சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Khan11

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

Go down

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Empty என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

Post by rammalar Wed 21 Dec 2016 - 6:02

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Ur0cNGcTeGPowGYmMe4A+tamilnadu_weatherman
-

கடந்த ஆண்டு சென்னையின் வரலாறு காணாத பெருவெள்ளத்தை முன்னரே கணித்துச் சொன்னதில் தமிழ்நாடு வானிலை மையத்தை அடுத்து அதிக பிரபலமாகி விட்டவர் இவர் தான்.
-

இவரது பெயர் பிரதிப் ஜான். ஆனால் இணையவாசிகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இவர் எப்போதும் ‘தமிழ்நாடு வெதர் மேன்.’ தமிழக வானிலையைப் பொருத்தவரை குறிப்பாக சென்னை வானிலையைப் பொருத்தவரை இவரது கணிப்புகள் பெரும்பாலும் தவறியதே இல்லை.
-

மழை நாட்களில் சென்னைவாசிகள் தினமும் காலை எழுந்ததும் பல் துலக்குகிறார்களோ இல்லையோ, காஃபி, டீ அருந்துகிறார்களோ இல்லையோ சுடச் சுட தமிழ்நாடு வெதர் மேன் வானிலை குறித்து என்ன கணித்துச் சொல்லி இருக்கிறார் என்பதைப் பார்ப்பது தான் முதல் வேலையாக இருக்கும். அந்த அளவுக்கு இவர் மீதும், இவரது கணிப்பின் மீதும் மக்களுக்கு அபார நம்பிக்கை.
-

எப்படி வந்தது இந்த ஆர்வம்?



பிரதிப் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தன் வீட்டில் ஒரு முருங்கை மரம் வளர்த்திருக்கிறார். அப்போது வந்த ஒரு புயலில் பலமற்ற முருங்கை மரம் வீழ்ந்து போனது. அன்றிரவு உறங்கும் போது வீடே நிசப்தமாக இருந்த நேரத்தில் மீண்டும் புயல் வரப் போவதற்கான அறிகுறியாக ஊழிக் காற்றின் சத்தம், ஆந்தையின் கூவலைப் போல திகிலூட்டுவதாக கேட்கத் தொடங்கியது.

-
அச்சமாக இருந்தாலும் சற்றே பயம் கலந்த ஆர்வத்துடன் எழுந்து வானத்தை நோக்கும் போது மேகங்களின் இடம் மாறுதல், தொடர்ந்து வானில் நிகழும் மாற்றங்கள் அனைத்துமே ஏதோ ஒரு ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கவே அன்றிலிருந்தே பிரதிப் தொடர்ச்சியாக வானிலையைக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்.
-


பள்ளி முடித்து கல்லூரிக்குச் செல்லும் போது புவியியல் படிக்கத் தான் ஆசைப்பட்டாராம். ஆனால் அப்போதிருந்த சூழலில் குடும்பத்தினர் கணிப்பொறியியல் படித்தால் தான் எதிர்காலம் நன்றாக இருக்கும் எனக் கூறியதால் பிரதிப் கணிப்பொறியியல் எடுத்துப் படித்தார்.


வானிலை எப்படிக் கணிக்கப் படுகிறது?

-
வெதர் பிளாக்கர்கள் என்பவர்கள் மழையின் மீது ஆசை கொண்டவர்கள், எப்போதடா மழை வரும்? மழையின் அந்த முதல் துளி பூமியை எப்போதடா வந்தடையும்? என்றூ காத்திருக்கும் மனோபாவம் இருக்கும் அவர்களுக்கு. அதனால் மேகங்களின் தொடர்ச்சியான இடமாற்றம், காற்று வீசும் முறையில் ஏற்படும் மாறுபாடுகள், காற்றின் ஈரப்பதம் எல்லாவற்றையும் அவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.




rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Empty Re: என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

Post by rammalar Wed 21 Dec 2016 - 6:02

இந்தக் குறிப்புகளை வைத்துக் கொண்டு வானிலையைக்  
கணிக்கவென்றே இருக்கும் நியுமெரிக்கல் மாடல்களை
உபயோகித்து வானிலை கணிக்கப் படுகிறதாம்.
-
தமிழ்நாட்டு வானிலையைச் சொல்வதற்கு வானிலை 
ஆய்வு மையம் என்ற ஒரு அமைப்பு இருக்கும் போது 
இவரது தனிப்பட்ட ஆர்வத்திலான கணிப்புக்கு இது 
வரை தடை வந்ததில்லையா?

-
அப்படி எல்லாம் தடை வந்ததில்லையாம். இது இயற்கையின் மீதான ஒரு கணிப்பு. இதை இந்த விசயத்தில் ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் கணிக்கலாம். வானிலையைக் கணிக்க எல்லோரும்  ஏதாவது ஒரு நியூமெரிக்கல் மாடலைத் தான் பின்பற்றுகிறார்கள். மாடல்கள் வேண்டுமானால் மாறலாம்.

ஆனால் அவை கணித்துத் தரும் வானிலைத் தகவல்கள் பொதுவாக ஒரே மாதிரியானவையே. நமது மக்களைப் பற்றி நமக்குத் தெரியும். மழைக்காலத்தில் திறந்த வெளியில் திருமண நிகழ்ச்சி வைத்திருப்பார்கள், சிலர் ஊருக்குச் செல்ல டிக்கெட் புக் செய்து வைத்திருப்பார்கள். அம்மாதிரியான சமயங்களில் வானிலை மையத்தின் அறிக்கையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க முடியாது இல்லையா?

இரவு 1 மணிக்கு, அதிகாலையில் எல்லாம் டி.வி யில் தோன்றி வானிலை கணிப்புகளைச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதும் யதார்த்தம். எனவே இவரைப் போன்ற தனியார் வெதர் பிளாகர்கள் தன்னார்வத்தில் செய்யும் இந்தச் சேவைக்கு இது வரை யாரும் தடை சொன்னதில்லையாம்.

தமிழகத்தில் வர்தா புயலுக்குப் பின் அடுத்து மருதா புயல் வரும் 
சூழல் இருக்கிறதாம்…

இப்போதைக்கு இல்லை. இன்னும் 10 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழைக்கோ, புயலுக்கோ வாய்ப்புகளே இல்லை. இப்போது தான் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருக்கிறது. அது இனி புயலாக உருவானால் மருதா என்று பெயர் வைக்கப் படலாம். டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி ஆரம்பத்திலோ தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்க வாய்ப்பிருக்கிறது.

கடந்த ஆண்டு சென்னையே வெள்ளத்தில் மிதந்த பின் 
பிரபலமடைந்தவர்களில் பிரதிப் முக்கியமானவர் அதைப் 
பற்றிய அவரது கருத்து…


ஒவ்வொருவருக்கும் ஒரு ஹாபி இருக்கும். அப்படி பிரதிப்புக்கு வானிலையை முன் கூட்டி கணித்துச் சொல்வது ஒரு ஹாபி. அவருக்கு இது முழு நேர வேலையில்லை. ஒரு பன்னாட்டு நிறூவனத்தில் மென்பொறியாளராகப் பணிபுரியும் பிரதிப் தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாகவே இதையெல்லாம் செய்து வருகிறார். 

இதனால் பொருளாதார ரீதியாக இவருக்கு எந்தப் பலனும் இல்லை.
தனக்குப் பிடித்ததைச் செய்யும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தி தான் தொடர்ந்து அவரை இந்த விசயத்தில் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதால் மக்களிடையே பிரதிப்புக்கு நல்ல வரவேற்பு உண்டு. 

அலுவலகத்திலிருந்து எப்போது வீடு திரும்பினாலும், தனக்கு எத்தனை அலுப்பிருந்தாலும் பிரதிப் மழைக்காலங்களில் வானிலையை கணித்துச் சொல்லாமல் இருந்ததே இல்லை. எனவே மக்கள் இவரது வானிலை கணிப்பை மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.
-
By கார்த்திகா வாசுதேவன்
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
» தமிழர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது உண்மையாகிறது
» தமிழகத்தை 2 புயல்கள் தாக்கும் என்ற செய்தி உண்மையல்ல: தமிழ்நாடு வெதர்மேன்
» யூ.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள்… என்ன சொல்கிறார் முதலிடம் பெற்ற நந்தினி?
» எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum