே ... படிப்பில் கவனமில்லையா ...?
" ஐயா ... என் கவனமெல்லாம் எங்க வீட்டுலேயே இருக்கு !"
"அப்படி என்ன உங்க வீட்டுல இருக்கு ?"
" ஒரு பசுமாடு இருக்கு ! "
என்னப்பா சொல்றே
ஐயா .. நேத்து எங்க அப்பா புதுசா ஒரு பசுமாடு வாங்கிட்டு வந்தார் , அதை எங்க வீட்டு வாசல்ல கட்டி போட்டிருக்கார் .
என் நினைவெல்லாம் பசுமாடு மேலேயே இருக்கு
ஆசிரியர் கோபமடைந்தார் , யோசித்தார் ,
தம்பி ! ஒண்ணு செய்
" நான் உனக்கு ஒரு வாரம் லீவு தர்றேன் .. நீ என்ன பண்ற ... நம்ம ஊர் எல்லையில ஒரு மலை இருக்கே .. அங்க ஒரு குகை இருக்கு ... அதுல போய் உக்கார்ந்துக்க ! ஒரு வாரம் பூரா மாட்டை பத்தியே நினை ... பிறகு வா ...!"
" சரி .. சார் ...! என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான் .
ஆசிரியர் நினைத்து கொண்டார்
" ஆசை தீரும் வரையில் அவன் மாட்டை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பான் . பிறகு கொஞ்ச நேரத்திலேயே மறந்து விடுவான் "
ஒரு வாரம் கழிந்தது .
ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார் .
அந்த மாணவன் வெளியே நின்று கொண்டு இருந்தான் .
அவர் அவனிடம்
" என்னப்பா! மாட்டை பத்தி யோசித்து முடிச்சிட்டியா ? இப்போ மாட்டை பத்தின நினைவில்லையே ?
அவன் இல்லை என தலை ஆட்டினான் .
அப்பறம் ஏன் இன்னும் வெளியே நிக்கிறாய் ?
அவன் சொன்னான் " சார் நான் உள்ளே வரலாம்னு தான் நினைக்கிறேன் , ஆனா என் தலைல இருக்கற கொம்பு உள்ள வர முடியாதபடி மேலே இடிச்சிகிட்டு நிக்குது ".
ஆசிரியர் திகைத்து நின்றார் . மாட்டை பற்றியே சிந்தித்து சிந்தித்து , இவன் தான் அதுவாக மாறிவிட்டதாக உணர்கின்றான் .
ஜென் கதையில தியானம் எப்படி செய்யணும் என்பதற்க்காக தியானத்தை பற்றி இப்படி ஒரு கதையை சொல்வதுண்டு .
நாம யாரை பத்தி அடிக்கடி நினைத்து கொண்டு இருக்கிறோமோ , பேசி கொண்டு இருக்கிறோமோ அவங்களோட குணாதிசயம் நமக்கு வந்துரும் , நாம அவங்களா மாறுகிறோம் .
விவேகானந்தர் கூட சொல்லுவர்
" நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் " என்று .
- தென்கச்சி கோ .சுவாமிநாதன்

புலியின் வீரமும் தமிழனின் அன்பும்...!!!
-------------------
ஒரு காட்டுக்குள்ளே புலி இருக்குறதா தகவல் கிடைச்சதும், ஐநா சபை ஒரு டெஸ்ட்டுக்காக அமெரிக்கன் போலீஸ், ரஷ்யன் போலீஸ், இந்தியன் போலீஸ் டீமை தேர்ந்தேடுத்துச்சாம்.... முதலில் பேரிக்காய் ச்சே ச்சீ அமெரிக்க போலீசை காட்டுக்குள் அனுப்பினார்களாம், அவர்களும் போயி பார்த்துட்டு புலி இல்லைன்னு திரும்பி வந்துட்டாயிங்களாம்... அடுத்து ரஷ்யன் போலீஸ் டீம் போனதாம், அவர்களும் போயி பார்த்துட்டு புலி இல்லைன்னு சொல்லிட்டு திரும்பிட்டாங்களாம்... கடைசியா களம் புகுந்த நம்ம இந்தியன் டீம், ரொம்ப நேரமாகியும் திரும்பலையாம், அதிர்ச்சி ஆன ஐநா தலைவர், இவங்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துருச்சுன்னு பார்க்கலாம் வாருங்கள் என காட்டுக்குள் போயி பார்த்தால்..... நம்மாளுங்க ஒரு கரடியை பிடிச்சி கட்டி வச்சி அடி பின்னிட்டு இருந்துருக்காங்க, நான்தான் புலி'ன்னு சொல்லு சொல்லுன்னு அடிச்சிட்டு இருந்துருக்காங்க.....[[ஹா ஹா ஹா ஹா ஹா எப்பூடி]] கொசுறு : எங்கேயோ படிச்சது...!!! டிஸ்கி : சம்மந்தமே இல்லாத என் நண்பனை என்கவுன்டரில் கொன்ற மும்பை போலீஸ்.....!!! டிஸ்கி : நானும் இந்தியன்தான், கருத்து சொல்றவன் இங்கே வந்து கருத்து சொல்லு பதில் சொல்ல ஆளுங்க ரெடியா இருக்காங்க ஹி ஹி....
டிஸ்கி : புலின்னு சொன்னாலே மலையாளிகளுக்கு கொலை நடுங்குது, ஏன்னு என் உண்மை பேசும் மலையாளி நண்பன்கிட்டே கேட்டேன், அவன் சொன்னது ஆச்சர்யமா இருந்தது, பொறாமையும், கடுப்பும், இயலாமையும்தான் காரணம்னு சொன்னான்....!!!!
MANO நாஞ்சில் மனோ

பய(ர)ணம்...
பேருந்து நிலையத்தின் பெஞ்சுகளிலும், ரயில் நிலையத்தின் தூன்களின் சாய்வுகளிலும், விமான நிலையத்தின் ஓய்வறைகளின் காத்திருப்பின் நிமிட நேரங்களில் எங்கோ மனதின் ஓரத்தில் கீறி செல்லும் இந்த பய ரணங்களை உணர்ந்திருந்தாலும் அதை பின்னோக்கி பார்க்க மனம் ஒரு போதும் அனுமதித்ததில்லை...
நேற்றைய பேருந்து பயணத்தில், ஸ்லீப்பர் கோச்சின் கடைசி வரிசையில், உறங்கியும் உறங்கமலும் வரும் கனவு என் ஆழ்மன ஓட்டத்தின் பிரதிபலிப்பாய்…
********மாநில பேருந்தின் கடைசி இருக்கையில் காதலர்க்குள்ளான சில்மிசங்களோடு நானும் அவளும்... பயணத்தில் பாதியிலே அவளோ தன் இறக்கத்தின் முன்னவே இறங்கி கொண்டு சாலை கடப்பதில் மும்மூரமாக..., என் பேருந்து இரைந்துகொண்டே நகர.. என் மனதில் இறுக்கத்துடன் என் பயத்தை தொடரலானேன்...*****
****
எப்படிதான் ஓவொரு முறை நீண்ட பயணங்கள் வரும் போதும் நமது மனதின் நெறுக்கமான , சென்டிமென்டலான பல விடயங்களை விட்டு விட்டு நம் பயணத்தை தொடர வேண்டியுள்ளது...
ஊலகில் நன் செய்த பயணங்களில் எல்லா தேசங்களிலும் எனக்கு என் ஊர் தான் பிடித்திருந்தது... இருப்பக்களிலும் வயலும், தோப்பும், வாழை தோட்டங்களும்... ஒரு புறம் மலையின் மதிலும், மறுபுறம் கடலின் எல்லையும் என் காலை பயணக்களில் என் மனதில் எப்போதும் அழியாத ஓவியம் தான்... இன்று பல காங்கிறீட் குத்தீட்டிகள் வந்து இந்த ஓவியத்தை சீரளித்து கொண்டுதான் இருந்தன.. இருந்தாலும்... அழகு அழகுதான்... மழை காலங்களில் முதல் மழையில் வரும் இந்த வாசனையும், இலைகளில் விழும் துளிகளின் நாட்டியமும், தென்னை கீற்றில் உரசி செல்லும் காற்றின் இசையும்... என் அடுத்த வருகைக்காக காத்திருக்குமா என்று தெரியாவிட்டாலும், என் அருகில் இருக்க போவதில்லை என்று நிச்சயமாக தெரியும்...
ஊருக்கு வரும் ஒவ்வொருபோழுதும் என் 96 வயதான பாட்டியை பார்த்து செல்வேன்... எனக்கு என் பாட்டியோடு அதிகமான நெருக்கமோ இல்லை நினைவுகளோ இல்லாவிட்டாலும் மரியாதை நிமித்தமாக அவரை நான் பார்க்க தவறியதில்லை... நான் பார்க்க செல்லும் பொழுது கொடுக்கும் சிறு காசுக்காகவோ இல்லை தன்னை பார்க்க வருகிறார்களே என்றா சந்தோசத்தாலோ ..” எனிம எப்ப மோனே வருவே..?” என்று கேட்டுகொள்வார்... நீண்ட பயணக்களில் இந்த கேள்விக்கு என்ன பதில் என்று , அமைதியாக இருந்தாலும்.. எனக்காக அவர்கள் காத்திருக்க மாட்டார்கள் என்ற ரணம் கண்டிப்பாக உண்டு....
ஒவ்வொரு பயணத்தின் போது நான் இரண்டு பெட்டிகள் மட்டும் எடுத்து சென்றலும், மனம் நிறைய எடுத்து சென்றாலும்... பலரையும் பலதையும் விட்டுதான் செல்கிறேன்... என் வருகைக்காக எதுவும் எவரும் காத்திருக்க போவதில்லை...என் பயண, பய ரணங்களை தவிர...
பென்ஸ்

ரயில் நிலையத்தில் ஒரு நாள்…
------------------------
பொதுவாகவே, குடிகாரர்களைப் பற்றி நிறைய கதைகளும், ஜோக்குகளும் வந்துள்ளன.
அவற்றில் ஒன்றுதான் இது.
அதாவது ஒரு ரயில் நிலையத்தில் மதிய வேளையில் மூன்று குடிகாரர்கள் வந்து சேர்ந்தனர். ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் வந்ததும், அவர்கள் மூவரும் எழுந்து, ரயில் பெட்டியின் நுழைவாயில் அருகே வருவதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிடும்.
இவ்வாறே ஒவ்வொரு ரயிலும் வரும் போது மூவரும் முயற்சித்து முயற்சித்து தோல்வி கண்டனர்.
இதனை ரயில்நிலைய காப்பாளர் கவனித்துக் கொண்டே இருந்தார்.
இரவு நேரமாகிவிட்டது. அன்றைய கடைசி ரயில், நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது, உடனடியாக ஓடிச் சென்ற ரயில் நிலைய காப்பாளர், ஒவ்வொரு நபராக ரயிலில் ஏற்ற முயற்சித்தார். இருவரை ஏற்றிவிட்டு, மூன்றாமவரை ரயிலில் ஏற்ற முயற்சிப்பதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
இதைப் பார்த்த மூன்றாமவர் ‘ஓ’ வென கதறி அழுதார். உடனடியாக அவரை சமாதானப்படுத்தும் விதத்தில், மன்னிக்கவும், என்னால் உங்களை ரயிலில் ஏற்ற முடியவில்லை. உங்கள் நண்பர்களை மட்டுமே ஏற்ற முடிந்தது என்று கூறினார் ரயில் நிலைய அதிகாரி.
அதற்கு பதிலளித்த மூன்றாமவர்… அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள். நான் தான் ரயிலில் பயணம் செய்ய வந்தேன் என்றாரே பார்க்கலாம்.
ரயில் நிலைய அதிகாரிக்கு தலையை சுற்றியது.

சொர்க்கத்தின் வாயிலிலும்
-----------------------------
சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த இளைஞன் ஜோசப் அங்கிருந்த இரண்டு வாசல்களைப் பார்த்தான். ஒன்றில் ஆண்கள் என்றும் மற்றொன்றில் பெண்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.
ஆண்கள் வாசல் வழியே ஜோசப் சென்றான். அப்போது மீண்டும் இரண்டு வாசல்கள் தென்பட்டன. ஒன்றில் மனைவியால் அடங்கி நடப்பவர்கள் என்றும் மற்றொன்றில் மனைவியை அடக்கி நடப்பவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.
முதலாவது வாசலில் நீண்ட வரிசையில் ஆட்கள் காத்திருந்தனர். இரண்டாவது வரிசையில் ஒருவன் மட்டுமே நின்றிருந்தான்.
திருமணமே ஆகாத தான் எந்த வாசலில் செல்வதென்று முடிவெடுப்பதற்கு முன்பு, இரண்டாவது வாசலில் நிற்கும் அந்த மனிதனை விசாரித்து வரலாமென்று ஜோசப் நினைத்தான்.
அவனிடம் சென்று “எதற்காக இந்த வாசலில் நிற்கிறாய்?’ என்று கேட்டான்.
அதற்கு அந்த மனிதன் அளித்த பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்தான் ஜோசப். அதாவது, “எனக்கொன்றும் தெரியாது. என்னுடைய மனைவிதான் இந்த வாசலில் நிற்கும்படி சொன்னாள்…’ என்றான் அவன்.

அண்ணி நீங்க ரொம்ப அழகு!
------------------------
சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்.. சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் செல்போனில் அழைப்பு வர.. எடுத்து “”ஹலோ..” என்றேன்.
“”மாலா அக்கா நான் தான் கார்த்திக் பேசறேன்”
“”என்ன கார்த்திக்? 2 வருஷமாச்சு உன் குரல கேட்டு.. எங்கேதான் போயிட்டீங்க? கார்குழலி எப்படி இருக்கா? குழந்தை பாவனா எப்படி இருக்கா?”
“”அக்கா!”– எதிர்முனையில் குரல் தேய்ந்து.. கரைந்தது.
“”சொல்லு கார்த்திக்! என்ன தயக்கம்?”
“”அக்கா.. கார்குழலியை அடையார் கேன்சர் இன்ஸ்ட்யூட்ல சேத்திருக்கேன். இன்றைக்கு மதியம் 12 மணிக்கு அவளுக்கு ஆபரேஷன்.”
“”என்னத்துக்கு…?”– என் குரலில் பதற்றம்.
“”அவளுக்கு பிரெஸ்ட் கேன்சர்”.
“”என்ன?”– என் குரலில் இப்போது அதிர்ச்சியும் சேர்ந்துகொண்டது.
“”அவளுக்கு 2 வருஷமாவே பிரச்னைதான். மருந்து, மாத்திரை, ஊசி, கதிர்வீச்சு சிகிச்சைனு எதிலும் சரிப்படாம இப்போ ஆபரேஷன்தான் முடிவாயிடிச்சு. நாங்க சென்னைக்கு வந்து ஒரு வாரம் ஆச்சு. எல்.பி. ரோட்டில் இருக்கிற லாட்ஜில் தங்கியிருக்கோம். 2 நாளைக்கு முன்னதான் ஆபரேஷனுக்கு டேட் கிடைச்சுது.”
“”மொதல்ல லாட்ஜை காலி பண்ணிட்டு இங்கே வந்துடு கார்த்திக். பாவனா எங்கே?”
“”அவ எங்க அம்மாவோட மும்பையில இருக்கா. இப்ப அவளுக்கு பரீட்சை நேரம்.”
“”ஒரு வாரம் ஆச்சுங்கறே.. எங்களுக்கு ஒரு தகவலும் தெரிவிக்கலையே. இது நியாயமா?”–என் குரலில் கடுங்கோபம்.
“”அக்கா.. அவ பிடிவாதம்தான் உங்களுக்கே தெரியுமே..! தனக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமை உங்களுக்கு தெரியக் கூடாதுன்னு அவ நினைக்கிறா.. நான் தான் மனசு கேட்காம ஆவறது ஆவட்டும்னு சொல்லிட்டேன். அங்கிளுக்கு சொல்லிடுங்க.”
“”சரி.. சரி.. நான் சொல்லிக்கறேன்..நீ ஆஸ்பிட்டல்ல அவள கவனிச்சுக்க. நாங்க சாயந்திரம் வந்து பார்க்கிறோம்.”
அடுத்த நொடியில் சுதாகருக்குப் போன் பண்ணினேன்.
விஷயத்தைச் சொன்னேன். தனது ஒரே தங்கைக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தார். சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிடுவதாக கூறினார்.
கேரட்டைக் கழுவ சமையலறைக் குழாயைத் திறந்தேன். தண்ணீர் சல சலவென கேரட்டுகளைக் குளிப்பாட்டிவிட்டு சிங்க் வழியாக பைப்பில் வெளியேறிக் கொண்டிருந்தது.
என் நினைவுகளும் மெல்ல மெல்ல பின்னோக்கிச் சென்றன.
* * * * *
6 ஆண்டுகளுக்கு முன்..
சென்னை மாநிலக் கல்லூரியில் நானும் சுதாகரும் எம்எஸ்சி படித்துக் கொண்டிருந்தோம். ஒரே வகுப்பு. இருவர் மனமும் ஒன்றாகி காதலாக கனிந்தது.
அன்று கல்லூரி முடிந்தவுடன் ஹீரோ ஹோண்டாவை தள்ளியவாறே வந்த சுதாகர், “”வண்டியில் ஏறு,” என்றார்.
“”எங்கே?”
“”குயின் மேரிக்கு..”
“”எதற்கு?”
“”அங்கே பிஎஸ்சி படிக்கிற என் தங்கை கார்குழலியை உனக்கு அறிமுகப்படுத்தப் போறேன்..”–என்றார்.
சுதாகர் வற்புறுத்தலை மீற முடியவில்லை.
கல்லூரியிலிருந்து ஒரு பெண் நேராக சுதாகரை நோக்கி வந்தாள்.
“”வா.. கார்குழலி.. மீட் மை உட்பி.. அதாவது உன் வருங்கால அண்ணியை..” என்றார் சுதாகர் உற்சாகமாக.
ஓ இவள்தான் கார்குழலியா? பெயருக்கேற்ப நீண்ட கூந்தல் அவளுக்கு. சடை பின்னியிருந்தாள்.
“”அண்ணா.. உங்களுக்கு என்ன தைரியம் இருந்தா.. திடுதிடுப்புனு இவங்கள எனக்கு அறிமுகப்படுவீங்க?”
“”இதுமட்டுமல்ல. இன்னும் ஃபியூ டேஸ்ல அம்மா கிட்டே அறிமுகப்படுத்தப் போறேன்..”
–சுதாகரின் குரலில் இருந்த உறுதியைக் கண்டு கார்குழலி அவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு தர்மசங்கடமாக இருந்தது.
இருப்பினும் இறுக்கமான சூழ்நிலையைத் தவிர்க்க கார்குழலியைப் பார்த்து இதமாக புன்னகைத்தேன். பதிலுக்கு அவளிடம் அத்தகைய புன்னகையை எதிர்பார்க்க முடியவில்லை.
மாறாக என் தலைமுடியை ஏற இறங்க பார்த்தாள். அதில் ஓர் ஏளனம் தெரிந்தது. காரணம்? எனக்கு கார்குழலியைப் போல் அடர்த்தியான, கருண்ட, நீண்ட கூந்தல் கிடையாது.
இருவரும் எனக்கு பை..பை.. சொல்லிவிட்டு பைக்கில் கிளம்பினர்.
அன்று..
சுதாகர் நான் தங்கியுள்ள லேடீஸ் ஹாஸ்டலுக்கு வெளியே இருந்து செல்லில் அழைப்பு விடுத்தார்.
என்னை அழைத்துக் கொண்டு நேரே அவங்க வீட்டுக்குச் சென்றார்.
கார்குழலிக்கு என்னைப் பார்த்ததும் “மைல்டு ஷாக்’.
பின்னர் சமாளித்துக்கொண்டு “ஹாய்..’ என்றாள் உலர்ந்த உதடுகளுடன்.
உள்ளே நுழைந்தோம். சுதாகர் கை காட்ட.. உள்ளே சோபாவில் அமர்ந்தேன்.
“”இதோ வந்துடறேன்..”
–எதிர்ப்புற அறைக்கு சுதாகர் நுழைந்தார்.
அப்போது பக்கவாட்டு அறையில் இருந்து கார்குழலியின் கரகரத்த குரல். “”மம்மி.. உன் புள்ள பண்ணியிருக்கிற காரியத்தைப் பார்த்தியா..? வந்திருக்கிறது அவனோட உட்பியாம். உனக்கு அறிமுகப்படுத்த அழைச்சிட்டு வந்திருக்கான்.. காதலுக்கு கண்ணில்லைங்கிறதை உன் புள்ள நிரூபிச்சுட்டான். அவள வந்து பார். அவளும் அவ தலைமுடியும். இந்த வயசுல உனக்கு இருக்கற தலைமுடியின் நீளம், அடர்த்தில பாதிகூட அவளுக்கு கிடையாது. வந்து பார். அவ லட்சணத்தை..,”
–உள்ளே இருந்து நன்றாக கேட்கும்படியாக வந்து விழுந்த அந்த வார்த்தைகள் என்னைக் கூனிக் குறுகச் செய்தன.
இருப்பினும் நிராதரவான எனக்கு சுதாகர்தானே பேராதரவு. சமாதானப் படுத்தினார். இந்நிலையில் ஒருவழியாக திருமணம் நடந்தேறியது.
* * * * *
அன்று மாலை.
அலுவலகத்திலிருந்து வந்த சுதாகர் கையில் பூச்சரங்கள் அடங்கிய பொட்டலம்.
என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தவாறே பொட்டலத்தைப் பிரித்தார். ஒரு பத்து முழம் மல்லி. அடர்த்தியாக கட்டப்பட்டு அழகாக இருந்தது. அதன் வாசம் அறை முழுக்கப் பரவி சுவாசத்துக்கு இனிமை கூட்டியது.
நான் அந்தப் பூச்சரத்தை சுதாகரிடம் இருந்து பெற்றுக்கொள்ள நெருங்கியபோது.. எங்கிருந்தோ வந்த பருந்து கோழிக்குஞ்சை கொத்திச் செல்வது போல கார்குழலி விருட்டென வந்தாள்.
அடுத்த நொடி அவள் கையில் மல்லிச் சரம்.
“”அண்ணா மல்லி சரம் சூப்பர். ஆனா குருவித் தலையில பனங்காய் வச்சா தாங்குமா? அதனால அண்ணிக்கு அரை முழமே போதுமே..,” என்றவாறே அரை முழம் பூவை பல்லினாலேயே கட் செய்து மீதி ஒன்பதரை முழத்துடன் உள்ளே மறைந்தாள்.
சுதாகர் சங்கடத்துடன் என்னைப் பார்த்தார். நான் இயல்பாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
“”போகட்டும் விடுங்க.. கார்குழலி சொல்றதுல தப்பில்லை. அவ கூந்தலுக்கு இந்த பத்து முழம்கூட பத்தாது. எனக்கு இந்த அரை முழமே நிறைவாத்தான் இருக்கும்..”
எனது பேச்சு சுதாகருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கும். “”யூ ஆர் கிரேட்” என்று சொல்லியவாறே என்னை ஆழமாகப் பார்த்தார்.
திருமணமாகி புகுந்த வீட்டுக்குப் போகும்வரை கார்குழலி, தன் வார்த்தைகளால் என்னைக் குத்திக் குடைந்து குரூர குதூகலம் அடைந்தாள்.
இதற்கிடையே அடுத்த 6 மாதத்தில் எனக்கு கண்ணன் பிறந்தான். குழந்தையைப் பார்க்க மும்பையில் இருந்து கார்குழலி தனது கணவர் கார்த்திக்குடன் வந்தாள். குழந்தையைப் பார்த்து பூரிக்க வேண்டிய கார்குழலியின் முகம் இறுக்கமாகியது.
மறுகணம் போலி புன்னகையோடு, “”அண்ணி.. இது உங்களுக்குப் பிறந்த குழந்தையான்னு நம்பவே முடியலை. தலைநிறைய கரு கருன்னு முடியோடு இருக்கே. ம்.ஹூம் அண்ணனுக்கு அடர்த்தியான தலைமுடியாச்சே. அதான் குழந்தை தப்பிச்சுடுச்சு. இல்லைன்னா மொட்டைத் தலையாத்தான் பொறந்திருக்கும்..” என்றாள் கேலியும் குத்தலுமாக.
இரண்டு ஆண்டுகள் கழிந்தன.
உலகிற்கு ஒரு புது வரவு. கார்குழலிக்கு பெண் மகவு.
சுதாகருடன் நர்சிங்ஹோம் சென்றேன்.
கார்குழலியைப் பார்த்தும் திடுக்கிட்டேன்.
நிறைய அழுதிருப்பாள் போல. தண்ணீரில் முக்கிய பன் போல முகம் உப்பியிருந்தது.
அவளருகே தொட்டிலில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையைக் கண்டேன். 3 கிலோவுக்கு மேல் இருக்கும். நல்ல சிவப்பு. ஆனால் மண்டையில் நாலு முடி கூட இல்லாமல் மொட்டையாக இருந்தது.
ஓ கார்குழலி இதனால்தான் அழுதிருப்பாள் போலிருக்கிறது.
“”என்னம்மா? பிள்ளைப் பெத்த உடம்பு. இப்படி விசனப்பட்டுக் கிடக்கலாமா? சில குழந்தைகள் இப்படித்தான் பொறக்கும்..வளர வளர தலைமுடியும் வளர்ந்துடும்.”
-எனது மாமியார் அவளருகே அமர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
அதன்பின் இரண்டு வருடங்கள் சென்றிருக்கும்.
அன்று எங்களுக்கு ஓர் அதிர்ச்சி.
இழப்பு..பேரிழப்பு.
மாரடைப்பால் எனது மாமியார் காலமானார்.
மும்பையில் இருந்து பிளைட் பிடித்து பறந்துவந்தாள் கார்குழலி. “அம்மா’ என்று பெருங்குரலெடுத்து சவம் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீஸர் பாக்ஸ் மீது விழுந்து கதறினாள்.
உடன் அவளது கணவர் கார்த்திக். குழந்தை சினேகா என்னவென்று புரியாமல் மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.
6 மாதக் குழந்தையாக சென்ற சினேகாவை இப்போது இரண்டரை வயதில் பார்க்கிறேன். அப்போது அங்கு வந்தான் என் குழந்தை கண்ணன்.
“”வர்றியா..விளையாடலாம்..,” என்றான் சிநேகாவைப் பார்த்து. நீண்ட நாள் பழக்கம்போல சிநேகா அவனுடன் விளையாடச் சென்றாள்.
சவ ஊர்வலம் புறப்பட்டதும் வீட்டிலிருந்த பெண்கள், குழந்தைகள் தலைமுழுக ஆரம்பித்தோம். அப்போதுதான் வெறும் ஜட்டியுடன் நின்றிருந்த சிநேகாவை பார்த்தேன். அவள் தலை மொட்டை அடித்தது போல இருந்தது. என்னவென்று கார்குழலியைக் கேட்டேன்.
“”என்ன எழவோ! அந்த சனியனுக்கு தலைமுடியே சரியா வளரலே,” என்றாள் சலிப்புடன்.
“”ட்ரீட்மெண்ட் எடுத்தியா?”
“”எல்லாம் ஆயிரம் ஆயிரமா கொட்டி அழுதாச்சு,” என்றாள் மேலும் வெறுப்புடன்.
நான் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
துக்கத்தின் சுமையிலும் 16 நாள்கள் ஊர்ந்து தேய்ந்தன. அன்று மும்பைக்குத் திரும்ப தயாராகிக் கொண்டிருந்தாள் கார்குழலி.
வெளியே குழந்தைகளின் கசமுசா சப்தம்.
“”மொட்டை மொட்டை.. சிநேகா மொட்டை..”
“”இல்ல நீந்தான். இல்ல நீந்தான்..”
“”இல்லியே நீதான் மொட்டை..”
கண்ணனின் சீண்டலுக்கு சிநேகா சிணுங்க ஆரம்பித்தாள். அதைப் பார்த்து கண்ணன் கை கொட்டிச் சிரித்தான். கார்குழலிக்கு வந்ததே ஆத்திரம்.
குழந்தை என்றும் பாராமல் கண்ணனின் முதுகில் ஓங்கி அறைந்தாள். அடிபட்ட கண்ணன் அழுதபடி என் மடியில் வந்து விழுந்தான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சுதாகர் பொறுமை இழந்தார்.
“”என்ன கார்குழலி..கண்ணன் ஒரு குழந்தைன்னு உனக்குத் தோணலையா?”
“”ஓ…இப்ப உனக்கு உன் குழந்தைதான் முக்கியமாப் போச்சு.. அம்மாவும் போயிட்டா..இனி எனக்கு ஆதரவாப் பேச யாரு இருக்காங்கற தைரியம் வந்துடுச்சு..இனி எனக்கு இந்த வீட்டில என்ன வேலை? எல்லாம்தான் முடிஞ்சுப் போச்சே..,” சீறலும் அழுகையுமாக புலம்ப ஆரம்பித்தாள் கார்குழலி.
எங்கள் சமாதானமெல்லாம் வேலைக்கு ஆகவில்லை.
அப்படியே அன்று மும்பைக்குப் போனவள்தான். கடந்த 2 வருஷமா எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.
இப்போது அடையாறு ஆஸ்பத்திரியில் கிடக்கறதா தகவல்.
13-ம் நம்பர் ஸ்பெஷல் வார்டு.
உள்ளே நுழைந்து விழிகளால் வலைவீசினோம். அங்கே ஓர் இடத்தில் கார்த்திக் நின்றுகொண்டிருந்தான். நேரே அங்கு சென்றோம்.
கட்டிலில் அது யார்..? கார்குழலியா? அடையாளம் தெரியவில்லை.
நல்ல நிறத்துடன் தள தளவென்றிருந்த கார்குழலி. நோய்க் கொடுமையால் தன்னிறமிழந்து வாடி வதங்கி இருந்தாள்.
கண்களை மூடி இருந்தாள்.
கார்குழலியின் தற்போதைய நிலைமையைப் பார்த்ததும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சுரேந்தர் கைக்குட்டையை எடுத்தார். முகத்தைத் துடைத்துக்கொள்ளும் சாக்கில் தன் வேதனையை அடக்க முயன்றார்.
நான் கார்குழலி அருகே இருந்த ஸ்டூலில் அமர்ந்து அவள் நெற்றியில் விபூதி, குங்குமத்தை துளியூண்டு வைத்தேன். பிறகு அர்ச்சகர் கொடுத்த அம்மன் பூக்களில் ஒன்றை எடுத்து அவள் கூந்தலில் செருக நினைத்து தலையை மூடியிருந்த துணியை விலக்கினேன். அப்படியே அதிர்ச்சியில் பின்வாங்கினேன்.
அவள் தலை மழ மழவென வழுக்கை விழுந்தது போல் இருந்தது.
“”என்ன கார்த்திக் இது..? செஸ்ட்ல தான ஆபரேஷன்..தலையை ஏன் மொட்டை அடிச்சாங்க?”
“”இல்லக்கா கேன்சருக்கு கதிர்வீச்சு சிகிச்சை தரும்போது தலைமுடியெல்லாம் இப்படித்தான் கொட்டிடுமாம்..”
“”ஓ..!!”
–மேலும் அதிர்ச்சியில் மூழ்கினேன்.
இருவரும் கண்களைத் துடைத்துக் கொண்டு கலங்கி நின்றோம்.
“”என்ன இது? ஆறுதலும் தைரியமும் சொல்ல வந்த நீங்களே இப்படி மனம் உடைஞ்சுப் போனா..நான் என்ன பண்றது?”
கார்த்திக் குரலில் நியாயமான கோபம் வெளிப்பட்டது.
கார்குழலி கண் திறந்தாள். எங்கள் இருவரையும் பார்த்ததும் அவள் வேதனை அதிகரித்திருக்கக் கூடும். மீண்டும் கண்களை மூடினாள்.
மூடிய விழிகளுக்குள் இருந்து கண்ணீர்த் திவலைகள் கசிந்து வந்தன.
நான் ஆதரவாக அவள் கையைப் பிடித்துக்கொண்டேன்.
என் உள்ளங் கையில் அம்மன் மலர்கள் கசங்காமல் இருந்தன. அவள் தலையில் பூவை வைக்க முடியாத நிலைமை. என்ன செய்வது என்று தயங்கிக் கொண்டிருந்தபோது..கார்குழலியே மெதுவாக என் கையில் இருந்த பூவை எடுத்தவாறே பலம் அனைத்தையும் திரட்டி எழுந்துகொள்ள முயன்றாள்.
“”அண்ணி…”
பலவீனமான குரலில் கார்குழலி அழைத்தாள்.
“”என்னம்மா?”
“”நீங்க கொஞ்சம்.. திரும்பி உக்காருங்க..”
நான் என் முதுகுப்புறம் அவளுக்குத் தெரியும்படி திரும்பி உட்கார்ந்தேன்.
எனது மெலிந்த கூந்தலை அவள் தன் கையால் வருடினாள்.
அதன்மூலம் அவள் முதன்முதலாக தன் அன்பை வெளிக்காட்ட முயன்றாள். சிரமப்பட்டு அவள் அந்த ஒற்றை ரோஜாவை என் பின்னலில் செருகினாள்.
“”அண்ணி நீங்க இப்ப ரொம்ப அழகு..” என்றாள்.
என்னால் இப்போது அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நன்றி ;வாணிஸ்ரீ சிவகுமார் -

கழுதையும், கட்டெறும்பும்!
-------------
ஓர் ஊரில் கழுதையும், கட்டெறும்பும் நட்பாக இருந்தன. கழுதை தான் தினமும் படும் கஷ்டத்தையும், தன் முதலாளி தன்னை அடித்துத் துன்புறுத்துவதையும் கூறி, தன் மன ஆறுதலைத் தேடிக் கொள்ளும். கட்டெறும்பும், கழுதைக்கு அவ்வப்போது ஆறுதல் கூறி தேற்றிச் செல்லும். ஒரு நாள் கட்டெறும்பு தன் புற்றின் வெளியில் அமர்ந்திருந்தது. அப்போது, கழுதையின் மேல் பெரும் பொதியை வைத்து கழுதையின் வயிற்றோடு கட்டி, பின் அதை ஆற்றுக்கு ஓட்டும் முகமாக, ஒரு தடி கொண்டு ஓங்கி அடித்தான். கழுதை பொதியை சுமக்க முடியாமல் தள்ளாடி தள்ளாடி செல்ல, அதன் முதலாளி பலம் கொண்ட மட்டும் கழுதையை அடித்து, விரட்டிக் கொண்டிருந்தான். கழுதையின் நிலையைக் கண்டு கட்டெறும்பும் கண்ணீர் விட்டது.
“தன் நண்பன் இப்படி வேதனைப்படுகிறான். நாம் எவ்வளவோ பரவாயில்லை. பிறர் மிதித்தோ, அடித்தோ தன் உயிர்தான் போகுமே ஒழிய, தாம் யாருக்கும் அடிமை இல்லை’ என்று நினைத்து பெருமூச்சு விட்டது. பின் அன்று மாலை, துவைத்து எடுத்து வந்த ஈரம் இன்னமும் உளராத துணிகளை முதுகில் சுமந்தபடி ஆடி ஆடி வந்தது கழுதை. முதலாளி தான் உணவு உண்டு உறங்கி பின் போதும் போதாதுமாக கழுதைக்கு தீவனம் வைத்தான். அதை கழுதை ஆசை ஆசையுடன் உண்டு பின் படுத்தது.
அப்போது மெல்ல கட்டெறும்பு கழுதை அருகில் வந்தது.
“”நண்பா, சுகமில்லையா?” என வாஞ்சையுடன் கேட்டது கட்டெறும்பு.
“”வா, நண்பா! இன்று பொதியின் கனம் தாங்க முடியவில்லை. அதோடு ஏகப்பட்ட அடி வேறு. உடல் முழுதும் வலி. வயிற்றுக்கும் போதுமான உணவு இல்லை. தனியாக மேயலாம் என்றால் கட்டு போட்டுவிட்டான் என் முதலாளி.” கழுதை வருத்தத்துடன் கூறியது.
“”நண்பா, கவலைப்படாதே. உன் முதலாளியின் கொட்டத்தை எப்படியும் அடக்குகிறேன். உன் நிலையை இன்று நானே நேரில் பார்த்தேன். எவ்வளவு கொடுமை இழைக்கிறான் உன் முதலாளி” என்று கூறி நண்பனைத் தேற்றியது. அப்போது மாலை முடியும் வேளை. முதலாளி கையில் தீப்பந்தம் ஏற்றி வந்தான்.
“”ஐயோ… நண்பா, என்ன இது உன் முதலாளி இப்படி தீப்பந்தத்துடன் வருகிறான்” என்று அஞ்சியபடி கேட்டது கட்டெறும்பு.
“”நாம் இருக்கும் மரத்தின் மேல் ஒரு பெரும் தேன்கூடு இருக்கிறது. அதை இப்போது பிரித்து தேனை எடுக்கப் போகிறான் என் முதலாளி” என்றது கழுதை.
இதுதான் நல்ல சமயம் என்று நினைத்து, கழுதையிடம் கூறிவிட்டு வேகமாக தன் புற்றுக்குச் சென்றது. தயாராக தன் பின்னால் ஐந்து கட்டெறும்புகளை நிறுத்தி கட்டளைக் கொடுத்து காத்து நின்றது. அப்போது, முதலாளி தீப்பந்தம் ஏந்தி, படுத்திருந்த கழுதையின் வயிற்றில் ஒரு கால் வைத்து ஏற, கழுதை வலி தாங்காமல் துடித்தது, அதை லட்சியம் செய்யாமல், மரக்கிளையில் கூட்டின் பக்கம் தீப்பந்தத்தைக் காட்டும் சமயம், கட்டெறும்பு கட்டளையிட, மற்ற ஐந்து கட்டெறும்புகளும் வேகமாகச் சென்று முதலாளியின் பாதத்தை ஆறு இடங்களில் ஒரு சேர கடித்தன. அவன் “”ஐயோ” என்று அலறியபடி தடுமாறி கீழே விழுந்தான். தீப்பந்தம் அவன் முதுகில் விழுந்து அந்தச் சூடு பொறுக்க முடியாமல் அலறினான். அதை வீசி எறிய, அந்தப் பந்தம் கழுதையை கட்டியிருந்தக் கயிற்றில் பட்டு எறிய கயிறு அறுந்தது.
அவ்வளவுதான், கழுதை சுதந்திரமாக எழுந்தது. எறும்புக் கடி, தீக்காயம் இவைகளால் வலி கொண்டு படுத்திருந்த முதலாளியைப் பார்த்து புன்னகைத்தது. “ஐந்தறிவு பிராணிகளிடம் அன்பு செலுத்தாது, அடித்துத் துன்புறுத்திய உனக்கு ஆண்டவன் கொடுத்தப் பரிசு’ என்று எண்ணி, தன்னை விடுவிக்க காரணமான கட்டெறும்பு நண்பனைப் பார்த்தது. ஆனால், அவை முதலாளியின் பாதத்தில் நசுங்கி, அதன் மற்ற நண்பர்களுடன் இறந்திருப்பதைக் கண்டு மனம் கலங்கி அழுதது.
அதற்குள், முதலாளி மெல்ல எழுந்து கழுதையை பிடிக்கலானான். அப்போது, முதலாளியை ஒரு உதை விட்டு, கானகம் நோக்கி ஓடியது. இப்போது, முதலாளியை தேனீக்கள் வட்டமிட்டு கடிக்க, அவன் “ஐயோ… அம்மா…’ என்று அலறியபடி வீட்டினுள் சென்று தாளிட்டான்.
தன் உயிர் கொடுத்து நண்பனுக்கு உதவிய கட்டெறும்பின் அருமையை நினைத்தபடி கழுதை சுதந்திரக் காற்றை அனுபவித்தது.
+
வாணிஸ்ரீ சிவகுமார்

Similar topics
» சின்னச் சின்ன ஆசை....
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்…
» சின்னச் சின்ன நாய்க்குட்டி
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்…
» சின்னச் சின்ன நாய்க்குட்டி
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
» சின்னச் சின்ன தடுமாற்றங்கள்
Page 4 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum