இந்திய தேசத்தின் 70-ஆவது சுதந்திர தினம் இன்று.
69 ஆண்டுகளுக்கு முன்னால், முதல் சுதந்திர தினத்தை –
15.08.1947-அன்று கொண்டாடியதும், குதூகலித்து
மகிழ்ந்ததும் உலக வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வுகள்.

-
ஆங்கிலேயர் இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு வெளியேற
முடிவு செய்தபோது. 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாளை ஆட்சி
மாற்றத்துக்குத் தேர்வு செய்தனர். அது இரண்டாம் உலகப்
போரில் ஜப்பான் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த இரண்டாவது
ஆண்டு தினம்.

-
“போரில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி தருவதை விட,
போரில்லாமல் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது எங்களுக்கு
அதிக மகிழ்ச்சி தரும் நாளாகக் கருதுகிறோம். ஆகவே தான்
ஆகஸ்ட் 15-ஆம் நாளை நாங்கள் தேர்வு செய்கிறோம்’ என்றார்கள்.
அவர்களின் உணர்வை மதித்து, ஆகஸ்ட் 15 நம் தேசத் தலைவர்கள்
ஏற்றுக் கொண்டார்கள்.

-
ஆகஸ்ட் 14 முன் இரவு முதல், விழாவுக்கான முன்னேற்பாடுகளும்,
சம்பிரதாயச் சடங்குகளும் தொடங்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்திய
அரசாங்கத்தின் சட்ட ஆலோசனை மன்றத்தில்தான் (அதுதான்
இந்திய அரசியல் நிர்ணய சபையின் கூட்ட அரங்கமாக பின்னால்
மாறியது) விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

————————-