சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

» மன நிம்மதியுடன் வாழ்...
by rammalar Sat 12 Sep 2020 - 16:23

ஜி.டி.நாயுடு – அரிய முத்துக்கள் -10 Khan11

ஜி.டி.நாயுடு – அரிய முத்துக்கள் -10

Go down

Sticky ஜி.டி.நாயுடு – அரிய முத்துக்கள் -10

Post by rammalar on Wed 23 Mar 2016 - 16:09

ஜி.டி.நாயுடு – அரிய முத்துக்கள் -10 Gt_2785719f
-
அறிவியல் மேதை, கண்டுபிடிப்பாளர்
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட
சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டு
பிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (G.D.Naidu)
பிறந்த தினம் இன்று (மார்ச் 23).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில்
(1893) பிறந்தார். பயின்றது தொடக்கக் கல்வி மட்டுமே.
ஏராளமான நூல்களை வாங்கிப் படித்து அறிவை
வளர்த்துக்கொண்டார். வியாபாரத் திறனும் பெற்றிருந்தார்.

# ஒருமுறை காலி மருந்துப் புட்டி ஒன்றைப் பார்த்தார்.
அது அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணி
என்பதை தெரிந்துகொண்டார். அதை அமெரிக்காவில்
இருந்து வரவழைத்து, இங்கு அமோகமாக விற்றார்.
அந்த ஆண்டில் மட்டும் ரூ.800 லாபம் சம்பாதித்தார்.
அப்போது அவருக்கு வயது 18.

ஹோட்டலில் சர்வராக வேலைபார்த்து, பணம் சேமித்தார்.
அதில், ஒரு ஆங்கிலேய அதிகாரியின் பைக்கை வாங்கி,
அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தார். அதை மீண்டும்
பொருத்தி பக்கவாட்டில் இன்னொருவர் அமர சைட்பாக்ஸ்
ஒன்றையும் வடிவமைத்து இணைத்தார்.

# # திருப்பூரில் பருத்தி ஆலை தொடங்கினார்.
பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். தொழிலை விரிவு
படுத்த பம்பாய் சென்றவருக்கு எதிர்பாராதவிதமாக நஷ்டம்
ஏற்பட்டது. வெறுங்கையுடன் வீடு திரும்பினார்.
ஆனாலும், தோல்வியால் துவளவில்லை. போக்குவரத்து
தொழில் செய்த ஸ்டேன்ஸ் என்பவரிடம் ஒரு பேருந்தை
கடனாகப் பெற்று பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ்
நடத்தினார்.

# ‘யுனைடெட் மோட்டார் சர்வீஸ்’ நிறுவனத்தை
தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும்
கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக்
கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, வெட்டுக்
காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு
என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார்.

# ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி,
பிளேடுக்கு முதல் மற்றும் 3-வது பரிசுகள் கிடைத்தன.
இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும்
மறுத்தார். இந்தியாவிலேயே தயாரிக்க அரசிடம் நிதி
கோரினார். காழ்ப்புணர்ச்சி கொண்ட பிரிட்டிஷ் அரசு மறுத்தது.
மனம் உடைந்த இவர் ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு
இலவசமாகவே அந்த உரிமையை கொடுத்துவிட்டார்.

# தனது கண்டுபிடிப்புகள் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும்
என்பதாலேயே, அவற்றை பதிவு செய்யாமல் வைத்திருந்தார்.
இவர் மேல் திணிக்கப்பட்ட அதிகபட்ச வரி காரணமாக, இவரது
பல கண்டுபிடிப்புகள் நாட்டுக்குப் பயன்படாமல் போய்விட்டன.

# விவசாயத் துறையிலும் பல சாதனைகள் புரிந்தார்.
இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க
வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’
என பெயரிட்டு ஜெர்மன் கவுரவித்தது.

# பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், பல தொழிற்
சாலைகளைத் தொடங்கினார். தமிழக தொழிற்கல்வி
நிறுவனங்களின் தந்தை எனப் போற்றப்பட்டார். நீரிழிவு,
ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்து தயாரித்தார்.

# சாதாரண கிராமத்தில் பிறந்து தனது திறமையால்
பல அரிய சாதனைகளைப் படைத்த ஜி.டி.நாயுடு 81-வது
வயதில் (1974) மறைந்தார். கோவை அவிநாசி சாலையில்
இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி,
அருங்காட்சியகம் அவரது அறிவாற்றலை இன்றும் பறை
சாற்றுகிறது.

————————————
நன்றி- தமிழ் தி இந்து காம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15985
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum