சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Khan11

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

3 posters

Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Dec 2015 - 7:55

பல்லிக்கு 
வால் பிடிப்பது - பிடிக்காது ....
வால் அறுந்தாலும் வாழும் ...
வால் பிடிக்காதே மனிதா ...!!!

^^^

ஓடி ஓடி உழைக்கணும்...
முகிலைப்போல் ....
ஊருக்கே கொடுக்கணும் ...
முகிலைப்போல்.....!!!

^^^

கெட்டிக்காரமகனையும் ....
கெட்டு போன மகனையும் ....
ஒன்றாகவே பார்க்கும் குணம் ....
அம்மா ........!!!

^^^

தண்ணீருக்காக போராடினோம் ....
கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ...
வெள்ள காடு ....!!!

^^^

தனியே வாழ்ந்தபோது ...
தன் அறையை கூட்டாதவன் ...
கல்யாணம் செய்தபின் ...
வீடு கூட்டுவான் ....!!!

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Dec 2015 - 8:09

எப்போது தோற்பவன் ....
நகைசுவை நடிகன் ...
எப்போதும் வெல்பவன் ...
கதா நாயகன் ....
வென்று தோற்பவன் ...
வில்லன் ....
வாழ்கையும் இதுதான் ...!!!

^^^

மிருக வதை சட்டத்தை ....
கடுமையாக எதிர்த்தார் ...
எங்க தலைவர் ....
வெள்ளை குதிரைமேல் ...
வீர வாள் ஏந்தியபடி ....!!!

^^^

எல்லோரையும் சிரிக்கவைக்கும் ....
அவருக்கு சிரிக்க அனுமதியில்லை ...
சிரித்தால் தொழில் பறிக்கப்படும் ...
நகைசுவை நடிகன் ....!!!

^^^

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by சே.குமார் Fri 25 Dec 2015 - 12:08

ரசித்தேன்... சிரித்தேன்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by நண்பன் Fri 25 Dec 2015 - 15:17

அனைத்தும் அருமை

கெட்டிக்காரமகனையும் ....
கெட்டு போன மகனையும் ....
ஒன்றாகவே பார்க்கும் குணம் ....
அம்மா ........!!!

இது அருமை அதிலும் ஒரு உண்மை என்ன தெரியுமா கெட்டிக்காரணை விட கெட்டுப்போனவனைத்தான் தாய் அதிகம் நேசிப்பாள் ஏன் தெரிங்களா?


கெட்டிக்காரன் பிளைத்துக்கொள்வான் அவனை ஊரும் போற்றும் ஆனால் கெட்டுப்போனவனை யாரும் போற்றவும் மாட்டார்கள் அவன் தாயைத் தவிர


சூப்பர் கவிதை கவிப்புயலே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Dec 2015 - 15:32

நண்பன் wrote:அனைத்தும் அருமை

கெட்டிக்காரமகனையும் ....
கெட்டு போன மகனையும் ....
ஒன்றாகவே பார்க்கும் குணம் ....
அம்மா ........!!!

இது அருமை அதிலும் ஒரு உண்மை என்ன தெரியுமா கெட்டிக்காரணை விட கெட்டுப்போனவனைத்தான் தாய் அதிகம் நேசிப்பாள் ஏன் தெரிங்களா?


கெட்டிக்காரன் பிளைத்துக்கொள்வான் அவனை ஊரும் போற்றும் ஆனால் கெட்டுப்போனவனை யாரும் போற்றவும் மாட்டார்கள் அவன் தாயைத் தவிர


சூப்பர் கவிதை கவிப்புயலே
நீங்கள் சொன்னது 100 சதவீதம் உண்மை ...
கவிதை எழுதும் போது கூட இவ்வாறு தான் நானும் எழுத முற்பட்டேன் 
ஆனால் கெட்டுப்போவதை ஆமோதிக்கிறேன் என்றதுபோல் அமையுமோ 
என்ற மன பயத்தால் நிறுத்தி விட்டேன் 

சில வேளைகளில் 
பிற்ரைபோல் நாமும் சிந்திக்கிறோம் 
உங்களை போல் நானும் சிந்திக்கிறேன் 
என்று மகிழ்கிறேன் 
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 26 Dec 2015 - 9:20

குரு குலத்தில் பிறந்தவர்...
மாமிசத்தை துறந்தவர் ....
வரைகிறார் மீன் படம் ....
தொழிலே தெய்வம் ....!!!

^

சின்ன எல்லை சண்டை ...
இருவீட்டார் கடும் சண்டை ....
இருவீட்டு நாய்களும் ....
தெருவில் கொஞ்சி ....
விளையாட்டு ....!
மனிதனுக்கு ஆறு அறிவாம் ...!!!

^

ஊர் முழுக்க திருமணம் ....
செய்து வைக்கிறார் ....
தன் மகளுக்கு இன்னும் ...
வரன் தேடுகிறார் ....!
வரதச்சனை கொடுமை ....!!!

&

.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Dec 2015 - 19:16

கனி என்றால் க(ன்)னி 

-------------

கனியென்றால் கன்னி ....
முக்கனி மா, வாழை, பலா .....
முக்கனிபோல் இனித்திடு ...
பெண்ணே....!!!

வாழையடி வாழையாய் ...
வாழைபோல் வாழவைக்கும் ....
ஆற்றல் கொண்டவள் பெண் ....!!!

புறத்தோற்றத்தில் பலாவின் முள் ...
அகதோற்றத்தில் பலாவின் சுவை ....
தேவையற்றதை தூக்கி எறியும் சக்கை .....
இத் தத்துவத்தை கொண்டவளே பெண் ....!!!

சுவைக்க சுவைக்க தெவிட்டாத -மா 
சுவைத்தபின் எறியப்பட்ட விதையில் ....
இனத்தை பெருக்கும் -மா 
பெண்ணே நீ நினைக்க நினைக்க .....
இன்பம் தருபவள் - வருங்கால 
சந்ததியை கருவில் சுமப்பவள் ...!!!


.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை...
...............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்............... 
...............யாழ்ப்பாணம்......................
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 29 Dec 2015 - 5:09

ஒரு மரம் ஓராயிரம் குழந்தை 
-------------
பச்சை பசேரென இருக்கும் போது .....
கண்ணுக்கு குளிர்மை தருகிறது ....
குடைபோல் படர்ந்து  இருக்கும் போது.....
உயிரளுக்கு நிழல் தருகிறது ......
இத்துப்போகும் சருகு தருகிறது 
செத்து மடிந்தால் விறகு தருகிறது ....!!!

வாழும் போது பயன் தருகிறது ....
வாழ்ந்து முடிந்தும் பயன் தருகிறது......
தான் நச்சை எடுத்து (CO2)....
உனக்கு உயிர் (O2) தருகிறது .........!!!

ஒரு மரம் வெட்டப்படும்போது ....
ஒரு மகன் மகள் வெட்டப்படுகிறார்கள் ......
ஒரு மரம் நடப்படும் போது .......
ஓராயிரம் மகன் மகள் பிறக்கிறார்கள் .....
குழந்தை இல்லையே குழந்தை இல்லையே 
என்ற கவலை இல்லையே உலகில் மனிதா ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 29 Dec 2015 - 5:37

நாட்டை காப்போம் எழுந்திரு......
---------

நாட்டை காப்போம் எழுந்திரு ....
ஆளுக்கு ஒரு ஆயுதம் ஏந்தியல்ல....
ஆளுக்கு ஒரு மரம் நட்டு ....
நாட்டை காப்போம் எழுந்திரு.........!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
குண்டுகள் போட்டு அல்ல ....
குப்பைகளை தொட்டிக்குள் போட்டு ....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
ஆயிரம் மரணங்களை ஏற்படுதியல்ல ....
ஆயிரம் ஆறுகளை பராமரித்து ....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
கல்லறையில் காவியம் எழுதவல்ல ....
கடல் வளத்தை சுரண்டுபவரிடமிருந்து .....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
வல்லரசு ஆதிக்கத்தை காட்டவல்ல ....
வல்லரசுகளின் சுரண்டலிலிருந்து .....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 18:09

எமக்கு 
தேவையானது இவைதான் ..!
வேலியில்லாத வீடு வேண்டும்....!
தடையில்லாமல் 
சுவாசிக்க மூக்கு வேண்டும் ...!
பேசுவதற்கு வாய்வேண்டும் ...!

இவை எல்லாவற்ரையும் விட ....?

என் தேசத்தின் ஒரே 
ஒரு பிடி மண் வேண்டும் ...!
மண்ணில் பயிர் வளருமா ..?
மனிதன் வளர்வானா ,,,?
என்று பரிசீலிப்பதற்கு ....!!!

கவிப்புயல் இனியவன் 
ஈழக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 18:17

நீ என்னை 
பார்த்து சிரித்த நாட்களில் 
நான் உன்னை 
நினைத்து அழுத நாட்கள் ..
தான் அதிகம் ..! 

காதலில் 
வலியென்பதே இல்லை ...
காதலில் வலி என்பது 
காதலின் நியதி ...!!!

காதலில் 
சுகமும் சோகமும் 
அதிகரித்தால் தான் ..
காதலின் ஆழம்  அதிகரிக்கும்....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 18:27

என் 
புதிய புதிர் கேள்வி ....?
உன்னை நினைக்கும் போது ...
கவிதை வருகிறதா ....?
கவிதை எழுதும் போது ...
உன் நினைவு வருகிறதா ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 18:33

காதலும்  விஷம் ....
உன்னை ..
உடனடியாக கொல்லாது...!
மெல்ல இனி சாகும் ..
உன் உயிர் ...!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 18:40

இதயங்கள் கண்ணீரால் 
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வி....!!!

இதயங்கள் சிரித்துக்கொண்டு 
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி ....!!!

ஒரு 
இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால் 
ஒருதலைக்காதல் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 18:47

நீ 
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என் 
இதய அறைக்குள் ..
அழகாய் இருகிறாய் ...!!!

சிறு மழைதுளி
தான் முத்தாக மாறும் 
உன் ஓரக்கண் பார்வையால் 
இதயத்துக்குள் 
முத்தானாய் .......................!!!

முத்துக்குழிப்பது 
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம் உன்னை 
அறிந்து கொள்வது ..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 19:02

காதல் அரும்பு
************************
கூட்டத்தில் நெரிந்து...
கொண்டு கூத்தாடி ...
போல்நின்றேன் -நீ ...
பார்த்த பார்வையில் ...
உறைந்து போனேன் -.....
அந்த கணமே....
அரும்பியது காதல் ...
மொட்டு உன் மீது ....
^
ஊமை காதல் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 19:07

காதல் ஏக்கம்
************************
மீண்டும் எப்போது 
சந்திப்போம் மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?
விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி 
நாட்கள் கூட வருடம் போல் 
நகர்ந்தது ............!
^
காதல் ஏக்கத்தோடு ....!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 19:11

காதல் மலர்வு
***********************
காதல் 
இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும் .....
ஏற்படும் பிணைப்பு
மீண்டும் ஒரு முறை 
வந்தது அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு 
அல்ல உறுதி ...!
^
மலர்ந்தது காதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Feb 2016 - 19:23

காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம் 
சறுக்கினால் சண்டை 
சற்று நேரம் ஊமையாகி 
என்னை உறையவைப்பாய்
முள் வினாடி கம்பி 
கடிகாரத்தில் ஓடுவதுபோல் 
உனக்கும் விளங்கும் 
காதல் வலி....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்  Empty Re: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum