Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
-
தாயார் தன்னுடைய நீண்ட, அழகிய இரு திருவிழிகளால்
பெருமாளைப் பார்க்கும்போது அவளுடைய கண்களில்
காணப்படும் கருமை நிறமானது, பகவானின் திருமேனியைக்
கருமை நிறம் உடையதாகச் செய்துவிடுகிறது. அதேபோல்,
பெருமாள் தன்னுடைய செவ்வரி ஓடிய திருக்கண்களால்
தாயாரைப் பார்க்கும்போது, தாயாரின் திருமேனி செம்மை
நிறம் கொண்டதாக மாறிவிடுகிறது.
–
தாயாரின் கண்கள் ஏன் கறுப்பாகவும், பெருமாளின் கண்கள்
ஏன் சிவந்தும் இருக்க வேண்டும் என்று நமக்குக் கேட்கத்
தோன்றினால், அதற்கும் ஓர் அழகிய விளக்கத்தைச் சொல்லலாம்.
–
அதாவது, பெருமாளின் கரிய திருமேனியைத் தாயார் பார்த்துக்
கொண்டே இருந்தபடியால், அந்தக் கரிய நிறம் தாயாரின்
கண்களில் படிந்துவிட்டது;
பெருமாள் தன் செவ்வரியோடிய கண்களால் தாயாரின் அழகிய
திருமேனியைப் பார்த்துக் கொண்டே இருந்தபடியால், அவருடைய
கண்களின் செம்மை நிறம் தாயாரின் திருமேனியில் செந்நிறமாகப்
படிந்துவிட்டது.
–
அப்படி கேட்டால் அப்படி சொல்லுவது, இப்படி கேட்டால் இப்படி
சொல்லுவது. ஆக, இருவருமே ஒருவரை ஒருவர் அந்த அளவுக்கு
அந்நியோன்னியமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்
என்றுதான் அர்த்தம்.
–
அவர்கள் இருவரும் அப்படி ஏன் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொள்ள வேண்டும்? இருவரும் சேர்ந்து நம்மைப் பார்க்கக்கூடாதா
என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.
தாயார் பெருமாளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது
கடைக்கண் பார்வையால் நம்மையும் பார்த்து கடாக்ஷிப்பாள்.
ஆனால், பெருமாள் தாயாரை மட்டுமே, அவளுடைய அழகிய பார்வை
தன்னை விட்டு அகலாமல் இருக்கிறதா என்று மட்டுமே பார்த்துக்
கொண்டிருப்பாராம். அதுவும் ஒருவகையில் நமக்கு நல்லதுதான்.
மஹாலக்ஷ்மியைப் பார்ப்பதை விட்டு, அவர் நம்மைப் பார்த்தால்,
நாம் செய்கின்ற தவறுகள் எல்லாம்தான் அவருடைய கண்களுக்குத்
தெரியும். அப்படி அவர் நம்மைப் பார்த்து நம்முடைய குற்றங்களைக்
கருத்தில் கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவே மஹாலக்ஷ்மி
தாயார், அவருடைய பார்வை தன்னிடம் இருந்து விலகிவிடாமல்
பார்த்துக்கொள்கிறாளாம்!
–
பெருமாளின் கடாக்ஷம் நமக்குத் தேவை இல்லையா என்று கேட்டால்,
அவசியம் தேவைதான். ஆனால், எப்போது தெரியுமோ?
பிராட்டியாரின் கடாக்ஷமானது நமக்கு ஏற்பட்டு, அதன் பயனாக
நம்முடைய குற்றங்கள் எல்லாம் நீங்கிய நிலையில் அவளே பெருமாளின்
கடாக்ஷத்தைப் பெற்றுத் தந்து, நம்மை மேன்மையடையச் செய்வாள்.
–
அப்போது பெருமாள் நாம் செய்திருக்கும் பாவங்களையே கணக்குப்
போட்டுக் கொண்டிருந்தால், ‘நான் என்னுடைய கடாக்ஷத்தினால்
அவனுடைய பாவங்கள் எல்லாவற்றையும் இல்லாமல் செய்துவிட்டேன்.
அப்படியே கொஞ்சம் பாவங்கள் இருந்தால்தான் என்ன? என்னுடைய
கடாக்ஷம் அவன்மேல் பட்டுவிட்டபடியால் தாங்கள் அவனை
ரக்ஷிக்கலாமே’ என்று நமக்காகப் பரிந்து பேசுவாள்.
–
மஹாலக்ஷ்மி பிராட்டியாரால் மட்டுமே நம்முடைய பாவங்களை
எல்லாம் இல்லாமல் தீர்க்கமுடியும்.
‘மாரி மாறாத தண் அம்மலைவேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம்பொழில் சூழ் குருகூர்நகர்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினைதீர்க்குமே’
–
என்று பாடி இருக்கிறார் நம்மாழ்வார்.
=
-=============================
தொகுப்பு: க.புவனேஸ்வரி
–நன்றி அவள் விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்..
» குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம்…
» சர்வபள்ளி இராதா கிருஷ்ணன்
» உலக குத்துச்சண்டை: அரையிறுதியில் விகாஸ் கிருஷ்ணன்
» ரம்யா கிருஷ்ணன் தயாரிப்பில் நடிக்கவில்லை: திரிஷா
» குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம்…
» சர்வபள்ளி இராதா கிருஷ்ணன்
» உலக குத்துச்சண்டை: அரையிறுதியில் விகாஸ் கிருஷ்ணன்
» ரம்யா கிருஷ்ணன் தயாரிப்பில் நடிக்கவில்லை: திரிஷா
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum