Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
4 posters
Page 1 of 1
கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
கடவுளைக் கண்டேன் அப்படின்னு ஒரு தொடர்பதிவு ஒண்ணு இப்போ சென்னை மழை மாதிரி எல்லாப் பக்கமும் அடிச்சி விளையாடுது. வலையுலகிற்கு வந்த புதிதில் வாரம் ஒரு தொடர்பதிவு வரும். அதன்பின் மெல்ல மெல்ல தொடர்பதிவுக் கலாச்சாரம் குறைந்து விட்டது. பெரும்பாலும் தொடர்பதிவில் ஒரு சிக்கல் என்னவென்றால் இதற்கு எழுதுங்கள் என்று சொல்லும் போது எழுதுவது சிரமம். அதைவிட மிகப்பெரிய சிரமம் என்னவென்றால் பத்துப் பேரை எழுதச் சொல்லுங்கள், ஐந்து பேரை எழுதச் சொல்லுங்கள் என்பதுதான். ஆரம்பத்தில் எழுதுபவர்கள் ஆட்களை பிடித்து விடுவார்கள். மெதுவாக எழுதுவோமே என்றிருந்தால் விவசாயி இப்போது களை எடுக்க ஆள் தேடுவது போல்தான்...
கடைசியாக வந்த தொடர்பதிவு கில்லஜி அண்ணாவின் கனவில் வந்த காந்தியின்னு நினைக்கிறேன். ஆளு கோர்த்து விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறதில் கில்லாடி.... காந்தி கூட சுத்தி சுத்தி அடிச்சி ஆடி அரை சதம் போட்டதாக நினைவு. இந்த முறை கடவுளைப் பார்த்து நம்ம ஆசையைச் சொல்லணுமாம். என்னங்க ஆசையிருக்கு... முதல்ல இந்த ஊரில் இருந்து கிளம்பி பொண்டாட்டி, பிள்ளைகளோட சந்தோஷமாக இருக்கணும்ங்கிற பெரிய ஆசைதான் ரொம்ப நாளா ஓடுது. ஆனா கடவுள் கண்டுக்கவே இல்லை. அப்படியிருக்கு... அது வேண்டும் இது வேண்டுமென பதிவிற்காக பந்தலிடலாம். எல்லாம் கிடைக்குமா..?
நான் ஒருநாளைக்கு நூறு தடவைக்கு மேல் (நல்லா கவனிங்க ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி இல்லை... உண்மையிலேயே நூறு தடவை) 'ஸ்ஸ்ஸ்... அப்பா... முருகா என்னை மட்டும் காப்பாத்துன்னு சொல்வேன்' இது பல வருடங்களாக தொடரும் சொல். எங்க வீட்டில், நட்பில் எல்லாம் 'சாமிக்கிட்ட எல்லாரும் நல்லாயிருக்கணுமின்னுதானே வேண்டுவாங்க நீ என்னடான்னா உன்னையை மட்டும் காப்பாத்தச் சொல்றே..?' அப்படின்னு கேப்பாங்க. நான் சிரித்துக் கொண்டே 'என்னையை கடவுள் காப்பாத்தினா... நான் பத்துப் பேருக்காச்சும் நல்லது(?) செய்வேன்.... அந்தப் பத்துப் பேரு நூறு பேருக்கு.... நூறு பேர் ஆயிரம் பேருக்கு.... இப்படி போகும்ல்ல.... அதை விட்டுட்டு எல்லாரையும் காப்பாத்துப்பான்னு சொன்னா... அவரு இவனைப் பார்ப்போமா... அவனைப் பார்ப்போமான்னு மாறி மாறி பாத்து அம்புட்டுப் பேரையுமே காப்பாத்தாம விட்டுவாருல்ல...' என்று சொல்வேன். 'அடேங்கப்பா... என்ன ஒரு வில்லத்தனம்...' என்று சிரிப்பார்கள். அப்படிப்பட்ட நான் கடவுளிடம் என்னோட ஆசைகளைச் சொல்றேன். அவரு நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு....
அதுக்கும் முன்னால கில்லர்'ஜி' அண்ணா நகச்சுத்திக்காக ஆஸ்பிடல் போய் ஆபரேசன் தியேட்டருக்குள்ளே போனதும் மேலோகத்துக்கு போயி இறைவனிடம் தனது ஆசைகளை அடுக்குகிறார்... அதெல்லாம் மிகப் பெரிய ஆசைகள்... அங்கிட்டு கீதா அக்கா, சகோதரி தேன் மதுரத்தமிழ் கிரேஸ், அன்பு ஐயா செல்வராஜூ, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, பழனி கந்தசாமி ஐயா என பலரும் கடவுளைப் பார்த்து தங்கள் ஆசைகளைச் சொல்லியிருக்கிறார்கள்... நானும் அடுக்குகிறேன்... அதற்கு முன்னர் நேற்றிரவு கடவுளுடன் நடந்த உரையாடலைச் சொல்லி விடுகிறேன். தூக்கம் வராமல் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்போது அறையெங்கும் ஒரு பிரகாசம்... 'லைட்டெல்லாம் அமர்த்தியாச்சே... என்ன வெளிச்சம்...?' என யோசிக்கும் போதே....
"என்னப்பா... அறையில் தனியாக இருக்கிறாய்..?" என்றொரு குரல். இரவு 1.30 மணிக்கு திடீரென கேள்விக்கணையை தனி ஒருவனாய் இருந்த என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வேன்... ஆம் பயந்து அலறிவிட்டேன்... அறை பூட்டியிருக்கு... நான் மட்டுமே இருக்கிறேன்... எப்படி இன்னொரு குரல் வியர்வை என்னை நனைக்க... எனக்கு கைகால் எல்லாம் டைப் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
"ஏனப்பா பயப்படுகிறாய்..? நாந்தான் கடவுள்..." என்றார்.
"என்னது...!? கடவுளா...? " பயம் மறைந்து சிரிப்பு வந்தது. பின்னே சிரிப்பு வராம ராத்திரி 1.30 மணிக்கு எந்தக் கடவுளய்யா வரும்... கனவா இருந்தாக்கூட பரவாயில்லை... கில்லர்ஜி அண்ணா தொடுத்த கடவுளைக் கண்டேன்தொடர்பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தேன்... அப்பத்தான் யோசித்தேன்... ஆங்... அட நம்ம ஆசையைக் கேட்க வந்திருக்காரு போல என்றெண்ணி "அமருங்கள்" என்றேன். சிரித்துக் கொண்டே என் கட்டிலில் எனக்கருகே அமர்ந்தார்.
"கில்லர்ஜி என்னைப் பார்த்து ஆசைகளைக் கேட்டதோடு இல்லாமல் சுத்தி விட்டுட்டாப்ல... இப்ப நாந்தான் தூக்கமில்லாமல் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுறேன்... இந்தப் பதிவர்கள் எல்லாமே தூங்கவே மாட்டானுங்களா... ராத்திரியெல்லாம் கடவுளைக் கண்டேன்னு எழுதிக்கிட்டே இருக்காப்ல... இனி கொஞ்ச நாளைக்கு எனக்கு தூக்கம் கூட கனவுதாம்ப்பல... சரி உங்க ஆசைகளை சொல்லுங்க..."
"ம்... என்னோட ஆசைகள்..? எல்லாருக்கும் சொந்த ஆசைகளும் இருக்கும்... அது இப்படி இருக்கணும்... இது அப்படியிருக்கணும் எனக் கேட்கும் போது எனக்கும் எனக்கே எனக்கென சில ஆசைகள் இருக்கும் அதனால் எல்லாந்தான் கேப்பேன்... சரியா..?" என்றேன்.
"ஓகே... " என்றபடி நன்றாக அமர்ந்து கொண்டார்.
முதலில் எனக்கே எனக்கான ஆசைகள் சில என்றபடி ஆசைகளை அடுக்க ஆரம்பித்தேன்.
ஆசை...1 : 'எங்க வீடு இருக்கும் பகுதியில் இன்னும் சரியான ரோடு இல்லை... மழை நேரத்தில் குழந்தைகளைப் பள்ளிக்குக் கூட்டிப்போக என் மனைவி மிகவும் சிரமப்படுகிறார். வண்டியை அந்த தொறுத்தொறு சகதியில் ஓட்டிச் செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முதலில் எங்க கவுன்சிலருக்கு மனசு வந்து அந்த ரோடைப் போட வேண்டும்.'
ஆசை...2 : 'நான் இனிமேலா பிறக்கப் போகிறோம் என எல்லோருடனும் பகையில்லாமல் வாழ நினைப்பவன்... என் மனைவியும் அப்படியே... ஆனால் உறவுகள் நடக்கும் விதங்கள் எல்லாம் மனக்காயங்களையே ஏற்படுத்துகின்றன. இந்த உறவே வேண்டாம் என ஓதுங்க வைத்து விடுகின்றன... இப்படிப்பட்ட சூழலிலும் சண்டையோ, சமாதானமோ அவரவர் அவரவர் பாதையில் பயணிக்க வேண்டும். அவன் நல்லாயிருக்கக் கூடாது... இவன் நல்லாயிருக்கக் கூடாதென நினைக்காமல் இருக்க வேண்டும்.'
கடவுள் : 'ஆஹா... ஆஹா... ஆசம்...' என்றார்.
"நீங்க வேதாளம் படம் பாத்தீங்களா...? சூரி சொல்ற மாதிரி ஆசம் சொல்றீங்க...?"
கடவுள் : 'ஆமா... பின்ன எவன்டா என்னைக் காண்பான்னு காத்திருக்கும் போது... வைகுண்ட ஏகாதசிக்கு நீங்களெல்லாம் ராத்திரி எல்லாம் படம் பார்த்து கண் முழிக்கிற மாதிரி நானும் படம் பார்த்துத்தான் கண் விழிக்கிக்றேன்..."
"ஆசம்... ஆசம்... சரி அடுத்த ஆசைகள் ஊருக்கானது..." என்றபடி தொடர்ந்தேன்.
ஆசை...3 : 'கருவை மரங்களால் சூழப்பட்டிருக்கும் எங்க ஊர் 42 ஏக்கர் நிலத்திலும், நான் படிக்கும் காலத்தில் இருந்தது போல பச்சை மெத்தை விரித்தது போல்... நெல் மணிகள் தலையாட்ட வேண்டும். சலசலவென நீர் ஓடி, அருகம்புற்கள் அலையோடு ஆடிப்பாடிய அந்த நாட்கள் மீண்டும் வர வேண்டும்.'
ஆசை...4 : 'நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஏன் சில ஆண்டுகள் வரை கம்பீரமாக, எங்களுக்கு முன்னோடிகளாக இருந்த எங்கள் ஊர் மனிதர்களில் சிலர் மறைந்து விட்டார்கள்... இருக்கும் சிலரும் வயோதிகத்துக்குள் வசப்பட்டு விட்டார்கள். எங்களை அறிவுரைகளாலும் அன்பாலும் வளர்த்த அந்த மனிதர்கள் இன்னும் சில காலமேனும் கஷ்டப்படாமல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.'
கடவுள் : "சூப்பர்ய்யா... நல்ல ஆசைகள்... ஆசம்... ஆசம்..."
"நன்றி... இனி எங்க மாவட்டத்துகான ஆசைகள் சிலவற்றைச் சொல்றேன்"
ஆசை...5 : 'இந்தியாவுக்கு நிதியமைச்சரை பலமுறை கொடுத்த எங்கள் மாவட்டத்தில் எந்த ஓரு தொழில்துறையும்... முன்னேற்றங்களும் இல்லை... மாவட்டத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல, மக்களின் 'பசி' நீக்க, நல்லதொரு எம்.பியும் எம்.எல்.ஏவும் கிடைக்க வேண்டும். இது நிறைவேறாத ஆசைதான் என்பது தெரியும். இருந்தாலும் நிறைவேறினால் நல்லா இருக்கும்...'
ஆசை...6 : 'சென்னை எங்கும் மழை நீரில் தத்தளித்தாலும் எங்கள் மாவட்டம் வறட்சியில்தான் வாடிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்கும் விதமாக, விவசாயிகளை வாழ வைக்கும் விதமாக மாதம் மும்மாரி பொழிய வேண்டாம்... விவசாயம் பொய்த்துப் போகாமல் வருடா வருடம் விளைச்சல் பெருகும் வண்ணம் மழை பெய்ய வேண்டும்' (இதை எழுதி முடித்துவிட்டு ஊருக்குப் பேசும்போது மழை கொட்டித் தீர்ப்பதாய் கேள்வி - அப்பா ஒரு ஆசை கொஞ்சம் நிறைவேறிடுச்சுன்னு நினைக்கிறேன்)
கடவுள் : "முதல் ஆசை... ரொம்பக் கஷ்டம்ய்யா... நானே தேர்தல்ல நின்னாக்கூட என்னையும் மாத்திருவானுங்க... ரொம்பக் கஷ்டம்... ரெண்டாவது ஆசை.... ரொம்ப நல்ல ஆசை... விவசாயம் பொய்த்துப் போகக்கூடாதுதான்... ஆசம்... ஆசம்..."
"அதான் நானே சொல்லிட்டேனே... அந்த ஆசை கொஞ்சமல்ல... ரொம்ப அதிகப்படியானதுதான்... சரி அடுத்த ஆசைக்கு வாங்க... இது என் தமிழகத்துக்கானது..."
ஆசை...7 : 'மக்கள் முதல்வர் என்று சொல்லிக் கொண்டு மக்கள் சிந்தனையே இல்லாமல் இருக்கும் முதல்வரும்... கேலித்தனமான அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளும் எங்களை முட்டாளாக்கி கோடிகளில் புரள்கிறார்கள். எங்கள் மக்களுக்கு மக்கள் முதல்வராய் இல்லாமல் மக்களுக்கான முதல்வர் கிடைக்க வேண்டும். வளர்ந்த தமிழகத்தை காலொடித்துப் போட்டிருக்கும் கயவர்கள் கூண்டோடு அழிய... மன்னிக்கவும் நாடு கடத்தப்பட வேண்டும்.'
ஆசை...8 : 'சாராயத்தில் சிக்கி சாகும் என் தமிழன் டாஸ்மார்க் என்னும் வட்டத்துக்குள் இருந்து வெளியே வரணும்... ரோட்டில் விழுந்து கிடப்பவனும் கூத்தடிப்பவனும் குறைய வேண்டும்... கோடி வசூல் என்று மார்தட்டும் அரசுக்கு நாமம் போட வேண்டும்... அதற்கு குடி..குடி என்ற எண்ணம் எம் தமிழனின் சிந்தையில் இருந்து அகல வேண்டும்.'
கடவுள் : "இது ரெண்டுமே ரொம்பச் சிக்கலானது... மக்களின் முதல்வர் வருவதெல்லாம் இனி கேள்விக்குறிதான்... டாஸ்மார்க் வேண்டான்னு தமிழன் சொல்லணுமா... நல்ல கதை போ... முன்னெல்லாம் காலையில குளிச்சி எங்களைப் பார்க்க கோவிலுக்கு வருவாங்க... இப்போ ஆம்பளை, பொம்பளை, ஸ்கூல் பசங்கன்னு ரொம்பபேரு காலையிலயே கட்டிங் போடப் போறானுங்க... உங்க மக்கள் முதல்வர் 500 கோடி நிர்ணயம் பண்ணினா நீங்க 600 கோடிக்கு குடிக்கிறீங்களேப்பா... ஆசம்... ஆசம்..."
"ஆமா... ஆமாம்... நாங்களெல்லாம் அரசை வாழ வைக்கும் சாமிகள்... இந்த விஷயத்துல மட்டும் அரசியல்வாதிகள் எங்களை கடவுளாகப் பார்ப்பார்கள்... சரிஎன் நாட்டுக்கான ஆசைகளைப் பார்ப்போமா..?"
ஆசை...9 : 'எல்லாரும் ஓர் இனம்... எல்லோரும் ஓர் குலம்... எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்.. என்று வாழ்ந்து வருகிறோம். நாங்கள் மன்னர்களாக வேண்டாம்... சாதியும் மதமும் எங்களைப் பிரிக்காமல் இருக்கட்டும்... எங்கள் சகோதரத்துவ உறவு ஒரு சில கயவர்களால் பிரிக்கப்படாமல் இருக்க வேண்டும்... எப்போதும் எல்லாரும் அன்போடும் உறவோடும் வாழ வேண்டும்... தீவிரவாதங்கள் திசைக்கொன்றாய் ஓடவேண்டும்...'
ஆசை...10 : ' எங்காவது ஒருவன் பெரிய பதவிக்கு வந்தால்... அவன் நாட்டை விட்டே போயி நாலைந்து தலைமுறைகள் ஆயிருந்தாலும் தமிழன் என்றும் இந்தியன் என்றும் மார்தட்டிக் கொள்ளும் நாங்கள் திருந்த வேண்டும். எங்கள் இந்தியா... எங்கள் இந்தியன்... உலக அரங்கில் உயரத்தில் வலம் வர வேண்டும்...'
கடவுள் : "ஆசம்... ஆசம்..."
"நீங்க ரொம்ப மோசம் போங்க..."
கடவுள் : "என்னய்யா... டப்புன்னு திட்டிப்புட்டே..."
"பின்ன என்னங்க... எத்தனை வருசமா உங்ககிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன்... என்னை என் மனைவி மக்களோட வாழ வையுங்க... இந்த வாழ்க்கை போதும்ன்னு... காது கொடுத்தே கேட்கமாட்டேங்கிறீங்க... எப்படியாச்சும் என்னோட எழுத்துக்களை புத்தகமாக்கி எல்லோரையும் கஷ்டப்பட வைக்கணுமின்னு கேட்கிறேன்... அதுக்கும் இன்னும் செவி சாய்க்கலை... இந்தப் பத்தும் நீங்க செய்யிறதுக்குள்ள... நீங்க இங்க உக்காந்திருக்க மாதிரி நான் அங்கே வந்து உக்காந்திருப்பேன்" என்று மேலே கையைக் காட்ட கடவுள் சிரித்தார்.
"என்ன சிரிக்கிறீங்க...?"
"உன்னோட ஆசைகள் எல்லாம் நடக்கும்ய்யா... ஆனா அரசியல் சம்பந்தமான ஆசைகள் ரொம்பக் கஷ்டம்..." என்றவர் "சரிய்யா... கீழே டாக்ஸி கிடைக்குமா.... நான் அப்படியே முரூர் போயி கில்லர்ஜிக்கிட்ட உன்னோட ஆசைகள் எல்லாத்தையும் சொல்லிட்டு கிளம்புறேன்... ஏன்னா அவருதான் புத்தகம் போட்டு எழுதுறாப்ல.. அடுத்து எந்த ஊரோ... ? எந்த நாடோ...? " என்று எழுந்தார்.
"ரொம்ப டயர்டா இருக்காப்ல தெரியுது.... அந்தப் பெட்டுல படுத்து கொஞ்சம் கண் அயர்ந்துட்டுப் போங்க..."
"தூக்கமா... அதெல்லாம் வேண்டாம்ய்யா... கிளம்புறேன்... உன் ஆசைகள் எல்லாம் சீக்கிரம் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..."
"அடப்பாவி... அப்ப நீங்க யாரு...?"
"நான் கடவுள்..." என்றபடி மறைந்தார். வராத தூக்கம் என்னை ஆட்கொள்ள, ஆழ்ந்து உறங்கினேன்.
அட மறந்துட்டேனே... யான் பெற்ற இன்பம் பெறுக இப்பதிவுலகம்ன்னு பத்துப்பேரை சந்திக்கு... சாரி பந்திக்கு இழுக்கணுமாமே... இதோ அந்தப் பத்து...
1. சிறந்த எழுத்துக்களை கருத்துக்களாய் பகிர்ந்து வலையுலகிற்குள் காலெடி எடுத்து வைத்திருக்கும் எனதருமை 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா.
2. குறும்படங்களில் ஜெயித்து வெள்ளித்திரை இயக்குநராகக் காத்திருக்கும் எனதன்பு 'குடந்தையூர்' ஆர்.வி.சரவணன் அண்ணன்
3. நாம் அவர் தளம் செல்லாவிட்டாலும் உரிமையுடன் வந்து கருத்துச் சொல்லும் பாசமிகு 'கனவும் கமலாவும்' கமலா ஹரிகரன் அக்கா.
4. கவிதையில் ஆழ்ந்த கருத்தை வைத்து நம்மை ஆராய வைக்கும் என் தம்பி'கலியுகம்' தினேஷ் குமார்.
5. சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் கவிதாயினி எனதருமை 'தூரிகைச் சிறதல்' காயத்ரி அக்கா.
6. தனது பயணக் கட்டுரைகளால் நம்மையும் பயணிக்க வைக்கும் நேசமிகு'சந்தித்ததும் சிந்தித்ததும்' வெங்கட் நாகராஜ் அண்ணா.
7. சமையல் குறிப்புக்களில் அசத்தும் அன்பின் 'சமைத்து அசத்தலாம்' ஆசியா அக்கா
8. அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரரும்... சிறந்த சிந்தனைவாதியுமான எனது பாசத்துக்குரிய, எங்கள் மண்ணின் 'தேவியர் இல்லம்' ஜோதிஜி அண்ணா.
9. சிறப்பான எழுத்துக்குச் சொந்தக்காரரான அன்பின் 'அருணா செல்வம்' அருணா அக்கா
10. படிக்கும் போதே வசியம் செய்யும் எழுத்துக்குச் சொந்தக்காரரான, எங்கள் மண்ணின் பாசமிகு 'வாரியர்' தேவா சுப்பையா அண்ணா.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஷப்பா.... நாம விரும்பு அம்புட்டுப் பேரையும் எழுதச் சொல்லணுமின்னு ஆசையிருந்தும் பத்து பேருங்கிற குறீயீட்டுக்குள் இருக்க வேண்டிய சூழலில் இவரா அவரா என தேடித்தேடியே ரெண்டு பதிவு எழுதுற நேரம் போச்சு. மேலே சொன்னவர்கள் தவிர எல்லாரும் எழுதலாம்.... சொன்னவர்களும் கட்டாயம் எழுத வேண்டும் இல்லையென்றால்... அப்படி மிரட்டல் எல்லாம் இல்லை. முடிந்தால்... முடியும் போது எழுதுங்கள்.
நன்றி.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
அம்மாடியோவ் மூச்சுப் புடிச்சி எல்லா வற்றையும் படித்து முடித்து விட்டேன் ம்கூகூ மீண்டும் கண்ணைக் கட்டுதே நீங்கள் கடவுளிடம் வேண்டிய அனைத்தும் அருமையாக உள்ளது அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் ஒன்றைத் தவிர அது என்னவென்று இறுதியில் சொல்கிறேன் அது வரை
நீங்கள் கடவுளிடம் வைக்கும் விண்ணப்பம் அனைத்திலும் அரசியல் என்று வரும் போது கடவுள் மறுப்பது சுவாரசியமாக உள்ளது அவற்றைப் படிக்கும் போது கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜனி காந்த் சொன்ன ஒரு டயலாக் அடுத்த வருடம் அம்மா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ் நாட்டைக் காப்பாற்ற முடியாதுன்னு ஹா ஹா அது இன்று உங்கள் பதிவைப் படிக்கும் போது நினைவுக்கு வந்தது மட்டுமில்லை நிஜம் என்றும் புரியுது
ஹா ஹா கடவுள்தான் கஸ்டம் என்று சொல்லி விட்டாரே..!
மற்றவைகளைப் கேட்டுக்கொண்டிருந்த கடவுள் கிளம்பும் போது சொன்னது சரிப்பா கிளம்புறேன்... உன் ஆசைகள் எல்லாம் சீக்கிரம் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அவர் சொன்னதும்
அப்போ நீ யாருய்யா என்று கேட்டதும் நான் கடவுள் எனறு சொன்னதும் சூப்பர் உண்மையில் சிரித்தேன் ரொம்ப அருமையாக இருந்தது அண்ணா
முக்கியமான விடயத்திற்கு வருகிறேன் இந்த முறை கடவுளைப் பார்த்து நம்ம ஆசையைச் சொல்லணுமாம். என்னங்க ஆசையிருக்கு... முதல்ல இந்த ஊரில் இருந்து கிளம்பி பொண்டாட்டி, பிள்ளைகளோட சந்தோஷமாக இருக்கணும்ங்கிற பெரிய ஆசைதான் ரொம்ப நாளா ஓடுது. ஆனா கடவுள் கண்டுக்கவே இல்லை எப்படி கண்டுப்பாரு ஊருக்கு போனால் அவருக்கிட்டதானே வேண்டினிங்க முதல்ல இந்த ஊரை விட்டு வெளி நாட்டுக்கு போகனும்னு
ஒருவருக்கு ஒரு வேண்டுதல்தான் வெளி நாட்டுக்கு போகனும் பணம் அதிகமாக சம்பாதிக்கனும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டுதானே இங்க வந்திங்க அப்றம் என்ன? மீண்டும் கடவுளை நொந்துக்கிறிங்க இது அநியாயம் அண்ணா உங்க மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்க அதுவே பதில் சொல்லும் ஹா ஹா
நான் நகைச்சுவையாக பதில் சொல்லி இருக்கிறேன் காரணம் நானும் கடவுளிடம் இதையே வேண்டியவனாக உள்ளேன்
உங்கள் கடவுளைக் கண்டேன் அருமை
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
ஆஹா! ஆஹா!
குமாரோட முழுப்பதிவின் விளக்கமே இப்பத்தான் முழுமையாக எனக்கு புரியிது. கடவுளே கடவுளிடம் வேண்டும் நிலையில் தான் நாம் இருக்கோம் எனும் உண்மையை நச்சுன்னு போட்டுடைத்திருக்கார்னால் அதை அத்தனை நுணுக்கமாக படித்து பின்னூட்டம் இட்ட எங்க வீட்டு தங்கத்தும்பிக்கு பெரீய்ய்ய்ய்ய்ய்ய்யா சல்யூட்.
சூப்பரா அசத்தலா இருக்கு கண்ணா உங்க பின்னூட்டம்.. நல்ல பிள்ளை மாதிரி இந்த பின்னூட்டத்தினை குமார் பதிவில் மனசு தளத்திலும் செண்ட் செய்தால் அவர் சந்தோஷப்படுவார்ல.. ரெம்ப ரெம்ப கிரேட்பா நீங்க.. ஒரு எழுத்தாளருக்கு இதை விட என்ன வேண்டும்.
ரெம்ப ரெம்ப நன்றிப்பா! அதானே நானும் தான் கேட்கின்றேன் மனைவி பிள்ளையோட இருக்கணும் என கேட்க முன்னாடி வெளி நாடு போய் வேலை செய்யணும் காசு வேண்டும் என கேட்டது யாராம்? அப்படி கடவுளிடம் கேட்கும் போதே என் மனைவி பிள்ளையோட போய் காசு சம்பாதிக்கணும் என கேட்கலையாம் என என் வீட்டில் என் கூட இருக்கும் கடவுள் சொல்லிட்டார். தனக்கு பணம் சம்பாதிக்க ஒரு வேலை வேண்டும் என மட்டும் தான் கேட்டாராம் தும்பியோவ். என்கிட்ட ரகசியமாக கடவுள் சொல்லிட்டார்.
குமார் இப்ப பேச்சு மாத்தக்கூடாது. ஒரு தடவை கேட்டதை தான் கடவுள் தருவாராம். ஹாஹா..!
அப்புறம் பாவம் ரெம்ப கேட்கிறாரேன்னு அவரை ஊருக்கு அனுப்பிட்டால் போயிட்டு ஆறு மாதத்தில் கடவுளே என்னை வெளி நாட்டுக்கு அனுப்பு என கேட்க மாட்டேன் என அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு நிஷாவிடம் கொடுத்தால் கடவுள் குமாரின் வேண்டுதலை மறு பரிசீலனை செய்ய நிஷா கேட்டுப்பார்க்குமாம். ஆமாம் நாங்க கூடி பேசி முடிவெடுப்ப்போமாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
Nisha wrote:ஆஹா! ஆஹா!

மிக்க மகிழ்ச்சி அக்கா ரொம்ப ரொம்ப சந்தோசம்
அப்புறம் பாவம் ரெம்ப கேட்கிறாரேன்னு அவரை ஊருக்கு அனுப்பிட்டால் போயிட்டு ஆறு மாதத்தில் கடவுளே என்னை வெளி நாட்டுக்கு அனுப்பு என கேட்க மாட்டேன் என அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு நிஷாவிடம் கொடுத்தால் கடவுள் குமாரின் வேண்டுதலை மறு பரிசீலனை செய்ய நிஷா கேட்டுப்பார்க்குமாம். ஆமாம் நாங்க கூடி பேசி முடிவெடுப்ப்போமாம்.
டீலா நோ டீலா குமார் அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
சூப்பரா அசத்தலா இருக்கு கண்ணா உங்க பின்னூட்டம்.. நல்ல பிள்ளை மாதிரி இந்த பின்னூட்டத்தினை குமார் பதிவில் மனசு தளத்திலும் செண்ட் செய்தால் அவர் சந்தோஷப்படுவார்ல.. ரெம்ப ரெம்ப கிரேட்பா நீங்க.. ஒரு எழுத்தாளருக்கு இதை விட என்ன வேண்டும்.
அப்படியே ஆகட்டும் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
அது தானே? டீலா நோ டீலான்னு வந்து சொல்லட்டும் நாம அவர் தளத்தில் போயே இப்படி கேட்டு அதகளப்படுத்திடுவோம்ல.. கடவுள்னால் சும்மாவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
உங்க 3 பேரையும் பார்த்து கடவுள் தலை தெறிக்க ஓடுவார்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
ஆஆஆஆஆஹா!@ கடவுள் நம்மளை பார்த்து ஓடிடுவாரா? ஓட விட்டிருவோமா? பிடிச்சி கட்டி போட்டிர மாட்டோம். அதான் சாமியே சரணம்...!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
Nisha wrote:ஆஆஆஆஆஹா!@ கடவுள் நம்மளை பார்த்து ஓடிடுவாரா? ஓட விட்டிருவோமா? பிடிச்சி கட்டி போட்டிர மாட்டோம். அதான் சாமியே சரணம்...!
பிடிச்சிகட்டி போடுவிங்களா????????????அப்ப அவர் கடவுளே இல்லையே ....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
கடவுளை தான் ஈசியாக கட்டி போடலாம் பானுவோய்.. பொங்கலும் மோதகமும் வைத்தால் போதும் .. அப்புறம் எங்க அன்புக்கு அவர் கட்டுப்படாட்டால் அவர் பேரு கடவுள் இல்லைன்னு பேரையே மாத்தி விட்டிருவேன். ஆமாம் நான் யாரு நிஷாவாச்சே.. நான் அன்பாக சொன்னால் அவர் வந்து கட்டு பட்டு நிற்பார்ல.. அவ்வ்வூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
Nisha wrote:கடவுளை தான் ஈசியாக கட்டி போடலாம் பானுவோய்.. பொங்கலும் மோதகமும் வைத்தால் போதும் .. அப்புறம் எங்க அன்புக்கு அவர் கட்டுப்படாட்டால் அவர் பேரு கடவுள் இல்லைன்னு பேரையே மாத்தி விட்டிருவேன். ஆமாம் நான் யாரு நிஷாவாச்சே.. நான் அன்பாக சொன்னால் அவர் வந்து கட்டு பட்டு நிற்பார்ல.. அவ்வ்வூ!
கடவுளுக்கே கல்தா குடுக்குறவுங்கனு தெரியாம போச்சே....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
ஓஒஹோ! இப்ப தெரிந்திருச்சில்ல. இனி என்னா செய்வீகளாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
இங்கு கருத்துப் போர் நடத்தியிருக்கும் அனைவருக்கும் வணக்கமும்... நன்றி...
கடவுளைக் கண்டேன்னுதானே சொன்னேன்... அடேங்கப்பா... நிஷா அக்கா வந்து நண்பன் உங்களை துவைத்துக் காயப்போட்டிருக்கிறார் என்றதும் ஆஹா ஆளு வேதாளம் பாக்கப் போயி புடிக்காம பாதியில வந்தாச்சு போலன்னு அதுக்கான கருத்துக் கத்திகளோடு வந்தால்... (ஏன்னா நாங்க வேதாளத்தை மாஸ் ஹீரோ படம் கதை வேணுமின்னா கேரளா போங்கன்னு சொல்லியிருப்போமுல்ல..). இடையில் அப்படியே மனசுக்குள்ள போனேன்... அங்கேயே நண்பனின் கருத்தை வாசித்தேன்...
அருமையான கருத்து... அடிச்சி ஆடியிருக்கிறார்... எப்பவும் என்னைவிட கொஞ்சம் பெரிய கருத்தாய் போடுவார்... அதாவது நான் மிஞ்சிப் போனால் ரெண்டு வரி... அவரு அதிகம் போனால் நாலு வரி அவ்வளவே... ஆனால் இன்னைக்கு பக்கம் பக்கமா... சூப்பர் சூப்பரோ சூப்பர்... வாழ்த்துக்கள்.
என்னது நான் பணம் சம்பாரிக்கணுமின்னு விரும்பி வந்தேனா... அது சரி... விரும்பி வந்திருந்தால் இந்த எட்டு வருடமாய் இதே கேள்வியைக் கேட்டுக்கிட்டு இருக்க மாட்டேனே... நான் பாட்டுக்கு தினமணியில Content Editor (சப் எடிட்டர் பணிதான்) வேலையில் எனக்குப் பிடித்த வாழ்க்கையை சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
பத்திரிக்கைத் துறை... எங்கு போனாலும் மரியாதை... கொஞ்சமே சம்பளம் என்றாலும் என் மனதுக்குப் பிடித்த வாழ்க்கை, மனைவி, மகளுடன் (சென்னையில் இருந்து வெளியாகும் போது விஷால் வயிற்றில்) ஆனந்தமாய் இருந்தேன். ஸ்ருதி முகப்பேர் வேலம்மாளில் எல்.கே.ஜி., எனக்கு மூன்று ஷிப்டுகள் பணி (6 மணி நேரம்), கஷ்டமோ நஷ்டமோ சந்தோஷமாக இருந்தோம்.
பின்னர் மாமியாரும் அவரின் தம்பிகளும் போட்டு நச்சரித்து வேண்டா வேறுப்பாய் இங்கு வந்தேன்.. வந்தது முதல் இதே வேண்டுதல்தான்... ஏறத்தாழ ஒரு வருடத்திற்குப் பிறகு நண்பன் மூலமாக பிளாக்கிற்குள் வந்தேன்... அதன் பிறகே சிலவருடங்களாக எழுதுவதில்லை என்று இருந்த வைராக்கியத்தை விட்டொழித்து எழுத ஆரம்பித்தேன். இங்கு வந்த பிறகு எழுதிய கதைகள் தான் வாழ்க்கையை பேசின... ஒருவேளை தனிமை கொடுத்த வலியோ என்னவோ... யார் கண்டா..?
என்னோட பணி புரிந்த நண்பர்கள் எல்லாம் இப்போ புதிய தலைமுறையில் பெரிய பதவிகளில்... நான் வெளியானதும் அவர்கள் எல்லாம் புதிதாக ஆரம்பித்த புதிய தலைமுறைக்கு தாவி, இங்கே இருந்திருக்கலாம் என எனக்கும் திட்டு விட்டார்கள்... என்ன செய்வது நம்ம நேரம் அப்படி... இது கடவுளின் விளையாட்டு.
சரி இதுதான் இப்படின்னா... கல்லூரியில் கணிப்பொறியியல் துறையில் பார்த்த வாத்தியார் வேலையை (கல்லூரியில் கணிப்பொறி மட்டும் சுயநிதி) ரொம்ப குறைவான சம்பளம் என விட்டுவிட்டுத்தான் சென்னை பயணம்... பத்திரிக்கைதுறை என் கனவு... அதில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை 5 ஆண்டுகள் நனவானது. நான் வெளியானதும் அதன் பிறகு இரண்டான்டுகளில் அங்கிருந்த எல்லாரையும் வேறு வேறு துறைக்கு மாற்றி நிரந்த வேலை... கவர்மெண்ட் சம்பளம் என் நண்பன் இப்போ தமிழ்துறை உதவி தலைவர்... சம்பளம் 60க்கும் மேல்... அவன் போற நேரமெல்லாம் திட்டுறான். இங்கும் கடவுள்தான் விளையாடியிருக்கிறார்.
அதனால் என்னோட கனவு இப்பவும் ஊரில் போய் இருக்க வேண்டும் எனபதே... என்னைப் பொறுத்தவரை நான் என்ன ஆசை படுகிறேனோ அது சில வருடங்களில்... சில வருடங்களாவது அந்த துறையில் இருக்கும்படி நடக்கும்... கணிப்பொறி ஆசிரியர், கல்லூரி ஆசிரியர் பணி (அதுவும் படித்த கல்லூரியிலேயே) , பத்திரிக்கைப் பணி, சாப்ட்வேர் பணி, இப்படி.. ஆனா ஒரே ஒரு ஆசைதான் நடக்கவே மாட்டேங்குது... கம்ப்யூட்டர் பீல்டே வேண்டான்னு (ஆனா அதுலயும் கணிப்பொறி வாத்தியார இருக்க வேண்டான்னு வேண்டினது கிடைச்சது) பார்த்தாலும் அதையே கட்டிக்கிட்டு அழ வேண்டியிருக்கு... சரி விடுங்க...
இன்னும் சில ஆசைகள் இருக்கு.... அதெல்லாம் நிறைவேறும் போது சொல்கிறேன்...
இப்பவும் சொல்றேன்... நம்ம ஊர்ல... எல்லோருடனும் இருந்து வாழ்ந்து வேலை பார்ப்பதே சந்தோஷம் எனக்கு... அதற்கான நேரமும் காலமும் விரைவில் வரும் என்று நினைக்கிறேன்...
அது போக என்னை மாற்றி மாற்றி விட்டாலும், கஷ்டம் கடன் என்று இருந்தாலும், என்னை சோர்வடையச் செய்யவும் இல்லை... வீழ்ச்சி அடைய வைக்கவும் இல்லை... இப்பவும் எனக்கான எது என்றாலும் சில கஷ்டத்துடன் பெற்றுவிடுகிறேன்... இதோ தேவகோட்டையில் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது வெறும் 50000 மட்டுமே கையில் ஆனால் வேலை நிப்பாட்டப்படவில்லை... சொன்ன தேதியில் முடிந்தது... பேங்க் லோன், நட்புக்கள் கொடுத்த கடன் என... இப்போ சொந்த ஊரில் சின்னதாய் ஒரு வீடு... கையில் காசில்லாமல் ஆரம்பித்துவிட்டோம்... எப்படியோ பணம் புரட்ட முடிகிறது... நான் வணங்கும் தெய்வம் என்னைக் கைவிடுவதில்லை.. பல பிரச்சினைகளில் என்னை சுயம் இழக்க வைத்ததில்லை... எல்லாவற்றையும் தகர்தெறியும் தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறார்....
இந்த ஓடலும்... பிரச்சினைகளும் எனக்காக ஏதோ ஒன்றில் முற்றுப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது... அதற்காகத்தானே என்னை ஒரிடத்தில் நிறுத்தாமல் விலக்கி விலக்கி கொண்டு வந்திருக்கிறார்... ஒரு நாள் ஒரு இடத்தில் நிற்பேன்.. அது எனக்கான பேர் சொல்லும் இடமாக... என் ஆசையின் முக்கிய நிகழ்வாக இருக்கும்...
ரொம்பப் பேசிட்டேனோ...?
ஹா... ஹா... கருத்துத்தானேய்யா சொன்னோம்... ஒரு பதிவே எழுதிட்டேன்னு நண்பன், நிஷா அக்கா, பானு அக்கா எல்லாரும் கேக்குறது இங்கு கேட்கிறது... அடிக்க வரும் முன்னர் எஸ்கேப்...
என் கடவுள் என்னோடு...
சரி இங்கு கருத்துச் சொல்லிய அனைவருக்கும் மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும்...
என்றும் நேசத்துடன்
சே.குமார்.

Last edited by சே.குமார் on Tue 17 Nov 2015 - 18:04; edited 1 time in total
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
அடேங்கப்பா!
நண்பன் பின்னூட்ட மன்னன் என நான் சொன்னேன். ஆனால் அவர் இது வரை நிருபிக்கல்லை. குமார் நண்பன் சார் நிஜமாக ஒரு பதிவை படித்து பின்னூட்டம் போட்டால் இப்படித்தான் பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்யதாய் இருக்கும்பா.. ஆனால் அவருக்கு தான் ஆர்வமும் நேரமும் இல்லை.
நண்பனுக்காக் கேள்விக்கு அழகாக உங்கள் விளக்கம் சொன்னமைக்கு நன்றி.
நண்பன் பின்னூட்ட மன்னன் என நான் சொன்னேன். ஆனால் அவர் இது வரை நிருபிக்கல்லை. குமார் நண்பன் சார் நிஜமாக ஒரு பதிவை படித்து பின்னூட்டம் போட்டால் இப்படித்தான் பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்யதாய் இருக்கும்பா.. ஆனால் அவருக்கு தான் ஆர்வமும் நேரமும் இல்லை.
நண்பனுக்காக் கேள்விக்கு அழகாக உங்கள் விளக்கம் சொன்னமைக்கு நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
அடடடா அப்படியா சங்கதி சரி சரி நான்தான் தவறாக புரிந்து கொண்டேன் கவலை விடுங்கண்ணா ஆண்டவன் உங்க மேல் இரக்கம் வைத்துள்ளான் அந்த இரக்கத்தின் காரணமாக வெளி நாடு வந்து பல்லாயிரம் அன்பு உறவுகளை சந்திக்க பழக வைத்திருக்கிறான்.
இறைவன் ஒரு கதவை மூடினால் ஏழு கதவை திறப்பான் உங்கள் மீது கடவுளுக்கு உண்மையில் பாசம் இருக்கு என்றுதான் நான் சொல்லுவேன் புரிந்து கொண்டு இருக்கும் நாட்களை சுருக்கிக்கொண்டு நாடு சென்று குடும்பம் பிள்ளை குட்டிகளுடன் சந்தோசமாக வாழ ஆண்டவன் துணை கவலை விடுங்கண்ணா எல்லாம் சரி வரும்
நன்றியுடன் நண்பன்
இறைவன் ஒரு கதவை மூடினால் ஏழு கதவை திறப்பான் உங்கள் மீது கடவுளுக்கு உண்மையில் பாசம் இருக்கு என்றுதான் நான் சொல்லுவேன் புரிந்து கொண்டு இருக்கும் நாட்களை சுருக்கிக்கொண்டு நாடு சென்று குடும்பம் பிள்ளை குட்டிகளுடன் சந்தோசமாக வாழ ஆண்டவன் துணை கவலை விடுங்கண்ணா எல்லாம் சரி வரும்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
Nisha wrote:அடேங்கப்பா!
நண்பன் பின்னூட்ட மன்னன் என நான் சொன்னேன். ஆனால் அவர் இது வரை நிருபிக்கல்லை. குமார் நண்பன் சார் நிஜமாக ஒரு பதிவை படித்து பின்னூட்டம் போட்டால் இப்படித்தான் பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்யதாய் இருக்கும்பா.. ஆனால் அவருக்கு தான் ஆர்வமும் நேரமும் இல்லை.
நண்பனுக்காக் கேள்விக்கு அழகாக உங்கள் விளக்கம் சொன்னமைக்கு நன்றி.
நல்ல விளம்பரம் அக்கா ரொம்ப நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
அட இதில இத்தனை இருக்குன்னு இப்பத்தான் புரியிது நண்பன் சாரே.. குமார் உள்ளூரில் வண்டி ஓட்டிகிட்டிருந்திருந்தால் நமக்கெல்லாம் அறிமுகமாகி இருப்பாரோ என்னமோ...? நாமல்லாம் அறிமுகமாகனும்னு தான் கடவுள் துபாய்க்கு விமானம் ஏத்தினாரோ என்னமோ?
விளம்பரம் எல்லாம் இல்லை. நான் சொன்னது நிஜம.. நீங்க தான் உங்களை சரியாக புரிந்துக்கல்ல.. என்னை விட உங்களிடம் மிகதெளிவாக புரிந்து பின்னூட்டம் தரும் திறமை இருக்கு என்பது எனக்கு எப்பவோ தெரியும்.
விளம்பரம் எல்லாம் இல்லை. நான் சொன்னது நிஜம.. நீங்க தான் உங்களை சரியாக புரிந்துக்கல்ல.. என்னை விட உங்களிடம் மிகதெளிவாக புரிந்து பின்னூட்டம் தரும் திறமை இருக்கு என்பது எனக்கு எப்பவோ தெரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
Nisha wrote:அட இதில இத்தனை இருக்குன்னு இப்பத்தான் புரியிது நண்பன் சாரே.. குமார் உள்ளூரில் வண்டி ஓட்டிகிட்டிருந்திருந்தால் நமக்கெல்லாம் அறிமுகமாகி இருப்பாரோ என்னமோ...? நாமல்லாம் அறிமுகமாகனும்னு தான் கடவுள் துபாய்க்கு விமானம் ஏத்தினாரோ என்னமோ?
விளம்பரம் எல்லாம் இல்லை. நான் சொன்னது நிஜம.. நீங்க தான் உங்களை சரியாக புரிந்துக்கல்ல.. என்னை விட உங்களிடம் மிகதெளிவாக புரிந்து பின்னூட்டம் தரும் திறமை இருக்கு என்பது எனக்கு எப்பவோ தெரியும்.
ஆமா அக்கா சும்மாவா கடவுள் டுபாய்க்கு அனுப்பினது எல்லாம் நமக்காகத்தான் அதை குமார் அண்ணாவுக்கு நான் புரிய வைக்கிறேன் எல்லாம் நன்மைக்கே
உங்கள் தம்பிமேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இனி உங்க நம்பிக்கை வீண் போகாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
அப்படித்தான் நினைக்கிறேன்... நிறைய் உறவுகளைக் கொடுத்திருக்கிறார் அல்லவா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
எனக்கு என் தம்பி மேல் எப்போதும் நம்பிக்கை தான். ஆனால் அவனுக்குத்தான் அவன் அக்கா மேல இருக்கும் நம்பிக்கை அப்பப்ப காக்கா தூக்கி போயிரும். நட்டு கழரும். வாங்கு வாங்கென வாங்கிருவான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
சே.குமார் wrote:அப்படித்தான் நினைக்கிறேன்... நிறைய் உறவுகளைக் கொடுத்திருக்கிறார் அல்லவா...
அப்பாடா இப்பதான் எனக்கு சந்தோசம் குமார் அண்ணன் புரிந்து கொண்டார் கடவுள் செய்த அனைத்தும் நன்மைக்கே ஆகவே காலம் நேரம் கூடும் போது குமார் அண்ணன் நாட்டில் குடும்பத்தோடு செட்டில் ஆகிடுவார் என்பது எனது நம்பிக்கை
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
Nisha wrote:எனக்கு என் தம்பி மேல் எப்போதும் நம்பிக்கை தான். ஆனால் அவனுக்குத்தான் அவன் அக்கா மேல இருக்கும் நம்பிக்கை அப்பப்ப காக்கா தூக்கி போயிரும். நட்டு கழரும். வாங்கு வாங்கென வாங்கிருவான்.
கண்டுக்காதக்கா தம்பியைப் பற்றித்தெரியும் தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
ரெண்டே ரெண்டு பெரிய கடவுள்கள் இங்க வலம் வாராங்க போல...
எல்லாரும் ஓடியாங்க...
வேணுங்கிறதைக் கேளுங்க....
கடவுள் நமக்கு அள்ளிக் கொடுப்பார்...
ஏன்னா இந்தக் கடவுள்கள் கிள்ளிக் கொடுப்பவர்கள் அல்ல...
வாங்க... வரிசையில் நிற்போம்....
எல்லாரும் ஓடியாங்க...
வேணுங்கிறதைக் கேளுங்க....
கடவுள் நமக்கு அள்ளிக் கொடுப்பார்...
ஏன்னா இந்தக் கடவுள்கள் கிள்ளிக் கொடுப்பவர்கள் அல்ல...
வாங்க... வரிசையில் நிற்போம்....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
சே.குமார் wrote:ரெண்டே ரெண்டு பெரிய கடவுள்கள் இங்க வலம் வாராங்க போல...
எல்லாரும் ஓடியாங்க...
வேணுங்கிறதைக் கேளுங்க....
கடவுள் நமக்கு அள்ளிக் கொடுப்பார்...
ஏன்னா இந்தக் கடவுள்கள் கிள்ளிக் கொடுப்பவர்கள் அல்ல...
வாங்க... வரிசையில் நிற்போம்....
ஐயா சாமி என்னய்யா தெய்வமே தொடர்ந்து நீங்கள் எழுதுங்கள்
உங்கள் நண்பர்களையும் வந்து சேனையை அலங்கரியுங்கள்
மகிழ்வாய் நட்பாய் சந்தோசமாய் என்றும் பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
» 12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார்
» கடவுளைக் காணுங்கள்...!
» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
» நல்லவங்க சிரிப்பில் கடவுளைக் காணலாம்!(கடி)
» 12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார்
» கடவுளைக் காணுங்கள்...!
» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
» நல்லவங்க சிரிப்பில் கடவுளைக் காணலாம்!(கடி)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum