சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில Khan11

அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில

2 posters

Go down

அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில Empty அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 0:49

1,பெற்றோருக்கும், உறவினர்களுக்கும்,அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம்அழகானதைப் பேசுங்கள் 2:83
2,நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப்
பொய்யுடன் கலக்காதீர்கள்;உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.2:42

3,உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின்பொருளைத் தவறான முறையில்சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள்அறிந்து கொண்டே பிற மக்களின்பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும்,அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.2:188
4,நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.2:196
5,எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்”என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்லபொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும்,அதை தாய், தந்தையருக்கும், நெருங்கியஉறவினர்களுக்கும், அநாதைகளுக்கும்,
மிஸ்கீன்(ஏழை)களுக்கும்,வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும்நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும்நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்ககூலி தருபவனாக) இருக்கிறான்.”2:215
6,நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்;ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும்.2:216
7,கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்;2:263
8.மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;2:264
9,.தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது;2:271
10,வறுமைக்குப் பயந்து உங்கள்குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில்  உங்களுக்கும், அவர்களுக்கும்நாமே உணவளிக்கின்றோம்.6:151
11,நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக
இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்;6:152
12,ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. 6:164
13,அல்லாஹ் கூறுகின்றான்; இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீ­ ர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! 16:51
14,உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.7:31
15,தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும்,
ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்4;36
16,யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்)
நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்;3;180
17,“உன் நடையில் (மிக வேகமோ, அதிக  சாவதானமோ இல்லாமல்)
நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.31:19
18,நீங்கள் விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்;அது மானக்கேடானதாகும்.17:32
19,நீங்கள் (தானியங்களை) அளந்தால் அளவைப்பூர்த்தியாக அளங்கள்:இன்னும்,சரியான தராசைக்கொண்டு நிறுத்துக்கொடுங்கள். 17:35
20,பிறர் குறைகளைத்துருவித்துருவி ஆராயாதீர்கள். 49:12
21, சந்தேகமான பல எண்ணங்களில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்.ஏனெனில்,எண்ணங்களில் சில பாவமாகும்.49:12
22,குழப்பம் செய்வது கொலையை விடக்கொடியது.2:217
23,தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக்கொண்டு வந்தால் அதைத்தீர்க்க விசாரித்துக்கொள்ளுங்கள்.இல்லையெனில்,அறியாமையினால் குற்றமற்ற ஒரு கூட்டத்துக்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம்.49:6
24,பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்துவிட்டால் அவர்களை நோக்கி "ச்சீ" என்றும் சொல்ல வேண்டாம்.அவ்விருவரையும் விரட்ட வேண்டாம்அவ்விருவரிடம் கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
இன்னும்,இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை நீர் தாழ்த்துவீராக! 17:23,24
25,பெற்றோர்களோ நெருங்கிய உறவினர்களோ,விட்டுச்சென்ற சொத்துகளில் ஆண்களுக்கும் பங்கு உண்டு;பெண்களுக்கும் பங்கு உண்டு.4:7
26,எவர் ஒரு மனிதரைக்கொலை செய்கிறாரோ அவர் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவர் போலாவார்.எவர் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழவைத்தவர் போலாவார்.5:32
27,நீர் அநாதையைக்கடிந்து கொள்ளாதீர்
யாசிப்பவரை விரட்டாதீர்.93:9,10
28,குறை சொல்லிப்புறம் பேசித்திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.104:1
29,உங்களில் ஒரு சமூகத்தார் மற்றொருவரைக்கேலி செய்ய வேண்டாம்.ஒருவரையொருவர் பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்.49:11
30,சபைகளில் நகர்ந்து இடம் கொடுங்கள் என்று உங்களுக்குச்சொல்லப்பட்டால் நகர்ந்து இடம் கொடுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு இடம் கொடுப்பான்.58:11
31,எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அதை ஒரு நிரபராதி மீது வீசிவிடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும்,பகிரங்கமான பாவத்தையும் சுமந்துகொள்கிறான். 4:112
32,அவர்கள் இந்தக்குர் ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டுவிட்டனவா?47:24
33,எவருக்கு நல்ல இதயம் இருக்கிறதோ,அல்லது எவர் ஓர்மையுடன் செவி தாழ்த்திக்கேட்கிறாரோ,அவருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தல்(படிப்பினை)இருக்கிறது.50:3
நன்றி rajaratamedia
நன்றி முகநூல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில Empty Re: அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில

Post by Nisha Mon 23 Nov 2015 - 11:01

2,நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப்
பொய்யுடன் கலக்காதீர்கள்;உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.2:42

சலூட் சலூட்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில Empty Re: அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 11:04

Nisha wrote:
2,நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப்
பொய்யுடன் கலக்காதீர்கள்;உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.2:42

சலூட் சலூட்

ஆண்டவனே என்னை எதற்காகவும் பொய் உரைக்காமல் மெய்யோடு வாழ வைப்பாயாக ஆமீன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில Empty Re: அல்குர்ஆனில் அல்லாஹ் அருளிய அறிவுரைகள் சில

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum