சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தேவி - 2: சினிமா விமர்சனம் Khan11

தேவி - 2: சினிமா விமர்சனம்

Go down

தேவி - 2: சினிமா விமர்சனம் Empty தேவி - 2: சினிமா விமர்சனம்

Post by rammalar Sun 16 Jun 2019 - 5:03

தேவி - 2: சினிமா விமர்சனம் _107190557_405dd6bd-0ae3-42ae-bf4b-579563c9403e
-திரைப்படம் தேவி - 2
நடிகர்கள் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா, 
நந்திதா ஸ்வேதா, ஆர்.ஜே. பாலாஜி, டிம்பிள் ஹயதி, 
அஜ்மல் அமீர்
-
இசை சாம் சி.எஸ்
இயக்கம் ஏஎல். விஜய்.
-
2016ஆம் ஆண்டில் வெளிவந்து ஓரளவுக்கு வெற்றிபெற்ற தேவி திரைப்படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் மனைவிக்கு பேய் பிடித்துவிட, கணவன் மனைவியை மீட்கப் போராடுவான். இந்தப் படத்தில் கணவனுக்கு பேய் பிடித்துவிட மனைவி போராடுகிறாள்.

மனைவி தேவியைப் (தமன்னா) பிடித்திருந்த ரூபி பேய் போன பிறகு, தேவி, குழந்தையுடன் அமைதியான வாழ்வை நடத்தி வருகிறான் கிருஷ்ணா (பிரபுதேவா). இருந்தபோதும் பேய் திரும்பவருமோ என்ற பயம் வருகிறது. 

அதனால், ஒரு சாமியாரிடம் யோசனை கேட்க, கடலால் சூழப்பட்ட பகுதிக்குள் பேய் வராது, அங்கு போய்விடு என்கிறார் சாமியார். அதனால், மும்பையிலிருந்து மொரீசியஸிற்கு மனைவி தேவியுடன் செல்கிறான் கிருஷ்ணா.

ஆனால், மொரீசியஸில் அலெக்ஸ், ரங்கா ரெட்டி என இரண்டு பேய்கள் கிருஷ்ணாவைப் பிடித்துக்கொள்கின்றன. அந்த இரண்டு பேய்களுடனும் ஒப்பந்தம் செய்து தேவி எப்படி கணவனை மீட்கிறாள் என்பது மீதிக் கதை.

முந்தைய பாகத்தோடு ஒப்பிட்டால் ரொம்பவும் சுமாரான படம்தான். பேயையே கண்ணில்காட்டாமல் திகிலும் நகைச்சுவையும் கலந்த ஒரு பேய்ப்படத்தை வழங்க முயன்றிருக்கிறார் இயக்குனர் விஜய். 

ஆனால், திகிலும் இல்லை; நகைச்சுவையும் இல்லை. தேவியும் கிருஷ்ணாவும் மொரீசியஸிற்கு வந்து, கிருஷ்ணாவைப் பேய் பிடித்திருப்பது தேவிக்குத் தெரியும்வரை கொஞ்சமாவது சுவாரஸ்யமாக நகரும் படம், அதற்குப் பிறகு சுத்தமாகப் படுத்துவிடுகிறது.

திரைக்கதை, நடிப்பு, காட்சிகள் எல்லாவற்றிலுமே ஒரு அலுப்பும் ஆர்வமற்ற தன்மையும் தென்படுகிறது. 

கிருஷ்ணாவை இரண்டு பேய்கள் பிடித்துக்கொண்ட பிறகு, விமான நிலையத்தில் வரும் ஒரு காட்சியைத் தவிர, எந்தக் காட்சியிலும் சுவாரஸ்யமே கிடையாது. இதற்கு நடுவில் சில பாடல்களைத் திணித்திருப்பது இன்னும் அலுப்பை ஏற்படுத்துகிறது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தேவி - 2: சினிமா விமர்சனம் Empty Re: தேவி - 2: சினிமா விமர்சனம்

Post by rammalar Sun 16 Jun 2019 - 5:04

தேவி - 2: சினிமா விமர்சனம் _107190555_a8f6f6ac-d6ac-40ad-8997-c9b6e1c153ef

-படத்தின் ஒரே ஒரு நல்ல அம்சம் பிரபுதேவா. ஒரே காட்சியில் அடுத்தடுத்து மூன்று நபர்களைப் போல நடிக்க வேண்டிய தருணங்களில், உண்மையிலேயே அசத்துகிறார். ஆனால், தமன்னா உள்ளிட்ட படத்தில் வரும் மற்றவர்களிடம் இதேபோன்ற ஆர்வம் இல்லை.

படத்தில் பின்னணி இசை பரவாயில்லை ரகம். ஆனால், எந்தப் பாடலும் மனதில் ஒட்டவில்லை. பாடல்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் மேம்பட்டிருக்கக்கூடிய படம் இது.

படம் முடியும்போது, அடுத்த பாகமும் வரக்கூடும் என்பதைப் போல சூசகமாகச் சொல்லி முடிக்கிறார்கள். படத்திலேயே இதுதான் மிகப்பெரிய திகில் காட்சி.
-
நன்றி-பிபிசி-தமிழ்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum