Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Today at 6:33
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
Page 1 of 1

சென்னை,
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு,
அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என இரண்டாக
உடைந்த அ.தி.மு.க., கடந்த மாதம் 21-ந் தேதி ஒன்றாக இணைந்தது.
இதனையடுத்து பழனிசாமி அணி, டிடிவி தினகரன் அணியாக செயல்பட்டு
வருகிறது.
டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி
கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி
பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.
எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான
அரசுக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
வலியுறுத்த தொடங்கின.
ஆனால், கவர்னர் வித்யாசாகர் ராவ், “இது அவர்களின் உள்கட்சி விவகாரம்.
மனு அளித்த 21 பேரும் அ.தி.மு.க.விலே தான் இருக்கின்றனர். இந்த விஷயத்தில்
பந்து என்னிடம் இல்லை” என்று தெரிவித்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே டிடிவி தினகரன் அணியில் இருந்து கம்பம்
எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தார்.
திமுக புகாருக்கு எந்த பதிலையும் கவர்னர் அளிக்காததால், “சட்டமன்றத்தில்
பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி
பழனிசாமிக்கு கட்டளையிடுமாறு தமிழக கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்”
என்று ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு
விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்குடன் டி.டி.வி.தினகரனின் ஆதரவு
எம்.எல்.ஏ. வெற்றிவேலும் இணைந்து கொண்டார். வழக்கு விசாரணையின்
போது அரசு தலைமை வக்கீல்,
“நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கவர்னருக்கு மட்டும் தான்
அதிகாரம் இருக்கிறது. அவர் சென்னையில் இல்லாததால் தற்போது எந்த
உறுதியையும் கொடுக்க முடியாது. கவர்னர் சென்னை திரும்பிய பிறகு தான்
முடிவு செய்ய முடியும்” என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை 20-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி
வைத்தார். மேலும், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்தும்
அவர் உத்தரவிட்டார். இதற்கிடையே, ஆட்சியை கவிழ்ப்பதற்கான வேலையில்
தான் இறங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
அதே நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும், “நீதிமன்றத்தில்
நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்”
என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ்
இன்று சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தகுதி நீக்கம்
இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை
இல்லை என்று கவர்னரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஜெயந்தி பத்மநாபன் ( குடியாத்தம்),
கோதண்டபாணி (திருப்போரூர்), முருகன் (அரூர்), உமா மகேஷ்வரி
(விளாத்தி குளம்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), வெற்றிவேல் (பெரம்பூர்),
சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்), தங்கதுரை (நிலக்கோட்டை), கதிர்காமு
(பெரியகுளம்), ஏழுமலை (பூந்தமல்லி), பார்த்திபன் (சோளிங்கர்),
தங்கதமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி)
செந்தில் பாலாஜி (அரவாக்குறிச்சி), ரெங்கசாமி (தஞ்சாவூர்), சென்னடி
மாரியப்பன் (மானா மதுரை), டாக்டர் முத்தையா (பரமக்குடி) ஆகியோரை
தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்
பெரும்பான்மையை நிரூபிக்க அரசு முயற்சி என தகவல் வெளியாகியது.
எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என டிடிவி தினகரன் அணி
ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்த நிலையில்
அவர்களிடம் சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி,
விளக்கம் அளிக்க வராத நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்திய அரசமைப்புச்சட்டம் 10 வது அட்டவணையின் படி ஏற்படுத்தப்
பட்டுள்ள 1986 ஆம் ஆண்டு சட்டபேரவை விதிகளின் படி (கட்சி மாறுதல்
காரணம் காட்டி தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ் சட்டப்பேரவை
தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்து
ஆணையிட்டதன் காரணமாக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை
இழந்து விட்டார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
18 தொகுதிகள் காலியாக உள்ளது
இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 சட்டமன்ற
தொகுதிகளும் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல்
ஆணையத்திற்கு பேரவை செயலாளர் பூபதி கடிதம் அனுப்பினார்.
தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து 18 எம்எல்ஏக்கள் பெயரை
நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
-
-------------------------------
தினத்தந்தி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25273
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அரையிறுதி போட்டிக்காக ம.பி.சட்டமன்ற கூட்டம் ஒத்தி வைப்பு
» தமிழகத்தில் 950 வகை நோய்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்- ஜெயலலிதா அறிவிப்பு
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» 25 ஆயிரம் பிஇ இடங்கள் காலியாக இருக்கும்: மன்னர் ஜவகர்
» சட்டமன்ற தேர்தலைப் போல் உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் அமோக ஆதரவு தருவார்கள்; ஜெயலலிதா பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum