Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது
Page 1 of 1

மும்பை,
மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த 72 மணி நேரத்திற்கு பலத்த மழை இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவில் இருந்தே மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மும்பையின் அனைத்து பகுதியிலும் இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் நகரில் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. மருத்துவமனைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பொதுமக்கள் பாதிப்பு
தாழ்வான பகுதிகளில் இடுப்பளவிற்கு மேல் மழைநீர் தேங்கியதால் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கியது. வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி நடுவழியில் நின்றன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் சுவர் இடிந்து விழுந்தது.
பலத்த மழையால் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மும்பையின் அனைத்து பகுதியிலும் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வந்த 40 விமானங்கள் ஆமதாபாத், புனே, நாக்பூர் போன்ற பல இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
அனைத்து வசதியும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. அன்றாட தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மீட்பு பணி தீவிரம்
பள்ளி, அலுவலகங்களுக்கு மதியத்திற்கு பிறகு விடுமுறை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வெளியே சென்றவர்களால் வீடு திரும்ப முடியவில்லை. பலர் வெள்ளநீரில் செய்வதறியாது தத்தளித்தனர்.
பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை 220 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்ததாக மாநகராட்சி தெரிவித்தது.
மாநகராட்சியினர் வெள்ளம் தேங்கிய இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பல இடங்களில் நீர் உறிஞ்சு பம்புகள் மூலம் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது.
உதவி மையம்
வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவி செய்ய மும்பை மாநகராட்சி 24 மணி நேர சேவை மையத்தை தொடங்கி உள்ளது. பொதுமக்கள் 196 என்ற எண்ணிற்கு இலவசமாக தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு பிரிவினர், தீயணைப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கோவில்கள், பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி கேட்டறிந்தார்
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள நிலவரத்தை கேட்டறிந்தார். அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என அவர் உறுதி அளித்தார். இதேபோல் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும், பட்னாவிசிடம் நிலைமையை கேட்டறிந்தார்.
மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மும்பையில் கடந்த 2005-ம் ஆண்டில் 3 நாட்கள் கொட்டி தீர்த்த மழையினால் வெள்ளம் ஏற்பட்டு, பல உயிரிழப்புகளும் நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.க.வரலாறு காணாத வெற்றியை பெறும்
» வரலாறு காணாத விலை உயர்வு
» இலங்கை நாணயப் பெறுமதி இன்று வரலாறு காணாத வீழ்ச்சி
» வெற்றிலை வரலாறு காணாத விலை ஏற்றம்
» ரஷ்யாவில் வரலாறு காணாத பேரணி; ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum