சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ் Khan11

இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்

2 posters

Go down

இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ் Empty இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்

Post by Admin Sun 25 Nov 2018 - 13:58

இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ் Untitled-1dfgfh
ஏ.எம்.ஏ.அஸீஸ் முஸ்லிம்களின் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றி கல்விமான்கள்,ஆசிரியர்கள்,அவரது சகாக்கள் என பலர் எழுதியுள்ளனர். இலங்கையில் முஸ்லிம் பெண்களின் கல்வித் துறையில் அவருடைய சிந்தனைகள் பற்றி அறிந்தோர் சிலரேயாவர். முஸ்லிம் பெண்களின் கல்வி விடயத்தில் அவருடைய பணிகள் ஏராளம்.
முஸ்லிம் சமுதாயத்தின் அன்றைய பின்னடைவுக்குப் பிரதான காரணம் கல்வி இன்மையே என அஸீஸ் அன்றே உணர்ந்திருந்தார். உயர்கல்வியைத் தொடருமாறு அவர் இளைஞர்களைத் தூண்டினார்.வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவுவதற்கென புலமைப்பரிசில் ஒன்றை ஆரம்பித்தார். கல்வி மீதுஅன்னார் அக்கறை கொண்டிருந்தார். அரச சிவில் சேவையிலிருந்து 1948 இல் முன்னதாகவே ஒய்வு பெற்று கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றார்.
முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் அவர் கல்வியில் கவனம் செலுத்தினார். ஸாஹிரா கல்லூரியில் நூல்கள் நிரம்பிய நூலகம் ஒன்றை உருவாக்க அவர் முற்பட்டார். எல்லா சமூகத்தையும் சேர்ந்த அர்ப்பணிப்பும் செயல்திறனும் கொண்ட ஆசிரியர்களை நியமித்தார்.
அத்தோடு,ஒருவர் மற்றவருடைய மதத்தையும் கலாசாரத்தையும் புரிந்து கொள்ளும் வகையில் எல்லா மாணவர்களையும் இனமத வேறுபாடின்றி ஸாஹிராவில் சேர ஊக்குவித்தார்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்லிம்களிடையே,விசேடமாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வித் தரத்தை விருத்தி செய்ய எண்ணிய சித்திலெப்பை போன்ற பெருந்தகைகளினால் முஸ்லிம் பெண்களுக்கு கல்வி ஊட்டுவதில் சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கான முதல் பாடசாலை 1891 இல் கண்டியிலும், அதனைத் தொடர்ந்து கம்பளையிலும்,குருநாகலிலும் ஸ்தாபிக்கப்பட்டன. பெற்றோர்களின் அசிரத்தை காரணமாக இப்பாடசாலைகள் செயலற்றுப் போயின.
'எமது சகோதரிகளை இருளில் வைத்திருக்கும் வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும்,சமூகத்துக்கும் கல்வியினால் பெறப்படும் பிரயோசனங்களில் 50 சதவீதத்தை நாம் இழக்கின்றோம்'என முஸ்லிம் மாதர் கல்வியின் ஆர்வமிக்க வைத்திய கலாநிதி எம்.சீ.எம்.கலீல் எடுத்துரைத்தார்.
முஸ்லிம் பெற்றோர் தமது புதல்விகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக,பெண்கள் பாடசாலைகளை நிறுவுமாறு சேர் ராஸிக் பரீத் அரசாங்கத்தைத் தூண்டினார். 1940ஆம் ஆண்டு வரையும் முஸ்லிம் பெண்களுக்கு கல்வி ஊட்டுவதற்கு எதிர்ப்பு நிலவியது.
சேர். ராஸிக் பரீத் அவர்களின் ஊக்கத்தினால், 1946ம் ஆண்டு கொழும்பில் புதியதோர் இடத்தில் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. அதன் அதிபராகஆயிஷா ரவூப் நியமிக்கப்பட்டார். அக்கல்லூரி நிறுவப்பட்டதை அஸீஸ் வரவேற்றார். அவர் ஸாஹிராவில் அறிமுகப்படுத்திய அதேமுறையை அக்கல்லூரியும் கடைப்பிடிக்கும் என அவர் எதிர்பார்த்தார். முஸ்லிம் பெண்களுக்கு கல்வி புகட்டுவதில் அது ஒரு பெரும்படியென அவருக்குத் தென்பட்டது.
பெண்களின் உயர் கல்விக்கும் பல்கலைக்கழக பட்டத்துக்கான உரிமைக்கும் அன்னார் பெரும் ஆதரவாளராக இருந்தார். அஸீஸ்,யாழ்ப்பாண சோனகத் தெருவைச் சேர்ந்த கற்றறிந்த குடும்பத்தவர்.சோனகத் தெருவானது முஸ்லிம் பிரதேசம் என இனங்காணப்பட்டிருந்தாலும் தமிழ் சமூகத்துடன் பெருமளவு உறவும் நட்பும் நிலவியது. அஸீஸ் அவர்கள் வைதீஸ்வரா கல்லூரியிலும் பின்னர் யாழ் இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.அவர் எல்லா சமூகங்களுக்கிடையிலும் நட்புறவையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்தார்.
இக்காலப் பகுதியிலேயே அஸீஸ் பெண்கள் கல்வியைப் பற்றி ஆர்வம் கொள்ள ஆரம்பித்தார்.
பெண்களுக்குரிய உரிமைகள் மீது அஸீஸ் பிடிவாதமாக இருந்தார். பெண்களின் கல்விக்கு இடையூறாக இருந்த மனப்போக்கை அவர் எதிர்த்தார்.
முஸ்லிம் பெண் கல்விக்காக உயரக் குரல் கொடுத்ததோடு,சீதனமுறையையும் கடுமையாகச் சாடினார். உயர் கல்வி,பல்கலைக்கழக பட்டம் உட்பட பெண்களுக்குரியஉரிமைகள் மீது அஸீஸ் பிடிவாதமாக இருந்தார். பெண்களின் கல்விக்கு இடையூறாக இருந்த எதனையும் அவர் அங்கீகரிக்கவில்லை.
கற்ற பெண்ணொருத்தி தம்மை மேம்படுத்திக் கொள்ளும் ஒழுக்கவிழுமியங்களுடன் கூடிய கல்வி கற்ற பிள்ளைகளை வளர்த்தெடுப்பாள் என்ற அசையாத நம்பிக்கையை அஸீஸ் கொண்டிருந்தார். அதுவே எழுச்சிக்கான மிகப் பெரிய தேடலாகும் என்பது அவரது கருத்தாகும். இந்தக் கருத்துகளை தனது உரைகளிலும் எழுத்துகளிலும்,கருத்தரங்குகளிலும்,கலந்துரையாடல்களிலும் வெளிப்படுத்தினார். அவருடைய முயற்சிகள் பெருமளவு வெற்றியளித்தன. இவரது முயற்சியினால் இளம் பெண்கள் பலர் ஆசிரிய பயிற்சி பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
1950 ஆம் ஆண்டு தொடக்கம் அஸீஸ்,சித்திலெப்பை, கலீல்,ராசீக் பரீட் போன்ற சமகருத்துடையவர்கள் இணைந்து பெண்கள் உயர் கல்வியைத் தொடரும் சவாலை ஏற்று உதவி புரிந்தனர்.
பல்கலைக்கழக மற்றும் தொழிற்சார் தகைமைகளை அடைந்துகொள்ள விரும்பிய முஸ்லிம் பெண்கள் தங்களது கல்வியை முன்னெடுத்துச் செல்ல உதவினர்.
முன்னேற்றகரமான வாழ்க்கைத் தரத்தை அடையத்தக்கதாக,அவர்களுடைய குடும்பங்களுக்கு பங்களிப்பை வழங்கக் கூடியவர்களாயினர். தமது பிள்ளைகளுக்கு கல்வித் துறையில் ஆர்வமூட்டும் இயலுமைகளை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
படித்த முஸ்லிம் மாதர், ஏனைய சமூகத்தின் படித்த பெண்களுக்கு இணையாக தன்னம்பிக்கையுடன் நிற்பதற்கு ஆற்றலுடையவர்களாக மாறினர். அவர்கள் பல்வேறு தொழிற்துறைகளில் ஈடுபட்டு பொறுப்பு வாய்ந்த பதவிகளையும் இன்று வகிக்கின்றனர். உயர் கல்வியைத் தொடர்வதற்கும் தொழில் பெற்றுக் கொள்வதற்கும் மற்றைய முஸ்லிம் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளனர். அன்னார் 24.11.1973 இல் காலமானார். அன்னாரின் கல்விப் பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கவை.
 
ஆங்கிலத்தில்:
மரீனா இஸ்மாயில்
தமிழில்:
என்.எம்.எம்.றெஸீன்
Admin
Admin
புதுமுகம்

பதிவுகள்:- : 83
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ் Empty Re: இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்

Post by பானுஷபானா Wed 28 Nov 2018 - 15:34

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum