சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Khan11

மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by சே.குமார் Sat 9 Jan 2016 - 10:47

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Kungumam-dk-3337

ரு மனிதனுக்கு தாயும் தாரமும் நன்றாக அமைந்துவிட்டால் அவனால் எதையும் சிறப்பாகச் செய்ய முடியும். தாய் சரியில்லாத பிள்ளைகள் பலரின் வாழ்க்கை சரியான பாதையில் பயணிப்பதில்லை. அதேபோல் தாரம் சரிவர அமையாத பலரின் வாழ்க்கையும் நன்றாக அமைவதில்லை. சரி தலைப்பை தாயா...? தாரமா..? அப்படின்னு வச்சிருக்கலாமேன்னு நீங்க நினைக்கலாம். ஆனா பாருங்க... அப்படிக் கேள்விக்குறியோட தலைப்பு வச்சா இது பட்டிமன்றத் தலைப்பு ஆகிவிடும். சாலமன் பாப்பையா அவர்களைக் கூப்பிட்டால் தாய்தான் சிறந்தவள்ங்கிறேன்... அதுக்காக தாரத்தை விட்டுடுடமுடியுமாங்கிறேன் அப்படின்னு பேச ஆரம்பித்து விளக்கமாய் விளக்கி ராசாவை தாய்க்கு பேச வைத்தால் பாரதி பாஸ்கரை தாரத்துக்கு பேச வைத்து, நம்மை சிரிக்க வைத்து ரெண்டுந்தான் வேணுங்கிறேன்னு முடிப்பார். சரி இவரு வேண்டாம் சிரிக்க சிரிக்க பாட்டோடு பேசுற லியோனி அவர்களைக் கூப்பிட்டா 'அம்மான்னா சும்மா இல்லேடா'ன்னு ஆரம்பிச்சி பாட்டாலே விளக்கிச் சொல்லித் தாரம்தான் சிறந்ததுங்கிற அணிக்காக பேசுற அவர் மனைவியைப் பார்த்ததும் திருமணத்துக்குப் பிறகுதான் மனிதனுக்கு பொறுப்பு வருது... வாழ்க்கையைப் பற்றி யோசிக்கிறான்... அப்படின்னு எல்லாம் சொல்லி இப்ப வந்த தங்கமகன்ல இருந்து 'என்ன சொல்ல ஏது சொல்ல'ன்னு பாடி தாரமேன்னு சொல்லிடுவாரு. அதனால பட்டிமன்றம் வைக்காமல் தாயும் தாரமும்ன்னு நாமே பேசலாம்.

இந்த தலைப்பு வச்சு எழுதக் காரணம் ஒரு சின்ன விவாதமே. வியாழன் அன்று அலுவலகத்தில் பேசிய போது இது குறித்தும் பேசியதால் தோன்றியதே இந்தத் தலைப்பு. எங்க எகிப்துக்காரனுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. மனைவியின் பெற்றோர் இங்குதான் இருக்கிறார்கள். அதனால் அவனது மனைவியும் இங்கு இருக்கிறார். எங்களுக்கு எட்டு மணிக்கு அலுவலகம், ஆனால் அவன் வருவது பத்து மணிக்குத்தான்... காலையில் வரும்போது அத்தி பூத்தாற்போல் வீட்டிலிருந்து காலை டிபனோ அல்லது மதிய உணவோ எடுத்து வருவான். பெரும்பாலும் வந்ததும் ஆர்டர் பண்ணித்தான் சாப்பிடுவான். அன்றும் பத்து மணிக்கு மேல்தான் வந்தான். வீட்டிலிருந்து எதுவும் கொண்டு வரவில்லை... ஆர்டரும் சொல்லவில்லை, சரி சாப்பிட்டு வந்திருப்பான்னு நினைச்சோம். இன்னைக்கு வீட்லயே சாப்பிட்டு வந்தாச்சு போலன்னு நாந்தான் மெதுவாக் கேட்டேன். உடனே அவன் இல்லை இனிதான் சாப்பிடணும் என்றான். எதுவும் கொண்டு வரவில்லையா என்றதும் இல்லை... என் மனைவி விருப்பப்பட்டால்தான் செய்வாள். தினமும் செய்து தரமாட்டாள் என்றான். என்னடா இது எட்டு மணிக்கு வந்தாலும் பரவாயில்லை பத்து மணிக்கு வர்றே... இங்கே நீ ஆர்டர் பண்றது பதினாறு திர்ஹாம் வருது. இது தேவையில்லாத செலவு தானே என்றதும் சிரித்து விட்டுப் பேச ஆரம்பித்தான்.

எப்பவுமே அம்மாதான் உசத்தி தெரியுமா..? அம்மாவுக்குத்தான் நம்மளைப் பற்றித் தெரியும்.. எங்கம்மா நாங்க பள்ளிக்கூடம் போகும் போது சாப்பாடெல்லாம் தயார் பண்ணி வச்சிட்டு எங்களை வந்து எழுப்பி குளித்து சாப்பிட்டுப் போகச் சொல்லும். இப்ப என் மனைவிக்கிட்ட அதை எதிர்பார்க்க முடியாது.  காலையில் கேட்டால் கொஞ்சம் தூங்க விடுங்களேன் என்பாள். அதனால் நான் ஒண்ணும் கேட்பதில்லை. இரவில் கூட வெளியில் போய்விட்டு எங்காவது சாப்பிட்டு வர வேண்டும் என்றான். என்ன உலகமடா இது... நம்மளைப் போல நாலுவகை செய்தாலும் பரவாயில்லை. ஒரு பன்னை ரெண்டாக் கீறிக்கிட்டு உள்ளே இலை, தழைகளை வைத்து வெண்ணெய், அரைத்த கடலை எல்லாம் போட்டு விட்டால் வேலை முடிந்தது. இல்லேன்னா ரெண்டு பிரட்டை எடுத்து டோஸ்ட் பண்ணிட்டு முட்டையை புல்பாயில் போட்டு அதுக்குள்ள வச்சிக் கொடுத்தா வேலை முடிந்தது இதைச் செய்ய அந்தப் பெண்ணால் முடியவில்லையாம் என்று நினைத்துச் சிரித்தபோது 'மனைவி எப்பவுமே தொல்லைதான்' என்று அவனும் சிரித்தான். சிறிது நேரத்தில் அவனுடனான எங்கள் உரையாடலை நிறுத்திக் கொண்டோம்.

அதன் பின்னர் நானும் மலையாளியும் இது குறித்துப் பேசினோம். அப்ப அவன் சொன்னான் அம்மாதான் பிள்ளைக்கு என்ன தேவை என்பதை அறிவாள். இது குறித்து மலையாளத்தில் ஒரு கதை சொல்வார்கள் என்று சொல்ல ஆரம்பித்தான். ஒருத்தன் அரபு நாட்டில் இருந்து விடுமுறையில் ஊருக்குப் போவதற்கு முன்னர் வீட்டிற்கு அழைத்து மனைவி, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என எல்லாரிடமும் பேசி என்ன வேண்டும் என்று கேட்க, அவர்கள் எல்லாம் ஒரு பெரிய லிஸ்டே கொடுத்தார்களாம். எல்லாரிடமும் பேசியதும் அம்மாக்கிட்ட கொடுங்கன்னு சொல்லி இந்த மாதிரி இத்தனாம் தேதி வர்றேம்மா... திருவனந்தபுரம் ஏர்போர்ட்தான்.... இத்தனை மணிக்கு இறங்கும் என்றெல்லாம் சொல்லி உனக்கு என்னம்மா வேணும் என்றானாம். எனக்கு எதுக்குப்பா... அதெல்லாம் வேண்டாம்... நீ இறங்குனதும் சாப்பாட்டுக்கு இங்கதானே வருவே... உனக்குப் பிடிச்ச கறி சமைச்சி வைக்கிறேன் என்றாராம். அம்மாவுக்கு மட்டுமே மகன் மீது பாசம் மற்றவர்களுக்கு எல்லாம் கொண்டு வரும் பொருள் மீதே பாசம் என்று சொல்லி, அம்மாவுக்கு என்னோட மார்க் 100க்கு 100 என்றான்.

நான் நூற்றுக்கு நூறு மார்க்கை ஏற்கவில்லை... உடனே அவன் என்ன நீ இப்படிப் பேசுறே என்றான். இங்கபாரு அம்மாவுக்கு மகன் மீது அதிக பாசம்... பார்த்துப் பார்த்துச் செய்வாள் என்பதெல்லாம் நான் ஏத்துக் கொள்கிறேன். ஆனாலும் மகனுக்கு திருமணம் ஆனதும் எங்கே நம் பிள்ளையை பிரித்து விடுவாளோ என்ற எண்ணத்தில் அதன் பிறகான அம்மாவின் பாசத்தில் மருமகள் மீதான கோபமும் ஏறி விடுகிறது. இதனால் சதா சண்டைகள் வரவும் வாய்ப்பு இருக்கிறது. மருமகளும் மாமியாரும் கீரியும் பாம்புமாக மாறி அவனை நிம்மதி இழக்கச் செய்து விடுவார்கள் என்றேன். இல்லை இல்லை அம்மாவுக்கு அப்படி மனசு வராது... வர்ற பெண்தான் பிரச்சினைக்கு காரணமாவாள்... அம்மாக்கள் எப்போதும் அம்மாக்களே... அந்தப் பாசத்துல வேஷம் இருக்காது... நேசம் மட்டுமே இருக்கும் என்றான்.

நானும் அம்மாவின் பாசத்தில் நேசம் மட்டுமே இருக்கும் என்பதை ஒத்துக் கொண்டேன். ஆனால் 100 மார்க்கெல்லாம் அதிகம் 50-ல் இருந்து 75 சதவிகிதமே அம்மாவின் பாசத்துக்கு கொடுக்கமுடியும். 25 சதவிகித அம்மாக்கள் மகனின் திருமணத்திற்குப் பிறகு சுத்தமாக மாறிவிடுகிறார்கள். மகன் நல்லதே சொன்னாலும் செய்தாலும் என்னடா அவ சொல்லிக் கொடுத்துத்தானே நீ பேசுறே என்பார்கள். பக்கத்து வீட்டு மனிதர்களிடம் 'இப்ப இந்தப்பய சுத்தமா மாறிட்டான்... என்னைப் பார்க்கிறதே இல்லை... எல்லாத்துக்கும் காரணம் அந்தச் சிறுக்கிதான்...' என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். எனவே அவர்களின் பாசத்துக்குள் கொஞ்சம் மாற்றம் வர ஆரம்பித்து விடுகிறது என்றேன். அவன் சிரித்தான்... பின்னர் ஆமோதித்தான்.

நான் சொன்னேன்... நான் படிக்கும் போது எங்கம்மா எனக்கு அதிகாலையில் பேருந்து என்றால் மூன்று மணிக்கே எழுந்து சமையல் பண்ணி டிபன் பாக்ஸில் எடுத்து வைத்து என்னை எழுப்பி குளித்துவிட்டு வந்ததும் அந்த நேரத்தில் சாப்பிடச் சொல்லி அனுப்பி வைப்பார். என் திருமணத்திற்கு முன்பு வரை நானே எங்கம்மாவுடன் இருந்தவன் என்பதால் எனக்கு எது புடிக்கும் எது புடிக்காது எனப் பார்த்துப் பார்த்துச் சமைப்பார். திருமணத்திற்குப் பின் என் மனைவி, என் அம்மா போல்தான் அதிகாலையில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு முன்னரே எழுந்து டிபன் செய்து, எனக்கான எல்லாம் தயார் பண்ணி, சாப்பிட வைத்துத்தான் அனுப்புவார். அதனால் ஒருவனுக்கு அம்மாவும் தாரமும் ஒரே அலைவரிசையில் அமைந்து விட்டால் அவனுக்கு எங்கம்மா உசத்தி என மனைவியிடமும் என் மனைவி என்னை எப்படிப் பாக்குறா தெரியுமா என அம்மாவிடம் சொல்லத் தேவையில்லை என்றேன்.

என் மனைவி இங்கு வந்திருந்த ஒரு மாதமும் எனக்கு காலையில் டிபன் செய்து கொடுத்து மதியத்துக்கு சாப்பாடு, குழம்பு, கூட்டோ அல்லது பொரியலோ செய்து கொடுத்துத்தான் அனுப்பினார். இவனுக்குப் பார்... அந்தப் பெண்ணால் ஒரு பிரட் எடுத்து செய்து கொடுக்க முடியலை. மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்தான்... அது எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை என்றேன். மலையாளியோ மறுபடியும் என்ன இருந்தாலும் அம்மாதான் உசத்தி என்றான். பாசத்தில் மனைவியின் பாசத்தைவிட அம்மாவின் பாசம் கொஞ்சம் உசத்தியாய் இருக்கலாம். அம்மாவுக்கு குழந்தைகளின் மீது கூடுதல் பாசம் வருவது இயற்கை.... ஆனால் எங்கிருந்தோ நம்மை நம்பி வந்து நமக்காகவே வாழும் ஜீவன் என்று பார்த்தால் அம்மாவைவிட மனைவியின் பாசமே உசத்தி என்றேன்.  அம்மா நம்மை பெத்தெடுப்பவள் என்றால் வரும் மனைவியோ நம்மை தத்தெடுப்பவள்.. எனவே தி.மு அம்மா என்றால் தி.பி மனைவி, மனைவி வந்த பின்தான் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து வாழப்பழகுகிறான் என்றேன். தி.மு, தி.பி என்று சொன்னதை கேட்டுச் சிரித்தான்... ஆனால் ஏற்றுக் கொண்டானா என்று தெரியவில்லை.

பின்னர் இதைப் பற்றி மற்றொரு நண்பருடன் பேசும்போது என் மனைவி என்னைப் பற்றி சிந்திப்பதே இல்லை... எங்கம்மாதான் இப்பவும் வாஞ்சையாக என்னை உச்சிமோர்ந்து எப்படியிருக்கேன்னு கேட்பார் என்று சிலாகித்தார்... நல்ல மனைவி வாய்க்கப் பெற்றவனுக்கு இரட்டை அன்னை என்று நினைத்துக் கொண்டேன். எனக்கும் இரட்டை அன்னை அல்லவா... என்னையே சிந்திக்கும் மனைவி கிடைத்திருக்கும் போது என்ன கவலை சொல்லுங்க... சரி அது இருக்கட்டும்... ஆனால் அதன் பிறகு சொன்னது உண்மைதான். அதை என்னாலும் மறுக்க முடியவில்லை... நாம் யாருடன் பேசினாலும் ஹலோ என்றதும் சொல்லுங்க என்றோ, என்ன பண்ணுறீங்க என்றோதான் ஆரம்பிப்பார்கள்... நாமும் பெரும்பாலும் அப்படியேதான் ஆரம்பிப்போம். ஆனால் அம்மாவோ நம் குரல் கேட்டாலே 'என்னப்பா நல்லாயிருக்கியா...? சாப்பிட்டியா...?' என்று கேட்ட பின்னர்தான் பேச ஆரம்பிப்பார்கள் என்றார். ஆம்... இது உலகெங்கும் ஒன்றுதான். இதில் எந்த மாற்றமும் இல்லை. தாய்ப் பாசம் என்பது அளவிட முடியாதது... ஆனாலு சில நேரங்களில் சில மனிதர்கள் விதையும் நஞ்சில் இந்தப் பாசம் சற்றே தள்ளாடும் என்பதாலேயே என்னால் முழு மதிப்பெண் கொடுக்க முடியவில்லை... இதைத் தவறென்று கூட நீங்கள் சொல்லலாம். ஆனால் நான் பார்த்த, என் நட்புக்களின் வாழ்வில் கேட்ட சில அம்மாக்கள் இந்த வட்டத்துக்குள் வருகிறார்கள். அவர்களைத் தவிர்க்க முடிவதில்லை. அப்படிப் பார்க்கும் போது எல்லா இடத்திலும் களை இருக்கத்தான் செய்கிறது. என்ன மற்ற இடத்தில் களை அதிகம் இருந்தால் அம்மாக்கள் என்ற விளைச்சலில் களை குறைவாக இருக்கலாம். அதனால்தான் இருபத்தைந்து சதவிகிதம் மாற்று இருக்குன்னு சொல்றேன்.

இந்த விவாதம் முற்றுப் பெறாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது நேற்று ஒருவருடனும் பேசும்போதும் தொடர, அவர் நாம் அம்மா வயிற்றுக்குள்ளேயே பத்து மாசம் இருப்பதாலும் தொப்புள்கொடி உறவாலும் தான் நம்மைப் பற்றி அம்மாவுக்கு அதிகம் தெரிகிறது என்பதோடு மட்டுமில்லாமல் நமக்கு பசி என்பதை அவரால் மட்டுமே அறிய முடிகிறது என்றார். நம் பசியை அம்மாவால் அறிய முடியும்தான்... ஆனால் அம்மா போலவே ஒருத்தனுக்கு மனைவி அமையும் போது அவளாலும் அவனது பசியை மட்டுமில்லாமல் மனசையும் அறியமுடியும் அல்லவா? எத்தனையோ பேர் சாதிக்க மனைவிகள் காரணமாக இருந்திருக்கிறார்கள். எனவே தாயும் தாரமும் 50-50 என அமைந்தால் ஒரு மனிதன் 100 சதவிகிதம் சந்தோஷமாகவும் நினைத்த இடத்தை அடைந்து வாழ்வில் பூரண சுகத்துடன் ஜொலிக்க முடியும். அதைவிட மாமியாரும் மருமகளும் புரிந்து கொண்டு அன்பாய் இருந்தார்கள் என்றால் அவனுக்கு வாழ்வில் எல்லாம் கிடைத்த சந்தோஷம் கிடைக்கும்.

எனவே தாயா... தாரமா... என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்தாமல் அம்மாவும் மனைவியும் நமது வாழ்வின் ஒளியேற்றும் ஜீவன்கள்... நமக்காகவே வாழ்க்கையை தொலைத்து வாழும் ஜீவன்கள்... உள்ளமும் உடலும் நம்மோடு எப்பவும் இணைந்தே இருக்கும் உயிர்கள் என்பதை மனதில் கொள்வோம். தாயும் தாரமுமே நம்மின் வாழ்க்கையை நலமாகவும் வளமாகவும் நகர்த்தக் கூடிய காரணிகள்... இவர்கள் சரியில்லை என்றால் நம் வாழ்க்கை தறிகெட்டு பயணித்து விபத்தில்தான் முடியும்.

என்ன உறவுகளே... இந்தக் கருத்து சரியா... தவறா... அம்மான்னா அவங்களுக்கு மார்க்கெல்லாம் கொடுக்க முடியாது... அவங்களை தெய்வமாய்த்தான் வைத்துப் பார்க்க முடியும் என்கிறீர்களா...? அல்லது இந்த மார்க்கில் உடன்படுகிறீர்களா..? இதையெல்லாம் விடுத்து உனது பார்வையில் கோளாறு இருக்கிறது என்கிறீர்களா...? எதுவாக இருந்தாலும் கருத்தில் சொல்லுங்கள்.... கருத்தின் மூலமாக இதை இன்னும் தொடர்வோம்.

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by பானுஷபானா Sat 9 Jan 2016 - 13:12

என்னோட கருத்தை சொல்ல இதோ வரேன் இருங்க குமார்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by நண்பன் Sat 9 Jan 2016 - 13:24

தாய் சரியில்லாத பிள்ளைகள் பலரின் வாழ்க்கை சரியான பாதையில் பயணிப்பதில்லை. அதேபோல் தாரம் சரிவர அமையாத பலரின் வாழ்க்கையும் நன்றாக அமைவதில்லை எவ்வளவு அழகான கருத்தோடு துவங்கியுள்ளீர்கள்  இதற்கே எனது முதல்ப் பாராட்டு உங்களுக்கு


தாயா தாரமா என்ற விவாதம் நடத்தவே வேண்டாம்  என்றும் சரி பாதி அன்பும் பாசமும் கிடைத்தால் ஒரு ஆணுக்கு போதும் வாழ்க்கையே வெற்றிதான் என்றும் நீங்கள் சொன்ன கருத்தை நான் வரவேற்கிறேன்  எல்லோருக்கும் தாய் அமைவாள் ஆனால் தாரம்தான் கேள்விக்குறி...

என்னுடய கருத்துப்படி இது எனது தனிப்பட்ட கருத்து நான் என் மனைவியை காதலித்துத்தான் திருமணம் முடித்தேன் என் காதலுக்கு சம்மதம் சொல்லிய என் அன்புத்தாய்க்குத்தான் முதலிடம் என் தாரத்திற்கு என்றும் இரண்டாமிடம்தான் இதைப் பற்றி நான் என் மனைவிடமும் பல முறை சொல்லியுள்ளேன் என் அம்மா பசித்திருக்க நான் உனக்கு உணவளிக்க மாட்டேன்  அத்தோடு உன் உன்னையும் நான் பசியோடு வைக்க மாட்டேன் 

என் அம்மாவிற்கு என்னைப் பற்றித் தெரியும் அதே போல் நீயும் என்னைப் புரிந்து கொண்டு வாழ்ந்தால் எனக்கும் மட்டுமில்லை நமக்கு நமது வாழ்க்கை வெற்றிதான் என்றும் சொல்லியுள்ளேன் அந்த நாளுக்காகவும் காத்துக்கொண்டு இருக்கிறேன்.
 
சிறந்த கருவோடு சுமந்து வந்த உங்கள் கடந்து வந்த பாதை சிறப்பு
நன்றியுடன் நண்பன் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by பானுஷபானா Sat 9 Jan 2016 - 15:16

தாயும் தாரமும் ஒரே தட்டில் இருப்பவர்கள் தான்...

தாய் முற்பாதி என்றால் தாரம் பிற்பாதி. நல்ல மனைவியும் , அம்மாவும் ஆணுக்கு வாய்த்து விட்டால் வீடு சொர்க்கம் தான்.

நல்ல அம்மாவாக  இருப்பவள் நல்ல மாமியாராக இருப்பதில்லை. மகனுக்கென்று மனைவி வந்துவிட்டால் நம் கடமை முடிந்தது இனி அவள் பார்த்துக் கொள்ளட்டும் என்று அம்மா விலகி இருந்தால் பிரச்சனை வராது.

மகனைப் பிரித்து விடுவாளோ என்று ஏன் அச்சப்படனும். எப்படி இருந்தாலும் அவன் நம் மகன் என்பதை மறுக்க முடியாது. அம்மாவுக்கு புரிதல் வேண்டும். நம் மகன் வாழ்க்கையில் நிம்மதி இருக்கனும்னு நினைச்சா விட்டுக் குடுத்துப் போவதில் தவறில்லை.  இனி அவன் வாழ்க்கை முழுதும் மனைவி தான் இருப்பாள் என்ற நிதர்சனம் புரியனும். மகனை உண்மையாக நேசித்தால் அம்மா இதை செய்து தான் ஆகனும். மருமகள் நல்லவளாக இருந்து விட்டால் குடும்பம் மகிழ்ச்சியாக தானே இருக்கும். கெட்டவளாக இருந்தால் தாய் விட்டுக் குடுத்துட்டு போயிடனும்.

மகனை அம்மாவுக்காக பேசுவதா, மனைவிக்காக பேசுவதா என்ற சங்கடத்திலும்  இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்க விடாமல் எது நடந்தாலும் நன்மைக்கே என விட்டுரனும்.

மகனும் பக்குவமாக இருவரிடமும் புரிய வைக்க வேண்டும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by Nisha Sat 9 Jan 2016 - 18:31

குமார்!

தாயா தாரமா என்ற பேச்சே வரக்கூடாது என நான் சொல்வேன். யாரும் யாருக்கும் உசத்தியும் இல்லை, யாரும் யாருக்கும் எந்த உறவையும் விட்டுக்கொடுக்க வேண்டியதும் இல்லை.

பொதுவாக பெண்கள் மனசு பூ மாதிரி. குழந்தையாயிருக்கும் போது அப்பா, அண்ணா, தம்பி எனும் உறவுக்குள் தன்னை அடக்கி, தனக்குள் அவர்களையும் அடக்கி ஆளும் வரம் பெற்றவளாயிருக்கின்றாள்.

பெண் இல்லாத வீடு பாழடைந்த கோயிலுக்கு சமமென்பர். தகப்பன், சகோதரன் எனும் பாசமான பாதுகாப்பு வட்டத்திலிருந்து திருமணம் எனும்  பெயரில் வெளி வரும் பெண்.... திருமணத்தின் பின் நம் சமுதாய சட்டதிட்டங்கள் கடமைகள் என  பிறப்பிலிருந்தே வளர்க்கப்படும் விதத்தால் கணவனுக்குள் அங்கமாகின்றாள்.

ஆதிதாய் தகப்பன்  உருவாக்கத்தின் படி ஆணின் பாதி தான் மனைவி எனும் பெயரில்  நிச்சயிக்கப்பட்டு ஒரு மனிதன் வாழ்க்கை முழுமையாக்கப்படுகின்றது

ஆனாலும் அதே பெண் தனக்கென ஒரு குழந்தை பிறந்த பின் பத்து மாதம் தன் கருவில் தாங்கி பசி பட்டினி உணர்ந்து வலியோடு பெற்றெடுக்கும் பிள்ளைமேல் கொள்ளும் பாசத்தினை எந்த உறவோடும் ஒப்பிட முடியாது,.

பெற்ற மனம் பித்தாகவும், பிள்ளை மனம் கல்லாகவும் இருப்பதாக சொல்லும் இந்த சமுகம் பெற்ற மனம் பல நேரம் சுய நலவாதியாய் கல்லைவிட இறுகிய மலையாய் இருப்பதை கண்டு கொள்வதில்லை எனினும் தாயின் பாசத்துக்கு முன் எவர் பாசமும் ஈடாகாது!

மனைவி என்பவளுக்கு தன் கணவனுக்கு காலையில் எழும்பி காப்பி போட்டு சாப்பாடு சமைத்து  துணி துவைத்து  என செய்ய வேண்டியது அவள் கடமை. அதிலும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் இது கட்டாயம். அவளுக்காகவும் சேர்த்து வெளியில் உழைக்கும் கணவனுக்கு செய்ய வேண்டியது தான். ஆனால் வேலைக்கு சென்று  குடும்ப பொறுப்புக்களை இருவரும் தாங்கும் போது  காலையில் வேலைக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை காப்பி போட்டு தரவில்லை என்பதை பெரிதாக எடுக்க முடியாது. ஏனெனில் முற்காலம் போல் வீட்டுக்குள் இருக்காமல் அவளும் வேலைக்கு போவதால் இங்கே கடமைகள்  இருவருக்கும் பொதுவாகின்றது.

இதுவே தாய் என வரும் போது தாய் வேலைக்கு போனாலும் வீட்டிலிருந்தாலும் பிள்ளைக்கு சாப்பாடு  முதல் அனைத்தும் பார்த்து பார்த்து கவனிக்க வேண்டியது அவள் பாசத்தில் மட்டுமே!

பத்து மாதம் சுமந்து  பாலூட்டி வலிதாங்கி இருபது, இருபத்தைந்து வயது வரை வளர்த்து விட்டு  திருமணமான ஒரே நாளில் மனைவிக்கு மட்டும் தான் அவன் உரியவன் தாய் விட்டுக்கொடுத்து போக வேண்டும் என சொல்வதெல்லாம் ரெம்ப டூமச்.

தன் மகன் வாழ்க்கை நலமாயிருக்க  நல்ல தாய்  ஆறுதலாயிருப்பாளே தவிர அரக்கியாயிருக்க மாட்டாள். ஆனாலும் பல விதி மீறல்கள் உண்டு.
பாகுபாடு பார்க்கும் தாய்மாரும் உண்டு. ஆனாலும் மனைவி தான் எல்லாம் எனும்  உங்கள் கருத்தினை நான் ஏற்க மாட்டேன்.

எந்த வேலைக்கும் செல்லாமல் வருமானம் இன்றி நோயில் படித்திருந்தாலும் தாய் அன்பு தன் பிள்ளை சாப்பிட்டானா என தான் யோசிக்கும். மனைவி எல்லா நேரமும் அப்படி இருக்க மாட்டாள். மனைவி எனும் பெண் தாயாகும் போது அங்கே அவள் மகனுக்கு தான் முதலிடம் கொடுக்கின்றாள் எனும் உண்மை புரிந்தால் இந்த  மாதிரி  விவாதங்களுக்கே இடம் இராது.

திருமணமாகும் வரை அண்ணனாய் தம்பியாய் மகனாய் இருப்பவன் திருமணமானபின் எப்படி மனைவிக்கு  மட்டும் உரிமையானவனாக முடியும். எப்படி விட்டுக்கொடுக்க முடியும்.?

ஆனாலும் ஒரு விடயம் யோசித்து பார்த்திருக்கின்றீர்களா? பெண்கள் திருமணமாகும் முன் நம் பிறந்த வீட்டாருடன் எப்படி இருப்பார்களோ அதே உறவும் பந்தமும் திருமணத்துக்கு பின்னும் அவளால் தொடரப்படுகின்றது. ஆனால் ஆணுக்கோ தி.மு- தி. பின் என இரு நிலைகள். ஏன் அப்படி?

நான் என் சொந்த அனுபவத்தில் கண்ட உண்மை என்னவெனில் இந்த விடயத்தில் ஆண்கள் தான் தவறிழைக்கின்றார்கள். திருமணமாகும் வரை அக்கா, அம்மா தங்கை என உருகிட்டு அவர்களை விட்டால் யாருமில்லை அவர்களுக்கு தான் தன் உடல் பொருள் ஆவியெல்லாம் என ஓவர் ஆக்‌ஷன் எடுப்பார்கள்.

திருமணமானபின் ஏதோ காணாததை கண்டு காய்ந்த மாடு வைக்கோல் போரை கண்டால் விழுவது போல் ஒரே நாளில் மாறுவார்கள். ஏன் அப்படி நடக்க வேண்டும். பெண் அப்படி மாறுவதும் இல்லை தன் தாய் சகோதரர்களை குறித்து குற்றம்குறை பேசி ட அனுமதிப்பதும் இல்லை விட்டுக்கொடுப்பதும் இல்லை. ஆனால் ஆண்கள் அப்படி அல்ல! ஒரே இரவில் என் அம்மா அப்படி.. என் தம்பி இப்படி என சொல்லி ... அம்மாவை பத்தி மனைவி சொல்லும் குறைகளை பெரிதாகி.... அம்மாவை செல்லாக்காசாக்கி விடுகின்றார்கள்.

இதிலும் பெரும்பாலான ஆண்கள் சொல்லும் ஒரு வார்த்தை.. அம்மா நீ சும்மா பேசாமல் இரு.. உனக்கு ஒன்றுமே தெரியாது..... ஆமாம் ஐம்பது வயது அம்மாவுக்கு ஒன்னும் தெரியாமல் தான் அவனைபெத்து வளர்த்து ஆளாக்கி விட்டார்.

நேற்று வந்த இருபது வயது மனைவிக்கு எல்லாம் தெரியும். அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது. அவள் அடி முட்டாள். அட போங்கப்பா... நீங்களும் உங்க காரணங்களும்.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம்... மனைவி என்றால் ஏதோ அடிமை போல் அம்மாவை மட்டும் தூக்கி தலையில் வைத்து ஆடுவது. இது நிரம்பவே திரி, பேர் மச்! ஏன்பா உங்களுக்கு அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் நடு நிலையில் முடிவெடுத்து வாழவே தெரியாதா?

என்னை பொறுத்த வரை ஒரு ஆணுக்கு அம்மா அம்மா தான்.
மனைவி மனைவி தான். இருவரில் எவர் உசத்தி எனும் பேச்சுக்கே இடம் இல்லை.
இரு கண்ணில் ஒரு கண் மட்டும் போதுமா என எதையும் உயர்த்தவும் வேண்டாம், தாழ்த்தவும் வேண்டாம். விட்டு கொடுக்கவும் வேண்டாம் வைத்து பிடுங்கவும் வேண்டாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by Nisha Sat 9 Jan 2016 - 18:38

இந்த மாதிரி அம்மா,மனைவி என வரும் போது எவருக்கு எந்த இடம் என முடிவெடுப்பதை பலகலை சென்று பட்டம் படிக்காத பல ஆண்களிடம் இருக்கும் நியாயத்தன்மை படித்து பட்டம் பெற்று பதவியில் இருப்போரிடம் இருப்பதில்லை. படிப்பு அவர்களுக்குள் தெளிவான சிந்தனையை குடும்ப உறவுகள் விடயத்தில் தருவதில்லை. குழப்பவாதிகளாய் மாமியார் மருமகள் பிரச்சணைக்கு அச்சாணியாய் இருப்பார்கள்.

நியாயமும் நீதியும் அங்கே மரத்து போகும். படிப்பு கௌரவத்தை தான் கற்று தரும் போலும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by Nisha Sat 9 Jan 2016 - 18:40

நண்பன் wrote:தாய் சரியில்லாத பிள்ளைகள் பலரின் வாழ்க்கை சரியான பாதையில் பயணிப்பதில்லை. அதேபோல் தாரம் சரிவர அமையாத பலரின் வாழ்க்கையும் நன்றாக அமைவதில்லை எவ்வளவு அழகான கருத்தோடு துவங்கியுள்ளீர்கள்  இதற்கே எனது முதல்ப் பாராட்டு உங்களுக்கு


தாயா தாரமா என்ற விவாதம் நடத்தவே வேண்டாம்  என்றும் சரி பாதி அன்பும் பாசமும் கிடைத்தால் ஒரு ஆணுக்கு போதும் வாழ்க்கையே வெற்றிதான் என்றும் நீங்கள் சொன்ன கருத்தை நான் வரவேற்கிறேன்  எல்லோருக்கும் தாய் அமைவாள் ஆனால் தாரம்தான் கேள்விக்குறி...
என்னுடய கருத்துப்படி இது எனது தனிப்பட்ட கருத்து நான் என் மனைவியை காதலித்துத்தான் திருமணம் முடித்தேன் என் காதலுக்கு சம்மதம் சொல்லிய என் அன்புத்தாய்க்குத்தான் முதலிடம் என் தாரத்திற்கு என்றும் இரண்டாமிடம்தான் இதைப் பற்றி நான் என் மனைவிடமும் பல முறை சொல்லியுள்ளேன் என் அம்மா பசித்திருக்க நான் உனக்கு உணவளிக்க மாட்டேன்  அத்தோடு உன் உன்னையும் நான் பசியோடு வைக்க மாட்டேன் 
என் அம்மாவிற்கு என்னைப் பற்றித் தெரியும் அதே போல் நீயும் என்னைப் புரிந்து கொண்டு வாழ்ந்தால் எனக்கும் மட்டுமில்லை நமக்கு நமது வாழ்க்கை வெற்றிதான் என்றும் சொல்லியுள்ளேன் அந்த நாளுக்காகவும் காத்துக்கொண்டு இருக்கிறேன்.
 
சிறந்த கருவோடு சுமந்து வந்த உங்கள் கடந்து வந்த பாதை சிறப்பு
நன்றியுடன் நண்பன் 

இந்த விடயத்தில்  திடமாய் முடிவெடுத்து யாருக்கு எந்த இடம் என  தீர்மானமாய் இருப்பதனாலேயே எனக்கு உங்களை ரெம்ப பிடிக்கும் என முன்னரே சொல்லி இருக்கேன். சூப்பர்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by Nisha Sat 9 Jan 2016 - 18:59

பானுஷபானா wrote: 
தாய் முற்பாதி என்றால் தாரம் பிற்பாதி. நல்ல மனைவியும் , அம்மாவும் ஆணுக்கு வாய்த்து விட்டால் வீடு சொர்க்கம் தான்.
இப்போதெல்லாம் விவாகரத்துக்குகள் அதிகமாகி விட்டபடியால் மனைவிகளை அடிக்கடி மாற்றிக்கலாம். அம்மாவை எக்காலத்திலும் மாற்ற முடியாது என்பதால் இந்த பாதி கதை சரி வருமா?
நல்ல அம்மாவாக  இருப்பவள் நல்ல மாமியாராக இருப்பதில்லை. மகனுக்கென்று மனைவி வந்துவிட்டால் நம் கடமை முடிந்தது இனி அவள் பார்த்துக் கொள்ளட்டும் என்று அம்மா விலகி இருந்தால் பிரச்சனை வராது. 
தொப்புள் கொடி உறவை அப்படி சொல்லி அத்தனை சீக்கிரம் விலக்கிர முடியாது பானு!
கெட்டவளாக இருந்தால் தாய் விட்டுக் குடுத்துட்டு போயிடனும்.
ஐயோ பானு  மருமகள் நல்லவளாயிருந்தால் கூட மகன் நல்லா இருப்பான் அவள் நல்லா கவனித்து வேளாவேளைக்கு சமைத்து போடுவாள் என நம்பி விட்டு விடலாம். கெட்டவளாயிருந்தால் எப்படிப்பா விட்டு விடுவது? இது உங்களுக்கே நியாயமாகப்படுகின்றதா?
மகனை அம்மாவுக்காக பேசுவதா, மனைவிக்காக பேசுவதா என்ற சங்கடத்திலும்  இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்க விடாமல் எது நடந்தாலும் நன்மைக்கே என விட்டுரனும்.
இப்படி ஒரு நிலையினை உருவாக்குவதே அந்த மகன் தான் பானு. ஆரம்பத்திலேயே நான் இப்படித்தான் இருப்பேன் என உறுதியாய் நிலை நிற்க முடியாததால் வந்த நிலை அல்லவோ?
மகனும் பக்குவமாக இருவரிடமும் புரிய வைக்க வேண்டும்.
அந்த நிலை கடந்து விடும் பானு. முதல் முப்பது நாளிலேயே சட் சரணாகதி! இதில் பேசி புரிய வைக்கும் நிலை கடந்து விடும். பேசாதிருக்கும் மோன நிலை சிறப்பெனும் உணர்வும் அடைந்து விடும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by சே.குமார் Sat 9 Jan 2016 - 19:48

முதலில் நிஷா அக்காவுக்கு...

வணக்கம்...

தாங்களின் பெரிய கருத்துரைக்கு நன்றி.

இந்தக் கட்டுரையில் அம்மா விட்டுக்கொடுத்துப் போக வேண்டும் என்றெல்லாம் சொல்லவே இல்லையே... 

மகனின் திருமணத்துக்குப் பிறகு அம்மாவுக்கு மனசுக்குள் ஒரு பயம்... எங்கே நம் மகனைப் பிரித்து விடுவாளோ என்று... அதானால் அவளது பாசத்திற்குள் கோபமும் வலியும் சேர்ந்து மருமகளுடன் மல்லுக்கு நிற்கச் சொல்கிறது.

அம்மாவைப் போல் மனைவி அமைந்தால் நலம் என்பதே கட்டுரை... இதில் அம்மாவை குற்றம் சொல்லவே இல்லை... அம்மாவின் அன்பு மாறாதது.. அதை நான் என் அம்மாவிடம் பார்க்கத்தான் செய்கிறேன்... ஆனால் அதற்காக கட்டி வந்தவள் வேலைதான் பார்க்க வேண்டும் அதற்காகத்தானே வந்தாள் என்பதை எல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஒரு மகனை நன்றாக வளர்க்க வேண்டியது தாயின் கடமை... அதேபோல் கணவனை... அவனது உறவுகளை எப்போதும் அன்போடு பார்க்க வேண்டியதும் மனைவியாய் வரும் பெண்ணின் கடமை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

திருமணம் ஆகும் வரை அண்ணனாய் தம்பியாய் தங்கையாய் உருகிவிட்டு பின்னர் அவன் மாற வேண்டும் என்பதில்லை... தங்கையோ அக்காவோ அவனிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு முட்டி நிற்கும் போது முடிந்தவன் கொடுப்பான்... முடியாதவன்..? அதற்கு மனைவியை குற்றம் சொல்ல இங்க என்ன வந்தது சொல்லுங்கள்...

கட்டுரையில் எந்த இடத்தில் அம்மாவைக் குறைக்கவும் இல்லை மனைவியைக் கூட்டவும் இல்லை... தாயா தாரமா என்பது அல்ல கட்டுரை... தாயும் தாரமும் என்பதுதான் கட்டுரை... இதில் தவறான கருத்துக்கள் இல்லை என்பது என் எண்ணம்...

கட்டுரையின் சாரம்சமே /// தாயும் தாரமும் 50-50 என அமைந்தால் ஒரு மனிதன் 100 சதவிகிதம் சந்தோஷமாகவும் நினைத்த இடத்தை அடைந்து வாழ்வில் பூரண சுகத்துடன் ஜொலிக்க முடியும். அதைவிட மாமியாரும் மருமகளும் புரிந்து கொண்டு அன்பாய் இருந்தார்கள் என்றால் அவனுக்கு வாழ்வில் எல்லாம் கிடைத்த சந்தோஷம் கிடைக்கும்.

எனவே தாயா... தாரமா... என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்தாமல் அம்மாவும் மனைவியும் நமது வாழ்வின் ஒளியேற்றும் ஜீவன்கள்... நமக்காகவே வாழ்க்கையை தொலைத்து வாழும் ஜீவன்கள்... உள்ளமும் உடலும் நம்மோடு எப்பவும் இணைந்தே இருக்கும் உயிர்கள் என்பதை மனதில் கொள்வோம். தாயும் தாரமுமே நம்மின் வாழ்க்கையை நலமாகவும் வளமாகவும் நகர்த்தக் கூடிய காரணிகள்... இவர்கள் சரியில்லை என்றால் நம் வாழ்க்கை தறிகெட்டு பயணித்து விபத்தில்தான் முடியும்./// இதுதான்.


இதில் எனக்கு மாற்றுக் கருத்தும் இல்லை...

தங்களின் திறந்த கருத்துக்கு நன்றி. இது விவாதப் பொருள் அல்ல.. கருத்துப் பரிமாற்றமே உங்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by சே.குமார் Sat 9 Jan 2016 - 19:52

நண்பனுக்கு வணக்கம்.

தங்கள் கருத்துக்கு நன்றி.

//எல்லோருக்கும் தாய் அமைவாள் ஆனால் தாரம்தான் கேள்விக்குறி...//

அந்த கேள்விக்குறியை ஆச்சர்யக்குறி ஆக்கும் மனைவி அமைந்தால் எல்லாம் நலமே என்பதுதானே கட்டுரையில் வருகிறது.
//என்னுடய கருத்துப்படி இது எனது தனிப்பட்ட கருத்து நான் என் மனைவியை காதலித்துத்தான் திருமணம் முடித்தேன் என் காதலுக்கு சம்மதம் சொல்லிய என் அன்புத்தாய்க்குத்தான் முதலிடம் என் தாரத்திற்கு என்றும் இரண்டாமிடம்தான் இதைப் பற்றி நான் என் மனைவிடமும் பல முறை சொல்லியுள்ளேன் என் அம்மா பசித்திருக்க நான் உனக்கு உணவளிக்க மாட்டேன்  அத்தோடு உன் உன்னையும் நான் பசியோடு வைக்க மாட்டேன் ///

இதை நான் ஏற்கிறேன்... அம்மாவை பசிக்க வைத்து நாம் பழம் சாதம் சாப்பிடுவது சரியல்ல... பெற்றவள் மனசு பூரித்தால் நாம் நன்றாக இருப்போம். மனைவியும் அம்மாவும் தங்களுக்கு நன்றாய் இருக்கும் போது நீங்கள் பாக்கியசாலியே...

//என் அம்மாவிற்கு என்னைப் பற்றித் தெரியும் அதே போல் நீயும் என்னைப் புரிந்து கொண்டு வாழ்ந்தால் எனக்கும் மட்டுமில்லை நமக்கு நமது வாழ்க்கை வெற்றிதான் என்றும் சொல்லியுள்ளேன் அந்த நாளுக்காகவும் காத்துக்கொண்டு இருக்கிறேன்.//


புரிந்து கொண்ட வாழ்க்கைக்கே வெற்றி... உங்கள் வாழ்வில் வளமும் நலமும் மகிழ்ச்சியும் விரைவில் வரும்...


நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by சே.குமார் Sat 9 Jan 2016 - 19:56

Nisha wrote:  இந்த மாதிரி அம்மா,மனைவி என வரும் போது எவருக்கு எந்த இடம் என முடிவெடுப்பதை பலகலை சென்று பட்டம் படிக்காத பல ஆண்களிடம் இருக்கும் நியாயத்தன்மை  படித்து பட்டம் பெற்று பதவியில் இருப்போரிடம் இருப்பதில்லை. படிப்பு அவர்களுக்குள் தெளிவான சிந்தனையை குடும்ப உறவுகள் விடயத்தில் தருவதில்லை. குழப்பவாதிகளாய் மாமியார் மருமகள் பிரச்சணைக்கு அச்சாணியாய் இருப்பார்கள்.

நியாயமும் நீதியும் அங்கே மரத்து போகும். படிப்பு கௌரவத்தை தான் கற்று தரும் போலும்.
 
அக்கா...
இந்த நியாயத் தன்மை கிராமத்தானிடம்தான் அதிகம் இருக்கும்.

அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவனுக்கு இதில் முடிவெடுப்பது என்பது சிரமானகாரியமாக எனக்குத் தெரியவில்லை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by சே.குமார் Sat 9 Jan 2016 - 20:01

பானு அக்காவுக்கு...

தாயும் தாரமும் 50-50 என்ற கருத்தை தாங்களும் ஆமோதித்து இருக்கிறீர்கள். இதில் நிஷா அக்கா சொல்லும் விவகாரத்தால் மனைவியை மாற்றுவதில் இது எடுபடுமா என்ற கேள்வி நியாயமே என்றாலும் நாம் பேசுவது நல்ல மனைவி, நல்ல மனிதம் பற்றியே...

அம்மா விலகி இருக்க வேண்டும் என்பதில்லை... எல்லா மனைவிகளுமே ... அம்மாவாய்... மாமியாராய் மாறத்தான் போகிறார்கள். ஆனால் அவர் விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுத்து தட்டிக் கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக் கொடுக்க வேண்டும்.

திருமணமான புதிதில் மனைவியின் மகுடிக்கு ஆடாமல் எது சரி எது தவறென்பதை எடுத்துச் சொல்லி அம்மாவுக்கும் மனைவிக்கும் ஒரு புரிதலான அன்பை ஏற்படுத்தி விட்டாலே போதும்.. மலர்ச்சிதான்...

நன்றி அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by நண்பன் Sat 9 Jan 2016 - 20:36

பானு அக்காவின் கருத்தும் அதைத் தொடர்ந்து வந்த நிஷா அக்காவின் கருத்தும் ஏற்புடையதாகவே அமைகிறது குமார் அண்ணா நீங்கள் வெறும் கருத்துப்பரிமாற்றலாகத்தான் பதிந்தீர்கள் விவாதமல்ல என்று முன்னாடியே சொல்லி விட்டீர்கள் பிரமாதம்  அனைவரின் கருத்தும் சூப்பராக உள்ளது பாராட்டுக்கள் நன்றியுடன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by சே.குமார் Sat 9 Jan 2016 - 20:51

நண்பன் wrote:பானு அக்காவின் கருத்தும் அதைத் தொடர்ந்து வந்த நிஷா அக்காவின் கருத்தும் ஏற்புடையதாகவே அமைகிறது குமார் அண்ணா நீங்கள் வெறும் கருத்துப்பரிமாற்றலாகத்தான் பதிந்தீர்கள் விவாதமல்ல என்று முன்னாடியே சொல்லி விட்டீர்கள் பிரமாதம்  அனைவரின் கருத்தும் சூப்பராக உள்ளது பாராட்டுக்கள் நன்றியுடன்

வாங்க நண்பா...

கருத்துப் பரிமாற்றமே...
என் கருத்து 50-50 அமைந்தால் சுகமே என்பதுதான்...

பானு அக்காவின் பார்வையில் அவரின் கருத்தும் நிஷா அக்காவின் பார்வையில் அவரின் கருத்தும் என் பகிர்வின் கருத்துகளோடு பயணிக்கவில்லை என்றாலும் அவரவர் பார்வையில் தாயும் தாரமும் நிறைவாகவே இருக்கிறது. அதை நாம் இன்னும் கலந்து பேசுவோம்.. இப்படிப் பேசினால்தான் ஆச்சு... இல்லையின்னா நல்லாயிருக்கு, அருமை, அழகா எழுதுறீங்க... அசத்தல் (இதெல்லாம் மற்றவ்ர்களை அல்ல என்னைச் சொன்னேன்) என கருத்துப் போட்டுட்டு ஓடிடுவேன்...

என்னையும் நீளமா எழுத வச்சிருச்சே.... சந்தோஷம்... சந்தோஷமாய் கருத்துப் பரிமாறுவோம்.

நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by நண்பன் Sat 9 Jan 2016 - 20:55

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் 12472238_789533904491551_6377284027255169310_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by நண்பன் Sat 9 Jan 2016 - 20:58

மனைவி அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரம்
இறைவனுக்கே கிடைக்காத வரம் தாய்  அம்மா வரம்
படித்ததும் பிடித்தது மேல உள்ள போட்டோ பகிர்ந்து விட்டேன் தவறாக எண்ண வேண்டாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by Nisha Sat 9 Jan 2016 - 21:23

நிச்சயம் கருத்துப்பரிமாற்றம் தான்@ இதில் மாற்றுக்கருத்தே இல்லை. விட்டுக்கொடுத்தல் என்பது பானுவின் பதிலுக்கான என் பதில் அது. 
ஆனாலும் குமார் உங்கள் பதிவில் வந்த  இக்கருத்தினை பாருங்கள். 
என் மனைவி இங்கு வந்திருந்த ஒரு மாதமும் எனக்கு காலையில் டிபன் செய்து கொடுத்து மதியத்துக்கு சாப்பாடு, குழம்பு, கூட்டோ அல்லது பொரியலோ செய்து கொடுத்துத்தான் அனுப்பினார். இவனுக்குப் பார்... அந்தப் பெண்ணால் ஒரு பிரட் எடுத்து செய்து கொடுக்க முடியலை. மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்தான்... அது எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை என்றேன். மலையாளியோ மறுபடியும் என்ன இருந்தாலும் அம்மாதான் உசத்தி என்றான். பாசத்தில் மனைவியின் பாசத்தைவிட அம்மாவின் பாசம் கொஞ்சம் உசத்தியாய் இருக்கலாம். அம்மாவுக்கு குழந்தைகளின் மீது கூடுதல் பாசம் வருவது இயற்கை.... ஆனால் எங்கிருந்தோ நம்மை நம்பி வந்து நமக்காகவே வாழும் ஜீவன் என்று பார்த்தால் அம்மாவைவிட மனைவியின் பாசமே உசத்தி என்றேன்.  அம்மா நம்மை பெத்தெடுப்பவள் என்றால் வரும் மனைவியோ நம்மை தத்தெடுப்பவள்.. எனவே தி.மு அம்மா என்றால் தி.பி மனைவி, மனைவி வந்த பின்தான் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து வாழப்பழகுகிறான் என்றேன். தி.மு, தி.பி என்று சொன்னதை கேட்டுச் சிரித்தான்... ஆனால் ஏற்றுக் கொண்டானா என்று தெரியவில்லை.

இதில் வரும் கருத்து உங்கள் சொந்தக்கருத்தாயிருந்தாலும் பல ஆண்களின் ஆரம்ப கால தவறும் இதனுள் மறைந்திருப்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் என் கருத்தினை சொன்னேன். 

மனைவியை வேலை செய்யும் ஒரு வேலைக்காரி எனும் நிலையில் நான் பார்க்க சொல்லவும் இல்லை. ஆனால்  அவளுக்கும் சேர்த்து தான்  அவள் கணவன் வெளியில் சென்று உழைக்கின்றான் எனும் போது வீட்டுக்கு வெளியே சென்று ஊதியம் சம்பாதிப்பது ஆணின் கடமை எனில் வீட்டுக்குள் இருந்து அவனின் தேவைகளை  நிறைவேற்றுவது மனைவிக்கான கடமை. 

ஆனால் அம்மாவுக்கு இந்த கடமை எனும் கட்டுப்பாடு இல்லை. அவள் அந்த ஆண் மகனை பெற்றதன் பாசத்தில் மட்டுமே அவன் தன்னை கவனிக்காவிட்டாலும் கூட அன்பில் மட்டுமே அவனுடையை  தேவைகளை  பார்த்து பார்த்து செய்கின்றாள். 

கருத்துப்பரிமாற்றம் என வந்த பின் நான் வெளிப்படையாகவே எழுதுகின்றேன் இங்கே நாம் யாரும் சிறுவர்கள் அல்ல. அம்மா தாய் என வரும் போது  மனைவி எவ்வகையில் வேறு படுகின்றான் என சொல்லுங்கள்? 

உடல் ரிதியான தொடுதல் தான் மனைவியை மற்றைய  உறவுகளிடமிருந்து வேறு படுத்து கின்றது.ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் காலப்போக்கில் அருகி வரக்கூடிய உடல் உணர்வுகளுக்கு  தான் பல ஆண்கள் திருமண மான ஆரம்ப காலத்தில் முதலிடம் கொடுத்து  உள உணர்வை அசட்டை பண்ணுகின்றார்கள். 

வெளி நாட்டில் தொடர்ந்து பத்து வருடம் வேலை செய்து விட்டு ஊருக்கு போய் அங்கே செட்டிலாக நினைத்து  ஒரு வருடம் அங்கிருந்து எந்த தொழிலுமில்லாமல் அல்லல்படும் ஒரு ஆணிடம் கேட்டுப்பாருங்கள். கொடுத்தால் மனைவி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தாய் என  பசிக்கு சோறு போடுவது என் அம்மா தான் என்பான். 

நீங்கள் உங்கள் வாழ்க்கையை  இந்த நொடியில் மட்டும் வைத்து மனைவிக்கு முதலிடம் என சொல்வதில் தப்பில்லை. ஆனால் வாழ்க்கையில் முடிவு மட்டும் இதே முடிவு நிலைக்குமா என்பதற்கு பதில் காலம் தான் சொல்லும்! 

 நான் புதிதாக கல்யாணம் ஆகப்போகும் எனக்கு தெரிந்த ஆண்மக்கள் அனைவருக்கும் சொல்லும் ஒரு ஆலோசனை. 

மனைவியை நேசி. உன்னில் பாதியாய் பார். அவளின் தேவைகளை நிறைவாக்கு, ஆனால் அனைத்துக்கும் தலையாட்டும் அடிமையாகாதே! உன் தாய் தந்தைக்குரிய கடமையை மறவாதே என்பது தான். அம்மா, அப்பா உனக்கு முக்கியம் விட்டுக்கொடுத்து விடாதேப்பா என சொல்வேன் 

இவ்வகையில் என் வீட்டுக்காரரும் எனக்கு முன் மாதிரி தான். என்ன தான் சுவிஸில் இருந்தாலும் அவர் அம்மா அப்பா என வரும் போது நான்  ஒதுங்கித்தான் போவேன். அதே போல் அவர் உடன் பிறந்தவர்கள் தப்பே செய்தாலும் அதை சொல்லி சுட்டிக்க்காட்டி பேச எனக்கு அனுமதியும் இல்லை. இதே நிலையில் நானும். என் சகோதரர்கள் அம்மா அப்பா எனக்கு எப்படி இருந்தாலும் அவர்களுக்காக கடமை என வரும் போது  என்னவராயிருந்தாலும் கடமையை தான் நிறைவேற்றுவேன். 

இருவருமே ஆரம்பத்திலிருந்து அவரவர் குடும்பத்துக்கு என்னமுக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்கவும். மதிக்கவும் கற்றுக்கொண்டோம். 

அம்மா பேயாயிருக்கட்டும். அம்மா அம்மா தான், மனைவி மனைவி தான். அம்மா சின்ன தப்பு செய்தாலும் தூக்கிப்பிடிக்கும் ஆண், மனைவி பெரிய தப்பு செய்தாலும் கண்டு கொள்வதே இல்லை. அத்தனை கண்மூடித்தனமான நம்பிக்கையா என கேட்டால் ? இல்லை என சொல்வேன். 

தாய்க்கு பின் தாரம் என சொல்வார்கள். நன்கு ஆராய்ந்தால் இந்த வார்த்தை தரும் அர்த்தம் நம் முன்னோர்கள் சொன்னது தெளிவாக புரியும். 

தாய்க்குப்பின் தான் தாரம்.. அதாவது தாய் இல்லையென ஆனபின் தான் தாரத்தால் அந்த இடத்தினை நிரப்ப முடியும். தாய் இருக்கும் வரை தாய் அன்புக்கு நிகர் அது மட்டும் தான். 

என் அம்மாஎங்களிடம் எப்படி நடந்தாலும் என் தம்பி என எடுத்தால் அவன் மேல் ரெம்ப பாசம். சின்ன வயதில்  அவ பட்டினி கிடந்து எங்க பசி தீர்த்ததை நாங்க மறந்ததில்லை. இன்றைக்கும் நான் அவர்களிடமிருந்து தூரமாகி போனாலும் விறகு சுமந்து,ஆப்பம், தோசை சுட்டு வித்து, மா இடித்து  எங்களை கௌரவமாய் வளர்த்தெடுத்ததை மறந்ததில்லை. அப்பா குடிகாரராயிருந்தும் வீட்டில் அக்கறை இல்லாமல் இருந்தாலும் எங்களில் ஆரம்ப கால வாழ்க்கைப்பாடம் அம்மாவிடமிருந்து தான் வந்தது. ஐந்தில் எங்களை நல்லபடியாய் வளர்த்ததால் தான் ஐம்பதில் நாங்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்போம் என சொல்லும் படி இருக்கின்றோம். 

எங்கள் படிப்புக்காக  யாரிடமெல்லாம் கையேந்தணுமே அவர்களிடம் கையேந்தி எங்களை படிக்க வைத்தார். ஊர் ஊராய் போய் ஏச்சுபேச்சு கேட்டு அகதியென பதிவு செய்து கோதுமை மாவும் சீனியும் வாங்கி வந்து எங்கள் பசி தீர்த்தார். 

தனக்கு மாத்து சேலை இல்லாமல் ஒத்தைச்சேலைஇருந்ததை கவலைப்படாமல் எங்களுக்கும் கிறிஸ்மஸுக்கு சீத்தை துணி வாங்கி  புது உடுப்பு தைத்து தருவா! கிண்ணத்தில் அடுத்த வீட்டில் சோறு வாங்கி தம்பிக்கும் தங்கைக்கு ஊட்டி விட்டு தான் பட்டினியாய் இருப்பா! 

தம்பி கல்யாணமென வந்த போது  நானும் என் தங்கச்சியும்  அவ ஐம்பதாவது பிறந்த நாளுக்கு வாங்கிக்கொடுத்த ஆறுபவுண் தங்க செயினை அவன் மனைவிக்கு தாலி செய்ய என கொடுத்தா! 

அம்மாவையும், அப்பாவையும் நான் நன்றியோடு நினைக்கும் படி என்னில் அவர்கள் பாசம் அன்பு காட்டியதில்லை தான். காசு கொடுக்கும் மெசினாய் தான் பார்த்தார்கள். ஆனாலும்  கடவுளின் முன்னும் மற்ற மனிதர் முன்னும் நான் இன்று உயர்ந்திருக்க என் சின்ன வயதில் அவங்க தந்த உரம் தான் காரணம். என்னை பொறுத்த வரை அவர்களுக்கு நிகர் அவங்க தான். என் பெற்றோர் பாசம் காட்டியதில் வேற்றுமைகாட்டினார்கள் என்பதற்காக நான் அவர்களை எவர்கள்முன்னும் தாழ்த்த மாட்டேன் . அவர்கள் என்றும் உசத்தி தான். 

நிரம்ப அம்மா மார்கள் இப்படித்தான். சின்ன வயதில் பிள்ளை பிள்ளையென ஊட்டி ஊட்டி வளர்ப்பதும் பிள்ளை வளர்ந்த பின் அவர்களை  ஓட ஓட துரத்துவதுமாய்.... ?

அம்மாவுக்கு பத்து வருடம்  நீரழிவு நோய் இருப்பதை கண்டுகொள்ளாத மகன்கள் திருமணமாகி ஒரே மாதத்தில் மாமியாருக்கு சுகர் செக் செய்யும் கருவி வாங்கி பரிசளிக்கும் காலம் இது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by rammalar Sun 10 Jan 2016 - 11:19

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் 103459460மனசு பேசுகிறது : தாயும் தாரமும் 3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by நண்பன் Sun 10 Jan 2016 - 13:45

rammalar wrote:மனசு பேசுகிறது : தாயும் தாரமும் 103459460மனசு பேசுகிறது : தாயும் தாரமும் 3838410834

உங்கள் கருத்து என்ன அதையும் சொல்லுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by Nisha Sun 10 Jan 2016 - 14:18

ஆனால் எங்கிருந்தோ நம்மை நம்பி வந்து நமக்காகவே வாழும் ஜீவன் என்று பார்த்தால் அம்மாவைவிட மனைவியின் பாசமே உசத்தி என்றேன்.  

பத்துமாதம் பட்டினி கிடந்து வலிசுமந்து பெற்று வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து வேலை கிடைத்த ஒரே வருடத்தில் தன் மகனுக்கு திருமணம் என ஒன்றை பேசி அவன் வாழ்க்கை நல்லா இருக்கட்டும் என தன் மனசுக்கேற்ற பெண்ணை தெரிந்தெடுக்கும் வரை தாயின் பங்களிப்பு சிறந்தது எனும் போது...... ஒரு ஆண் மகன்  தன் 24 வயது வரை தாய் தகப்பன் பாராமரிப்பில் வாழ்ந்து அனுபவித்து விட்டு.. ஒரு வருடம் மட்டுமே உழைத்து தம் பெற்றோருக்கு உதவிய நிலையில்..... எங்கிருந்தோ வந்த மனைவிக்காக தம் உடல், பொருள், உழைப்பு என அத்தனையையும் அர்ப்பணிக்கும் ஆண்மகனை விட மனைவி எனும் வகையில் வரும் பெண் எவ்வகையில் உசத்தியாவாள் என புரியவில்லையே?

வேலையில்லாமல் வெட்டியாய் இருக்கும் ஆண்மகனை எந்த பெண்ணுக்கும் கல்யாணம் செய்து தர மாட்டார்கள். நன்கு படித்து படிக்காவிட்டாலும்  கூலி வேலை செய்தேனும் மனைவியை காப்பாற்றும் திறமை இருப்பவனை நம்பித்தான் பெண்ணை கொடுப்பார்கள். பெண்ணும் அவனை நம்பி வருகின்றாள் எனும் போது ஆணிடம் இருக்கும் வருமானம்  தான் அங்கே அவனுக்குரிய மதிப்பை தருகின்றது. 

வருமானம் இல்லாது போனால் ஆண் பூஜ்ஜியம் எனும் நிலையில்  எங்கிருந்தோ வந்தவளாய் தீடீரென  இடையில் வந்து  அது வரை படிக்க வைத்து நல்ல பழக்கமும் குணமுமாய் வள்ர்ந்து வருமானமுமுள்ள ஆண்மகனை மணந்து கொள்ளும் மனைவி  அது வரை பேணிப்பாராமரித்த தாயை விட எவ்வகையில் உசத்தி?

மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்தையே கடை நிலையில் நிறுத்தும் போது அந்த மாதாவுடன் நாம் எவரையும் ஒப்பிட முடியாது என்பது என் கருத்து. 

நானும் மனைவியாகவும், தாயாகவும் , நாளை மாமியாராகவும் மாறலாம், இந்த நிமிடம் என் தம்பி மனைவிக்கு நாத்தனாராகவும் இருக்கின்றேன் எனினும் நான் என்றும் என்னவரிடம் போய் அவர் தாயை விட நான் உசத்தி என சொல்ல வேண்டும் என எதிர்பார்க்க மாட்டேன். என் நாத்தியிடம் போய் உன் தம்பிக்கு நான் தான் எல்லாம் என சொல்ல மாட்டேன் .அதே நேரம் என் மகனிடம் எனக்கான உரிமையை  நான் நிச்சயம் கேட்பேன். என் அம்மாவுக்கான உரிமையை என் தம்பி தட்டிக்கழித்தால் அதையும் தட்டிக்கேட்பேன்!ஏனெனில் என் மகன் என் உதிரம். என் மகனை விட என்னை புரிந்து கொள்ளக்கூடியவர் யாருமே இல்லை என எல்லா அசட்டு அம்மாக்களையும் போல் நானும் நம்புகின்றேன்!  

இங்கே கவனியுங்கள்...கண்வர், மகன் எனும் நிலையில்  ஒரு கட்டத்துக்கு மேல் பெண்ணுக்கு கணவனை விட மகன் முக்கியமாகியும் போகின்றாள். அதாவது பெண்  ஒவ்வொரு கால கட்டத்திலும் தனக்கு யார் முக்கியம் என்பதை தெரிவு செய்வதில் திடமாய் முடிவெடுக்கின்றாள். ஆனால் ஆணோ இவ்விடயத்தில் முதல் கோணல் முற்றிலும் கோணலாகி முழி பிதுங்கி தடுமாறுகின்றான். 

அப்பா, அண்ணந்தம்பி, கணவன், மகன் எனும் வரிசையில் பெண் அவரவர்களுக்காக இடத்தினை  சரிசமமாய் பிரித்து கொடுக்கின்றாள். அப்பாவை விட எம் புருஷன் உசத்தி என எந்த பெண்ணாவது சொல்லி கேட்டதுண்டா? எங்க அப்பாவை போல வருமா எனத்தான் சொல்வார்கள்! இதையே ஏன் ஆண்கள் எங்க அம்மாவைபோல வருமா என சொல்ல முடிவதில்லை? 

மகன் நல்லதே சொன்னாலும் செய்தாலும் என்னடா அவ சொல்லிக் கொடுத்துத்தானே நீ பேசுறே என்பார்கள். பக்கத்து வீட்டு மனிதர்களிடம் 'இப்ப இந்தப்பய சுத்தமா மாறிட்டான்... என்னைப் பார்க்கிறதே இல்லை... எல்லாத்துக்கும் காரணம் அந்தச் சிறுக்கிதான்...' என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். எனவே அவர்களின் பாசத்துக்குள் கொஞ்சம் மாற்றம் வர ஆரம்பித்து விடுகிறது என்றேன். அவன் சிரித்தான்... பின்னர் ஆமோதித்தான்.

அம்மா இப்படி சொல்ல காரணமும் அந்த மகன் தானேப்பா! தி. முன் வரை அம்மா என்ன சொன்னாலும் சரிம்மா சரிம்மா என சொல்லும் பிள்ளை தி. பின் அம்மா உனக்கொன்றும் தெரியாது. நீ எந்த காலத்தில் இருக்கே என  கேட்டால்  நீ மாறிட்டேப்பா என சொல்லாமல் என்ன சொல்வாள். 

பெரும்பாலான ஆண்கள்  தி.பின் என்ன பிரச்சனை என்றாலும் மனைவி சொல்வதை  மட்டும் வைத்து சட்டென முடிவெடுப்பதால்  தான் அம்மா இப்படி சொல்ல வேண்டி வருகின்றது.முக்கியமாக ஆண்களின் முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் மனது, அவர்களின் உடல் சார்ந்த தேவைதான் மனைவியை முன் நிறுத்தி தாயை சற்று பின் நிறுத்துகின்றது. இது குறித்து நாங்கள் இங்கே பலமுறை விவாதித்துள்ளோம். 

பல ஆண்கள் நான் சொல்லும் இதே கருத்தினை ஆம் என ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள். அம்மாவை சமாளிக்க முடியும். ஆனால் மனைவியை சமாளிக்க முடியாது. மனைவி தரும் தண்டனை வயிற்றுக்கு மட்டுமல்ல உணர்வுக்குமாய்  இருப்பதனால்  மனைவி  சொல்லே மந்திரம் என சட்டென முடிவெடுத்து விடுகின்றார்கள். 

என் மகனே உன் தகப்பன் கட்டளையை கேள், உன் தாயின் போதகத்தை அசட்டை செய்யாதே ,மனைவிக்குண்டான கடமைகளை நிறைவேற்று என மதங்களும் சொல்லுமே தவிர மனைவி மட்டுமே உனக்கு எல்லாம் என சொல்லவில்லை. உன்னில் அவள் பாதியாய் இருப்பதால் உன்னைபோல் அவளை நேசி...அதாவது உன்னைபோல் தான் அவள் உன்னைவிட உசத்தியும் இல்லை, தாழ்ச்சியும் இல்லை. உன்னில் சரி நிகர் அவள். ஆனால் அம்மா அப்படி அல்ல!

இங்கே உசத்தி எனும் வார்த்தையும் அம்மாவின் அன்புக்கு மாக்ஸ் போடுவதும் அதுவும்  75, 50 என சொல்லியும் தாய் பாசத்தை ஒப்பிடுதலை தான் நான் தப்பு என்கின்றேன்.

ஒரு பிள்ளையை கருவில் சுமக்கும் போது படும் பாடு, அவனை பெற்றெடுக்கும் நொடியில் அடையும் வலிகள், அதன் பின் தன் உதிரத்தை பாலாக்கி ஊட்டி பார்த்து பார்த்து நல்ல பழக்க வழக்கங்கள் சொல்லி வளர்த்தெடுக்கும்  பக்குவம் வெறும் களிமண்ணை பதப்படுத்தி அழகாய் உருவாக்கி வர்ணம் நீட்டி வரவேற்பறையில் வைப்பதற்கு சமம். அதை அப்படியே அலுங்காமல்  கொண்டுபோய் தன் அறையில் வைத்து தனக்கென உரிமை கொண்டாடும் மனைவி எனும்  சொந்தத்தோடு ஒப்பிட முடியாத... எதனுடனும் ஒப்பிட முடியாத பந்தம் அது.

இன்னும் திட்டணுமா குமார்...


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by நண்பன் Sun 10 Jan 2016 - 16:59

நிஷா அக்கா எவ்வளவு அழகா அனுபவமா அருமையாக சொல்லியுள்ளீர்கள் ம்ம் சூப்பர்  சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by சே.குமார் Mon 11 Jan 2016 - 5:38

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by சே.குமார் Mon 11 Jan 2016 - 6:16

நிஷா அக்காவுக்கு....

வணக்கம்.

நீண்ட கருத்துக்களை பதிவாக்கிய தங்களுக்கு நன்றி.

தங்கள் பார்வையில் எழுதிய கருத்துக்கள் மிகவும் சிறப்பானவை... ஏற்றுக் கொள்கிறேன்.

//பாசத்தில் மனைவியின் பாசத்தைவிட அம்மாவின் பாசம் கொஞ்சம் உசத்தியாய் இருக்கலாம். அம்மாவுக்கு குழந்தைகளின் மீது கூடுதல் பாசம் வருவது இயற்கை.... ஆனால் எங்கிருந்தோ நம்மை நம்பி வந்து நமக்காகவே வாழும் ஜீவன் என்று பார்த்தால் அம்மாவைவிட மனைவியின் பாசமே உசத்தி என்றேன்.  அம்மா நம்மை பெத்தெடுப்பவள் என்றால் வரும் மனைவியோ நம்மை தத்தெடுப்பவள்.. எனவே தி.மு அம்மா என்றால் தி.பி மனைவி, மனைவி வந்த பின்தான் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து வாழப்பழகுகிறான் என்றேன். தி.மு, தி.பி என்று சொன்னதை கேட்டுச் சிரித்தான்... ஆனால் ஏற்றுக் கொண்டானா என்று தெரியவில்லை.//


இதில் மனைவியின் பாசமே உசத்தி என்பதில் எனக்கு தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அம்மாவின் பாசம் அளவிடமுடியாதது.... அப்படித்தான் மனைவியும... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்ன்னு பாட்டே இருக்கு. அந்த மனைவி அம்மாபோல் அமைந்து விட்டால் வாழ்வின் வரம்.


ஒரு பெண் மனைவியாகும் போது கணவனுக்கும் அம்மா ஆகும்போது பிள்ளைகளுக்கும் பாசத்தை அதிகம் காட்டுகிறாள்.  மனைவி... அம்மா... மாமியார் என்று வரும்போது முதல் இரண்டிலும் இருக்கும் பாசம் மூன்றாவதில் இருப்பதில்லை... இதுதான் 80 சதவிகித உலக நடப்பு. ஏன் என் பிள்ளை... என் கணவன்... என்று இருக்கும் மனசுக்கு என் மருமகள் என்று நினைக்கத் தோன்றுவதில்லை...?


சரி விடுங்க...


//தாயா... தாரமா... என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்தாமல் அம்மாவும் மனைவியும் நமது வாழ்வின் ஒளியேற்றும் ஜீவன்கள்... நமக்காகவே வாழ்க்கையை தொலைத்து வாழும் ஜீவன்கள்... உள்ளமும் உடலும் நம்மோடு எப்பவும் இணைந்தே இருக்கும் உயிர்கள் என்பதை மனதில் கொள்வோம். தாயும் தாரமுமே நம்மின் வாழ்க்கையை நலமாகவும் வளமாகவும் நகர்த்தக் கூடிய காரணிகள்... இவர்கள் சரியில்லை என்றால் நம் வாழ்க்கை தறிகெட்டு பயணித்து விபத்தில்தான் முடியும்.//


இதுதான் கட்டுரையின் சாராம்சமே... அம்மாவும் மனைவியும் ஒருவனுக்கு நாணயத்தின் இருபக்கம் போன்றவர்கள். இருவரும் சரிசமமாக அமையும் போது வாழ்க்கை சிறக்கும். என்னைப் பொறுத்தவரை 50-50 அமைந்தால் சுகமே.


தாய்ப்பாசம் என்பது வேஷமில்லாதது... கலப்படமில்லாத பசுவின் பால்... என்பதையெல்லாம் நானும் அறிந்தவன்தான்... இந்தக் கட்டுரை பொதுவான எழுத்துத்தான்... வாழ்ந்து பார்த்த எழுத்து அல்ல... என் அம்மா எங்களுக்காகவே கஷ்டப்பட்டவர்... எங்களைப் படிக்க வைக்க கஷ்டப்பட்டவர்... எங்கள் ஏழு பேரில் நான் மட்டுமே எங்க அம்மாவுடன் அதிகமான வருடங்கள் இருந்தவன். காரணம் சகோதரர்கள் வேலைக்காக வெளியூரில்... அக்காக்கள் திருமணம் முடிந்து சென்றாச்சு.. நான் மட்டுமே கல்லூரியில் பணி செய்து கொண்டு கணிப்பொறி நிறுவனம் நடத்தினேன். அதனால் அம்மாவுடந்தான்... அப்பாவும் வேலையின் நிமித்தம் வெளியூரில்...


எங்கள் திருமணத்துக்குப் பிறகு நானும் வெளியேறியதால் இப்போ வருடம் ஒருமுறைதான் அம்மாவைப் பார்க்கும் நிலை... நாங்கள் நால்வருமே எங்களுடன் வந்து தங்குங்கள் என்று சொல்லியும் கிராமத்தை விட்டு வர மறுக்கிறார்கள். இவ்வளவுக்கும் அண்ணன் வீடு அதே கிராமத்தில் சற்று தள்ளித்தான் இருக்கிறது. அங்கு போய்க்கூட தங்குவதில்லை. அவர்களுக்கு அந்த வீடும் அந்த ஊரும் பிடித்துவிட்டது. சரி இந்தக் கதை இப்ப எதுக்கு...?


அம்மாக்களுக்கு எப்பவுமே இளைய மக்கள் மீது பாசம் அதிகம்..? இதை இல்லையென்று எல்லாம் வாதிட முடியாது. நான் பார்த்தவரை அம்மாக்கள் எல்லாருமே பத்தரை மாற்றுத் தங்கம் கிடையாது. 


இதைத்தான் சொல்லியிருக்கிறேன்...


தங்களின் கருத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி.


இன்னும் திட்டணுமா குமார்...?


ஹா...ஹா... இது பதிவு...நீங்க என்ன வேண்டுமானாலும் திட்டலாம். எழுதலாம்... ஆமா இதில் திட்ட என்ன இருக்கு... உங்களின் நீண்ட கருத்துக்களை எல்லாரும் அறியத் தருவதில் சந்தோஷமே...


ஊரில் ஒரு பழமொழி சொல்லுவானுங்க.. திட்டத் திட்ட திண்டுக்கல்லு... வைய வைய வைரக்கல்லுன்னு... திட்டுங்க திட்டுங்க.... அப்பத்தான் நான் இன்னும் நல்ல எழுத்தாளனாய் ஆக முடியும்... ஹி...ஹி....


வருட ஆரம்பத்திலேயே உங்களிடம் சொன்னேன்... வித்தியாசமாய் எழுதணும் அக்கான்னு நியாபகம் இருக்கா அக்கா... பாருங்க ஆரம்பிச்சிட்டோம்... விவாதம் நல்லாத்தானே இருக்கு.


வாரம் ஒரு பதிவு... இதுபோல்தான் எழுதுறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். நான் நெகட்டிவ்வாத்தான் எழுதுவேன். அப்பத்தான் நிறைய கருத்துக்களை தெரிந்து கொள்ள முடியும்...


இது எப்பூடி?
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by Nisha Mon 11 Jan 2016 - 10:31

ஒரு பெண் மனைவியாகும் போது கணவனுக்கும் அம்மா ஆகும்போது பிள்ளைகளுக்கும் பாசத்தை அதிகம் காட்டுகிறாள்.  மனைவி... அம்மா... மாமியார் என்று வரும்போது முதல் இரண்டிலும் இருக்கும் பாசம் மூன்றாவதில் இருப்பதில்லை... இதுதான் 80 சதவிகித உலக நடப்பு. ஏன் என் பிள்ளை... என் கணவன்... என்று இருக்கும் மனசுக்கு என் மருமகள் என்று நினைக்கத் தோன்றுவதில்லை...?

இதில் அம்மா மனைவி எனும் கருத்தை விட பெண்களுக்கு எதிரி யார் என கருத்துரையாடலிட்டிருந்தால் நானே பெண்ணுக்கு பெண் எதிரி  மாமியார் என மருமகளும் மருமகள் என மாமியாரும், நாத்தனாரும் தான் என சொல்லி இருப்பேனே! 
உங்களுக்கே தெரியிது உங்க வாதம் பிரதிவாதம்லாம் நெகடிவ் என! அப்பூறம் நான் என்னத்தை சொல்றதாம்? 

ஆல்ப்ஸ் தென்றலில்  கொஞ்ச நாள் பதிவு வருமான்னு தெரியல்ல. எழுதும் மூட் இல்லை. பார்க்கலாம் குமார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by நண்பன் Mon 11 Jan 2016 - 21:12

குமார் அண்ணா சூப்பரு சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசு பேசுகிறது : தாயும் தாரமும் Empty Re: மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum