சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை Khan11

பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை

Go down

பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை Empty பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை

Post by rammalar Sun 15 Jan 2017 - 18:46

புதுடெல்லி: 
கடந்த ஆண்டு நவம்பரில் வாபஸ் பெறப்பட்ட உயர் மதிப்பிலான
₹500, ₹1,000 நோட்டு 95 சதவீதத்துக்கு மேல் வங்கிகளில் 
டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. டெபாசிட் மலையளவுக்கு 
அதிகரித்துள்ள நிலையில், வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டு 
விட்டன. 

இது கடன் வாங்குவோருக்கு ஒரு வகையில் சாதகம்தான் என்றாலும், 
எதிர்பார்த்த அளவுக்கு பலன் தரவில்லை. பண மதிப்பு வாபசுக்கு 
பிறகு மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்து விட்டது. 

ஆட்டோமொபைல் துறைக்கு இதனால் பேரிடி. 16 ஆண்டுகளில் 
இல்லாத அளவுக்கு வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.
வீடு விற்பனையும் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 

இதுபோல் கடன் வழங்குவதும் குறைந்து விட்டது. 
உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வழங்கப்படும் கடன் கடந்த 
நவம்பரில் 6.7 % சரிந்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்களும், 
வங்கியாளர்கள் சிலரும் கூறியதாவது:

பணம் டெபாசிட் வங்கிகளில் குவிந்து விட்டது. ஆனாலும், நாட்டின் 
பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாததால், ஏற்கெனவே திணறும் 
தொழில்துறைகள் தற்போது முதலீடு செய்ய தயங்குகின்றன. 
இதனால் பணத்தேவை இருந்தும் கடன் வாங்க அவை முன்வரவில்லை. 

தொழில்துறை முன்னேற்றத்துக்கு கடன் வழங்க மத்திய அரசு 
வலியுறுத்தினாலும், நடைமுறையில் இது சாத்தியமின்றி உள்ளது. 
தற்போது வங்கியில் உள்ள டெபாசிட்டை கடன் விநியோகம் போன்ற 
நடவடிக்கைகள் மூலம் லாபமாக மாற்ற வங்கிகளுக்கு 9 முதல் 
12 மாதங்கள் வரை ஏற்படும். டெபாசிட் அதிகரிப்பு நீண்ட கால 
அடிப்படையில் பலன் தரலாம். 

ஆனால், வரும் மார்ச் மாதத்தில் மூலதன தேவையை பூர்த்தி செய்ய 
மத்திய அரசு உதவினால்தான் உண்டு.

ரிசர்வ் வங்கி புள்ளிவிவரப்படி, உற்பத்தி மற்றும் சேவை துறைக்கு 
கடன் வழங்குதல் கடந்த 6 ஆண்டுகளில் 60 சதவீதம் சரிந்து 
₹1.9 லட்சம் கோடியாக உள்ளது. இந்த இரண்டு துறைகளில்,
65 சதவீத பங்களிப்பை கொண்ட உற்பத்தி துறையில் கடன் தேவை 
கடந்த 2011 மார்ச் 31ம் தேதிப்படி 3.1 லட்சம் கோடியாக இருந்தது. 

இது தற்போது 77 சதவீதம் சரிந்து வெறும் ₹72,454 கோடியாகி 
விட்டது. குறிப்பாக, பெரிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிற்
சாலைகள் கடன் வாங்குவது 69% குறைந்து விட்டது. சேவை 
துறைகளுக்கு கடன் வழங்குதல் 46% சரிந்து 2015 மார்ச்சில்
₹87,689 கோடியானது. 

இது கடந்த ஆணடு மார்ச்சில் சிறிதளவே உயர்ந்து 1.1 லட்சம் 
கோடியானது. போக்குவரத்து துறை மற்றும் வங்கி சாரா நிதி 
நிறுவனங்களின் கடன் தேவை 56 சதவீதம் குறைந்துள்ளது. 

பொருளாதார மந்த நிலையால் வராக்கடன் அதிகரித்துள்ளது 
கடன் தேவை குறைவதற்கு முக்கிய காரணமாகிவிட்டது என தொழில்
துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ரூபாய் நோட்டு வாபஸ் 
ஆனதால் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் 35% வேலையிழப்பு, 
முதலீடு செய்ய தயங்கும் நிலையை உருவாக்கி விட்டதாக அவர்கள் 
கூறுகின்றனர்.
-
-------------------------------------------
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum