Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
``வீட்டுக்கு கூப்பிட்ட விஜய், ஜூனியர் நாசர், ஹீரோ வாய்ப்பு!'' - `லொள்ளு சபா' சாமிநாதன் ஷேரிங்ஸ்
Page 1 of 1
``வீட்டுக்கு கூப்பிட்ட விஜய், ஜூனியர் நாசர், ஹீரோ வாய்ப்பு!'' - `லொள்ளு சபா' சாமிநாதன் ஷேரிங்ஸ்
-
சின்னத்திரை சினிமா அனுபவம், மனைவி குழந்தைகள் பற்றி, நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் குறித்து... என சினிமாவுக்கு வந்தது தொடங்கி இன்று வரையான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் சாமிநாதன்.
விஜய் டி.வி 'லொள்ளு சபா' சாமிநாதன் என்றால் தெரியாதவர்களே கிடையாது. அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை இருந்த இருவர்களில் ஒருவர் சாமிநாதன். மற்றொருவர் எஸ்தர். பிறகு, முழுநேர நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார். அவரையும் அவரின் குடும்பத்தினரையும் வீட்டில் சந்தித்தேன்.
''நடிப்புதான் என் மூச்சுனு முடிவு பண்ணது, ஸ்கூல் படிக்கிறப்போதான். படிப்பை முடிச்சதும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சேரணும்னு முடிவெடுத்தேன். என் கூடப் பிறந்தவங்க நான்கு அண்ணன், நான்கு அக்கா. நான்தான் கடைக்குட்டி. செல்லமா வளர்ந்தவனும்கூட! அடம்பிடிக்கிறானேனு சொந்த ஊரான கும்பகோணத்திலிருந்து என்னை சென்னைக்கு அனுப்பி வச்சாங்க. அங்கே இங்கேனு தங்கி அட்மிஷனுக்காக ஃபிலிம் இன்ஸ்டிடியூட் போனா பயந்துட்டேன்.
அங்கே 1,000 பேர் அட்மிஷனுக்கு வந்திருந்தாங்க. நமக்கெல்லாம் எங்கே சீட் கிடைக்கப்போகுதுனு ஒரு பக்கம் மனசு படபடனு அடிச்சுக்கிது. வந்தது வந்துட்டோம்; எப்படியும் சேர்ந்துடணும்டானு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டு வெயிட் பண்ணேன். என் பெயரைச் சொல்லி கூப்பிட, தயக்கத்தோடு உள்ளே போனேன். அங்கே நடிகை பானுமதி, புட்டண்ணா, அரசுபாபு, ராமன்னா... இவங்கதான் செலக்ஷன் ஆள்களா உட்கார்ந்திருந்தாங்க. நான் அவங்ககிட்ட சிவாஜி பேசிய வசனத்தைப் பேசிக்காட்டினேன். 'யாரையும் இமிடேட் பண்ணாம, நீயாக ஒரு கதாபாத்திரத்தை யோசிச்சுப் பேசு'னு சொன்னாங்க. நானும் அப்படிப் பேசிக்காட்டினேன். கைதட்டினாங்க. பிறகு, ஒருவழியா எனக்கு அட்மிஷன் கிடைச்சது. பானுமதி அம்மாதான் எனக்கு விசிட்டிங் புரொபஸர்.
1978 - 80 வரை... ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்ச சர்டிபிகேட் கோர்ஸ்தான், என்னைப் பிற்காலத்தில் நடிகனாக்கியது. ‘நான் சிகப்பு மனிதன்’தான் நான் நடித்த முதல் படம். என்னுடைய 24 வயதில் தொடங்கிய சினிமா பயணம் இப்போவரை எந்த இடைவேளையும் இல்லாம தொடருது. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்" என்பவர், மேலே பார்த்துக் கும்பிட்டுக்கொள்கிறார்.
'' 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் ரஜினி வாத்தியார், நான் மாணவன். இந்தப் பட வாய்ப்பு வந்தப்போ, வடபழனி ஆபீஸூக்கு வரச் சொல்லியிருந்தாங்க. நடந்தே போய்தான் வாய்ப்பு கேட்பேன். கையில் வருமானம் இல்லை. என்ன செய்ய, யாராவது ஒருவர் அறிமுகமானா, அவர்கிட்ட வாய்ப்பு கேட்டு நாயாக அலைந்த காலம் அது. 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருந்தவங்க எல்லாம் படக்குழுவினருக்குத் தெரிந்தவர்களா இருந்தாங்க.
முன் வரிசையில உட்கார்ந்திருந்த என்னை ஒவ்வொருவராகப் பின்னுக்குத் தள்ளி கடைசி வரிசைக்கே அனுப்பிட்டாங்க. ஆனா, எனக்கு முன்னாடி போன ஒவ்வொருவரும் ரிஜெக்ட் ஆகித் திரும்பி வர, நான் உள்ளே போனேன். இயக்குநர் எஸ்.ஏ.சி சார் ஒரு வசனம் கொடுத்துப் பேசச் சொன்னார். நல்லபடியா பேசினேன். செலக்ட் ஆனேன். பிறகு, படிப்படியா பல படங்கள்ல தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சேன்" என்பவருக்கு, நடிகர் நாசர் ஜூனியராம்!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ``வீட்டுக்கு கூப்பிட்ட விஜய், ஜூனியர் நாசர், ஹீரோ வாய்ப்பு!'' - `லொள்ளு சபா' சாமிநாதன் ஷேரிங்ஸ்
"ஆமா. ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல எனக்குப் பிறகு சேர்ந்தவர் நடிகர் நாசர். ஃபிலிம் சேம்பர்ல படிச்சு முடிச்சுட்டு நாசர் இங்கே வந்து படிச்சார். ‘நீதான் படிச்சு முடிச்சிட்டியே. எதுக்கு மறுபடியும் படிக்கிற'னு கேட்டேன். 'இன்னும் நிறைய கத்துக்கணும். அதான், இங்கே சேர்ந்தேன்’னு சொன்னார். அதுதான் நாசரிடம் எனக்குப் பிடிச்ச விஷயம். கலைமீது தீராத தாகம்கொண்ட நாசர், எனக்கு ஜூனியரா சேர்ந்தார். அப்போ அவரைக் 'கிளிமூக்கன்’னு சொல்லிக் கிண்டல் பண்ணுவோம். தினமும் செங்கல்பட்டிலிருந்து டிராவல் பண்ணி வருவாரு மனுஷன். செம்ம ஹார்ட் வொர்க்கர், அதேசமயம் ஜாலியான ஆள். ரஜினியோடு நடிச்ச பிறகு, எனக்கு ஒரு ஹீரோ வாய்ப்பு வந்துச்சு. எனக்கு ஹீரோயின் யார்னு கேளுங்க... மேனகா! (சிரிப்பை அடக்க சில நிமிடம் ஆகிறது அவருக்கு).
"ஆனா, நான் ஹீரோவா நடிக்கவே மாட்டேன்னு பிடிவாதமா மறுத்துட்டேன். ஏன்னா, ஹீரோ ஆகிட்டா படங்கள் ஹிட் ஆகணும். அதற்குப் பிறகு ஹீரோ இமேஜிலிருந்து இறங்கி வர முடியாது. அதனால, வேண்டாம்னு சொன்னேன். எல்லாப் படத்திலும் காமெடி கண்டிப்பா தேவைப்படும். அதனால, காமெடியன் ஆகிடலாம்னு முடிவெடுத்தேன். இதோ, இப்போவரை 600 படங்களுக்கும்மேல் காமெடியனா நடிச்சுட்டேன்" என்பவர், சினிமாவுக்கு வரும்முன் செய்த சேட்டைகளைப் பட்டியலிட்டார்.
''கும்பகோணம்தான் என் சொந்த ஊர். நானும் என் அண்ணனும் சரியான சினிமா பைத்தியங்கள். சினிமா பார்த்துட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, எங்க அத்தைதான் கதவைத் திறப்பாங்க. யார் முதல்ல வீட்டுக்குள்ள நுழையிறாங்களோ, அவங்களுக்குத் தலையில ஓங்கி ஒரு குட்டு வைப்பாங்க. தினமும் நானே அடிவாங்கிட்டு இருந்தேன். ஒருநாள் டக்குனு என் அண்ணனைத் தள்ளிவிட்டு அடிவாங்க வச்சேன். என்னைக்கும் இல்லாம அன்னைக்கு செம அடி! 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்துல வர்றமாதிரி நான் பியூசி ஃபெயில்தான்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ``வீட்டுக்கு கூப்பிட்ட விஜய், ஜூனியர் நாசர், ஹீரோ வாய்ப்பு!'' - `லொள்ளு சபா' சாமிநாதன் ஷேரிங்ஸ்
ஆலமரத்து நிழலில் ஒதுங்கக் கூடாதுனு சொல்வாங்க. நம்ம யார் நிழலிலும் ஒதுங்கக் கூடாது. அதனால்தான் வாய்ப்புக்காக இதுவரை யார் முன்பும் நின்றதில்லை. நானும் சந்தானமும் நடிக்கிறது பல பேருக்குப் பிடிக்கும். அதோடு எங்கள் உறவு நட்புடனே இருக்கிறது. 38 வருடமா இந்தத் துறையில் இருக்கேன். இப்படித்தான் நான்" என்றவரைத் தொடர்ந்து, இவரின் மகன் ஆனந்த் பேசினார்.
''தளபதி விஜய் படமென்றால், எனக்கு உயிர். 'வேலாயுதம்' படம் வந்த சமயத்துல அப்பா ஷூட்டிங் ஸ்பாட்ல அவரைப் பார்த்திருக்கார். எனக்கு அவரைப் பிடிக்கும்ங்கிற விஷயத்தைச் சொல்லியிருக்கார். சீக்கிரமே அவரை சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கணும்" என்கிறார், ஒன்பதாம் வகுப்பு செல்லவிருக்கும் ஆனந்த்.
''விஜய் ஸ்பாட்ல வணக்கம் சொல்லாம போகமாட்டார். 'நல்லா இருக்கீங்களா'னு விசாரிப்பார். ஸ்பாட்ல ஃபிரீ டைம்ல 'அந்தாச்சாரி' விளையாடுறது, கலாய்க்கிறதுனு பொழுதுபோகும். 'சாமிநாதன் உங்க ஆக்டிங், மாடுலேஷன் எல்லாம் எனக்குப் பிடிக்கும்'னு ஒருமுறை சொன்னார். அப்போதான், என் பையனுக்கு நீங்கன்னா உயிர்னு சொன்னேன். 'நான் அவரைக் கேட்டதா சொல்லுங்க'னு சொன்னார். ஆனந்த்தை ஒருநாள் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லியிருக்கார். போகணும். பையனுக்கு விஜய்ன்னா, என் பொண்ணுக்கு அஜித் பிடிக்கும்" என்கிறார் சாமிநாதன்.
''எனக்கு அஜீத்தை ரொம்பப் பிடிக்கும். விஜய் ஆண்டனியின் நடிப்பும் ரொம்பப் பிடிக்கும். 'நான்', 'சலீம்', 'திமிருபிடிச்சவன்'னு அவர் நடிச்ச படங்கள்ல எங்க அப்பாவும் நடிச்சிருப்பார். காலேஜ் படிக்கிறேன் நான். எக்ஸாம் எழுத பேப்பர் கொடுக்கும்போது, 'ஐஸ்வர்யா பாஸ் பண்ணுங்க'னு சொல்லி, அப்பாவோட காமெடியை ஞாபகப்படுத்தி சிரிப்பாங்க புரொபஸர்" எனச் சொல்லும் ஐஸ்வர்யா, எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார்.
மனைவி ஷீலா, ''இவருக்கு மனைவியா நான் நிறைய இடங்களில் சந்தோஷப்பட்டிருக்கேன். படங்களுக்குப் போகும்போதும் சரி, நிகழ்ச்சிகளுக்குப் போகும்போதும் சரி... என் கூடவும் சேர்ந்து போட்டோ எடுத்துப்பாங்க. அவருடைய கஷ்டமான காலத்தில் நான் டீச்சர் வேலைக்குப் போய் குடும்பத்தைச் சமாளிச்சேன். இப்போ, குழந்தைங்க ரெண்டுபேரும் வளர்ந்துட்டாங்க. சமாளிச்சிட்டோம்" என்பவரைத் தொடர்கிறார் சாமிநாதன்.
''எனக்கு இன்னும் பைக் ஓட்டத் தெரியாது. 'விஸ்வாசம்' படம் பார்த்ததும் என் பொண்ணு ஐஸ்வர்யாவை அப்படி உட்கார வச்சு பைக் ஓட்ட முடியலையேனு ஃபீல் ஆகிடுச்சு. நான் நடிச்சதில், 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யில வர்ற வாழைப்பழ ஜோக் என் பையனுக்கு ஃபேவரைட். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'ல 'அப்ஜக்ஷன் யுவர் ஆனர்' காமெடி என் மனைவிக்கு ஃபேவரைட். 'அந்த சட்னியை நக்கிப் பார்த்தேன்' வசனம், என் மகளுக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு இப்போ 60 வயது ஆகுது. வயதானாலும் நடிகர் வடிவேலு, விவேக் எல்லாம் சின்ன பையன் மாதிரியே மக்களுக்குத் தெரிவாங்க. காரணம், நகைச்சுவை உணர்வு. நானும் அப்படித்தான் இருக்கேன்னு நினைக்கிறேன்" என சாமிநாதன் சொல்ல, குடும்பமே கலகலப்பாகிறது.
-
வே.கிருஷ்ணவேணி
நன்றி-விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ’விஜய் ஒரு சூப்பர் மனிதர்’ – ஜூனியர் என்டிஆர்
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
» கூப்பிட்ட குரலுக்கு வருவான்..!
» சச்சன் 100வது சதத்தை அடித்திருந்தால் இந்தியாவின் தோல்வியை திசை திருப்பியிருப்பார்கள்- நாசர் ஹூசேன்
» லொள்ளு
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
» கூப்பிட்ட குரலுக்கு வருவான்..!
» சச்சன் 100வது சதத்தை அடித்திருந்தால் இந்தியாவின் தோல்வியை திசை திருப்பியிருப்பார்கள்- நாசர் ஹூசேன்
» லொள்ளு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum